ஜீமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, பிராடு செய்தது யார் ?
உங்களைப் போன்ற சகோதரர்களின் ஊழியம் அதிகமாக தேவை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
உங்களின் இந்த பதிவைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தரலாம் என்று நான் விரும்புகிறேன்.
1. முதலாவதாக, நாம் அதாவது தமிழ் கிறிஸ்தவர்கள் செய்யும் ஊழியம் மூலமாக எப்போதும் மகிமையும், கனமும் கர்த்தர் ஒருவருக்கே நாம் செலுத்தவேண்டும். ஆகையால், நாம் (முக்கியமாக நான்) செய்வது ஒன்றும் பெரிய வேலை இல்லை. அதாவது வீட்டில் அசுத்தம் இருந்தால், ஒரு துடப்பம் எடுத்து சுத்தம் செய்கிறோம் அல்லவா அது போலத்தான், பைபிளுக்கு எதிராக வீசப்படும் அசுத்தங்களை நம் கைகளால் சுத்தம் செய்கின்றோம். இதில் தேவனின் மகிமையை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது, அவருக்கே நன்றியைச் செலுத்தவேண்டும்.
2. இரண்டாவதாக, நீங்கள் பதித்த பகுதியில் ஒரு சிறிய திருத்தம் இருக்கின்றது, அதாவது, நீங்கள் பதித்த விவரத்தைச் முதலில் அவர்கள் சொல்லிவிட்டு, அதன் அடுத்தவரியாக கீழ் கண்டவரியையும் எழுதியுள்ளார்கள்.
--------------
Ithuthaan islam wrote: 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..!' வரலாற்று தொடர் வரும் இன்ஷா அல்லாஹ்.
--------------
அதாவது, அவர்கள் இதற்கு முன்பு எழுதிய அக்கட்டுரைகளின் தொடர்ச்சியை தொடரப்போவதாக சொல்லியுள்ளார்கள்.
ஆனால், நீங்கள் அவர்கள் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு பதித்துள்ளீர்கள்.
இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நாளைக்கு இஸ்லாமியர்கள் நீங்கள் இங்கு பதித்த பகுதியை /விவரத்தை படித்துவிட்டு,
யார் சொன்னது, நாங்கள் எழுதமாட்டோம், ஓடிவிட்டோம் என்று?
அந்த கட்டுரையின் கீழே "அக்கட்டுரையின் தொடர்ச்சி வரும்" என்று நாங்கள் எழுதியதை ஏன், அந்த சிட்டு என்ற கிறிஸ்தவர் மறைத்தார்? என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.
இதனால் நமக்கு கெட்டப் பெயர் வரும். உங்களுக்கும் கெட்டப்பெயர் வரும். எனவே, இனி ஏதாவது மற்ற தளங்களின் விவரத்தை பதிப்பதாக இருந்தால், முக்கியமான விவரங்களை தவறாமல் பதிக்கவேண்டும், அல்லது அதைப் பற்றி சில வரிகளையாவது எழுதவேண்டும். [இந்த கட்டுரையில் பைபிளுக்கு மூல மொழி இல்லை என்று அவர்கள் எழுதியுள்ளார்கள், இதற்கும் முடிந்தால் பதில் தருகிறேன். ]
வீணாக நாம் நமக்கு அவதூறுப்பெயரை நம் அறியாமையினால் சம்பாதித்துக்கொள்ளக்கூடாது என்பது என் கருத்து. அவர்கள் வேண்டுமானால், ஏமாற்றி, பொய்களையும் சொல்லட்டும், ஆனால் நாம் நமக்கு தெரியாமலும் அப்படி செய்யக்கூடாது.
3. மூன்றாவதாக, யார் உண்மைக்கு புறம்பாக எழுதுகிறவர்கள், ஜீமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, பிராடு செய்தது யார் ?
என்னைப் பற்றி கீழ்கண்டவாறு அவர்கள் எழுதியுள்ளார்கள்.
----------------
இது தான் இஸ்லாம் எழுதிய வரிகள்:
உமர் என்ற பெயரில் எழுதும் கிறிஸ்த்தவரின் ஆரம்ப நடுநிலை மேலும் நம்மை அவர்களுக்கு பதிலெழுத வைத்தாலும் அடுத்தடுத்த அவரின் எழுத்துக்கள் உண்மைக்கு புறம்பான வேறு நோக்கத்தை பிரதிபளிக்கத் துவங்கியது. இஸ்மவேல் குறித்த அவர்களின் பதிவுகளில் இதைக் காணலாம். உண்மைக்கு புறம்பாக எழுத துணிந்தவர்களுடன் உரையாடி பலனில்லை என்பதால் நாம் பதிலெழுதுவதை நிறுத்தினோம். ----------------
தங்களுக்கு மெயில் மூலமாக கிறிஸ்தவம் பற்றிய கேள்விகள் வந்தது என்றுச் சொல்லி, மாட்டிக்கொண்டு பொய் சொல்லி, அதை மறைக்க ஒரு ஜீமெயில் படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டது, இந்த "உண்மையாளர்கள்" தான். எனவே, யார் உண்மையாளர்கள், யார் பொய்யர்கள் என்று கடந்த வருடமே இணைய உலகிற்கு தெளிவாகி விட்டது.
கீழ் கண்ட கட்டுரைகளை படித்துவிட்டு, யார் உண்மைக்கு புறம்பாக செயல்படுகிறவர்கள் என்று வாசகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.
எங்கள் மறுப்பு - 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம் - http://isakoran.blogspot.com/2007/07/fake-e-mail-id.html
கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம் - http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/FakeEmailRebuttal2.htm
நான் கேட்கிறேன், ஐந்து வேளை தொழும் இவர்களுக்கு அந்த தில்லுமுல்லு படத்தை தயார்படுத்தும் போது:
நாம் இப்படி பிராடு செய்கிறோமே,
பிறகு அதே கையினால் குர்ஆனை தொட்டு படிக்கின்றோமே,
மட்டுமல்ல, எங்களை நம்பி இஸ்லாம் பற்றி கேள்வி கேட்டு பதில் பெரும் பெரும்கூட்ட முஸ்லீம்கள் உள்ளார்களே,
நாம் செய்வது சரியா? பிராடு செய்து தான் இஸ்லாமை பரப்பனுமா?
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவர முயற்சி செய்யனுமா ?
போன்ற கேள்விகள் எழும்பவில்லை?
யார் யாரை பொய்யர்கள் என்றுச் சொல்வது? தெரிந்தே பிராடு செய்யும் இவர்களோடு விவாதம் செய்ததற்கு வெட்கப்படவேண்டியது கிறிஸ்தவர்களே தவிர நீங்கள் ஒன்றும் உத்தமர்கள் போல நடிக்கவேண்டாம்? என்றுச் சொல்லிகொள்கிறேன்.
அருமை சகோதரர் உங்கள் பதிவிற்காக மிக்க நன்றி. மற்றும் இனி எச்சரிக்கையாக பதிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
God Bless You All.