யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?
கேள்வி:
இதோ இங்கு என் கேள்வியை முன்வைக்கிறேன், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். யூதாஸும் அவருடைய செயல்களும் என்னதான் தீயதாகக் காணப்பட்டாலும், கிறிஸ்தவம் தோன்ற தவிற்கமுடியாத காரணி இல்லையா? யூதாஸ் இல்லை என்றால், அதிகாரிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் கேவலமான செயலை யார் செய்திருப்பார்? என்னைப் பொருத்தவரை கிறிஸ்தவம் முழுமையடைய யாராவது இதனைச் செய்திறுக்க வேண்டும். யூதாஸ் இந்த 'கடமையை' செய்ய முன்விதிக்கப்பட்டிருந்தாரா? அவர் காட்டிக் கொடுக்காதிருந்தால் எப்படி கிறிஸ்தவம் உருபெற்றிருக்கும்? நீங்கள் சொல்கிறபடி இயேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பாரா?
பதில்:
இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டது யூத மத அமைப்பே ஆகும். இயேசுவின் ஒரு சீடரே காட்டிக்கொடுக்க முன்வரும் போது அவர்கள் அதை சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால் யூதாஸ் முன்வராதிருந்திருந்தால் அவர்கள் வேறு வகையில் இயேசுவை ஒழிக்கத் திட்டமிட்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன். சுவிஷேத்தில் பல இடங்களில் யூதாஸ் காட்டிக் கொடுக்கும் முன்பே அவர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டமிடுவதைக் காணலாம்.
நீங்கள், ஒரு முஸ்லிமாக இதே போல இருக்கும் மற்றும் இதை விட இன்னும் சிக்கலான விஷயமான "குர்ஆன் சூரா அபூ லஹப்" பற்றிய பிரச்சனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? குர்ஆன் படைக்கப்படாத நித்தியமான ஒன்று என்றும், அது முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்? அபூ லஹப் பிறக்கும் முன்பே அவரை நித்திய கண்டனத்திற்கு/தண்டனைக்கு உள்ளாவதாக இந்த சூரா குறிப்பிடுகிறதே! அபூ லஹப் இதில் மாறுபட்டு நடக்க வாய்ப்பிருந்ததா? அவர் நித்திய கண்டனத்திற்கு முன்விதிக்கப்பட்டிருந்தாரா?
இது விளையாட்டல்ல. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். முன்விதிக்கப்படுதல் (Predestination) ஒரு கடினமான இறையியல் பிரச்சனையாகும். அது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இதர ஒரிறைக்கொள்கை உள்ள மதங்களுக்கும் பொருந்தும். எவ்வாறு இறைவன் அனைத்தையும் கட்டுப்படுதுபவராக இருந்தும், அதே சமயம் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் இருக்க முடியும்? மிகவும் உயரிய தேவன் இதைச் செய்வாரா? இறைவனின் விருப்பத்திற்கு எதிராக மனிதர்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் எப்படி சர்வ வல்லவராக (எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக) இருக்கமுடியும்? அல்லது மனிதர்கள் தவறுகள் செய்வது இறைவனின் சித்தமானால், பின் ஏன் அவர் மனிதர்களை தண்டிக்கிறார்?
இதைக்குறித்து நல்ல ஆழமான இறையியல் புத்தகங்கள் உள்ளன. இந்த கேள்விக்கு சில வரிகளில் பதிலளிக்க முடியாது. நான் இதை முழுமையாகப் புரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
இந்த பதில் ஒரு முழுமையான பதிலாக இல்லாமலிருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இது ஒரு நேர்மையான பதிலாகும். மற்றும் இது கிறிஸ்தவத்தின் பிரச்சனை அல்ல, இது ஒரு பொதுவான இறையியல் தத்துவரீதியான பிரச்சனையாகும்.
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்
1,
இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2,
இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்