தந்தை பெரியாரும்,கிறிஸ்தவமும்
நாங்கள் எழுதிய பதில்
2, http://idhuthanunmai.blogspot.com/2008/01/20000-to-50000.html
1,20000 முதல் 50000 வரை முரண்பாடுகள்
நீங்கள் குறிபிட்டு உள்ள அந்த முரண்பாடுகள் குறித்த இணைய தொடுப்புகளுக்கு சரியான
பதில் கொடுக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இணையங்கள் ஆங்கிலத்தில் உண்டு.ஒரு சில தொடுப்புகளை கீழே தருகிறேன்.மீதம் தேவையானவை கூக்ளியில் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும்.
இந்தமாதிரியான
கட்டுரைகளும் இணையத்தில் உண்டு.அதற்காக தந்தை பெரியார் செய்த நல்ல காரியங்களை நாம் மறந்து விட முடியுமா? .ஏன
1975 பிறகு தான் குரான் முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ஆனால் 2007க்குள் பல்வேறுபட்ட தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்து விட்டது.ஒவ்வொறுவரும் தாங்கள் மொழிபெயர்த்தது தான் சரி என்று விவாதம் ஒருபக்கம் நடந்து வருகிரது.இப்படி இருக்க அதிகமான மொழிபெயர்ப்புகள் வருவதனால் ஒன்றை நிராகரிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையே.
3,
பைபிளில் ஆபாசங்கள்.இன்றைக்க
ஆபாசம் என்றால் என்ன என்று ஆடையாளம் தெரியாத அளவுக்கு நிலை மாறிவிட்டது.இந்த தொடுப்புகள் உங்கள் வலைமலரில் வந்தவை.இவை அனைத்தும் தந்தை பெரியார் அவர்களின் புத்தகத்திலும்,அவர்கள் கூட்டத்திலும் கேட்டவை.தந்தை பெரியார் அவர்கள் எழுதிய இந்து மத சம்மந்தமான அனைத்து புத்தகங்களும் ஆபாசம் நிறைந்தே உள்ளது என்று சொன்னால் அது மிகைஆகாது.ஆனால் அவர் இந்து மத புராணங்களை விளக்குவதற்காக வெளியிட்ட புத்தகங்கள் என்ற விளக்கம் அறிந்தவர்களுக்கு தெரியும் அவர் எழுதிய நோக்கம் என்ன என்று.
இன்றை
செய்தித்தாள்களில் எத்தனையோ தவறான குடும்ப உறவுகள் பற்றி செய்திகள் வருகின்றன ஆனால் அதை பொதுமக்கள் வாங்கி வாசிக்க வசதியாக கடைகளில் விற்க அரசாங்கம் அனுமதித்து உள்ளது.ஆனால் இதே தவறான உறவுகளை பற்றி எழுதும் மஞ்சள் பத்திரிக்கைகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.இரண்டின் வித்தியாசம் அறியாதவன் பெரியார் அவர்கள் சொன்னது போல் மூடன் என்றே சொல்ல வேண்டும்.பைபிள
ஏறக்குறைய நான்காயிர வருடங்களில் நடந்த குறிப்பிட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளது.அதில் தவறு செய்த நல்லவர்களும் உண்டு.நல்லது செய்த தீயவர்களை பற்றியும் உண்டு.ஆனால் அந்தந்த கால சூழ்நிலையில் கால மற்றங்கள்,கலாச்சார மாற்றங்கள்,மொழி மாற்றங்கள் அடிப்படையில் பைபிளில் ஒரு சில காரியங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதில் தவறு செய்ய எதாவதும் வழிமுறைகள்கொடுக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் வெற்றிடமே காணலாம்.அதிலும் பைபிளின் இறுதியாக உள்ள புதிய ஏற்பாடே உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒழுங்குகளை நமக்கு அழகாக சொல்லித்தருகிறது.நடந்
த செய்திகளின் பதிவுகளுக்கும்,மற்றும் வெறும் உண்ர்ச்சிகளை தூண்டும் நோக்கோடு எழுதப்படுவதயும், தவறான அர்த்தம் கொள்ள தூங்டும் வகையில் கடவுளே அதை செய்தார் என்று சொல்லும் படியான புராணங்களையும்,அடிமை பெண்களை அனுபவிப்பது பற்றியதான இறைதூதரின் அனுமதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடந்த செய்திகளை பதிவு செய்தல் ஆபாசம் என்று சொல்லுவது எத்தனை அறிவீனம் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்.முடிவா
க உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.தந்தை பெரியார் அவர்கள் உண்டாக்கிய கழகத்தின் பெயரான திராவிடம் என்ற சொல்லே ஒரு கிறிஸ்துவின் அன்பை பரப்ப வந்த கார்டுவெல் அவர்கள் கண்டுபிடித்து தந்தது தான்.எனவே பெரியாருக்கும் கிறிஸ்தவத்துக்கும் ஒரு போது மோதல் இல்லை.தவறுகள் தெரியாமல் வருவதால் கேட்கிறோம்.அவ்வளவே.எங்களுக்கு உங்களிடம் எந்த பகையும் இல்லை. நாங்கள் இயேசுவின் வழியில் மக்களை சீர்படுத்த முயற்சிக்கிறோம்.நீங்கள் நாஸ்திக வழியில் அதையே செய்யகிறீர்கள்.எப்படி உங்களிலும் சிலர் சுய நலவாதிகளாக இருக்கிறார்களோ அது போல எங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். தந்தை பெரியாரை மதிக்கிறோம்,அவரின் கொள்கைகளில் உள்ள உண்மைகளை மதிக்கிறோம்.மனிதனை நேசிக்க வேண்டும் என்ற கொள்கைகள் எங்கள் உயிர் மூச்சு. நன்றி