இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, August 16, 2007

இஸ்மவேல் முகமது பைபிள் கட்டுரைக்கு பதில்-2(கட்டுரை-3)

இதுதான் இஸ்லாமுக்கு ஈசா குர்ஆன் உமர் பதில் அளித்துள்ளார்


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3273#3273குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதானிஸ்லாம் - பாகம் 2

இஸ்மவேல் முகமது பைபிள் கட்டுரைக்கு பதில்:

பாகம் 1 : என் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம்: http://isakoran.blogspot.com/2007/08/blog-post_14.html

பாகம் 2 தொடர்கிறது....

குர்-ஆன் வசனத்திலேயே(மொழிபெயர்ப்பு) கைவைத்த இது தான் இஸ்லாம்.

இது தான் இஸ்லாம் தளம் "பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்வைத்தனர். நான் அதற்கு பதில் எழுதினேன். என் பதிலுக்கு ஒரு மறுப்புக் கட்டுரையை அவர்கள் எழுதினார்கள். அவர்கள் மறுப்பு எழுதும் போது, அவர்களுக்கு ஓரளவிற்கு பதில் சொல்லமுடியும் என்ற நம்பிக்கை உள்ள என் கருத்துக்களுக்கு மட்டும் தான் மறுப்பு எழுதினார்கள்.

என் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் அல்லது அவர்கள் கருத்து சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்கள் கட்டுரைக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். இந்த கட்டுரையில், அவர்கள் மௌனமாக விட்டுவிட்ட என் 2 கேள்விகளை வாசகர்கள் முன்வைக்கின்றேன்.

கீழ்கண்ட என் இரண்டு கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.

1. குர்-ஆன் வசனத்தையே மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

2. இஸ்லாமிய நபி என்றுச் சொல்லிக்கொண்டு வரும் எல்லாரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதைப் பற்றி அவர்கள் கருத்துச் சொல்லவில்லை.

1. குர்-ஆன் வசனத்தையே மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

தங்கள் கட்டுரைகளில் பல முறை ஆதாரமில்லாமல் அவர்கள் சொல்லும் வாதம் "பைபிளில் மாற்றம் செய்துவிட்டார்கள்" என்று. ஆனால், ஒரு கட்டுரை வரைவதற்காக "குர்-ஆன் வசனத்தையே மாற்றி (அ) திருத்தி" சொல்லியிருக்கிறார்கள், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் நண்பர்கள்.

"பைபிள் புகழும் இஸ்மவேல்" கட்டுரையில் அவர்கள் மேற்கோள் காட்டிய குர்-ஆன் வசனம்: கவனிக்கவும் , இதில் (இஸ்மவேல்) என்ற வார்த்தை இவர்கள் கைவேலை.

Quote:
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம்.

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )

இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.



இதற்கு என் மறுப்பு மற்றும் என் கேள்வி:

Quote:
---------------------
என் மறுப்பு:
---------------------

குர்-ஆனில் இந்த வசனத்தில் முதலில் "இஸ்மவேல்" தான் பலியிடப்பட்டது என்று பெயர் வருகிறதா அல்லது அந்தப் பெயரை அடைப்பு குறிக்குள் இடுகிறீர்களா?

குர்-ஆன் குறிப்பிட்டு "இஸ்மவேல்" தான் என்றுச் சொல்வதில்லை, அரபிக் குர்-ஆனில் "இஸ்மவேல்" என்ற வார்த்தை இந்த வசனத்தில் உள்ளதா என்று பாருங்கள்.(எனக்கு அரபி தெரியாது, எனவே, வசனத்தை அரபியில் இருந்தால், சொல்லுங்கள்)

ஹதீஸ்களிலிருந்து இஸ்மவேல் என்று தெரிந்துக்கொண்டு இங்கு "இஸ்மவேல்" என்று மொழி பெயர்த்துள்ளீர்கள்.
ஆனால், "இஸ்மவேல்" என்று இந்த வசனம் சொல்வதில்லை.

குர்-ஆன் 37:100
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

குர்-ஆன் 37:100 "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).



குர்-ஆன்37:101
فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

குர்-ஆன்37:102
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاء اللَّهُ مِنَ الصَّابِرِينَ

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."


நான் www.tamililquran.com , www.chittarkottai.com/quran/index.php என்ற தளங்களை தேடிவிட்டேன், நீர் சொன்னது போல, அடைப்பு குறிக்குள் "இஸ்மவேல்" பெயர் இல்லையே? வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு இருந்தால் சொல்லவும். இந்த இரண்டு தளங்களிலும் "அம்மகன்" என்று தான் வருகிறது.



குர்-ஆன் வசனத்தில் செய்த திருத்தம்:

குர்-ஆன் மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு வார்த்தையை எடுத்து அதற்கு பதிலாக வேறு ஒரு வார்த்தையை சேர்த்து “இது தான் குர்-ஆன் வசன ஆதாரம்” என்றுச் சொல்லி மாற்று மதத்தவர்களை முட்டாளாக்க பார்த்தவர்கள் இவர்கள்.

சாதாரணமாக ஒரு வசனத்தில் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முறையை கையாள்வார்கள்.

1. வசனத்தின் முற்பகுதியை காட்ட வேண்டுமானால்:

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். . . . . . . . . . . (குர்-ஆன்37:102)


என்று கடைசிப் பகுதியின் இடத்தில் சில புள்ளிகளை (. . . . .) வைத்துகாட்டுவோம்.

2. வசனத்தின் நடுப்பகுதியை காட்டவேண்டுமானால்:


(. . . . . .) (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். (. . . . . .) . (குர்-ஆன்37:102)

3. வசனத்தின் கடைசிப் பகுதியை மட்டும் காட்டவேண்டுமானால்:

( . . . . . ) (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” (குர்-ஆன்37:102)

4. பொருள் புரியவேண்டும் என்பதற்காக, சொந்த வார்த்தைகளைச் சேர்த்தால், எந்த வார்த்தைகளை சேர்த்தோம் என்று கீழே அதற்காக விளக்கத்தைக் கொடுப்போம்:

குர்-ஆன் மொழிபெயர்ப்பாளர்களே, "இஸ்மவேல்" என்று எழுத தயங்கி, "அம்மகன்" என்று எழுதினார்கள்.

இந்த வசனத்தில் நம் நண்பர் அடைப்புக்குறிக்குள் இருந்த "அம்மகன்" என்ற வார்த்தையை எடுத்துவிட்டு "இஸ்மவேல்" என்று எழுதி, இது தான் குர்-ஆன் வசனம் என்றுச் சொல்கிறார்.

எந்த குர்-ஆன் மொழிப்பெயர்ப்பாளரும் ஹதீஸ்படி இஸ்மவேல் என்று தான் தெரிந்தாலும், குர்-ஆன் மூலமொழியில் இஸ்மவேல் என்று இந்த வசனத்தில் இல்லாததால் "அம்மகன்" என்று தான் எல்லாரும் மொழி பெயர்த்துள்ளனர்.

கீழே சில மொழிபெயர்ப்புகளைக் காணலாம்:


1) Dr. S. முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு ( ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரரி & சாரிடபிள் டிரஸ்ட்) இது தான் இவர்கள் பயன்படுத்திய குர்-ஆன் மொழிபெயர்ப்பு

Quote:

குர்-ஆன்37:102 பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."


2) Yousuf Ali, Translation

Quote:

037.102
YUSUFALI: Then, when (the son) reached (the age of) (serious) work with him, he said: "O my son! I see in vision that I offer thee in sacrifice: Now see what is thy view!" (The son) said: "O my father! Do as thou art commanded: thou will find me, if Allah so wills one practising Patience and Constancy!"




3) Shakir Translation

Quote:

SHAKIR: And when he attained to working with him, he said: O my son! surely I have seen in a dream that I should sacrifice you; consider then what you see. He said: O my father! do what you are commanded; if Allah please, you will find me of the patient ones.


4) Pickthal Translation

Quote:

PICKTHAL: And when (his son) was old enough to walk with him, (Abraham) said: O my dear son, I have seen in a dream that I must sacrifice thee. So look, what thinkest thou? He said: O my father! Do that which thou art commanded. Allah willing, thou shalt find me of the steadfast.


Source of English Quran Translations :
http://www.usc.edu/dept/MSA/quran/037.qmt.html

இப்போது "இது தான் இஸ்லாம்" கொடுத்த வசனத்தைப் பாருங்கள்:

Quote:

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )


குர்-ஆனை மொழி பெயர்த்தவர்கள் சரியான பொருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல இடங்களில் அடைப்புகுறிக்குள் சில விவரங்களை சேர்ப்பார்கள், இதில் தவறு இல்லை. ஆனால், இவர் "நிஜாமுத்தீன்(இது தான் இஸ்லாம்)" மொழி பெயர்த்தவர்கள் செய்ய பயந்து "அம்மகன்" என்று எழுதியதை "எடுத்துவிட்டு" அந்த இடத்தில் "இஸ்மவேல்" என்று எழுதி கிறிஸ்தவர்களுக்காக எழுதப்படும் கட்டுரையில் எழுதுகிறார் என்றால், இனி இவர்கள் நேர்மையைப் பற்றி என்ன சொல்ல முடியும்?


மட்டுமல்ல, அல்லாஹ் என்று இருந்ததை இவர் "கர்த்தர்" என்று எழுதினார். இதை வேண்டுமானாலும் விட்டுவிடலாம் ஏன் என்றால், அல்லாவும், கர்த்தரும் ஒருவர் தான் என்று இஸ்லாம் சொல்கிறது (ஆனால், கர்த்தர் வேறு, அல்லா வேறு என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும்).

1. ஏன் இவர் இப்படி தில்லுமுல்லு செய்யவேண்டும்.

2. இன்று ஒரு சிறு கட்டுரைக்காக குர்-ஆன் மொழிபெயர்ப்பை மாற்றியவர்கள், ஒரு பெரிய வேலைக்காக மூலத்தில் கைவைக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? (தன் மொழிபெயர்ப்பில் தன் பெயரை 8 இடத்தில் சேர்த்ததற்காகவும், தன்னை ஒரு நபி என்றுச் சொன்னதற்காகவும் "ரஷித் காலிபா" என்பவர் கொல்லப்பட்டார்.)

3. இஸ்லாம் பற்றி இவர்கள் முன்வைக்கும் வசனத்திலேயே இவ்வளவு "ஏமாற்றுதல்" புகுத்தப்படும் என்றால், கிறிஸ்வத்தைப் பற்றி இவர்கள் சொல்வதில் எந்த அளவு இவர்களிடம் நேர்மையை நாம் எதிர்பார்க்கமுடியும்?

4. இப்படி குர்-ஆனின் வசனத்தை மாற்றி எழுதிவிட்டு, பைபிளில் மாற்றம் செய்துவிட்டார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்!

5. உண்மை வசனத்தை அப்படியே எழுதிவிட்டு, ஹதீஸ்படி இதில் வரும் "அம்மகன்" என்பது "இஸ்மவேலை" குறிக்கும் என்றுச் சொல்லியிருக்கவேண்டும்?

6. இவர்கள் கொடுத்த மாற்றப்பட்ட வசனத்தை படிப்பவர்கள், கிறிஸ்தவர்கள் "குர்-ஆனில் இஸ்மவேல் என்று உள்ளது" என்று நினைக்கவேண்டும் என்பதற்காக குர்-ஆனையே மாற்றி எழுதினால் எப்படி?
எந்த மொழிபெயர்ப்பில் இப்படி உள்ளது? என்று கேட்டேன் அதற்கு இவர்களிடமிருந்து பதில் இல்லை

Dr. S. முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு தான் இவர் பயன்படுத்தியுள்ளார், உங்கள் மொழிபெயர்ப்பில் இப்படி திருத்தம் செய்து வெளியிடுவது உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டால், இவர்களுடைய( ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரரி & சாரிடபிள் டிரஸ்ட்) பதில் என்னவாக இருக்கும்?


அப்படி “இஸ்லாயீல்” வரும் வசனம் உள்ள மொழி பெயர்ப்பாகிய "P. ஜைனுல் ஆபிதீன்" மொழிபெயர்ப்பை பயன்படுத்தவேண்டியது தானே. அதை விட்டுவிட்டு இருந்த வார்த்தையை எடுத்துவிட்டு, இவராகவே இஸ்மாயீல் என்று சேர்த்து "இது தான் குர்-ஆன வசனம்" என்று ஆதாரம் காட்டுவது அறிவுடமையாகாது. P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மட்டும் தான் இந்த வசனத்தில் "இஸ்மாயீல்" என்று அடைப்புக்குறிக்குள் தன் மொழி பெயர்ப்பில் எழுதுகிறார். (இவருடைய மொழிபெயர்ப்பில் பல தவறுகள் உள்ளது என்று இஸ்லாமியர்களில் ஒரு சாரார் எண்ணுகின்றனர், இதனால் தான் இவர் மொழி பெயர்ப்பை இது தான் இஸ்லாம் தளம் பயன்படுத்தவில்லையோ!)

P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்ப்பு

Quote:
குர்-ஆன் 37:102 : அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு" என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்" என்று பதிலளித்தார்.

Source : http://www.onlinepj.com/



முதலில் உங்கள் வேதத்தில் உள்ளதை அப்படியே மேற்கோள் காட்ட கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிக்கின்ற நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தால், இதற்கு உங்கள் பதில் என்ன?

இதை படிப்பவர்கள் கிறிஸ்தவராக இருந்தால், இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள் "இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்களை, முதலில் பொன்னை புடமிடுவதைப் போல் புடமிட்டுத் தான், நாம் அதன் நம்பகத்தன்மையை தெரிந்துக் கொள்ள முடியும்?" அதை சொல்பவர்கள், நிஜாமுத்தீனாக அவர்களாக இருந்தாலும் சரி, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களாக இருந்தாலும் சரி

-------------------------****************--------------------------


2. இஸ்லாமிய நபி என்றுச் சொல்லிக்கொண்டு வரும் எல்லாரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதைப் பற்றி அவர்கள் கருத்துச் சொல்லவில்லை.


முகமதுவை கிறிஸ்தவர்கள் மணமுரண்டாக நிராகரித்து வருகிறார்கள் என்று இது தான் இஸ்லாம் தளம் எழுதியது. இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு வரும் எல்லா நபிகளையும் எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்றும், மெஹ்தி என்பவரும், ரஷீத காலிபா என்றும் இருவர் நபிகள் என்று இஸ்லாமியர்களில் ஒரு சாரார் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டு இருந்தேன்? ஆனால், இதற்கும் பதில் இல்லை.


Quote:
இது தான் இஸ்லாம் தளம் எழுதியது

// கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது.//

ஈஸா குர்-ஆன் பதில்:

நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்டு வருகிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பைபிள் தெளிவாகச் சொல்கிறது, இயேசுவிற்கு அடுத்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடுத்து வேறு யாரும் வரவேண்டிய அவசியமில்லை என்று, இப்படி இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி முகமதுவை நம்ப முடியும்? சொல்லுங்கள்.

"மெஹ்தி" Mehdi

ஷிய முஸ்லீம்கள் "மெஹ்தி" Mehdi என்ற ஒரு "நபி" அல்லது ஒருவர் வருவார், அவர் வந்து உலகத்தை மாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவரை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவரைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளது என்று விகீபீடியா சொல்கிறது (http://en.wikipedia.org/wiki/Mahdi). எனவே, ஒருவர் நபி என்று வந்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை.

வந்தவர் உண்மையாக இறைவன் அனுப்பியவராக இருந்து, மக்கள் அவரை நம்பவில்லையானால், அவர்களுக்கு இறைவன் அதற்கேற்ற கூலி கொடுப்பான் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் விவரமாக எல்லாம் சொன்னதால்( ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை), நாங்கள் நம்புவதில்லை, அவ்வளவு தான்.


ரஷீத் காலிஃபா:

ரஷீத் என்று ஒருவர் கூட ஒரு நபி என்று சொல்லிக்கொண்டு வந்தார் (November 19, 1935 – January 31, 1990) , குர்-ஆனில் உள்ள "Numerical Miracle" என்று சொல்லிக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். தான் மொழி பெயர்த்த குர்-ஆனில் "தன் பெயரை" கூட சேர்த்துக்கொண்டார்.

தன்னிடம் அல்லா பேசுவதாகச் சொன்னார், அவரையும் எத்தனையோ பேர் அங்கீகரித்தனர். தான் சொல்லும் இஸ்லாம் தான் உண்மையானது, இப்போது உள்ளது உண்மையானது இல்லை என்றுச் சொன்னார்.


இவரை ஒரு பெரிய "அல்லாவின் சேவகன்" என்று அஹமத் தீதத் (Ahmad Deedat) என்ற இஸ்லாமிய ஊழியர் கூட புகழ்ந்தார். இவரின் Numerical Miracle பற்றி மிகவும் அதிகமாக அஹமத் தீதத் புகழ்ந்தார்.

படிக்கவும் இங்கே: http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

Quote: from Wikipedia
Khalifa was initially well-received throughout the Muslim world upon his mathematical discoveries embedded in the text of the Quran. Prominent Shaykh Ahmed Deedat referred to him as a "great servant" of God in his book based on Khalifa's discoveries "Al-Qur'an: The Ultimate Miracle

1991ல் அவரை கொலை செய்தார்கள். இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இவரை அஹமத் தீதத் புகழ்ந்துள்ளாரே. இவரை நம்பும்படி நான் சொல்லவில்லை, இப்படி பல பேர் வருவார்கள் என்றுச் சொல்கிறேன். ( ஒரு தமிழ் பாட்டு: யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது..)

ரஷீத் அவர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: http://19.org/km/RK/1

கீழ் கண்ட வசனங்களில் அவர் தன்னுடைய பெயரை எழுதிக்கொண்டு குர்-ஆனை மொழி பெயர்த்தார். இவைகள் முகமதுவிற்கு என்று எங்களுக்குத் தெரியும்.
Quote:
Quran 13:30

We have sent you (O Rashad) to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny."

Quran 13:38

We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without GOD's authorization, and in accordance with a specific, predetermined time.

Quran 25:56

We have sent you (Rashad) as a deliverer of good news, as well as a warner.

Quran 34:28

We have sent you (O Rashad) to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know.

Quran 34:46

Say, "I ask you to do one thing: Devote yourselves to GOD, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution."

Quran 36:3

Most assuredly, you (Rashad) are one of the messengers.

Quran 42:24

Are they saying, "He (Rashad) has fabricated lies about GOD!"? If GOD willed, He could have sealed your mind, but GOD erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts.

Quran 81:22

Your friend (Rashad) is not crazy.


இப்படி சிலர் இருக்கிறார்கள், இவரை நபி என்று நாங்கள் (ஏன், நீங்கள் கூட) ஏற்றுக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.


கிறிஸ்தவத்திற்கு வெளியே ஒருவர் "நபி என்று" சொல்லிக்கொண்டு வந்தால், அவர்களை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றனர் என்று குற்றம்சாட்டும் இவர்கள், இஸ்லாமுக்குள்ளேயே, அதன் பெயரை வைத்துக்கொண்டே "நபி என்று" வந்த மற்றும் வருவார்கள் என்று நம்பப்படுகின்ற சிலரைப் (மெஹ்தி என்பவரும், ரஷீத காலிபா ) பற்றி இவர்களின் கருத்து என்ன என்று தெரிந்தால் தானே, நாங்களும் ஏன் முகமதுவை நிராகரிக்கிறோம் என்று சொல்வதற்கு ஏதுவாகும்?


எழுதப்படும் ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை? அவர்கள் கேட்கும் கேள்விக்கு நாங்கள் பதில் தரும்போது, சில முக்கியமான எங்கள் கேள்விகளுக்கும்(குர்-ஆன் வசனத்தில் உள்ள இவர்கள் திருத்தம், இஸ்லாமிய இதர நபிகள்) அவர்கள் கருத்து சொன்னால் தான் விவாதத்திற்கு அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு நன்றாக இருக்கும்.

-------பாகம் - 2 முற்றிற்று-------

"இஸ்மவேல் - முகமது - பைபிள்"" கட்டுரைக்கான மறுப்பு 2"

இது தான் இஸ்லாமின் கட்டுரைக்கு ஈசா குர் ஆன் இணையம் பதில் அளித்து உள்ளது.http://isakoran.blogspot.com/

"இஸ்மவேல் - முகமது - பைபிள்"" கட்டுரைக்கான மறுப்பு 2"


இனி "இஸ்மவேல் - முகமது - பைபிள்"" கட்டுரைக்கான மறுப்பைப் பார்ப்போம்

1. இது தான் இஸ்லாம் தளத்தின் கட்டுரையை இங்கு காணலாம்: Here or Here

2. ஈஸா குர்-ஆன் என் தளத்தின் மறுப்பை இங்கு காணலாம்: Here or Here

3. என் மறுப்பிற்கு அவர்களின் பதிலை இங்கு காணலாம்: Here or Here

4. இதற்கான பதிலைத் தான், நாம் இந்த (தற்போது) கட்டுரையில் காணப்போகிறோம்.

நான் என் பதிலை 2 பாகங்களாக பிரித்துச் சொல்லப்போகிறேன்.
a) பாகம் – 1 : அவர்களுடைய கட்டுரைக்கு என் பதில் அல்லது மறுப்பு.

b) பாகம் - 2: என் கட்டுரையில் (மேலே வரிசை எண் 2ல் உள்ள கட்டுரைக்கு) நான் முன்வைத்த சில கேள்விகளை அவர்கள் விட்டுவிட்டு, தங்களுக்கு தேவையானவற்றிற்கு மட்டும் பதில் கொடுத்துள்ளார்கள். அவர்கள் எந்த கேள்விகளை விட்டுவிட்டார்கள் என்று ஒரு சுருக்கத்தை காண்போம்.

இந்த கட்டுரையில் பாகம் - 1 ஐ மட்டும் பார்க்கலாம். பாகம் - 2ஐ தனி கட்டுரையாக வைக்கிறேன்.


--------------------------------------------------------------------------------

பாகம் – 1 : அவர்களுடைய கட்டுரைக்கு என் பதில் அல்லது மறுப்பு தொடர்கிறது



நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள்

இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள். பதில் - 4

ஜி. நிஜாமுத்தீன் - பரங்கிப்பேட்டை.

அன்பிற்குகந்த வாசகர்களுக்கு - குறிப்பாக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு, இயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்காக எழுதப்பட்டு வரும் ஒரு தொடருக்கு ஒரு கிறிஸ்த்தவ நண்பர் அவரது வலைப்பூவில் மறுப்பெழுதுகின்றார். இயேசுவின் வரலாற்றை குர்ஆனையும் - பைபிளையும் வைத்து அலசிப் பார்க்கும் கட்டுரைதான் இது. குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள இதர வரலாற்று குறிப்புகளையோ சட்டங்களையோ இந்தத் தொடரில் நாம் விவாதிக்கப் போவதில்லை. அதையெல்லாம் எழுதத் துவங்கினால் இயேசுவின் வரலாற்று நோக்கத்திலிருந்து நாம் வெளியில் சென்று விடுவோம்.


ஈஸா குர்-ஆன் பதில்

அன்பு நண்பர் நிஜாமுத்தீன் அவர்களுக்கு, "ஒரு கிறிஸ்த்தவ நண்பர் அவரது வலைப்பூவில் மறுப்பெழுதுகின்றார் " என்றுச் சொல்கிறீர், எனக்கு பெயர் இல்லையா, அல்லது என் தளத்திற்கு பெயர் இல்லையா? "உமர்" என்ற பெயருடைய கிறிஸ்தவ நண்பர் என்றும், "ஈஸா குர்-ஆன்" என்ற தளத்தில் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?

ஒரு கட்டுரைக்கு அல்லது கேள்விக்கு இணையத்தில் பதில் தரும் போது, அந்த கேள்வியுள்ள தளத்தின் தொடுப்பை (Url or Link) தரவேண்டும் வாசகர்கள் சென்று படிக்க, அல்லது அந்த கட்டுரையில் உள்ள அனைத்தையும் உம் பதிலில் நீர் Quote செய்து காட்டவேண்டும். இவைகள் இரண்டையும் நீர் செய்வதில்லை.

1. என் தளத்தின் தொடுப்பையும் தருவதில்லை. அல்லது

2. என் கட்டுரை முழுவதுமாக உம் பதிலில் Quote செய்வதில்லை.

உம்மால் ஓரளவு பதில் அளிக்கமுடியும் என்ற நம்பிக்கையுள்ள வரிகளை மட்டும், உம் பதிலில் நீர் காட்டுகிறீர். ஏன் இந்த பயம் உங்களுக்கு, இஸ்லாமியர்கள் என் தளத்தில் வந்து படித்துவிடுவார்கள் என்ற பயமா?

என் மறுப்புக் கட்டுரைகளில், உம்முடைய பெயராவது, தளத்தின் பெயராவது அல்லது உம்முடைய கட்டுரை முழுவதுமாக ஒரு வரி விடாமல் நான் Quote செய்கிறேன். அப்படி நீரோ, இது தான் இஸ்லாம், தமிழ் முஸ்லீம் தளமோ செய்வதில்லை.

ஏனென்றால், என் கட்டுரையை படிக்கும் வாசகர்கள், "நீர் என்ன சொல்கிறீர்" என்பதை புரிந்துக்கொண்டால், தான் "என் மறுப்பை" புரிந்துக்கொள்ளமுடியும், அதனால் தான் உம்முடைய கட்டுரையை படிக்க ஏதாவது ஒரு வழியை நான் என் கட்டுரைகளில் வைக்கிறேன். இது தான் முறைகூட, இது உமக்கும் தெரியும். இனியாவது பதிலோ அல்லது மறுப்போ கொடுக்கும் பொது, என் கட்டுரைக்கு ஒரு தொடுப்பை கொடுப்பீர் என்று நம்புகிறேன்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

நமக்கு மறுப்பளிக்கும் சகோதரர் தனது முதலாவது மறுப்புக் கட்டுரையில் துவங்கி பல இடங்களில் குர்ஆனை விமர்சிக்கின்றார். குர்ஆனிலிருந்து இயேசு சம்பந்தமான அவர், மற்றும் பின்னூட்டமிடுபவர்கள் எடுத்துக் காட்டும் விமர்சனைங்களை மட்டுமே நாம் பதிலுக்கு எடுத்துக் கொள்வோம்.

மற்ற மற்ற விமர்சனங்களுக்கு வேண்டுமானால் அவர் தனிபதிவிடட்டும். அதற்கு எங்கு எப்படி பதிலளிக்க வேண்டுமோ அதை நாம் செய்வோம். இதை நாம் குறிப்பிடுவதற்கு காரணம். அவரது மறுப்புக் கட்டுரையின் துவக்கத்திலேயே 'என் மறுப்பு' என்ற முதல் பாராவில் ''சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம். குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது. '' என்று எழுதுதியுள்ளார்.

குர்ஆன் குறித்த உங்களின் சந்தேகங்களை - ஆட்சேபனைகளை தனிப்பதிவில் வையுங்கள். அதை நாம் அங்குப் பேசிக் கொள்ளலாம். இந்தப் பதிவை இயேசுவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நமது கருத்தாடல் ஒரே சீராக செல்லும் வாய்ப்பு ஏற்படும். வாசகர்களுக்கும் பலனிக்கும். உங்கள் மறுப்புத் தொடரில் இயேசு பற்றிய விபரங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்வோம். மற்றவற்றை கண்டுக் கொள்ள மாட்டோம் என்பதை இப்போதே கூறிக் கொள்கின்றோம். இனி விஷயத்திற்கு வருவோம்.

ஈஸா குர்-ஆன் பதில்

உங்கள் கட்டுரையை ஆரம்பிக்கும் போதே, நீர் உம்முடைய முடிவுரை கீழ் கண்டவாறு சொல்கிறீர், பல அறிஞர்கள் சொல்கிறார்கள், "பைபிளில் பல முரண்பாடுகள் உண்டென்று" என்று . இன்னும் எந்த விவரமும் விவரிக்காமல் உம்முடைய முடிவுரையைச் சொன்னதால், நான் குர்-ஆன் சம்மந்தப்பட்ட சில முரண்பாடுகளைப் பற்றி ஒரு சுருக்கத்தை முன்வைத்தேன். உம் விருப்பம் படியே, இதற்காக தனி கட்டுரையை வைக்கிறேன், அப்பொது அதைப் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்.

எந்த வேகத்தில் ஒரு பந்து ஒரு சுவற்றை நோக்கி வீசப்படுமோ, அதே வேகத்தில் அந்த பந்து திரும்பி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

நாம்:

சமூகமும் - இயேசுவின் பிறப்பும்.

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.

அவர்கள் (மறுப்பு)

சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.

அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3 16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். 16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆதியாகமம் 16:4-5 16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள் 16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

ஆதியாகமம் 16:6 16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

கர்த்தருடைய தூதனானவர் கூட 'ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்' சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார். ஆதியாகமம் 16:7-8 16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு, 16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12

முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு 'துஷ்டமனுஷனாக இருப்பான்' என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார். ஆதியாகமம் 16:9-12 16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். 16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார். 16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. 16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

நாம்:

வாசகர்களே மிக கவனமாக இந்தத் தொடரை படித்து வாருங்கள்.

மறுப்பாளர் தனது முதலாவது மறுப்புப் பதிவிலேயே ஆகாரையும் (ஹாஜர்) இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) குறித்து பைபிளைக் கோடிட்டுக் காட்டுகிறார். அதனால் நாம் 'பைபிள் புழகும் இஸ்மவேல்' என்ற கட்டுரையைப் பதித்தோம். அதில் இஸ்மவேல் குறித்த பைபிளின் வாசகங்களையும் ஆகார் ஆப்ரகாமின் அங்கீகரிக்கப்பட்ட மனைவி என்பதை பைபிள் ஒப்புக் கொள்வதையும் எடுத்து காட்டி இருந்தோம். மறுப்பெழுதும் சகோதரரின் முதல் மறுப்பையும் - நமது பைபிள் புகழும் இஸ்மவேல் கட்டுரையையும் படித்து விட்டு தொடரும் மறுப்பாளரின் வாதங்களைப் பாருங்கள்.

ஈஸா குர்-ஆன் பதில்

முதலாவது, இயேசுவின் வரலாறு என்று 5 கட்டுரைகளை முன்வைத்தீர்கள். நான் அதற்கு மறுப்புக்கட்டுரைகளை முன்வைத்தேன். பிறகு நீங்கள் "பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்வைத்தீர்கள். இந்த "கட்டுரை இயேசுவின் வரலாறு 1க்கு என் மறுப்பிற்கு பதில்" என்று எங்கும் குறிப்பிடவில்லை. நான் நினைத்தேன், இது ஒரு தனி கட்டுரை என்று, ஆனால், இந்த தற்போதைய கட்டுரையில்(இஸ்மவேல், முகமது, பைபிள்) நீர் சொல்கிறீர் இந்த கட்டுரை "இயேசுவின் வரலாறு 1க்கு உங்கள் மறுப்பு" என்று . எப்படியாயினும் இயேசுவின் வரலாறுக்கு மறுப்பு எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். மிக்க நன்றி.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

'*உண்மையில் இஸ்மவேலின் வரலாற்றைச் சொன்னதே கிறிஸ்தவம் தான். இஸ்மவேலுக்கு எத்தனை பிள்ளைகள், அவர்கள் பெயர் என்ன? அவர் யாரை திருமணம் செய்துக்கொண்டார், எத்தனை வயது இருக்கும் போது மரித்தார், என்று பல விவரங்களை உலகிற்கு பைபிள் தான் சொன்னது.

இந்த வசனங்கள் பைபிளின் தேவன் ஆகாருக்கும், இஸ்மவேலுக்கும் காட்டும் அன்பு, பரிவு, பாதுகாப்பு போன்றவற்றைக் காட்டுகிறது. இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கிறது. இதில் இறைவனின் சிறப்பு தான் மேலோங்கி நிற்கிறது. தன் படைப்பின் மீது அன்பு காட்டுவது இறைவனின் இயல்பு. சரி, விசுவாசத்தின் தந்தை என்று கிறிஸ்தவர்கள், யூதர்கள் சொல்லும் 'ஆபிரகாமின் மகனுக்கு' நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம். இஸ்மவேல் சிறந்தவர் தான். நாங்களும் அவருக்கு மதிப்புத் தருகிறோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவன் அந்த பிள்ளையோடு இருந்தார் என்று நாங்கள் வாசிக்கிறோமே, தேவனே அவரை ஆசீர்வதித்து இருக்க, நாங்கள் எம்மாத்திரம் சொல்லுங்கள். இஸ்மவேலோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் பிரச்சனை அல்லது கருத்து என்னவென்றால், தேவன் செய்த உடன்படிக்கை ஈசாக்கோடு மட்டும் தான் என்பது. அவ்வளவு தான். இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரன் தான், இன்னும் ஆபிரகாமுக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள் தான்.

ஆனால், தேவன் கொடுத்த உடன்படிக்கை ஈசாக்கோடு என்றுச் சொல்கிறோம். இஸ்மவேலை நாங்கள் அவமதிக்க வில்லை. பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளையோடு இறைவன் இருந்தார் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்கள் சொல்லுங்கள், இப்போது நீங்கள் சொன்னது போல, 'ஆகாரையும், இஸ்மவேலையும்' பாலை வனத்தில் விட்டு ஆபிரகாம் சென்றாரா? அல்லது மக்காவரையில் அழைத்துச் சென்று 'ஆபிரகாமும் அவர்களோடு' காபாவை புதுப் பித்தாரா? ** நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். **இஸ்மவேல் ஆபிரகாமின் மகன் இல்லை என்றுச் நாங்கள் சொல்லவில்லை. தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கு மூலம் தான் நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார் என்றுச் சொல்கிறோம்.

பைபிள் வசனத்தை நன்றாக பாருங்கள்: 'அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்' 'இவருடைய கை எல்லாருக்கும் விரோதமாக இருக்கும்' என்றால், இவர் சண்டை பொடுவார் என்று பொருள் கொள்ளலாம், சரி அதை அடுத்து படியுங்கள் ' எல்லாருடைய கை இவருக்கு விரோதமாக இருக்கும்' மற்றவர்களும் இவரைச் சுற்றி உள்ளவர்களும் இவரோடு சண்டை போடுவார்கள் என்று பொருள் வருகிறது அல்லவா? இங்கு சொல்லப்பட்டது இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு போல)என்பதே தவிர, இவர் மட்டும் கொடுமைக்காரர் என்று அல்ல.

இஸ்மவேலை விடும், ஆபிரகாமைப் பாரும், இவரின் வம்சத்தில் வந்தவர் தானே முகமது கூட (இஸ்லாம் படி, நான் நம்புவது, நம்பாதது அது வேறு விஷயம்), அப்படி இருந்தும், நாங்கள் 'முகமதுவை' நபியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயேசுவின் வம்சவரலாறு உமக்கு தெரிந்து இருக்கும், அவர் வந்த வம்சம் எப்படிப் பட்டது. தாவிது, தன் சிப்பாயின் மனைவியோடு விபச்சாரம் செய்தான், தேவன் அவன் குழந்தையை மரிக்கச் செய்தார். சாமுவேல் பல மனைவிகளை கொண்டான், தேவனுக்கு தூரமாகச் சென்றான், பிறகு மனம் திரும்பி வந்தான். இப்படி பலபேர் எனவே, 'வம்சத்தை பார்த்து கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, வந்தவரைப் பார்த்து விசுவாசிக்கிறோம்'.

நாம் (பதில்)

கிறிஸ்த்தவ உலகம் எப்போதுமே இஸ்மவேலைக் கண்டுக் கொள்வதில்லை. கண்டுக் கொண்டால் 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20) என்ற பைபிள் வசனத்தை நம்பினால் அந்த வசனத்தின் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்தால் தாங்கள் பாதுகாத்து வரும் தேவன் சுதன் பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கொள்கைக்கு ஆபத்து வந்து விடுமே என்ற பயம் அவர்களிம் இருக்கவே செய்கின்றது.


ஈஸா குர்-ஆன் பதில்

நண்பரே, கிறிஸ்தவர்களுக்கு அர்த்தம் புரியாமல் போவதற்கு, நாங்கள் ஒன்றும் அரபியிலோ அல்லது எபிரேய மொழியிலோ அர்த்தமே புரியாமல் இஸ்லாமிய சிறுமிகள், சிறுவர்கள், மற்ற எல்லாரும் செய்வது போல பைபிளை படிப்பதில்லை. எங்கள் சொந்த மொழியிலேயே படிக்கிறோம்.

எங்களுக்கு பயம் ஒன்றும் இல்லை, அதனால் தான் யார் பைபிளை விமர்சித்தாலும், நாங்கள் பயப்படுவதில்லை, காரணம் பைபிளில் உண்மையுள்ளது, தன்னை காத்துக்கொள்ள பைபிளுக்குத் தெரியும். விமர்சித்தவர்களை கொலை செய்யவேண்டும் என்று நாங்கள் "பத்வா" கொடுப்பதில்லை. (இந்த இடத்தில் இந்திய முஸ்லீம் இமாம்களைப் பற்றிச் சொல்லவில்லை, உலகத்தில் உள்ள மற்ற பாகங்களில் நடக்கும் செய்தியைச் சொன்னேன். இந்தியாவிலும், தஸ்லீமா நஸ் ரீனுக்கு ஒரு பத்வா வந்ததாக ஒரு செய்தி.)


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இஸ்மவேலைப் பற்றி நாம் எழுதியவுடன் இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கின்றது மாறாக இறைவனின் சிறப்புதான் மேலோங்கி நிற்கின்றது என்று குறிப்பிட்டு விட்டு அடுத்த வரிகளில் இஸ்மவேல் சிறந்தவர் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரா... ஒருவகையில் பார்த்தால் இந்த உலகில் யாருக்கும் எந்த சிறப்பும் இல்லை. முஹம்மதுவாகட்டும், இயேசுவாகட்டும், நீங்களும் நாங்களும் நம்பும் இன்னபிற தீர்க்கதரிசிகள் ஆகட்டும் இவர்களில் யாருக்கும் சிறப்பு இல்லை. இறைவனைத் தவிர. இறைவனின் சிறப்பைத் தெளிவாக உணர்ந்ததால் தான் இயேசுவையோ இன்னப் பிற மனிதர்களையோ இறைவனின் வாரிசு என்று கொண்டாடாமல் அனைவரும் இறைவனின் அடிமை என்று இஸ்லாம் சொல்கின்றது. நாங்களும் அதை உரத்துக் கூறுகின்றோம். சிறப்புக்குரியவர்கள் இறைவனா பிற மனிதர்களா என்றத் தோரணையில் எழுதுவதாக இருந்தால் இந்தக் கட்டுரைகளேத் தேவையில்லை. எனவே அத்தகைய வாதங்களை வைக்க வேண்டாம்.


ஈஸா குர்-ஆன் பதில்

இறைவன் ஒரு மனிதனை ஆசீர்வதிப்பேன் என்றால், அது இறைவனின் அன்பு தானே தவிர, அந்த நபர் ஒன்றும் அல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிவிடமாட்டார்.

இறைவன் இஸ்மவேலை ஆசீர்வதித்த செயலை முன்வைத்துக்கொண்டு, "இது இஸ்மவேலின் சிறப்பு" என்று நீர் சொன்னதால், இது இஸ்மவேலின் சிறப்பல்ல, இது இறைவனின் கிருபை, இரக்கம் என்றுச் சொன்னேன்.

சிறப்பிற்குரியவர் இறைவன் தான் என்பதை மட்டும் நாங்கள் என்றும் மறந்ததில்லை. இதைத் தெளிவு படுத்தவே, எல்லா தீர்க்கதரிசிகள் செய்த தவறுகளையும் பைபிள் தன்னுள் கொண்டுள்ளது.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

கர்த்தர் ஒருவரை சிறப்பித்திருக்கும் போது இது அவருக்குரிய சிறப்பல்ல என்று மறுப்பது இறை நிராகரிப்பாகி விடும். கர்த்தர் யாரை சிறப்பித்துள்ளாரோ அவரை நாமும் சிறப்பிக்க வேண்டும். 'கர்த்தர் சிறப்பித்துள்ளது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை எங்களுக்கு பிடித்திருந்தால் தான் நாங்கள் சிறப்பிப்போம் இல்லையெனில் புறக்கணிப்போம்' என்றத் தோரணை கிறிஸ்த்துவத்தில் பதிந்துள்ளதால் தான் இஸ்மவேலையோ அவர் குறித்த கர்த்தரின் வார்த்தைகளையோ கிறிஸ்த்தவம் கண்டுக் கொள்ளவில்லை.


ஈஸா குர்-ஆன் பதில்

தேவன் ஒருவரை ஆசீர்வதித்தார் என்றால், அதன்பொருள் என்ன? அந்த நபருக்கு தேவன் செழிப்பை, நீடிய ஆயுளை இன்னும் பல நன்மைகளைத தருவார் என்றுப் பொருள்.

அதற்காக அவர் வம்சத்தில் நிச்சயமாக ஒரு "தீர்க்கதரிசி" வரவேண்டும் என்ற கட்டாயமுமில்லை. அப்படி தீர்க்கதரிசிகள் என்றுச் சொல்லிக்கொள்கிறவர்களை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை.

தேவன் ஆபிரகாமை, ஈசாக்கை, யாக்கோபை, அவர்களின் 12 மகன்களை ஆசீர்வதித்தார். அதனால், இவர்கள் பிள்ளைகளில் உள்ளவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்பட்டார்கள் என்றோ, இவர்கள் சந்ததியில் ஒருவன் கள்ள தீர்க்கதரிசி உருவானால், அவனை உண்மையாக நம்பவேண்டுமென்றோ கட்டாயமில்லை.




நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

எங்கள் கேள்வி 'நான் அவனை ஆசிர்வதித்து நான் அவனை அதிகமாக பல்கி பெருகவும் செய்வேன். பெரிய ஜாதியாக்குவேன்' என்ற கர்த்தரின் வாக்குக்கு பொருள் என்ன? மனிதர்கள் பல்கிப் பெருகுவதும் பெரும் சமூகங்களாக மாறுவதும் சராசரியாக நடக்கக் கூடியதுதான். இது இறைவனின் பொதுவான ஏற்பாடாகும். ஒரு மனிதரை ஆசிர்வதித்து அவனது சந்ததிகளை பெருக செய்வதென்பது சிறப்பானதாகும். இஸ்மவேல் எவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்டார். உங்களிடம் பதில் உண்டா? அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12) இதுதான் அவனை ஆசிர்வதித்ததன் அர்த்தமா...? உங்களையும் என்னையும் கர்த்தர் ஆசிர்வதித்தால் நாம் இப்படித்தான் இருப்போமா...? சிந்தியுங்கள்.


ஈஸா குர்-ஆன் பதில்

இந்த கேள்வியினால், "இறைவனின் ஆசீர்வாதம்" பற்றிய உம்முடைய அறியாமை வெளிப்படுகிறது.

இஸ்மவேலை பைபிள் "ஒரு துஷ்டமனுஷன்" என்றுச் சொன்னதைப் பற்றி அதிகம் தான் அக்கரைக்கொள்கிறீர்.

ஒரு தந்தை தன் சொத்துக்கள் எல்லாம் தன் மகன்கள், மகள்கள் எல்லாருடைய பெயருக்கும் எழுதி வைக்கிறான். நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும் என்று அவர்களை ஆசீர்வதிக்கிறான். பிறகு மற்றவர்களிடத்தில் "என் கடைசி மகன் இருக்கனே, அவன் ரொம்ப கடின மனம் உள்ளவன், முரடண், என் மூத்தமகன் ரொம்ப சாந்த குணமுள்ளவன் " என்றுச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இதனால், தன் கடைசி மகனை அவன் தந்தை வெறுத்தான் என்று பொருளா? அவன் கடைசி மகனுக்கு இவன் ஆசீர்வாதம் கிடைக்காது என்றுப் பொருளா? அப்படி இல்லை, முதலாவது, ஆசீர்வதித்தது தன் தந்தை என்ற நிலையில், பிறகு அவனுடைய குணநலன்களை சொன்னார் அவ்வளவு தான்.

இஸ்மவேலை ஆசீர்வதித்தது அவன் ஆபிரகாமின் "வித்து" என்பதால், மற்றும் "துஷ்டமனுஷன்" என்றுச் அவன் குணத்தைச்சொன்னார். மற்றும் எதிர்காலத்தில் அவன் சந்ததி எப்படி மற்ற நாடுகளோடு சண்டையிடும் என்பதையும், இவனோடு மற்ற நாடுகள் எப்படி சண்டையிடும் என்பதனையும் "தீர்க்கதரிசனமாக"ச் சொன்னார்.

ஒரு மனிதனை இறைவன் ஆசீர்வதித்தால், அவன் பாவம் செய்யமாட்டான் என்றும், அவன் மற்றவர்களோடு சண்டையிட மாட்டான் என்றும் பொருளா? பதில் சொல்லுங்கள் .

இதற்கு பதில் சொல்லுங்கள்:

தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்தார், அவர் சந்ததி வானத்து நட்சத்திரம் போலவும், மணலைப் போலவும் திரளாக இருப்பார்கள் என்றும் ஆசீர்வதித்தார்.


ஆதியாகமம் 22:17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,


உம்முடைய லாஜிக் மற்றும் ரீஸனிங் (logic and reasoning) படி, கீழே உள்ள வசனங்கள் "பொய் என்றும்", அப்படிப் பட்ட நிகழ்ச்சி நடக்கவில்லை என்றும் உங்களால் சொல்லமுடியுமா நண்பரே?

ஆபிரகாமை ஆசீர்வதித்த அதே தேவன், இப்போது, ஆபிரகாம் மூலம் பிறக்கும் "ஜனம்" 400 ஆண்டுகள், ஒரு நாட்டில்(எகிப்து நாட்டில்) அடிமைகளாக அவதிப்படுவார்கள், பிறகு அவர்களை விடுவிப்பேன் என்றுச் சொல்கிறார்.

ஆசீர்வதித்த ஆபிரகாமின் சந்ததியை இது அவமானப்படுத்துவது ஆகாதா? அடிமையாக அவதிப்படுதல், ஆசீர்வதிக்கப்பட்ட ஆபிரகாமின் சந்ததிக்கு இது "கேவலம்" அல்லவா? சொல்லுங்கள். அல்லாவிடமே பதில் கேளுங்கள்
ஆதியாகமம்: 15: 1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம்: 15:5-8, அவர் அவனை வெளியே அழைத்து, நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி, உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.7. பின்னும் அவர் அவனை நோக்கி, இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.8. அதற்கு அவன், கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.

ஆதியாகமம்: 15: 13-15, அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி, உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும் , நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.15. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.




இஸ்மவேலைக் கூட இப்படிச் (அடிமையாக இருப்பன் என்று சொல்லவில்லை) சொன்னதில்லை, இஸ்மவேல் வம்சம் அடிமையாக எகிப்தில் இருந்ததில்லை. ஆனால், ஈசாக்கு வம்சம் இப்படி அவதிப்படும் என்று, "ஈசாக்கு" பிறக்காததற்கு முன்பே தேவன் சொல்லிவிட்டார்.

இந்த அடிமை நிகழ்ச்சி நடக்கவில்லை என்றும், அவர்கள் (ஈசாக்கு வம்சம்) 400 ஆண்டுகள் அடிமையாக அவதிப்படவில்லை, மோசே அவர்களை இஸ்ரவேல் நாட்டிற்கு வழிநடத்தவில்லை என்றும் சொல்லமுடியுமா?

ஆபிரமாகை ஆசீர்வதித்த அதே தேவனின் வார்த்தைகள் தான் இவைகளும். ஒருவரை ஆசீர்வதிப்பேன் என்றால், அவன் ரோஜா மலர் தூவிய கட்டிலில் எப்போதும் இன்பமாக வாழ்வான் என்று பொருள் அல்ல நண்பரே.

1) எனவே, இஸ்மவேலை ஆசீர்வதிப்பேன் என்பது ஒரு செழிப்புள்ள வாழ்வை தேவன் கொடுப்பார் என்றுப் பொருள்.

2) அவன் துஷ்டனாக இருப்பான் என்றால், அவன் ஒரு முரட்டாட்டம் பிடித்தவனாக (அவன் குணம்) இருக்கும் என்றுப் பொருள்.

3) அவனுக்கு விரோதமாக மற்றவர்கள் , அவர்களுக்கு விரோதமாக அவன்(அவன் சந்ததி) போரிட்டுக்கொண்டு இருப்பார்கள் என்றுப் பொருள்.

கிறிஸ்தவர்களுக்கு இல்லாத ஒரு எண்ணத்தை நீங்கள் தான் உருவாக்கித் தருகிறீர்கள். நாங்கள் நினைத்தோம், "துஷ்டன் என்றால்" ஒரு முரடனான குணம் என்று. ஆனால், நீங்கள் அதற்கு ஒரு புதிய அர்த்தத்தை "மனித குல விரோதி" என்று பொருள் கூறுகிறீர்கள்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

''"துஷ்ட மனுஷன்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள், ஆங்கிலத்தில் அது "Wild Man" என்றும், "Wild Donkey" என்றும் உள்ளது. இந்த வசனத்தில் சொல்லப்பட்டது, ஒரு மனிதன் வளர்க்கும் தன் கழுதை எப்படி முரட்டாட்டம் பிடிக்குமோ, அப்படி "முரடணாக" இருப்பார் என்று ஒரு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

இறைவன் ஆசிர்வதித்தப் பிள்ளையை இத்தகைய உவமைகளால் கேவலப்படுத்துவது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் அதிலிருந்து விலகிக் கொள்கின்றோம்.

தாவீது லோத்து உட்பட பல்வேறு நல்ல மனிதர்களை விபச்சாரர்களாகவும் - மது உட்கொண்டு சொந்த மகளோடு படுத்து எழுந்தவர்களாகவும் (இதுபற்றி விரிவாக நாம் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்) பைபிள் விவரிக்கின்றது. அத்தகைய ஒரு போக்கு, இஸ்மவேல் வம்சத்தை கெட்டவர்களாக காட்டவேண்டும் என்ற எண்ணமே இஸ்மவேலை துஷ்டனாக சித்தரிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈஸா குர்-ஆன் பதில்

அருமை நண்பரே, இதை நாங்கள் சொல்லவில்லை நண்பரே, இது தான் பைபிளில் உள்ளது நண்பரே. இது பொய்யென்றுச் நீர் சொன்னால், இவர்களுடைய உண்மை சரித்திரத்தைச் சிறிதுச் சொல்வீரா?

தாவீது விபச்சாரம் செய்யவில்லை என்று உம் குர்-ஆனை வைத்து நிருபிக்கமுடியுமா?

இப்படி தீர்க்கதரிசிகள் "இறைவனைப் போல" முழூ பரிசுத்தர்கள் என்று இஸ்லாமியர்கள் நம்புவதினால் தான், ஒவ்வொரு ஊருக்கு ஒரு தர்கா (இறைவடியார்களாக இருந்து மரித்தவர்களின் சடலத்திற்காக ஒரு இடம்), ஷியா முஸ்லீம்கள் என்ற ஒரு பிரிவு என்று பலவாறு உருவாகியுள்ளது நண்பரே?

நபிகளும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான், அவர்களை தேவன் தெரிந்தெடுத்தது, அவர்கள் இறைவனைப் போல முழூ பரிசுத்தர்கள் என்பதால் அல்ல, இறைவனின் இரக்கம், அன்பு, மன்னிக்கும் சுபாவம் போன்றவற்றை இறைவன் அவர்கள் மீது காட்டியதால் தான் நண்வரே.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டவர் இஸ்மவேல். கர்த்தர் ஆசிர்வதித்தார் என்றால் அதன் அர்த்தம் என்ன?பைபிளின் வார்த்தைகளைப் பார்ப்போம்.

ஆதியாகமம் 1:22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம் 5:2 தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

ஆதியாகமம் 5:2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

ஆதியாகமம் 12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதியாகமம் 17:16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

ஆதியாகமம் 25:11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.

ஆதியாகமம் 26:12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

ஆதியாகமம் 28:3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி;

எண்ணாகமம் 22:12 அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.

நாம் எடுத்துக் காட்டியுள்ள இந்த பைபிளின் வசனங்கள் அனைத்தும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்ட்டவர்களை புகழ்ந்து சொல்கின்றது. முக்கியமாக கடைசியில் இடம் பெற்றுள்ள எண்ணாகமத்தின் 22:12 வசனம் 'கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களை சபிக்க வேண்டாம்' என்று அறிவிக்கின்றது. உண்மையில் பைபிள் வசனங்களை நம்பக்கூடியவர்கள் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்மவேலை மதித்து நடப்பார்களேத் தவிர பிறகு திணிக்கப்பட்ட *இஸ்மவேல் துஷ்டன**அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்* என்பதை உண்மை என்று நம்பி அதற்கு புது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.


ஈஸா குர்-ஆன் பதில்

இஸ்மவேலை இப்போது யார் சபித்தார்கள்? அவனுடைய குணங்களைச் சொல்லுதல் உமக்கு சாபமாக உள்ளதோ?

"பிறகு திணிக்கப்பட்ட" என்றுச் சொல்கிறீரே, எது சொன்னாலும், ஆதாரம் இல்லாமல் சொல்வது தான் உம் வழக்கமோ ? ஆதாரம் கேட்டால், அதற்கென்று ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றுச் சொல்கிறீர், அப்படி இருக்க, ஏன் இந்த கட்டுரையில் " மாற்றப்பட்டது " என்று சொல்லிக்கொண்டே...... இருக்கிறீர்?

யார் திணித்தார்கள் சொல்லமுடியுமா?

எப்போது திணித்தார்கள்?

திணிப்பதற்கு முன்பு அவ்வசனங்கள் எப்படி இருந்தது?

நண்பரே ஆதாரம் இல்லாமல் எதுவும் சொல்லக்கூடாது.

ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே இருந்தால், அது உண்மையாகிவிடுமா?




நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

கர்த்தர் இஸ்மவேலை ஆசிர்வதித்தார் என்பதே அவர் சந்ததி வழியாக அரபுலகில் ஏற்படப் போகும் ஒரு தீர்க்க தரிசன அடையாளத்தின் அத்தாட்சியாகும். இதை நாம் வெறும் கற்பனையாக சொல்லவில்லை. தொடருங்கள்.

ஆப்ரகாம் பலியிட துணிந்தது ஈசாக்காக இருக்க முடியாது அது இஸ்மவேல் தான் என்பதை பைபிள் வசனத்தை எடுத்துக் காட்டி எழுதினோம்.

இஸ்மவேலை தள்ளியே வைக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்களால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நமது கட்டுரைக்கு மறுப்பெழுதினார்கள்.


ஈஸா குர்-ஆன் பதில்

எது உண்மை எது உண்மை இல்லை என்பது நம் இருவருடைய கட்டுரைகளை படிப்பவர்களுக்குப் புரியும். (அதனால் தான் என்னவோ, இஸ்லாமியர்கள் என் கட்டுரைகளுக்கு காமண்ட் Comment கூட எழுதுவதில்லை. இது வரை (ஜுலை - ஆகஸ்ட் 14) ஒரு காமண்ட் தான் வந்துள்ளது.)



நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

அவர்கள்

இஸ்லாமிய நண்பரே, ஆதியாகமம் 21ம் அதிகாரத்திலேயே, ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் தனியே அனுப்பிவிட்டார், அதுவும் அசீர்வதித்து அனுப்பிவிட்டார், நீர் சொல்வது போல இஸ்மவேலை சிறப்பித்து, அனுப்பிவிட்டார். இதை ஆபிரகாமே செய்தார். நீர் கூட இந்த கட்டுரையின் முதலில், பைபிள் சிறப்பித்த இஸ்மவேல் என்றுச் சொல்லி, அந்த வசனங்களை சொல்லியிருந்தீர்.

ஈசாக்கை பலியிடச் சொன்னது ஆதியாகமம் 22ம் அதிகாரம். இஸ்மவேலை தேவன் ஆசீர்வதிப்பேன் பிரபுக்களை உண்டாக்குவேன் என்றுச் சொல்லிவிட்ட பிறகு நடந்த விவரங்கள். எனவே ஆதியாகமம் 22:2ம் வசனத்தில் சொன்ன 'ஏகசுதன்' இஸ்மவேல் இல்லை 'ஈசாக்கு' தான். இனி உம் விருப்பம்: 1) பைபிளில் இஸ்மவேலை தேவன் பாலைவனத்தில் பிள்ளையோடு இருந்து ஆசீர்வதித்தார் என்பதை நம்புவீரோ (ஆதியாகமம் 21ம் அதிகாரம்) அல்லது, 2) இந்த பலியிட்டது (ஆதியாகமம் 22ம் அதிகாரம்) இஸ்மவேல் என்பதை நம்புவீரோ இனி எல்லாம் உம் கையில். பலியிட்டது 'இஸ்மவேல்' என்றுச் சொன்னீர் என்றால், இந்த உம்முடைய கட்டுரையின் 'கருவே - பைபிள் புகழும் இஸ்மவேல்' பாதிக்கப்படும் அல்லது பொய்யாகிவிடும். இஸ்மவேலை பைபிள் புகழும் வசனங்கள் நீர் காட்டியது, பாலை வனத்தில் ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் ஆசீர்வதிக்கும் போது சொன்ன வசனம்.

நாம்:

மறுப்பாளர் என்ன சொல்ல வருகிறார் என்றால் ஆகாரையும் இஸ்மவேலையும் ஆப்ரகாம் அனுப்பி விட்ட பிறகே கர்த்தர் தகனபலி பற்றிக் கூறுகிறார் (இதற்கு ஆதாரம்) தகனபலி சம்பவம் அடுத்த அத்தியாயத்தில் வருகின்றது. இஸ்மவேல் இல்லாத போது இந்த வசனம் பேசுவதால் இது ஈசாக்கை குறித்துதான் சொல்லப்பட்டுள்ளது. (அவர் எழுத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்) (பைபிள் முஹம்மத் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்டு விட்டது..... என்றெல்லாம் அவரின் விளக்கத்தை நாம் இங்கு தொட்டுப் பார்க்கவில்லை. 'பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு வரும் போது இந்த வாதங்களின் நியாயத்தை அங்குப் பார்ப்போம்)


ஈஸா குர்-ஆன் பதில்

//(பைபிள் முஹம்மத் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்டு விட்டது..... என்றெல்லாம் அவரின் விளக்கத்தை நாம் இங்கு தொட்டுப் பார்க்கவில்லை. 'பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு வரும் போது இந்த வாதங்களின் நியாயத்தை அங்குப் பார்ப்போம்) //

"பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு" வரும் போது பார்ப்போம் என்றால், நீர் மட்டும் ஏன், பைபிளில் மாற்றப்பட்டது, திணிக்கப்பட்டது என்று சதா "ஆதாரம் ஒன்றும்" முன்வைக்காமல் காற்றில் சிலம்பம் அடிக்கிறீர்?


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

பைபிளை கர்த்தரின் வார்த்தை என்று உண்மையில் நம்பினால் கர்த்தரின் வார்த்தைகளுக்குரிய மதிப்பும் மரியாதையும் அவர்களிடம் வெளிப்பட வேண்டும் என்று சொல்லி வைக்கின்றோம். பைபிள் எந்த நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகவும் இருக்கட்டும். பிரச்சனையில்லை. 'ஏகசுதன்' என்ற வார்த்தைக்கு பொருள் என்ன அதுதான் முக்கியம்.

அடுத்த அத்தியாயத்தில் வந்துள்ளதுதான் 'ஏகசுதன்' என்பதன் அர்த்தத்தை தீர்மானிக்கும் அளவுகோலா... இஸ்மவேல் சென்ற பிறகு அந்த வார்த்தையை கர்த்தர் பயன்படுத்தி இருந்தால் 'ஏகசுதன்' என்று பயன்படுத்தி இருக்க முடியாது. வேறு குழந்தைகளே இல்லாத போதுதான் அந்த வார்த்தையைப பயன்படுத்த முடியும்.

சாதாரண நடைமுறையில் கூட நாம் இப்படி சொல்ல மாட்டோம். ஒருவருக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து அடுத்தக் குழந்தை பிறந்தால் கூட 'இவரின் ஒரேக் குழந்தை' என்று சொல்ல மாட்டோம். இரண்டாம் குழந்தை என்றுதான் சொல்லுவோம்.

இஸ்மவேல், அதிலும் ஆப்ரகாமின் மகன் இஸ்மவேல் உயிரோடு இருக்கும் போது ஈசாக்கை ஒரேக் குழந்தை என்று கர்த்தர் எப்படி சொல்லி இருக்க முடியும்? இலக்கணப் பிழையுள்ளவரா கர்த்தர்.

கட்டுரையாளர் உட்பட பிற கிறிஸ்த்தவர்களும் 'தகனபலியாக சொல்லப்பட்டவர் ஈசாக்தான்' என்று நம்புவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.



1) பைபிளில் ஈசாக் பெயர் தான் சொல்லப்பட்டுள்ளது என்பதாகும்.

2) இஸ்மவேலை ஆப்ரகாம் அனுப்பி விட்ட பிறகு இது சொல்லப்பட்டதால்

இது இஸ்மவேலை குறிக்காது என்ற கருத்து.

இதில் முதலாவது கருத்து, பைபிளின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையால், ஆய்வுக்குட்படுத்தப்படாத நம்பிக்கையால் உருவானதாகும். அது நம்முடைய கருத்துப்பரிமாற்றத்திற்கு சம்பந்தமில்லாததாகும்.

ஆய்வுக்குட்படுத்தி சொல்லப்பட்ட இரண்டாம் கருத்தின் நிலையை நாம் அலசுகிறோம். 'பைபிளில் கர்த்தரின் வார்த்தைகள் மத குருக்களின் தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளப்பட்டாலும் உண்மையை விளக்கும் பல்வேறு வசனங்கள் அவர்களையுமறியாமல் இடம் பெற்று விட்டன. 'ஏகசுதன்' என்ற வார்த்தையை அவர்கள் சிந்தித்திருந்தால் ஒருவேளை அதையும் நீக்கி அல்லது பிற வார்த்தைகளைக் கூட்டி இருக்கலாம்.

ஈசாக் பிறப்பதற்கு முன்பே ஆப்ரகாமிற்கு கர்த்தர் இந்த சோதனையை வைத்திருந்தால் தான் ஏகசுதன் என்பதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஈசாக் பிறந்து விட்ட பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அப்ரகாம் தகப்பனாகிவிட்ட பிறகு 'ஏக - ஒரே, சுதன் - மகன் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை எண்ணிப்பார்த்தால் அவர்கள் தங்கள் பிடிவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.


ஈஸா குர்-ஆன் பதில்

ஒரு விஷயத்தைச் சொல்லும் போது, ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது. ஒரு ஆதாரமும் காட்டாமல் "அவர்கள் திருத்திவிட்டார்கள், மாற்றிவிட்டார்கள்" என்றுச் சொல்வது, படித்தவர்களுக்கு தகாது நண்பரே.

குர்-ஆன் சொல்வதற்கு எதிராக ஒரு கருத்து இருந்தால், அந்த கருத்து தவறு என்றுச் சொல்வது சரியல்ல. குர்-ஆனின் வசனங்களும் ஆதாரமாக காட்டுவதும் சரியல்ல. மாற்றப்பட்டது என்றால், அதற்கு முன் என்ன வசனம் இருந்தது, அந்த பிரதி ஏதாவது இப்போது உள்ளதா? பிறகு என்ன வார்த்தையாக மாற்றினார்கள் என்று ஆதாரத்தோடு சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு, மாற்றினார்கள், திருத்தினார்கள் என்று வெறுமனே சொல்வது அறிவுடமையாகாது.

பைபிள் மாற்றப்படவில்லை என்றும், குர்-ஆன் 7ம் நூற்றாண்டில் வந்தது என்றும் ஆதாரத்தோடுச் சொன்னால், அது பைபிள் தொகுக்கப்பட்ட தனி கட்டுரை, அந்த கட்டுரையில் பதில் சொல்கிறேன் என்று தப்பித்துக்கொள்கிறீர். நீர் மட்டும் எப்படி "மாற்றிவிட்டார்கள்" என்று அடிக்கடி இந்த கட்டுரையில் சொல்கிறீர்? இது ஒன்றும் "பைபிள், குர்-ஆன் தொகுக்கப்பட்ட விவரம் சம்மந்தப்பட்ட கட்டுரை இல்லையே".

உன் சந்ததி என்று தேவன் சொன்னது, சாராள் மூலமாக பிறக்கப்போகும் "ஈசாக்கை"ப் பற்றித் தான், இஸ்மவேலைப் பற்றி இல்லை:


ஆதியாகமம்: 15:13-14 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி, உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய் .14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.

ஆதியாகமம்: 15: 21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார் .


எகிப்து தேசத்தில் அடிமையாக இருப்பார்கள் என்றுச் சொன்னது, ஈசாக்கு மூலமாக வரும் சந்ததியைத் தான். தேவனுடைய உடன்படிக்கை இந்த சந்ததியோடுத் தான்.

இதை மறுக்கமுடியுமா உங்களால்?

இஸ்மவேலின் சந்ததியில் (12 பிரபுக்கள், மற்றும் அவர்கள் வசம் மக்கள்) எகிப்தில் அடிமையாகச் சென்றார்களா?

உங்கள் குர்-ஆன் மூலமாகவே இதற்கு மறுப்பு சொல்லமுடியுமா?

இஸ்மவேல் பிறந்த பின்பு தான், தேவன் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றுகிறார், சாராய் என்ற பெயரை சாராள் என்று மாற்றுகிறார். ஈசாக்கு மூலமாக வரும் சந்ததியோடு உடன்படிக்கை செய்வேன் என்றுச் சொல்கிறார்.




ஆதியாகமம்: 16:15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 17:1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி,4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து , நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

ஆதியாகமம் 17:15 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி, உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.16. நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன் ; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

ஆதியாகமம் 17:21 வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை உண்டாக்குவேன் என்றார்.

ஆதியாகமம்18: 10 அப்பொழுது அவர், ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.11. ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.12. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து, நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.13. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.15. சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர், இல்லை, நீ நகைத்தாய் என்றார்

ஆதியாகமம் 21:1 கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார் .2. ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்

ஆதியாகமம் 21: 12 அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள் .


ஈசாக்கு மூலமாக தேவனுடைய உடன்படிக்கை இருப்பதால், ஆபிரகாம், இஸ்மவேலை அனுப்பியது போல, வேறு மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு நன்கொடைகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.




ஆதியாகமம் 25:5ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

ஆதியாகமம் 25:6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான் .


தேவனுடைய சித்தம் என்னவென்றால், ஆபிரகாம் சாராள் மூலமாக (அற்புத முறையில்) பிள்ளை பெறவேண்டும், அந்த பிள்ளையின் சந்ததியோடு உடன்படிக்கையை உறுதிபடுத்தவேண்டும் என்பது. ஆனால், சாராள் அவசரப்பட்டு, தேவனுக்கு உதவி செய்ய நினைத்து, தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமிற்கு கொடுத்தாள். தேவன் ஆபிரகாமிற்கு பிள்ளை சாராள் அல்லாத பெண்ணோடு கொடுக்க நினைத்து இருந்தால், ஆபிரகாமே நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள், அவள் மூலமாக ஒரு பிள்ளை பிறக்கும், அவன் சந்ததியோடு நான் உடன்படிக்கை செய்வேன் என்றுச் சொல்லியிருப்பார்.

ஒரு கிழவன்(100 வயது), ஒரு இளைய மனைவியை திருமணம் செய்து பிள்ளைபெற்றால், அதில் என்ன அற்புதம் இருக்கிறது, இப்போது கூட அப்படி செய்யலாமே. ஆனால், ஒரு 100 வயது கிழவனுக்கும், ஒரு கிழவிக்கும் பிள்ளை பிறக்கச் செய்வது தான் அற்புதம்.

நிஜாமுத்தீன் அவர்களே, உமக்கு முடியுமானால், நீர்(குர்-ஆன்) சொல்வதில் உண்மை இருக்கும் என்று நீர் நம்பினால், " பைபிள் வசனங்கள் மாற்றிவிட்டார்கள், திருத்திவிட்டார்கள்" என்றுச் சொல்லாமல், இருக்கும் பைபிள் வசனங்கள், இருக்கும் குர்-ஆன் வசனங்களை வைத்துக்கொண்டு உம்மால் மறுப்பையோ, பதிலையோ தரமுடியுமா என்று பாருங்கள்.

ஆதாரம் இல்லாமல், மாற்றி விட்டார்கள், திருத்திவிட்டார்கள் என்று சொல்லவேண்டுமானால், குர்-ஆனிலும் இப்படி வசனம் இருந்தது, இஸ்லாமிய இமாம்கள் மாற்றிவிட்டார்கள், திருத்திவிட்டார்கள் என்று, எதைப் பற்றியும் சொல்லமுடியும்.

நாளைக்கு ஒரு இந்து சகோதரரும் வந்து குர்-ஆனில் இராமர் பற்றி, கிருஷ்ணர் பற்றி குர்-ஆனில் வசனங்கள் இருந்தது, எங்கே தங்கள் "ஓர் இறை" கொள்கைக்கு பங்கம் வரும் என்று இஸ்லாமிய இமாம்கள் எண்ணி, பயந்து அந்த வசனங்களை மாற்றிவிட்டர்கள் என்றுச் சொல்லலாம். ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், இஸ்லாமியர்கள் தான் மாற்றி விட்டர்களே ஆதாரம் எங்கே கிடைக்கும் என்றுச் சொல்வார்கள், இதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

நீர் சொல்வதற்கும் (மாற்றிவிட்டர்கள் என்று சொல்கிறீரே), நான் மேலே சொன்ன இந்துக்கொள்கை எடுத்துக்காட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணுகின்றீர்கள்? ஒன்றுமில்லை.

ஆதாரம் இல்லாமல் உலகத்தில் எதையும் எந்த மத புத்தகத்திலும், தங்களைப் பற்றி இப்படி இருந்தது, அதை அவர்கள் திருத்திவிட்டர்கள் என்று சொல்லலாம் நண்பரே உம்மைப்போல.

ஆனால், அதை கேட்பவர்கள் காதுகளில் பூக்கள் இருந்தால், மட்டும் தான் ஏற்றுக்கொள்ளமுடியும்?




நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

நமக்கு மறுப்பெழுதும் சகோதரரின் இன்னுமொரு அறியாமையையும் (இந்த அறியாமை அனேக கிறிஸ்த்தவர்களிடம் இருக்கின்றது) சுட்டிக் காட்ட வேண்டும். ஆகாரையும் - இஸ்மவேலையும் ஆப்ரகாம் பாலைவனத்தில் விட்டு விட்டு வந்து விட்டார். அவர்களை அனுப்பி விட்டார் என்றே எழுதுகிறார்கள். (அதாவது இந்த சம்பவத்திற்கு பிறகு ஆப்ரகாமுக்கும் - .இஸ்மவேலுக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகாரையும் - இஸ்மவேலையும் அனுப்பியதோடு சரி ஆப்ரகாமின் வேலை முடிந்து விட்டது என்றத் தோரணையில்) அதனால் தான் ஆப்ரகாமும் - இஸ்மவேலும் கஃபாவை புதுப்பித்தார்கள் என்று இஸ்லாம் சொல்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பைபிளை ஊன்றிப் படித்தால் ஆப்ரகாம் கடைசி வரை அவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார் என்பதைக் கண்டுக் கொள்ளலாம். அதைப் பார்ப்போம். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். ஆதியாகாமம் 21:14

பெயர்செபா என்ற வனாந்தரத்தில் ஆகாரும் - இஸ்மவேலும் வாழத்துவங்கினார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். இதன் பிறகு இடம் பெயர்ந்து பாரான் வனாந்தரம் செல்கிறார்கள். பெயர்செபாவிற்கும் ஆப்ரகாமிற்கும் இருந்த தொடர்பை பைபிள் வசனங்கள் விளக்குகின்றன.

அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான். அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான். அவர்கள் இருவரும் அவ்விடத்தில், ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது. அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். ஆதியாகாமம் 21:27-33 பெயர்செபாவில் தோப்பை உண்டாக்கி தேவனை வணங்கி வரும் அளவிற்கு ஆப்ரகாம் பெயர்செபாவில் இருந்துள்ளார். (அதாவது தன் மனைவி மற்றும் இஸ்மவேலுடன் இருந்துள்ளார்)

ஆப்ரகாமுக்கும் அவரது இரண்டாம் மனைவி மற்றும் முதல் குழந்தைக்கு மத்தியில் இருந்த தொடர்பை எடுத்துக் காட்டவே இந்த வசனங்கள்.

இதோடு இந்தத் தொடர்பு முடிந்து விடவில்லை. ஆப்ரகாம் தனது கடைசிக்காலம் வரை அவர்களோடு தொடர்பில் இருந்தது மட்டுமில்லாமல் தனது இளைய மகன் ஈசாக்கையும் அவர்களோடு தொடர்பில் தான் வைத்திருந்தார். ஈசாக்குக்கு தன் அண்ணன் இஸ்மவேலுடன் பல ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது என்பதையும் பைபிளின் கீழுள்ள வசனத்தை சிந்திக்கும் போது சந்தேகத்திற்கிடமின்றி விளங்கலாம். ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9) தன் தந்தை இறந்த பிறகு அண்ணன் தம்பி இருவருமே சேர்ந்து தன் தந்தையை அடக்கம் செய்துள்ளார்கள் என்ற சம்பவம் எதைக் காட்டுகின்றது?ஆப்ரகாமின் இரு குடும்பங்களுக்கு மத்தியில் எந்த தொடர்பும் இல்லாமல் போனால் (தொடர்பு இல்லை என்று கருதிதான் ஈசாக்கை 'ஏகசுதன்' என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்) ஆப்ரகாமின் மரணம் இஸ்மவேல் குடும்பத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். இரு சகோதரர்களும் ஒற்றுமையாக இருந்து தன் தந்தையின் உடலை அடக்கம் செய்யும் அளவிற்கு நெருக்கமான தொடர்பு இரு குடும்பங்களுக்கு மத்தியில் - குறைந்த பட்சம் இரு சகோதரர்களுக்கு மத்தியில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட கூடுதலான சான்றுத் தேவையில்லை. ஆகார் இஸ்மவேலுடன் ஆப்ரகாமிற்கு இருந்த இந்த தொடர்பைக் கருத்தில் கொண்டு திருக்குர்ஆனில் இடம் பெறும் இப்ராஹீம் - இஸ்மாயீல் இருவரின் சம்பவங்களை கிறிஸ்த்தவ சகோதரர்கள் அணுகினால் அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசத்தைப் பெறுவார்கள். இதன் தொடர்ச்சியாக குர்ஆனில் இடம் பெறும் ஆப்ரகாம் - இஸ்மவேல் சம்பவங்களைப் பார்ப்போம்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (இஸ்மவேலையும் - ஈசாக்கையும்) முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன் அல்-குர்ஆன் 14:39

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (அல் குர்ஆன் 14:37)

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)(அல்-குர்ஆன் 2:127,128,129)

பாலைப் பெருவெளியில் தன் குடும்பத்தாருடன் இருந்த காலகட்டங்களில் ஆப்ரகாம் தன் மகன் இஸ்மவேலுடன் சேர்ந்து புதுப்பித்ததுதான் கர்த்தரின் ஆலயமான கஃபா.குழந்தை இஸ்மவேலுக்கு தண்ணீர் குட்டைதான் இன்று வரையில் கோடான கோடி மக்கள் குடித்து வரும் மக்காவில் இருக்கும் 'ஸம் ஸம்' என்ற பெரு நீரூற்று. அந்தப் பகுதியில் குடியிருந்து அந்தப் பகுதியின் வளங்களுக்காக பாடுபட்டு அந்த பகுதியின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த மக்களின் அநாகரிகமான வாழ்க்கையைக் கண்டு அவர்களை சீர்திருத்தப்பாடு பட்டு தங்களுக்குப் பிறகும் தங்கள் பணியை செய்ய கர்த்தரின் புறத்திலிருந்து தீர்க்கதரிசி வரவேண்டும் என்று கர்த்தரிடம் பிரார்த்தனை புரிந்தவர்கள் தான் ஆப்ரகாமும் இஸ்மவேலும். அதன் தொடர்ச்சியாகவே முஹம்மத் அவர்கள் அரபுலகில் பிறக்கிறார்கள். கர்த்தர் அவரை தன் பணிக்காக நியமிக்கின்றார். இதை உறுதிபடுத்தும் பைபிளின் ஆதாரத்தை அடுத்தப் பதிவில் காண்போம். (கர்த்தரின் நாட்டம் இருக்கட்டும்)


ஈஸா குர்-ஆன் பதில்

இஸ்லாமியர்கள் இப்படித் தான் வலியவந்து மாட்டிக்கொள்வது. மேலே நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை மறுபடியும் ஒரு முறை படித்து வாருங்கள்.

சுருக்கமாக இஸ்மவேல் பற்றி பைபிள் சொல்வதை முதலில் பார்க்கலாம்.

குர்-ஆன் மற்றும் நமது இஸ்லாமிய நண்பர் சொல்லும் நிகழ்ச்சிகளை இதற்கு அடுத்து பார்க்கலாம். அவர்கள் சொல்வது எப்படி நடைமுறை சாத்தியமாகும் என்பதை பாருங்கள்.

a) பைபிள் படி: ஆபிரகாம், இஸ்மவேல், ஈசாக்கு விவரங்கள்

1. ஆபிரகாமுக்கு தேவன் ஒரு மகனை கொடுப்பேன் என்று வாக்கு செய்கிறார். இந்த வாக்கு செய்யும் போது, சாராள் மட்டும் தான் ஆபிரகாமிற்கு மனைவியாக இருக்கிறார். ஆபிரகாம் தன் குழந்தைக்காக தன் மனைவியை விட்டு வேறு ஒரு பெண்ணோடு தான் குழந்தை பெற்றுக்கொள்வார் என்று தேவன் சொல்லவில்லை.

2. சாராள் தேவனுக்கே உதவி செய்ய நினைத்து, தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமின் மடியில் தருகிறார். இஸ்மவேல் பிறக்கிறார்.

3. மறுபடியும், தேவன் வாக்குத்தருகிறார், சாராள் மூலம் பிறக்கும் பிள்ளைமூலம் தான் தன் உடன்படிக்கையை உருவாக்கிக்கொள்வார் என்று. ஆபிரகாம் இஸ்மவேலைப் பற்றி வேண்டும் போது, அவன் சந்ததியையும் பெரிய நாடாக மாற்றுவதாக வாக்குத் தருகிறார்.

4. தன்னை அலட்சியமாக ஆகார் கேலி செய்கிறார் என்று, ஏற்கனவே சாராள் ஆகாரை கொடுமையாக நடத்த, ஒரு முறை ஆகார், ஓடிப்போகிறார், பிறகு தேவன் சொல்ல மறுபடியும் தன் முதலாலியின் வீட்டிற்கு வந்து விடுகிறார்.

5. இஸ்மவேல் பிறந்து பல வருடங்களுக்கு பிறகு, தேவன் சொன்ன வாக்குத்தத்த குமாரன் ஈசாக்கு ஆபிராகாமிற்கு தன் மனைவி சாராள் மூலமாக பிறக்கிறார். ஈசாக்கு பெயர் சூட்டும் விழாவில், இஸ்மவேல் ஈசாக்கை கேலி செய்ய, சாராள் கோபமுற்று, ஆகாரையும் அவள் பிள்ளையையும் அனுப்பிவிடும்படி ஆபிரகாமிடம் சொல்கிறார்.

6. முதலில் தயக்கத்தை காட்டிய ஆபிரகாமிற்கு , தேவன் இடைபட்டு சாராள் சொன்னதை செய். இஸ்மவேலை "ஈசாக்கிடமிருந்து" வேறுபடுத்திவிடு என்றுச் சொல்கிறார். ஆகாரையும்,இஸ்மவேலையும் அனுப்பிவிடுகிறார், ஆபிரகாம்.

7. இஸ்மவேல் ஆபிரகாமிற்கு சிறிது தொலைவில் தங்கி இருக்கிறார். ஆபிரகாம் மரிக்கும் போது, ஈசாக்கும், இஸ்மவெலும் இனைந்து ஆபிரகாமை அடக்கம் செய்கின்றனர். இது தான் பைபிள் சொல்லும் சுருக்கம்.

b) குர்-ஆன் படி ஆபிரகாம், இஸ்மவேல் சுருக்கம்:

இஸ்லாம், மற்றும் இது தான் இஸ்லாம் தள கட்டுரைச் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாட்டைப் பார்க்கலாம்.

1. இஸ்மவேல், ஆபிரகாம் மக்காவில் உள்ள காபாவை கட்டினார்கள் (புதுப்பித்தார்கள்)

2. பிறகு ஆகாரையும், இஸ்மவேலையும் மக்காவில் விட்டுவிட்டு ஆபிரகாம் தன் இடத்திற்கு வந்துவிட்டார்.

3. இது தான் இஸ்லாம் (நிஜாமுத்தீன் அவர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்: பைபிள் படி, ஆபிரகாம் அனுப்பியவிட்டபிறகு ஆகாரும், இஸ்மவேலும் பெயர்செபாவில் வாழ்ந்தார்கள், அடிக்கடி ஆபிரகாம் சென்று அங்கு தேவனை தொழுதுக்கொண்டார்.

4. இது தான் இஸ்லாம் (நிஜாமுத்தீன் அவர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்: பைபிள் படி, ஆபிரகாம் மரித்தபிறகு ஈசாக்கு, இஸ்மவேல் சேர்ந்து அவரை அடக்கம் செய்தார்கள்.

இந்த 4 குறிப்புக்களைத் தான் நிஜாமுத்தீன் அவர்கள் இக்கட்டுரையின் கடைசியில் ஒப்புக்கொண்டுள்ளார்கள், அல்லது சொல்கிறார்கள்.

இப்போது குர்-ஆன் சொல்வதும், பைபிள் சொல்வதும் சேர்த்துப் பார்த்தால், இது சாத்தியமா என்றுப் பாருங்கள்.

a) எருசலேமுக்கும், மக்காவிற்கும்(காபா) இடையே சுமார் : 1234 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்த தளத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள "ஆகாய மார்க்கமாக" தூரம் கணக்கிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

http://www.timeanddate.com/worldclock/distanceresult.html?p1=110&p2=151

or

http://www.timeanddate.com/worldclock/distance.html

Distance from Jerusalem to Makkah

Distance is 1234 kilometers or 767 miles or 667 nautical miles

The distance is the theoretical air distance (great circle distance). Flying between the two locations's airports can be longer or shorter, depending on airport location and actual route chosen.

ஆகாய மார்க்கம் என்றாலே 1234 KM உள்ளது, ஆனால் தரை மார்க்கம் என்றால் மலைகள், காடுகள்,பாலைவனம் என்று இன்னும் தூரம் அதிகமாகும்.

வேண்டுமென்றால், ஒரு பேச்சுக்காக 1000 KM என்றே வைத்துக்கொள்வோம் (இஸ்லாம் வாதத்திற்கு சாதகமாக).

b) காபாவில் (மக்காவில்) இஸ்மவேல் இறைத்தூதர் வேலை செய்தால், பெயர்செபாவில் எப்படி வாழமுடியும்?

இஸ்மவேல் இருந்த இடம் எவ்வளவு அருகில் இருந்தால், ஆபிரகாம் அடிக்கடிச் சென்று அங்கு தேவனை தொழுதுக்கொள்ள முடியும்?

தேவனைத் தொழுதுக்கொள்ள ஒவ்வொரு முறையும் ஆபிரகாம் 1000க்கும் அதிகமாக கிலோ மீட்டர்கள் பிரயாணம் செய்தாரா? இது சாத்தியமா அந்தக்காலத்தில்? ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 50 KM நடந்தாலும், மக்காவிற்குச் செல்ல 20 நாட்கள் ஆகும்( 1000 KM என்று நாம் சுருக்கியதால், உண்மையில் இன்னும் அதிக நாட்கள் ஆகும்).

[ பாரான் என்ற இடமும், பெயர்செபா என்ற இடமும் "மக்காவைத் தான்" குறிக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த கட்டுரையை படிக்கவும். அவர்களுக்கு பதில் கிடைக்கும். http://www.answering-islam.de/Main/Responses/Al-Kadhi/r06.04.html ]

c) ஆபிரகாம் மரித்தபோது, இஸ்மவேலும் ஈசாக்கும் அவரை ஒரு குகையில் அடக்கம் செய்தார்கள் என்பதை இஸ்லாமியர்கள் நம்பினால்....! மக்காவில் காபாவைக் கட்டி, அங்கு இறைத்தூதர் வேலைசெய்யும், இஸ்மாயிலுக்கு ஆபிரகாம் மரித்தது எப்படி தெரிந்தது?

ஈசாக்கு ஒரு மனிதனிடம் செய்தியைச் சொல்லிஅனுப்பி இருப்பார் என்றாலும், 1000க்கும் அதிகமான KM தூரம் எப்படி ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சென்று இஸ்மவேலை அழைத்தனுப்பமுடியும்?

குதிரைகள் மூலமாக அனுப்பினாலும், பாலைவனத்தில் அதிக சீக்கிரமாக போக முடியாது, ஒட்டகமூலமாக போனாலும், காடு மலைகளில் சீக்கிரமாக இவ்வளவு தூரம் போக முடியாது.

இஸ்மவேல் மக்காவிலிருந்து வரும் வரை, ஈசாக்கு "ஆபிரகாமின்" உடலை என்ன அப்போல்லோ குளிர் சாதன பெட்டியில் வைத்து இருந்தாரா? ஒரு சடலத்தை அதுவும், 175 வயது உடைய ஒரு மனிதனின் உடல் எப்படி கெடாமல், நாற்றம் எடுக்காமல் சில நாட்கள் இருக்கமுடியும்?

எனக்கு தெரிந்த வரை ஒரு மரித்த உடல் (சவம் or பிணம்) 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு கெடாமல் இருக்காது (டாக்டர்கள் யாராவது இருந்தால், சரியாக எத்தனை நாட்கள் இப்படி கெடாமல் இருக்கமுடியும் என்றுச் சொல்லவும்).

எந்த மிருகத்தின் மீது சென்றாலும், ஓரிரு நாட்களில் இஸ்மவேல் வரமுடியாது. ஒரு நாளுக்கு 100 KM எங்கும் தங்காமல் சென்றாலும், 10 நாட்களுக்கு அதிகமான நாட்கள் தேவை செய்தியைச் சொல்ல. மறுபடியும் இஸ்மவேல் திரும்பி வர அதே போல பல நாட்கள் தேவை.

ஈசாக்கோடு சேர்ந்து இஸ்மவேல் ஆபிரகாமை அடக்கம் பற்றி பைபிள் சொல்லும் விவரம், இஸ்லாமியர்கள் சரி என்றுச் சொன்னால்?

காபா புதுப்பித்து, அங்கேயே இஸ்மவேல் இறைப்பணி செய்தார் என்பது ஒரு வெளிப்படையான பொய்யாகும்.

இஸ்லாமியர்களே, நீங்களே சொல்லுங்கள்.

குர்-ஆன் சொல்கிறபடி, மக்காவில் இஸ்மவேல் இருந்ததாக ஏற்றுக்கொள்கிறீர்களா?

அல்லது

நிஜாமுத்தீன் அவர்கள் சொல்கிற படி, பைபிள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

கிறிஸ்தவர்களும் சரி, பைபிளும் சரி எங்கள் கருத்துக்களில் தெளிவாக இருக்கிறோம்.

பாகம் - 1 முற்றிற்று


--------------------------------------------------------------------------------



உண்மையில் இஸ்மவேல் வம்சத்தில் முகமது வரவில்லை என்பதைப் பற்றி அறிய கீழ் உள்ள கட்டுரைகளைப் படிக்கவும்.

[1] Ishmael is not the Father of Muhammad :
[2] 'Ishmael Is Not the Father Of Muhammad' Revisited
[3] Arabs are not descendants of Ishmael!
[4] Ishmael or Isaac? The Koran or the Bible?
[5] The emigration (The Hijra) :
[6] His Hand Against Every Man :
[7] The Ka'bah: Its Size And History :
Other Links
[8] Calculate Distance :

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்