இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, May 5, 2008

அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)




அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply
(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

முன்னுரை: அபூ முஹை என்ற இஸ்லாமிய சகோதரர், நான் எழுதிய "Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?" கட்டுரைக்கு பதில் அளித்துள்ளார்( http://abumuhai.blogspot.com/2008/04/1.html) . இவரது கட்டுரைக்கு என் கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.
 
----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:
மதம் மாறினால் மரண தண்டனை-1

ஒரு முஸ்லிம் மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற கருத்தில் பிறமத நண்பர்கள் சமீபமாக தங்களின் விமர்சனத்தை எழுதி வருகிறார்கள். உலகளவில் 80ஆயிரம் முஸ்லிம்கள் மதம் மாறியுள்ள தகவலையும் முன்பு எழுதியுள்ளனர். எங்கு முஸ்லிம்கள் மதம் மாறினாலும் அதைப்பதிவு செய்ய தாமதப்பதில்லை. அந்த அளவுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள்.
-----------------------

ஈஸா குர்‍ஆன்:
 
1. யாருடைய கட்டுரைக்கு பதில் தருகிறீர்கள் அபூ முஹை அவர்களே?

பொதுவாக, இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது:

a) ஆயிரமாயிரமான கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று பொய்யை மூட்டை மூட்டையாய் அவிழ்த்துவிடுவார்கள், எங்கே ஆதாரம் என்றுக் கேட்டால், பதில் இருக்காது. அவர்கள் பல கட்டுரைகள் எழுதுவார்கள், ஆனால் நாம் நம் கருத்தை சொல்வதற்கு ஈமெயில் ஐடியை தரமாட்டார்கள் சிலர், நாம் பின்னூட்டம்  அளிப்பதற்கும் வசதி இருக்காது. (உதார‌ண‌ம்: நேச‌முட‌ன் த‌ள‌ம்)

b) "கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு பதில்" என்றுச் சொல்வார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் தருகிறார்கள்? அந்த கட்டுரையின் தொடுப்பு என்ன? போன்றவற்றை தங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தமாட்டார்கள்(எங்கள் கட்டுரையை இஸ்லாமியர்கள் படித்தால் எங்கே இஸ்லாமைப் பற்றிய சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ எனக்குத் தெரியாது).

இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தவர் தான் "அபூ முஹை" அவர்களும்(இந்த கட்டுரையை பொருத்தவரையில்). கிறிஸ்தவர்களின் கட்டுரைக்கு பதில் அல்லது விமர்சனம் என்று எழுதினார்களே தவிர, என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்கவில்லை. ஏன் அபூ முஹை அவர்களே?  எங்கள் கட்டுரையை நீங்கள் எந்த தளத்தில்  படித்தீர்கள் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா. மட்டுமல்ல, ஈஸா குர்‍ஆன் தளம் மூலமாக எழுதப்படும் கட்டுரைகள், தமிழ் கிறிஸ்டியன்ஸ், உண்மையடியான், கிறிஸ்து நேசன் போன்ற தளங்களில் பதிக்கப்படுகிறது. நீங்கள் பதில் சொல்லவந்த கட்டுரையின் தொடுப்பை குறைந்தபட்சம், ஒரு தளத்தின் தொடுப்பையாவது கொடுத்து இருக்கலாம். ஏன் நீங்கள் அதை உங்கள் பதிலில் பதிக்கவில்லை என்ற காரணத்தை தெரிந்துக்கொள்ளலாமா?

சரி போகட்டும், இனி நீங்கள் எழுதப்போகும் பதிலுக்காவது, கிறிஸ்தவ கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறிய 80 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.
---------------

ஈஸா குர்‍ஆன்

பழனியில் இஸ்லாமை விட்டு வெளியேறினாலும் தண்டனை பெறவில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறீர்கள். உங்களிடம் நான் ஒரு சில கேள்வியை கேட்கட்டும்:

A) பழனி என்ன ஆப்கனிஸ்தானில் உள்ளதா, அல்லது எகிப்தில் உள்ளதா சொல்லுங்கள். இந்தியாவில் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். இஸ்லாமிய நாட்டில் பழனி இல்லை, ஜனநாயக இந்தியாவில் உள்ளது.என்னவோ, பழனி இஸ்லாமிய நாட்டில் உள்ளது போலவும், ஷரியா சட்டம் நடைபெறும் நாட்டில் உள்ளது போலவும், இருந்தாலும் மரண தண்டனை கொடுக்காதது போலவும் எழுதுகிறீர்களே.

B) மதமாற்றத்திற்கு தண்டனை கொடுப்பதற்கு? இந்தியாவில் ஷரியா சட்டம் இல்லையே! எனவே, இந்தியாவில் நாங்கள் யாருக்கும் மரண தண்டனையை கொடுப்பதில்லை என்றுச் சொல்லி நீங்கள் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை.
ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
---------------

ஈஸா குர்‍ஆன்

அதாவது, "மதம் மாறினால் இஸ்லாமில் மரண தண்டனை உண்டு என்பதை அறியாத முஸ்லீம்கள்" என்று நீங்கள் சொல்வதிலிருந்து முஸ்லீம்களுக்கு உங்களைப் போன்ற அறிஞர்கள், இமாம்கள்  எதை எதை சொல்கிறீர்கள் என்று இப்போது தான் தெரிகிறது.

இப்பொழுதாவது ஒப்புக்கொண்டீர்களே, முஸ்லீம்கள் கூட "கிறிஸ்தவர்களின் கட்டுரைகள் மூலமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கிறார்கள்" என்று.

---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.

கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.

வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.

இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.
----------------

ஈஸா குர்‍ஆன்

ஆனால், இஸ்லாமைப் பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ளாமல் இஸ்லாமியராக மாறுபவரின் "குடி" நிச்சயமாக முழ்கும். இதற்கு முழு பொறுப்பு இஸ்லாமிய அறிஞர்கள் புதிதாக வரும் முஸ்லீம்களுக்கு இவைகளைப்பற்றி சொல்லாமல், மறைப்பது தான்.

இராணுவத்தில் பின்பற்றவேண்டிய சட்டத்தையும், மீறினால் கிடைக்கும் தண்டனைகளையும் தெரிந்துக்கொள்ளாமல், யாரும் வேலையில் சேரமாட்டார்கள் என்பது என் கருத்து. குறைந்த பட்சம், மிகவும் கொடுமையான தண்டனையுள்ள நிபந்தனைகளையாவது ஒரு இராணுவ வீரன் தெரிந்துக்கொண்டுத் தான் வேலையில் சேருவான். கணினியில் நாம் படிக்காமல் "Agree" என்ற பொத்தானை அழுத்துவது போல வாழ்க்கையில் எல்லா நிலையிலும் செய்யமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதே போலத்தான், இஸ்லாமில் சேருவது என்பது கணினியில் ஒரு மென்பொருளை பதிக்கும் வேலை போன்ற ஒரு சுலபமான வேலையில்லை, ஒருவனின் முழுவாழ்க்கையையும் அது பாதிக்கும் அல்லது அழிக்கும்.

இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன், நாம் மருந்துகள் வாங்கும் போது, அந்த மருந்து மாத்திரைகளின் முடிவு தேதியை (Expiry Date)  பார்க்கிறோம். ஒரு வேளை அந்த மருந்தின் முடிவு தேதி (Expiry Date) முடிந்துவிட்டு இருந்தால், அந்த மருந்தை மாற்றித்தரும் படி கடைக்காரரிடம் கேட்கிறோம்.  ஆனால், அதே போல, அதிகமாக பாதிப்பு இல்லாத பொருட்களை வாங்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நாம் முடிவு தேதியை(Expiry Date)  பார்ப்பதில்லை.   உதாரணத்திற்கு, சோப்புக்கள், ஷாம்புக்கள் போன்றவைகளுக்கு பெரும்பான்மையாக மக்கள் முடிவு தேதியை மருந்து மாத்திரைகள் வாங்கும் போது பார்க்கும் வண்ணம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. (வாங்கும் எல்லா பொருட்களுக்கும் முடிவு தேதி பார்ப்பவர்களும் உண்டு)

எனவே, கண்களை மூடிக்கொண்டு நிபந்தனைகளை படிக்காமல் ஒரு சில "Agree" பொத்தானை அழுத்தலாம், ஆனால், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் "இஸ்லாம்" என்ற பொத்தானை படிக்காமல், கேள்வி கேட்டு தெரிந்துக்கொள்ளாமல் அழுத்துவது என்பது சரியானது அல்ல என்பது என் கருத்து.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...


இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.
-----------------------
 

ஈஸா குர்‍ஆன்

இஸ்லாம் மதத்தில் என்ன விதிகள் உள்ளது என்று 40-50 வருடங்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களே புரியாமல் தலை பீய்த்துக்கொண்டு இருக்கும் போது, எப்படி சகோதரரே ஒரு புதிய முஸ்லீம் அனைத்து விதிகளையும் தெரிந்துக்கொண்டு தான் இஸ்லாமியர் ஆகிறார் என்றுச் சொல்கிறீர்கள்.  நீங்கள் சொல்வதை செய்யவேண்டுமானால், முஸ்லீமாக மாறுபவனுக்கு இஸ்லாமைப் பற்றிய படிப்பை சில‌ ஆண்டுகள் கற்றுக்கொடுத்துத்தான் முஸ்லீமாக மாற்றவேண்டும், அப்படி செய்ய உங்களுக்கு சம்மதமா?

(  ஒருவேளை, கிறிஸ்தவனாக மாறுபவனுக்கு இப்படித் தான் சில ஆண்டுகள் பைபிள் படிப்பை சொல்லிக்கொடுத்த பின்பு தான் ஒருவன் சேருகிறானா? என்று சிலர் கேட்கலாம், இதற்கு பதில் சுலபம், அதாவது ஆபத்தில்லாத  பொருட்களை வாங்கும் போது பெரும்பான்மையாக‌ யாரும் முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பதில்லை, ஆனால், உயிருக்கு ஆபத்துள்ள மருந்தை வாங்கும் போது நிச்சயமாக முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பார்கள்.

அது போல, கிறிஸ்தவம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்க,  படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தலாம், ஒரு வேளை நமக்கு இந்த மென்பொருள் எதிர் காலத்தில் தேவையில்லை, இதனால் பிரச்சனை என்று நினைக்கும் போது, அந்த மென் பொருளை நம் கணினியிலிருந்து நீக்கிவிடலாம். ஆனால், இஸ்லாம் என்ற மென்பொருள் அப்படி இல்லை, நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ளாமல், படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தினால், அவ்வளவு தான் உங்கள் கதை, பிற்காலத்தில் இந்த மென்பொருளினால் நமக்கு பிரச்சனை என்று சொல்லி, அதை நீக்க முடியாது, அப்படி நீக்க முயன்றால், மரணம் நிச்சயம். இப்போது புரிகிறதா? ஏன் சில நேரங்களில் நிபந்தனைகளை தவறாமல் படிக்கவேண்டும் என்பது.)


நீங்கள் சொல்வது உண்மையானால், இந்தியாவிலும் அதாவது இஸ்லாமிய சட்டம் இல்லாமல், ஜனநாயக சட்டம் ஆட்சி செய்யும் நாட்டிலும், ஒரு கிறிஸ்தவன் அல்லது இந்து, முஸ்லீமாக மாறும் போதும், நீங்கள் சொன்னது போல, "நான் வரும் காலங்களில் இஸ்லாமிளிலிருந்து வெளியெறினால், என்னை கொல்ல நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்" என்று சொல்லித்தான் இஸ்லாமியனாக மாறுகிறானா? நீங்கள் சொல்வதைப்பார்த்தால், இந்தியாவில் முஸ்லீமாக மாறுபவன் தன் மரணத்தை தானே நிர்ணயித்து மாறுகிறான் என்று சொல்லவருகிறீர்கள்.

இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான குற்றமில்லையா? மாறுபவனையும், மாற்றுபவரையும் அரசாங்கம் கைது செய்யாதா?

-----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?
-----------------------

அதாவது, இந்த இரண்டு வரிகளைச் சொன்னால் போதும், ஒருவன் தன்னை இஸ்லாம் கொல்ல கூட அனுமதி கொடுத்ததாக அர்த்தம் என்று சொல்லவருகிறீர்கள். அடேங்கப்பா! என்னே அர்த்தம்!

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், ஒரு நிறுவனம் கீழ் கண்ட நிபந்தனைகளை தங்கள் மென்பொருளை தங்கள் கணினியில் பதிக்கும்போது ஒப்புக்கொண்டு பதிக்கவும் என்று சொல்லியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

எங்கள் மென்பொருளை உங்கள் கணினியில் பதிக்க நிபந்தனைகள் 1 லிருந்து 10 வரை நீங்கள் ஒப்புக்கொண்டு பதியுங்கள்.   நிபந்தனைகள் 1 லிருந்து 10..........

இந்த மென்பொருளை ஒருவர் தன் கணினியில் பதித்துக்கொள்கிறார். சில நாட்கள் கழித்து தன் கணினியிலிருந்து நீக்கி விடுகிறார். இவர் நீக்கி விட்ட மறுநாளில் இவருக்கு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனத்திடமிருந்து ஒரு மெயில் கீழ் கண்ட செய்தியோடு வருகிறது:

"நீங்கள் எங்கள் மென்பொருளை நீக்கிவிட்டதால், உங்கள் கணினி இனி எங்களுக்குச் சொந்தம், எனவே, எங்கள் நிறுவனத்திடம் ஒரு வாரத்திற்குள் உங்கள் கணினியை ஒப்படைத்துவிடுங்கள்,  அப்படி ஒப்படைக்கவில்லையானால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும்"


இந்த செய்தியை படித்தவுடன், அந்த நபர் மிரண்டுப்போகிறார், உடனே, அந்த மென்பொருளின் 10 நிபந்தனைகளை எடுத்து படிக்கிறார், ஆனால், கணினி அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகும் என்பதைப்பற்றிய எந்த நிபந்தனையும்  இல்லை, எனவே, அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்புகிறார், இல்லாத நிபந்தனையை எப்படி நான் பின்பற்றும்படி கேட்கிறீர்கள் என்று கேட்கிறார். இந்த மெயிலை அந்த நிறுவனம் படித்துவிட்டு, "எங்கள் மற்ற நிபந்தனைகளை எப்போது நீங்கள் அங்கீகரித்தீர்களோ, அப்போதே நீங்கள் இந்த நிபந்தனைக்கு அங்கீகாரம் அளித்தீர்கள்  என்று பொருள்" என்று மறுபடியும் பதில் அனுப்புகிறது.

இந்த நபர் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்வீர்கள், எழுத்துவடிவில் இல்லாத நிபந்தனையை, எனக்கு சொல்லாத நிபந்தனையை மீறியதால், நான் எப்படி தண்டிக்கப்படுவேன் என்று கேள்வி எழுப்புவீர்கள்.

ஆனால், நம்முடைய இஸ்லாமிய சகோதரர் சொல்கிறார்: " அல்லவைத் தவிர யாரும் இறைவன் இல்லை, முகமது அல்லாவின் தூதர்" என்று சொன்னாலே போதுமாம், அந்த புதிய முஸ்லீமுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு! என்னே சட்டங்கள், கொள்கைகள். இதற்கு யாராவது உடன்படுவார்களா! இது நடைமுறைக்கு ஒத்துவருமா? சிந்தியுங்கள், எனக்கும் சிறிது விளக்குங்கள்.


உங்கள் இந்த வரிகள் மூலமாக:

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியானது, அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறினால், சங்கு ஊதவேண்டியது தான்.அப்படித்தானே, (இப்படிப்பட்ட மதம் மனிதனுக்கு தேவையா?)

2. இதை நீங்கள் இஸ்லாமிய நாட்டில் அல்லாமல், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலும் பின்பற்றுகிறீர்களா? இல்லையா? அப்படி ஜனநாயக நாட்டில் பின்பற்ற முடியாமல் போனால், அது அல்லாவிற்கு கோபமூட்டாதா?  அல்லாவின் கட்டளையை நிறைவேற்ற முடியமாட்டேங்கிறதே என்றுச் சொல்லி நீங்கள் வேதனைப்படுவீர்களே! இந்தியாவில் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறினால், உங்களின் அதே சட்டத்தின் படி அரசாங்கத்திற்கு தெரியாமல், வேறு விதத்தில் அவரது மரணத்திற்கு பாதிப்பு உண்டாக்குவீர்களா? அப்படியும் இல்லையானால், "இஸ்லாமிய நாடுகளின் இஸ்லாம்", "ஜனநாயக நாடுகளின் இஸ்லாம்" என்று இரண்டு இஸ்லாமிய சட்டங்கள் உண்டா?

3. உங்களின் இந்த வரிகளின்படி, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்று இஸ்லாமியர் அல்லாத இந்தியர்கள் எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

உங்களின் வார்த்தைகளில் முரண்பாடு உள்ளது போல தோன்றுகிறதே. அதாவது, இஸ்லாமில் சேரும் போது, மரணத்திற்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு தான் சேருகிறார் என்றுச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் உலகத்தில் இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆயிரமாயிரமான மக்களை இஸ்லாம் கொல்கிறதா என்று கேட்கிறீர்கள். இது முரண்பட்ட கருத்தாக உள்ளதே.

----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
------------------------
 

அதாவது, இந்த முனியாண்டியும், மத்தேயுவும், வாயாலேயே தங்கள் வாழ்க்கையை அழிக்க முடிவு செய்து தான் முஸ்லீமாக மாறுகிறார்களா! என்னே மதமய்யா? ரொம்ப நன்னாயிருக்கு. அப்போ, அந்த ஸ்டாம்ப் பேப்பர் பணமும் மிச்சம் தான்.

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, இஸ்லாமுக்குத் தான் ஸ்டாம்ப் பேப்பர் தேவை, கிறிஸ்தவத்திற்கு தேவையில்லை.  இஸ்லாமுக்கு ஸ்டாம்ப் பேப்பர் தேவையில்லை என்பவர்கள், என் அறியாமையை போக்கும்படி மேலும் எனக்கு விவரியுங்கள்.

-----------------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
-------------------------
 

 நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முனியாண்டி, மற்றும் மத்தேயு இருவரின் மனைவிகளின் வாழ்க்கை, தங்கள் கணவர்கள் கூட இருக்கும் போது இருந்ததை விட, கணவர்கள் இஸ்லாமினால் கொலை செய்யப்பட்ட பிறகு, தாங்கள் விதவைகள் ஆனபிறகு இன்னும் சிறப்பாகவும், மேன்மையுள்ளதாகவும், அழகானதாகவும் எல்லாரும் கண்டு மெச்சிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்வது போல உள்ளது.

ஒரு குடும்ப தலைவன் ஒரு மதத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு அக்குடும்பத்தின் வாழ்வு செழிப்பானதாக இருக்கும் என்றுச் சொல்லவருகிறீர்கள். இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  முனியாண்டியும், மத்தேயுவும் இஸ்லாத்தை தழுவும் முன்பு, அப்பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும் என்று சொல்கிறீர்கள். 

உங்களின் அடுத்த பதிலுக்காக, இந்த முனியாண்டி, மத்தேயுவின் மனைவிகளின் வாழ்க்கையில் என்ன செழிப்பு வந்திருக்கும், என்று நீங்கள் எழுதுவதை படிக்க எனக்கு மிகவும் ஆவளாக உள்ளது. சீக்கிரமாக எழுதவும்.

முடிவுரையாக நான் சொல்லிக்கொள்வது:

இஸ்லாம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்கும் முன்பு, நீங்கள் முதலாவது எல்லா நிபந்தனைகளையும் படியுங்கள், சில நிபந்தனைகளை அந்த மென்பொருளின் நிபந்தனை பட்டியலில் இடம் பெற்று இருக்காது, இருந்தாலும், அதை மீறினால், தண்டிக்கப்படுவீர்கள்(வேடிக்கையாக இருக்கே!). இது எப்படி நியாயமாக ஆகும் என்று கேட்கக்கூடாது,  அல்லாவையும், முகமதுவையும் உங்கள் வாயினால் அறிக்கையிட்டால் போதும், உங்களை அல்லாவிடம் அனுப்பவும் அந்த ஒரு நிபந்தனைக்கு அதிகாரம் உண்டு.


 ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' *

*Conditions Apply


சரி, இனியாவது இஸ்லாமியர்கள் இப்படி * Conditions Apply என்று எழுதினாலாவது நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள்.

( Conditions Apply என்றால் என்ன என்று எல்லாருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்படி வெளி உலகை கவரவேண்டுமென்பதற்காக‌ "கவர்ச்சி கரமான வார்த்தைகளை எழுதிவிட்டு, விளம்பரத்தின் கடைசியில் * Conditions Apply என்று எழுதியிருப்பார்கள்.).
 
 

இஸ்லாமிய நண்பர்கள் இந்துக்கள்,பார்பணர்கள்,கிறிஸ்தவர்களை தாக்க அணியும் புதிய முகமூடிகள் அம்பலம்

 

 

சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.


அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.

கிறித்துவம் கேள்வி பதில்


கிறித்துவம் கேள்வி பதில்-2
உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்


இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?
போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.




இதை பற்றி அறிய

 
இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண
முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்

சிந்திக்க உண்மைகள். ரட்சிக்கும் ( ? ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU)

சுல்தான் இந்த வேலை எல்லோராலும் செய்ய முடியும் ஆனால் இது போல் உள்ள கேவலமான வேலைகள் உங்காளை போல் நாங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை




சிந்திக்க உண்மைகள். ரட்சிக்கும் ( ? ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ!!!. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா? படித்து சிந்தியுங்கள

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்