இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, September 20, 2011

குர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?

 

சூரா ஹப்த் மற்றும் க்ஹல்

உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்

Surata al-Hafd and al-Khal'(from Ubayy ibn Ka`b's Qur'an codex)

குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய "உபை இப்னு கஅப் " என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.

இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.

Surat al-Hafd

You (alone) we worship,
and to You (alone) we pray and lie prostrate,
and to You (alone) we proceed and have descendants.
We fear Your torture and hope for Your mercy.
Truly Your torture will overtake the infidels.

உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்



Surat al-Hafd

O Allah, You (alone) we ask for help and forgiveness.
We speak appreciatingly of Your goodness.
Never do we disbelieve You.
We repudiate and disbelieve anyone who follows immorality.

ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம்
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.



மூலம்: 1) THE CODICES OF IBN MAS'UD AND UBAYY IBN KA'B 2) Surata al-Hafd and al-Khal'


மூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:

குர்‍ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்‍ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.

1. Evidence of Change Before 'Uthman

உஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்‍ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்

ஏன் உஸ்மான் மற்ற குர்‍ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார்? இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார்? இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை? உஸ்மான் தொகுத்த குர்‍ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்‍ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது?

2. Evidence of Change After 'Uthman

உஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்‍ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்

3. Hadiths which say the Qur'an is incomplete

குர்‍ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்

குர்‍ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.

Some Muslims are of the conviction spurious verses have been added:

4. Hadiths which refer to lost suras

தொலைந்துப்போன குர்‍ஆன் அத்தியாயங்கள்

தற்போதையை குர்‍ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்‍ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.

5. Variants which exist in present-day manuscripts

நம்மிடமுள்ள குர்‍ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்

குர்‍ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்‍ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

Source: http://www.answering-islam.org/Quran/Text/index.html




--
9/13/2011 11:52:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்


குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்

முன்னுரை: பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆன் பற்றி கூறும் போது, "குர்‍ஆன் ஒரு அற்புதம், அரபி இலக்கிய நூல்களில் குர்‍ஆன் போன்றதொரு புத்தகம் இல்லை" என்பார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, குர்‍ஆன் போன்ற ஒரு புத்தகம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றும், குர்‍ஆனின் ஒவ்வொரு வசனமும், வார்த்தையும் எழுத்தும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளது. குர்‍ஆனில் ஒரு பிழையையும் நாம் காணமுடியாது என்று பலவாறு கூறுவார்கள். 

இவைகளை கேட்கின்ற பாமர இஸ்லாமியர்கள் பெருமிதம் கொள்வார்கள், அதே சமயத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் "அப்படியா" என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உண்மையா? குர்‍ஆன் மாற்றப்படாமல் அப்படியே உள்ளதா? குர்‍ஆனில் பிழைகள் எதுவும் இல்லையா? என்று நாம் கேட்டு, சிறிது நேரம் எடுத்து ஆராயும் போது, பீஜே போன்றவர்கள் சொல்வது உண்மையல்ல, அவைகள் பொய்கள் என்பது புரியும். 

சரி, இந்த தற்போதைய கட்டுரையில், இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனில் உள்ள பிழைகளை எப்படி திருத்துகிறார்கள் அல்லது சரி செய்ய முயற்சி எடுக்கிறார்கள் என்பதை "குர்‍ஆன் 35ம் அதிகாரம், 8ம் வசனத்தைக் கொண்டு" நாம் பார்க்கலாம்.

1) குர்‍ஆனை தமிழாக்கம் செய்யும் போது, மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுக‌ள்: 

குர்‍ஆனை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது, வசனத்தின் பொருள் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக, மொழியாக்கம் செய்பவர்கள் அல்லது தமிழாக்கம் செய்பவர்கள், வசனங்களின் மத்தியில் சில அடைப்புக்குறிகள் "()" இட்டு, அதில் சில சொந்த வார்த்தைகளை எழுதுவார்கள், இதனால் தமிழில் நாம் குர்‍ஆன் வசனத்தை படிக்கும் போது, பொருள் விளங்கும். இப்படி செய்வது தவறு அல்ல. இப்படி அடைப்புகுறிகள் கொடுத்து விளக்குவது வசனங்களின் பொருளை சரியாக உணர உதவும். 

ஆனால், இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால், "அல்லாஹ் ஒரு வாக்கியத்தை சரியாக முடிக்காமல், அதாவது பாதியிலேயே அந்த வாக்கியத்தை அறைகுறையாக விட்டுவிட்டு, அடுத்த வாக்கியத்திற்குச் சென்றுள்ளார்" என்பதாகும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய மொழியாக்கம் செய்பவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைக் காண்போம்.

2) குர்‍ஆன் 35:8ம் வசனம் பீஜே தமிழாக்கத்திலிருந்து: 

இந்த குர்ஆன் வசனத்தை நாம் அனேக (ஒன்பது) தமிழாக்கங்களில் படிக்கப்போகிறோம். அதற்கு முன்பாக பீஜே அவர்கள் எப்படி இந்த வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.

குர்ஆன் 35:8 

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

மேற்கண்ட வசனத்தை நாம் மூன்றாக பிரிக்கலாம்: 

1) யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? 

2) தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். 

3) (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன் 

மேலே நாம் காண்பது போல, முதல் வாக்கியம் ஒரு கேள்வியாக உள்ளது, அதாவது ஒரு மனிதன் தான் செய்யும் தீய செயல்கள் நல்லவைகளாக காண்கிறானோ, அவன் எப்படி ஒரு சொர்க்கவாசியாக இருக்கமுடியும்? என்பது போல கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகம், அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுகிறார், எப்படி வழி கேட்டில் விடுகிறார் என்பதைச் சொல்கிறது. மூன்றாவதாக, முஹம்மதுவிற்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. 

இப்போது, மேற்கண்ட மூன்று விவரங்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் பற்றி நாம் அலசப்போவதில்லை. ஆனால், முதல் பாகத்தைப் பற்றி பார்க்கப்போகிறோம். 

முதல் பாகத்தை பீஜே அவர்கள் கீழ்கண்டவிதமாக மொழியாக்க‌ம் செய்துள்ளார்கள்:

"யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)?"

3) அறைகுறை வாக்கியம்: 

இந்த வசனத்தில் முதல் பாகத்தில் ஒரு தீயவனை பற்றி பேசி, அவனை நல்லவவோடு/நல்லவற்றோடு ஒப்பிட்டு வாக்கியத்தை முடிக்கவேண்டும். ஆனால், அல்லாஹ் முதல் வாக்கியத்தில் பாதியை அடைந்தவுடன், நல்லவனை ஒப்பிட்டு பேசுவதை மறந்துவிட்டார். இதனால், வாக்கியத்தை "அவனா?" என்ற வார்த்தையோடு அறைகுறையாக விட்டுவிட்டு, "தான் நாடியோரை நல்லவழியில் செலுத்துவார்..." என்ற வாக்கியத்தை ஆரம்பித்துவிட்டார். 

இதனால் மொழியாக்கம் செய்பவர்கள் அல்லாஹ் செய்த பிழையை சரி செய்கிறார்கள்.  அல்லாஹ் சொல்ல தவறிய விவரத்தை இவர்கள் மொழியாக்கத்தில் சேர்கிறார்கள். 

இந்த வசனத்தில் பீஜே சேர்த்த "(சொர்க்கவாசி)" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வாசியுங்கள். இந்த வாக்கியம் அறைகுறையாக முழுமையடையாமலிருப்பதை காணலாம்.

குர்ஆன் 35:8 

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா? 

தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். 

(முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

பீஜே அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையில் இருக்கும் பிழையை "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை அடைப்பிற்குள் எழுதி, வாக்கியத்தை முழுமை படுத்தினார். 

பீஜே "(சொர்க்கவாசி)?" என்று சேர்க்கவில்லையானால், அந்த வசனம் "அவனா?...." என்பதோடு நின்றுவிடும். அவ்வாக்கியத்திற்கு பொருள் இருக்காது அல்லது அறைகுறையான வாக்கியமாக இருக்கும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய பீஜே அவர்கள் "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை சேர்த்தார். இதே போல தமிழில் குர்‍ஆனை மொழியாக்கம் செய்த இதர இஸ்லாமிய அறிஞர்கள் இந்த குர்‍ஆனின் பிழையை எப்படி சரி செய்து, அல்லாஹ்விற்கு உதவினார்கள் என்பதை அவர்களின் மொழியாக்கங்களிலிருந்து குர்‍ஆன் 35:8ம் வசனத்தை இப்போது காண்போம்.

4) இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ்: 

இந்த தமிழாக்கத்தை செய்தவர்கள், அல்லாஹ்வின் பிழையை சரி செய்ய "(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்று சேர்த்துள்ளார்கள். (பீஜே ஒரே வார்த்தையை பயன்படுத்தி சரி செய்துள்ளார்கள்). இவர்களும் தங்கள் வார்த்தைகளை அடைப்புகுறிக்குள் எழுதியுள்ளார்கள், ஏனென்றால், அந்த விளக்கம் குர்‍ஆனில் இல்லை.

எனவே எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாக காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாக காண்கிறாரோ அவரா?(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை அறிந்தவன்.

5) குர்ஆன் தர்ஜுமா, திரியெம் பிரிண்டர்ஸ் 

இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)" என்று எழுதி குர்‍ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.

எனவே, எவனொருவனுடைய தீயசெயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை)அவனும் அழகானதாகவும் கண்டானே அவனா? (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை முற்றும் அறிந்தவன்.

6) தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன் 

இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)" என்று எழுதி குர்‍ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.

எனவே எவனொருவன் அவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா?(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்).நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை வழிதவறச்செய்கிறான்.தான் நாடியவர்களை நேரான வழியில் நடத்துகிறான்.ஆகவே (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தோனாக இருக்கின்றான்.

7) திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி) 

இந்த தமிழாக்கத்தை தந்தவர்கள், சிறிது மாற்றி "அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா? " என்று எழுதியுள்ளார்கள். மற்ற நல்ல மனிதனோடு ஒப்பிடாமல், பீஜேயைப் போன்று, எழுதியுள்ளார்கள். இவைகளை நாம் கவனித்தால், அல்லாஹ் பிழையாக செய்து வைத்துச் சென்றதை, ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும், தங்கள் சொந்த கருத்தை சொல்லி, அந்த குர்‍ஆன் பிழையை சரி செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

எந்த மனிதனுக்கு அவனுடைய தீயச்செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக்கொண்டிருகின்றானோ(அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?) திண்ணமாக அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச்செலுத்துகிறான்.மேலும் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்.எனவே (நபியே)இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப் போய்விட வேண்டாம்.

8) திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்: 

இவர்களின் குரானில் இது ஒன்பதாவது வசனம். பிஸ்மில்லாவையும் ஒரு வசனமாக கணக்கிட்டு எண்கள் போடப்பட்டுள்ளது. இது "அஹமதியா" என்ற இஸ்லாமிய பிரிவினரால் தமிழாக்கம் செய்யப்பட்ட குர்‍ஆன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் "(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)" என்று எழுதி அல்லாஹ்வின் பிழையை திருத்த முயற்சி செய்துள்ளார்கள்.

35:9 தனது செயலின் தீமை தனக்கு கவர்ச்சிமிக்கதாக ஆக்கப்பட்டு தானும் அதனை அழகானதென்று காண்பவன் (நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்புபவனை வழிக்கேட்டில் செல்ல விடுகிறான்.தான் விரும்புபவனை நேர்வழியில் நடத்துகின்றான்.எனவே அவர்களுக்காக வருந்தி உமது உயிர் அழிந்துவிட வேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு அறிபவனாவான்.

9) மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது: 

இந்த குர்‍ஆன் சௌதியில் உள்ள மதினாவில் அரசாங்கத்தால் பதிக்கப்படுகிற குர்‍ஆன் தமிழாக்கமாகும். இதில் கூட அடைப்பிற்குள் "(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்ற வார்த்தைகளை சேர்த்து அல்லாஹ்வின் அறியாமையை போக்கியுள்ளார்கள்.

எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கிறாரோ அவரா? (இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான்; தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான்; ஆகவே, (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்; நிச்சயமாக , அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்

10) சங்கைமிகு குர்‍ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: 

இந்த மொழிப்பெயர்ப்பாளர், கொஞ்சம் வார்த்தைகளை தாரளமாகவே பயன்படுத்தியுள்ளார். அதாவது " (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)" என்று எழுதியுள்ளார். அதாவது 'அல்லாஹ் கேள்வி கேட்பது போல' வசனம் உள்ளது, அதில் முதல் பாகத்தில் பாதி கேள்வியோடு அல்லாஹ் விட்டுவிட்டார், ஆனால், இந்த மொழிப்பெயர்ப்பாளர், அல்லாஹ்வின் கேள்வியை பூர்த்தி செய்து, அதற்கான பதிலையும் தானே கொடுத்து காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார்.

எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

11) முஹம்மது ஜான் தமிழாக்கம் 

இந்த தமிழாக்கத்தில் "(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)" என்று எழுதி வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள்.

எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ, அவன் (நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்படவேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.

12) ஒன்பது தமிழ் குர்‍ஆன் மொழியாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்: 

இதுவரை நாம் ஒன்பது தமிழ் குர்‍ஆன்களிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளோம். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை சொல்லியுள்ளார்கள். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை அடைப்புகுறிக்குள் கொடுத்துள்ளார்கள். இவர்கள் எல்லாருக்கும் அரபியில் உள்ள வசனத்தின் பிழை தெரிந்துள்ளது, அதனை சரி செய்ய, பிழையான அறைகுறை வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் முயன்றுள்ளார்கள். 

இந்த ஒன்பது பேர் அடைப்பிற்குள் எவைகளை சேர்த்து பிழையான வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவனை சுருக்கமாக காட்டும்:

எண்தமிழாக்கம்பிழையை திருத்துவதற்கு சேர்க்கப்பட்ட வார்த்தைகள்
1,பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்(சொர்க்கவாசி)?
2.இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ் (இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)
3.குர்ஆன் தர்ஜுமா,திரியெம் பிரிண்டர்ஸ் (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)
4.தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன்(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)
5.திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி)அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?
6. திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)
7. மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)
8.சங்கைமிகு குர்‍ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்(எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)
9.முஹம்மது ஜான் தமிழாக்கம்(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளபடி, குர்ஆன் தமிழாக்கத்தில் இவர்கள் புதிதாக சேர்த்த வார்த்தைகள், ஏற்கனவே இருக்கும் அரபி வார்த்தைகளுக்கு அதிகபடியான விளக்கம் தருவதற்காக அல்ல, அதற்கு மாறாக, பிழையாக உள்ள வாக்கியத்தில் அல்லது அறைகுறையாக விடுபட்ட வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் எடுத்த முயற்சி தான் இந்த குறிப்பிட்ட (35:8) வசனத்தின் இடையில் போடப்பட்ட மேற்கண்ட வார்த்தைகளாகும். ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும் தனக்கு தோன்றியபடி, விளக்கம் கொடுத்துள்ளார்கள். எல்லாருடைய விளக்கமும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை கவனிக்கவும். 

முடிவுரை: 

பீஜே கூறுவது போல குர்‍ஆன் ஒரு பிழையற்ற வேதமல்ல. அல்லாஹ் செய்த பிழையை மனிதன் திருத்தும்படி அல்லாஹ் தம் வேதத்தை விட்டுவிட்டார். இது ஒன்று மட்டுமல்ல இது போல அனேக பிழைகள், இலக்கண பிழைகள் குர்‍ஆனில் (மூல குர்‍ஆனில்) உண்டு. கர்த்தருக்கு சித்தமானால் நாம் அவைகளை பிறகு காண்போம்.

குர்‍ஆன் பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்: 

1) வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல் 

2) ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! 

3) குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் 

4) குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? 

5) பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN) 

6) ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌ 

7) விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்? 

8) இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம் 

9) அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? 

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு 

10) பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1) 

11) பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2) 

12) பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3) 

13) பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)




--
9/12/2011 11:06:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

 

Fwd: ஜாவித் அவர்களுக்கு, 9/11 நாளின் 10ம் ஆண்டு வாழ்த்துக்கள் - நக்கலாக எழுதும் நல்லவர்கள்

 


ஜாவித் அவர்களுக்கு, 9/11 நாளின் 10ம் ஆண்டு வாழ்த்துக்கள்

என்னுடைய "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1 (http://isakoran.blogspot.com/2011/08/1.html)" என்ற கட்டுரைக்கு ஜாவித் அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அவரின் முதல் பின்னூட்டத்திற்கு இந்த பதில் தரப்படுகிறது.


//Jawid Said:
உமர் அண்ணா, அன்பை போதிக்கிறோம் என்று பொய் சொல்லிக்கிட்டு தொடர்ந்து தீவிரவாதத்தை/வன்முறையை துண்டுறது உங்க வழக்கமா போச்சு. //



Umar said:
அன்பான சகோதரருக்கு,

வன்முறையை தூண்டுவது நான் அல்ல, 
வன்முறையை தூண்டுவது உங்கள் குர்‍ஆன்.
வன்முறையை தூண்டியது உங்கள் நபியாகிய முஹம்மது
வன்முறையை கடந்த 14 நூற்றாண்டுகளாக நிறைவேற்றிக்கொண்டு இருப்பதும் உங்கள் இஸ்லாமிய மார்க்கம் தான்.

இஸ்லாமின் உண்மை முகத்தை மக்களின் முன்வைப்பது வன்முறையை தூண்டுவது ஆகாது.. மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுப்பதாகும். உங்கள் குர்‍ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினால் அது வன்முறையை தூண்டுவதாக உங்களுக்கு காணப்படுமானால் அதற்கு பொறுப்பு உங்கள் இறைவன் அல்லாஹ் தான் அவரைத் தான் நீங்கள் கேட்கவேண்டும். அல்லது நாங்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு நேர்மையான முறையில் பதில் கொடுக்க வக்கு இருக்கவேண்டும், அதே நேரத்தில் எங்கள் வாதங்களையும் வாசர்களுக்கு முன்பாக வைக்க வேண்டும். இதையும் செய்யாமல் அதையும் செய்யாமல் இப்படி என் மீது குற்றம் சுமத்தினால் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. 

நீங்கள் புனிதமாக கருதும் ரமளான் (ஆகஸ்ட்) மாதத்தில் மட்டும் 181 தீவிரவாத/வன்முறை தாக்குதல்களில்  இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். என்னே இஸ்லாமிய பண்பாடு... என்னே பக்தி... (Source :  http://www.thereligionofpeace.com/ )

சரி, ஒட்டு மொத்த தமிழ் முஸ்லீம்களுக்கு ஒரு முக்கிய வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்... "உங்கள் உயிரினும் மேலான உங்கள் நபியின் வழியில் உங்கள் சகோதரர்கள் தங்கள் தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவில் நடத்தி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டது".. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.


//Jawid said:
உங்க கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் தந்தா, அதை வெளியிடுங்க, மறுப்பு தாங்க, இல்லை பைபிள் கேள்விக்கு வாய் மூடி இருக்குற மாறி சும்மா இருங்க, அதுக்கு பதிலா முகமது நபி பத்தி கிண்டல் செய்து எழுத்த போவதாக மிரடுரீங்க...
….
….
அப்படி mist அண்ணா என்னதான் சொன்னாங்க? கண்டிப்பா நீங்க இதுவரை செஞ்சதை வீடா கேவலமான எதையும் செஞ்சு இருக்க மாடங்க என்று நம்புறேன்...//


Umar said: 

மேற்கண்ட உங்கள் மிஸ்ட் சகோதரர் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு இப்போது பதிலைக் காண்போம்.

முதலாவதாக, பின்னூட்டத்தை அனுமதிப்பது என் விருப்பம் தான். ஆனால், இங்கு முக்கியமான கேள்வி என்னவென்றால், "இஸ்லாமியர்களாகிய நீங்கள் கட்டுரையின் மையக்கருத்துக்கு ஏற்றாற்போல பின்னூட்டம் அளிக்கிறீர்களா?" என்பதாகும்.  இந்த கேள்விக்கு பதில் "இல்லை... சம்மந்தமே இல்லாமல் தான் பெரும்பான்மையான பின்னூட்டங்கள் வருகின்றன".  இப்படி சம்மந்தமில்லாமல் பதில் அளித்தால், உங்களில் அறிவுரைப்படி நாங்கள் அந்த சாக்கடை பின்னூட்டத்தை அனுமதிக்காமல் இருந்தால், "என்னவோ... இஸ்லாமியர்கள் அறிவு ஜீவிகளாக இருப்பது மாதிரியும்... அறிவாளிகள் மாதிரியும்... அவர்களின் பின்னூட்டத்தை சதி செய்து மறைந்த்துவிட்ட மாதிரியும் ...ஒரு பெரிய பந்தாவை காட்டி... எழுதுவீர்கள் நீங்கள்". எனவே தான் நான் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன்.  அதற்கு சரியான பதிலடி கொடுக்கிறேன், இஸ்லாமியர்களின் மதிகேட்டை அவர்கள் உணரும் படி செய்கிறேன், வாலை ஒட்ட வெட்டுகிறேன்". இப்படி வாலை வெட்டிய அனேக உதாரணங்களில் ஒன்று தான் மிஸ்ட் என்பவரின் வாலை வெட்டியதாகும்.

அதாவது நான் "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் -  பாகம் 1 (http://isakoran.blogspot.com/2011/08/1.html)" என்ற கட்டுரையில் சொல்லிய மையக்கருத்து என்னவென்றால், "குர்‍ஆனை மட்டும் படிக்கும் நபர்களுக்கு இஸ்லாம் பற்றிய முழு அறிவு வருவதில்லை, இஸ்லாம் பற்றி அறிய குர்‍ஆன் மட்டும் போதாது, அதோடு கூட ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, மற்றும் குர்‍ஆன் விரிவுரைகளை படித்தால் மட்டுமே நாம் இஸ்லாம் பற்றி அறியலாம்" என்று நான் எழுதினேன்.

இதற்கு பின்னூட்டமிடும் மிஸ்ட் என்பவர் என்ன செய்து இருக்கவேண்டும்? "என் கட்டுரையில் கருத்திற்கு மறுப்பு எழுதனும், அல்லது இஸ்லாம் பற்றி அறிய குர்‍ஆன் மட்டும் போதும் என்ற கருத்தை அவர் நிலை நாட்ட விரும்பினால் அதற்கேற்ற பதிலை தரவேண்டும்". இவைகளை சொல்வதை விட்டுவிட்டு, "போதகரோடு உரையாடல் தொடர்கிறது" என்று எழுதி ஒரு சில கேள்விகளை கேட்டு அது நக்கலாக பதில் எழுதியுள்ளார்.


உங்களுக்குத் தான் வேலை இல்லை... எனக்குமா வேலை இல்லை... கட்டுரைக்கு சம்மந்தமில்லாத பின்னூட்டத்தை நான் அனுமதிக்கவேண்டும், பிறகு அதற்கு என் நேரத்தை செலவிட்டு.. நான் பதில் கொடுக்கவேண்டும்.. இது தேவையா?  இப்படிப்பட்டவர்களின் முட்டாள் தனத்திற்கு சரியான சவுக்கு அடி என்ன? நீ நக்கலாக எழுத உனக்கு அனுமதி உண்டு. ஆனால், உன் வார்த்தைகளுக்கு உன்னால் பொறுப்பை  வகிக்கமுடியுமா? என்று கேட்டேன்... இதோ இன்றுவரை பதில் இல்லை.

நீங்கள் எழுதும் வரிகளுக்கு பின்னூட்டங்களுக்கு பொறுப்பு வகிக்க முடியுமா என்று கேட்டேன்.. இன்று வரை மிஸ்ட் என்பவரிடமிருந்து "ஆம் நான் பொறுப்பு வகிக்கிறேன், நீங்கள் உங்கள் கட்டுரையை பதிக்கலாம், என் பின்னூட்டத்தையும் பதிக்கலாம்" என்ற பதில் இதுவரை வரவில்லை. அதற்கு பதிலாக, என் பின்னூட்டத்தை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் விருப்பம் தானே என்றுச் சொல்லி பின்னூட்டம் அளித்தார். 

ஆக, இஸ்லாமியர்களே, என் பொன்னான நேரத்தை உங்களுக்காக நான் செலவிட வேண்டுமென்றால், உங்கள் வரிகளுக்கு நீங்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்... அப்படி பொறுப்பு வகிக்காதவர்கள் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் வாயை.

ஆகவே, ஜாவித் அவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது.. "ஜாக்கிரதையாக எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்". ஏனென்றால்.. கடந்த நான்கு ஆண்டுகளாக எத்தனை மதம் பிடித்த இஸ்லாமிய யாணைகளை தமிழ் கிறிஸ்தவர்கள் அடக்கியிருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.  மற்றவர்களை நக்கலாகவும் எழுத எந்த ஒரு இஸ்லாமியருக்கும் உரிமையோ.. அல்லது தகுதியோ இல்லை. மீறி எழுதினால் வால் வெட்டப்படும் என்பது மட்டும் திண்ணம்.

//Jawid said:
என்னமோ எல்லா பின்னோடதையும் வெளியிடுற உத்தமன் மாறி பேசுறிங்க, நீங்க வெளியிடாம விடத்தாலா உங்களுக்கு எதிர ஒரு ப்ளாக் http://isaakoran.blogspot.com/ பதில் சொல்லிட்டு இருக்கு மறந்துடிங்களா? நீங்க ஒழுங்கா வெளியிட்டு இருந்தா அது ஏன் உருவாகி இருக்க பொது?//


Umar said:

நான் தான் மேலே சொன்னேனே... சம்மந்தமில்லாமல் பின்னூட்டம் இடுவது உங்கள் வழக்கம். அதனையும் அனுமதித்து உங்கள் கொழுப்பை அடக்குவது தான் என் விருப்பம். ஆகையால் தான் நான் வேண்டுமென்றே உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன், சரியான சவுக்கடி இஸ்லாமுக்கு தருகிறேன். உதாரணத்திற்கு பாருங்கள்.. மிஸ்ட் போன்ற ஜாவித் போன்ற நபர்களின் பின்னூட்டத்தை நான் அனுமதிக்கவில்லையானால்.. எப்படி இப்படிப்பட்ட பதில்களை நான் எழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் தான் நான் அனுமதிக்கிறேன்.  

அடுத்ததாக, "எல்லா பின்னூட்டத்தையும் அனுமதிப்பதில்லை அதற்காகத் தான் நாங்கள் வேறு தளைத்தை ஆரம்பித்தோம்" என்ற உங்களின் வாதம் அடிப்படியற்றது. 

எப்படி இந்த வாதம் அடிப்படையற்றது என்பதை சொல்கிறேன்.. அதாவது இஸ்லாமியர்களுக்கு ஒன்றுமே எழுதத் தெரியாது, முக்கியமான பின்னூட்டமிடுபவர்களுக்கு.  இஸ்லாமியர்களின் பின்னூட்ட யுக்தியை கீழே தருகிறேன் பாருங்கள்:

1) இவர்கள் நான்கு வரிகளை கிறிஸ்தவத்திற்கு எதிராக‌ எழுதி வைத்துக்கொள்வார்கள், சில நேரங்களில் வேறு இஸ்லாமிய தளங்களிலிருந்து காபி அடித்து வைத்துக் கொள்வார்கள்.

2) அந்த நான்கு வரிகளை எல்லா கட்டுரைகளுக்கு பின்னூட்டமாக தருவார்கள்.

3) நாம் எந்த கட்டுரைக்கு என்ன பின்னூட்டம் தருகிறோம் என்ற பொது அறிவும், ஞானமும் இல்லாமல் முட்டாள் தனமாக பின்னூட்டம் தருவார்கள்.

4) அந்த பின்னூட்டம் கொடுத்த சில நிமிடங்களிலேயே மறுபடியும் சென்று பார்ப்பார்கள், உடனே அந்த பின்னூட்டம் வந்துள்ளதா இல்லையா என்று பார்ப்பார்கள்.

5) அவர்கள் இட்ட பின்னூட்டம் வரவில்லையென்றால் உடனே அதே பின்னூட்டத்தை மறுபடியும் தருவார்கள். 

6) பின்பு, சில நிமிடங்களில் சென்று பார்த்து பின்னூட்டம் வரவில்லையானால், உடனே மறுபடியும் அதே பின்னூட்டத்தை இடுவார்கள்... இந்த கதை தொடரும்... தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும். இப்படி அனேக கட்டுரைகளில் பின்னூட்டமிடுவார்கள்.

7) இவர்களின் நம்பிக்கையின்படி, எந்த இஸ்லாமியர் பின்னூட்டம் இடுகிறார் என்று "கிறிஸ்தவர்கள்"  தங்கள் மெயிலை 24 மணி நேரமும் செக் செய்துக்கொண்டே இருக்கவேண்டும். இவர்களின் பின்னூட்டம் வந்த உடன் அதனை பதித்துவிடவேண்டும், அப்படி பதிக்கவில்லையானால்.. "எங்களின் அறிவு பூர்வமான பின்னூட்டத்தை கிறிஸ்தவர்கள் பதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.".  

8) இன்னொரு வகையான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் இவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒரு கட்டுரைக்கு பின்னூட்டம் என்ற பெயரில், விக்கிபீடியா போன்ற தளங்களில் உள்ள ஆங்கில கட்டுரையிலிருந்து காபி பேஸ்ட் செய்து பின்னூட்டமிடுவார்கள். பத்துக்கும் அதிகமான பின்னூட்டத்தை அடுத்தடுத்ததாக ஒரே நேரத்தில் பதிப்பார்கள். அதற்கு பதில் வேண்டும் என்பார்கள். ஆனால், நாங்கள் ஆங்கில கட்டுரைகளின் தொடுப்பை மட்டும் ஒரு வரியில் கொடுத்தால் அதை படித்து தங்கள் அறிவை பயன்படுத்தி பதில் கொடுக்க தயங்குவார்கள். இவைகள் எல்லாம் இஸ்லாமிய திருவிளையாடல்கள்.

இஸ்லாமியர்களின் இந்த கூத்தை நான் பார்க்கும் போது சில நேரங்களில்  சிறிப்பு வரும் சில நேரங்களில் நன்றாக இவர்களின் கொழுப்பை அடக்கவேண்டும் என்ற எண்ணம் வரும்.

நம் தமிழ் இஸ்லாமியர்களுக்கு "இஸ்லாம் என்றால் என்ன என்று" புரிய வேண்டும் அவர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் முடிந்த அளவிற்கு தமிழில் கட்டுரைகளை எழுதுகிறேன், மொழியாக்கம் செய்கிறேன். இவர்களைப்போல செய்யவேண்டுமானால், எனக்கு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் உண்டு. இவர்களின் எல்லா கேள்விகளுக்கு பதில்கள் ஆங்கிலத்தில் உண்டு அவைகளை அப்படியே காபி பேஸ்ட் என்னால் செய்யமுடியும். ஆனால் தாமதமானாலும் சரி, முடிந்த அளவிற்கு தமிழிலேயே பதில் தரவேண்டும் என்பதற்காக தாமதப்படுத்துகிறேன்.  ஆங்கிலம் என்னால் படித்து தெரிந்துக்கொள்ளமுடியும் என்றுச் சொல்லும் இஸாமியர் இருந்தால் அவர் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை படிக்கட்டும் அவருக்கு தன் மார்க்கம் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால்.

நான் 2007ம் ஆண்டிலிருந்து இஸ்லாமியர்களின் எழுத்துக்கள் பற்றி கீழ்கண்ட விதமாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்: 

1) இஸ்லாமியர்கள் அதிகமாக பேசவும் எழுதவும் அனுமதியுங்கள். முக்கியமாக மற்றவர்களின் மார்க்கங்கள் பற்றி பேச அனுமதியுங்கள்.
2) அப்போது தான் அவர்களின் வாதங்களில்/நம்பிக்கைகளில் உள்ள குறைபாடுகள் வெளியே தெரியவரும்.
3) நமக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) மறுப்பு எழுத வாய்ப்பு கிடைக்கும், நாமும் சரியாக அவர்களின் முட்டாள் தனத்தை உலகம் அறியச் செய்யலாம்.

அதற்காகத் தான் நான் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன். அதற்கு பதிலைத் தருகிறேன். இதனை அறிந்து தான் அனேக பெருச்சாலிகள் ஒளிந்துக்கொண்டன. சுண்டெலிகள் இப்போது சத்தம் போடுகின்றன, தொடரட்டும்... நாங்களும் சும்மா இல்லை. தாமதமானாலும் சரி, நிதானமாக இஸ்லாமிய கொடூர முகத்தை உலகிற்கு காட்டாமல் நாங்கள் ஓயமாட்டோம்.


//Jawid said:
என்னமோ வெறும் உண்மையை மட்டும் தான் இதுவரை எழுதுன மாறி சொல்றிங்க, நீங்க எழுதுன கட்டுரைகள்ளா நீங்க சொல்ற கருத்தை விவரிக்கிற தெளிவான ஆதாரம் எதாவது இதுவரை நீங்க வச்சு இருக்கீங்களா? கொஞ்சம் பொய் பாருங்க. பைபிள் கேள்விக்காவது பதில் சொல்லி இருக்கீங்களா? தயவு செஞ்சு பதில் சொல்லுங்க... 

தெளிவான ஆதாரத்தை வச்சு எழுதுங்க, நீங்க சொல்ற கருத்தை அந்த ஆதாரம் சொல்ல வேண்டும், உங்க மனசுல இருக்குற விரசத்தை எல்லாம் நாங்க நம்ப வேண்டும்னு சொல்ல கூடாது... //



Umar said:

அருமையான ஜாவித் அவர்களே, உங்களுக்காகத் தான் என் தளத்தில் ஒரு பட்டியலை தயார் படுத்தி பதித்துள்ளேன். அதாவது எங்கள் கட்டுரையின் தொடுப்பை கொடுக்க வக்கில்லாத பொட்டைகள் நான்கு கட்டுரைகளை அறைகுறையாக எழுதிவிட்டதால் இவ்விதம் பெருமிதம் கொள்கிறீர்களே. உங்கள் கட்டுரைகளின் தொடுப்பை தைரியமாக எங்கள் கட்டுரைகளில் பதிக்கும் எங்களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கவேண்டும். 

எங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தைப் பாருங்கள், ஆங்கில தளத்தைப் பாருங்கள். என்னுடைய இந்த தனிப்பட்ட ஈஸா குர்‍ஆன் பிளாக்கரை பாருங்கள். எத்தனை கட்டுரைகளுக்கு நீங்கள் பதில் அளித்துள்ளீர்கள்? குர்‍ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாமிய விரிவுரையாளர்களின் விளக்கங்கள் என்று நூற்றுக்கணக்கான ஆதார வசனங்களை, ஹதீஸ்களை மேற்கோள் காட்டி எங்கள் கட்டுரைகளை நாங்கள் எழுதுகிறோம். நாங்கள் இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்கள் போல ஞானத்திலும் அறிவிலும் கோமாளிகள் அல்ல.

உங்கள் கட்டுரைகளின் மூல தொடுப்புக்களை தைரியமாக நாங்கள் தருகிறோம். இரண்டு வாதங்களையும் வாசர்களே படித்து உண்மையை தெரிந்துக்கொள்ளுங்கள் என்று மார்தட்டுகிறோம். எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்க பயப்படும் நீங்களோ பெட்டைகள், தொடை நடுங்கிகள், பாவாடை கட்டியவர்கள், நீங்களா ஆதாரம் பற்றி பேசுவது?  


//Jawid:
சும்மா எங்கயாவது எடுத்துட்டு இதுதான் ஆதாரம்ன்னு சொல்ல கூடாது, இஸ்லாம் மார்கமாக ஏத்து கொல்ற நூல் ஆதாரம் தாங்க, இல்லை அதே மாறி பைபிள் இல்லாமா வேற ஆதாரத்தை நீங்க ஏத்து கொங்க. பதில் தாங்க, ஈஸாகொரன் கேக்குற மாறி கையெழுத்து போட்டு ஒப்பந்தத்தை வெளியிடுங்க, அப்பறம் கிண்டல் நக்கல் எல்லாம் செய்யலாம். //

Umar said:
நாங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அவைகளை ஏற்பீர்களோ அல்லது எட்டி உதைப்பீர்களோ உங்களின் விருப்பம்.

1) குர்‍ஆன் : எங்கள் கட்டுரைகளில் குர்‍ஆனை ஆதாரமாக தருகிறோம். சில வேளைகளில் பல மொழியாக்கங்களை தருகிறோம். இன்னும் சில கட்டுரைகளில் அரபி மூல வசனங்களை ஆதாரமாக காட்டுகிறோம். இதனை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

2) ஹதீஸ்கள்: புகாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ்களை மேற்கோள் காட்டுகிறோம். இவைகளை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

3) முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு: இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களின் விவரங்களை நாங்கள் தருகிறோம். முஹம்மதுவின் இருண்ட வாழ்க்கைப் பற்றி சொல்லும் வரிகளை கண்டவுடன், உங்கள் இஸ்லாமிய அறிஞர்களையே திட்டித் தீர்க்கவும் தயங்காத உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள். இதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும். 

4) கடைசியாக, இஸ்லாமிய விரிவுரைகள்: இபின் கதீர் முதற்கொண்டு இக்கால இஸ்லாமிய அறிஞர்கள் வரை என்ன விரிவுரை கொடுத்துள்ளார்கள் என்பதை நாங்கள் படித்து  உங்களுக்கு தெரிவிக்கிறோம். 

ஆக, இவைகளை நாங்கள் மேற்கோள் காட்டுகிறோம், இவைகளை ஏற்கவில்லையானால் நீங்கள் ஒரு இஸ்லாமியரா அல்லது காபிரா? என்பதை சராசரி முஸ்லிம்கள் முடிவு எடுக்கட்டும்.

அடுத்ததாக, கையெழுத்து ஒப்பந்தம் பற்றி கேட்டீர்கள். நான் ஏற்கனவே சொல்லியபடி.. ஒப்பந்தமும் இல்லை ஒன்றுமில்லை. இஸ்லாமின் முகத்திரையை கிழிக்க வாரம் சில மணித்துளிகள் எனக்குப் போதும். எழுத்திலேயே நேர்மையை காக்காத உங்களை நம்பி எப்படி நேரடியாக வரமுடியும். நீங்கள் எத்தனை நாட்கள் தான் கையெழுத்து ஒப்பந்தம் கையெழுத்து ஒப்பந்தம் என்று கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். இப்படி கேட்பதை விட்டுவிட்டு, தமிழில் ஒரு குர்‍ஆனை வாங்கிக்கொள்ளுங்கள், அதனை படியுங்கள். ஹதீஸ்களை ஒன்றுவிடாமல் படியுங்கள், ஆராயுங்கள், குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். முஹம்மதுவின் வாழ்க்கையை மூல நூல்களிலிருந்து படியுங்கள், விரிவுரைகளை படியுங்கள். இவைகளை எல்லாம் படித்துவிட்டு, எங்கள் ஒவ்வொரு கட்டுரையையும் படித்து, நாங்கள் சொல்லிய ஆதாரங்கள் சரியானவைகளா இல்லையா என்பதை ஆராய்ந்து, நேரமெடுத்து மறுப்பு எழுதி இணையத்திலோ, புத்தகமாகவோ வெளியிட்டால், உங்கள் இஸ்லாமுக்கு ஒரு சதவிகிதமாவது உங்களால் உபயோகம் இருக்கும். அதை விட்டுவிட்டு, வாய்க்கு வந்த படி எனக்கு பின்னூட்டமிட்டால், இஸ்லாமின் கதி அந்தோ கதி தான்.



//Jawid:
பைபிள் ஆதாரத்தை தரேன் ஆதையும் சேர்த்து கிண்டல் நக்கல் செய்ய தயாரா? 

……
-ஜாவித்//


Umar said:
நான் தான் சொல்கிறேனே... எழுதுங்க.. பைபிள் பற்றி கிண்டலாகவும், நக்கலாகவும் எழுதுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு பயமோ நடுக்கமோ இல்லை.

ஆனால், நாங்களும் பதில் எழுதுவோமில்லே... மறுப்பு எழுதுவோமில்லே... நக்கலடிப்போமில்லே... அப்போது உங்களுக்கு சுடுமே! அதை தாங்கிக்கொள்ள உங்களுக்கு சக்தி உண்டா?   உண்டு என்ற நம்பிக்கை இருந்தால் எழுதுங்கள்.. தாராளமாக எழுதுங்கள்.

அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை....





--
9/11/2011 11:03:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்