முகமது-மோசே ஒப்பீடு
உபாகமம் 18: 15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக, உன் நடுவே, உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. இந்த வசனத்தில் மோசே முகமது நபியைப்பற்றி சொல்லியிருக்கிறார் என்கின்றார்கள். ஆனால் உண்மையில் அந்த வசனத்திற்கும் முகமது நபிக்கும் துளியளவும் சம்பந்தமில்லை. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் முகமதியர்கள் கூறுகின்றார்கள்: மோசே திருமணம் முடித்தவர், முகமதுவும் திருமணம் முடித்தவர், ஆனால் இயேசு நாதர் திருமணம் முடிக்கவில்லை. அதனால் மோசே இதில் முகமதுவைப்பற்றித்தான் குறிப்பிட்டிருக்கின்றார் என்கின்றார்கள். வேடிக்கையிலும் வேடிக்கை. உலகத்திலே முகமது மட்டுமா திருமணம் செய்தவன்? அப்படி பார்த்தால் உலகத்திலுள்ள சகல திருமணம் செய்த ஆண்களையுமல்லவா மோசேயுடன் ஒப்பிட வேண்டும்.சரி ஆராய்ச்சி மோசே
மோசே ஒரு இஸ்ரவேலன் |
முஹமது நபி ஒரு அராபியன், ஒரு அந்நியன், இஸ்ரவேலிலே பிறக்கவுமில்லை . | |
மோசே அநேக அற்புதங்களை செய்தார் ; | முஹமது நபி எந்தவொரு அற்புதத்தையும் செய்யவில்லை. |
மோசே படித்தவர். ;. | முஹமது நபிக்கு வாசிக்க கூட தெரியாது . |
வரப்போகின்ற தீர்க்கதரிசி இஸ்ரவேலருக்காக வரவேண்டும் ; | முஹமது நபி ? |
வரப்போகின்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் நடுவில் இருந்து வரவேண்டும் ; | முஹமது நபி ? |
வரப்போகின்ற தீர்க்கதரிசி இஸ்ரவேலர் சகோதரரிலிருந்து வரவேண்டும் ; | முஹமது நபி ? |
சகோதரர்கள் என்று எழுதியிருக்கின்றபடியால், முஹமதியர்கள் தங்களைத்தான் வசனம் குறிப்பிடுகின்றது என்கின்றனர்.
சரி வேத வசனங்களை கவனிப்போம்
யார் சகோதரர்கள் என்று வேதம் சொல்கின்றது.
உபாகமம் 17: 15 வசனம்
எங்களுக்கு யார் சகோதரர்கள் என்று தெட்ட தெளிவாக சொல்கின்றது.
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்,
உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய், உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.
இஸ்ரவேலர் தெரிந்து கொண்ட அனைத்து இராஜாக்களும் 12 இஸ்ரவேல் கோத்திரங்களிலிமிருந்து வந்தவர்கள்.
இன்னும் ஆதாரங்கள் ?
லேவியர்கள் சகோதரர்கள் யார் - உபாகமம் 18: 2, உபாகமம் 10: 9
அவர்கள் இராஜா சகோதரரிலிருந்து வரவேண்டும் - உபாகமம் 17: 15
சகோதரனுக்கும், அந்நியனுக்கும் உள்ள வித்தியாசம் - உபாகமம் 1: 16
சகோதரர்கள்;, இஸ்ரவேல் புத்திரர்கள் உபாகமம் 3: 18
சகோதரனுக்கும் அந்நியனுக்கும் இடையிலான உறவு 15: 2,3
இஸ்ரவேல் சகோதரர்கள் உபாகமம் 15: 7,11
யுத்தத்தின் மத்தியில் சகோதரர் உபாகமம் 20: 8
இந்த வசனத்திற்கும் முஹமது நபிக்கும் எள் அளவும் பொருத்தமில்லை என்பதை இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்.
அப்படியானால் இந்த வசனம் யாரைக்குறித்து பேசுகின்றது ?
பரிசுத்த வேதாகமத்தில் வாசிப்போம்
;யோவான் 1:45
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்@ அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
லூக்கா 24:27
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்;.யோவான் 5:46
நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்@ அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே,
மோசே
கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும் மக்களுக்கு கொடுத்தான்.இயேசுவானவர் உன்னதமான, மிகவும் உச்சிதமான கற்பனைகளை கொடுத்தார் (மத்தேயு 5,6,7). அவருடைய கட்டளைகள் ஜனங்களை ஆச்சரியப்பட வைத்தது (மத்தேயு 7:28-29). மிகவும் சிறந்த இரு கற்பனைகளை தெரிவு செய்தார் (மத்தேயு 22:35-40);. புதிய கட்டளை ஒன்றை கொடுத்தார் (யோவான் 13: 34-35);. சொர்க்கம் செல்ல முதல் தாம்; சொன்ன எல்லாவற்றையும் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டார் (மத்தேயு 28: 19-20);.
மோசே
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திய அரசன் பார்வோனிடமிருந்து மீட்கும் பொருட்டு அநேக வாதைகளை எகிப்தின்மேல் கொண்டுவந்தான். அநேக அற்புதங்களை செய்தான், வானத்திலிருந்து மன்னா வந்தது. கடல் வெட்டாந்தரையாக மாறியது. இப்படி பல...
இயேசு நாதரே ஒரு அற்புதம். அவருடைய அற்புதங்களும் ஏராளம். அவரைக்கண்டு பிசாசுகள்கூட அலறியடித்து கொண்டு ஓடியது. கடலும் காற்றும் அவரைக்கண்டு கூனிக்குறுகியது. இறந்தவர்கள் உயிரோடு எழும்பினார்கள். குருடர் பார்வையடைந்தனர், முடவர்கள் நடந்தார்கள், குஷ்டரோகிகள் சொஸ்தமானார்கள். 5 அப்பமும் 2 மீனினாலும் 5000 பேருக்கு உணவளித்தார். இயேசுகிறிஸ்துவின் அற்புதங்கள்
மோசே எகிப்தின் இராச்சியத்தை துறந்து இஸ்ரவேலருடன் துன்பங்களை அனுபவித்தான் (எபிரேயர் 11:24-26);.
இயேசு நாதர் எங்களுக்காக, கடவுள் என்கின்ற நிலையிலிருந்து இறங்கி எங்களைப்போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடைய மனுஷனானார். (எபிரேயர் 2:14,15).
மோசேயினுடைய முகம் ஜனங்கள் பார்க்கமுடியாத அளவிற்கு பிரகாசமாக இருந்தது. (யாத்திரையாகமம் 34: 29-35, 2கொரிந்தியர் 3:12-13)
இயேசு கிறிஸ்துவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது (மத்தேயு 17: 1-5). இன்னமும் பிரகாசித்து கொண்டு இருக்கின்றது (வெளிப்படுத்தின விசேஷம் 1: 9- 19)
இஸ்ரவேல் ஜனங்களின் சிறையிருப்பை மீட்பதற்கு அனுப்பப்பட்டவன்.
இயேசுவானவர் ஜனங்களை அவர்கள் ஆவிக்குரிய அடிமைத்தனமாகிய பாங்களிலிருந்து மீட்க வந்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாக இருக்கின்ற சமயம் மோசே பிறந்தார்.
இஸ்ரவேலர், ரோம சாம்ராச்சியத்திற்கு கீழ்ப்பட்டிருக்கின்ற சமயம் பிறந்தார்.
மேசேயின் பிறப்பின்போது சிறுபிள்ளைகள் கொல்லப்பட்டனர், மோசே பாதுகாக்கப்பட்டான்.
இயேசு நாதரின் பிறப்பின்போதும் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன. இயேசு நாதர் காப்பாற்றப்பட்டார்.
மோசே எகிப்திலே வாழ்ந்தான்.
இயேசு நாதர் எகிப்துக்கு சென்றார் (மத்தேயு 2: 13-21);.
மோசே 40 நாள் உபவாசம் செய்தான். (யாத்திரயாகமம் 34: 28);.
ஆண்டவரும் 40 நாள் உபவாசம் செய்தார். (மத்தேயு 4 );.
மோசே மந்தை மேய்த்தான்.
இயேசு நாதரே நல்ல மேய்ப்பன் (யோவன் 10: 11-16);.
மக்களுடைய மாபெரும் பாவத்தை மன்னிக்குமாறு வேண்டினான். (யாத்திரயாகமம் 32: 31-32);
இயேசு நாதரும் மக்களின் மாபெரும் குற்றத்தை பொறுத்தருளுமாறு வேண்டினார். (லூக்கா 23: 34);
மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி மோசேயுடன் பேசினார். (எண்ணாகமம் 11: 24-25);
இயேசுவானவர் ஞானஸ்நானம் எடுக்கின்ற சமயம் வானம் திறக்கப்பட்டு, தேவனாகிய கர்த்தர் பேசினார். (லூக்கா 3: 21-22);
மோசே பணிவிடைக்காரனாக, கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ள ஊழியக்காரனாய் இருந்தான். (எபிரேயர் 3: 5);
இயேசுவானவர் கர்த்தருடைய வீட்டிற்கு மேற்பட்ட குமாரனாக உண்மையுள்ளவராக இருக்கின்றார் (எபிரேயர் 3: 5);.
கன்மலையைப்பிளந்து ஜனங்களுக்கு தண்ணீரை குடிக்க கொடுத்தான். (யாத்திரயாகமம் 17);
இயேசுவானவர் சொன்னார்: ஒருவன் தாகமாயிருந்தால் தம்மிடத்தில் வந்து பானம் பண்ணும்படி (யோவான் 7: 37-38);
மோசே, மக்களை மன்னிக்க சொல்லி தேவனிடம் மன்றாடினான். அல்லாவிட்டால் தன்னுடைய பெயரையும் ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கி போடச்சொன்னான். (யாத்திரயாகமம் 32: 31-32);
இயேசு நாதர், தாமாகவே எங்களுக்காக, எங்கள் பாவங்களிலிருந்து மீட்கும்படிக்கு மரிக்கும்படி வந்தார். அவர் எங்களுக்காக தன்னுடைய உயிரையும் கொடுத்தார்.
மோசே சொல்லிலும்,செயலிலும் வல்லவனாயிருந்தான். (அப்போஸ்தலர் 7: 22);
இயேசு நாதரும் சொல்லிலும், செயலிலும் வல்லவராயிருந்தார் (மத்தேயு 7: 28,29 மத்தேயு 8: 3-13);
பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்தை கட்டும் வேலை அவன் கையில் கொடுக்கப்பட்டது. (யாத்திரயாகமம் 25: 40);
பரலோகத்திலுள்ள தேவனாகிய கர்த்தரால் செய்யப்பட்ட ஆசரிப்புக்கூடாரத்தில் தேவனாகிய இயேசு கிறிஸ்து எங்களுக்காக பிரதான ஆசாரிய ஊழியம் செய்கின்றார். (எபிரேயர் 8: 1 -);
மோசே சாந்த குணமுள்ளவன்
இயேசு கிறிஸ்து சாந்தமும், மனத்தாழ்மையும் உடையவராயிருந்தார். (மத்தேயு 11: 28-30);
மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தை தள்ளுகிறவனுக்கு தண்டனை, சிலவேளை மரணதண்டனை.
இயேசுகிறிஸ்துவினுடைய கட்டளைகளை தள்ளிவிடுகிறவனுக்கு எல்லாவற்றையும் விட அதிக ஆக்கினைத்தீர்ப்படைவான். (எபிரேயர் 10: 28-31);
மோசே மேல் கல் எறியப்பார்த்தார்கள் (யாத்திரயாகமம் 17:4);
இயேசுவின் மேலும் கல் எறியப்பார்த்தார்கள் (யேவான் 8: 58,59);
மோசே இரத்ததினாலாகிய உடன்படிக்கை செய்தான் (யாத்திரயாகமம் 24: 1-8);
இயேசு நாதர் புதிய இரத்ததினாலாகிய உடன்படிக்கையை செய்தார். (எபிரேயர் 9: 18-28);
ஒரு மலையில் தேவனுடைய வார்த்தை கொடுக்கப்பட்டது
இயேசுவானவரும் ஒரு மலையில் இருந்து பிரசங்கித்தார் (மத்தேயு 5,6,7);
மோசே தேவன் கொடுத்த வேலையை செய்து முடித்தான் (யாத்திரயாகமம் 40: 33);
இயேசு கிறிஸ்துவானவர் தமக்கு கொடுக்கப்ட்ட வேலைலை செய்து முடித்தார். (யோவான் 17: 4, 19: 30);
மோசேயினுடைய பிரேதக்குழியை ஒருவரும் அறியார்கள் (யாத்திரயாகமம் 34: 6);
இயேசு நாதருடைய பிரேதக்குழியும் வெறுமையாக காணப்படுகின்றது. அவர் மரித்து உயிர்த்தெழுந்தபடியால் (மாற்கு 16: 19, லூக்கா 24: 50-23);
நான் நினைக்கின்றேன் இனி உங்களுக்கு இந்த வசனம் யாரைக்குறித்து சொல்லப்பட்டது எனும் விடயத்தில் எந்தவிதமான சந்தேகமும் வராது என்று.