இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, February 10, 2009

சௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ்

 

Christmas in Saudi Arabia

பெறுநர் - To:

கிறிஸ்துவில் ஒரு விசுவாசிக்கு,

சௌதி அரேபியா.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்,

நீங்கள் என்னை ஒருவேளை மறந்துப்போய் இருக்கலாம், ஆனால் நான் உங்களை நித்தியத்திலும் நியாபகத்தில் வைத்திருப்பேன்.

நவம்பர் மாதம் 1992ம் ஆண்டு, நான் அமெரிக்காவின் விமானப்படை(US Air Force) பிரிவின் சார்பாக‌ 60 நாட்கள் சௌதி அரேபியாவில் பணிபுரியும் படி அனுப்பப்பட்டேன். இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் நாம் சௌதியில் இருக்கவேண்டிய நிலையில் இருந்தேன், நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஏனென்றால், என்னுடைய மனைவி எங்கள் முதல் குழந்தையை தன் கருவில் சுமந்துக்கொண்டு இருந்தாள், இந்த கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் நான் அவளோடு செலவிட வேண்டும் என்று அதிகமாக விரும்பினேன்.

சௌதி அரேபியாவில் வந்து இறங்கியதும், என் மன‌வேதனை இன்னும் அதிகமானது, ஏனென்றால், இங்கு கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது, எந்த தோரணங்களும் இருக்கக்கூடாது, கிறிஸ்தவ கூடுகைப் பற்றிய எந்த ஒரு போதுக் கூட்டமும் நடத்தலாகாது, கிறிஸ்தவ பாடல்களும் பாடப்படக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எங்கள் முகாம்களில் கூட இல்லை என்பதை கேட்டதும், இன்னும் வேதனை அதிகமாகியது. அனேக ஆண்டுகள் தேவனுக்கு சேவை செய்யாமல் உலக வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்திய எனக்கு, இந்த சூழ்நிலை என் கிறிஸ்தவ நம்பிக்கையை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள, கிறிஸ்துவின் பிறப்பை உண்மையாக கொண்டாட‌ விடுமுறை கிடைக்குமா என்று ஏங்கினேன்.

கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க, எனக்கு கோபம் கலந்த வருத்தம் அதிகமானது, இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் இருக்கவேண்டிய சந்தோஷ மனப்பான்மை மறைந்து என் வாழ்வே இருட்டாக தோன்றியது. கிறிஸ்துமஸ்ஸுக்கு முன்பாக சில பரிசுகளை வாங்கி என் மனைவிக்கு அனுப்பலாம் என்ற எண்ணத்தில், டிசம்பர் மாதம் நடுவில் கடைத்தெருவிற்குச் சென்றேன். இந்த நேரத்தில் தான் நான் உங்களை சந்தித்தேன். நான் உங்கள் கடையில் நுழைந்தேன். அனேக பொருட்களை தெரிந்தெடுத்தேன் மற்றும் அவைகளின் விலைகளுக்காக உங்களோடு பேரம் பேசினேன். நான் இப்படி விலை பேசிக்கொண்டு இருக்கும் போது, என் கோபக் கணலை அப்படியே உங்கள் மீது காட்டினேன். நீங்கள் ஒரு "முஸ்லீமாக இருப்பீர்கள்" என்று நினைத்து, உங்களுக்கு என் கோபம் பற்றி தெரியவரும் என்பதை நினைத்து உங்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். நான் உங்களோடு பேசும் போது, "இந்த பொருட்கள் கிறிஸ்துமஸ்ஸுக்காக வாங்குகிறேன்" என்றும், "இவைகளை கிறிஸ்துமஸ் பரிசுகளாக அனுப்பயுள்ளேன்" என்றும் அடிக்கடிச் சொன்னேன். உங்களுக்கு முன்பாக கிறிஸ்துவின் பெயரை அடிக்கடிச் சொல்லி, உங்களுக்கு இயேசுவின் பிறப்பில் உள்ள சந்தோஷத்தை உங்களுக்கு காட்டவேண்டும் என்று விரும்பி, இப்படி பேசினேன்.

பிறகு நடந்தது தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! நான் இன்னும் என்ன பொருட்கள் வாங்க உள்ளீர்கள் என்று நீங்கள் என்னை கேட்டீர்கள். நான் வாங்க வேண்டிய மீதி பொருட்களை உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் என் எல்லா பொருட்களையும் பணம் செலுத்துமிடத்தில் அனுப்பிவிட்டு, மெல்லிய குரளில் என்னிடம் "இந்த பொருட்களை என் சார்பாக கிறிஸ்துமஸ் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள், நானும் ஒரு கிறிஸ்தவன் தான்" என்றுச் சொல்லி, எனக்கு பரிசுகளை கொடுத்தீர்கள். பிறகு, இன்னும் மெல்லிய குரலில், "தயவு செய்து, இப்படி நான் கிறிஸ்துமஸ் பரிசுகள் உங்களுக்கு கொடுத்ததாக வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம், அப்படி சொல்வீர்களானால், நான் என் கடையை முழுவதுமாக இழக்கவேண்டி வரும்" என்றுச் சொன்னீர்கள்.

உங்களின் இந்த வார்த்தைகளை கேட்டவுடன், நான் எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர்ந்தேன். என் வாழ்வின் முதல் 30 ஆண்டுகள் நான் தேவனை தொழுதுக்கொண்டேன், ஜெபித்தேன், நான் விரும்பியபடி கிறிஸ்துமஸ்ஸை கொண்டாடினேன். உங்களைப்போல அல்லாமல், எந்த ஒரு நாடும், எந்த ஒரு குழுவும் அல்லது குடும்ப நபர்களும் என்னை கொடுமைப்படுத்தியதை நான் கண்டதே இல்லை. நீங்கள் வாழும் உலகின் ஒரு சிறிய பகுதியை இன்று நான் கண்டேன். ஒரு சௌதி கிறிஸ்தவராக நிங்கள் இருப்பதினால் உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்தைக் கண்டேன். நீங்கள் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட விஷயம் வெளியே தெரிந்தால் உங்களுக்கு நடக்கும் விபரீதங்களைக் கண்டேன். உங்களுடைய தைரியத்தையும் அதே நேரத்தில் அன்பையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளேன்.

நீங்கள் அன்று இரவு எனக்கு மூன்று பரிசுகளைக் கொடுத்தீர்கள்.முதலாவதாக, உங்களிடம் நான் விலைக்கு வாங்கிய பொருட்கள் மிகவும் அழகானவைகள், மற்றும் எனக்கு பரிசுகளாக நீங்கள் கொடுத்த பொருட்கள் இன்னும் அருமையானவைகள், ஏனென்றால், அவைகளில் கொடுப்பவரின் இருதயத்தைக் கண்டேன். இரண்டாவதாக, உங்களின் வார்த்தைகள் என்னை தொட்டது, என் விடுமுறை நாட்களை எனக்கு மறுபடியும் கொடுக்கப்பட்டது போல இருந்தது, மற்றும் கிறிஸ்து என் உள்ளத்தில் வாழும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் என்பதை நான் உணரச் செய்தது. கடைசியாக, நீங்கள் உங்கள் சாட்சியை என்னிடம் பகிர்ந்துக்கொண்டீர்கள், பணம் செலுத்துகின்ற அந்த இடத்தில்(Cash Counter) மெல்லிய குரலில் சொன்ன அந்த சாட்சியே, இதுவரை நான் கெட்ட சாட்சிகளிலெல்லாம் மிகவும் சத்தம் உயர்த்தி சொல்லப்பட்ட சாட்சியாகவும், உயிருள்ள சாட்சியாகவும் நான் உணருகிறேன். உங்களின் அந்த சாட்சி தான் என்னை உற்சாகப்படுத்தியது, மற்றும் தேவனை துதிக்கும் படி எனக்கு கிடைத்திருக்கின்ற சுதந்திரத்திற்காக தேவனை தொடர்ந்து துதிக்கும்படிச் செய்தது. மற்றும் உலகில் உள்ள அவரது பிள்ளைகள் அனைவரோடும் அவர் இருந்து, அவர்கள் இரகசியமாக தேவனை துதிக்கும் போது, இப்படி மெல்லிய குரலில் தங்கள் சாட்சிகளைச் சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது, அவர்களை பாதுகாக்கும் படி ஜெபிக்கவும் என்னை உற்சாகப்படுத்தியது.

இந்த கிறிஸ்துமஸ் நாளன்று, யார் யாரெல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை இரகசியமாக கொண்டாடுகிறார்களோ, அப்படிப்பட்ட சகோதர சகோதரிகளோடு என் இருதயம் இருக்கிறது. ஒரு நாள் நாம் அனைவரும் தேவனின் இராஜ்ஜியத்தில் அவருக்கு முன்பாக நின்று சுதந்திரமாக நின்று தொழுதுக்கொள்ளும் நாளுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும், உங்கள் கிறிஸ்த சகோதரன்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


இப்படிக்கு
கிறிஸ்துவிற்குள் உங்களுக்கு நன்றியுள்ள ஒரு சகோதரன்.

Source: http://www.answering-islam.org/Misc/saudi_christmas.html

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

 

Brother Chariah's Testimony

நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால், இஸ்லாமிய மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும், எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.

இஸ்லாமிய பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரபி மொழி, குர்ஆன் கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள்(cleansing rituals), தொழுகை, நோம்பு(உபவாசம்) போன்றவைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன். அதே வேளையில் பல அயல் நாடுகளைச் சுற்றிப் பார்க்கவும், இதர கலாச்சாரங்களையும் சமயங்களையும் அறியவும் வாய்ப்பு கிட்டியது. புத்த, இந்துத்துவ, யூத, கிறிஸ்தவ பக்தர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது மற்றும், உண்மையான மார்க்கம் எது என்று அறிய வேட்கையும் ஏற்பட்டது. இறைவன் ஒருவராக இருக்கும்போது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போதனைகளையுடைய வெவ்வேறு மார்க்கங்கள் இருக்க முடியாது. எனவே, ஒரே இறைவன் வெவ்வேறான சமயக் கல்வியை மனிதனுக்குக் கொடுக்க வாய்ப்பில்லை. அவர் படைத்த உலகைப் பாருங்கள். இயற்பியல்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் அனுதினமும் இவ்வுலக படைப்பாளியின் இப்படைப்பைக் கண்டு, கற்பனைக்கு எட்டாத அவரின் ஞானத்தையும், அறிவையும் அனுபவிக்கமுடியும். இவ்வுலக மார்க்கங்களில் உள்ள குழப்பங்களைப் போல, படைப்பாளியாகிய இறைவன் குழம்பிப்போய இவ்வுலகை படைக்கவில்லை.

நான் ஆறு வயதாய் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அலுவல் காரணமாக என் தந்தை வெளியூருக்குச் சென்று விடுவதால், மாதக் கணக்கில் நான் அவரைச் சந்திக்க முடியாமல் போவதுண்டு. ஒரு நாள் அவர் மேல் எனக்கு அளவு கடந்த ஏக்கம் உண்டாகி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அல்லாஹ்விடம் என் தந்தையை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஜெபிக்க என் சிந்தனையில் தோன்றியது. ஆனால், அப்போது எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அரபி மொழியில் தொழுதுக் கொள்ளும் முறையையும், சுத்தம் செய்துக்கொள்ளும் சடங்குகளையும் அறிந்திருந்த நான், ஒரு குறிப்பிட்ட தேவைக்காக எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. அந்த விருப்பத்தை அல்லாஹ்விடம் தெரிவிக்க முறையாக ஜெபிப்பது எப்படி என்பதையும் வரிசைக்கிரமமாக வாக்கியங்களைக் கூறவும் எனக்குத் தெரியவில்லை. பரிசுத்தம் நிறைந்த அல்லாஹ் வெகு தொலைவில் இருக்கிறார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அல்குர்ஆனையும் அதன் கட்டளைகளையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, நம்மை சடங்குகளால் சுத்திகரித்துக் கொண்டு, சரியாக அரபி மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே அந்த பரிசுத்த அல்லாஹ்வை அடைய முடியும். மாறாக, கிறிஸ்தவம் அன்பையும் மன்னிப்பையும் அடிப்படையாகக் கொண்ட எளிய மதம் என்றும் பலவீனமான மற்றும் தகுதியில்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். இளம் வயதில் கிறிஸ்தவத் திரைப்படங்களைப் பார்த்து எப்போதும் வியப்பதுண்டு. குவோ வாடிஸ்(Quo Vadis) என்ற படத்தில், ரோமாபுரியர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தக் கேவலமான செயலை எப்படி முன் வந்து மன்னித்தார்கள் என்பது இந்த உதாரணங்களில் ஒன்று. பிறகு இந்தக் கிறிஸ்தவர்கள் பசியாக வாடும் சிங்கக் கெபியுக்குள் தூக்கி எறியப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள். உயிர் துறக்கும் நிலையிலும்கூட அவர்கள் தங்கள் தேவனைத் துதித்து வணங்கினார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களினால் நான் விவரிக்க முடியாத பலத்தை பெற்றதாக உணர்ந்தேன். பலவீனத்திலும் அவர்கள் பெலன் கொண்டார்கள். அவர்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், நித்தியத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எனக்கு இது வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. இறுதியில் எந்த மதமும் சாராமல், என் தந்தை தாமதமின்றி மறுநாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டினேன்.

மறுநாள் காலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது புன்முறுவலுடன் நின்ற என் தந்தையின் முகம் தெரிந்தது. எதிர்பாராத வருகை தந்து எங்களை இன்பக் கடலில் அழ்த்த வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்ததாக அவர் தெரிவித்தார். அல்லாஹ் எங்கள் ஜெபத்தைக் கேட்டார் என்றுணர்ந்து நான் பேரானந்தம் கொண்டேன். அப்போது அல்லாஹ் இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினாலும், அந்த அல்லாஹ் உண்மையில் யார் என்று அறியும் வேட்கை அதிகரித்தது.

மலேசியாவில் வாழும்போது, இஸ்லாமிய சாங்கியங்களும்(சடங்குகளும்) சட்டதிட்டங்களும் பின்பற்றுவதற்கு மிகவும் சிறமமாக இருந்தது. நோன்பு மாதமாகிய ரமலானில்(ரம்ஜான்) நான் உமிழ் நீரை விழுங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொழுகுகைக்கு முன்பு ஆசனவாயில் இருந்து துர்காற்று வெளியேறி விட்டால், மீண்டும் ஒருமுறை என்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். கொட்டாவி விட்டு விட்டால், வாய் வழியாக தீய ஆவிகள் நுழைந்து விடாமல் இருக்க, குர்ஆனிய வசனங்களை வாசிக்க வேண்டும். உயிருள்ள நாயைத் தொடுவதற்கும் குறைந்தபட்சம் பொம்மை நாயோடு விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. குர்‍ஆன் வசனங்களைக் கொண்ட தாயத்தை நான் அணிந்திருந்தேன். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு குர்ஆனிய வசனங்கள் கொண்ட சங்கிலியை(தாயத்தை) கட்டாயம் கழற்றி விட வேண்டும். அணுசரிக்க வேண்டிய ஆயிரக் கணக்கான சட்ட விதிகள் இருந்தன. அவற்றை மீறினால், என்ன விபரீதம் ஆகிவிடுமோ என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. இதனால் எனக்கு மன அமைதி கிட்டவில்லை.

ஒரு காலக் கட்டத்தில் நான் வாசிப்பதற்கு பைபிள்(வேதாகமப் புத்தகம்) கிடைத்தது. நான் அதை வாசிக்க தொடங்கினேன். புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களையும் வாசித்தேன். வாசித்த ஒவ்வொரு வசனமும் என் உள்ளத்தை தொட்டது. இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் என்று உணர்ந்தேன். எவ்வளவு தீவிரமாக சட்டதிட்டங்களைப் பின்பற்றினாலும், நம்மால் வெல்ல முடியாது. நாம் நினைத்துப் பார்த்ததை விட இறைவன் மிகவும் பரிசுத்தமானவர். ஒரே ஒரு சிறிய பாவம் கூட நாம் பரலோகம் செல்லும் பாக்கியத்தை இழக்கச் செய்கிறது. மேலும் என் வாழ்வில் ஒரு முறையாவது நான் பாவம் செய்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால், எபேசியல் 2.8இல் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல (நீங்கள் கட்டளைகளை பின்பற்றுவதினால் அல்ல), இது தேவனுடைய ஈவு; என்று சொல்லியிருக்கிறார்.

****

ஒரு நாள் நானும் என் தந்தையும் கடும் நோய்க்கு ஆளானோம். பல வைத்தியர்களைச் சந்தித்தும் அவர்களால் நோயைக் கண்டறிய முடியவில்லை. வழங்கப்பட்ட எல்லா மருந்துகளையும் சாப்பிட்டப் பிறகும் நாளுக்கு நாள் எனது நோய் அதிகரித்துக் கொண்டே போனது. எனது உடல் எடை 12 கிலோ குறைந்ததோடு மரணம் என்னை நெறுங்கி விட்டது என்றும் உணர்ந்தேன். நான் தேவனிடம் ஜெபிக்க தொடங்கினேன். என் பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டேன். என்னை மன்னிக்கும் படி அவரிடம் வேண்டினேன். என் பாவங்களுக்காக தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக கொடுத்த தியாக பலியை நான் அங்கீகரித்தேன். உண்ணவோ நிற்கவோ மற்ற எந்த சரீரப்பிரகாரமான காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும் கூட ஜெபித்து எனது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படும் நாளைச் சந்திக்கத் தயாரானேன். பரலோகத்திற்குச் செல்வதுதானே எனது குறிக்கோள்!

நான்கு ஐந்து வாரங்களாக சிகிச்சையின்றி படுக்கையில் இருந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அநே நேரத்தில் என் தந்தை சிறப்புக் கவனிப்புப் பிரிவில் (ICU – Incentive Care Unit) அனுமதிக்கப்பட்டார். ஒரு காலைப் பொழுதில் உறக்கத்தில் இருந்த என்னை உறவினர்கள் எழுப்பி, தந்தை மரித்தத் துயரச் செய்தியை அறிவித்தனர்.

இருதயம் செயலிழந்ததால் என் தந்தை மரித்தார் என்றுச் சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் எங்கள் இருவரின் நோயின் காரணத்தை அறியகூடாமற் போனது. நாங்கள் இருவரும் விஷமிடப்பட்டோம் அல்லது பில்லி சூனியத்திற்கு ஆளானோம் என்ற வதந்தியும் பரவியது. மாற்கு 16.17-18ல் வாக்கு அளித்தபடி

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

நான் இன்னும் உயிரோடு வாழ்கிறேன் என்று விசுவாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் நரம்பு தளர்ச்சி(Nervous breakdown) நோய்க்கு ஆளானேன். மனவியல் மருத்துவர்கள் (Psychologists) கூட எனக்கு உதவ முடியவில்லை. மிக நெறுக்கமான சூழ்நிலையிலும் கூட உதவக் கூடிய தேவனை என் மனதில் நினைத்துக் கொண்டேன். தங்களை துன்பப்படுத்தி கொல்லப்பார்க்கும் எதிரிகளையும் மன்னித்து, மரிக்கும் நேரத்திலும் தேவனை துதிக்கும் படி, தன் விசுவாசிகளை தேவன் தயார்படுத்துகிறார். விஷம் அருந்தி ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையிலும் கூட தேவன் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். தற்செயலாக என் மனைவி ரே ஜென்னிங்ஸ்(Ray Jennings) என்ற ஓர் அமெரிக்க சுவிசேஷகரின் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் நாங்கள் குடும்பமாக கிறிஸ்தவத்தை விசுவாசிக்கத் தொடங்கினோம். அந்த சுவிசேஷகர் என் மீது கரம் வைத்து சுகத்திற்காக ஜெபித்தார். தேவனின் வாக்குப்படியே, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ...வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" உடனடியாக எனக்குச் சுகம் கிடைத்தது.

நான் இன்று தேவனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். அவர் என்னோடு இருக்கிறார். இஸ்லாமியர்களே, பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவை விசுவாசிக்கத் தீர்மானித்தால், அவர் உங்களையும் வழிநடத்துவார் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

Source: http://www.answering-islam.org/Testimonies/chariah.html 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்