பகவத் கீதையில் இஸ்லாமா?
சகோ.மரைக்காயர் பதிவில்(http://maricair.blogspot.com/2007/03/1_15.html) இதைப் படித்தேன்:
ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்
பகவத் கீதை 7:20மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
***
வசனம் 7:20 ,பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு(சமீபத்தில் வாழ்ந்து மறைந்தவரும், அப்துல் கலாம் அவர்களை ஆசீர்வதித்தவருமான சிவானந்தர், வைணவர்கள் போற்றும் இராமானுஜர் இருவரையும் எடுத்துக் கொண்டுள்ளேன்) இவ்வாறு கூறுகிறது:
7.20 Those whose wisdom has been rent away by this or that desire, go to other gods, following this or that rite, led by their own nature. (Sivananda)
7.20 All men of this world are 'controlled', i.e., constantly accompanied by their own nature consisting in the Vasanas (subtle impressions) resulting from relation with the objects formed of the Gunas. Their knowledge about My essential nature is robbed by various Karmas, i.e., by objects of desire corresponding to their Vasanas (subtle impressions) born of their Karmas and constituted of Gunas. In order to fulfil these various kinds of desires they take refuge in, i.e., seek and worship, other divinities who are regarded as different from Me, such as Indra and others, observing various disciplines, i.e., practising rituals which are specially meant to propitiate only these divinities. (Ramanuja)
கீதை, குரானைப் போன்று தொடர்ச்சியற்ற வசனங்களைக் கொண்ட நூல் அல்ல. தனித்தனி - ஆனால் தொடர்புடைய தலைப்புகளில் கோர்வையாக எழுதப்பட்டுள்ள நூல். குரானில் இருப்பதுபோன்று திடீரென்று மக்கா சூரா, திடீரென்று மதீனா சூரா, திடீரென்று முகமதின் வீட்டு விஷயம், திடீரென்று அரபிக்களின் வழக்கங்கள், திடீரென்று பொதுவான உபதேசம் என்று கலீஃபா ஒருவர் அவசர அவசரமாய் தொகுத்து, வேறுபட்ட குரான்களை தீயிட்டு கொளுத்தி இதுதான் குரான் என்று அவசரகதியில் தொகுத்த நூல் இல்லை அது.
இதை சொல்வது, குரானை விட கீதை உயர்வான நூல் என்பதை நிறுவுவதற்காக அல்ல. இப்படி திடீரென்று ஒரு வசனத்தை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றி இது அல்லாஹ்வை உயர்த்துகிறது என்று இஸ்லாமிஸ்டுகள் ஜல்லியடிப்பதை சுட்டிக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
எனவே, இந்த வசனம் அல்லாஹ் என்ற ஏக இறைவனை குறிக்கிறதா என்பதற்கு இதன் தொடர்ச்சியையும், கவனித்தால் அர்த்தம் விளங்கும். அடுத்த வசனமே இதைச் சொல்கிறது:
7.21 Whatsoever form any devotee desires to worship with faith -- that (same) faith of his I make firm and unflinching. (Sivananda)
7.21 These divinities too constitute My body as taught in the Sruti text like: 'He who, dwelling in the sun, whom the sun does not know, whose body is the sun' (Br. U., 3.7.9). Whichever devotee seeks to worship with faith whatever form of Mine, such as the Indra, although not knowing these divinities to be My forms, I consider his faith as being directed to My bodies or manifestations, and make his faith steadfast, i.e., make it free from obstacles. (Ramanuja)
***
7.22 Endowed with that faith, he engages in the worship of that (form) and from it he obtains his desire, these being verily ordained by Me (alone). (Sivananda)
7.22 He, endowed with that faith without obstacles, performs the worship of Indra and other divinities. Thence, i.e., from the worship of Indra and other divinities, who constitute My body, he attains the objects of his desire, which are in reality granted by Me alone. Although he does not know at the time of worship that divinities like Indra, who are his objects of worship, are My body only, and that worship of them is My worship, still, inasmuch as this worship is, in reality, My worship, he attains his objects of desire granted by Me alone. (Ramanuja)
***
Everything is God is what Hindus say, but Islam says that everything is God'sஎன்று இவர்கள் எழுதுகின்றார்கள். ஆனால், கீதை தெளிவாக 7:19ல் அதையே விளக்குகிறது. அதாவது எல்லாமே கண்ணன் தான்.
7:19 At the end of many births the wise man comes to Me, realising that all this is Vaasudeva (the innermost Self); such a great soul (Mahatma) is very hard to find.
இதுவே (எனது புரிதலில்) அத்வைதம். அதாவது காண்பன யாவுமாய் இருப்பது ஏக இறைதான். நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் எல்லாமே இறைதான். அதனாலேயே என் முன்னோர்கள் காளஹஸ்தியில் காற்றை வணங்கினார்கள், காஞ்சியில் மண்ணை வணங்கினார்கள், சிதம்பரத்தில் ஆகாயத்தை வணங்கினார்கள். எதை வணங்கினாலும், இறையை வணங்குவதாக எண்ணி, இறை ஞானத்தை வேண்டி வணங்கினால் அவர்கள் இறையை யே வணங்குகின்றார்கள். விருப்பங்களை நிறைவேற்றச் சொல்லி தெய்வங்களை வணங்கும்போதும், அதே இறையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை வணங்குகின்றார்கள்.
***
இங்கே கிருஷ்ணனின் உபதேசத்திற்கும் அல்லாஹ்(வின் பெயரால் முகமது அடித்த ஜல்லியான) ஏகத்துவத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.
இந்திரன் முதலான தேவர்களை குறிப்பிட்ட சக்திகளை, செல்வங்களை வேண்டி வணங்கி செய்யப்படும் யாகங்கள், வழிபாடுகளைப் பற்றி கிருஷ்ணன் பேசுகிறான். பகவத் கீதையில் மற்ற இடங்களிலும் இப்படி இகத்தேவைகளுக்காக செய்யப்படும் வழிபாட்டு முறைகள், உண்மையான இறை ஞானத்தை வேண்டி செய்யப்படும் யோகத்துக்கு கீழானவை என்ற உபதேசம் வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் வருகிறது.
ஆனால், இங்கே கூட 'நீ எதை வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்' என்றுதான் கிருஷ்ணன் சொல்கிறானே தவிர, நீ என்னைத்தவிர (விஷ்ணுவைத்தவிர) வேறு எதாவது கடவுளை வணங்கினால் உண்ணை நரகத்தீயில் இட்டு வாட்டுவேன் என்று சொல்லவில்லை, உன்மீது என் அடியார்கள் ஜிகாத் தொடுப்பார்கள் என்று சொல்லவில்லை.
***
பகவத் கீதை பற்றியோ, அல்லது இந்து மதம் பற்றியோ விளக்கம் எழுதும் உத்தேசம் எதுவும் எனக்கில்லை. ஆனால், மற்றபடி ஆன்மீக விஷயங்களைப் பற்றி நிறைய எழுதும் இந்து வலைப்பதிவர்கள் இப்படி இஸ்லாமிஸ்டுகள் திரிப்பதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களே என்று தோன்ற இதை எழுதினேன்.
பகவத் கீதையின் அறப்போரே , குரானின் ஜிகாத் என்று இஸ்லாமிஸ்டுகள் நூலெல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். ஜிகாதை நியாயப்படுத்தும் இந்தச்செயலை இந்து ஆன்மீகவாதிகள் முன்வந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இது எப்படிப்பட்ட திரித்தல் என்பதையும் விளக்க வேண்டும்.