இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 8, 2007

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

மூலம்;http://www.geocities.com/mistertoronto/blame.htm

பைபிளில் பல தவறுகள் என்று குறை கூறுகிறார்கள் இஸ்லாமியர். ஏன்? இவ்வாறாக அவர்களுடைய வேதம் கூறுகிறதாம்! அது மட்டுமல்ல, அதற்குச் சான்றாக பல பைபிளின் பல பகுதிகளையும் எடுத்துக் காட்டுவார்கள். இஸ்லாமியராகட்டும், அல்லது கிறிஸ்தவராகட்டும், நாம் உண்மையை உணர வேண்டும். பைபிளை இயேசு எழுதவில்லை. அதே போல குரானையும் முகம்மது எழுதவில்லை.

பைபிளின் முதல் பாதியான பழைய ஏற்பாடு, யூத மார்க்கத்தின் வேத புத்தகமாகும். அதை அப்படியே கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். அதன் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாடு இயேசுவின் சீஷர்களாலும், பின்னர் மதம் மாறிய புனித பவுல் அடிகளாராலும், இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின் தொகுக்கப் பட்டதாகும்.

நடந்து போன விஷயங்களை சில ஆண்டுகள் கழித்து எழுதும் போது அவற்றில் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவை பைபிளின் மையக்கருத்தான, மனிதன் பாவம் செய்தான்- பாவ பரிகாரத்திற்காக இறைவன் பலி முறைகளை நியமித்தார்- பின்னர் இந்த பலிகளுக்கும், ரத்தம் சிந்துதலுக்கும் நிரந்தரமாக முடிவு கட்ட தனது சொந்த மகனான இயேசுவை உலகத்தில் மனிதனாகப் பிறக்கச்செய்து, அவரை இம்மனுக்குலத்தின் பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாக சிலுவை மரத்தில் பலியாக ஈந்தார் - இந்தத் தியாகத்தை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசுவின் நிமித்தம், அவன் தனது ஆதி தந்தை ஆதாமின் கீழ்ப்படியாமையால் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை இலவசமாகத் தந்து, அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்- இவ்வாறாக மனிதன் மேல் இறைவன் கொண்டுள்ள அபரிமிதமான அன்பு வெளிப்பட்டது எனும் செய்தியை ஒருக்காலும் மாற்றி அமைத்து விடவில்லை!

மேலும் பைபிளின் பரிமாணத்தைப் பார்த்தால், அது குரானைக் காட்டிலும் பல மடங்கு பெரியது, பல பல விபரங்கள் கொண்டது என்பது தெரிய வரும். உண்மையில், பைபிளின் 66 புத்தகங்களில் ஒன்றான சங்கீதப் புத்தகம் மட்டுமே குரானைக் காட்டிலும் அதிக பக்கங்கள் உடையது என்பது பல இஸ்லாமியருக்குத் தெரியாத விஷயம்!

இப்போது, குரான் யாரால், எங்கே, எப்படி, எப்போது தொகுக்கப்பட்டது எனக் காண்போம்...

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆனின் பல பகுதிகள் எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும் அது புத்தக வடிவில் இன்னமும் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் முகமதுவின் சுற்றத்தார் பலர் குர்-ஆனை மனப்பாடம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை நேரிடையாகக் கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால் உமர் பின் அல் கதாப், அபூபக்கரிடம் குரான் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும் எனக்கூறினார். அபூபக்கர், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து குரானின் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். சையத், மனப்பாடம் செய்யப்பட்டிருந்த குரானின் பகுதிகளையும், எழுதப்பட்ட பகுதிகளையும் தொகுத்து குரானை ஒரு புத்தகமாக்கினார். இந்தப் பிரதி முகம்மதுவின் மனைவியும் உமரின் மகளுமான ஹபிஸாவின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

காலிப் உத்மான், இவ்வாறாக தொகுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான குர்-ஆனை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி அதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், துண்டுப்பகுதிகளையும் எரித்து விட வேண்டுமென்று கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6:479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது. ஆனால், அதிலும் சுட்டிக்காட்டும் வண்ணம் சில பிழைகள் இல்லாமல் இல்லை! ஆனால் அவற்றைக் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவது அழகாகாது என எண்ணி அவற்றை நான் இங்கே விட்டு விடுகிறேன்.

மக்கள் தங்கள் மதங்களைப் பற்றியும், நாத்திகவாதி தனது கொள்கையைப் பற்றியும், அறிவாளி தனது தத்துவங்களைப் பற்றியும், விஞ்ஞானி தன் பேரறிவைப் பற்றியும் மார் தட்டிப் பேசுவது ஒரு எளிய காரியம். ஆனால் அதே நபர்கள் மரணப்படுக்கையில் வீழும் போது அது முற்றிலும் வேறு பட்ட ஒரு பந்து விளையாட்டு! பயம் அவர்களைப் பீடித்து விடுகிறது. இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவர் இலவசமாக வழங்கும் நித்திய ஜீவனைக் கேட்டுப் பெற்றவர்களுக்கு அந்தப் பயம் இல்லை! ஏனென்றால், "குமாரனிடத்தில் (இயேசுவிடம்) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை (சுவர்க்க வாழ்வை) உடையவனாய் இருக்கிறான்" என்கிறார் இயேசு.

இங்கே செல்வந்தரான ஒரு இஸ்லாமிய இளைஞர் தனது மரணப்படுக்கையில் அனுபவித்த பாடுகளைக் குறித்த விடியோ ஒன்றை காணத் தந்துள்ளேன். இயேசுவை உங்கள் வாழ்வின் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள உங்களை வேண்டுகிறேன். விடியோவைக்காண கீழே "க்ளிக்" செய்யுங்கள்...







பிராத்தனை: அன்புள்ள இயேசுவே, எனது பாவங்கள் தீர, உம்மையே நீர் சிலுவையில் பலியாக ஈந்த அன்பிற்காக உமக்கு நன்றி. இன்று நீர் என் இதயத்தில் வாரும். என் பாவங்கள் யாவையும் மன்னியும். நீர் இலவசமாய் அருளும் நித்திய ஜீவனை எனக்குத்தாரும். என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கும் உமது மகா அன்பை எனக்குத்தாரும். ஆமென்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்