குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்:
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1
மோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH
தலைப்புக்கள் | குர்ஆன் 20:38-40 | குர்ஆன் 28:7, 11-13 |
1. அல்லாவின் உரையாடல் | "உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)! (20:38) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" (எனப் பணித்தோம்). மேலும், "(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன். (20:39) | நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (28:7) |
2. மோசேயின் சகோதரியின் உரையாடல் | (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர். (20:40) | இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள். (28:11) நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (28:12) இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (28:13) |
(குர்ஆன் 20:39) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்"…..
(குர்ஆன் 28:7) நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக?காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்.
1. குர்ஆன் 20:39ம் வசனத்தில் "குழந்தையை பேழையில் வைத்து நதியில் போட்டு விடும்" என்று உள்ளது ஆனால், குர்ஆன் 28:7ல், "நீ பயப்பட்டால் ஆற்றில் போட்டுவிடு" என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம். அதாவது, "நீ பயப்பட்டால்" என்ற வார்த்தையை அல்லா சொன்னாரா இல்லையா? ஒருமுறை சொன்னவர் இன்னொரு முறை ஏன் சொல்லவில்லை?
2. இரண்டு இடங்களிலும் பேசியவர் "அல்லா" தான் என்றுச் சொன்னால், தான் பேசியதை தானே மறந்துவிட்டாரா?3. ஆற்றில் விட்டுவிட்டு, அவரைப் பற்றி "நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்" என்று குர்ஆன் 28:7ல் அல்லா சொல்கிறார். ஆனால், இந்த விவரத்தை குர்ஆன் 20:38ல் அல்லா சொல்லவில்லை? ஏன் இந்த வித்தியாசம்?
4. குர்ஆன் 20:39ல் "அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" என்றுச் சொல்கிறார். ஆனால், இந்த விவரம் குர்ஆன் 28:7ல் இல்லை. ஏன் இந்த வித்தியாசம்?
5. குர்ஆன் 28:7ல், "நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; " என்றும், "அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்றும் சொல்லியுள்ளார். ஆனால், இந்த விவரம் குர்ஆன் 20:39ல் இல்லை? அது ஏன்?
6. உண்மையில் மோசேயின் தாயிடம் குர்ஆன் 20:39ம் வசனத்தில் வருவதைப்போலச் சொனனாரா அல்லது குர்ஆன் 28:7ம் வசனத்தில் வருவதைப்போலச் சொன்னாரா?
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள்,….. (குர்ஆன் 20:40)
….; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (குர்ஆன் 28:12)
1. குர்ஆன் 20:40ல், "பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை" என்றுச் சொன்ன அதே சகோதரி, குர்ஆன் 28:12ல் "ஒரு வீட்டினரை" என்று சொல்கிறார். இதில் எது சரி, எது தவறு? மோசேயின் சகோதரி "ஒருவரை காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா அல்லது "ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா? பொருளில் அதிகமாக வித்தியாசம் இல்லையானாலும், இஸ்லாமியர்களின் "வேத நிபந்தனையை" குர்ஆனுக்கு இட்டால் எப்படி இருக்கும் என்று நாம் சோதிக்கும் போது, இப்படிப்பட்ட முரண்பாடுகள் வெடிக்கின்றன
2. குர்ஆன் 28:12ல் "அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்" என்ற அதிகபடியாக சொன்னதாக உள்ளது, ஆனால் இந்த விவரம் குர்ஆன் 20:40ல், அதே சகோதரி பேசிய உரையாடலில் இல்லை. அல்லாவின் மாறாத பிழையில்லாத, குர்ஆனில் ஏன் இந்த வித்தியாசம்? இஸ்லாமியர்கள் முக்கியமாக ஏகத்துவ தள அறிஞர்கள் விளக்குவார்களா?
குர்ஆன் 2:58-59 | குர்ஆன் 7:161-162 |
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். (2:58) | இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது (7:161) |
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (2:59) | அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம். (7:162) |
And remember We said: "Enter this town, and eat of the plenty therein As ye wish; but enter The gate with humility, In posture and in words, And We shall forgive you your faults And increase (the portion of) Those who do good." But the transgressors Changed the word from that Which had been given them; So we sent on the transgressors A plague from heaven, for that they infringed (Our command) repeatedly. [S. 2:58-59] | And remember it was said to them: "Dwell in this town And eat therein as you wish, But say The word of humility and enter the gate In a posture of humility: We shall forgive you Your faults; We shall increase (The portion of) those Who do good." But the transgressors among them Changed the word from that Which had Been given them So we sent on them a plague from heaven For that they repeatedly transgressed. [S. 7:161-162] |
யூசுப் அலி அவர்களின் பின்குறிப்பு:இந்த அதிகாரத்தின் 58 மற்றும் 59ம் வசனங்களை, குர்ஆன் 7 :161-162 வசனங்களோடு நாம் ஒப்பிட்டால், இரண்டு எழுத்து வித்தியாசங்களை நாம் காணலாம். இங்கு (2:28ம் வசனத்தில்) "பட்டனத்திற்குள் நிழைந்து" என்று வருகிறது, மற்றும் குர்ஆன் 7:161ல் "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்" என்று வருகிறது. அதே போல, குர்ஆன் 2:59ம் வசனத்தில் நாம் "infringed (Our command)" என்று உள்ளதை காணலாம் மற்றும் குர்ஆன் 7:162ம் வசனத்தில் " transgressed" என்று வருகிறது. இப்படி வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும், சொல்லப்பட்ட செய்தியின் பொருளில் வித்தியாசம் இல்லை. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)
A. Yusef Ali's footnote:These verses, 58-59, may be compared to vii. 161-162. There are two verbal differences. Here (ii. 58) we have "enter the town" and in vii. 161 we have "dwell in the town." Again in ii. 59 here we have "infringed (Our command)," and in vii. 162, we have "transgressed." The verbal differences make no difference to the sense. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)
Source
- ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 1
- ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 2
- ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3
- ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 4
- ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் - முஹம்மதுவும் "குர்ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்
- ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1(மோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH)