பைபிளில் மற்றும் குர்ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
ஒரு கிறிஸ்தவ பார்வை
செப்டம்பர் 11ம் தேதியன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு, வன்முறை மற்றும் மதம் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இஸ்லாமின் பெயரில் நடக்கும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இறைவனின் பெயரில் நடக்கும் இப்படிப்பட்ட வன்முறைகளை குர்ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை சம்பவங்களைக் காட்டி இஸ்லாமியர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனை கிறிஸ்தவர்களும் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக பாடுபடும் சிலரும் கண்டிக்கும் போது, உடனே இஸ்லாமியர்கள் "பைபிளில் வன்முறை உள்ளது, முக்கியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளது , சபையின் சரித்திரங்களில் கூட வன்முறை இருக்கிறது, எனவே பைபிளை விட்டுவிட்டு குர்ஆனின் வன்முறையை மட்டும் அதிகப்படுத்திக் காட்டுவது சரியானது அல்ல என்று கூறுகிறார்கள்.
ஒரு எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், பரீத் ஜகரியா என்பவர், நியூஸ் வீக் (News Week) என்ற பத்திரிக்கையில் "அவர்கள் நம்மை ஏன் எதிர்க்கின்றனர், இஸ்லாமிய வன்முறையின் வேர் எது? இதைக் குறித்து நாம் என்ன செய்யவேண்டும்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் கீழ் கண்ட விதமாக எழுதுகிறார்.
"சரித்திர ஆசிரியர் பால் ஜான்சன் என்பவர், 'இஸ்லாம் ஒரு கொடூரமான தீவிர வன்முறையைக் கொண்ட மற்றும் சகிப்புத் தன்மையற்ற மதமாக உள்ளது' என கூறுகிறார். ஆனால், இதர அறிஞர்கள் இதனை மறுத்து, 'இஸ்லாம் பாமர மக்கள் கொல்லப்படுவதை எதிர்க்கிறது மற்றும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு தடைவிதிக்கிறது' என்றுச் சொல்கிறார்கள். இப்போது "உண்மையான இஸ்லாம்" எது என்று தேடுவதினாலேயோ அல்லது குர்ஆனிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள் காட்டுவதினாலேயோ எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. குர்ஆன் என்பது பெரிய புத்தகம், குழப்பம் தரக்கூடிய கவிதை நடையில் உள்ள புத்தகம் மற்றும் பல முரண்பாடுகளைக் கொண்ட (பைபிளைப் போல) ஒரு புத்தகமாகும்". குர்ஆனில் நீங்கள் யுத்தங்களை எதிர்க்கக்கூடிய வசனங்களை காணமுடியும், மற்றும் சண்டைப்போடுவதை தூண்டும் வசனங்களையும் காணமுடியும். இன்னும் சகிப்புத்தன்மை பற்றிய அழகான வசனங்களையும் காணமுடியும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்களை தாக்கும் பற்றி கடுமையான வசனங்களையும் காணமுடியும்.
குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் வசனங்களை வைத்து, இஸ்லாமை அல்ல, இதற்கு பதிலாக,இந்த வசனங்களை மேற்கோள் காட்டக்கூடிய நபரைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மதமும் அனேக நல்ல விஷயங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே போல, மனித இனத்திற்கு எதிரான விவரங்களையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவ சபையின் மிக நீண்ட சரித்திர பின்னணியைக் கண்டால், அதில் யூதர்களுக்கு எதிரான சண்டைகளை அது ஆதரித்துள்ளது, பல அடக்குமுறையை அது ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் மனித உரிமைகளையும், சமுதாயத்திற்கு நன்மை செய்வதையும் அது ஆதரித்துள்ளது."
மேலே கூறப்பட்ட விமர்சனத்திற்கு கிறிஸ்தவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்? இறைவனின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிரிகள் அழிய வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்/இதர தீவிரவாதிகள் பின்பற்றும் வேதத்திற்கும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கும் வித்தியாசமே இல்லையா? நம்முடைய சபையின் இருண்ட சரித்திரத்தைப் பற்றியும், பழைய ஏற்பாட்டில் சில உவமைகளாகவும் படங்களாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நாம் எப்படி பதில் தரப்போகிறோம்? நம்முடைய பாரம்பரிய சபை சரித்திரம் அதிக வெளிச்சத்தில் இல்லாமல் காணப்படுகிறதே! இதற்கு நம்முடைய பதில் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளின் விளைவு தான் இந்த கட்டுரையாகும். நேரமின்மையால் நான் ஒவ்வொரு தலைப்பையும் அதிகமாக விவரிக்கப்போவதில்லை, ஆனால், மேலே கண்ட பிரச்சனைகளை நாம் புரிந்துக்கொள்ள இந்த விவரங்கள் நமக்கு உதவியளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
1. கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: "இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது". ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த குர்ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும், 1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும் 2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).
ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது "எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்", இஸ்லாமியர்கள் சொல்வது போல, "அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்" என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!
2. இப்போது நாம் பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, "தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்". கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது "உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்" என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.
ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் தன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
3. இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், கானானிய சில பட்டணங்களை அழிக்கும் படி தேவன் கொடுத்த கட்டளையானது, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் தேவன் இஸ்ரவேல் நாடானது, மற்ற நாடுகள் மீது தானாகச் சென்று போர் தொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது, தற்காப்பிற்காகவோ, அல்லது வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய இஸ்ரவேலின் தேவன் பற்றிய நம்பிக்கையை பரப்புவதற்காகவோ கூட தேவன் இப்படி மற்றவர்களின் நாடுகளின் மீது வலியச் சென்று சண்டையிடுங்கள் என்றுச் சொல்லவில்லை. ஆனால், குர்ஆனில் பல பொதுவான வசனங்களை நாம் காணலாம், அதாவது இஸ்லாமின் எதிரிகளை எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா மக்களையும் கொல்லும் படியான வசனங்கள் குர்ஆனில் உண்டு. முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு அவரை பின்பற்றினவர்கள் தனித்தனியாக பிரிந்துச் சென்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டதும், கொலைகள் செய்துக்கொண்டதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபனமாகிறது. இஸ்லாமிய சரித்திரத்தில், அன்று முதன் இன்றுவரை தங்கள் எதிரிகளை அழித்து கொல்லும் இஸ்லாமியர்கள் தங்களின் இந்த வன்முறைகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய வசனங்களையே ஆதாரமாக காட்டி வருகின்றனர்.
4. இந்த சிறிய கட்டுரையை இஸ்லாமியர்கள் "உண்மை என்று நம்பும் தங்கள் கோட்பாட்டை" சொல்லி நிறைவு செய்யலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்களை பொருத்தமட்டில், இஸ்லாம் மட்டுமே கடைசியான ஓர் இறைக்கொள்கையுடைய மார்க்கமாகும், இதனால், இஸ்லாம் யூத மற்றும் கிறிஸ்தவத்தை விட உயர்ந்தது என்று நம்புகிறார்கள். மத்திய கிழக்கு நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாலும், இஸ்லாமிய நாட்டில் நான் வளர்ந்தவன் என்பதாலும், எங்களுக்கு அடிக்கடி கீழ் கண்டவிதமாக கூறுவார்கள். அதாவது, யூத மார்க்கம் என்பது ஒரு ஆரம்ப பள்ளியைப் போன்றது, கிறிஸ்தவ மார்க்கம் என்பது மேல்நிலைப்பள்ளியைப் போன்றது, மற்றும் இஸ்லாம் என்பது பல்கலைக் கழகத்தைப் போன்றது என்று கூறுவார்கள். இந்த எல்லா மார்க்கமும் இறைவனிடமிருந்து வந்தது, ஆனால், ஒவ்வொரு மார்க்கமும் தனக்கு முன்பு இருந்த மார்க்கத்தைவிட சிறந்ததாக விளங்கியது என்று கூறுவார்கள். ஆனால், இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகள் கட்டளைகளை விட எந்த விதத்தில் இஸ்லாம் சிறந்த நற்குணங்களை, கட்டளைகளை கொண்டு விளங்குகிறது? அதாவது இஸ்லாம் வன்முறையை பின்பற்றுகிறது, இது ஒரு வகையில் யூத பாரம்பரியங்களில் காணப்பட்டது போல இருக்கின்றதே! எப்படி இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட சிறந்ததாக இருக்கமுடியும்? இஸ்லாம் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு மேலாக இன்னும் சிறந்த மார்க்கமாக இல்லாமல் போனதுமட்டுமல்ல, இந்த நன்னடத்தையில் இஸ்லாம் இன்னும் கிறிஸ்தவத்திற்கு முன்னால் அனேக நூற்றாண்டுகள் பின் தங்கியுள்ளது.
தற்காலத்தில் குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வன்முறையைப் பற்றி ஒரு சில சந்தேகங்களுக்கு இந்த சிறிய கட்டுரை உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகையும், பைபிளையும் மற்றும் எதையானாலும் காணக்கூடிய கண்ணாடியாக இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையுள்ளது. கடைசியாக, இந்த சிலுவைத் தான் இறைவன் யார் என்று நமக்கு காட்டுகிறது, அவர் எப்படி இருப்பார் என்று காட்டுகிறது, அவர் எப்படி நம்மை இவ்வுலகத்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை இதே சிலுவைத்தான் நமக்கு காட்டுகிறது.
ஆங்கில மூலம்: Violence in the Bible and the Qur'an - A Christian Perspective
இந்த தலைப்பு சம்மந்தப்பட்ட இதர கட்டுரையை படிக்கவும்: The Goodness of God
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
Tamil Source: http://www.answering-islam.org/tamil/terrorism/violence.html