நேசமுடன் என்ற இஸ்லாமிய வலைபூவிற்கு பதில்
ஆயிஷாவின் கடிதம் என்ற பதிப்பிற்கு பதில் அளித்த நேசமுடன் என்ற இஸ்லாமிய தளம் பின்னூட்டம் அளித்து இருந்தது.
அதற்கு தமிழ் கிறிஸ்தவ இணையத்தில் சகோ உமர் பதில் அளித்துள்ளார்.அதை கீழே காணலாம்
ஆனால்,
பெண்ணின் சாட்சி, ஆணின் சாட்சியில் பாதி தான் - இது இஸ்லாம்.
உண்மையடியான் தளத்திற்கு வந்த பின்னூடல் சொல்லும் கருத்துக்கள் சரியானவையா? முன்வைத்த உதாரணம் சரியானதா? பொருளாதார விவகாரங்களில் மட்டும் பெண்களின் சாட்சி சரி பாதி தான் என்ற கூற்று ஏற்றக்கூடியதா? போன்ற கேள்விகளுக்கு பதில்....
நன்றி உண்மையடியான்.
-----------------------------------------------------------------------------------
Quote: |
சகோதரர் உமர் அவர்களின் என்ற கட்டுரை என் வலைபூவில் பதித்திருந்தேன்,அதற்கு ஒரு இஸ்லாமியர் பதில் அளித்து உள்ளார்.அதை இங்கு பதிக்கிறேன் http://unmaiadiyann.blogspot.com/2007/09/1.html இஸ்லாத்தில் எல்லா வேளைகளிலும் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது உண்மையானது அல்ல. ஒரு சில வேளைகளில் மாத்திரம் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் - அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றிய விளக்கமளிக்கிறது. மேற்படி வசனங்களில் சாட்சிகள் பற்றி குறிப்பிடும்பொழுது -ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக சாட்சிகள் என்று மட்டும் குறிப்பிடுகிறது. மேற்படி ஐந்து வசனங்களில் உள்ள ஒரேயொரு வசனம் மாத்திரம் சாட்சிகளில் ஆண் என்றால் ஒருவர் என்றும் பெண் என்றால் இருவர் என்றும் குறிப்பிட்டு காட்டுகின்றது. |
ஈஸா குர்-ஆன்:
குர்-ஆனில் வரும் ஐந்து வசனங்களில் ஒரு இடத்தில் மட்டும், பெண் சாட்சி என்றால் இரண்டு சாட்சிகள் தேவை. மற்ற இடங்களில் பெண் என்றால் ஒரு சாட்சி இருந்தாலும் போதுமானது என்று சொல்கிறீர்கள். நல்லது.
Quote: |
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 282வது வசனம் மேற்படி சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் மிக நீண்ட இந்த வசனம் பொருளாதார நடவடிக்கை பற்றி குறிப்பிடுகின்றது. '(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களில் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர் ஏனென்றால்) அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.' அல்-குர்ஆன்(2:184) மேற்படி வசனம் பொருளாதார கொடுக்கல், வாங்கல் பற்றி அறிவிக்கிறது. பொருளாதார கொடுக்கல் வாங்கலின் போது ஒப்பந்தம் இடச் சொல்கிறது. அவ்வாறு ஒப்பந்தம் இடும்போது கொடுப்பவருக்கும் - வாங்குபவருக்கும் இடையில் இரண்டு நபர்களை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள் என் கட்டளையிடுகிறது. இரண்டு சாட்சிகளும் ஆண்களாக இருந்தால் நன்று என்று பரிந்துரைக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சியாக கிடைக்கவில்லையெனில், ஒரு ஆண் சாட்சியையும் இரண்டு பெண் சாட்சிகளையும் கொண்டு ஒப்பந்தம் இடுங்கள் என்று மேற்படி வசனம் மனிதர்களுக்கு அறிவுறுத்துகிறது. உதாரணத்திற்கு - ஒரு மனிதர் தனது நோய்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்கிறார் எனில் - மேற்படி அறுவை சிகிச்சை பற்றி உரப்பித்துக் கொள்வதற்காக அவர் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களை கலந்து ஆலோசிக்கலாம்.. அல்லது அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிடைக்கவில்லையெனில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரையும், இரண்டு சாதாரண மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதில் அவர் திருப்தி அடையலாம். |
ஈஸா குர்-ஆன்:
உங்கள் கூற்றுப்படி "பொருளாதார (கொடுக்கல், வாங்கல் etc…)" சம்மந்தப்பட்ட விவகாரங்களில் சாட்சியிட வேண்டுமானால், இரண்டு பெண் சாட்சிகள் வேண்டும்.
1. ஆனால் நீங்கள் கொடுத்த உதாரணம் இதற்கு ஏற்றதா என்று சிறிது சிந்துத்துப் பாருங்கள்.
2.மருத்துவரிடம் ஆலோசிப்பது ஒரு பொருளாதார விவகாரமா அல்லது உடல் ஆரோக்கிய விவகாரமா?
3.சிறிதும் சம்மந்தமில்லாத உதாரணத்தைச் சொல்கிறீர்கள்.
4.அப்படி நீங்கள் சொன்ன உதாரணத்தை சரி என்று நினைத்துக்கொண்டாலும், அங்கும் நீங்கள் பெண்களை ஒரு படி குறைத்துத் தானே மதிப்பிடுகிறீர்கள்?
5.அறுவை சிகிச்சை நிபுனர் "ஆண்" என்றால், சாதாரண மருத்துவர் "பெண்" என்று ஒப்பிடுகிறீர்கள்?
6.எந்த காரணத்தை முன்னிட்டு, ஒரு ஆண் பெண்ணைவிட சிறந்தவர் என்றுச் சொல்கிறீர்கள். (உடல் சம்மந்தப்பட்ட வித்தியாசம் வேண்டாம், அறிவு, மறதி, குறைபாடு, கடைசியாக, சாட்சியாக இருப்பதற்கு தேவையான தகுதி போன்றவற்றை கருத்தில் கொண்டு சொல்லவும்.)
7.உங்கள் உதாரணத்தில் உள்ள குறைபாடு என்ன தெரியுமா? ஒரு சாதாரண மருத்துவர், தேவையான பயிற்சி, மற்றும் அறுவை சிகிச்சை பாடம் கற்றுக்கொண்டு, பயிற்சியில் தேறிவிட்டால், அறுவை சிகிச்சை நிபுனர் ஆகிவிடலாம், அது போல, இஸ்லாம் படி ஒரு பெண் ஆண்போல "ஒரு சாட்சியே போதுமானதாக ஆவதற்கு" தேவையான பாடங்கள், பயிற்சி ஏதாவது உண்டா?
Quote: |
அது போலவே பொருளாதார கொடுக்கல், வாங்கலின் போது இஸ்லாம் இரண்டு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளச் சொல்கிறது. ஏனnனில் ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். பொருளாதார ரீதியாக ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் பொருளாதார ரீதியாக அதிகம் பொறுப்புடையவர்கள். பொருளாதார ரீதியாக ஆண்கள் அதிகம் பொறுப்புடையவர்கள் என்பதாலும், பெண்கள் மிகக் குறைவான பொறுப்புடையவர்கள் என்பதாலும் ஆண்கள் என்னும் பட்சத்தில் ஒருவரும், பெண்கள் என்னும் பட்சத்தில் இரண்டு பேரும் சாட்சியமாவது அவசியம் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இரண்டு பெண்கள் ஏனெனில் - பெண்களில் ஒருவர் தவறிழைத்து விட்டால், மற்றவர் அதனை சரிசெய்யலாம் என்ற காரணத்தால்தான் இரண்டு பெண்கள் சாட்சிகளாக தேவைப்படுகின்றனர். மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டள்ள 'தஷில்' என்ற அரபி வார்த்தைக்கு 'குழப்பம்' அல்லது 'தவறு' என்று பொருள். ஆனால் மேற்படி 'தஷில்' என்ற அரபி வார்த்தைக்கு 'மறதி' என்று தவறான மொழியாக்கம் செய்துள்ளனர் பலர். மேற்படி ஒரு ஆணும் இரண்டு பெண்ணும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பது பொருளாதார கொடுக்கல் - வாங்கல் சமடபந்தப்பட்டதற்கு மாத்திரமேத் தவிர, மற்ற இடங்களில் அல்ல. |
ஈஸா குர்-ஆன்:
1.ஆண்கள் மட்டும் தான் பொருளாதார பாரத்தை அதிகமாக சுமக்கிறார்கள் என்பது மிகப்பெரிய தவறு.
2.இஸ்லாமில் வேண்டுமானால் இப்படி இருக்கலாம். இஸ்லாமிய பெண்களை அதிகமாக படிப்பதில்லை, நிறைய பேர் வேலைக்கு போவதில்ல. தன் தேவைக்காக தந்தையை நம்பியோ, சகோதரர்களை நம்பியோ, அல்லது கணவனை நம்பியோ வாழவேண்டிய நிலை.
3.இல்லை, நான் சொல்வது தவறு, இஸ்லாமிய பெண்களும் படிக்கிறார்கள், வேலைக்கு போகிறார்கள், என்று சொல்கிறீர்களா... காலம் மாறிக்கொண்டு இருக்கிறது... இப்போது தான் சிறிது சிறிதாக மாறிக்கொண்டு வருகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
4.ஆனால், மற்ற மார்க்கங்களில் இப்படி இல்லை, பெண்களும் குடும்ப பொருளாதார பாரத்தை சமமாக சில நேரங்களில் கணவனைவிட அதிகமாக பொருளாதார பாரத்தை சுமக்கிறார்கள்.
5.சரி உங்கள் வாதத்திற்கே வருகிறேன். ஒரு வேளை இஸ்லாமிய பெண்களும் தங்கள் குடும்ப பொருளாதார பாரத்தை ஆண்களை விட அதிகமாக சுமக்கக்கூடிய நிலை வருமானால், "இந்த வசனத்தின்படி அல்லாமல், ஆணின் சாட்சி ஒரு பெண்ணின் சாட்சிக்கு சமம் என்று ஏற்றுக்கொள்வீர்களா?" நான் நினைக்கிறேன் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால், குர்-ஆன் வசனம் சொன்னால், அதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை. அப்படியானால், ஒரு பெண் சாட்சி சொல்வதற்கும், குடும்ப பொருளாதார பாரம் சுமப்பதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.
சரி, குடும்ப பொருளாதார பொறுப்பிற்கும், சாட்சி சொல்வதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று நம்புகிறீர்கள் அல்லது சொல்கிறீர்கள்?
இந்த உதாரணத்தை பாருங்கள், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் ரூ. 5000 சம்பாதிக்கிறார், மனைவி ஒரு அரசாங்க வேலை அதுவும் நல்ல வேலை செய்கிறார்கள், சம்பளம் ரூ. 10000. சம்பாதிக்கிறார்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள். அதாவது கணவன் சுமப்பதை விட மனைவி இரண்டு மடங்கு அதிகம் சுமக்கிறாள் (அதாவது இஸ்லாமிய முறையில் சொல்லவேண்டுமென்றால்). மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். (இது ஒரு சாதாரணமாக எல்லா மார்க்க மக்களிடையேயும் இருக்கும் ஒரு சூழ்நிலை, இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லவேண்டாம், இதை படிக்கும் இஸ்லாமல்லாதவர்கள் சிரித்துவிடுவார்கள்.)
குர்-ஆன் வசனத்தின் படி, பொருளாதார பொறுப்பு ஆண்களுக்கு அதிகம் உள்ளதால் தான் "ஒரு ஆணின்" சாட்சி போதுமானது, பெண்களுக்கு குடும்ப பொருளாதார பொறுப்பு சிறிது குறைவு என்பதால், இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சிக்கு சமம் என்பதை ஏற்றுக்கொண்டால்?...
மேலே சொல்லப்பட்ட உதாரணத்தில், ஒரு பெண் குடும்ப பொருளாதார பாரத்தை அதிகமாக சுமக்கிறாள், ஆண் குறைவாக சுமக்கிறான். எனவே, இப்படிப்பட்ட குடும்பங்களில் அல்லா சொன்ன வசனத்தின்படி செய்யாமல், இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் சாட்சிக்கு, இப்படிப்பட்ட ஆண்கள் இருவரின் சாட்சி சமம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
இதை ஏற்றுக்கொள்வீர்களானால், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் குர்-ஆன் வசனத்திற்குச் சொன்ன அர்த்தம் சரியாக பொருந்தும்.
இல்லை, நாங்கள்(முஸ்லீம்கள்) இதற்கு ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொல்வீர்களானால்? இது வரையில் நீங்கள் சொல்லிக்கொண்டு வரும், வந்த விவரங்கள் எல்லாம், மாற்று மத மக்களை முட்டாளாக்க முஸ்லீம்கள் கையாளும் வித்தை என்பதை தெரிவிக்கிறது. இஸ்லாமில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்று மேடைகளில் பேசுவது எல்லாம் கண் துடைப்பு வேலை என்பது புரிகிறது.
Quote: |
தவிர, சில மார்க்க அறிஞர்கள் கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் மேற்படி ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் - பயம் என்று வரும்போது, ஆண்களை விட பெண்கள் அதிகம் பயப்படும் தன்மை கொண்டவர்கள். பெண்கள் அதிகமாக பயப்படும் காரணத்தால் சாட்சி சொல்லும்போது, குழப்பமடைய நேரிடலாம். எனவே கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஆண் எனில் ஒருவரும், பெண் எனில் இரண்டு பேரும் சாட்சியாக இருக்க வேண்டுமென சில மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேற்படி விவகாரங்கள் தவிர - எஞ்சியுள்ள அனைத்து விவகாரங்களிலும் சாட்சி சொல்வதில் ஆண் - பெண் இருவருக்கும் சமமான நிலையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. மேற்படி ஐந்து வசனமும் ஆண் - பெண் என்று வித்தியாசம் குறிப்பிடாமல் - சாட்சிகள் என்று மாத்திரம்தான் குறிப்பிடுகின்றது. |
ஈஸா குர்-ஆன்:
ஒரு ஆண் அல்லது ஒரு பெண் சாட்சி சொல்லும் போது, மறந்துவிடுவது, வேண்டுமென்றே பொய் சொல்வது, பணம் பெற்றுக்கொண்டு பொய் சொல்வது, பயந்து பொய் சொல்வது போன்ற எல்லா வகையான நிலைகளும் இருவருக்கும் பொருந்தும்.
ஆண் மறக்கவே மாட்டான், பொய் சொல்லவே மாட்டான், பயப்படவே மாட்டான் என்று சொல்வதெல்லாம், முளைச் சலவை செய்யும் வார்த்தைகளே தவிர இதில் உண்மையில்லை.
நான் கேட்கிறேன், ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஒருவன் வீட்டிற்குச் சென்று நாளை நீ இப்படி பொய் சாட்சி சொல்லவேண்டும், இல்லையானால், உன் குடும்பத்தை கூண்டோடு அழித்துவிடுவேன் என்று ஒரு கும்பல் பயமுறுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ஒரு ஆணோ, பெண்ணோ என்ன செய்வார்கள்? நிச்சயமாக பொய் சாட்சி தான் சொல்வார்கள்.
இதிலும், ஒரு வேளை நேர்மையானவர்களாக இருப்பவர்களாக இருந்தால், ஆணோ, பெண்ணோ பயப்படாமல் உண்மையைத் தான் சொல்வார்கள்.
கடைசியாக, பயம் பயம் என்றுச் சொல்கிறீர்களே!...
நம் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பயப்படுபவர்களா? இல்லையா? இந்திய முதல் ஐ.பி.எஸ், கிரண்பேடி பயப்படுபவர்களா? இல்லையா? சொல்லுங்கள்.
உலகத்தில் எத்தனை ஆண்கள் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள், உங்களுக்கு தெரியுமா? எத்தனை பெண்கள் மிகவும் தைரியமாக இருக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா?
குர்-ஆன், இஸ்லாம் என்னும் கண்ணாடி கழற்றி பாருங்கள்.
சரி, இப்படி பயப்படாத பெண்களுக்கு உங்கள் குர்-ஆன் வசனம் பொருந்தாதோ? அல்லது பயப்படும் ஆண்களுக்கு உங்கள் குர்-ஆன் வசனம் பொருந்தாதோ? சொல்லுங்கள்.
கொலை சம்மந்தப்பட்ட விஷயங்களில் இரண்டு பெண்கள் சாட்சிகள் தேவை என்று குர்-ஆன் சொல்கிறதா?
ஏதாவது வசனம் காட்டமுடியுமா? இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். அதாவது நீங்களாகவே முடிவு செய்கிறீர்கள்.
சரி, கொலைக்கான சாட்சிகளில் "ஒரு பெண்" என்றால் பயப்படுவாள் என்று சொன்னால், இரண்டாவது பெண் பயப்படமாட்டாளா? இந்த இரண்டு பெண்கள் என்ன? பயப்பட வைக்கும் கூட்டத்தை அழித்து தீர்த்துவிடுவார்களா?
இவைகள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத சித்தாந்தங்கள். ஒரு ஆண் இரண்டு பெண்களுக்கு சமம் என்று நேரடியாக சொன்னால், தற்காலத்தில் எடுபடாது என்று இப்படி எல்லாம் சுற்றி வளைத்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்.
Quote: |
சொத்துக்கான உயில் எழுதும்போது - இரண்டு நபர்களை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது: 'நம்பிக்கை கொண்டவர்களே!. உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸணம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்: அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பொது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடைக்காவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்.' (அல்-குர்ஆன் 5:106) விவாகரத்து செய்ய விரும்பினால் உங்களில் இரண்டு பேர் சாட்சியாக இருக்கட்டும் என்று அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துத் தலாக்கின் இரண்டாவது வசனம் கூறுகின்றது. (அல்-குர்ஆன் 65:2) 'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீ;ங்கள் எண்பது கசையடி அடியுங்கள்' என்று அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் நான்காவது வசனம் கூறுகின்றது. தவிர, சில மார்க்க அறிஞர்கள் எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள். மேற்படி வாதம் சரியானதன்று. ஏனெனில் அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் ஆறாவது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது. 'எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவன் நிச்சயமாக உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் நான்கு முறை சத்தியம் செய்து கூற வேண்டும்.' (அல்-குர்ஆன் 24:6). மேற்படி வசனங்களில் எல்லா இடங்களிலும் சாட்சிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதேத்; தவிர, ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் என்று குறிப்பிடப்படவில்லை. மேற்படி வசனத்திலிருந்து பெண்களையும் தனி நபர் சாட்சியாக ஏற்கலாம் என்பது நமக்குத் தெளிவாவதுடன், எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்போரின் வாதமும் அடிபட்டு போய்விடுகின்றது. |
ஈஸா குர்-ஆன்:
நீங்கள் சொல்கிறீர்கள், மற்ற நான்கு இடங்களிலும் "சாட்சிகள்" என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளது என்று, கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், இஸ்லாமிய நாடுகளில் உள்ள இஸ்லாமிய சட்டம் இப்படி "பொருளாதார" விஷயங்களில் மட்டும் ஒரு ஆணின் சாட்சி, இரண்டு பெண்களுக்கு சமம் என்று சொல்வதில்லை.
அனேக விஷயங்களுக்கும் இதே போல பெண்களை ஆண்களில் பாதியாக மதிக்கிறது. இன்னும் சில சட்டங்களில் பெண்களின் சாட்சி எடுபடாது, அதற்கு நான்கு ஆண்களின் சாட்சி தேவை என்றுச் சொல்கிறது.
அச்சட்டங்கள் குர்-ஆன் படி உள்ள சட்டங்கள் இல்லை என்று ஒருவரியில் நீங்கள் சொல்வீர்கள். ஆனால், தண்டனையை அனுபவிக்கும் இலட்சக்கணக்கான பெண்களின் நிலையை யார் மாற்றுவது ?
1.பாகிஸ்தானில் ஹுதூத் சட்டம் படி ஒரு பெணை ஒருவன் கற்பழித்துவிட்டால், அந்த பெண் தன் சாட்சிக்காக(ஆமாம் இவன் என்னை கற்பழித்தான் என்று நிருபிக்க) நான்கு ஆண்களை கொண்டுவரவேண்டும். அப்படி கொண்டுவரவில்லையானால், அவளுக்கு தண்டனை நிச்சயமாக உண்டு. பாகிஸ்தானில் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது.
2.ஈரான் நாட்டின் ஷரியா சட்டத்திலும் இப்படி உள்ளது. [1]
3.பெண்கள் ஆண்களுக்கு அறிவுரை சொல்லும் பதவி, அல்லது பெண்கள் நீதிபதியாக இருக்கக்கூடாது என்று இஸ்லாம் சொல்வதினால், "ஷீரின் எபாடி" என்ற நோபல் பரிசு வாங்கிய பெண்மணிக்கு ஈரான் நாட்டில் பல ஆண்டுகள், நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கக்கூடாது என்று விளக்கிவைத்தார்கள். பிறகு "நீதிபதியாகலாம்" என்று மறுபடியும் நீதிபதியாக்கினார்கள்.
இப்படிப் பட்ட நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவு குறைவு என்று சொல்கிறீர்களா..?
Quote: |
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி: இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்பினை நோற்பதற்காக பிறை பார்த்தல் சம்பந்தமாக ஒரு பெண்மணியின் சாட்சி போதுமானது என்பதை அனைத்து மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். சில மார்க்க அறிஞர்கள் நோன்பினை நோற்பதற்காக பிறை பார்க்கும்போது ஒரு சாட்சியும், நோன்பு நோற்று முடிந்து, பெருநாள் கொண்டாடுவதற்காக பிறை பார்க்கும்போது இரண்டு சாட்சியும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். மேற்படி செய்தியிலும் சாட்சி பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதேத் தவிர, ஆண் சாட்சி அல்லது பெண் சாட்சி என்று குறிபிடப்படவில்லை. மேலும் சில விவாகரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளான - இறந்து போன பெண் மையங்களை குளிப்பாட்டுவது - போன்ற விரகாரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி விவகாரங்களில் ஆண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. |
ஈஸா குர்-ஆன்:
வானத்தில் பிறை பார்த்து சாட்சி சொல்வது, அல்லது பெண்களின் சில முக்கியமான விஷயங்களில் சாட்சி சொல்வதினால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. நான் பிறை பார்த்தேன், நாளைக்கு ரம்ஜான் கொண்டாடலாம் என்று ஒரு பெண் சொல்வதினால், அப்படி சொல்லாமல் இருப்பதினால், அந்த பெண்ணுக்கு என்ன நன்மை சொல்லுங்கள்?
ஆனால், பல இஸ்லாமிய நாடுகளில் இருப்பது போல, இஸ்லாம் நாடு என்று சொல்லிக்கொண்டு பல சட்டங்களை வகுத்துக்கொண்டு, பெண்கள் "நான்கு ஆண்களை சாட்சியாக" கொண்டு வரவில்லையானால், அவளுக்கு தண்டனை என்று சொல்வதினால் தான் பிரச்சனையே வருகிறது.
Quote: |
கேள்வி கேட்டவர் சொன்னது போன்று பொருளாதார விவகாரங்களில் மாத்திரம் ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை வைத்துள்ளது. மேற்படி நிபந்தனை கூட ஏனெனில் இஸ்லாமிய சமுதாயத்தில் - பெண்களுக்கும் - ஆண்களுக்கும் பொருளாதார ரீதியாக இஸ்லாம் வழங்கியுள்ள பொறுப்புக்களின் காரணமாகத்தானேத் தவிர, ஆண் - பெண் என்கிற பாலியல் வேறுபாடு காரணம் அல்ல. மற்றபடி அனைத்து விவகாரங்களிலும் சாட்சியமளிப்பதில் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமான உரிமையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது. |
ஈஸா குர்-ஆன்:
நீங்கள் சொல்வது போல, பொருளாதார விஷயங்களில் மட்டும் பெண்களின் சாட்சி ஆண்களின் சாட்சியில் பாதி என்ற சட்டமும் பயனற்றது மற்றும் நடைமுறைக்கு ஏற்றது அல்ல.
இதன் படி ஒரு ஆண் அதாவது ஒன்றாம் வகுப்பு கூட படிக்காத, கூலி வேலை செய்யும், உலகம் என்றால் என்ன என்று தெரியாத, பாமர மனிதனுக்கு, அதிகமாக படித்த, மற்றும் ஒருபெரிய நிறுவனத்தை நடத்தும், மற்றும் பல நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல விதமான அனுபவங்களைப் பெற்ற ஒரு பெண் சமமாகமுடியுமா என்றால், இஸ்லாம் இல்லை என்றே சொல்கிறது.
நான் ஆண்களை குறைவாக பேசவில்லை. அதற்கு பதிலாக பெண்கள் சாட்சி சொல்வதில், ஆண்களை விட குறைவானவர்கள் இல்லை என்றும், இப்படிப்பட்ட ஒரு ஒப்புமை(Comparison) செய்வது தவறானது, அர்த்தமற்றது என்றும் சொல்கிறேன்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் சமம் அவ்வளவு தான்.
சாட்சி என்று வரும் போது, சாட்சி சொல்பவர்கள் ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், நல்லவர்களா, நல்ல மனநிலையில் இருக்கிறார்களா, அவர்கள் நேர்மை எப்படிப்பட்டது என்று பார்க்கவேண்டுமே ஒழிய (பொருளாதார விஷய சாட்சியாக இருந்தாலும் சரி) ஆணா, பெணா என்று பார்க்கக்கூடாது.
நான் கேட்கிறேன், இரு பெண்களில் ஒருபெண் மறந்துவிட்டால், அல்லது தவறு செய்தால், அல்லது பொய் சொன்னால், குழம்பி போனால் என்று வசனத்திற்கு அர்த்தம் சொல்கிறீர்களே, ஏன் இந்த அனைத்து குறைபாடுகளும் ஆண்களிடம் இல்லையா? ஆண்கள் செய்யமாட்டார்களா?
ஒட்டு மொத்த பெண்களின் மீது குற்றம் சாட்டுவது எப்படி சரியாகும்.
சொல்லப்போனால், நிறைய குற்றங்கள் புரிவது பெரும்பான்மையாக ஆண்களாகத் தான் இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?
நானும் ஒட்டுமொத்த ஆண்கள் குற்றம் செய்வார்கள் என்றுச் சொல்லாமல்,பெண்களின் சதவிகிதத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஆண்களின் விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று சொல்கிறேன்.
இது தான் உண்மை, இது தான் நடைமுறைக்கு சரியாக இருக்கும். முகமது சொல்வது போல, பெண்கள் மட்டும் தான் அதிகமாக நரகத்தில் இருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல .
Notes:
[1] Women in the judicial process
Women as witnesses face another discrimination. Adultery, whether it results in lashing or in stoning to death is "proven by the witness of four just men or three just men and two just women" (article 74). If the adultery only deserves lashes it "can be proven by the testimony of two just men and four just women (article 75). In this section a women is half a man.
……
Let us imagine a situation where some armed men attacked a group of women to rob and rape them. The women who have witnessed and experienced this crime not only have no right to bear witness, but if they pluck up enough courage to testify, they will be punished with 80 lashes – the punishment for accusation (qazf).
Another way of proving a crime is to take an oath. Here too the women lose out. Article 248 says that deliberate murder is proven by "50 oaths [on the Qur'an]. Those taking an oath must be related to the murdered person and for them being male is a condition". If no male relative is found then the testimony of a woman who swears on the Qur'an 50 times might be admitted.
Even the knowledge and experience of professional women is half-price to that of men. Article 495: "in case of dispute between the assailant and the victim … blood money will be proven …[with] evidence from two just male specialist or one just male and two just female specialist as to whether the loss of vision is permanent". If a male ophthalmologist cannot be found, no number of female eye specialists would do! Here it is not just a question of unequal rights, but that knowledge learnt by the two sexes is also valued differently. We have also had women removed from the courts as legal specialists. Their absence in legal procedures and criminal courts means that misogynist and biased views of the law are put into practice with greater severity and force, and occasionally even added to, by male attorneys and judges most of whom are also priests.
Source : http://www.iran-bulletin.org/political_islam/punishmnt.html