முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி
முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி
("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
WAS MUHAMMAD A SINNER - PART 2
ஆசிரியர்: சைலஸ்
முஹம்மது ஒரு பாவி தான் என்று குர்ஆன் சொல்லும் சாட்சியை இங்கு முதல் பாகத்தை சொடுக்கி படிக்கவும்.
ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்கள்:
புகாரி ஹதீஸ்களில் உள்ள முஹம்மதுவின் வேண்டுதல்களின் சுருக்கத்தை இந்த கட்டுரையின் முதல் பாகத்தின் ஆரம்பத்தில் நான் கொடுத்து இருந்தேன். இப்போது, அந்த நான்கு ஹதீஸ்களை முழுவதுமாக இங்கு படிப்போம்.
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) ….
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' …
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ.
(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)
இந்த பாவமன்னிப்பின் ஜெபத்தில் அவர் "பாவம்" என்பதற்கு வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் "தன்ப்" என்ற வார்த்தைக்கு பதிலாக"க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.
இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (The Encyclopedia of Islam [9]) "க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையின் பொருளை கீழ்கண்டவாறு விவரிக்கிறது:
"Moral lapse, sin, a synonym of dhanb. The root means "to fail, stumble", "make a mistake", "of an archer whose arrow misses the target".
"நற்குண குறைபாடு, பாவம், 'தன்ப்' என்ற வார்த்தைக்கு சுமமானது". இதன் மூல வார்த்தையின் பொருள் "தவறுவது, தடுமாறுவது", "தவறு செய்வது", "குறி தவறிய அம்பை எய்தவன்" என்பவைகளாகும்.
முஹம்மது தன்னுடைய விண்ணப்பத்தில் (ஜெபத்தில்), பாவத்தின் அனைத்து விதங்களையும் அங்கீகரிக்கிறார்:
அதாவது:
• தீய செயல்கள்,
• தவறுகள்,
• தெரியாமல் செய்த தவறுகள்,
• பிழைகள்,
• தற்செயலாக செய்த பிழைகள்,
• வேண்டுமென்றே தெரிந்தே செய்த பாவங்கள்,
• கடந்த கால பாவங்கள்,
• எதிர்கால பாவங்கள் மற்றும்
• பெரிய பாவங்கள்
என்று அனைத்து விதமான பாவங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த செயல்கள் அனைத்தும் வெறும் சிறிய "தவறுகள்" அல்ல, அதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் "தண்டனைக்கு உகந்த பாவங்கள்" ஆகும், இதனை முஹம்மதுவின் விண்ணப்பத்தை கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம்.
முஹம்மது ஒரு பாவி என்று அவரே அங்கீகரித்து விட்டார். அவர் செய்த பாவ மன்னிப்பின் விண்ணமானது, அவர் தன்னுடைய பாவத்தின் தீவிரத்தை அறிந்திருக்கிறார் என்பதை நமக்கு காட்டவில்லையா? அல்லாஹ் பாவங்கள் செய்யும் மனிதர்களை தண்டிக்கிறார் என்பதை அறிந்திருந்தார், அதனால் தான் அவர் பாவமன்னிப்பிற்காக அல்லாஹ்விடம் வேண்டினார். தன்னுடைய குற்றங்களுக்காக நரகத்தில் எரிய முஹம்மது விரும்பவில்லை.
கடைசியாக, தான் தண்டிக்கப்பட்டு வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என்ற பயம் முஹம்மதுவிற்கு இருந்துக்கொண்டே இருந்தது.
சஹீ முஸ்லிம், [10], தொகுப்பு 4, எண் 1212
ஆயிஷா அறிவித்ததாவது:
ஒரு யூத பெண் என்னோடு இருக்கும் போது, இறைத்தூதர் என் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அந்த யூதப்பெண் இறைத்தூதரிடம்: "நீங்கள் கல்லரையில் இருக்கும் போது, உங்களுக்கு சித்திரவதை உண்டு என்பதை அறிவீர்களா?" என்று கேட்டாள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் நடுங்கிவிட்டார் மற்றும் சித்தரவதையை அனுபவிப்பது யூதர்களாவார்கள் என்று கூறினார். ஆயிஷா அறிவித்ததாவது: சில இரவுகளை நாம் கழித்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் கூறினார், "அல்லாஹ் எனக்கு என்ன வெளிப்படுத்தினார் என்று உனக்குத் தெரியுமா? ' நீ கல்லரையில் இருக்கும் போது உனக்கு சித்திரவதை உண்டு' என்று எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். இதன் பிறகு கல்லரையில் கொடுக்கப்பட இருக்கும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பிற்காக அல்லாஹ்வின் தூதர் வேண்டிக்கொள்வதை நான் கேட்டேன்.
Sahih Muslim, [10], Book 4, Number 1212:
Narrated Aisha:
"The Prophet entered my house when a Jewess was with me and she was saying: Do you know that you would be put to trial in the grave? The Messenger of Allah trembled (on hearing this) and said: It is the Jews only who would be put to trial. Aisha said: We passed some nights and then the Messenger of Allah said: Do you know that it has been revealed to me: "You would be put to trial in the grave"? Aisha said: I heard the Messenger of Allah seeking refuge from the torment of the grave after this."
கல்லரைக்குள் முஹம்மதுவிற்கு வேதனை உண்டு என்று அல்லாஹ் அவருக்கு "வெளிப்படுத்தினார்". இதனால், தனக்கு வரவிருக்கும் இந்த கல்லரையின் வேதனையிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று முஹம்மது தொடர்ச்சியாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார். முஹம்மது ஒரு சிறு குற்றமும் இல்லாத பரிசுத்தராகவும், தூய்மையானவராகவும் இருந்திருந்தால், கல்லரையில் ஏன் அல்லாஹ் அவருக்கு வேதனையை கொடுப்பேன் என்று சொல்லப்போகிறார்? முஹம்மது தன் பாவங்களைப் பற்றி அறிந்திருந்தார், அதனால் அவர் இறைவனிடம் பாவமன்னிப்பிற்காக வேண்டிக்கொண்டு இருந்தார்.
முஹம்மது என்னென்ன பாவங்களை செய்துள்ளார்? அவரது செயல்களை நீங்களே கவனித்து, சோதித்துப் பார்த்து, ஒரு முடிவிற்கு வாருங்கள். நான் இஸ்லாமிய நூல்களை ஆதாரங்களை வாசித்த போது, அதாவது குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா என்று சொல்லக்கூடிய அவரது வாழ்க்கை சரித்திரத்தை படித்த போது அதிர்ச்சியூட்டும் சில செயல்களை அவர் செய்ததாக கண்டேன். சில இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் இந்த செயல்கள் அனைத்தையும் அறிவார்கள். இவைகள் அனைத்தும் இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீது மிகவும் பக்தியுள்ள தீவிர இஸ்லாமியர்களே, இவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளார்கள்.
முஹம்மது செய்த சில பாவங்களின் பட்டியல்:
முஹம்மது செய்த சில பாவங்களின் விவரங்களை இங்கே காணலாம்.
1) அற்ப பணத்தை பெறுவதற்காக ஒரு மனிதனை கொடுமைப்படுத்தி, கொலை செய்தவர் முஹம்மது.
2) பெண் அடிமைகள் கற்பழிக்கப்பட அனுமதி அளித்தவர் முஹம்மது.
3) தன்னை "எதிர்த்தாள்" என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கொலை செய்ய வைத்தவர் முஹம்மது.
4) தன்னை "பரியாசம் செய்தாள்" என்ற காரணத்திற்காக ஒரு அடிமைப் பெண்ணை கொலை செய்தவர் முஹம்மது.
5) சாத்தானின் (இப்லீஷ்) வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாக கூறியவர் முஹம்மது.
மேலே உள்ள அனைத்து பாவங்களையும் செய்தவர் முஹம்மது ஆவார். இப்படிப்பட்டவர் தனக்கு பாவமன்னிப்பு வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது? தான் ஒரு பாவி என்ற உண்மை அவரது உள்ளத்தின் ஆழத்தில் வேறூன்றி இருந்தது.
இரண்டாம் பாகத்தின் முடிவுரை: முஹம்மது ஒரு பாவியாக இருந்தார் என்பதாகும்
முஹம்மது தான் ஒரு பாவியாக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டார்.தன்னுடைய பாவங்களை அவர் "தீய செயல்கள்" என்று அழைக்கிறார். ஆனால், பிறகு வந்த இஸ்லாமியர்கள், "இஸ்லாமுக்கு எதிரான ஒருகோட்பாட்டை சொல்கிறார்கள்", அதாவது முஹம்மது ஒரு பாவி அல்ல என்று கூறுகிறார்கள். இவர்கள் இப்படி கூறுவதற்கு காரணம், அவர்கள் முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக காட்ட முயற்சி எடுக்கிறார்கள்.
முஹம்மதுவின் கூற்றுகளின் படியே முஹம்மது ஒரு பாவி தான். முஹம்மது கொண்டு வந்த கோட்பாடுகளின் படி பார்த்தால், அவர் மன்னிக்கப்படாவிட்டால், நிச்சயமாக அவருக்கு இறை தண்டனை உண்டு.
முஹம்மது ஒரு பாவியா என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் முற்றுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தில் இயேசு எப்படி பரிசுத்தராக இருந்தார் என்பதை இஸ்லாமிய ஆதாரங்களின் படி நாம் காண்போம்.
ஆதார நூற்ப்பட்டியல்
[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.
[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at: http://answering-islam.org/Gilchrist/Vol1/
[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England
[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.
[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.
[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.
[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.
[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"
[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.
[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.
[11] இக்கட்டுரையின் அனைத்து குர்ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
mo-sinner.htm
Rev A: 4/26/00
ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER?
இதர கட்டுரைகள்:
இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1
முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19)
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)
முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
--
8/25/2010 12:13:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது