புதிய கட்டுரை: 30 ஆண்டுகள் இஸ்லாமை ஆராய்ந்து "வெளியேறிய" அபுல் காசீம்
30 ஆண்டுகள் இஸ்லாமை ஆராய்ந்து "வெளியேறிய" அபுல் காசீம்
ஒரு பல்கலைக் கழக மாணவன், தன் பட்டப்படிப்பு ஆராய்ச்சி கட்டுரைக்காக "Leaving Islam (Apostasy Islam)" என்றுச் சொல்லக்கூடிய "இஸ்லாமை விட்டு வெளியேறுவதை" தலைப்பாக தெரிந்துகொண்டான். இதைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, பாங்களா தேஷ் நாட்டை தாய் நாடாக கொண்டு இஸ்லாமை விட்டு வெளியேறிய அபுல் காசிம் (Abul Kasem) என்பவருக்கு கடிதம் மூலமாக அனேக கேள்விகளை கேட்டான். இக்கேள்விகளுக்கு அபுல் காசிம் அவர்கள் கொடுத்த பதில்களை இக்கட்டுரையில் காணலாம்.
அபுல் காசிம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இணையத்தில் படிக்க:
1. A Guide to the Quranic Contradictions | E.Book Version (consolidated)
2. Islamic Voodoos
3. A Complete Guide to Allah
4. Root of Terrorism ala Islamic Style (Synopsis | Introduction | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20)
5. Sex and Sexuality in Islam - Part 1 - Part 2 - Part 3 - Part 4 - Part 5 - Part 6
6. Who Authored the Quran? - Part 1 - Part 2 - Part 3 - Appendix & Bibliography
7. Women in Islam: An exegesis - Part 1 - Part 2 - Part 3 - Part 4 - Part 5 - Part 6 - Part 7
இவரது அனைத்து கட்டுரைகளையும் புத்தகங்களையும் நேர்க்காணல்களையும் இந்த தொடுப்பில் படிக்கலாம்
கேள்வி பதில்கள்
பெயர்: அபுல் காசிம்
வயது: 60 ஆண்டுகள்
பால்: ஆண்
தாய் நாடு: பாங்களா தேஷ்
தற்போது வசிக்கும் நாடு (தாய் நாடு இல்லாமலிருந்தால்): ஆஸ்திரேலியா
கேள்வி:
நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுவதற்கு முன்புவரை, இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்திருந்தீர்களா?
பதில்:
இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
கேள்வி:
இஸ்லாமை விட்டு வெளியேறுபவற்றைப் பற்றிய பிரச்சனையை/விவாதத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பதில்:
ஆம், தெரியும்.
கேள்வி:
இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படி தெரியும் என்றால், உங்களுக்கு இந்த விவரம் எப்படி தெரிந்தது? (செய்தித்தாள்கள், இணைய தளங்கள் மூலமாகவா?)
பதில்:
ஆம், இஸ்லாமிய சட்டத்தின் படி எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்திருக்கிறேன். இவைகளுக்காக நான் குர்ஆனையும், ஹதீஸ்களையும் படித்தேன், மற்றும் அபோஸ்டசி பற்றிய ஷரியா சட்டம் பற்றியும் படித்து தெரிந்துக்கொண்டேன். இணைய தளங்கள் சிறிது உதவின. ஆனால், புத்தகங்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும் நான் அதிகமாக அறிந்துகொண்டேன்.
கேள்வி:
நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிய போது, உங்கள் குடும்ப நபர்களும், நண்பர்களும் என்ன மனநிலையில் இருந்தார்கள்? அவர்களின் பதில் எப்படி இருந்தது?
பதில்:
என் குடும்பத்தில் அனேகருக்கு நான் இஸ்லாமை விட்டு வெளியேறிய விஷயமே தெரியாது. வெகு சிலருக்கு மட்டுமே நான் இஸ்லாமை விட்டு வெளியேறிய விஷயம் தெரியும். இந்த வெகு சிலர் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள், அவர்கள் எனக்கு எப்போதும் தொந்தரவாக இருந்ததில்லை, முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், அவர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இதே போல, என் நண்பர்களிலும் வெகு சிலருக்கு மட்டுமே இதைப் பற்றித் தெரியும். இந்த வெகு சில நண்பர்களும் என்னைப்போல இஸ்லாமை விட்டு வெளியே வந்தவர்கள் அல்லது இஸ்லாம் பற்றி அதிகமாக சந்தேகமுள்ளவர்கள்.
கேள்வி:
இஸ்லாமிய மத போதகர்கள், இமாம்களிடம் அதிகாரிகளிடம் உங்கள் சந்தேகங்களை பகிர்ந்துக்கொண்டு இருக்கிறீர்களா?
பதில்:
இல்லை. நான் ஏன் என் உயிருக்கு ஆபத்தை கொண்டுவரும் அப்படிப்பட்ட இரத்தம் குடிக்க துடிக்கும் முல்லாக்களிடம் கேட்கப்போகிறேன்.
கேள்வி:
ஒரு வேளை அவர்களிடம் ஆலோசனைக்கு சென்று இருந்தால், அவர்களிடம் எப்படிப்பட்ட ஆலோசனையை பெற்று இருப்பீர்கள், அப்படி இல்லையானால், ஏன் கேட்கவில்லை?
பதில்:
அதிகாரிகளிடம் "இஸ்லாமை விட்டு நான் வெளியேறிய விஷயத்தைச் சொல்வது என்பது பயனற்றது" என்று நான் கருதுகிறேன். இவர்கள் மிகவும் புகழ்பெற்ற அபோஸ்டசியாக (இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களாக இருக்கும்), இபின் வரக், வஃபா சுல்தான், அயான் ஹிர்சி அலி போன்றவர்கள் பற்றி மிகவும் மென்மையாக பேசுவார்கள், ஆனால், என்னைப் போல உள்ள சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்கமாட்டார்கள்.
கேள்வி:
நீங்கள் உங்கள் குடும்ப நபர்களிடம்/நண்பர்களிடம் "இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பிய" முடிவைச் சொன்னீர்களா? அப்படி சொல்லியிருந்தால் அல்லது சொல்லாமல் இருந்தால் அதற்கான காரணம் என்ன?
பதில்:
முந்தைய பதிலை படித்துக்கொள்ளவும்.
கேள்வி:
ஒரு வேளை சொல்லியிருந்தால், அவர்கள் எப்படி செயல்பட்டு இருப்பார்கள்?
பதில்:
முந்தைய பதிலை படித்துக்கொள்ளவும்.
கேள்வி:
நீங்கள் உங்கள் தாய் நாட்டை விட்டு, வேறு நாட்டிற்கு இடம் பெயர்ந்தது, "இஸ்லாமை விட்டு வெளியேறியதற்காகவா"?
பதில்:
இந்த கேள்வி எனக்கு ஒத்துவராது, ஏனென்றால், நான் இஸ்லாமை விட்டு வெளியேறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நான் என் தாய் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டேன்.
கேள்வி:
நீங்கள் ஒரு நாள் இஸ்லாமை விட்டு வெளியேறுவேன் என்று நினைத்தீர்களா? அல்லது முதலிலிருந்தே இஸ்லாமை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததா?
பதில்:
என் சிறு வயது முதற்கொண்டு, எனக்கு இஸ்லாம் பற்றி அதிகமாக சந்தேகங்கள்/கேள்விகள் இருந்தன. அப்போது என் பெற்றோர்களிடமும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் அனேக சந்தேகங்களை கேட்டேன், ஆனால் பயனில்லை, எனக்கு அறிவு பூர்வமான பதில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டபடியினால், சில நேரங்களில் நான் தண்டிக்கப்பட்டேன், அடிக்கப்பட்டேன். என் இஸ்லாமிய மத தலைவர்கள் என்னிடம் "இஸ்லாம் பற்றியே குர்ஆன் பற்றியோ எந்த கேள்வியும் கேட்கக்கூடாது" என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இஸ்லாமிய சர்வாதிகார சூழ்நிலையிலும் நான் இஸ்லாமை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால், நான் குர்ஆனை அதிகமாக ஆராய்ந்து படித்தபிறகு, இஸ்லாமிய அதிகார பூர்வமான மூல நூல்களை படித்தபிறகு தான் "இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித் தனமாக பொய்யான ஏகாதியபத்தியமான மதம்" என்று கண்டுக்கொண்டேன். இதன் பிறகு தான் நான் இஸ்லாமை விட்டு வெளியேறினேன். இது நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு நடந்தது.
கேள்வி:
நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறியது சரியானது தான் என்று எப்படி அறிகிறீர்கள்? உங்களைச் சூழ்ந்துள்ள இடம் மற்றும் சூழ்நிலை எப்படி உங்களுக்கு உதவியது?
பதில்:
ஆஸ்திரேலியாவில் நிலவிவந்த வார்த்தை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் எல்லா மதத்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட சரியான உரிமைகள், நான் இஸ்லாமை விட்டு வெளியேற உதவின. இப்படிப்பட்ட சுதந்திரம், உரிமைகள் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதில்லை.
கேள்வி:
உங்கள் தாய் நாட்டில்/நகரத்தில் உங்களுக்கு தடைக்கல்லாக இருந்தது எது?
பதில்:
பாக்ங்களா தேஷ் நாட்டில் "இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல சட்டமில்லையானாலும்", என்னைப் போன்றவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவிடுவார்கள், பயமுறுத்துவார்கள், எப்போதானாலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் கொல்லப்படுவோம் என்ற பயத்துடனே நாம் வாழவேண்டி வருகிறது. இதனால் தான், பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுவதை வெளியே காட்டமாட்டார்கள், அமைதியாக வெளியே வந்துவிடுவார்கள். அமைதியாக இஸ்லாமை விட்டு வெளியே வந்துவிட்ட இப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு நம்பிக்கையான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட்டுமே தெரிவிப்பார்கள். இவர்கள் இஸ்லாமை பின்பற்றுவதை அமைதியாக நிறுத்திக்கொள்வார்கள். இப்படித் தான் அடாவடி இல்லாமல் விளம்பரம் இல்லாமல் அனேகர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறார்கள்.
கேள்வி:
இஸ்லாமை விட்டு வெளியேறிய நீங்கள் சந்தித்த விளைவுகள் என்ன? நீங்கள் சமுதாய முறையில் அல்லது சட்ட ரீதியாக அல்லது மனோரீதியாக பெற்ற நன்மைகள் என்ன?
பதில்:
நான் இஸ்லாமை விட்டு வெளியேறியது ஒரு சாதாரண "தீர்மானம் அல்லது முடிவு" அல்ல. நான் அனேக ஆண்டுகள் தொடர்ந்து இஸ்லாமை கற்றேன், அலசினேன், புரிந்துக்கொண்டேன் மற்றும் ஆராய்ந்தேன். ஒரு அணுயளவும் சந்தேகமின்றி எனக்கு நம்பிக்கை வரும் வரை இப்படி செய்தேன், பிறகு தான் கண்டுக்கொண்டேன், இஸ்லாம் ஒரு பொய்யான காட்டுமிராண்டித் தனமான ஏகாதியபத்தியமான ஒரு மார்க்கமென்று. நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் இஸ்லாமை படித்தேன், கடைசி 10 ஆண்டுகள் மிகவும் ஆழ்ந்து, தொடர்ந்து ஆராய்ந்து படித்தேன். பிறகு தான் தெரிந்துக்கொண்டேன் "இஸ்லாம் ஒரு பயப்படவைக்கும், கொடுமைப்படுத்தும் கொலைக்கார மார்க்கமென்று". உலகில் இப்போது நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு "வேர் இஸ்லாம் தான்". இதனை நாம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அழைக்கலாம். இன்று நாம் நம் கண்களால் காண்கிறோம், இஸ்லாமிய தீவிரவாதிகள் எல்லாரும் குர்ஆன் சொன்னதையும், சுன்னா சொன்னதையும் அப்படியே கீழ்படிகிறார்கள், இவைகள் தான் அவர்களை ஊந்துத் தள்ளுகின்றவைகள். இவைகளை நாம் மறைக்கமுடியாது, அதாவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளும், சுன்னாவும் (முஹம்மது பற்றிய ஹதீஸ்கள்), ஷரியா (இஸ்லாமிய சட்டமும்) மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறும் தான் "தீவிரவாதத்திற்கு வித்தாக உள்ளது". இஸ்லாமில் சந்தோஷமில்லை, மகிழ்ச்சியில்லை மற்றும் நிம்மதியில்லை. சந்தோஷப்படக்கூடிய, நிம்மதியாக இருக்கக்கூடிய அனைத்தும் இஸ்லாமில் தடை செய்யப்பட்டு இருக்கும்.
நான் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும், இஸ்லாமை விட்டு வெளியேறிய போது நான் விடுதலையாக்கப்பட்டேன். என் இதயத்தின் மீது இருந்த மிகப்பெரிய பளு நீங்கியது. நான் இரண்டு நிலையில் வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலும், நான் விடுதலையோடு சந்தோஷமாக இருக்கிறேன். என் மனதிற்கும் என் எண்ணங்களுக்கும் இப்போது எந்த தடையுமில்லை. இந்த அமைதி எனக்கு எப்படி இருக்கின்றது என்றுச் சொன்னால், அனேக ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையானது போல் இருக்கிறது, அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீடு செய்தும் அது பயனற்றதாக மாறிய பிறகு, திடீரென்று விடுதலை பெற்றது போல சந்தோஷமாக உள்ளது.
இஸ்லாமை விட்டு வெளியேறுவது என்பது மறுபடியும் பிறக்கும் பிறப்பு போன்றது, உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் விடுதலையான வாழ்க்கை வாழமுடிகிறது.
Source