அனானிமஸ்ஸுக்கு உமரின் பதில்:
அன்புள்ள அனானிமஸ் அவர்களே,
உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.
Anonymous Said:
// இயேசு கிருஷ்து ராஜாவிற்கு முழு நேர ஊழியம் செய்கிறேன் பேர்வழி என்று கூறிவிட்டு தினமும் குர்ஆனை தமிழில் படித்து வருவதும் அதன் தொடர்ச்சியான உங்களின் இஸ்லாத்தை நோக்கிய உங்களின் பயணம் கவலை அளிப்பதாக உள்ளது.//
Umar Said:
நான் முழுநேர ஊழியன் என்று உங்களுக்கு யார் சொன்னது? நான் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? ஒகோ, நீங்களும் ஒரு முஸ்லீமா?
Anonymous Said:
//"...Seeing they see not
and hearing they hear not,
neither do they understand(Holy Bible Mathew 13:13)" //
Umar Said:
அருமையான வசனத்தை எடுத்துக்கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.
மத்தேயு 13:13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் இயேசு அவர்களுடன் உவமைகளைக் கொண்டு அதிகமாக பேசினார், அது போல, நானும் சில கதைகள் மூலமாக விளக்குகிறேன், அவ்வளவு தான்.
Anonymous Said:
கடவுளை நம்புகிற எவரும் சாதாரணமாக பதில் கூறும் அளவிற்கு உள்ள உங்களின் இந்த கதை முட்டாள் தனமானது. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. பைபிளின் மீதே உங்கள் குற்றச்சாட்டு உள்ளது. பைபிள் திரித்து எழுதியிருப்பதாக கூறுவது போன்றுள்ளது.
Umar Said:
அப்படியா! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது அல்லவா? அப்படியானால், பதில் சொல்லுங்கள். இக்கட்டுரையில் நான் சொன்ன கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
என் கதையில் எந்த பகுதி முட்டாள் தனமானது?
முட்டாள் தனமான விவரம் ஒன்று என் கதையில் இருக்குமானால், அது அந்த அரசன் அதிகமாக சக்தியுள்ளவனாக இருந்தும் தன்னிடம் உள்ளவற்றை பாதுகாக்காமல் போனது தான், மட்டுமல்ல, அதைப்பற்றி மக்களுக்கு வெட்கமில்லாமல், என் புத்தகத்தை ஒரு ஏழை அழித்துவிட்டான் என்றுச் சொன்னது தான்.
உங்கள் கருத்துப்படி, எது முட்டாள் தனமானது என்றுச் சொல்லுங்கள்?
Anonymous Said:
நீங்கள் ஊழியம் செய்வதற்கு அருகதையற்றவர். அது தொடர்பாக முழுமையாக எனது கண்டனத்தை திருச்சபைக்கு அனுப்ப இருக்கிறேன்.
--கிருஸ்து அடிமை
Umar Said:
உங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறீர்களா? தெரிவித்துக்கொள்ளுங்கள். யாரும் கவலைப்படப்போவதில்லை.
எந்த திருச்சபைக்கும் தெரிவித்துக்கொள்ளுங்கள், எவ்வளவு கண்டனம் வேண்டுமானாலும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
ஆனால், ஒரு சின்ன வேண்டுகோள், அது என்னவென்றால், "பைபிள் கற்பனை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இயேசு தேவகுமாரன் இல்லை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், அல்லாவை நம்பவில்லையானால் கிறிஸ்தவர்கள் அனைவரும் நரகத்தில் அல்லா தள்ளுவார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இந்த கேள்விகளுக்கு இந்த நபர் பதில் சொல்கிறார், இது தவறானது, ஆகையால் என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று உங்கள் கண்டனத்தை எந்த திருச்சபைக்கும் தெரிவித்துக்கொள்ளுங்கள், நான் கவலைப்படப்போவதில்லை. ஒரு வேளை, உங்கள் கண்டனத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு, நீங்கள் சொல்வது சரி தான் என்றுச் சொல்லக்கூடும். முயற்சி எடுத்துப்பாருங்கள்.