இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 31, 2010

மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது:ஸவ்தா பின்ட் ஜமா

 

மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது


ஸவ்தா பின்ட் ஜமா

கீழே கொடுக்கப்பட்ட‌ நிகழ்ச்சி ஸவ்தா பின்ட் ஜமா என்ற ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும். இப்பெண் ஆரம்பகால இஸ்லாமியர்களில் ஒருவராக இருந்த "அஸ் ஸக்ரன் இபின் அமர் இபின் அப்த் ஷம்ஸ் (as-Sakran ibn 'Amr ibn 'Abd Shams)" என்ற ஒருவரை திருமணம் செய்து இருந்தார். மக்காவில் தனக்கு கொடுமைகள் அதிகரித்ததால், இவர் தன் மனைவியாகிய ஸவ்தாவையும், இன்னும் தன் நண்பர்களாகிய ஏழுபேரோடும் கூட‌எத்தியோப்பியாவிற்கு தப்பித்துச் சென்றார். எத்தியோப்பியாவில் ஸவ்தாவின் கணவர் மரித்துவிடுகின்றார், இதனால் அப்பெண் தன் தாய் நாட்டிற்கு திரும்பி வருகிறார்.

இந்த கால கட்டத்தில் தான் முஹம்மது தன் மனைவி கதிஜாவை இழந்து தனிமரமாக நிற்கிறார்.

சீக்கிரத்திலேயே முஹம்மது ஸவ்தாவை திருமணம் செய்துக்கொள்கிறார். ஸவ்தாவின் மற்றும் முஹம்மதுவின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பினால் இவர்கள் வேதனை அடைந்து இருப்பதினால், ஒருவரின் மனவேதனையை இன்னொருவர் புரிந்துக்கொண்டவர்களாக இவ்விருவர் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு வாழ்ந்தனர்.

காலம் செல்லச் செல்ல, முஹம்மது இன்னும் அனேக பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அவர் மரிப்பதற்கு முன்பாக அவருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தார்கள்.

இபின் கதீர் என்ற‌ இஸ்லாமிய விரிவுரையாளர் கூறும் போது, முஹ‌ம்ம‌து ம‌ரிக்கும் போது அவ‌ருக்கு ஒன்ப‌து ம‌னைவிக‌ள் இருந்தாக‌ கூறுகிறார்.

ஆனால், முஹம்மது தன் நாட்களை எட்டு மனைவிகளுக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்து இருந்தார். முஹம்மது செல்லாத அந்த ஒன்பதாவது மனைவி யார் என்று கேட்டால், அவர் தான் ஸவ்தா என்பவராவார். இந்த ஸவ்தா என்ற முஹம்மதுவின் மனைது தன்னிடம் வந்து முஹம்மது தங்கும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்து இருந்தார்.

முஹம்மதுவிற்கு ஒரு நீண்ட கால துணையாக மனைவியாக வாழ்ந்த ஸவ்தா, ஹதீஸ்கள் கூறுகின்றபடி, தனக்கு இருந்த மனைவி என்ற உரிமையை அதாவது முஹம்மது தன்னிடம் செலவிடுகின்ற நாளை விட்டுக்கொடுத்தாராம். ஸவ்தாவிற்கு ஒரு கணவன் என்ற முறையில் செய்யவேண்டிய கடமையை மட்டுமல்ல, ஸவ்தாவை சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டாராம் முஹம்மது.

இந்த ஹதீஸ்களின் ஆதாரத்தன்மை அதாவது நம்பகத்தன்மை மறுக்கமுடியாதது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், புகாரி ஹதீஸ் இவ்விதமாக கூறுகிறது:

ஆயிஷா அறிவித்ததாவது: ஸவ்தா பின்ட் ஜமா தன் நாளை (முஹம்மது தன்னிடம் செலவிடும் நாளை) ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார். இதனால், முஹம்மது ஆயிஷாவின் இரண்டு நாட்கள் தங்குவார், அதாவது ஆயிஷாவின் நாளிலும், ஸவ்தாவின் நாளிலும் அவர் ஆயிஷாவின் வீட்டில் தங்குவார் [1]

ஆனால், ஏன் ஸவ்தா தன் உரிமையை விட்டுக்கொடுத்தார்?

தனக்கு துணையாக முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஸவ்தா ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?

இதற்கான பதிலை நாம் குர்‍ஆன் 4:128 வசனத்திற்கான விரிவுரைகளில் காணலாம்:

ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (குர்‍ஆன் 4:128)

நாம் மேலே படித்த குர்‍ஆன் 4:128ம் வசனத்திற்கு இபின் கதீர் கீழ்கண்ட விளக்கவுரையைத் தருகிறார்:

"தன் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, அல்லது புறக்கணித்துவிடுவாரோ என்று ஒரு பெண் பயந்தால், அவள் தன்னுடைய எல்லா உரிமைகளையும் அல்லது ஒரு சில உரிமைகளையும் விட்டுக்கொடுக்கலாம், அதாவது கணவரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் பொருளாதார உரிமைகள், உடுக்க உடை அல்லது இருக்க வீடு போன்ற உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம், அப்போது அக்கணவர் தன் மனைவியிடமிருந்து வரும் இந்த உரிமைகள் விட்டுக்கொடுத்தலை அங்கீகரித்துக் கொள்ளலாம். த‌ன் உரிமைக‌ளை விட்டுக்கொடுப்பது மனைவியின் தவறில்லை‌, அதே போல‌, த‌ன் ம‌னைவியின் உரிமை விட்டுக்கொடுத்த‌லை அங்கீகரிப்பதும் அந்த‌ க‌ண‌வ‌னின் த‌வ‌று அல்ல‌. இதைத் தான் இறைவ‌ன் கூறுகின்றான்:"அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது". இத‌ன்ப‌டித் தான், ஸவ்தா பின்ட் ஜ‌மா வ‌ய‌து சென்ற கிழ‌வியாக‌மாறின‌போது, இறைத்தூத‌ராகிய‌ முஹ‌ம்ம‌து அவ‌ளை விவாக‌ர‌த்து செய்ய‌ முடிவு செய்தார். இதனால், ஸவ்தா முஹம்மதுவிடம் இப்படி விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, தன்னிடம் அவர் செலவிடும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாகச் சொல்லி முஹம்மதுவிடம் வேண்டிக்கொண்டார். இதனால், முஹம்மது ஸவ்தாவின் உரிமை விட்டுக்கொடுப்பதற்கு பதிலாக, ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை.

"...இபின் அப்பாஸ் அதிகார பூர்வமாக கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்று ஸவ்தா பயந்தார். ஆகையால், அவரிடம் ஸவ்தா கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, என்னை நீங்கள் விவாகரத்து செய்திவிடாதீர்கள்.. அதற்கு பதிலாக என் நாள் ஆயிஷாவின் நாளாக மாறட்டும். ஆகையால், முஹம்மதுவும் அப்படியே செய்தார், குர்ஆன் 4:128ம் வசனம் வெளிப்பட்டது.

ஏன் அல்லாஹ்வின் தூதர் ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பினார்?

ஸவ்தாவை முஹம்மது விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றுச் சொன்னால், ஏன் ஸவ்தா தன்னை அவர் விவாகரத்து செய்து விடுவார் என்று பயப்படவேண்டும்?

தன்னிடம் முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஆயிஷாவிற்கு ஸவ்தா விட்டுக்கொடுக்கவேண்டும்?

ஸவ்தா செய்த பிழை தான் என்ன?

இபின் கதீர் அவர்களின் விரிவுரையின் படி, ஸவ்தாவின் எந்த பிழையும் இதற்கு காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் ஸவ்தா வயது சென்றவராக மாறியது தான், அதாவது அவருக்கு வயது கூடிக்கொண்டே சென்றது தான்.


இன்னும் ஒரு சில அறிவிப்புக்கள் உண்மையாகவே முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறுகிறது, அதன் பிறகு ஸவ்தா அவரிடம் பேசி, தன் உரிமைகளை விட்டுக்கொடுப்பதாக சொன்ன போது, முஹம்மது அதனை அங்கீகரித்தார்.

அல் காசிம் இபின் அபி பேஜா (Al-Qasim ibn Abi Beza) கூறினார்: முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு செய்தியை அனுப்பினார். அதன் பிறகு முஹம்மது ஆயிஷாவின் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியாக வருவார் என்று ஸவ்தா காத்திருந்தார். முஹம்மது அவ்வழியே வருவதை ஸவ்தா கண்டவுடன், அவரிடம் சென்று "உலக உயிர்களிலெல்லாம் உம்மை மேன்மைப்படுத்தியவனும், தன் வார்த்தைகளை உமக்கு வெளிப்படுத்தும் இறைவனின் பெயரில் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்னை விவாகரத்து செய்தீர்கள்? நான் வயது சென்றவளாக இருக்கிறேன், எனக்கு ஆணின் துணை தேவையில்லை. ஆனால், கடைசி நாளில் உயிர்த்தெழும் போது உம்முடைய மனைவிமார்களின் கூட்டத்தில் நானும் உயிர்த்தெழவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் முஹம்மது தன் மனதை மாற்றிக்கொண்டார். மற்றும் ஸவ்தா கூறினார்: என்னுடைய நாளையும், இரவையும் நபியின் பிரியமானவருக்கு (ஆயிஷாவிற்கு) கொடுக்கிறேன் .... (பார்க்கவும் இபின் கதீர் விரிவுரை குர்‍ஆன் 4:128)

முஹம்மது விவாகரத்து செய்யவில்லை, ஆனால், செய்யவேண்டுமென்று விரும்பினார் என்று சிலர் கூறுகிறார்கள்.

விவரம் எதுவானாலும், ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

தனக்கு இருக்கும் ஒரே கணவனின் நாளையும், அதற்கான தன் உரிமையையும் ஏன் ஒரு பெண் வேறு ஒரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்கிறாள்?

மேலே சொல்லப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சியின் முழு விவ‌ர‌மும் தெரிந்துக்கொள்ள, இன்னுமுள்ள‌ குர்‍ஆன் விரிவுரையாள‌ர்க‌ள் குர்‍ஆன் 4:128ம் வசனத்தைப் பற்றி என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதை காண்போம்.

குர்‍ஆன் 4:128 பற்றி ரஜி (Razi) கூறுகிறார்:

சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "அறிந்துக்கொண்டாள்" என்பதாகும். இன்னும் சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "நினைத்தாள்" என்பதாகும். ஆனால், இப்படி பொருள் கூறுகிறவர்கள், மிகவும் தெளிவாக புரியக்கூடிய ஒன்றை கவனிக்காமல் அறியாமையில் இருக்கிறார்கள். பயம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், பயம் என்றால் பயம் என்று தான் பொருள், அவ்வளவு தான். பயம் எப்போது வருகிறது, அந்த பயம் உருவாவதற்கான காரண காரணிகள் அல்லது நிகழ்வுகள் நடைப்பெறக்கூடிய சூழ்நிலைகள் தெரியும் போது பயம் வருகிறது. இந்த சூழ்நிலைகள் என்ன? உதாரணத்திற்கு ஒரு ஆண் தன் மனைவியைக் கண்டு, உனக்கு வயதாகிவிட்டது, நீ அசிங்கமாக இருக்கிறாய்.. நான் ஒரு நல்ல அழகுள்ள வாலிபப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லும் போது... தன் மனைவிக்கு பயம் வருகிறது. ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்துவிடுவது போல, புறக்கணித்துவிடுவது போல காட்டிக்கொள்ள என்ன செய்வான்? அவன் அவளின் முகத்தில் கோபமாக பார்ப்பான், அவளுக்கு தேவையான தாம்பத்ய உறவினை துண்டித்துக் கொள்வான்..அவளை கேவலமாக நடத்துவான். இப்படிச் செய்து தன் வெறுப்பை காண்பிப்பான்.

ரஜி அவர்கள் விரிவுரை கூறியது போல, முஹம்மது ஸவ்தாவிற்கு செய்து இருப்பாரோ? ரஜி சொல்வது போன்ற சில காரணங்களை கண்டிப்பாக ஸவ்தா கண்டு இருக்கவேண்டும், இதனால் தான் ஸவ்தா முஹம்மதுவிடமிருந்து விவாகரத்து பெறாமல் இருப்பதற்கு எது சரியான வழி என்று சிந்தித்து, கடைசியாக தன் உரிமையை விட்டுக்கொடுத்து இருக்கக்கூடும்.

இதைப் ப‌ற்றி இபின் க‌தீர் மேலும் கூறும் போது:

"குர்‍ஆன் வ்ச‌ன‌ம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், "ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம் " என்னை விவாகரத்து செய்யவேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் செய்யவேண்டியதில்லை" என்று நான் என் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாம்.

இந்த ஹதீஸ் இரண்டு உண்மையான ஹதீஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ்களில் உண்டு இந்த வசனம் சொல்லவருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த நிபந்தனையினால் விவாகரத்து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக‌ ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமிய நாடுகள் முஹம்மதுவின் இந்த எடுத்துக்காட்டுதலின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது..

இதனை இஸ்லாமிய நாடுகள் பின்பற்றுகின்றன. ரஜி அறிவிக்கிறார்:

இந்த‌ வ‌ச‌ன‌ம் முத‌ன் முத‌லாக‌ வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து இபின் அபீ அஸ் சையிப் (Ibn abi as-Sa'ib) என்பவ‌ருக்காக, இவ‌ருக்கு ஒரு ம‌னைவி இருந்தார்க‌ள், அவருக்கு அனேக‌ பிள்ளைக‌ள் இருந்தார்க‌ள். இப்பெண்ணுக்கு வ‌ய‌து கூடுகின்ற‌து என்ப‌தினால், அவரின் கண‌வ‌ர் அவ‌ரை விவாக‌ர‌த்து செய்ய‌ முடிவு செய்தார். இத‌னால், அந்த‌ப்பெண், அவ‌ரிட‌ம் "என்னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டாம். நான் என் பிள்ளைக‌ளை க‌வ‌னிக்க‌ என‌க்கு அனும‌தி கொடுங்க‌ள். ம‌ற்றும் மாத‌த்தில் ஒரு சில‌ இர‌வுக‌ள் ம‌ட்டும் என்னிட‌ம் த‌ங்கினால் போதும்" என்று கூறினார‌கள். இதனைக் கேட்டு, அவரின் கண‌வ‌ர், இப்ப‌டி நீ கூறிய‌தால், என‌க்கு இது ச‌ம்ம‌த‌ம், அ‌ப்படியே ஆக‌ட்டும் என்று கூறினார்.

இர‌ண்டாவது நிக‌ழ்ச்சி, முஹம்ம‌து ப‌ற்றிய‌து. முஹ‌ம‌ம்து ஸவ்தா பின்ட் ஜமாஹ்வை விவாக‌ர‌த்து செய்ய‌ முடிவு செய்தார். ஆனால், ஸவ்தா ஒரு நிப‌ந்த‌னையின் பேரில் த‌ன‌க்கு விவாக‌ர‌த்து ந‌ட‌க்காம‌ல் பார்த்துக்கொண்டார். அந்த‌ நிப‌ந்த‌னையான‌து, த‌ன்னுடைய‌ நாளை ஆயிஷாவிற்கு கொடுத்துவிடுவ‌து என்ப‌தாகும்.

மூன்றாவ‌தாக‌, ஆயிஷா கூறிய ஹ‌தீஸாகும்: அதாவ‌து ஒரு ம‌னித‌ன் த‌ன் ம‌னைவியை விவாக‌ர‌த்து வேறு மனைவியை திருமணம் செய்ய தீர்மானிக்கும் போது, அவ‌ள் அவ‌னிட‌ம் "என்னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டாம், ஆனால் இன்னொரு பெண்ணையும் திரும‌ண‌ம் செய்துக் கொள்ளுங்க‌ள். என்னை விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, எனக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டாம், எனக்கு கொடுக்கப்பட்ட இரவுகளை நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றுச் சொல்லலாம்.

இந்த விபரம் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர இபின் அல் அரபி (Ibn al-'Arabi) கூறும் போது:

".. ஸவ்தா பின்ட் ஜமா வயது சென்றவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மதுவின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மதுவும் அவரை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா மரிக்கும் போது முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவராக‌மரித்தார்கள். இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆயிஷாவிற்காக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து, ஒரு ம‌னித‌ன் ஒரு இள‌ம் பெண்ணை திரும‌ண‌ம் செய்துக்கொண்டு, பிற‌கு அவ‌ளுக்கு வ‌ய‌து அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன். [2]

ஆக‌, இஸ்லாமியர்கள் அறியாமையினால் முஹம்ம‌துவை கண்மூடித்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றின‌ர் ம‌ற்றும் அதே நேர‌த்தில் இத‌ற்காக‌ அல்லாஹ்வை புக‌ழ்வ‌தையும் ம‌றக்க‌வில்லை.

டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷடி(Dr bint ash-Shati') என்ப‌வ‌ர், இவ‌ர் "இறைத்தூத‌ரின் ம‌னைவிகள் (The Wives of the Prophet [nisaa' an-Nabi] )" என்ற‌ புத்த‌க‌த்தை எழுதிய‌வ‌ர். இவ‌ர் த‌ன் புத்த‌க‌த்தில் "ஸவ்தா பார்ப்ப‌த‌ற்கு அழ‌கில்லாத‌வ‌ராக‌ இருப்பார் ம‌ற்றும் ப‌ரும‌னாக‌ இருப்பார்" என்று கூறுகிறார் [3]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உய‌ரமாக‌ இருப்பார் [4], ப‌ரும‌னாக‌ இருப்பார் ம‌ற்றும் நிதான‌மாக‌ வேலை செய்வார்[5])

டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷடி, முஹம்மது மற்றும் ஸவ்தாவின் திருமண பந்த உறவு பற்றி கீழ் கண்டவாறு கூறுகிறார்:

"ஸவ்தா தன் அனுபவத்திலிருந்து உணர்ந்துக்கொண்டது என்னவென்றால், தனக்கும் முஹம்மதுவின் உள்ளத்திற்கும் இடையில் மிகப்பெரிய தடை அல்லது பிளவு உள்ளது என்பதை உணர்ந்தார். ... தனக்கு தரப்பட்டிருக்கும் முஹம்மதுவோடு தங்கும் அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார். [6]

இருவருக்கும் இடயே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்துக்கொள்ளவேண்டும்?

மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?

டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷாடி கூறுகிறார்: கோலா பின்ட் ஹ‌கீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹ‌ம்ம‌து திரும‌ண‌ம் செய்துக்கொள்ள‌வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த‌ நேர‌த்தில் ஆயிஷா 7 வ‌யதுடைய‌வ‌ராக‌ இருந்தாராம். கோலாவிடம் முஹ‌ம‌ம்து "யார் என்னுடைய‌ வீட்டை பார்த்துக்கொள்வார்க‌ள், யார் இறைத்தூத‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை க‌வ‌னித்துக்கொள்வார்க‌ள்" என்று கேட்டாராம். அத‌ற்கு கோலா, "ஸவ்தாவை திரும‌ண‌ம் செய்துக்கொள்ளும்" என்றுச் சொன்னார்கள், இத‌ற்கு ந‌பி அங்கீக‌ரித்தார். ம‌ற்றும் ஸவ்தா முஹ‌ம்ம‌துவின் வீட்டை க‌வ‌னித்துக்கொள்ளவும், அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை பார்த்துக்கொள்ள‌வும் மிக‌வும் விருப்ப‌முடைய‌வ‌ராக‌ இருந்தார்க‌ள் [7].

இப்போது நமக்கு படம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மதுவின் காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மதுவின் மகள்களை கவனிக்கும் பணிவிடைக்காரியாக (ஆயாவாக‌) மாறினார்.

முஹம்மதுவின் முதல் மனைவி மரித்த பிறகு அவரின் வேதனையான‌ நேரத்தில் ஆதரவு அளித்து அவரைத் தேற்றி, இத்தனை ஆண்டுகள் அவரின் பிள்ளைகளை கவனித்து, சமைத்துப்போட்டு, துணிகளை துவைத்துப்போட்டு, எல்லாருக்கும் தேவையானதைச் செய்த ஸவ்தாவை இப்போது முஹம்மதுவிற்கு பிடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவரது விவாகரத்திற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை, இருக்கும் ஒரே காரணம், ஸவ்தா கிழவியாகி விட்டார், அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழகும் இப்போது இல்லை.

குர்‍ஆன் கீழே உள்ள வசனத்தில் தம்பதிகளாக இருக்கும் கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் அன்பு குறித்து அழகாக பேசுகின்றது.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

குர்‍ஆன் சொல்லும் அந்த‌ அன்பு ம‌ற்றும் உவ‌ப்பு எப்ப‌டிப்ப‌ட்ட‌தாக‌ இருக்கிற‌து? அதில் உள்ள குறைபாடு என்ன என்ப‌தை இதுவரை நாம் க‌ண்ட‌ நிக‌ழ்ச்சி மூல‌ம் அறிந்துக்கொள்ள‌லாம்.

குர்‍ஆன் சொல்லும் அன்பு, இர‌க்க‌ம் போன்ற‌வைக‌ள் ஸவ்தாவிற்கு ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் காண‌ப்ப‌ட‌வில்லையே?

இந்த குர்‍ஆன் வசனத்தின் அடிப்படையில் முஹம்மது தண்டிக்கப்படுவாரா? நியாயந்தீர்க்கப்படுவாரா?

அல்ல‌து

குர்‍ஆனை விட‌ முஹ‌ம்ம‌து உய‌ர்ந்த‌வ‌ரா?


இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ நூல்களை எழுதிய ஆசிரியர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:

வெறும் காமம், மோகத்தை மட்டுமே முக்கியம் என்று கருதி இருக்கும், நல்ல நடத்தை இல்லாத ஒரு மனிதன், இஸ்லாம் அங்கீகரிக்காததை செய்து, தன் மனைவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தால் அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன? இதற்கான பதில்: இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தண்டிப்பான், இந்த உலகத்திலும், வரவிருக்கும் அந்த உலகத்திலும், அல்லாஹ் அவனை பழிவாங்குவான்.[8]

மேலே சொன்ன வரிகள் மிகவும் அழகாகவும் நியாயமானதாகவும் தென்படுகின்றது, எதுவரைக்கும்? அதே ஆசிரியர் அதே புத்தகத்தில் சில பக்கங்களுக்கு பிறகு என்ன சொல்லியுள்ளார் என்று நாம் படிப்பதற்கு முன்பாக மட்டுமே இவ்வரிகள் அழகாகத் தெரியும். அதே ஆசிரியர் எழுதுவதை படியுங்கள்: "எப்போது ஒரு பெண் தன் கணவனின் காமத்திற்கு மோகத்திற்கு உபயோகமில்லாதவளாக மாறுகிறாளோ, அவளிடம் இருக்கும் சில சரீர குறைபாடுகளினாலோ, அல்லது முதுமையினாலோ (வயது அதிமாகிவிட்டாளோ) அல்லது இப்படிப்பட்ட காரணங்களினால், ஒரு மனிதன் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றான்" [9].

ஒருவன் தன் மனைவி முதுமை அடைந்துவிட்டாள் என்பதால் அவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாக முஹம்மது வர்ணிக்கப்படுகிறார். முஹம்மது தான் ஒரு நல்ல கணவராக இருப்பதாக குர்‍ஆனிலே தனக்கு தானே புகழ்ந்துக்கொள்கிறார்:

"மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்" குர்ஆன் 68:4.

வேறு வகையாகச் சொல்லவேண்டுமானால், ஒரு ஹதீஸ் கூறுகின்றபடி "முஹம்மதுவின் நடத்தை தான் குர்‍ஆனில் வெளிப்படுகிறது".

ஆனால், டாக்டர் பின்ட் அஷ் ஷாடி முஹம்மது ஒரு மனிதர் தானே என்றுச் சொல்லி, அவருக்காக வக்காளத்து வாங்குகிறார்.

ஆக, குர்‍ஆன் தான் முஹம்மதுவின் நடத்தை, மற்றும் முஹம்மது வெறும் சாதாரண மனிதர் தான். இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு இப்போது எல்லா விஷயமும் புரிந்து இருக்கும்.


1. Bukhari, the Book of Nikah, Hadith No. 139.
2. Ahkam al-Qur'an, Abi Bakr Ibn 'Abd Allah known as Ibn al-'Arabi, Dar al-Kotob al-'Elmeyah, commenting on Q. 4:128.
3. Nisaa' 'an-Nabi, Dr. Bint ash-Shati', Dar al-Kitab al-'Arabi, 1985, p. 62, 67.
4. Bukhari, Vol. 1, Book 4, Hadith No. 148.
5. Bukhari, Vol. 2, Book 26, Hadith No. 740.
6. Nisaa' 'an-Nabi, Dr. Bint ash-Shati', Dar al-Kitab al-'Arabi, 1985, p. 64.
7. Nisaa' 'an-Nabi, Dr. Bint ash-Shati', Dar al-Kitab al-'Arabi, 1985, p. 64.
8. 'Abd ar-Rahman al-Gaziri, al-Fiqh 'ala al-Mazahib al-Arba'a, Dar al-Kutub al-'Elmeyah, 1990, vol. 4, p. 278.
9. 'Abd ar-Rahman al-Gaziri, al-Fiqh 'ala al-Mazahib al-Arba'a, Dar al-Kutub al-'Elmeyah, 1990, vol. 4, p. 281.


ஆங்கில மூலம்: Muhammad, Lord of the Sent Ones? - SAUDA BINT ZAM'AH

பி. நியூட்டன் அவர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்
குர்‍ஆன் ப‌ற்றிய‌ க‌ட்டுரைக‌ள்


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.


தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/newton/sauda.html
 


--
3/28/2010 07:43:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Saturday, March 27, 2010

எல்லா முஸ்லீகளும் தீவிரவாதிகள் அல்ல-கலீலின் கதை

Saturday, March 20, 2010

இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்:முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள்

 


முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள்

இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்

முன்னுரை: கிறிஸ்து நேசன் தளத்தில் இருமேனிமுபாரக் என்ற சகோதரர் ஒரு பின்னூட்டமிட்டுள்ளார், அதற்கான பதிலை இந்த கட்டுரையில் நாம் காண்போம். சில இஸ்லாமியர்கள் தங்களுக்கே தெரியாமல் குர்ஆனை தாக்கி எழுதிவிடுவார்கள், அதற்கு விரோதமாக கருத்துக்களை சொல்லிவிடுவார்கள், இதெல்லாம், தங்கள் முஹம்மதுவை காப்பாற்றவும், அவரை பரிசுத்த நபியாக காட்டவும் அவர்கள் செய்கிறார்கள், ஆனால், முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா?

இருமேனிமுபாரக் எழுதியது:

அட கூமுட்டைகளா! கொஞ்சூன்டு அறிவைப் பயன்படுத்தி இருந்தால் இவ்வளவு ஆராச்சி மேற்கொண்டு நீட்டி முழக்கி இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை செய்ததின் மூலம் சொல்ல வந்த சேதி எதுவோ அது அடிபட்டுப் போவதை சாதரணமானவனும் புரிந்து கொள்வான்.அவர் ஒரு இறைத் தூதர்தான் என்பதை இதன் மூலம் அனைவரையும் நீங்களே ஒப்புக் கொள்ள வைக்கிறீர்கள். ஒரு பாவி தன் இறைவனை எப்படி இறைஞ்ச வேண்டும் என்பதை ஒரு இறைத்தூதர்தான் கற்றுக் கொடுக்க முடியும்.மேலும் பாவமே செய்யாமல் தன்னை பாவியாக்கி ஒரு இறைத்தூதர் இறைஞ்சுகின்றார் என்றால் சதா பாவத்திலேயே உழன்று கொண்டிருக்கும் சாதாரண மனிதன் எவ்வாறு இறைஞ்சவேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக எந்த மார்க்கமும் சொல்லித் தரவில்லை என்பது இந்த இடுகையில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. நன்றி... புத்தி கோணலாக இருந்தாலும் மற்றவர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக சொன்னது புரிபவர்களுக்குப் புரியும்.

Source: பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி

அருமையான இருமேனிமுபாரக் அவர்களே, உங்கள் கோபத்தை நான் புரிந்துக்கொள்கிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் பெரும்பாடு பட்டு, ஒரு பாவியான மனுஷனை நல்லவன், நீதிமான், பரிசுத்தன் என்றுச் சொல்லி, மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கும் போது, குர்ஆனிலிருந்து முஹம்மது ஒரு பாவி என்பதை இவர்கள் வெட்ட வெளிச்சத்தில் காட்டிவிட்டார்களே, என்று வேதனை அடைந்துள்ளீர்கள். இதனை புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், என்ன செய்யமுடியும், உண்மை ஒரு நாள் வெளியே வந்து தானே ஆகவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குர்‍ஆனில் எழுத்துக்கு எழுத்து மாறவில்லை, இன்று வரை குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று சொல்லி வந்தீர்கள், இப்போது, அடி மீது அடி விழுந்த பிறகு, ஆதாரங்களை முன்வைத்த பிறகு, குர்‍ஆனில் எழுத்துப் பிழை உண்டு ஆனால், கருத்துப் பிழை இருக்கிறதா என்று சொல்லும் நிலையில் வந்துள்ளீர்கள். அதே போல, முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், ஆனால், இன்னும் சில காலம் சென்ற பிறகு, அவர் நபிப்பட்டத்திற்கு வருவதற்கு முன்பாக பாவம் செய்தார், நபியாக மாறிய பிறகு அப்படி செய்யவில்லை என்று சொல்வீர்கள், இன்னும் சில உண்மைகளை வெளியே காட்டினால், கடைசியாக "முஹம்மதுவும் நம்மைப்போல ஒரு பாவம் செய்யக்கூடிய மனிதர் தான், அவரையும் அல்லாஹ் தெரிந்தெடுத்து, தன் விருப்பத்தை அவர் மூலமாக நிறைவேற்றினார்" என்று சொல்லும் நிலைக்கு வருவீர்கள்.

இனி இருமேனி முபாரக் அவர்களின் கருத்துக்களை படிப்போம், அதற்கான பதிலைக் காண்போம்.

இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்:


இருமேனிமுபாரக் எழுதியது:

ஒரு இறைத் தூதர்தான் என்பதை இதன் மூலம் அனைவரையும் நீங்களே ஒப்புக் கொள்ள வைக்கிறீர்கள்.

ஈஸா குர்‍ஆன்:

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்கள் நம்பக்கூடிய அளவிற்கு அவர் ஒரு நபியாக வாழ்ந்துக்காட்டவில்லை. அவர் ஒரு சராசரி மனிதனைப்போல பாவம் செய்பவர் என்றும், அவர் ஒரு பாவி என்றும் குர்ஆன் சொல்லி இருக்கும் போதும், அவர் பாவமன்னிப்பு கோறும் படி அல்லாஹ் குர்ஆனில் சொல்லியிருந்தும், இன்னும் அவர் பரிசுத்தர் அவர் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஒரு சில இஸ்லாமியர்கள், இவர்களை என்னவென்றுச் சொல்வது... நீங்கள் கூறிய கூமுட்டை என்ற பட்டப்பெயர் இப்போது யாருக்கு பொருந்துகிறது?...

இருமேனிமுபாரக் எழுதியது:

மேலும் பாவமே செய்யாமல் தன்னை பாவியாக்கி ஒரு இறைத்தூதர் இறைஞ்சுகின்றார் என்றால்....

ஈஸா குர்‍ஆன்:

இருமேனி முபாரக் அவர்களே, உங்களுக்கு முபாரக் கூறுகிறோம்,.. என்னே கண்டுபிடிப்பு, அவர் பாவம் செய்யவில்லையானாலும், தன்னை பாவியாக்கி வேண்டுகிறாரா...? அப்படியானால், குர்‍ஆன் வசனங்களுக்கு என்ன பொருள்.... ?

உங்களின் கூற்றுப்படி, முஹம்மது பாவம் செய்யவில்லை. முஹம்மது பாவம் செய்யவில்லை என்று நீங்கள் சொல்வது குர்ஆனுக்கு எதிரானது, அதாவது அல்லாஹ்விற்கு முரணானது.

குர்ஆன் சொல்கிறது: முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள் என்று,

இருமேனிமுபாரக் சொல்கிறார்: "அவர் பாவம் செய்யாதவராக இருந்தாலும்...மற்றவர்களுக்கு கற்றுத்தரலாம் இல்லையா?".

யார் சொல்வது உண்மை,...அல்லாஹ்வா அல்லது இருமேனி முபாரக்கா?

குர்ஆன் சொல்வது பொய், அல்லாஹ் சொல்வது பொய்... இருமேனி முபாரக் அவர்கள் சொல்வது தான் உண்மை... அப்படித்தானே

இந்த கூமுட்டை (உமர்) மேற்க்கோள் காட்டும் குர்ஆன் வசனங்களை சிறிது படியுங்கள் அறிவாளி இருமேனிமுபாரக் அவர்களே:

40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!

48:2 உமக்காக உம்முடைய
முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.

குர்ஆன் 47:19: ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக
இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இப்போது சொல்லுங்கள்,

குர்ஆன் சொல்வது பொய்யா மெய்யா?

அல்லாஹ் சொல்வது பொய்யா மெய்யா?

முஹம்மது பாவம் செய்யவில்லை என்று யார் குர்ஆனுக்கு எதிராகச் சொல்கிறாரோ அவர் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்கமுடியும்? கண்டிப்பாக ஒரு காபிராகத் தான் இருக்கவேண்டும். இதற்கு எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது பத்வா கொடுப்பாரா? அல்லது இருமேனிமுபாரக் சொல்வது தான் உண்மை, குர்ஆன் சொல்வது பொய் என்று பத்வா கொடுப்பார்களா?

இருமேனிமுபாரக் அவர்களின் கூற்றுப்படி, அல்லாஹ் குர்ஆனில் சொன்னது பொய். ஏனென்றால் அல்லாஹ்வை விட இன்றையை இஸ்லாமியர்களுக்குத் தான் முஹம்மது பற்றி அதிகமாகத் தெரியும்... அதனால் தான் முஹம்மது ஒரு பரிசுத்தர் என்று சொல்லிகொண்டு இருக்கிறார்கள்.

இருமேனி முபாரக் அவர்களுக்கு கேள்விகள்:


1. முஹம்மது பாவம் செய்யவில்லை என்றுச் சொன்னால், அல்லாஹ் குர்ஆனில் சொல்வது பொய்யா?

2. உன் பாவங்களுக்கு மன்னிப்புக் கேள் என்று ஏன் அல்லாஹ் முஹம்மதுவிற்கு கூறவேண்டும்.

3. அவர் பாவம் செய்யும் ஒரு சாதாரண மனிதர் தான், அவருக்கும் பாவமன்னிப்பு வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது, இதற்கு ஆதாரம் குர்ஆன் 40:55, 48:2 & 47:19: வசனங்கள். அவர் பாவம் செய்யாதவர் என்பதை நிருபிக்க இருமேனி முபாரக் அவர்கள் எந்த ஆதாரத்தை காட்டப்போகிறீர்கள்? குர்ஆனிலிருந்து வசனங்களைக் காட்டமுடியுமா?

4. அப்படி வசன ஆதாரங்களை காட்டவில்லையானால், அல்லது இந்த மேற்கூறிய குர்ஆன் வசனங்கள் பொய் என்று நீங்கள் நிருபிக்கவில்லையானால், முஹம்மது சாதாரண மனிதர்களைப் போல ஒரு பாவி தான், அவருக்கும் பாவ மன்னிப்பு தேவை தான் என்பது நிருபனம். இதற்கு எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது பதிலைத் தரலாம். ஒட்டு மொத்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் இது ஒரு கேள்வியாக வைக்கப்படுகிறது.

குர்ஆனைத் தான் இருமேனிமுபாரக் நம்பவில்லை... ஹதீஸ்களையாவது நம்புகின்றாரா என்று பார்க்கலாம்...

1) முஹம்மதுவின் முந்தி செய்த பாவம், பிந்தி செய்கின்ற பாவம், பகிரங்கமாக செய்த பாவம், இரகசியமாக செய்த பாவம்:

முஹம்மதுவின் முந்தி செய்த பாவம் என்றால் அது எந்த காலகட்டம்? அவர் நபியாக தன்னை பிரகடனம் செய்துக்கொண்டதற்கு முன்பா? பிந்தி செய்த பாவம் என்றால், அவர் நபியாக தன்னை பிரகடனம் செய்துக்கொண்ட பிறகா?

இரகசியமாக செய்த பாவம் என்றால், யாருக்கும் தெரியாமல் யாரும் பார்க்கமாட்டார்கள் என்று நினைத்து தற்கால சாமியார்கள் செய்கிறார்களே, அது போல இரகசியமாக செய்த பாவங்களா?

எது எப்படியானாலும், தான் செய்த பாவம் பெரியது, அதற்கு மன்னிப்பு கட்டாயமாக தேவை என்பதை மட்டும் முஹம்மது அறிந்திருந்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 832

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

"இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ......

பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் 'இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். ..... உன்னிடமே நீதி கேட்பேன்.
எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு . நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நமை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை' என்று கூறிவார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7442

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகை தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! எங்கள் அதிபதியே! ...... எனவே,
நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களையும், என்னைவிட எதை நீ நன்கு அறிந்துள்ளாயோ அதையும் மன்னித்தருள்வாயாக . உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.82

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6317

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:

அல்லாஹும்ம! லக்கல் ஹம்து, .......

(பொருள்: இறைவா! ..... உன்னிடம் நீதி கேட்பேன்.
எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக . நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' அல்லது 'உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)

2) ஒரு நாளுக்கு எழுபது முறைக்கு அதிகமாக பாவமன்னிப்பு: முஹம்மது

மஹா பரிசுத்தர் ஏன் ஒரு நாளுக்கு எழுபதுக்கும் அதிகமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும்?

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6307

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

3) தன் பாவங்களை கழுவி, அவைகளை தூரப்படுத்தும் என வேண்டும் முஹம்மது:

முஹம்மது தன் உள்ளத்தில் உள்ள அழுக்கை கழுவும் படி வேண்டுகிறார், இதற்கு உதாரணமாக அழுக்கான துணியை மேற்க்கோள் காட்டுகிறார், தன் பாவங்களை தன்னை விட்டு தூரப்படுத்தவேண்டும் என்று வேண்டுகிறார்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ ...' என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், .... இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

முடிவுரை:

இருமேனி முபாரக் அவர்களே, இந்த ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன. இவைகள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களா அல்லது பொய்யான ஹதீஸ்களா? இரவு நேரங்களில் எழுந்து கூட முஹம்மது தன் பாவங்களுக்காக மன்னிப்பை கேட்டுள்ளார்.

இப்போது என்னச் சொல்கிறீர்கள்..... மற்றவர்களுக்கு கற்றுத் தரவே இரவு நேரங்களிலும் எழுந்து இப்படி பாவமன்னிப்பு கோரினாரோ...?

கடைசியாக, குர்‍ஆன் சொல்வதை நம்புகிறீர்களா? அல்லது ஹதீஸ்கள் சொல்வதை நம்புகிறீர்களா? அல்லது இவ்விரண்டையும் உதரித்தள்ளிவிட்டு, உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மேடையில் சொல்லும் பொய்களை நம்புவீர்களா? முடிவு உங்கள் கையில்.

இந்த விவரங்கள் அனைத்தும், குர்‍ஆன், மற்றும் புகாரி ஹதீஸ்களிலிருந்து எடுக்கப்பட்டது, இது தவிற‌ அவரது சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) உள்ளது, தேவைப்பட்டால், அதிலிருந்து முஹம்மது செய்த பாவங்கள் என்ன? என்ற விவரங்கள் எடுத்து காட்டப்படும். இதர கட்டுரைகள்:

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1

முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19)

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்


ஈஸா குர்‍ஆன் - http://isakoran.blogspot.com



--
3/20/2010 01:58:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Friday, March 19, 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 2: நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1


 

பீஜே அவர்களுக்கு பதில் - 2:

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை
நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

முன்னுரை: பீஜே அவர்களின் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற கட்டுரைக்கு ஈஸா குர்ஆன் அளித்த முதல் பதிலை இங்கு படிக்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மேலதிக விவரங்களோடு இந்த இரண்டாம் பாகம் வெளியிடப்படுகிறது.

பீஜே அவர்கள் எழுதியவைகள்

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.

அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.

மாறாக ஒரே கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்றே அவர் போதித்தார்.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/

பீஜே அவர்களின் கூற்றுப்படி, இயேசு தன் இறைத் தன்மையை வெளிக்கட்டவில்லை, அல்லது இஸ்லாமியர்கள் நம்புகின்ற படி அவர் தன்னை ஒரு தீர்க்கதரியாக மட்டுமே வெளிக்காட்டினார் என்பதாகும். இதனை பீஜே அவர்கள் குர்ஆனை மட்டுமே படித்து சொல்லியிருந்தால் விட்டுவிடலாம், ஆனால், பைபிளை தங்களுக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, தனக்கு பைபிள் பற்றி எல்லாம் தெரியும் என்பது போல காட்டிக்கொண்டு அவர் அறிவுரை கூறியிருப்பதால், உண்மையாகவே இயேசு பைபிளில் என்ன கூறியுள்ளார் என்பதை விளக்கவேண்டும். அப்போது தான், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் கருத்தைத் திணிக்க எந்த அளவிற்கு விளக்கங்கள் கொடுக்கிறார்கள் என்பது மக்களுக்கு விளங்கும்.

நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு விவரத்தை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன், அது என்னவென்றால், "நீங்கள் இயேசுவைப் பற்றி ஏதாவது உங்கள் சொந்த இஸ்லாமிய கருத்துக்களைச் சொல்லும் போது, அதற்கு ஆதாரமாக குர்ஆனை மேற்க்கொள் காட்டினால், ஓரளவிற்கு தப்பித்துக் கொள்ள முடியும், ஆனால், பைபிளின் படி இயேசுவின் தன்மை இது தான் என்றுச் சொல்லி உங்கள் இஸ்லாமிய கோட்பாட்டை திணிக்க முற்படுவீர்களானால், நிச்சயமாக தோற்றுப்போவீர்கள்".

இயேசு தன் இறைத் தன்மையைக் குறித்து சொல்லிய ஒரு சில வசனங்களை மேற்க்கோள் காட்டி, பீஜே அவர்கள் கொடுத்த விளக்கம் அல்லது செய்தி தவறானது என்பதை விளக்குகிறேன், தேவைப்பட்டால் பீஜே அவர்கள் இந்த கட்டுரைக்கு பதில் அளிப்பாரானால் இன்னும் அதிக விவரங்களோடு பதில் தர முயற்சி எடுக்கப்படும்.

1) உலகம் உண்டாவதற்கு முன்பாக இயேசு:

உலகம் உண்டாவதற்கு முன்பாக தான் இருந்ததாகவும், தனக்கு மகிமை உண்டாகி இருந்ததாகவும் இயேசு இவ்வசனங்களில் கூறுகிறார். பீஜே அவர்களே, இயேசு தனக்கு இறைத்தன்மை இல்லை என்றுச் சொன்னதாக கூறுகிறீர்களே, இந்த வசனங்களுக்கு என்ன பொருளைத் தர விரும்புகிறீர்கள்?

பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். (யோவான் 17:24)

And now, Father, glorify me in your presence with the glory I had with you before the world began. (John 17:5)

"Father, I want those you have given me to be with me where I am, and to see my glory, the glory you have given me because you loved me before the creation of the world. (John 17:24)

2) பிதாவை போல, இயேசுவும் உயிர்ப்பிக்கிறார்:

பிதா எப்படி மனிதர்களை உயிர்ப்பிக்கிறாரோ அதே போல தானும் தமக்கு சித்தமானவர்களை உயிரோடு எழுப்புவேன் என்று இயேசு சொல்கிறார். இறைவன் செய்யும் செயலை ஒருவர் குறிப்பிட்டு, "அதே போல" நானும் செய்வேன் என்றுச் சொல்லமுடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரானால், அவர் நிச்சயமாக இறைவனாகத் தான் இருக்கமுடியும்.

பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவான் 5:21)

For just as the Father raises the dead and gives them life, even so the Son gives life to whom he is pleased to give it. (John 5:21)

3) பிதாவை கணம் பண்ணுவது போல, இயேசுவையும் கணம் பண்ணவேண்டும்:

பிதாவிற்கு எப்படி கனத்தை மனிதர்கள் தருகிறார்களோ, அதே போல, குமாரனுக்கும் தரவேண்டுமாம். இறைவனுக்கு சமமாக இல்லாதவர் எப்படி இதனைச் சொல்லமுடியும்?

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22)

Moreover, the Father judges no one, but has entrusted all judgment to the Son, that all may honor the Son just as they honor the Father. He who does not honor the Son does not honor the Father, who sent him. (John 5:22-23)

4) இறைவனைத் தவிர யார் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கமுடியும்?

உலகத்தில் மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று இயேசு கூறுகிறார். இதனால், யூதர்கள் கோபம் கொண்டனர், இவர் தேவ தூஷணம் சொல்கிறாரே, இறைவன் அல்லவா பாவங்களை மன்னிக்கமுடியும் என்று கூறினர்

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (மாற்கு 2:5-11)

When Jesus saw their faith, he said to the paralytic, "Son, your sins are forgiven." Now some teachers of the law were sitting there, thinking to themselves, "Why does this fellow talk like that? He's blaspheming! Who can forgive sins but God alone?". Immediately Jesus knew in his spirit that this was what they were thinking in their hearts, and he said to them, "Why are you thinking these things? Which is easier: to say to the paralytic, 'Your sins are forgiven,' or to say, 'Get up, take your mat and walk'? But that you may know that the Son of Man has authority on earth to forgive sins . . . ." He said to the paralytic, "I tell you, get up, take your mat and go home." (Mark 2:5-11)

5) ஏன் யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள், இயேசு தன்னை நபி என்றுச் சொன்னதாலா?

கீழே தரப்பட்ட வசனங்களில் இயேசு தன் ஆடுகளுக்கு "நித்திய ஜீவனை" "அழிவில்லாத வாழ்வை" தருவதாக வாக்கு செய்கிறார். மனிதனுக்கு நித்திய வாழ்வை யார் தரமுடியும், இறைவன் தான் தரமுடியும், அதனை இயேசு கொடுக்கிறேன், என்றுச் சொன்னதால், யூதர்கள் கல்லெறிய முற்பட்டார்கள். பிதாவும் தானும் ஒன்றாக இருக்கிறோம் என்றுச் சொன்ன வார்த்தைகளின் பொருள் யூதர்களுக்கு புரிந்ததினாலே, "நீ தேவதூஷணம் சொன்னாய், உன்னை இறைவனுக்கு சமமாக எண்ணுகின்றாய்" என்று கல்லெறிய வந்தார்கள்.

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:27-33)

My sheep listen to my voice; I know them, and they follow me. I give them eternal life, and they shall never perish; no one can snatch them out of my hand. My Father, who has given them to me, is greater than all; no one can snatch them out of my Father's hand. I and the Father are one." Again the Jews picked up stones to stone him, but Jesus said to them, "I have shown you many great miracles from the Father. For which of these do you stone me?" "We are not stoning you for any of these," replied the Jews, "but for blasphemy, because you, a mere man, claim to be God.". (John 10:27-33)

நான் இறைவனின் தீர்க்கதரிசி மட்டும் தான் என்றுச் சொல்லியிருந்தால், யூதர்கள் அவரை கொல்ல முயற்சி எடுத்து இருக்கமாட்டார்கள். யூதர்களுக்கு புரிந்த விஷயம் பீஜே அவர்களுக்கு புரியவில்லை.

6) தன்னை தொழுதுக் கொள்பவர்களை இயேசு தடை செய்யவில்லை: இயேசு தன்னை தொழுதுக்கொண்டவர்களைப் பார்த்து அப்படிச்செய்யாதீர்கள், நான் வெறும் மனிதன் தான், அல்லது தீர்க்கதரிசி மட்டும் தான், இதனால், என்னை தொழுதுக்கொள்ளவேண்டாம் என்றுச் சொல்லவில்லை.

அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 14:33)

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:9)

உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். (யோவான் 9:38)

Then those who were in the boat worshiped him, saying, "Truly you are the Son of God." (Matthew 14:33)

Suddenly Jesus met them. "Greetings," he said. They came to him, clasped his feet and worshiped him (Matthew 28:9)

Then the man said, "Lord, I believe," and he worshiped him (John 9:38)

மேலே கண்ட சில வசனங்களிலிருந்து நாம் அறிவது:

1) உலகம் உண்டாவதற்கு முன்பாக தனக்கு மகிமை இருந்தது என்று இயேசு கூறினார்.

2) உலகம் உண்டாவதற்கு முன்பாக தேவன் அவர் மீது அன்பாக இருந்ததாக கூறினார்.

3) பிதாவைப் போல தானும் மனிதர்களை உயிரோடு எழுப்புகிறேன் என்று கூறினார்.

4) பிதாவை கனம் பண்ணுவது போல, தன்னையும் கனம் செய்யவேண்டும் என்பதற்காக, மனிதர்களை அவரே நியாயந்தீர்க்கப்போவதாக கூறினார்.

5) மனிதர்களின் பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டென்றுச் சொன்னார்.

6) தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு அழிவில்லாத வாழ்வைத் தருவதாக இயேசு கூறினார்.

7) தன்னை தொழுதுக்கொள்கிறவர்களை அவர் தடைச் செய்யவில்லை.

முடிவுரை:

பீஜே அவர்களே, நீங்கள் சொன்னது போல, தனக்கு தெய்வீகத் தன்மை இல்லை என்று இயேசு சொன்னதாக இவ்வசனங்கள் சொல்லவில்லையே! அப்படியானால்,

"நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்"

என்று நீங்கள் சொன்ன வார்த்தைகளை எந்த புத்தகத்தை படித்து கிறிஸ்தவர்களுக்கு அறிவுரையாக கொடுத்தீரகள்?

இந்த கட்டுரையில் வெறும் ஒரு சில வசனங்களை மட்டுமே நான் மேற்க்கோள் காட்டினேன், அதிகமாக விளக்கமும் தரவில்லை, உங்களுடையை "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் பதில் கட்டுரைகள் எழுதும் போது இன்னும் விவரமாக எழுத கர்த்தருக்கு சித்தமானால் முயற்சி எடுப்பேன்.

என்னவோ, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு புரியாத அரபி மொழியில் பைபிளை படிக்கின்ற மாதிரியும், நீங்கள் தான் பைபிளை அரபியில் படித்து, கரைத்துக்குடித்து முழுவதுமாக புரிந்துக்கொண்டதாக காட்டிக்கொண்டு, "இயேசு உலகில் இருக்கும் போது எதைச் சொன்னாரோ, அதனை கிறிஸ்தவர்களே நீங்கள் பின்பற்றவேண்டும்" என்று அறிவுரைச் சொல்கின்றீர்கள்.

அப்போஸ்தலர் பவுல் பற்றி நீங்கள் எழுதிய அடுத்த விமர்சனத்திற்கு பதிலைத் தரவேண்டும் என்பதற்காக, இந்த சிறிய கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன்.

‍ ஈஸா குர்‍ஆன் ‍‍உமர்

http://isakoran.blogspot.com

http://www.answering-islam.org/tamil

 



--
3/18/2010 11:16:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி - பாகம் 1:


 

 


பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி


ஆசிரியர்: சைலஸ்

WAS MUHAMMAD A SINNER?


இரவின் அமைதியில், மக்களின் சத்தங்களை விட்டு தூரமாக வந்து, தன் இருதயத்தின் நினைவுகளை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு, ஒரு மனிதன் தன் மனதிற்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகளை இறைவனின் முன்பாக சமர்ப்பிக்கிறார்.


அல்லாஹ்! நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. என் பாவங்களை மன்னிப்பாயாக, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக. நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாக‌ச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. வேடிக்கையாகவோ அல்லது தெரிந்தே செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக. நான் செய்த எல்லா தீய செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகின்றேன். அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.
 


"Oh God, I acknowledge and confess before You, all my sins, please forgive them, as no one can forgive sins except You. Forgive my mistakes, those done intentionally, or out of my ignorance, with or without seriousness. Oh God, forgive my sins and my ignorance, forgive my sins of the past and of the future, which I did openly or secretly. Forgive the wrong I have done, jokingly or seriously. I seek Your protection from all the evil I have done. Wash away my sins, and cleanse my heart, from all the sins as a white garment is cleansed from the filth, and let there be long distance between me and my sins, as You made the East and West far from each other."


இந்த ஜெபமானவது (வேண்டுதலானது) தன் இருதயத்தின் ஆழத்தில் இருக்கும் பாவங்களின் வீரியத்தை அறிந்த ஜெபமாக உள்ளது. பாவத்தின் பக்கம் சாயக்கூடிய தன் சுபாவத்தை இந்த ஜெபம் அங்கீகரிக்கிறது. தன் பாவ பிடியிலிருந்து விடுதலை ஆகவேண்டும் என்ற ஆவல் இந்த வேண்டுதலில் காணப்படுகிறது. இந்த ஜெபத்தில் அம்மனிதர் பாவத்திலிருந்து விடுபடவேண்டும் என்று போராடுகின்றதை காணமுடியும். தன்னுடைய கடந்த கால மற்றும் எதிர்கால பாவங்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுகின்றார். ஏனென்றால், தான் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால், எதிர் காலத்தில் பாவம் செய்வார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இது தவிற்க முடியாதது. இவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்று ஜெபம் செய்கிறார். தான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களையும், குற்றங்களையும் மன்னிக்கவேண்டும் என்று அவர் வேண்டுகின்றார். தான் செய்த இந்த பாவங்கள் தீயவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார், ஆகையால் அவைகளை இறைவனுக்கு முன்பாக அறிக்கையிடுகின்றார். தான் செய்த பாவங்களை லேசானவைகள் என்று அவர் அவைகளைப் பற்றி லேசாக நினைக்கவில்லை. இறைவனின் பார்வையில் அவைகள் அருவறுப்பானவைகள் என்று அவர் அறிந்திருக்கிறார்.


இந்த மனிதர் ஒரு பாவி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


பாகம் 1: முஹம்மது பாவியாக இருந்தாரா?


இந்த வேண்டுதலை செய்தவர் முஹம்மது ஆவார். ஸஹீ புகாரி பாகம் 8: எண்கள் 335, 379, 407 மற்றும் 408 [1] என்ற ஹதீஸ்களில் காணப்படும் முஹம்மதுவின் பாவ மன்னிப்பு வேண்டுதல்களின் மொத்த சுருக்கத்தைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். தான் ஒரு பாவி என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும். ஆகையால் தான் அவர் தன் பாவங்களை இப்படி வெளியரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அடிக்கடி தான் ஒரு பாவி என்பதை அவர் கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, தன் வாயின் மூலமாக வெளிப்பட்ட குர்ஆனும் அவரை ஒரு பாவி என்றே அடையாளம் காட்டுகின்றது. இப்படி இருந்தும், தற்காலத்தில் உள்ள அனேக இஸ்லாமியர்கள் முஹம்மது ஒரு பாவி அல்ல என்றுச் சொல்கிறார்கள்.


கேள்வி: முஹம்மது தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகிறார், அப்படியிருக்கும் போது அவர் ஒரு பாவியில்லை என்று அவர் சொன்னதற்கு விரோதமாக ஏன் இன்றையை இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்?


இந்த கேள்விக்கு பதிலை நான் காண்பதற்கு முன்பாக, முஹம்மது பாவியில்லை என்றுச் சொல்கின்ற தற்கால/மத்திய கால இஸ்லாமியர்களின் வாதங்களைக் காண்போம். அதன் பிறகு முஹம்மது ஒரு பாவி தான் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் உதவி கொண்டு நிருபிப்போம்.


அ) "பாவத்திலிருந்து பாதுகாப்பு" என்ற இஸ்லாமிய கோட்பாடு


அல்லாஹ் ஒரு சிறப்பான பாதுகாப்பை தன் தீர்க்கதரிசிகளுக்கு கொடுத்துள்ளார் அதன் மூலம் அவர்கள் "பாவிகளாக" இருக்கமாட்டார்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட‌ இந்த புதிய கோட்பாட்டைப் பற்றி ஒரு அருமையான விளக்கத்தை ஜான் கில்கிறைஸ்ட் தன் புத்தகமாகிய "முஹம்மது மற்றும் இஸ்லாமிய மதம்" என்ற புத்தகத்தில் தருகிறார் [2]. இந்த கோட்பாட்டை "இஸ்மா" என்று கூறுகிறார்கள். இந்த புத்தகத்தை இத்தொடுப்பில் படிக்கலாம்:


http://answering-islam.org/Gilchrist/Vol1/


இந்த புத்தகத்திலிருந்து நான் அனேக பத்திகளை மேற்கோள்களாக காட்டுகிறேன்.


பக்கம் 273 லிருந்து சில பத்திகள்


"தீர்க்கதரிசிகள் அனைவரும் 'இஸ்மா' என்ற பாவத்திலிருந்து பாதுகாப்பு என்ற சிறப்பான சலுகையை அனுபவித்தார்கள், அதாவது அவர்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்கு 'இஸ்மா' உதவுகிறது, இதன் மூலம் அவர்கள் பாவிகள் அல்ல என்று இன்றுள்ள முழு இஸ்லாமிய உலகமும் நம்பிக்கொண்டு இருக்கிறது. இது இஸ்லாமுக்கு முரண்பாடான கோட்பாடாகும். குர்ஆனும் ஹதீஸ்களும் போதிக்கும் போதனைக்கு முரணாக இந்த நம்பிக்கை இருக்கிறது.


இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்பு, இஸ்லாம் மற்றும் ஹதீஸ்கள் போதிப்பதற்கு எதிராக, இந்த புகழ்பெற்ற புதிய கோட்பாடு உருவாகி வளர்ச்சி அடைந்தது. இது முதன் முதலில் ஃபிக் அக்பர் 2 என்று அழைக்கப்பட்ட கோட்பாடாகும், இது கீழ்கண்ட விதமாக கூறுகிறது:


"எல்லா தீர்க்கதரிசிகளும் பாவத்திலிருந்து விடுபட்டவர்கள், அது சிறியதாக இருந்தாலும் சரி, மிகவும் கொடியதாக இருந்தாலும் சரி, நம்பிக்கையின்மையாக இருந்தாலும் சரி, தீய நடக்கைகளாக இருந்தாலும் சரி, இவர்கள் அவைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இருந்தும் போராட்டமும், சிறிய பிழைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கும்"
"All the Prophets are exempt from sins, both light and grave, from unbelief and sordid deeds. Yet stumbling and mistakes may happen on their part. Wensinck, "The Muslim Creed, p. 192."


இஸ்லாமிய மூல நூல்கள் சொல்வதை நாம் மறுக்க முடியாது. ஆகிலும், நபிகள் செய்ததாக குர்ஆனும் ஹதீஸ்களும் சொல்லும் பாவங்களை, இவர்கள் வெறும் "சிறிய பிழைகள்" என்று சொல்லி அவர்களின் பாவங்களின் தன்மையை லேசாக்குகிறார்கள். இதே போல உள்ள இன்னொரு இஸ்லாமிய விவரம் "ஞாபக மறதியைப் பற்றியதாகும்". இஸ்லாமிய நூல்கள் எவ்வளவு தீவிரமாக நபிகளின் பாவங்களைப் பற்றி கூறினாலும், இன்றைய இஸ்லாமிய எழுத்தாளர்கள் அச்செயல்களுக்கு காரணம் ஞாபக மறதி தான் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.


இந்த கோட்பாடு இஸ்லாமில் உருவானதற்கு இரண்டு அடிப்படை காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, உலகில் வாழ்ந்தவர்களில் இயேசு தான் பாவமற்ற மனிதராக வாழ்ந்தார் என்று பைபிள் சொல்வதை ஆரம்பகால இஸ்லாமியர்கள் சீக்கிரத்திலேயே கண்டுக்கொண்டனர். இதனை சமாளிக்க இஸ்லாமியரகள் கண்டுபிடித்த ஒரு கோட்பாடு "எல்லா தீர்கக்தரிசிகளும் முஹம்மதுவோடு கூட சேர்த்து பாவமற்றவர்கள்" என்ற கோட்பாடாகும். முஹம்மதுவை விட இயேசுவின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருப்பதை இஸ்லாமியர்கள் கண்டுக்கொண்டதால், அவர்களால் அதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இயேசு அற்புதங்கள் செய்தது போல, முஹம்மது எந்த அற்புதத்தையும் செய்யவில்லையானாலும், பொய்யான சில அற்புதங்களை இட்டுக்கட்டி அவைகளை முஹம்மது செய்தார் என்று சில இஸ்லாமியர்கள் கூறுவது போல, இயேசு பாவமில்லாதவராக இருக்கிறார் என்பதை சகித்துக்கொள்ளமுடியாமல், முஹம்மதுவும் பாவமில்லாதவர் என்ற பொய்யான கோட்பாட்டை இஸ்லாமியர்கள் உருவாக்கினார்கள்.


இரண்டாவதாக
, இஸ்லாமின் படி வெளிப்பாடுகள் மூலமாக கிடைக்கும் இறைவசனங்கள் காபிரியேல் (ஜிப்ராயீல்) மூலமாக எல்லா நபிகளுக்கும் கிடைத்தது. ஆகையால், இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை நபிகள் (தீர்க்கதரிசிகள்) பெறவேண்டுமானால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தூய்மை நிறைந்ததாக இருக்கவேண்டும், எந்த பாவமும் செய்யாதவர்களாக இருக்கவேண்டும் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. நபிகள் பாவங்கள் செய்கின்றவர்களாக இருந்தால், அவர்களால் எப்படி இறைவசனங்களை பிழையில்லாமல் மக்களிடம் சேர்க்கமுடியும்? இப்படிப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைத் தான் நபிகள்(தீர்க்கதரிசிகள்) பாவங்கள் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டை உருவாக்க இரண்டாவது காரணமாக இருந்தது.


மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது?


ஆ) முஹம்மது ஒரு பாவி என்பதற்கு குர்-ஆனிலிருந்து ஆதாரங்கள்.


முஹம்மது ஒரு பாவி அல்லது பாவம் செய்தவர் என்று குர்ஆன் அடையாளம் காட்டுகிறது: 40:55, 48:2, and 47:19:


40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும்.
உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!


48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.


குர்ஆன் 47:19ம் வசனத்தை இரண்டு தமிழ் மொழிப்பெயர்ப்புக்களிலும், ஐந்து ஆங்கில மொழியாக்களிலும் காணலாம். (குறிப்பு: இவ்வசனங்களில் முஹம்மது தன்னுடைய பாவங்களுக்காகவும் மற்றவர்களின் பாவங்களுக்காகவும் மன்னிப்பு கோறுகிறார்)


ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும்
உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)


'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக!
உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். (பீஜே தமிழாக்கம்)


"Know that there is no deity but God.
Implore Him to forgive your sins and to forgive the true believers, men and women. God knows your busy haunts and resting places." Dawood [3]


"So know (O Muhammad) that there is no God save Allah, and
ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest." Pickthall [4]


"Know thou therefore that there is no god but God, and
ask forgiveness for thy sin, and for the believers, men and women. God knows your going to and fro, and your lodging." Arberry [5]


"Know, then, that there is no god but God; and
ask pardon for thy sin, and for believers, both men and women. God knows your busy movements and your final resting places." Rodwell [6]


"Know therefore that there is no god but Allah and
ask forgiveness for the fault and for the men and women who believe: for Allah knows how ye move about and how ye dwell in your homes." Ali [7]


இந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்திய வார்த்தை "தன்ப்" (dhanb or thanb) என்பதாகும். இந்த வார்த்தை அனேக முறை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஹக்ஸ் இஸ்லாமிய அகராதி இவ்வார்த்தையின் பொருளை "பாவம் அல்லது குற்றம் அல்லது இவைகளைப்போல உள்ள ஒரு குற்றம்" [8] என்று வரையறுக்கிறது. (Hughes Encyclopedic Dictionary of Islam)[8]


முஹம்மது ஒரு பாவி என்று குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது. இவ்வார்த்தையை குர்ஆன், முஹம்மதுவிற்கும் சேர்த்தே சொல்கிறது. முஹம்மது ஒரு பாவியில்லை என்று வாதம் புரியும் இஸ்லாமியர்கள் இவ்வார்த்தைக்கு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். எனவே, இந்த வார்த்தை குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அல்லது அவ்வசனம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் பொருள் என்ன? இந்த வார்த்தையின் உண்மைப்பொருளை நாம் ஆரய்வோம். இறைவன் தண்டனை அளிக்கும் பாவமாக இவ்வார்த்தையின் பொருள் உள்ளதா? அல்லது இறைவன் மன்னிக்கும் அளவில் உள்ள மிகச்சிறிய பிழை என்ற பொருள் இவ்வார்த்தைக்கு உள்ளதா என்பதை நாம் ஆராய்வோம். இவ்வார்த்தையின் உண்மைப் பொருளை அறியவேண்டுமானால், இவ்வார்த்தை எங்கே எல்லாம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவ்வசனங்கள் சொல்லும் பொருள் அல்லது சூழல் என்ன என்பதை காண்போம்.


இவ்வார்த்தையின் பொருளைப் பற்றி குர்ஆனே பேச இப்போது நாம் இடம் கொடுப்போம்.


குர்ஆனில் இவ்வார்த்தை 39 இடங்களில் வருகிறது, சில இடங்களில் என்ன பாவம் என்பதைச் சொல்லாமல் பொதுவாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு 3:31ம் வசனத்தை பாருங்கள்,


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; ....


இவ்வசனத்தில் "எந்த பாவம்" என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், "பாவம்" என்று மட்டும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இருந்தபோதிலும், "தன்ப்" என்ற வார்த்தை வேறுபல வசனங்களில் "என்ன பாவத்தைப் பற்றி" அவ்வசனம் குறிப்பிடுகின்றது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட பட்டியலை நாம் காண்போம். நான் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட 22 இடங்களை மேற்க்கோள் காட்டப்போகிறேன், ஏனென்றால், குர்ஆன் இவ்வார்த்தையை எவ்வளவு வீரியமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களை நான் உற்சாகப்படுத்துகிறேன், "தன்ப்" என்ற வார்த்தையை மிகவும் லேசானதாக பொருள்படும் படி அல்லாஹ் குர்ஆனில் எங்கேயாவது பயன்படுத்தியுள்ளாரா என்று தேடிப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த "தன்ப்" என்ற பாவத்தை செய்தவருக்கு கொடுக்கப்படும் மிகவும் கொடுமையான தண்டனைக்கு முரண்பாடாக அல்லாஹ் மிகவும் லேசான தண்டனையை கொடுத்ததாக ஏதாவது வசனம் உங்களுக்கு தென்படுகின்றதா என்று தேடிப்பாருங்கள். நான் தேடிப்பார்த்ததில், எனக்கு கிடைக்கவில்லை.


"தன்ப் - DHANB" அல்லது பாவம் என்ற வார்த்தை வரும் குர்ஆன் வசனங்களின் தொகுப்பு:


3:11 (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.


பார்வோனின் மக்கள் செய்த பாவத்திற்காக தண்டனையை அளிப்பதாக அல்லாஹ் கூறுகிறார், அவர்கள் செய்த "தன்ப்" என்ற பாவத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.


3:16 இத்தகையோர் (தம் இறைவனிடம்): 'எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம், எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!' என்று கூறுவார்கள்.


இந்த வசனத்தின்படி மக்கள் தாங்கள் செய்த "தன்ப்" காக மன்னிப்பை கேட்கின்றனர், ஏனென்றால், தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்காமல் போனால், அவர்கள் நரகத்தின் அக்கினியில் விழவேண்டியிருக்கும்.


5:18 யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.


இங்கு, கிறிஸ்தவர்களும் யூதர்களும் அவர்களின் "தன்ப்" என்ற பாவத்தினால் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படுவார்கள் என்று முஹம்மது கூறுகிறார். ஆக, அவர்களின் தன்ப் என்ற பாவம் அவர்களுக்கு தண்டனையை சம்பாதித்துக் கொடுத்தது, பாராமுகமாக விட்டுவிடுவதற்கு இது ஒன்றும் சிறிய பாவமில்லை அல்லாஹ்வின் பார்வையில்.


5:49 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன
இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.


இந்த வசனத்தில் "தன்ப்" என்பது ஒரு "குற்றமாக" கருதப்படுகிறது. சிந்திக்கும் சக்தியுள்ள எந்த மனிதனாவது குற்றம் புரிவது வெறும் சிறிய பிழை என்று கருதுவானா? நிச்சயமாக அப்படி கருதமாட்டான். இறைவன் குற்றங்களை எப்படி கருதுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீரகள்?


6:6 அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.


பல வம்சங்களை/சந்ததிகளை அவர்களின் "தன்ப்" காக அழித்ததாக இறைவன் கூறுகின்றான்.


7:100 பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.


மக்களின் "தன்ப்" காக தண்டிக்கப்படுகிறார்கள், அதாவது "தன்ப்" என்பது தண்டனை பெற்றுத் தருகின்ற ஒரு செயலாக இருக்கிறது.


8:52 (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.


இந்த வசனத்தில் மறுபடியும் மக்களின் "தன்ப்"காக அல்லாஹ் அவர்களை தண்டித்தார். மக்களின் "தன்ப்" என்ற பாவத்தை அல்லாஹ் ஏதோ சிறிய பிழையாக நினைக்காமல், அதற்கு தண்டனையை கொடுக்கிறார்.


8:54 ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.


இவ்வசனத்தில் மறுபடியும் மக்கள் தங்கள் "தன்ப்"காக, இறைவனால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இந்த குற்றம் செய்தவர்களை அல்லாஹ் அநியாயக்காரர்கள் பொய்யர்கள் என்று சொல்கிறார்.


9:102 வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.


அலி தன் பின்குறிப்பில் இவ்விதமாக கூறுகிறார்: "சில மனிதர்களிடம் நல்ல குணங்கள் இருந்தாலும், அவர்கள் பலவீனமாக இருப்பார்கள், இதனால் தீய செயல்களை செய்வார்கள். அலி அவர்கள் இந்த "தன்ப்" ஐ "தீய செயல்கள்" என்று கூறுகிறார். "தீய செயல்கள் என்பது தெரியாமல் செய்யும் பிழைகளாக ஆகுமா?"


12:29 (என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.


இந்த வசனத்தில், யோசேப்பை பாவத்தில் விழவைக்க முயற்சி செய்த பெண்ணைப் பற்றி படிக்கிறோம். ஆனால், அவர் மீது கற்பழிப்பு குற்றத்தை அதே பெண் பொய்யாக சுமத்தினாள். இதனால், அப்பெண்ணின் "தன்ப்" அல்லது பாவத்திற்காக மன்னிப்பு கோறும்படி அறிவுரை தரப்படுகிறாள். ஒரு வேற்று ஆணோடு உடலுறவு கொள்ள நினைக்கும் இப்பெண்ணின் பாவம், அறியாமல் செய்த பிழையா? இல்லை. இது மனிதனுக்கு, இறைவனுக்கு எதிராக செய்த பாவமாகும்.


12:97 (அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.


இவ்வசனத்திலும், யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் "தன்ப்" ஐ மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுங்கள் என்று கேட்கிறார்கள். இவர்கள் செய்த அந்த பாவம் என்ன? அவர்கள் யோசேப்பை கடத்திச் சென்று, அடிமையாக விற்றுவிட்டாரகள். அதன் பிறகு தங்கள் தந்தையிடம் பொய்யையும் சொன்னார்கள். இவர்கள் செய்த இந்த செயல்கள் ஏதோ தெரியாமல் செய்த சிறிய பிழைகளா? அல்லது ஞாபகம் இல்லாமல் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை. இந்த செயல்கள் மிகவும் மோசமான பாவங்களாகும், இவைகள் பொறாமையினால் செய்த தீய செயல்களாகும்.


14:10 அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.


இந்த வசனத்தில் "தன்ப்" என்பது பல தெய்வ வழிப்பாட்டைக் குறிக்கிறது. விக்கிர ஆராதனை (பல தெய்வ வழிப்பாடு) மறதியில் செய்யும் சாதாரண செயலா? அவர்களின் "தன்ப்" பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றால் அவர்கள் நரக நெருப்பிலிருந்து தப்புவார்கள். இந்த பாவம் மன்னிக்கப்படவில்லையானால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்.


26:14 "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).


இந்த வசனத்தில் மோசே பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் ஒரு "குற்றம்/தன்ப்" புரிந்ததாக கூறுகிறார். அவர் செய்த அந்த குற்றம் தான் என்ன? அவர் செய்தது ஒரு கொலையாகும். கொலை என்பது அல்லாஹ் கண்டும் காணதவர் போல இருந்துவிடும் அளவிற்கு சிறிய பிழை தான் என்று எந்த ஒரு இஸ்லாமியராவது சொல்லமுடியுமா?


28:78 (அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.


இங்கு, ஒரு முழு தலைமுறையை அவர்கள் செய்த "தன்ப்" காக அல்லாஹ் அவர்களை அழித்தாராம். ஒரு சிறிய பிழைக்காகவா அல்லாஹ் ஒரு தலைமுறை மக்களை அழிப்பார்?


29:40 இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்க வில்லை அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.


மக்கள் செய்த குற்றமாகிய தன்ப்காக அவர்களை அல்லாஹ் பிடித்ததாக கூறுகிறார். அவர் எப்படி அம்மக்களை அழித்தார் என்பதை பார்க்கவும்:கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினார், பேரிடி முழக்கத்தை அனுப்பினார், பூமியினுள் அழுந்தச் செய்தார், சிலரை தண்ணீரில் மூழ்கடித்தார். மக்கள் செய்த இந்த "தன்ப்" தீயசெயல்கள் இல்லையா? "தன்ப்" என்பது அல்லாஹ் காணாதவர் போல இருக்கச் செய்யும் ஒரு சிறிய பிழையா? இல்லை...இல்லவே இல்லை. தன்ப் என்பது அல்லாஹ் மிகவும் கொடுமையாக தண்டிக்கும் பாவமாகும்.


40:11,12 அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர். (40:11) . (பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."


இவ்வசனத்தில் மக்கள் தங்கள் பாவங்களை(தன்ப்) ஒப்புக்கொள்கின்றனர். இவர்களின் செய்த பாவம் எது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறார்? அல்லாஹ்வுடன் மற்றவர்களை சமமாக்கினதையே பாவம் என்று அல்லாஹ் கூறுகிறார். இப்படிப்பட்ட பாவத்தை "ஷிர்க்" என்று சொல்லப்படும். இந்த பாவம் மன்னிக்கப்படாது என்று பல இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.


40:21 இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.


மக்களின் பாவங்களுக்காக (தன்ப்) அல்லாஹ் அவர்களை தண்டிக்கிறார். தன்ப் என்பது எப்படிப்பட்ட பாவம் என்றால், அல்லாஹ்விடமிருந்து இவர்களை காப்பாற்ற ஒருவர் தேவைப்படும் அளவிற்கு மிகவும் கொடுமையானது, ஆனால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இல்லை.


46:31 "எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.


அல்லாஹ் மக்களின் பாவங்களிலிருந்து (தன்ப்) மன்னிப்பு அளித்து, தண்டனையிலிருந்து தப்பிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இறைவனின் பார்வையில் பாவத்திற்கு(தன்ப்) கடுமையான தண்டனை தரப்படவேண்டி இருக்கிறது.


61:12 அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.


இந்த வசனத்தில் அல்லாஹ் அவரகளின் பாவங்களை (தன்ப்) மன்னிப்பாராம். அதன் பிறகு சொர்க்கத்தில் அவர்களை அனுமதிப்பாராம். அதாவது, தன்ப் என்ற பாவம் மன்னிக்கப்படாவிட்டால், அந்த சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.


67:11 (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.


இம்மக்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வார்களாம். ஆனால், இவர்களுக்கு மன்னிப்பு தரப்படாது. ஆகையால் இம்மக்கள் இவர்களின் பாவங்களினால், நரகத்தில் இருப்பார்கள்.


91:14 ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.


மேலே உள்ள வசனத்தில், மக்கள் அந்த நபி ஒரு கள்ள நபி என்று கருதி அவரை நிராகரித்துவிட்டனர் மற்றும் அந்த விசேஷித்த ஒட்டகத்தை கொன்றுவிட்டனர். இவர்களின் இந்த "தன்ப் குற்றத்திற்காக" அல்லாஹ் என்ன செய்தார்? அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்கி முழுவதுமாக அழித்துவிட்டார். ஏன் இந்த தண்டனை அவர்களுக்கு? அவர்களின் "தன்ப்" என்ற குற்றத்திற்காக இந்த தண்டனை.


வாருங்கள் இப்போது சிறிது ஆராயலாம். "தன்ப்" என்ற வார்த்தை பாவம், குற்றம் மற்றும் தவறு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த "தன்ப்" என்ற பாவம்


செய்தவர்களை அல்லாஹ் என்ன செய்தார்?


அல்லாஹ் இப்படிப்பட்டவர்களை...



பூமியில் இராதபடிக்கு துடைத்துப்போட்டார்


அழித்துவிட்டார்


நரக நெருப்பில் போட்டார்


பயங்கரமான தண்டனையை அளித்தார்


கணக்கு கேட்டார்


பயங்கரமான புயலைக் கொண்டு அழித்தார்


பயங்கரமான தாக்குதலை கொடுத்தார்


பூமி அவர்களை விழுங்கும்படி செய்தார்


தண்ணீரில் மூழ்கும்படி செய்தார்


தண்டித்தார்


நரக நெருப்பில் தள்ளி வேதனையை அனுபவிக்கும் படி செய்தார்


"தன்ப்" என்ற பாவத்தை செய்தவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனைகளைத் தான் நாம் மேலே படித்துள்ளோம். இந்த "தன்ப்" என்ற பாவமானது அல்லாஹ் பார்த்தும் பார்க்காததுமாக விட்டுவிடக்கூடிய அளவிற்கு ஒரு சிறிய "பிழை", "தடுமாறுதல்"அல்லது "மறதியில் செய்த பிழை" என்று பொருள் தெரிகிறதா உங்களுக்கு?


இல்லை! நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் மேலே கண்ட தண்டனைகளை பார்த்தால், "தன்ப்" என்பது அல்லாஹ் மிகவும் தீவிரமாக தண்டிக்கும் ஒரு பாவமாக இருக்கிறது. அல்லாஹ்வின் பார்வையில் இது கண் ஜாடையாக‌ பார்த்தும் பார்க்காதது போல‌ விட்டுவிடுகின்ற சிறிய பாவமல்ல, இது மிகவும் கொடுமையான பாவமாகும். இதனை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா?


முக்கியமாக இதனை மறக்கவேண்டாம், அதாவது முஹம்மது "தன்ப்" என்ற பாவத்தை செய்துள்ளார். முஹம்மது தன்னுடைய அனைத்து "தன்ப்" காக மன்னிப்பு கோரும் படி அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டுள்ளார். தன்ப் என்ற பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்தால் தான் சொர்க்கத்தில் நுழைய முடியும் என்று முஹம்மது குர்ஆனில் கூறியுள்ளார். தன்ப் பாவங்கள் மன்னிக்கப்படாதவன் நிச்சயமாக நரகத்தில் செல்வான்.


முதல் பாகத்தின் முடிவுரை:அல்லாஹ் குர்‍ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்‍ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா?


இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், முஹம்மதுவின் பாவங்கள் பற்றிய ஹதீஸ்களையும் அவர் செய்த பாவங்களின் பட்டியலையும் காண்போம்.


ஆதார நூற்ப்பட்டியல்


[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India.

[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at:

http://answering-islam.org/Gilchrist/Vol1/

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England

[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY.

[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England.

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England.

[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland.

[8] The Hughes Encyclopedic Dictionary of Islam"

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands.

[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA.

[11] இக்கட்டுரையின் அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

mo-sinner.htm
Rev A: 4/26/00


ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER?


இதர கட்டுரைகள்:


இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1


முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19)


முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)


முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்




--
3/15/2010 09:51:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Monday, March 15, 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

 

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை



முன்னுரை: பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளத்தில் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் ஒன்பதாம் பதிப்பில் வரவிருக்கும் விவரங்களில் ஒரு பாகத்தை அக்கட்டுரையில் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். அவரின் இந்த புத்தகத்திற்கு பதில்கள் தர நான் கடனாளியாக இருக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ந்து பதில்களை தந்து, பீஜே அவர்களின் பைபிள் பற்றிய விரிவுரையை மக்கள் அறியும் படி செய்வேன். 



பீஜே அவர்கள் பைபிள் விவரங்கள் பற்றி எவ்வளவு அறியாமையில், மேலோட்டமாக கட்டுரைகளை எழுதுகிறார் என்பதை நாம் தொடர் பதிலாக காணலாம். இக்கட்டுரையில் அவரது முதல் கேள்விக்கு சுருக்கமாக பதில் அளிக்கப்படுகிறது, தேவைப்பட்டால், விவரமாக பதில்கள் தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



பீஜே அவர்கள் எழுதியவைகள்


இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை


கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.


அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/


"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?




கேள்வி:


கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?


பதில்:


என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.


"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை.


ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?


அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?


அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?


மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.


நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.


உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:


"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25). என்று கூறினார்.


இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:


"இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்." (யோவான் 11:43,44).


நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:


1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரமுடையவராக பேசினார்.


2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.


3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.


தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)


இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.


எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.


இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.


யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.


உங்களின் வாதம், "நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லையே என்பதாகும். இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள். ஆங்கில மூலம்


இதர கட்டுரைகள்:

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!





--
3/13/2010 09:32:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்