உரையாடலில் : முன்னாள் இமாம் மிகவும் எதிர்பார்க்கபடாத விதத்தில் ஒரு சுவிசேஷகராக மாறியுள்ளார்.
உரையாடலில் : முன்னாள் இமாம் மிகவும் எதிர்பார்க்கபடாத விதத்தில் ஒரு சுவிசேஷகராக மாறியுள்ளார்.
ஹப்துல் அலீம் ஒரு ஹபீஸாகாவும் பின்னர் அலீமாகவும் இருக்க பயிற்சியளிக்கப்பட்டவர். பின்னர் இமாம் ஆவதற்கு பயிற்சியளிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் ஆறு வருடம் இமாமாக பணியாற்றியவர். பின்னர் தேவன் அவரோடு பல மர்மமான முறையில் எதிர்பார்க்கப்பட்டிராத விதத்தில் இடைபட்டார். முன்னாள் இமாம் இருந்து இப்போது கிறிஸ்து இயேசுவுக்கு ஊழியஞ் செய்து கொண்டிருக்கும் அவருடனான பேட்டி அவரது மனதை திறந்து காட்டுகிறது.
Jerry Thomas (JT): இந்தியாவிலுள்ள An Apologetics Network க்கிற்கு உங்களை வரவேற்கிறேன் சகோ. அப்துல் ஹலீம்.
Abdul Haleem (AH): உங்களுடன் இருப்பது எனக்கும் மிகுந்த மிகழ்ச்சி.
Jerry Thomas (JT): உங்களுடைய பின்னனி மற்றும் குழந்தை பருவத்திலிருந்து ஆரம்பிப்போம், நீங்கள் கிறிஸ்தவராவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.?
Abdul Haleem (AH): நான் ஒரு பக்தி வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவன். இஸ்லாமின் கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடித்தவனாக நான் வளர்ந்தேன். நான் ஆறு வயதாயிருக்கும் போது குரான் படித்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். நான் ஒரு ஹபீஸாவதற்கு பயிற்றுவிக்கப்பட்டதால் முழு குரானையும் மனப்பாடம் செய்தேன். அதற்கு பிறகு நான் ஒரு ஹலீமாக பயிற்றுவிக்கப்பட்டேன் இரண்டு கோர்ஸையும் நான் வெற்றிகரமாக முடித்தேன். பின்னர் தொழுகை நடத்துவதற்கு நான் பயிற்றுவிக்ப்பட்டேன். ஒரு இமாமாக பெங்களுரில் ஒரு வருடமும் மும்பையில் மூன்று வருடமும் ஜெய்ப்பூரில் ஒரு வருடமும் அலிகரில் ஒரு வருடமும் பணியாற்றினேன். என்னுடைய சிறுவயதும் இளமை பருவம் இவ்வாறு குரானை கற்பதிலும் கற்றுக் கொடுப்பதிலும், தொழுகை நடத்துவதிலும் கழிந்தது.
Jerry Thomas (JT): சிறப்பான pசழகடைந எங்களுடைய தலைவர்கள் இந்த பதங்களின் விளக்கம் முழுமையாக தெரியாது. எனவே நான் அதை கொஞ்சம் விளக்கி சொல்ல வேண்டியுள்ளது. ஹபீஸ் என்றால் குரான் முழுவதையும் மனப்பாடம் செய்யும் ஒருவர். சில பாரம்பரியங்களின்படி அவர் இஸ்லாமியர்களில் மிக சிற்ந்தவராக கருதப்படுவார். மேலும் இஸ்லாமியக் கடவுளான அல்லாவுடன் கூட அவரும் குரானை பாதுகாக்கிறவர் ஆவார். எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி ஹபீஸாக இருக்கும் ஒருவர் அலீமாகவும் வேண்டும். அலீம் என்றால் இஸ்லாமிய அறிஞர் ஆகும். Surah 29:48 says: Nay, but it is (Quran), the clear Ayat, (preserved) in the breasts of those who have been given knowledge.இந்த ஆயத்தின் படி குரானை மனனம் செய்யும் ஒருவர் அலீமாகவும் வேண்டும் என்பதாகும். இமாம் என்பவர் மசூதியில் தொழுகை நடத்துபவர் மற்றும் குரானை போதிப்பவர். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் இவர்களெல்லாரும் மிக முக்கியமானவர்கள்.
சகோதரர் அப்துல் அவர்களே இது தெளிவாக விளக்குகிறது நீங்கள் இஸ்லாத்தின் உள் அமைப்பில் இருந்திருக்கிறீர்கள். உண்மையான எல்லா நபிகளின் நம்பிக்கையான இயேசுவுடைய சுவிசேஷத்தைக் கொண்டு உங்களை யார் சந்தித்தார்கள்?
Abdul Haleem (AH): இல்லை ஒருவரும் சுவிசேஷத்தைக் கொண்டு வந்து என்னை சந்திக்கவில்லை, நானும் எந்த சுவிசேஷக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. நான் குரானைப் படித்துக் கொண்டிருந்தே கிறிஸ்தவனாக மாறிவிட்டேன்.
Jerry Thomas (JT): என்னது குரானைப் படித்தா??? ஓ இது மிகவும் ஆச்சரியமாயும் வழக்கத்திற்கு மாறானதாகவும் இருக்கிறது. எந்த சுரா உங்களை உண்மையான நபிமார்களின் ஒரே உண்மையான இறைவனிடம் வழிநடத்தியது என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் எல்லாரும் இப்போது மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறோம்.
Abdul Haleem (AH): ஆமாம், அது ரொம்பவும் வித்தியாசமானது தான். சுரா 3:55 gbj;jNghJ vd; rpe;jidiaj; J}z;baJ. "Behold! Allah said, O Jesus, I am terminating your life, raising you to Me, and ridding you of the disbelievers. I will exalt those who follow you above those who disbelieve, till the Day of Resurrection. Then to Me is the ultimate destiny of all of you, then I will judge among you regarding your disputes." இந்த ஆயத்தில், இயேசுவில் விசுவாசம் கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்த்த வைக்கப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கும் வரை பல நாட்களாக இந்த ஆயத்தின் அர்த்தம் என்ன என்று நான் வியந்ததுன்டு. இஸ்லாமில் இறைவனுடைய வல்லமை தான் அவர் உண்மையான கடவுள் என்பதற்க மறுக்கமுடியாத அடையாளமாகும். எனவே, அமெரிக்கா யுத்தத்தில் வென்ற போது நான் நினைத்தேன் இந்த ஆயத்தின் அர்த்தம் எனக்கு புரிந்து விட்டது என்று. ஆனால் இப்பொழுது எனக்குத் தெரியும் அது தேவ அன்பு என்பதாகும். நிபந்தனையற்ற அன்புதான் உண்மையான இறைவனுக்கு அடையாளம் ஆகும்.
Jerry Thomas (JT): மிகவும் உண்மை சகோதரரே. இதைப் படிப்பவர்களுக்கு இஸ்லாமின் மன நிலையைப் பற்றி வியக்கக் கூடும், நான் கொஞ்சம் இதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அலி தஷீத் என்ற ஈரானிய அறிஞர் தன்னுடைய புத்தகமான இருபத்திமூன்று வருடங்கள்: முகமதுவின் தீர்க்கதரிசன வாழ்க்கையைப் பற்றி ஒரு ஆய்வு என்ற புத்தகத்தில் எழுதுகிறார்: பல்லாயிரக்கணக்கான மனிதர்களோடு கூட முகமது மெக்காவை வெற்றி கண்ட பிறகு யுடிடியள டீ யுடின ழட-ஆழவவயடநடி டநன யுடிர ளுழகலயn வழ வாந pசநளநnஉந ழக வாந pசழிhநவ றாழ நஒஉடயiஅநனஇ ' உனக்கு ஐயோ! இப்போது எல்லாரும் அறிந்திருக்கிற படி அளிக்கிற இறைவனைத் தவிர வேறொருவரும் இல்லை என்பதை நீ இப்பொழுது புரிந்து கொண்டிருப்பாய்" 'ஆமாம்" என்று அபு சோஃயான் பதிலளித்த, 'நான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நம்பிக்கைக்கு மாறிக் மாறிக்கொண்டிருக்கிறேன். 'நீ இன்னும் முகமது அல்லாவின் இறைத்தூதர் என்பதை மறுக்கிறாயா?" என்று முகமது கேட்டார். 'நான் இன்னும் அதைப்பற்றி யோசிக்க வேண்டும்" 'நீ நேரடியாக முஸ்லீமாக மாறிவிடு இல்லாவிட்டால் இப்பொழுது உன்னை சிரச்சேதம் பண்ணுவதற்கு முகமது கட்டளையிடுவார், என்று அப்பாஸ் கூறினார். எனவே மிகுந்த வருத்தத்தோடு சூழ்ந்திருந்த இஸ்லாமிய வீரர்களுக்கு முன்னிலையில் இஸ்லாமைத் தழுவினார்.
ஒரு முஸ்லீமுடைய மன நிலைக்கு இப்படிப்பட்ட வெற்றிகள் உண்மையான இறைவனுக்கு அடையாளமாகும். எனவே யுத்தம், தீயிட்டு எரித்தல், கொலை ஆகியவை இறைவனின் பழிவாங்கும் செயல்களாகும். ஆனால் ஒரு கிறிஸ்தவ மனநிலைக்கு இது (ரோமர் 12: 19-21) நியமிக்கப்பட்ட காலத்தில் தன் சத்துருக்களை நியாயம் விசாரிக்கப்போகிற ஒரே சர்வ வல்லமையுள்ள தேவனிடத்தில் இஸ்லாமியர்களுக்கு உள்ள குறைவான விசுவாசத்தைக் காட்டுகிறது.
நம்முடைய கேள்விக்கு திரும்ப வருவோம், நீங்கள் எப்போது இயேசுவின் சுவிசேஷம் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டது.?
Abdul Haleem (AH): இயேசு கிறிஸ்துவின் வல்லமையின் மீது நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நான் ஹைதரபாத்துக்கு வந்தேன். அங்கே எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர் ஒருவரை சந்தித்தேன், அவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றி பயிற்சி அளிப்பவர். அங்கே வந்த பிறகுதான் இஸ்லாமின் இறைவனையும், நபியையும் பற்றியதான உண்மையான தோற்றம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். நான் இஸ்லாத்தை விட்டு வந்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் மிக பிரச்சினையான சந்தர்ப்பங்களும் உருவானது, திரும்ப இஸ்லாமுக்கே சென்று விடலாம் என்று எல்லாம் நினைக்க தோன்றியது.
Jerry Thomas (JT): கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து மறுயோசனை செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன?
Abdul Haleem (AH): எனக்கு திரித்துவத்தை விசுவாசிப்பதிலும் இயேசு மனிதனாக அவதரித்தார் என்பதையும் ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் இருந்தது. இஸ்லாத்தின் இறைவனைப் பற்றி படித்த பிறகும் எனக்கு அல்லா தான் உண்மையான நபிமார்களின் இறைவனாக இருந்தார். சுரா 4: 33 ல் "We have inspired you, as we inspired Noah and the prophets after him. And we inspired Abraham, Ismail, Isaac, Jacob, the Patriarchs, Jesus, Job, Jonah, Aaron, and Solomon. And we gave David the Psalms." இந்த ஆயத்தில் சொல்லப்பட்டவைகள் என் மனதில் சிறுவயதிலிருந்தே ஆழமாக பதிந்திருந்தவை இதற்கு மாறக என்னால் யோசிக்க முடியவில்லை. ஏனென்றால் எந்த முஸ்லீமுக்கும், யூத மற்றும் கிறிஸ்தவர்களின் கடவுள்தான் இஸ்லாமின் கடவுள் ஆனால் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் புரிந்து கொள்ளுதலில் கெட்டவிட்டார்கள் இஸ்லாம் மட்டும் தான் இறைவன் மீது தனது சரியான விசுவாசத்தை வைத்துள்ளது என்ற மனநிலை இருக்கும்.
Jerry Thomas (JT): இது வெறும் முஸ்லீம்களுடைய தவறு மட்டுமல்ல. அநேக கிறிஸ்தவர்கள் கூட சரியாக பைபிளையும் (குறிப்பாக பழைய ஏற்பாட்டை) குரானையும் படிக்காமல் முஸ்லீம்களுடைய இறைவன்தான் பழைய ஏற்பாட்டின் கடவுள் என்று தப்பெண்ணங்கொள்கின்றனர். சத்தியமானது மறைக்கப்பட்டுக் கொண்டே இருக்கமுடியாது. நம்முடைய கிறிஸ்தவ சகோதரரிடத்தில் முகமதுவைப் பற்றி என்ன மேலும் வேறுபாட்டை புரிந்து கொண்டீர்கள்.?
Abdul Haleem (AH): நான் ஒரு குறிப்பில் அதை விளக்கி கூறுகிறேன். சுரா 21: 107 முகமது உலகத்திற்கு ஒரு இரக்கம் என்று சொல்லுகிறது. அநேக முஸ்லீம்களால் முகமது எதையாவது தவறாகச் செய்வார் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இருந்தாலும், நான் இந்த சகோதரர்களோடு ஹதீஸ்களைப் படிக்கும் போது பல காரியங்கள் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. சில உதாரணங்களை நான் காட்டுகிறேன். முகமது தன்னுடைய ஐந்து மனைவிகளை எந்த காரணமுமில்லாமல் விவாகரத்து செய்து விட்டார். இந்த மனைவிகள் தெருக்களில் போய் பிச்சை எடுத்து வாழ்ந்து, பரிதாபமாக செத்து மடிந்தார்கள். இங்கே அந்த இரக்கம் எங்கே போனது? அல்லது நம்முடைய சகோதரர் சொல்லுவது போல், முகமது தன்னை குறை கூறினவர்களை கொல்லக் கட்டளையிட்டார் இதில் என்ன இரக்கம் இருக்கிறது? ஒரு வேளை அவர் இரக்கமுடையவராக இருந்தால் ஒருவேளை அவர்கள் ஏதாவது தவறு செய்திருந்தாலும் அவர்களை வாழ விட்டிருக்க வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு மனந்திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நீங்கள் அவர்களை வாழ விடும் காலம் தான் இரக்கம் அவர்கள் ஒருவேளை மனந்திரும்பியிருந்தால் நித்திய வாழ்வைப் பெறுவார்கள் அது தான் நித்தியமான இரக்கம். ஆனால் நீங்கள் உடனடியாக அவர்களை கொன்று போட்டால் இரக்கம் எங்கேயிருக்கிறது.
இயேசுவும் கடவுளிடமிருந்து கொடுக்கப்பட்ட ஒரு இரக்கம் என்று சுரா 19: 21 கூறுகிறது. குரானை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலு; இயேசுவுடைய வாழ்க்கையைப் பற்றி படிப்பீர்களானால் அவருடைய இரக்கம் மற்றும் மன உருக்கத்தைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
Jerry Thomas (JT): ஆமாம், அநேக காரியங்களில் முகமதுவைப் பற்றி அப்பட்டமான பொய்களை எழுதியிருப்பதை நானும் பார்த்திருக்கிறேன். மற்றொரு நாள் ளுயலலனை யுடிரட யுடய ஆயரனரனi அவர்களுடைய "இஸ்லாமைப் புரிந்து கொள்ளுதல்" என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் முகமதுவைப் பற்றி எழுதுகிறார்: 'எல்லாபுறமும் கொடிய எண்ணங்கள் நிறைந்திருக்க முகமது மனிதாபிமான தயவான பால் வழிந்தோடுகிற இருதயத்தைப் கொண்டிருந்தார். அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் உதவசெய்கிறவர் அவர். பயனிகளுடன் அன்புடன் நடந்து கொள்பவர். ஒருவரையும் துன்பபடுத்தாது மற்றவர்களுக்காக தீங்கு அநுபவிப்பவர் அவர்." அந்த வாக்கியங்களை படிப்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பக்தி நிறைந்த முஸ்லீம்கள் எழுதிய பழைய இஸ்லாமிய தொகுப்புகளை படித்துப் பார்த்தால் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் முகமதுவை மனத இனத்திற்கான இரக்கம் என்று அழைப்பது என்பது இயலாத காரியம் ஆகும். ஆனால் இன்றைய அறிஞர்களாக அழைக்கப்படுபவர்கள் சாதாரண முஸ்லீம்களை தவறாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் ராபர்ட் ஸ்பென்சர் என்பவருடைய 'முகமதுவைப் பற்றின உண்மைகள்" என்ற புத்தகத்தில், அவர் பெரும்பாண்மையான மேற்கோள்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட பழைய இஸ்லாமிய ஆதராங்களிலிருந்து எடுத்து எழுதியிருந்தபோதும், பாகிஸ்தான் அந்த புஸ்தகத்தை தடை செய்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. முகமதுவைப் பற்றி முஸ்லீம்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை நாம் திருத்த வேண்டும்.
மற்றொரு கேள்வி நீங்கள் நம்முடைய சகோதரர்களிடத்தில் அதிக கேள்விகளைக் கேட்டு கொண்டேயிருப்பீர்கள், சில வேத பாட மாணவர்களை திணற வைக்கும் கேள்விகளை கேட்பீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன கேள்விகள் அவை?
Abdul Haleem (AH): (சிரிக்கிறார்) ஆமாம், நான் சில முக்கயமான இஸ்லாமிய கேள்விகளைக் கேட்பேன். நான் தான் இறைவன் என்று இயேசு எங்கே கூறியிருக்கிறார்? ஏன் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் திரித்து தேவனை விசுவாசிக்க வில்லை? எப்படி இறைவன் ஒரே சமயத்தில் மூன்றாகவும் ஒன்றாகவும் இருக்கமுடியும்? .....
Jerry Thomas (JT): பின்பு நீங்கள் எப்படி திருத்துவ தெய்வத்தையும், இயேசுவை தேவனாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்?
Jerry Thomas (JT): ஆமென், உங்களுக்கு இயேசு வெளிப்படுத்தி நம்ப வைத்த அந்த வசனத்தில் திரித்துவ தேவன் பற்றி இருப்பதைப் பார்க்கிறோம். ஆவியாகிய தேவன் (பரிசுத்த ஆவியினாலே), பிதாவும் குமாரனும் (கர்த்தர் என் ஆண்டவரோடே)!!!. சமீபத்தில் நீங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பாண்மையாக இருக்கும் ஒரு கிராமத்தில் சுவிசேஷத்தை பிரசங்கித்ததற்காக மரத்தில் கட்டப்பட்டீர்கள் என்று தெரியும். உங்கள் கௌரவம், குடும்பம், சமுதாயாம் ஏன் எல்லாவற்றையும் இயேசுவுக்காக விட்டுவிட்டீர்கள், இப்பொழுது தேவ ராஜ்ஜியத்திற்காக பாடு அநுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போன்ற அநேகருக்காக கிறிஸ்தவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை கொஞ்சம் சொல்லுவீர்களா?
Abdul Haleem (AH): நான் கிராமங்களில் இஸ்லாமியர்கள் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு மசூதியில் உள்ள இமாமோடு பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு பேரும் இறைவனின் பன்மைத் தன்மையைக்கான காரணங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். நான் எதைப் பற்றி பேசப்போகிறேன் என்பதை புரிந்து கொண்ட அவர், உடனடியாக என்ன நீங்கள் இயேசுவை இறைவன் என்று கூறுகிறீர்களா? என்று கேட்டார். அதற்குள்ளாக நாமாஸ்க்கான நேரம் வந்து விட்டடியால் அவர் செல்ல வேண்டியதாயிற்று. பாருங்கள் திரித்துவம் எவ்வளவு முக்கியமானது என்று அது உடனடியாக இயேசுவின் தெய்வத்தன்மைக்கு நம்மை கொண்டுசெல்கிறது. ஆனால் பல கிறிஸ்தவர்களுக்கு அதைப் பற்றிய தெளிவான அறிவு இல்லை. நான் பெங்களுரில் ஒரு கிறிஸ்தவ செமினாரில் பங்கு பெற்றுக்கொண்டிருந்தேன் அதில் அவர்கள் சொன்னார்கள், திரித்துவத்தை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல, அது அத்தனை ஆழமானது என்று. உடனே நான் எழுந்து அது தவறு என்று சொன்னேன். பின்னர் நான் அவர்களுக்கு திரித்துவத்தைப் பற்றியதான விளக்கம் கொடுத்தேன.
மேலும் ஒரு முஸ்லீம் இயேசுவிடம் வரும் போது பல கேள்விகள் அவருக்கு இருக்கும் நாம் அவர்களை நிராகரித்து விடக்கூடாது. அவர்களுடைய மொழி, சுவை, கலாச்சாரம் எல்லாம் வேறுபட்டதாக இருக்கும். நிறைய கிறிஸ்தவர்கள் என்னுடைய மொழி உச்சரிப்பின் மற்றும் கலாச்சார சுவை காரணமாக என்னை ஒரு கிறிஸ்தவன் என்று ஏற்றக் கொள்வதில்லை. இந்த அடிப்படையில் நமக்கு வேறு எந்ந ஆதரவும் இல்லாத நிலையில் நாம் நிராகரிக்கப்படுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
Jerry Thomas (JT): உங்களுடைய சாட்சியைக் கேட்கும் போது எனக்கு 'காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும், உனக்குத் தெரியாது, ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்." (யோவான் 3: 8) என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் முதலில் குரானைப் படித்தீர்கள் பின்னர் ஆப்கானிஸ்தான் யுத்தத்தைப் பற்றி கேட்டீர்கள். இயேசுவைக் காணக் கூடாத இடங்களில் கண்டு பிடித்திருக்கிறீர்கள். இருந்தாலும் நமக்கு புரியாத வழிகளில் தேவன் இடைபடுகிறார். தேவன் உங்களை ஆசீர்வதித்து உங்கள் தேவைகளையெல்லாம் சந்திப்பாராக. எங்களோடு நேரம் செலவிட்டதற்கு நன்றி அப்துல் அவர்களே.
Abdul Haleem (AH): Thank you Jerry.