யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?
யார் ஏமாற்றுக்காரர்?
Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?
முன்னுரை:
பெயித் பிரீடம் (www.faithfreedom.org) தளத்தில் 2007 ம் ஆண்டு Dr. ஜாகிர் நாயக் அவர்களின் "பல தார மணம் பற்றிய பதிலுக்கு" மறுப்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. நான் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு இருந்தேன்.
தமிழில்: ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது
ஆங்கிலத்தில்: Deception as a means for support: Dr. Naik's lies uncovered
ஏகத்துவம் தளம் ஜாகிர் நாயக் அவர்களின் இந்த பல தார மணம் பற்றிய கட்டுரையை தமிழில் வெளியிட்டுள்ளார்கள்: இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?
குறைந்த பட்சம் இவர்களாவது (ஏகத்துவம் தளம்) சரியான விளக்கம் அளிப்பார்கள் அல்லது சரியான புள்ளிவிவரங்களை தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் பொய் என்றுச் சொல்லி இக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது, சுருக்கமாக சொல்லவேண்டுமானால், "இஸ்லாமின் பல தார மணத்தை நியாயப்படுத்த ஜாகிர் நாயக் அவர்கள் வேண்டுமென்றே பொய் சொன்னார்" என்று பல ஆதாரங்களோடு இக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.
இந்த தமிழ் கட்டுரைக்கு மூன்று பின்னூட்டங்கள் வந்துள்ளன.
இக்கட்டுரைக்கு பின்னூட்டமிட்டவர்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட பதில் குறித்து ஜாகிர் நாயக் அவர்களிடம் தெளிவு பெறுவதற்கு பதிலாக, என்னை ஏமாற்றுக்காரன் என்றும், ஜாகிர் நாயக்கிற்கு கெட்டபெயர் கொண்டுவர முயற்சிக்கவேண்டாமென்றும் எழுதியுள்ளார்கள். அதாவது, கொடுத்த ஆதாரங்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் பொய்யுக்கும், ஏமாற்று வேலைக்கும் இப்படிப்பட்ட இஸ்லாமியர்கள் உதவி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சராசரி இஸ்லாமியர்கள் எப்படி இஸ்லாமிய அறிஞர்களின் பொய்யான விவரங்களுக்கு கேள்வி கேட்காமல் மயங்கியிருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையில் காணலாம். இக்கட்டுரைக்கு வந்த மூன்று பின்னூட்டங்களுக்கு என் பதிலையும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிர்பார்க்கும் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.
இஸ்லாமியரல்லாதவர்களுக்கு பதில் கொடுக்கும் போது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் இஸ்லாமியரல்லாதவர்கள் மற்றும் நாத்தீகர்கள் நேர்மையை எதிர்பார்ப்பது சரியா தவறா?
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தி இஸ்லாமியரல்லாதவர்களுக்கும், நாத்தீகர்களுக்கும் இஸ்லாம் பற்றி விளக்கமளிக்கிறார், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறார். இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தருகிறார். ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் புள்ளிவிவரங்களை தரும் போது, அல்லது ஒரு ஜனத்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையை தரும் போது, உண்மையான விவரம் தருவது தான் சரியான முறையாகும்.
டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் இஸ்லாமியரல்லாதவர்கள் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்ட முடியாது. அவர் சொல்லும் விவரங்கள் உண்மையா பொய்யா என்று சோதித்துப்பார்க்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இஸ்லாமியர்கள் இப்படி அவரது புள்ளிவிவரங்களை பரிசோதிக்க மாட்டார்கள், ஏனென்றுச் சொன்னால், "ஜாகிர் நாயக் அவர்கள் பொய் சொல்லமாட்டார், தவறான விவரங்களை தரமாட்டார்" என்ற நம்பிக்கையில் சரிபார்க்கமாட்டார்கள்.
ஆனால், உண்மை எது என்று பரிசோதித்துப் பார்த்தால், அவர் சொல்லும் விவரங்கள் பொய்யாகவும், ஆதாரமற்றதாகவும் இருக்கின்றன. அவர் சொல்லும் புள்ளிவிவரங்களை சரி பார்க்க அவர் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை, மற்றும் நாமாகவே புள்ளிவிவரங்களை சரி பார்த்தாலும் அது தவறானதாக உள்ளது, முக்கியமாக இந்த பல தார மணம் பற்றிய அவரது பதிலில் உண்மை இல்லை.
மேடை போட்டு, பணம் செலவு செய்து, இஸ்லாமியரல்லாதவர்களை முட்டாள்களாக்குவதை யாரும் விரும்பமாட்டார்கள். எனவே, தான் பெயித் பிரீடம் தளத்தில் ஒரு கட்டுரையை சார்லஸ் கோயினிக் என்பவர் (இவர் நாத்தீகர் என்று நினைக்கிறேன்) ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளிவிவரங்களை அலசி, பதிலை எழுதினார். இதே போல ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலும் புள்ளிவிவரங்களோடு கட்டுரை எழுதப்பட்டுள்ளது (இதனை இங்கு தமிழில் படிக்கலாம்).
சரியான தகவல்களை புள்ளிவிவரங்களை ஜாகிர் நாயக் அவர்கள் தரவேண்டும் என்று இஸ்லாமியரல்லாதவர்கள் எதிர்ப்பார்ப்பது தவறா? இவர் மட்டுமல்ல, எந்த அறிஞராக இருந்தாலும் சரி, எந்த மார்க்கத்தை சம்மந்தப்பட்டவராக இருந்தாலும் சரி உண்மையான புள்ளிவிவரங்களை தருவது தானே சரியானது?
எனவே, இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் அனைத்தையும் சோதித்துப்பார்த்து, அவைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ஒவ்வொருவரது கடமையாகும்.
நாத்தீகனின் நேர்மையை விட ஆத்தீகனின் நேர்மை அதிகமாக இருக்கவேண்டாமா?
ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு ஆத்தீகர், அதாவது இறைவன் உண்டு என்று சொல்பவர், நாம் மொழியாக்கம் செய்த ஆங்கில கட்டுரையை எழுதியவர் ஒரு நாத்தீகர். எந்த மதமாக இருந்தாலும் சரி, பொதுவாகவே இறைவன் மீதுள்ள பக்தி, பயம், சொர்க்கம், மற்றும் நரகம் போன்றவற்றின் மீதுள்ள நம்பிக்கை ஒரு ஆத்தீகனை நேர்மையுள்ளவனாக மாற்றுகிறது என்று எல்லா ஆத்தீகர்ளும் நம்புகிறோம். இப்படி இருக்கும் போது, அல்லாஹ்வை வணங்கும் ஜாகிர் நாயக் அவர்களின் நேர்மை நாத்தீகரின் நேர்மையை விட குறைவாக இருக்குமானால், யாருக்கு கெட்டபெயர் அல்லாஹ்விற்குத் தானே. இது ஜாகிர் நாயக்கிற்கு மட்டுமல்ல, இறைவன் உண்டு என்று நம்பும் எல்லாருக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.
நான் இப்படி சொல்வதினால், நாத்தீகர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஆத்தீகர்களாகிய நாம் "இறைநம்பிக்கை நல்லது, இதனால் நாம் நேர்மையானவர்களாக வாழ்கிறோம்" என்றுச் சொல்கிறோம், தம்பட்டம் அடிக்கிறோம், என்வே, ஆத்திகர்களுக்கு தங்கள் நேர்மையை நிருபிக்கவேண்டிய பொறுப்பு நாத்தீகர்களைவிட அதிகம்.
இறைவன் இல்லை என்றுச் சொல்பவனின் நேர்மையை விட, இறைவன் உண்டு என்றுச் சொல்பவனின் நேர்மை அதிகமாக இருக்கவேண்டாமா? ஒரு நாத்தீகர் ஒரு ஆத்தீகரை அதாவது ஜாகிர் நாயக் அவர்களை பொய்யர், நேர்மையற்றவர் இது தான் ஆதாரம் என்றுச் சொல்லும் அவமானத்தைவிட வேறு ஏதாவது பெரிய அவமானம் அல்லாஹ்விற்கு உண்டா? இதை இஸ்லாமிய அறிஞர்களும், சராசரி இஸ்லாமியர்களும் உணரவேண்டாமா?
இனி, நம் தமிழ் இஸ்லாமியர்கள் கொடுத்த மூன்று பின்னூட்டங்களுக்கு பதிலைக் காண்போம்.
முதல் பின்னூட்டம்:
பெயரில்லா சொன்னது…
how we can belive your thoughts we think DR thoughts is right plz plz plz we think you want to create bad name about DR THAT WISE YOUR DOING THAT TYPE OF 420 JOBS ABOUT DR STOP THIS NONSENCE
January 27, 2009 10:49 PM
முதல் பின்னூட்டம் பெயரில்லாமல் (அனானிமஸ்) வந்துள்ளது. இப்போது அவாது வரிகளுக்கு பதிலைக் காண்போம்.
அனானிமஸ் எழுதியது:
how we can belive your thoughts we think DR thoughts is right …
ஈஸா குர்ஆன்:
அருமை இஸ்லாமிய நண்பரே, நீங்கள் எங்கள் "எண்ணங்களை, நினைவுகளை" நம்பச் சொல்லவில்லை, நாங்கள் முன்வைக்கும் விவரங்களைப் பாருங்கள், அவைகள் சரியானவையா இல்லையா என்பதை நீங்களே கொடுக்கப்படும் தொடுப்புக்களுக்குச் சென்று சரிபாருங்கள். இதே போல, உங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னாலும், உடனே நம்பிவிடாமல், அவர் சொன்னது சரியான தகவலா என்று சரிபாருங்கள்.
நீங்கள் என் தமிழ் மொழியாக்கத்தை படித்து தான் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரங்கள் தவறானவைகள் என்று புள்ளிவிவரங்களோடு பதில் எழுதியிருப்பதைக் கண்டும், நீங்கள், நாயக் அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொன்னால், உங்களை என்னவென்றுச் சொல்வது?
நாயக் அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களுக்கு ஆதாரமே இல்லையே. ஆனால், நாம் புள்ளிவிவரங்களை தேடி கண்டுபிடித்து சரிபார்த்தால், அவைகள் ஜாகிர் நாயக் சொல்வதற்கு எதிராகவே உள்ளதே, இதை கூடவா நீங்கள் படித்துவிட்டு, நாயக் அவர்கள் சொல்வது தான் சரி என்றுச் சொல்கிறீர்கள்?
அனானிமஸ் எழுதியது:
plz plz plz we think you want to create bad name
ஈஸா குர்ஆன்:
ஜாகிர் நாயக் அவர்களுக்கு நான் ஏன் கெட்ட பெயரை கொண்டுவரவேண்டும்? அவர் மேடை பேச்சுக்கள் போதுமல்லவா அவருக்கு கெட்டபெயரை கொண்டுவர. அவர் கொடுக்கும் விவரங்கள் போதுமல்லவா அவர் சொல்வது பொய் என்பதை அறிந்துக்கொள்ள?
அவர் உண்மையைச் சொன்னால், சரியான விவரங்களைக் கொடுத்தால் ஏன் கெட்டபெயர் வரப்போகிறது?
அவருடைய பெயர் இதனால் கெடுகிறது என்று உங்களுக்கு அக்கரை இருந்தால், அவர் சொன்ன விவரங்களுக்கு ஆதாரங்களைத் தாருங்கள். அவரோடு தொடர்பு கொண்டு, "உங்களின் புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் அதற்கு ஆதாரங்கள் என்ன?" என்று கேட்டு, தெரிந்துக்கொண்டு எழுதுங்கள், அப்போது கெட்டபெயர் தானாகவே நீங்கிவிடுமே.
ஒரு வேளை நீங்கள் அவர் சொன்ன தகவல்களுக்கு ஆதாரங்களைக் கொடுத்தால், அவைகள் உண்மை என்று நிருபனமானால், நான் இந்த தமிழ் கட்டுரையை நீக்கிவிடுகிறேன். அதே போல, பெயித் பிரீடம் தளத்துடன் தொடர்பு கொண்டு ஆங்கிலத்திலும் இருக்கும் கட்டுரையை நீக்கச் சொல்கிறேன்.
ஜாகிர் நாயக் அவர்களின் பதில் எப்படி உள்ளதென்றால், ஒரு ஆண்டில் அல்ல, எல்லா ஆண்டிலும், எல்லா நாடுகளிலும் பெண்கள் தான் ஆண்களை விட அதிகமாக உள்ளார்களாம், அதனால், தான் பல தார மணம் என்பது சரியாம். எனவே, எல்லா ஆண்டிலும் அவரது புள்ளிவிவரம் படி, ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கவேண்டும். அப்போது தான் சரியான ஆதாரமாக முடியும்.
அனானிமஸ் எழுதியது:
DR THAT WISE YOUR DOING THAT TYPE OF 420 JOBS ABOUT DR STOP THIS NONSENCE
ஈஸா குர்ஆன்:
பொய்யான விவரங்களை கொடுத்து ஏமாற்றுபவர் ஏமாற்றுக்காரரா அல்லது சரியான புள்ளிவிவரங்களை தருபவர் ஏமாற்றுக்காரரா என்பதை நீங்கள் படித்த கட்டுரையை படிப்பவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், உங்களுக்கு மட்டும் புரியவில்லை? ஏன்?
அருமை இஸ்லாமியரே, எது "நான்சன்ஸ்"? மேடைகள் போட்டு, பதில் தருகிறேன் என்றுச் சொல்லி, பொய்யான விவரங்களை சொல்வது நான்சன்ஸா அல்லது அவரது பொய்களை உலகிற்கு எடுத்துக் காட்டுபவர்களின் செயல்கள் நான்சன்ஸா?
அவர் உண்மையிலேயே சரியான விவரங்களை கொடுத்துயிருந்தால் மற்றவர்கள் ஏன் கேள்வி எழுப்பப்போவார்கள்?
எனவே, அருமை இஸ்லாமிய நண்பரே, உண்மையிலேயே உங்கள் மனதிற்கு வேதனையாக இருந்தால், அவருடன் தொடர்பு கொண்டு, என்ன விஷயம்? ஏன் இப்படி சரியில்லாத ஜனத்தொகை புள்ளிவிவரங்களைத் தருகிறீர்கள், உண்மையான விவரம் என்ன என்று கேட்டு எழுதுங்கள். அப்போது உலகம், "ஜாகிர் நாயக் அவர்கள் உண்மை சொன்னார்கள் என்று" அறிந்துக்கொள்ளும். இப்படி பதில் வராத பட்சத்தில் நீங்கள் சொன்ன அந்த "420" யாருக்கு சரியாக பொருந்தும் என்று இந்த கட்டுரைகளை படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சரியாகத் தெரியும்.
இரண்டாவது பின்னூட்டம் அஜீஜுல்லாஹ் என்பவரிடமிருந்து வந்துள்ளது, அதற்கான பதிலை இப்போது காண்போம்.
Azeezullah சொன்னது…
You can talk generally against Dr. Zakir But you can not/never talk with Dr.
If you are ready, why do not you call him for debate in front of the public and let us see your skill.
ஈஸா குர்ஆன்:
அருமை அஜீஜுல்லாஹ் அவர்களே உங்களிடம் நான் நேரடியாக கேள்வியை கேட்கிறேன்.
1) டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் எந்த ஆண்டின் விவரங்களாகும்?
2) அவர் எந்த புத்தகத்திலிருந்து விவரங்களை எடுத்துச் சொல்கிறார்? உங்களால் ஆதாரங்களைத் தரமுடியுமா?
இங்கு கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருப்பது, என்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக அல்ல?
பல பேர்களின் பொய் முகங்களை உலகிற்கு காட்டுவதற்காக!
இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வரும் பொய்களுக்கு பதில்கள் தருவதற்காக!
இஸ்லாமின் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் உண்மை முகத்தை காட்டுவதற்காக !
கடைசியாக உங்கள் முஹம்மது ஒரு கள்ள / பொய் நபி என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என்பதற்காகவே கட்டுரைகள்,பதில்கள் தரப்படுகின்றனவே தவிர, பெயருக்காகவோ, புகழுக்காகவோ அல்ல.
டாக்டர் நாயக் அவர்கள் உண்மை முகம் தெரிந்துவிடுகிறதே என்று கவலைப்படும் நீங்கள், ஏன் அவரிடம் கேட்டு பதிலைத் தரக்கூடாது, அவரது தளத்திலேயே, மூல ஆதாரங்களைத் தரலாமே! அப்படி அவர் கொடுத்து இருந்தால், எனக்கு தொடுப்பு தாருங்கள், அவைகள் உண்மையானால், அவரது கருத்துப்படி, உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் எப்போதும் (பெண் சிசுக்கொலை போன்ற சில எதிர்பாராத காரணங்களினால், பெண்கள் குறைவாக இருந்தால் பரவாயில்லை) ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருந்தால், நான் இககட்டுரையை நீக்கிவிடுகிறேன். மற்றும் இக்கட்டுரைக்காக மன்னிப்புக் கோரி, ஒரு பதிவை வெளியிடுகிறேன்.
Azeezullah சொன்னது…
The Islam is truth and it spoke the real and amazing thing for day to day life as well as hereafter.
ஈஸா குர்ஆன்:
இதைத்தான் நீங்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் வருகிறீர்களே, பாடிய பல்லவியையே ஏன் மறுபடியும் பாடுகிறீர்கள். இந்த கட்டுரைக்கும் நீங்கள் சொல்லும் விவரத்திற்கும் சம்மந்தம் உண்டா?
கேள்வி எழுப்பியது, இஸ்லாமிய அறிஞர், மேடை பேச்சாளர், பல புத்தகங்களின் ஆசிரியர் உலகம் சுற்றும் அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரத்திற்கு ஆதாரம் எங்கே என்று தான். உங்களை குர்ஆன் பற்றி யாரும் கேட்கவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கு அவன் பின் பற்றும் மார்க்கம் தான் உண்மையானது, அது போல, இஸ்லாமியராக இருப்பவருக்கு குர்ஆன் உண்மை என்று தான் நம்புவார், இதனை யாரும் கேட்கவில்லை. குர்ஆன் பற்றி வேண்டுமானால், என் தளத்தில் படித்துப்பாருங்கள், விவரம் தெரியும்.
இங்கு உங்கள் அன்பு அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது, அவரது உண்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இதற்கு பதில் சொல்லமுடியுமா என்று சிறிது சிந்தித்து இருந்தால், நீங்கள் அவருக்கு நன்மை செய்பவராக இருப்பீர்கள்?
Azeezullah சொன்னது…
Do not waste your time and try to learn about Islam if you learn Islam, you will find lots of Miracles.
Azeezullah.
March 25, 2009 9:42 AM
ஈஸா குர்ஆன்:
இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்து தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனவே, இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்,
முக்கியமாக இந்த பலதார மணம் பற்றிய கட்டுரையில், ஜாகிர் நாயக் அவர்கள் பேசுவது உண்மையா பொய்யா? உண்மை என்றுச் சொன்னால், அது எங்கே?
குர்ஆனில் அற்புதம் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? அதில் அற்புதம் இருப்பதாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள் அவ்வளவு தான். குர்ஆன் அற்புதம் என்பவர்கள் இந்த பக்கத்தில் இருக்கும் தமிழ் கட்டுரைகளை ( http://www.answering-islam.org/tamil/quran.html) படித்துப்பாருங்கள், உண்மை தெரியும்.
இந்த கேள்வி குர்ஆன் அற்புதங்கள் பற்றி கேட்கப்படவில்லை, உங்கள் அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள் பற்றிய கேள்வி, அதற்கு மட்டும் பதிலைத் தாருங்கள், இதற்கு பதில் வராத வரை, மேலே அனானிமஸ்ஸாக வந்து ஒரு இஸ்லாமியர் சொன்ன 420 யாருக்கு பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.
மூன்றாவது பின்னூட்டம், ஆதம் என்ற பெயரில் வந்துள்ளது
ஆதம் சொன்னது…
உங்கள் நோக்கம் என்ன ,இஸ்லாம் பிழை என்பதா? அல்லது முஸ்லிம்கள் பிழை என்பதா ? அல்லது கிறிஸ்த்துவம் சரி எண்பதா?
ஈஸா குர்ஆன்:
நீங்களும் மற்றவர்கள் போலத்தானா? எனக்கு ஆச்சரியமாக உள்ளது! அதாவது சொல்லிவைத்தார் போல முஸ்லீம்கள் எப்படி ஒரே மாதிரியாக சிந்திக்கிறீர்கள்? கேட்ட கேள்வியை காற்றிலே விட்டுவிட்டு, எப்படியாவது கதையை திசை திருப்பப் பார்க்கிறீர்களே, அடேங்கப்பா என்னே ஒரு தந்திரம், என்னே ஒரு ஞானம்.
மேலே இரண்டு பின்னூட்டம் கொடுத்தவர்கள் குறைந்தபட்சம் ஜாகிர் நாயக் என்ற பெயரையாவது பயன்படுத்தினார்கள், ஆனால், திசை திருப்ப முயற்சித்தார்கள். ஆனால், நீங்கள் அவரது பெயரை பயன்படுத்தாமலேயே திசை திருப்புகிறீர்கள்.
என் நோக்கம் அல்லது என் கருத்து வேண்டும், அவ்வளவு தானே, இதோ சொல்கிறேன், பைபிளின் படி கிறிஸ்தவம் இஸ்லாமை கீழ்கண்ட விதமாகத்தான் பார்க்கிறது, இது தான் என் கருத்தும்கூட.
1) இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம், முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி, கிறிஸ்து உண்டாக்கிய இரட்சிப்பை மக்கள் அடையக்கூடாது என்பதற்காக சாத்தான் உருவாக்கிய ஒரு மார்க்கம் தான் இஸ்லாம் (இக்கட்டுரையில் கிறிஸ்தவம் உண்மையானதாக இருந்தால்..." என்ற கடைசி பாகத்தை படிக்கவும்).
2) இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை பிழைக்கவைப்பதற்காக பல பொய்களை அள்ளிவீசுவதில் தயங்குவதில்லை, உண்மையை திசைத் திருப்பி, மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க முயற்சிப்பார்கள். இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு, ஜாகிர் நாயக் அவர்களின் பல தார மண கட்டுரையாகும்.
3) உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை, அதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொன்று, மக்களை பயப்படவைத்து கேவலமான நிலையில் இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியெறுபவனை நாங்கள் தாக்குவதில்லை,என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் சட்டம்கொண்டு வந்து அதை சரியாக பின்பற்றட்டும், விரல்விட்டு எண்ணும் ஆண்டுகளில், இஸ்லாமின் நிலை அம்போ கதி தான்.
4) கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம், அதற்கு எதிர் மறையான மார்க்கம் தான் இஸ்லாம். இஸ்லாமிய நாடுகளில் இன்னும் எவ்வளவு தான் நீங்கள் கொடுமைப்படுத்தினாலும், கிறிஸ்தவம் இன்னும் வளரும் (கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு கணக்கில்லாமல் பிள்ளைகள் பெற்று கிறிஸ்தவத்தை வளர்க்க விரும்புவதில்லை, படுக்கை அறையில் கிறிஸ்தவத்தை வளர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.)
ஆதம் சொன்னது…
இங்கே நிருபிக்க வந்த விடயத்தின் 1 % கூட உம்மால் முடியவில்லை .
ஈஸா குர்ஆன்:
ஜாகிர் நாயக் அவர்களின் முகத்தில் கரியை பூசி, அவர் பொய்யர் என்று இந்த கட்டுரைச் சொல்லும் போது, இத்தனை பேர் நீங்கள் இருந்தும் பல முறை இக்கட்டுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கப்பட்டும், இதுவரை பதிலே சொல்லாமல் இஸ்லாமியர்கள் இதர தமிழ் இஸ்லாமிய தளங்களை நடத்தும் அறிஞர்கள் மௌனமாக இருக்கும் போதே தெரியவில்லையா? எத்தனை சதவிகிதம் இந்த கட்டுரை வெற்றிப்பெற்றுள்ளது என்று?
டாக்டர் ஜாகிர் நாயக்கின் புகழை கூரு போட்டு, நடு ரோட்டில் வைத்து ரூபாக்கு நாலூ என்று விற்பது போல, சார்லஸ் கோயினிக் அவர்களின் கட்டுரை நச்சென்று உண்மையை சொல்லும் போது, இன்னும் 1% கூட இக்கட்டுரையினால் முடியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்களாவது சொல்லுங்களேன், ஜாகிர் நாயக் சொல்லும் விவரங்களின் ஆதாரங்கள் என்ன?
சார்லஸ் கோயினிக் அவர்களின் கட்டுரை நிருபிக்க வந்தது, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு "பொ ய் ய ர்" என்பதாகும், அதற்கு ஆதாரங்களும் தரப்பட்டன. ஆனால், நாயக் அவர்கள் உண்மையாளர் என்பதற்கு ஒரு ஆதாரத்தையும் கொடுக்க அவராலும் முடியவில்லை, அவரது சீடர்களாகிய உங்களாகும் முடியவில்லை. இன்னும் என்ன இருக்கின்றது நிருபிப்பதற்கு?
ஆதம் சொன்னது…
நாங்கள் முஸ்லிமாய் இருக்க வேண்டும் என்றால் இரைதுதர்களை ஏறுக்கொள்ள வேண்டும் இயேசுவை கூட,
ஈஸா குர்ஆன்:
அய்யய்யோ யாராவது வந்து காப்பாற்றுங்களேன்!
இந்த கட்டுரைக்கும் நீங்கள் முஸ்லீமாக இருப்பதற்கும் சம்மந்தமில்லை சகோதரரே. இந்த கட்டுரைக்கும் நீங்கள் இறைத்தூதர்களை, இயேசுவை நம்புவதற்கும் சம்மந்தமில்லை.
முதலில் உங்கள் ஜாகிர் நாயக் அவர்களிடம் சென்று கேள்வி எழுப்பி பதிலை கொண்டு வாருங்கள். நீங்கள் முஸ்லீமாகவோ இருங்கள், அல்லது இல்லாமலோ போங்கள், இதனால், இந்த கட்டுரைக்கு என்ன பயன்? அல்லது ஜாகிர் நாயக் அவர்களுக்கு என்ன பயன்? நீங்கள் முஸ்லீமாக இருப்பதால், ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன விவரங்கள் உண்மையாகிவிடுமா என்ன? அல்லது நீங்கள் முஸ்லீமாக இருப்பதால், தானாகவே இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடுமா?
ஆதம் சொன்னது…
பைபிளில் இஸ்லாத்தைப் பற்றியோ முஹம்மதத் அவர்களைப் பற்றியோ சொல்லவிட்டால் பைபிள் திர்க்கதரிசனம் இல்லா மறை நூலா ?
June 15, 2009 2:53 AM
ஈஸா குர்ஆன்:
அருமை நண்பரே, ஆயிரம் பேர் "நான் தான் நபி" என்றுச் சொல்லிக் கொண்டு வருவார்கள். முஹம்மதுவிற்கு பிறகும் அனேகர் அப்படி வந்தார்கள். சொந்தமாக நபியாக பிரகடனப்படுத்தி கொள்கிறவர்களை பற்றியெல்லாம் வேதங்களில் இருக்கவேண்டுமானால், அவ்வளவு தான் கதை.
முஹம்மது என்ன உண்மை தீர்க்கதரிசியா? இல்லையே! அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி. நீங்கள் இயேசுவை ஒரு நபியாக எண்ணுகின்றீர்கள், அது உங்கள் நம்பிக்கை. அது போல, நாங்கள் உங்கள் முஹம்மது ஒரு பொய் நபி என்று நம்புகிறோம், இது எங்கள் நம்பிக்கை.
உலகத்தில் நபியாக சொல்லிக்கொண்டு வருகிறவர்களை எல்லாம் உங்கள் குர்ஆனில் உள்ளதா? ரஷீத் கலிபா என்று ஒருவர்(http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa), அவர் தன்னை நபி என்றுச் சொன்னார், குர்ஆனில் பல இடங்களில் தன்னிடம் அல்லா பேசியதாகச் சொல்லி, தன் பெயரை குர்ஆனில் புகுத்தியும் விட்டார். இரண்டு குர்ஆன் வசனங்களையும் (குர்ஆன் 9:128-129) அவர் நீக்கி, அவைகள் இல்லாமலேயே குர்ஆனை திருத்தியும் விட்டார் .
அவரைப் பற்றி ஏன் உங்கள் குர்ஆனில் இல்லை?
ரஷீத் கலிபா பற்றி உங்கள் குர்ஆனில் இல்லையானால், உங்கள் குர்ஆன் தீர்க்கதரிசனம் இல்லாத மறை நூலா?
பைபிளில் உங்கள் முஹமம்து பற்றியும், இஸ்லாம் பற்றியும் இல்லை என்றுச் சொன்னால், மிகவும் வேதனை அடைவீர்கள் போல் உள்ளது, எனவே, முஹம்மது பற்றியும், இஸ்லாம் பற்றியும், அவ்வளவு ஏன், சில தீவிர இஸ்லாமியர்கள் பற்றியும் உள்ள வசனங்களை பைபிளிருந்து எடுத்துக் காட்டுகிறேன், இப்போது சந்தோஷம் தானே. சரியாக விளங்கும் என்பதற்காக அடைப்பிற்குள் சில வார்த்தைகளை எழுதியுள்ளேன்.
… மேலும் உங்களை (கிறிஸ்தவர்களை)க் கொலை செய்கிறவன் (முஸ்லீம்) தான் தேவனுக்கு (இறைவனுக்கு)த் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். யோவான் 16:2
இன்று முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொன்று விட்டு, நான் அல்லாஹ்வின் தொண்டு செய்கிறேன் என்றுச் சொல்கிறார்கள். இதனை இயேசு அன்றே சொல்லியுள்ளார். இது இஸ்லாம் பற்றியது தானே.
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு (முஹம்மதுவிற்கு) எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். மத்தேயு 7:15
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் (முஹம்மது) எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:11
மேலே உள்ளவைகள் எல்லாம் இஸ்லாம் பற்றிய வசனங்கள், இப்போது திருப்தி தானே.
இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது எந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இடுகின்றோம் என்பதை கவனித்து, அதற்கு பதிலைச் சொல்லப் பாருங்கள். கடைசியாகவும் சொல்கிறேன். ஜாகிர் நாயக் அவர்களின் விவரங்களுக்கு ஆதாரங்கள் தரப்படுமானால், இந்த கட்டுரையையும், இதற்கான மூல தமிழ் கட்டுரையையும் நான் நீக்கிவிடுகிறேன்.
அதுவரை, ஜாகிர் நாயக் அவர்களின் சாயம் வெளுத்துக் கொண்டே இருக்கும்…..
1989 லிருந்து 2009 வரையுள்ள உலக ஜனத்தொகை கணக்கெடுப்புக்கள் இந்த தளத்தில் உண்டு - CIA World Factbook - http://www.theodora.com/wfb/. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கணக்கெடுப்பிற்கு உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கலாம்.