குர்-ஆன் முரண்பாடுகள்
மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
அநேக சூராக்களில் குர்-ஆன், இயேசுவின் தாயாகிய மரியாளை (எபிரேய மொழியில் 'மிரியம்'), ஏறக்குறைய 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆரோன், மோசேயின் சகோதரியும் மற்றும் அம்ராமின் மகளுமான 'மிரியாமோடு' சேர்த்து குழப்புகிறது.
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (19:27-28)
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும்.....சுரா 66:12
இந்த பிரச்சனைக்கு முஸ்லீம்கள் என்ன பதிலைத் தருவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். மேலேயுள்ள வசனங்களை பற்றி யூசுப் அலி கீழ்கண்டவாறு விரியுரை கூறுகிறார்:
"மோசேயின் சகோதரன் ஆரோன் இஸ்ரவேலின் ஆசாரிய வரிசையில் முதன்மையானவர். மரியாளும் அவளுடைய உறவின் முறையான எலிசபெத்தும் (யஹ்யாவின் தாய்) ஒரு ஆசாரிய சந்ததியில் வந்தவர்கள். எனவே அவர்கள் ஆரோனின் சகோதரிகளும் இம்ரானின் (ஆரோனின் தகப்பன்) மகளுமாவார்கள்." (Footnote: 2481)
இது ஒரு தவறான பதில் அல்லது சுட்டிக்காட்டலாகும். ஆரோன் மட்டும் தான் தேவனுடைய "ஆசாரியன்" அதுவும் முதல் ஆசாரியன் ஆனார். மேலும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே ஆசாரியர்களாவார்கள். ஆரோனின் சகோதரனாகிய மோசேயோ அல்லது அவர் சகோதரி மிரியாமோ ஆசாரிய சந்ததிகளாக கருதப்படமாட்டார்கள். அம்ராம் (ஆரோனின் தந்தை) நிச்சயமாக ஒரு ஆசாரியன் அல்ல. இஸ்ரவேலில் ஒவ்வொரு ஆசாரியனும் ஆரோனின் சந்ததிகளாக இருக்கிறார்கள். ஆரோனுடைய சகோதரனும் சகோதரியும் ஆசாரிய சந்ததிகளாக எண்ணப்படமாட்டார்கள். ஒரு வேளை இயேசுவின் தாயாகிய மரியாள் ஆசாரிய வம்சத்தில் வந்தவர் என்றுச் சொல்லவேண்டுமானால், அவரை "ஆரோனின் குமாரத்தி/மகள்" என்று மட்டுமே சொல்லவேண்டும்.
"தகப்பன்", 'மகள்" மற்றும் "சகோதரி" என்று உபயோகப்படுத்தப்படுபவைகள் அதிகமாக ஒரு 'பொதுவான குடும்ப உறவுகளை' குறிக்கின்றன என்பதை நான் அங்கீகரிக்கிறேன். எனவே அப்படிப்பட்ட ஒவ்வொரு குறிப்புகளையும் அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று மிக கவனமாக நாம் ஆராயவேண்டும். இந்த காரியத்தில் "மகள்" மற்றும் "சகோதரி" என்ற குறுகிய சரீரப்பிரகாரமான உறவைப் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்பதை நான் கீழே விளக்குகிறேன். ஒருவேளை அங்கே "ஆசாரியத்துவம்" முக்கியமாக கருதப்படவில்லையென்றாலும், ஒரு நீண்ட குடும்ப உறவுமுறை காணப்படுகிறது. அப்படியிருக்க குர்-ஆன் ஏன் மரியாளுடைய புகழ் பெற்ற முற்பிதாவான "ஆரோனின் புதல்வி" என்று கூறுவதில்லை?
"சகோதரி" என்ற வார்த்தை ஒரே குடும்பத்தில் உள்ள நபர்களின் உறவுமுறைகளை குறிப்பதோடு மட்டுமில்லாமல், பரந்த முறையிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையானாலும், இரண்டு நபர்களை ஒப்பிடும் போது குர்-ஆனில் கூட "சகோதரர்கள், சகோதரிகள்" என்ற வார்த்தைகள் ஒரே காலகட்டத்தில் வாழும் உறவினர்களை குறிப்பதற்கும், "தந்தை மகள்" என்ற வார்த்தைகள் பல வம்சங்களுக்கு இடையில் இருப்பவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே!
ஏன் முஹம்மதுவின் மனைவிகள் "நம்பிக்கையாளர்களின் சகோதரிகள்" என்று அழைக்கப்படாமல் "நம்பிக்கையாளர்களின் தாய்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்?[இன்றைய நம்பிக்கையாளர்களே! - ஆயிஷா நிச்சயமாக முஹம்மதுவின் சம காலத்தில் வாழ்ந்த உதமான், உமர், அபூ பக்கர் மற்றும் மற்றவர்களின் தாய் என்று அழைக்கப்படவில்லை.]
குர்-ஆன் எந்த காரணத்திற்காக மரியாளை புகழ்பெற்ற ஆரானின் சகோதரியாக அழைக்கிறது ஆனால் இம்ரானின் மகளாக (பைபிளில்: அம்ராம்) அழைக்கிறது? (ஆரோன் ஏறக்குறைய 1400 வருடங்கள் மரியாளை விட மூத்தவராக இருக்கிறார்). இம்ரான் பற்றி யாத்திராகமம் 6 மற்றும் 1 நாளாகமம் 23 ல் வரும் வம்சாவழிப் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதை தவிர வேறொன்றும் நாம் அறியாதிருக்க, அவருடைய மகள் என்று ஏன் மரியாள் அழைக்கப்பட வேண்டும்? எனவே இந்த இரண்டு மிரியாம்களையும் குறித்து குர்-ஆன் குழம்பியிருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை ஒற்றுமைப் படுத்துவதற்கு எடுக்கப்படும் இஸ்லாமியர்களின் முயற்சிகள் உண்மையிலேயே அறிவுடமையானதாக இல்லை.
மேலேயுள்ள குறிப்புகள் ஒரு சில 'சிறிய கேள்விகளே'. ஆனால் இங்கே பெரிய பிரச்சனை என்பது பின்வரும் வசனங்களில் நாம் பார்ப்பது போல, குர்-ஆன் வெளிப்படையாக ஒரு பரந்த வம்ச உறவைப் பற்றி (Wider Clan Relationships) பேசுவதில்லை.
இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. ……(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" ….(மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. …. 3:36
முஸ்லீம்கள் வழக்கமாக ஒரு பெண் யாருடைய மனைவி என்பதில் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவளுடைய ஏதோ ஒரு 'தூரத்து உறவின் முறை' என்பதால் அவளோடு யாரும் உடலுறவு வைத்துக்கொள்ள நிச்சயமாக அனுமதியில்லை. ஒருவேளை மரியாள் இம்ரானின் மனைவியின் கர்ப்பத்திலிருந்து உருவான பெண்குழந்தை எனில் அவள் இம்ரானின் நேரடி மகளாவாள். மேலும் குர்-ஆனிலேயே முரண்பாடக இருக்கும் "தூரத்து சந்ததி" என்ற கருத்துக்கே இங்கு இடமில்லை.
யூசுப் அலி சூரா 3:35க்கான தன்னுடைய விரிவுரை 375ல் இன்னும் கொஞ்சம் அதிகமாக கண்டுபிடிக்க(?) முயற்சி எடுத்து "இரண்டாம் இம்ரானை" அறிமுகப்படுத்துகிறார். எப்படியாவது குர்-ஆனை இந்த முரண்பாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, "பாரம்பரியமாக மரியாளின் தாய் "ஹன்னா (அன்னாள்)" என்று அழைக்கப்பட்டாள் .... அவளுடைய தகப்பன் "இம்ரான்" என அழைக்கப்பட்டார்" என்று கூறுகிறார். ஆனால் மரியாளின் தாயை அன்னாள் என்று அழைக்கும் அதே பாரம்பரியம் அவளுடைய கணவனுக்கு "யோயாக்கிம்" என்ற பெயரைக் கொடுக்கிறது. எதற்காக யூசுப் அலி பாரம்பரியத்தின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு (e.g. in the Proto-Evangelion of James the Lesser) அதே பாரம்பரியத்தின் அடுத்த பகுதியை விட்டுவிடவேண்டும்? யூசுப் அலி அவர்கள் தன் வாதத்தை நிருபிப்பதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. இவர் சொன்ன பாரம்பரியத்தின் ஆதாரத்தை நாம் காணும் வரை, இவர் சொல்வதை நாம் நம்பமுடியாது. எனக்கு தெரிந்தவரை, முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் எதுவும் இல்லை. சில முஸ்லீம் விரிவுரையாளர்கள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பின்னாட்களில் எதையாவது உருவாக்கியிருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட பின் கொள்கை/பாரம்பரியம் நம்பத்தகுந்தது அல்ல.
இறுதியாக ஒரு கேள்வி: பெரிய உறவு முறையில் ஒரு நபர் தொடர்ச்சியாக இன்னாரின் மகள் (மகன்) அல்லது சகோதரி (சகோதரன்) என்று அழைக்கப்பட்ட வேறு சம்பவம் ஏதாவது குர்-ஆனில் உண்டா? (And a last question: Is there any other instance in the Qur'an where a person is consistently called daughter [son] or sister [brother] of people which are only wider relatives?)
எனவே ஒவ்வொருவரும் ஒரு நபருடனான தன்னுடைய உறவு முறையின் அடிப்படையிலேயே பெயரிடப்படுவதற்கு கடடைமப்பட்டிருக்க, அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான தந்தை, தாய் அல்லது சகோதரன், சகோதரியுடனான உறவை குறிப்பிடமால் வேறு இரண்டு தூரத்து உறவினர்களை எப்பொழுதும் தன்னுடைய "தந்தை" மற்றும் "சகோதரனின்" இடத்தில் வைத்து பெயரிடப்படுவது என்பது கண்டிப்பாக நிகழக் கூடியது அல்ல. ஒருவேளை இதுதான் ஒரே தீர்வு என்றுச் சொன்னால், இதனால் முஸ்லீம்களின் விளக்கமானது அடிப்படை விளக்கத்திலிருந்து இன்னும் அதிகமாக நீட்டப்படும் (அதாவது, விளக்கம் என்பது வேறு எதற்காகவும் அல்லாமல் இந்த ஒரு பிரச்சனையை விளக்கவேண்டும், அப்படியிராவிட்டால் அந்த விளக்கம் நம்பத்தகுந்தது அல்ல). இந்த விஷயத்தில் இது ஒரு உண்மைப்போலத் தோன்றும் செயற்கையான இஸ்லாமிய காரணமாகும். உண்மையில் ஆரோன் இம்ரானின் மகன் ஆவார், இது ஒரு நேரடி மற்றும் சரியான உறவாகும், மேலும் மற்றவர்கள் சகோதரிகள் என்றும் புதல்விகள் என்றும் இன்றைய வழக்கத்தின்படி பரவலாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.
தாமஸ் பாட்ரிக்ஸ் ஹக்ஸ் (Thomas Patrick Hughes) என்பவர் தன்னுடைய "Dictionary of Islam", என்ற புத்தகத்தில் பக்கம் 328ல் இந்த விஷயத்தை குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:
"நிச்சயமாக இது விரிவுரையாளர்களின் சில குழப்பத்தின் விளைவு ஆகும். அல்-பைதாவி (Al-Baidawi ), அவள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்ததினால் 'ஆரோனின் புதல்வி' என்று அழைக்கப்பட்டாள் என்று கூறுகிறார். ஆனால் ஹுஸைன் என்பவர், இந்த வசனத்தில் குறிப்பிட்பட்டுள்ள 'ஆரோன் மோசேயின் சகோதரனாகிய ஆரோன் அல்ல' என்று கூறுகிறார்".
எனவே, இஸ்லாமியர்களின் இவ்விதமான முரண்பாடான விளக்கங்கள் "உண்மையிலேயே ஒரு பிரச்சனை உள்ளது" என்பதை காட்டுகிறது. ஒருவரும் திருப்திகரமான தெளிவான தீர்வை கொடுக்கவில்லை என்பது திண்ணம்.
குறிப்பு: மோசேயும், ஆரோனும் "மூஸா இபின் இம்ரான்" என்றும், "ஹாருன் இபின் இம்ரான்" என்று ஹதீஸ்களில் அழைக்கப்படுகிறார்கள். இதே போலத் தான் குர்-ஆன் 66:12ல் "மர்யம் இபினத் இம்ரான்" என்று அழைக்கப்படுகிறார்.
இந்த தலைப்பைப் பற்றிய இதர இஸ்லாமிய ஆதாரங்களோடு கூடிய கட்டுரைகளை இங்கு படிக்கவும்: லஸ்: Is Mary the Sister of Aaron? , ஷாம் ஷமான்:Mary, the Mother of Jesus and Sister of Aaron .
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.