இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, December 24, 2007

islam-இஸ்லாம்;உமரின் சிறு கதை: பக்ரீத் பண்டிகை 2007



"பாத்திமா, இங்கே வந்து பாரு யார் வந்திருக்காங்கன்னு" அம்மா மகளை கூப்பிட்டாள்.

பாத்திமா சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து பார்க்கிறாள்.

"வாங்க வாங்க அக்கா, மாமா. சலாம் வாலைக்கும்" பாத்திமா சந்தோஷத்தில் தன் அக்காவையும், மாமாவையும் வரவேற்றாள்.

"வாலைக்கும் சலாம்" என்று அக்காவும், மாமாவும் திரும்பவும் சொன்னார்கள்.

பாத்திமாவுடைய அக்கா மும்தாஜுக்கு கல்யாணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது. தன் கணவரோடு இஸ்லாமாபாதில் வசிக்கிறாள். தனக்கு கல்யாணமாகி தன் கணவரோடு தன் பெற்றோர் வீட்டில், பக்ரீத் பண்டிகை கொண்டாட, பக்ரீத் பெருநாளின் முந்தைய நாள் வந்திருக்கிறாள்.

பாத்திமா இந்த ஆண்டு தான் மருத்துவ படிப்பில் சேர்ந்து முதலாமாண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள். அம்மா கதிஜா, தன் பெரிய மகளையும், மருமகனையும் வரவேற்று, மகள் வந்த சந்தோஷத்தில் பூரித்துபோனார்கள்.

"அப்பாவும், தம்பி உஸ்மானும் எங்கே, ஆளைக்காணோம்" என்றாள் அக்கா.

"அவங்க இரண்டு பேரும், பக்ரீத் பெருநாளுக்கு தேவையான சாமான்கள் வாங்க போயிருக்கிறாங்க, இப்போ வந்திடுவாங்க" என்றாள் பாத்திமா.

அதற்குள் அம்மா எல்லாருக்கும் காபி தயார் செய்துக்கொண்டு வந்தார்கள். எல்லாரும் குடித்தார்கள்.

"அக்கா, நீ இல்லாமே ஒரு மாசமா, அம்மா வேதனைப்பட்டு கரைந்தே போயிட்டாங்க, தெரியுமா? ஒவ்வொரு நாளும், தூக்கரத்துக்கு முன்னாடி, மும்தாஜ் இருந்தால், இது செய்து கொடுப்பாள், அது செய்து கொடுப்பாள் எனக்கு நிம்மதியா இருந்தது என்று அம்மா ஓயாமல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க" என்று மூச்சு விடாமல் சொன்னாள் பாத்திமா.

அம்மா தன் மூத்த மகளின் முகத்தை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள், அவள் முகத்தில் காணப்படும் சந்தோஷத்தையும், கண்களில் தெரியும் ஒளியையும் பார்க்க அம்மா தவறவில்லை.

"இப்போ தான் நீ இருக்கேயில்லே, உன் அம்மாவுக்கு உதவி செய்யரது தானே" என்று மறுமொழி கொடுத்தார் அக்காளில் கணவர் செல்லமாக.

"இவளா! எனக்கு அதிக தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி, அதுவே எனக்கு போதும்" என்று சிரித்தார் அம்மா.

"மாமா, இதை விடுங்க, இஸ்லாமாபத்திலிருந்து எனக்கு என்ன கொண்டுவந்தீங்க, முதல்ல அதைச்சொல்லுங்க"

"பாத்திமா உன் மொபைள் கொண்டுவா?" என்றாள் அக்கா.

"ஏன், என் ஓட்ட மொபைளை நீ எடுத்துக்கப்போறியா" என்றாள் பாத்திமா.

"உன் மாமா உனக்கு கெமரா உள்ள கலர் மொபைளை பக்ரீத் பண்டிகைக்கு பரிசாக கொண்டுவந்திருக்கிறார் தெரியுமா" என்றாள் அக்கா.

"என்னது கலர் மொபைளா அதுவும் கெமராவா, வாவ் எங்கே சீக்கிரமா காட்டுங்களேன். புது மொபைள் வாங்கித்தரச்சொல்லி எத்தனைமுறையோ சொல்லிட்டேன், அப்பா தான் இப்போ வேண்டாம்மா அப்படின்னு சொன்னாரு" என்றாள் பாத்திமா.

அக்காள் மும்தாஜ், கருப்பு கலரில் வாங்கிக்கொண்டு வந்த மொபைளை எடுத்து காட்டினாள், "பல நாள் பட்டினியாக இருந்தவன் முதல்முறையில் நல்ல சாப்பாடு பார்த்தால் எப்படி பார்ப்பானோ, அது போல பாத்திமா அதை வாங்கி பார்க்கிறாள்.

" Thank You அக்கா, Thank You மாமா என்றுச் சொல்லி, மொபைளை வாங்கிக்கொண்டு தன் பெட் ரூமுக்குள் ஓடினாள்".


"ஏம்மா இப்படி பணத்தை செலவு செய்யரீங்க, அவ அண்ணே, சௌதிக்கு சென்று முதல் சம்பளத்தில் கலர் மொபைள் வாங்கி தருவதாக சொல்லியிருந்தான்" என்றுச் சொன்னார்கள் அம்மா.

"அதுல என்னம்மா இருக்கு, சின்ன பொண்ணு, இதுல வேற மருத்துவ படிப்பு படிக்கிறாள், அவளுடைய பழைய மொபைள் அடிக்கடி பேட்டரி வீக் ஆகுது என்று ரொம்ப கஷ்டப்பட்டா" என்று சமாளித்தாள் அக்கா.

அக்காவும் மாமாவும் பயணகலைப்பு நீங்க சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். தம்பி உஸ்மானும், அப்பாவும் சாமானோடு வருகிறார்கள்.

"அக்கா, அப்பாவும் அண்ணாவும் வந்திருக்காங்க" என்று கூப்பிட்டாள் பாத்திமா.

அக்காவும், மாமாவும் ஹாலுக்கு வருகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் "சலாம்" சொல்லிக்கொண்டார்கள்.

"எப்படி இருக்கேம்மா நல்லாயிருக்கியா?"மகளை விசாரிக்கிறார் தந்தை.

"ரொம்ப நல்லா இருக்கே அப்பா" மகள் பேசினாள்.

"எப்படி இருக்கீங்க, உங்க வியாபாரம் எப்படி நடக்குது" என்று மருமகனை விசாரித்தார் மாமனார்.

"நல்லாயிருக்கேன் மாமா, வியாபாரமும் நல்லா நடக்குது, எங்க வீட்டிலே எல்லாரும் உங்களுக்கு சலாம் சொன்னார்கள்" என்றார் மருமகன்.

"வாலைக்கும் சலாம்" என்றார் மாமனார்.

"அப்பா என்னப்பா ரொம்ப எளச்சிட்டீங்க, சரியா சாப்பிடுவதில்லையா?" என்று கேட்டாள் மும்தாஜ்.

"அப்படி ஒன்னுமில்லேம்மா, நான் நல்லாத்தான் இருக்கேன், இதோ, உஸ்மானுக்கு சௌதியிலே நல்ல வேலை கிடைச்சிருக்கு இல்லையா, அதுக்கு தேவையான பணத்தையும், மற்ற காரியங்களையும் பார்ப்பதற்கு ரொம்ப அதிகமாக அலையவேண்டி இருந்தது, கொங்சம் ரெஸ்டு எடுத்துக்கிட்டா எல்லாமே சரியாகிவிடும்" என்றார் அப்பா.

"ஆமா, என்ன உஸ்மான், நீ போனவாரமே போகனும், ரொம்ப அர்ஜண்டு அப்படியுன்னு போன்லெ சொன்னெ இல்லியா, பின்னே ஏன் பிளானை மாத்திட்டே" என்று அக்கா கேட்டாள்.

"இல்லேக்கா, நீயும், மாமாவும் இந்த பக்ரீத்துக்கு இங்கு வர்ரதா அப்பா சொன்னாங்க, எனவே, நான் தான் ஏஜண்டிடம் பேசி, ஒரு வாரம் கழித்து, பக்ரீத்தை உங்களோடு கொண்டாடிவிட்டு போகலாம், பிறகு 2, 3 வருஷம் ஆகுமில்லையா உங்களை எல்லாம் மறுபடியும் பார்ப்பதற்கு" அப்படியின்னு சொல்லி, நான் தான் லேட் செய்தேன்.

"அப்படியா, ரொம்ப சந்தோஷம்" என்றாள் மும்தாஜ்.

மதியம் மிகவும் சந்தோஷமாக எல்லாரும் சாப்பிட்டார்கள். மாமா தூங்க சென்றுவிட்டார். உஸ்மான், அக்கா மும்தாஜும், அப்பா அம்மாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாத்திமா இன்னும் தன் புது மொபைளை ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருப்பதை நிறுத்தவில்லை.

"பார் உஸ்மான், நீ சௌதிக்கு போய் நல்லா வேலை செய்யனும், நல்லா சாப்பிடனும், அப்பாவிற்கும் உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் ஆகிறது, பாத்திமா வேறு நான் மருத்துவபடிப்பை படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால், அப்பா இந்த வருஷம் ஃபீஸை கஷ்டப்பட்டு கட்டியிருக்கிறார், நீ தான் குடும்ப பாரத்தை சுமக்கனும், நானும் மாமாவும் தினமும் உனக்காக துவா செய்வோம்" என்றாள் மும்தாஜ்.

"அல்லா எனக்கு ரொம்ப நல்ல வேலையா கொடுத்திருக்கிறார், அக்கா, நீ ஒன்றும் கவலைப்படாதேக்கா, நான் போய் சம்பாதித்து ஒவ்வொரு மாசமும் தவறாமல் பணம் அனுப்புவேன், ஓவர் டைம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதுவும் செய்து, நிறைய சம்பாதிப்பேன்." என்றான் உஸ்மான்.

"டேய், ஓவர் டைம் என்றுச் சொல்லி, ஒடம்ப கெடுத்துக்காதே, எப்படி வேலை செய்யரிய்யோ அதே போல நல்லா ஓய்வு எடுத்துக்கனும்" என்றாள் அம்மா அன்பாக.

"இல்லேம்மா நான் ரெஸ்டு எடுத்துக்குவேன், நல்லா சாப்பிடுவேன்மா, நீங்க கவலைப்படாதீங்க"

"என்னப்பா, இந்த வருஷம் மூனு ஆடு குர்பானி கொடுக்கிறீங்களா? வீட்டு வாசல்ல மூனு ஆடு இருக்கு?" என்றாள் மும்தாஜ்.

"ஆமாம்மா, பாரு, உனக்கு நல்ல இடத்திலே கல்யாணம் நடந்தது, தங்கம் போல மாப்பிள்ளை கிடைச்சாரு, பாத்திமாவுக்கு மருத்துவ படிப்புக்கு அல்லா உதவினாறு, இன்னும் உஸ்மான் சௌதி போகிறான் என்றுச் சொல்லி, மூன்று ஆடுகள் குர்‍பானி கொடுப்பதாக நானும், அம்மாவும் முடிவு செய்தோம்மா" என்றார் அப்பா.

"நல்லதுப்பா" என்றாள் மும்தாஜ்.

மறுநாள் காலை பக்ரீத் பண்டிகை, எல்லாரும் எழுந்து குளித்துவிட்டு,
புது துணிகளை அணிந்துக்கொண்டு, நமாஜுக்கு ஈத்கா போக தயாராகி விட்டார்கள். நாமாஜுக்கு போய் வந்து, ஆடுகளை குர்பானி கொடுக்கவேண்டும். அப்பாவும், உஸ்மானும், மாமாவும் நமாஜ் ஓதுவதற்கு ஈத்காவிற்கு போகின்றனர்.

"அம்மா போய் வரேம்மா" என்றான் உஸ்மான்.

"அண்ணா, வரும் போது, கடைத்தெருவிலே உள்ள ஸ்வீட் கடையிலே எனக்கு "பால் கோவா" வாங்கி வரணும்" - என்றாள் பாத்திமா.

"கண்டிப்பா கொண்டுவரேம்மா" என்றான் உஸ்மான்.

முன்று பேரும் ஈத்காவிற்கு செல்கின்றனர்.

குடும்பத்தின் சந்தோஷத்தைப் பார்த்து, "யா அல்லாஹ், உனக்கு நான் நன்றியை சொல்கிறேன்" என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார் அம்மா.

நமாஜ் முடிந்தது, எல்லாரும் கடைசியாக துவா செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.


"அல்லாஹ் என் குடும்பத்தில் இப்போதுள்ள சந்தோஷம் நிலைத்து இருக்க உதவி செய். என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை கொடுத்தாய், என் மகன் சவுதிக்கு சென்று நல்ல முறையில் வேலை செய்ய உதவி செய், என் இளைய மகள் நல்ல முறையில் தன் மருத்துவ படிப்பை முடிக்க உதவி செய்" என்று வேண்டிக்கொண்டார் அப்பா.

"இறைவனே, எனக்கு கொடுத்த நல்ல மனைவிக்காக உனக்கு நன்றி, எல்லாரையும் ஆசீர்வதியும், என் மச்சான் நாளை சௌதிக்கு செல்கிறான், அவனுக்கு எல்லா உதவியையும் நீ தான் செய்யனும்" என்றான் மாமா.

"அல்லாஹ், உனக்கு நான் எப்படி நன்றி சொல்லுவேன், எங்கள் குடும்பத்தில் உன் கிருபை நிறம்ப இருக்கட்டும். என் அக்கா மாமாவிற்காக உனக்கு நன்றி." என்று வேண்டிக்கொண்டான். வீட்டுக்கு போன உடனே, நான் வாங்கிய மோதிரத்தை மாமாவின் விரலிலே நான் போடுவேன் அடுத்த முறை வரும் போது, அவருக்கு இன்னும் பெரிய பரிசு தருவேன் என்று தன் மனதில் நினைத்துக்கொண்டான்.

வீட்டிலே எல்லாரும் நமாஜ் செய்துவிட்டு, இந்த மூன்று பேருக்காக வழி மீது விழி வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சிறு காயங்களுடன் இரத்த கறைகளோடு மூச்சு வாங்க‌ ஒருவன் ஓடி வருகிறான்.

"பெரியம்மா, மஜீத்லே நமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குண்டு வெடித்து, அதுலெ, அதுலெ பெரியப்பாவும், உஸ்மான் அண்ணனும், மாமாவும், ....... ம..ரி....த்....து போனாங்கம்மா..." என்றுச் சொல்லி, ஓவென்று அழுகிறான்.....

அம்மா....?!@
அக்கா மும்தாஜ்....?!@
தங்கச்சி பாத்திமா.....?!@

இவர்களின் எதிர்கால வாழ்க்கை இனி இருட்டு தான்....

செய்தித்தாளில் செய்தி: பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 54 பேர் மரித்துப்போனார்கள். பல பேர் காயப்பட்டார்கள்.

54 killed in suicide attack on Pak mosque

காட்டில் வாழும் புலி சிங்கம் கூட தன் இனத்தை அழிக்காது, ஆனால், மனிதன்.....

இயேசுவே, "நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக" என்ற உம்முடைய‌ கட்டளையை மனிதன் என்று கடைபிடிக்கப்போகிறானோ...

ISLAM-இஸ்லாம்;பிறையில் இருந்து சிலுவைக்கு(சகோ.முகமது ரிச்சர்ட்)

என்னுடைய பெயர் முகமது பாஷா.நான் பர்மாவில் 1960 ஆம் ஆண்டு தீவிர சடங்காச்சாரங்களைப் பின்பற்றும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன்.நா 5 ஆம் வகுப்பு வரை படித்தேன் .ஒரு சமயம் என் சரீரத்தில் ஆஸ்துமா வியாதி கொண்டது.சிறு வயதிலே என் தாயார் இறந்துவிட்டார்கள் .எனது 20ஆம் வயதில் தந்தையும் இறந்து விட்டார்கள்.அந்நாளிள் இருந்து எண் அண்ணான் வீட்டில் தங்கியிருந்தேன் .என்னிடம் சொத்து இருக்கும் வரையில் நன்றாக கவனித்தார்கள்.சொத்தை கையெழுத்து வாங்கிக்கொண்டு வியாதிக்காரன் என்று என்னை விரட்டி விட்டார்கள்.பள்ளிவாசலிலும் என்னை யாரும் கவனிக்கவில்லை. எங்கள் சமுதாயமும்,உற்றார் உறவினர்களும் என்னை கைவிட்டுவிட்டார்கள்.இந்த நிலையில் நான் மரணபடுக்கையில் விழுந்தேன் .பிறகு சிறிது நாட்களில் ஓர் அளவுக்கு உடம்பு தேறி வந்தது.திருமணமாகி முதல் மனைவியும் கைவிட்டாள் .இதன் காரணமாக போதை பொருளுக்கு கஞ்சா,கள்ளசாராயம்,பிராந்தி மற்றும் எல்லா தீயபழக்கங்களும் உண்டாகி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன் .இந்நிலையில் வியாதியஸ்தனாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.டாக்டர்களும் என்னை கைவிட்டார்கள் .எல்லாரும் கைவிட்டாலும் என் தாயின் கர்பத்திலிருந்து என்னை தெரிந்து கொண்ட தேவன் கைவிடவில்லை.

1993

ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கொரியா தேசத்திலிருந்து வந்த ஊழியக்காரர் பால்யாங்கிசோ இயேசுவைப் பற்றியும் ,இரட்சிப்பைப்பற்றியும் சொன்னார்.அப்பொழுது என்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொணேடேன் .உடனே என்னுடைய சரீரத்திலிருந்த வியாதி நீங்கியது.பலமும் சுகமும் கிடைத்தது .இதையறிந்த என் மதத்தினர்,நண்பர்கள் ,உறவினர்களிடமிருந்து அநேக துன்பங்கள் வசைமொழிகள் வந்தது.அவையெல்லாவற்றிலும் தேவன் என்னை காத்து வழி நடத்தி வந்தார் .இனிமேலும் என் தேவன் என்னை நடத்துவார்.எனது வாஞ்சையெல்லாம் நான் இரட்சிப்பைப் பெற்றது போல் எனது ஜனங்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே .

ஆதார நூல்

;TRINITY FRAGRANCE,APRIL1998,நிறுவனர் ;மைதீன் கிரீன் ரோஸ்,BANGALORE 560005

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்