இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, August 21, 2007

டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:

டாக்டர் ஜாகிர் நாயக்கின் விளக்கத்துக்கு ஈசா குரான் இணையம் விளக்கம்
 
 
 
டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1
"The Word was God"

டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு இஸ்லாமிய அறிஞர் ஆவார். உலகமனைத்திலும் சென்று பல இஸ்லாமிய சொற்பொழிவுகள் தருகிறார். மாற்று மத அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கென்று உள்ள பானியில் பதில் தருகிறார்.

[ சில வாரங்களுக்கு முன்பு ஒரு முறை நான் தொலைக்காட்சியில் அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன். அதில் ஒரு கிறிஸ்தவர் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் தருகிறார்.

அந்த கிறிஸ்தவர் கேட்ட கேள்வி: புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷம் 1:1-12 , வசனங்கள் இயேசு "இறைவன்" என்பதை காட்டுகிறது", இதைப் பற்றி உம் கருத்து என்ன? என்று டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் கேட்டார். அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கொடுத்தார்கள். பதில் கொடுக்கும் போது கிரேக்க மொழியில் உள்ள மூல வார்த்தைகளைப் பற்றி விவரித்தார்கள். டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் செய்திகள் அல்லது புதிய ஏற்பாட்டு யோவான் சுவிசேஷ கிரேக்க வார்த்தைகள் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகத்தில் இணையத்தில் தேடினேன், பதில் கிடைத்தது படியுங்கள்]

அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில் கீழே உள்ளது.

 
Quote:

The New testament is written in Greek. The first time God occurs in the quotation is "Hotheos" which literally means "the God " i.e. "And the Word was with God". But the second time when the word "God" appears in the quotation, the Greek word used is "Tontheos", which means " a god" i.e. "and the word was with god." In Hebrew there is nothing like Capital 'G' and small 'g' like in the English language. Thus Hotheos is 'the God' with capital 'G' and Tontheos is 'a god' with small 'g'.

(Source: http://www.irf.net/irf/dtp/dawah_tech/t22/pg1.htm and http://www.answering-islam.org/Responses/Naik/misquotations.htm )


அவர் சொல்வதின் சுருக்கம் இது தான்:

யோவான் 1:1 ல் தேவன் – God என்ற வார்த்தை இரண்டுமுறை வருகிறது. முதல் முறை "தேவன்" என்ற வார்த்தை வரும் போது, அதன் கிரேக்க வார்த்தை " Hotheos " என்பதாகும். இதன் பொருள் "the God" என்பதாகும். (i.e. And the Word was with God)


இதே வசனத்தில் இரண்டாவது முறை தேவன் - God என்று வருகிறது, அதன் கிரேக்க வார்த்தை "Tontheos" என்பதாகும். இதன் பொருள் "a god" என்பதாகும். ( i.e. "and the word was with god.")



இவர் கருத்துப் படி :

Hotheos என்றால் "the God" என்று பொருள் : Capital "G"
Tontheos என்றால் "a god" என்று பொருள் : Small "g"

இதனால், அவர் முடிவு செய்கிறார், "வார்த்தயாகிய" இயேசு தேவன் (The God) இல்லை. அவர் a god ஆவார். அதாவது இயேசு தேவனுக்கு ஈடாகமாட்டார். அவர் இறைவன் இல்லை.

இப்போது டாக்டர் நாயக் அவர்களின் வாதங்களில் உள்ள உண்மையை பார்க்கலாம்: உண்மையில் அவர் சொல்கிறபடி அந்த இரண்டு வார்த்தைகளும் அவர் சொல்வது போல வருவதில்லை. மட்டுமல்ல ஒரு புதிய வார்த்தையை Ton Theos (இல்லாத வார்த்தையை) கண்டுபிடித்துள்ளார்

1. கிரேக்க மொழியில் வசனம் யோவான் 1:1:



Source : http://www-users.cs.york.ac.uk/~fisher/cgi-bin/gnt?id=0401 and http://www.answering-islam.org/Green/deedat/john1.gif


டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :

Quote:

The first time God occurs in the quotation is "Hotheos" which literally means "the God" i.e. "And the Word was with God".




ஈஸா குர்-ஆன் மறுப்பு:

டாக்டர் நாயக் அவர்கள் சொல்வது போல, யோவான் 1:1ல் முதல் முதலில் "God" என்பதின் கிரேக்க வார்த்தை "Hotheos" இல்லை, அது "TON THEON" என்பதாகும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

God என்ற வார்த்தை முதல் முறை இடம் பெறுவது:



Source : http://www.answering-islam.org/Green/deedat/john2.gif

டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :

Quote:

But the second time when the word "God" appears in the quotation, the Greek word used is "Tontheos", which means "a god" i.e. "and the word was with god."



ஈஸா குர்-ஆன் மறுப்பு:

இரண்டாம் முறை "Tontheos" என்ற வார்த்தை வருகிறது என்றுச் சொல்கிறார். ஆனால், உண்மையில் இரண்டாம் முறை வரும் வார்த்தை "THEOS" என்பதாகும். டாக்டர் நாயக் சொன்னது மறுபடியும் தவறு.


God என்ற வார்த்தை இரண்டாம் முறை இடம் பெறுவது:




டாக்டர் நாயக் அவர்களின் வாதம் :

Quote:

In Hebrew there is nothing like Capital 'G' and small 'g' like in the English language.


ஈஸா குர்-ஆன் மறுப்பு:

புதிய ஏற்பாடு கிரேக்கத்தில் எழுதப்பட்டது என்று முதலில் சொல்லிவிட்டு, கடைசியில் "எபிரேய" மொழியில் Capital "G" மற்றும் Small "g" இல்லை என்றுச் சொல்கிறார்.

யோவான் சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் எழுதப்படவில்லை. இது தெரிந்திருந்தும் ஏன் இவர் இப்படி சொல்கிறார்? கேட்பவர்கள் குழம்பவேண்டும் என்பதற்காகவா? மேற்கொண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்பதற்காகவா? கிரேக்க மொழியைப் பற்றிப் பேசும் போது, எபிரேய மொழி எங்கேயிருந்து வந்தது?


"Ton theos" என்ற வார்த்தை கிரேக்க மொழியில் தவறான இலக்கணமாகும்:

கிரேக்க மொழியில் Theon மற்றும் Theos என்ற வார்த்தைகள் இரண்டும் "தேவன்" என்பதையே குறிக்கும். கிரேக்க வார்த்தை "Ton" என்பதின் பொருள் ஆங்கிலத்தில் "the" என்பதாகும்.

"Theon" என்ற வார்த்தைக்கு முன் "Ton" என்ற வார்த்தை வரலாமே ஒழிய, "Theos" என்ற வார்த்தைக்கு முன்பாக வரக்கூடாது.

1) In 'ton theos' he mixes 'ton' (the accusative case of the article) with 'theos' (the nominative of the noun) which is an impossible construction in Greek.
Source: answering-islam.org : http://answering-islam.org.uk/Responses/Deedat/greek.html



உலகமகா இஸ்லாமிய பேச்சாளர் "டாக்டர் நாயக் அவர்கள்" :

உலக இஸ்லாமியர்களுக்கு "ஒரு மாதிரி – Role Model" ஜாகிர் நாயக் ஆவார். அப்படிப்பட்டவர் மேடைகளில் பேசுவதற்கு முன்பாக, எழுதுவதற்கு முன்பாக தான் என்ன சொல்லப்போகிறோம், அதன் பொருள் என்ன? என்பதை முன்கூட்டியே கற்றுக்கொண்டு தானே பேசவேண்டும்?


1) இவர் கிரேக்க புதிய ஏற்பாடு யோவான் சுவிசேஷத்தைப் பார்த்தாரா? இல்லையா?

2) தனக்கு கிரேக்க மொழிப் பற்றி தெரியவில்லையானால், தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது அதைப் பற்றியுள்ள புத்தகங்களை படிக்கலாம்? அதை விட்டுவிட்டு இல்லாத வார்த்தைகளை இருப்பதாகச் சொல்வது ஒரு அறிஞருக்கு தகாது?

3) பைபிளின் ஒரு வசனத்தை சொல்வதற்கு முன்பாக, அந்த வசனத்தை ஒரு முறை ஒரே ஒரு முறை கிரேக்க மொழியில் கண்களால் பார்த்து இருக்கலாம்? அதையும் செய்யவில்லை, நம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.

4) அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், எவ்வளவு நாள் வண்டி ஓடுகிறதோ ஓடட்டும், என்று வேண்டுமென்றே இப்படி வசனங்களை மாற்றிச் சொல்கிறாரா இவர்? ஆமாம், இது தான் சரியான காரணமாக இருக்கும். இப்படிப் பட்ட மேதாவிக்கு இது தெரியாமல் இருக்காது.



இவர் எங்கேயிருந்து எடுத்து இதைச் சொல்கிறார்: அஹமத் தீதத் தான் இதற்கு மூலம்


அஹமத் தீதத் என்பவரும் டாக்டர் நாயக் போன்று ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். டாக்டர் நாயக் அவர்களின் பெரும்பான்மையான கருத்துக்கள், அஹமத் தீதத் அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. இப்போது அவர் இல்லை, அவர் காலமாகிவிட்டார்.

அஹமத் தீதத் எழுதிய "The Choice" மற்றும் "Christ In Islam" என்ற புத்தகத்திலும், அவர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.

அவர் ஒரு கிறிஸ்தவ போதகரிடம் உரையாடடியதாக எழுதுகிறார்:

Quote:

I asked the Reverend whether he knew Greek? "Yes", he said, He had studied Greek for five years before qualifications. I asked him what the Greek word was for "God" the first time it occurs in the translation - "and the Word was with God"? He kept staring, but did not answer. So I said, the word was HOTHEOS, which literally means "THE GOD" ... which in turn is rendered - God. "Now tell me, what is the Greek word for God in the second occurrence in your quotation - "and the Word was God"? The Reverend still kept silent ... the game was up. I said the word was TONTHEOS, which means a god. (Ahmed Deedat, The Choice, Brunswick, Australia: Islamic Service House, p. 192; also published in, Christ in Islam, Durban, RSA: IPCI, 1993, p. 40)

Source: answering-islam.org http://www.answering-islam.org/Green/deedat.htm and http://www.jamaat.net/cis/ChristInIslam.html


மொத்தத்தில் இருவரும் ( திரு அஹமத் தீதத் மற்றும் டாக்டர் நாயக்) இப்படி தவறான செய்தியை பரப்பிக்கொண்டு (வந்தார்கள்)வருகிறார்கள்.



கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் தொலைக்காட்சியில் பார்த்தபோது, டாக்டர் நாயக் அவர்கள் இந்த பதிலை அளித்துவிட்டபிறகு, கேள்வி கேட்ட கிறிஸ்தவர் மறுபடியும் எழுந்து, நீங்கள் வசனம் 1க்கு மட்டும் தான் பதில் அளித்தீர்கள், நான் கேட்டது முதல் 12 வசனங்கள் வரை, அதற்கு பதில் அளியுங்கள் என்றுக் கேட்டார்.

உடனே, டாக்டர் நாயக் அவர்கள் அந்த கிறிஸ்தவரிடம் கேட்டார்கள்:

முதலில் நான் சொன்ன விவரங்கள் படி கிரேக்க மொழியில், யோவான் 1:1ல் முதலில் வரும் "தேவன்" என்ற வார்த்தை "Hotheos" தானே என்று கேட்டார். கேள்வி கேட்ட கிறிஸ்தவர் சிறிதும் யோசிக்காமல், "ஆமாம்" என்றபடி தலையாட்டினார்.

இரண்டாம் முறை "தேவன்" என்ற வார்த்தை "Tontheos" தானே என்று கேட்டார். மறுபடியும் "ஆமாம்" என்று ஒப்புக்கொண்டார், அந்த கிறிஸ்தவர்.



எனக்கு தூக்கிவாரி போட்டது.

ஒரு நபர் (டாக் நாயக் அவர்கள்) ஒரு மேடையில் ஆதாரம் இல்லாமல், கிரேக்க மொழியில் பைபிளில் முதலில் ஒரு வார்த்தை இப்படி வருகிறது, இரண்டாவது இப்படி வருகிறது என்றுச் சொன்னால்? அதை சரி பார்க்காமல், அவர் சொல்வது சரியா தவறா என்று சோதித்தறியாமல் எப்படி இந்த கிறிஸ்தவர் "ஆமாம்" என்று ஒப்புக்கொண்டார் என்பதே? தமிழ் அல்லது ஆங்கில பைபிளிலிருந்து சொன்னால், உடனே சரி பார்க்க முடியும்.

அதாவது,

1. ஆமாம் என்று ஒப்புக்கொண்ட நபருக்கு கிரேக்க மொழி, முக்கியமாக யோவான் வசனம் 1:1ஐப் பற்றி தெரியாமல் இருக்கவேண்டும்? அல்லது.

2. தனக்கு தெரியாவிட்டாலும், "டாக்டர் ஜாகிர் நாயக்" அவர்கள் "தவறாகச் சொல்வார்களா நிச்சயமாகச் சொல்லமாட்டார்கள்" என்ற நம்பிக்கையா?


கிறிஸ்தவர்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியது? மேடையில் ஒரு வாதம் நடக்குமானால், அதில் சொல்லப்படும் விவரங்களை சரிபார்க்க நேரம் இருக்காது, அது சில நேரங்களில் முடியாது கூட.

இப்படிப் பட்ட நேரங்களில் என்ன செய்யவேண்டும்?


1. முதலாவது ஆதாரம் என்ன என்றுக் கேட்கவேண்டும்?

2. எனக்கு கிரேக்க மொழி தெரியாது, முக்கியமாக யோவான் 1:1ல் முதலாவது என்ன வருகிறது, இரண்டாவது என்ன வருகிறது என்று தெரியாது, நான் சரி பார்க்கும் வரை, நீங்கள் சொல்வது சரியானது என்று எப்படிச் சொல்லமுடியும்? ஆதாரம் இருந்தால், கிரேக்க புதிய ஏற்பாடு உம்மிடம் இருந்தால், காட்டுங்கள் அப்போது ஏற்றுக்கொள்கிறேன் என்றுச் சொல்லவேண்டும்.


அதை விட்டுவிட்டு, நமக்கு தெரியாத விஷயத்தில், அவர் மீது உள்ள நம்பிக்கையின் பேரில், ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ள சபையில் பொய்யுக்கு துணைபோவது, நமக்கு தகாது.

புறாக்களைப் போல கபடற்றவர்களாக இருங்கள், சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாக இருங்கள்.

முடிவுரை: சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய். அது யாராக இருந்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, என்னையும் சேர்த்து.

இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட விவாதத்தின் வீடியோ கிளிப் www.youtube.com என்ற தளத்தில் இருக்கலாம், அதை யாராவது கண்டால், இங்கு அதன் தொடுப்பை கொடுக்கும்படி வேண்டுகிறேன். நானும் முயற்சி செய்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு:


[1] டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரைகள்
[2] Misquotations and Misinformation propagated by Zakir Naik

[3] அஹமத் தீதத் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரைகள்
[4] அஹமத் தீதத்தும் கிரேக்க மொழியும்
[5] Another Choice: The Teaching of Ahmed Deedat - By Samuel Green
[6] Rebuttals to Muslim Polemics against Christianity [7] புதிய ஏற்பாடு,கிரேக்க மொழியில் படிக்க
[8] கிரேக்க புதிய ஏற்பாட்டில் தேடுவதற்கு


Source : http://www.geocities.com/isa_koran//tamilpages/Rebuttals/zakirnaik/NaikandJohn11.htm

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்