ஒரு பிரபல இஸ்லாமிய இயக்கத்தின் தலைர் கிறிஸ்தவராகிறார்
தேவன்
என்னோடு இடைபட்டார்.1962 இல் , மசூதியில் பேசுவதற்காக நான் ஆயத்தம் செய்து கொண்டிருந்த பிரசங்கத்தைக் குறித்து நான் தியானிக்கையில் குர்ஆனில் உள்ள வசனம் 5:68 ல் வேதத்தையுடையவர்களே , நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும் உங்கள் இறைவனிடமிருந்த உங்களுக்கு அருளப்பெற்ற மற்றவைகளையும் மெய்யாகவே நீங்கள் கடைபிடித்தொழுகும் வரை , நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர். (5:68)ஏற்கனவே
நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த வசனத்தை வாசித்திருந்தபோதிலும, அன்று வாசிக்கும் போது , "பைபிளில் உள்ள தவ்றாத்தும் இன்ஜீலும் உண்மைதான்" என்று என் அந்தராத்மா சொல்லிவந்தது, ஆனால் என் மூளையறிவோ, "இப்போது உள்ள தவ்றாத்தும் இன்ஜீலும் உண்மையானவை அல்ல கிறிஸ்தவர்கள் அதை சிதைத்துவிட்டனர் "என்று மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது . எனது மனசாட்சிக்கு அமைதியும் சாந்தியும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இரவு தொழுகையில் என்னுடைய பிரச்சினையை அல்லாவிடம் பாரத்துடன் விண்ணப்பித்தேன்.அந்த
சமயத்தில் குர்ஆன் 5:68 ஆம் அத்தியாயத்தை தவிர வேறுபல குர்ஆனின் வாக்கியங்களும் என் நினைவிற்கு வந்தது."
நிச்சயமாக நாம் , மூஸாவுக்கு ஒரு வேதத்தை கொடுத்திருந்தோம் , ஆகவே நபியே அவர் அதனை பெற்றதைப் பற்றி நீர் சந்தேகிக்காதீர் . நாம் மூஸாவுக்கு கொடுத்த அதனை இஸ்ராயீலீன் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக்கினோம் "(32:23) "முன்னிருந்த
நபிமார்களாகிய அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தம்முன் இருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி,அவருக்கு இன்ஜீல் என்னும் வேதத்தையும் நாம் அருளினோம் . அதில் நேர்வழியும் பிராகாசமும் இருக்கின்றன . அது தன் முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மையாக்கி வைக்கின்றது. பயபக்தியுடையோருக்கு அது ஒரு நேர்வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருக்கின்றது." ( 5:46)"
இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் அறிவித்திருக்கும் கட்டளைகளின் பிராகாரமே தீர்ப்பளிக்கவும், எவர்கள் அல்லாஹ் அருளிய கட்டளைகளின் பிராகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாகப் பாவிகள்தாம்" ( 5:47)இப்படி
கடவுளின் திருச்சித்திற்கு இசைவாகவே தவ்றாத்தும் இன்ஜீலும், யதார்த்தமான சத்திய வழிகளை காண்பிக்கின்றன என்ற குர்ஆனின் இந்த அதிகாரத்தையும், ஆதாரத்தையும் கொண்டே பைபிளை ஆழமாக, ஒழுங்காக வாசிக்கும் படி இறைவன் என்னோடு பேசினார்.இப்படி
பைபிளுடைய எதிரியாக அல்லாமல் நண்பனாக நான் பைபிளை ஆழமாக படிக்க ஆரம்பித்தேன் அப்போது பல காரியங்களை இறைவன் எனக்கு தெளிவுபடுத்தினார். முதன் முதலாக என் கண்ணில் பட்ட வசனம் "என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்" என்ற வார்த்தை முகமது நபியை அல்ல இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது என்று அறிந்துகொண்டேன் .இப்படி
பல வெளிப்பாடுகளின் நிமித்தம் பைபிள் உண்மையிலே தேவனுடைய வார்த்தைதான் என்ற மனப்பிராகசத்தையும, உள்ளுணர்வையும் நான் பெற்றேன். பரிசுத்த வேதாகமத்தை நான் விசுவாசித்து ஏற்றுக்கொண்டபோதும் வெளிப்படையாக ஞானஸ்நானத்தின் மூலம் கீழ்படிந்து கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை என்னுடய சொந்த இரட்சகர் என்று அறிக்கையிடுவதில் என் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் முட்டுக்கட்டையாக இருந்தது. 1961 முதல் 1964 வரை நான் இரு சமயங்களுக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன் . இஸ்லாமிய முறைப்படி தொலுகை செய்து ,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசலும் , ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும் சென்று வந்தேன் . 1964 ம் ஆண்டிலிருந்தே என் இருதயத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பிவிட்டார். அதுமுதல் அந்தரங்க கிறிஸ்தவனாக பயத்தோடு வாழ்ந்து வந்த என்னுடைய ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுத்தார் . 1969 ம் வருடம் டிசம்பர் 26ம் நாள் நானும் என் மனைவியும் , ஏழு பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெற்றோம் . அன்றிலிருந்தே எங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றி அமைக்கத்தக்க ஆசிர்வாதங்களை தேவன் பொழிந்தருளினார்.இயேசுவை எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்ட செய்தி காட்டுத் தீ போல பரவியது . இஸ்லாமிய செய்தித்தாள்கள் இப்படி செய்திகளை வெளியிட்டது .ஒரு பிரபல இஸ்லாமிய இயக்கத்தின் தலை
ர் கிறிஸ்தவராகிறார்என்ற
தலைப்பின் கீழ் , முகம்மதியா வகுப்பை சேர்ந்தவரும் , தனது வாலிபத்தில் கீர்த்தி வாய்ந்த தலைவரும் , ஜிஹாத் என்ற பத்திரிகையின் தலைமைப் பதிப்பாளருமாக இருந்தவர் .என்ற செய்தி வெளியானது .வேறுபல எழுத்தாளர்களும் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடலானார்
. அண்டிமாஸ் என்பவர் : முகமதியா இயக்கத்தின் முக்கியஸ்தர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார் , அதிர்ச்சி தரும் செய்திஆர்த்தும்
ஆர்தா என்றவறொரு எழுத்தாளர் இந்தத்தகவல் உண்மையல்ல என்று நம்புகிறோம் , சுதந்திரப்போராட்ட வீரர்களுள் முன்னோடியான ஹம்ரான் அம்ப்ரி மதம் மாறி விட்டார் என்பது இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது .பெயர்
சொல்லப்படாத வேறொரு எழுத்தாளர் அண்மைக்கால பொருளாதார சிக்கல்கள் இஸ்லாமில் ஊறிப்போன ஒரு மதவாதியை மதம் மாறச் செய்துவிட்டது. என்று பன்ஜார் மாசினில் உள்ள முஸ்லீம்களுக்கு வெறுப்புடன் எழுதினார் , I.A.I.N அண்டசாரி முஸ்லீம் பல்கழைகழகம் என்னுடைய மனந்திரும்புதலுக்கு பெரிய எதிர்ப்பு தெரிவித்தது இதற்கிடையில் P.M.W (முகம்மதியா) கழகத்தின் செயலாளர் நான் ஒரு முகம்மதியா முக்கியஸ்தனாக இருந்த வரலாற்றையே மறைக்க பிராயசப்பட்டார் . என்றாலும் நான் ஒரு சிறந்த முஸ்லீம் போராட்டக்காரர் என்று அங்கீகரித்தார் .இவ்வாறு
என்னைப் பற்றி பல அவதூறன செய்திகளும் இந்த இஸ்லாமிய பத்திரிக்கையிலே வெளியாகி வந்தன. அவர்களுடய நோக்கம் இப்படி என்னை அவமானப்படுத்துவதின் மூலம் நான் திரும்ப இஸ்லாமுக்கு வந்து விடுவேன் என்பதுதான் . ஆனால் மாறாக இவையனைத்தும் நான் கிறிஸ்துவில் தீவிரமாக வளர்வதற்கும் நான் கிறிஸ்தவனாகிய சாட்சியை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கே உதவியது . தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் , ஆமென் .