பேனாவை மிரட்டிய கத்திகள் - சுஜாதாவும் இஸ்லாமும்: உமர் விமர்சனம்
பேனாவை மிரட்டிய கத்திகள் - சுஜாதாவும் இஸ்லாமும்: உமர் விமர்சனம்
முன்னுரை: எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு முன்பு, உலகமெல்லாம் பரந்து கிடக்கும் கடலில் ஒரு மில்லி லிட்டர் தண்ணீரைப் போன்றவன் நான். எனக்கு சுஜாதாவைப் பற்றி பேசவோ எழுதவோ தகுதி இல்லை. நான் அவருடைய எழுத்துக்களை ரசிப்பவன் ருசிப்பவன். இப்படி இருந்தும் இஸ்லாமிய சகோதரர்கள் வெளியிட்ட ஒரு கட்டுரை என்னை இந்த சிறிய கட்டுரையை எழுத தூண்டியுள்ளது.
குர்ஆனைப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து என்ன?
இஸ்லாமிய தளங்களில் நான் கண்ட கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்:
Quote:
தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே…
"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
.....
.....
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்." http://neshamudan.blogspot.com/2008/03/blog-post_11.html
சுஜாதா அவர்களின் இந்த வரிகள் பற்றி என் கருத்து:
மற்றவர்கள் இஸ்லாமை புகழ்ந்தால், மகிழ்ச்சியில் துள்ளும் இஸ்லாமியர்கள்:
பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தைப்பற்றி மற்றவர்கள் முக்கியமாக மாற்று மதத்தவர்கள் புகழ்ந்தால், அதுவும் புகழ் பெற்றவர்களாகிய எழுத்தாளர்கள், ஆட்சியில் இருப்பவர்கள், தலைவர்கள் போன்றவர்கள் புகழ்ந்தால் மிகவும் மனதிற்கு ஜில்லென்று இருக்கும். இது எல்லா மத நம்பிக்கையுள்ளவர்களுக்கும் பொருந்தும். அதே போலத்தான் இஸ்லாமியர்களும், இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால், அதே நபர் அல்லது மற்றவர்கள் "இஸ்லாமைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் எதிராக பேசிவிட்டால் போதும்... " எத்தனை தர்னாக்கள், எதிர்ப்பு கூட்டங்கள், கடை உடைப்புக்கள் இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
மற்றவர்கள் புகழும் போது சந்தோஷப்படும் அதே மனம், மற்றவர்கள் குறை கூறும் போது, நாம் நிதானத்தை இழக்காமல் அதற்கு சரியான பதில் தரமுயலவேண்டும். மற்றும் நம்மிடம் அந்த குறை உள்ளதா இல்லையா என்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஏன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இப்படி புகழ்ந்தார்?
சுஜாதா அவர்களின் ஞானத்திற்கு முன்பாக நான் ஒரு பைசா கூட தேரமாட்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒரு எழுத்தாளர், அதுவும் பல துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர் இப்படி சொன்னார் அதுவும் குர்ஆன் பற்றி இப்படி சொன்னார் என்ற செய்தியை படித்தவுடன் மனதின் அடித்தளத்தில் ஒரு பெரிய சுத்தியைக்கொண்டு அடிப்பது போல ஒரு உணர்வு எனக்கு. [ஏன் கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் புகழ்ந்தால் நீ சந்தோஷப்படமாட்டாயா? என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் சென்று பல நொடிகள் ஆகிவிட்டது. சந்தோஷப்படுவேன், இதில் சந்தேகமில்லை, ஆனால், ஒரு வேளை அவர் கிறிஸ்தவத்தைப் பற்றி அவதூறாக பேசினாலும், அதை நான் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், வேதம் என்பது நல்லதா கெட்டதா என்று மற்றவர்கள் சொல்லி நாம் தெரிந்துக்கொள்வது அல்ல, நாமாகவே படித்து புரிந்துக்கொள்வது]
மனிதர்களின் வகைகள்:
மனிதர்கள் மத சம்மந்தப்பட்ட விவகாரங்களைப் பொருத்தமட்டில் கீழ்கண்ட மூன்று பிரிவினர்களாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து.
1. எம்மதமும் சம்மதம் என்பவர்கள்
2. என் மதம் மட்டும் தான் சம்மதம் என்பவர்கள்
3. எம்மதமும் சம்மதமில்லை என்பவர்கள்
சமுதாயத்தில் நாம் காணும் கவிஞர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் பெரும்பான்மையாக முதல் வகையை சம்மந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். எம்மதமும் சம்மதம் என்று நான் சொன்னது, இவர்கள் எல்லா சாமிகளையும் வணங்குவார்கள் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை, அதற்கு மாறாக மற்ற மத மக்களின் மனதை புண்படுத்தும்படி பேச முயலமாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு சின்ன ஊரில் ஒரு முஸ்லீம் மருத்துவர் இருந்து, அந்த ஊரில் உள்ள மக்கள் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில், இந்த மருத்துவரை அழைத்து ஒரு பள்ளியில் அல்லது திருவிழாவில் பேசும் படி கேட்டுக்கொண்டால், இவர் மேடையில் மற்ற சாமிகளை பழித்துப் பேசுவாரா? பேசமாட்டார், பொதுவாக உள்ள சில நல்ல விஷயங்களை பேசி முடித்துக்கொள்வார்.
இதே போல, இஸ்லாம் பற்றி இரம்ஜான் அன்று செய்தித்தாளில் பதிப்பதற்கு ஒரு கட்டுரையை எழுதிக்கொடுக்கும் படி பத்திரிக்கையாளர்கள் சுஜாதா போன்ற எழுத்தாளர்களை கேட்டுக்கொள்ளும் போது, இவர் தனக்கு சில உண்மைகள் தெரிந்து இருந்தாலும், எப்படி எழுதுவார்? இஸ்லாமை புகழ்ந்து தான் எழுதவேண்டும், இது தான் மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்திற்காக சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள ஒரு எழுத்தாளர் செய்யவேண்டிய வேலை.
என்னைக்கேட்டால், சுஜாதா அவர்கள் செய்தது சரியானது என்றுச் சொல்லுவேன், ஆனால், 100% சரியானது என்றுச் சொல்லமாட்டேன். அவர் முதலில் எழுதிக்கொண்டு வந்தது சரியாக உள்ளது, ஆனால், கடைசி பத்தி மட்டும் சரியானது என்று ஏற்றுக்கொள்வது சிறிது கடினமே. அவர் ஏதாவது எழுதவேண்டுமானால், பொதுவாக எழுதவேண்டுமே தவிர, குர்ஆனையும், ஒரு சில இஸ்லாமியர்கள் எழுதிய நூல்களை மட்டும் படித்துவிட்டு, கீழ்கண்டவாறு அவர் எழுதியது தான் எனக்கு வேதனையாக உள்ளது.
Quote:
===============
....'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
.....
.....
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
===============
இஸ்லாமியர்கள் பதித்த "சுஜாதாவின் பார்வையில் குர்ஆன்" என்ற கட்டுரை, சுஜாதா அவர்கள் மறைவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் எழுதி பதித்து இருந்தார்களானால், என்னுடைய இந்த கட்டுரை "நான் சுஜாதா அவர்களுக்கே" முதலில் அனுப்பியிருப்பேன்.
அப்படியானால், சுஜாதா அவர்களுக்கு இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரியவில்லை என்று சொல்கிறீர்களா என்று என்னை கேட்டால்:
ஆம் என்பது தான் என் பதிலாக இருக்கும். ஏனென்றால், சுஜாதா அவர்கள் சொன்ன விவரங்களிலிருந்து, அவர்:
1) குர்ஆனை மட்டுமே படித்துள்ளார்
2) சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளார்.
இஸ்லாமை அறிந்துக்கொள்ள வேறு என்னத்தை படிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டால்,
1) குர்ஆனோடு கூட, ஹதீஸ்களை அவர் படித்து இருக்கவேண்டும்,
2) முகமதுவின் வாழ்க்கை சரிதையாகிய சீராவை படிக்கவேண்டும்,
3) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிய முகமதுவின் சரித்திரத்தை படிக்கவேண்டும்
அப்போது தான் குர்ஆன் பற்றி எல்லாம் நன்றாக புரியும். குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் முகமதுவின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. முகமதுவின் வாழ்க்கையை அறிந்துக்கொள்ளாமல் குர்ஆனின் வசனங்களுக்கு பொருள் கூறுவது என்பது முடியாத காரியம். இது முஸ்லீம்களுக்கே தெரியும்.குர்ஆனின் வசனங்கள் ஒரு மனிதனின் உடல் என்றுச் சொன்னால், அந்த உடல் நடமாட உயிர் முக்கியம், அது போல குர்ஆனை புரிந்துக்கொள்ள முகமதுவின் வாழ்க்கை என்னும் உயிர் தேவை, ஹதீஸ்கள் தேவை.
ஏன்? குர்ஆனும், முகமதுவின் வாழ்க்கையை சொல்லும் ஒரு சில இஸ்லாமிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களும் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ள போதாதா? என்று கேட்டால், போதாது என்பது தான் என் பதிலாக இருக்கும்.
இஸ்லாமிய அறிஞர்கள் முகமதுவின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்வார்கள், மறுபக்கத்தை யார் சொல்வது, நாமாகத்தான் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும், அல்லது இஸ்லாமியர் அல்லாதவர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கவேண்டும், அப்படியும் இல்லையானால், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதையை படிக்கவேண்டும்,இதையெல்லாம் படிக்காமல் இஸ்லாம் பற்றி விவரிப்பது, சரியானதாக இருக்காது என்பது என் கருத்து.
ஒரு வேளை, சுஜாதாவே என்னிடம் இயேசு பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டால், நான் என்ன "பி. ஜைனுல் ஆபீதீன்" அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தையா அவரிடம் கொடுப்பேன், நாத்தீகர்கள் எழுதுகின்ற புத்தகத்தையா கொடுப்பேன்? இல்லை,அதை கொடுக்கமாட்டேன். அதற்கு பதிலாக பைபிளை கொடுப்பேன், அல்லது சில கிறிஸ்தவ ஆசிரியர்கள் இயேசுவைப்பற்றி புகழ்ந்து எழுதியதை கொடுப்பேன். அதே போலத்தான், இஸ்லாமியர்கள் எப்படிப்பட்ட புத்தகங்களை இவரிடம் கொடுத்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? முகமதுவின் வாழ்க்கை முழுவதும் அறிந்துக்கொள்ள, குர்ஆன் வசனங்களின் சரியான அர்த்தங்களை அறிந்துக்கொள்ள குர்ஆன் மட்டும் போதாது.
ஆக, சுஜாதா அவர்கள் கொஞ்சம் கவனமாக எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து. நானும் சுஜாதா அவர்களின் தீவிர ரசிகன் தான், என்னை யாரும் தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம். சுஜாதாவின் ரசிகர்களின் மனது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன், ஆனாலும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே".
என் சந்தேகம்: சுஜாதாவிற்கு இஸ்லாமிய மிரட்டல்கள், பயமுறுத்தல்கள்: இது உண்மையா?
இன்னும் சுஜாதா இஸ்லாம் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்று தெரிந்துக்கொள்ளலாம் என்று இணையத்தில் தேடும் போது, கீழ்கண்ட தகவலைக் கண்டேன். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் தான் என் சந்தேகத்தை தீர்க்கவேண்டும்.
அதாவது, சுஜாதா அவர்கள் ஜுனியர் விகடனில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி என்ற கருப்பொருளில் "காலச்சுவடுகள்" என்ற கட்டுரைத்தொடரை எழுதும் போது, சிரிரங்கத்தில் இஸ்லாமிய போர்வீரர்களால் 10,000 இந்துக்கள் கொள்ளப்பட்டார்கள் என்று அவர் தன் தொடரில் எழுதியதைத் தொடர்ந்து, அவருக்கு பயமுறுத்தல் மற்றும் மிரட்டல் கடிதங்கள் வந்ததாகவும், அதனால், அவர் அத்தொடரை எழுதுவதை சிறிது காலம் தள்ளிப்போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? அல்லது பொய்யா?
Quote:
============
I believe, when he wrote about the massacre of ten thousand Sri
Vaishnavas in Srirangam by invading muslim armies, he got hate mails and
threats; this made him postpone his proposed series on Islam and Quran.
(Sujatha has said so, I think in Junior Vikatan).
Source: http://www.ponniyinselvan.net/messages/view/writer-sujatha-died--021755.html
============
எனவே, இக்கட்டுரை படிப்பவர்கள், கீழ்கண்ட தகவல்களை கண்டரிந்து பதித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
1) சுஜாதா அவர்கள் எந்த பத்திரிக்கையில் இஸ்லாம் பற்றிய சரித்திர தொடரை எழுதினார்?
2) அந்த தொடரின் பெயர் என்ன?
3) எத்தனை தொடர்கள் அவர் எழுதிமுடித்தார்?
4) எந்த தேதிகளில் எழுதினார்? (பத்திரிக்கை வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ வரும், அந்த தேதி)
5) திடீரென்று தொடர் எழுதுவதை நிறுத்திவிட்டாரா?
6) அப்படி நிறுத்தியிருந்தால், என்ன காரணம்? ஜூனியர் விகடனில் அவரே சொன்னதாக சொல்லப்படுகிறது. அது சரியா?
7) மறுபடியும் அத்தொடரை தொடர்ந்து முடித்தாரா இல்லையா?
தெரிந்தவர்கள் இக்கேள்விக்கு பதிலை தரலாம். ஒரு வேளை இந்த செய்தி தவறாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி தவறாக இருக்குமானால், இந்த செய்தியை நான் வெளியிட்டதற்கு வருந்துகிறேன், இருந்தாலும் என் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவே இந்த செய்தியை இங்கு வைத்தேனே தவிர யாரையும் குற்றப்படுத்துவதற்கு அல்ல.
முஸ்லீம்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நான் அதிகமாக விரும்பிப்படிக்கும் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கீழ்கண்டவாறு எழுதினார், அதை நீங்கள் உங்கள் தளங்களில் பெருமையாக பதித்தீர்கள், நல்லது.
Quote:
------------------
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
------------------
ஒருவகையில் பார்த்தால், சுஜாதா அவர்கள் என்னையும் குற்றப்படுத்தினார் என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு ஆசிரியரின் கீழ் மாணவனைப்போல நான் இதை மிகவும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறேன்.
குர்ஆனில் உள்ள 164 ஜிஹாத் வசனங்கள்:
ஆனால், என் கேள்வி என்னவென்றால்: ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் மற்றும் இதர தளங்களில் குர்ஆனில் 164 ஜிஹாத் பற்றிச் சொல்லும் வசனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவைகள் உண்மையாகவே, ஜிஹாத வசனங்கள் தானா இல்லையா என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் பதிலைப் பொருத்து தான் இதை நான் நிர்ணயிக்கமுடியும்.
Quote:
164 Jihad Verses in the Koran
Compiled by Yoel Natan
II. Horizontal List of Verses
In text-only format
The Koran's 164 Jihad Verses: K 002:178-179, 190-191, 193-194, 216-218, 244; 003:121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195; 004:071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104; 005:033, 035, 082; 008:001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075; 009:005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081, 083,086, 088, 092, 111, 120, 122-123; 016:110; 022:039, 058, 078; 024:053, 055; 025:052; 029:006, 069; 033:015, 018, 020, 023, 025-027, 050; 042:039; 047:004, 020, 035; 048:015-024; 049:015; 059:002, 005-008, 014; 060:009; 061:004, 011, 013; 063:004; 064:014; 066:009; 073:020; 076:008
Source:
http://www.answering-islam.de/Main/Quran/Themes/jihad_passages.html
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இன்று நம்மோடு இருந்திருப்பாரானால், நான் இந்த வசனங்களை அவருக்கு அனுப்பி பொருள் கேட்டு இருப்பேன், நான் கொடுத்துவைத்தது அவ்வளவு தான். அதனால், நீங்கள், அதாவது தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள், இந்த 164 வசனங்களுக்கு சரியான பொருள் என்ன என்று கூறினால், சுஜாதா அவர்கள் சொன்னது சரியானதா, அதாவது குர்ஆனை படிப்பவர்களின் மனதில் தான் பிரச்சனையா? அல்லது குர்ஆனில் தான் பிரச்சனையா என்பது விளங்கிவிடும்.
இந்த வசனங்களுக்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் பொருள் கூறுகின்றோம் என்று சொன்னால், அது தவறானது என்று நீங்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். எனவே, உங்கள் வேதத்தை நீங்களே எங்களுக்கு விளக்குங்கள். இஸ்லாமைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புபவர்களின் முகத்தில் கறியை பூச உங்களுக்கு இது ஒரு சரியான சந்தர்ப்பம். உங்கள் சத்திய மார்க்கத்தை அனைக்க முற்படுபவர்களுக்கு ஒரு சரியான சாட்டையடி.
இஸ்லாமியர்களுக்கு பல தளங்கள் தமிழில் உண்டு, எனவே, நீங்கள் ஒன்றாகவோ, அல்லது தனித்தனியாகவோ இவ்வசனங்களை விளக்கி தொடர் கட்டுரைகளாக பதிப்பீர்களானால், யார் யாரெல்லாம் கேள்வி கேட்பார்களோ அவர்களுக்கு இந்த தொடர் கட்டுரைகளை நீங்கள் மேற்கோள்களாக காட்டிவிடலாம்.
நீங்கள் இந்த வசனங்கள் விளக்கும் போது, கீழ்கண்ட விதத்தில் விளக்கினால், மிகவும் உதவியாக இருக்கும், எல்லாருக்கும் நன்றாக புரியும்.
1) ஜிஹாத் வசனங்களை முதலில் குறிப்பிடுங்கள்
2) இந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் வெளிப்பட்டது என்று தெரிவியுங்கள்.
3) இந்த வசனங்களின் உண்மை பொருள் என்ன என்று சொல்லுங்கள்.
4) இந்த வசனங்கள் தற்காலத்திற்கு ஒத்துவருமா வராதா என்று விளக்குங்கள்,
5) அப்படி ஒத்துவருமானால், எந்த சூழ்நிலையில் தற்காலத்தில் இவ்வசனங்களை பயன்படுத்தலாம் என்று விளக்குங்கள்.
6) இவ்வசனங்களை சராசரி தனி மனிதன் கையாளலாமா? அல்லது அரசாங்கம் தான் கையாள வேண்டுமா என்று விளக்குங்கள்.
இப்படி எல்லா வசனங்களுக்கும் நீங்கள் பொருள் கூறுவீர்களானால், மற்ற இஸ்லாமியர் அல்லாதவர்கள் எல்லாரும், இனி யாரும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று சொல்லமாட்டார்கள்.
நீங்கள் உங்கள் வேதத்தில் உள்ள வசனங்களை விளக்கவில்லையானால், இஸ்லாமியர் அல்லாதவர்கள் இவைகளை தங்களுக்கு ஏற்றபடி விளக்கவேண்டிய அவசியத்தில் தள்ளப்படுவார்கள். அப்போது நீங்கள் மறுபடியும், இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள் என்று சொல்லவேண்டி வரும். எனவே, உங்கள் வேதத்தை எங்களுக்கு முதலாவது நீங்கள் விளக்குங்கள், அது சரியா இல்லையா என்பதை எல்லாரும் தெரிந்துக்கொள்வார்கள்.
முடிவுரை: இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட சில சந்தேகங்களை தீர்த்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கட்டுரையில் இரண்டு சந்தேகங்களை நான் வைத்துள்ளேன்,
1) சுஜாதா அவர்கள் இஸ்லாம் பற்றி ஏதாவது தொடர் கட்டுரைகளை எழுதினாரா இல்லையா? அதன் விவரங்கள் என்ன?
2) இஸ்லாமிய சகோதரர்கள் சுஜாதாவின் மீது வைத்த அன்பின் காரணமாக, அவர் சொன்னது சரியானது என்று நிருபிக்க, இந்த 164 ஜிஹாத் வசனங்களை விளக்கினால், நாம் அனைவரும் அவர்களுக்கு கடமை பட்டு இருப்போம். மற்றும் இந்த வசன்ங்களை விளக்குவது முஸ்லீம்களின் கடமையாக உள்ளது.
இக்கட்டுரை பொது நலன் கருதி எழுதப்பட்டது, யாரையும் குற்றப்படுத்தவோ, வேதனைபடுத்துவதற்கோ அல்ல. இக்கட்டுரையை, மனதில் எந்த குற்ற உணர்வும், வெறுப்பும் இல்லாமல் படிப்போமானால், இக்கட்டுரையில் யாரையும் வெறுக்கும் அளவிற்கு எதுவும் சொல்லப்படவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். பிரச்சனை இக்கட்டுரையில் இல்லை, படிப்பவர்களின் மனதில் தான் உள்ளது என்று சொல்லிக்கொள்கிறேன்.
Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12449#12449