இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, March 15, 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

 

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை



முன்னுரை: பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளத்தில் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் ஒன்பதாம் பதிப்பில் வரவிருக்கும் விவரங்களில் ஒரு பாகத்தை அக்கட்டுரையில் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். அவரின் இந்த புத்தகத்திற்கு பதில்கள் தர நான் கடனாளியாக இருக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ந்து பதில்களை தந்து, பீஜே அவர்களின் பைபிள் பற்றிய விரிவுரையை மக்கள் அறியும் படி செய்வேன். 



பீஜே அவர்கள் பைபிள் விவரங்கள் பற்றி எவ்வளவு அறியாமையில், மேலோட்டமாக கட்டுரைகளை எழுதுகிறார் என்பதை நாம் தொடர் பதிலாக காணலாம். இக்கட்டுரையில் அவரது முதல் கேள்விக்கு சுருக்கமாக பதில் அளிக்கப்படுகிறது, தேவைப்பட்டால், விவரமாக பதில்கள் தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



பீஜே அவர்கள் எழுதியவைகள்


இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை


கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.


அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/


"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?




கேள்வி:


கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?


பதில்:


என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.


"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை.


ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?


அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?


அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?


மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.


நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.


உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:


"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25). என்று கூறினார்.


இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:


"இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்." (யோவான் 11:43,44).


நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:


1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரமுடையவராக பேசினார்.


2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.


3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.


தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)


இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.


எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.


இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.


யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.


உங்களின் வாதம், "நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லையே என்பதாகும். இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள். ஆங்கில மூலம்


இதர கட்டுரைகள்:

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!





--
3/13/2010 09:32:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்