ஆப்கானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்
இக்கொடிய சம்பவம் ஆப்கனின் தெற்குப் பகுதியில் நடந்துள்ளது. தெற்கு ஆப்கனில் சர்க்கரை ஆலை அர்ப்பணிப்பு விழா நடைபெற இருந்தது. இதனைச் சீர்குலைக்கும் நோக்குடன் தலீபான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 6 எம்.பி.,க்களும், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் உடல் சிதைந்து பலியாயினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இக்கொடிய சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் நடத்தப்பட்டதா அல்லது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்டதா என்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.