இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
இஸ்லாம் கல்வி என்ற தளத்தில் "நாம் யாரை வணங்க வேண்டும்" என்ற கட்டுரையை படித்தேன். இதை நெல்லை இப்னு கலாம் ரசூல் என்ற சகோதரர் எழுதியிருந்தார். இக்கட்டுரையில் அல்லாவைப் பற்றி பல விவரங்களை சொல்லியிருந்தார், அதே நேரத்தில், பைபிளைப் பற்றியும், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றியும் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.
நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் எழுதியது :
இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய் இருந்தவரே என்ற உண்மையை மறந்தவர்களாகவும் புறக்கணிப்பவர்களாகவும் உள்ளனர். அவருக்கு உண்ண உணவு தேவைப்பட்டது. மற்றவர்களைப் போல் அவரும் பிறந்து வளர்ந்து மனிதராக வாழ வேண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது:
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9) Source: http://www.islamkalvi.com/religions/to_whom_worship.htm
முஸ்லீம் அறிஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ பைபிளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதிவிடுகிறார்கள், அதற்காக அவர்கள் சரியான முறையான ஆராய்ச்சி கூட செய்வதில்லை. குறைந்தபட்சம், அவர்கள் எடுத்துக்காட்ட விரும்பும் வசனத்தின் பொருளை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல் எழுதிவிடுகிறார்கள். இப்படித் தான் இக்கட்டுரையிலும் வசனங்கள் எடுத்தாளப்பட்டுள்ளது.
இக்கட்டுரையை எழுதியவர் கீழ்கண்ட விவரங்களைச் சொல்லவருகிறார்:
ஒரு செய்தியை சொல்வது தவறில்லை, அதற்கு சரியான வசன ஆதாரங்களை தரவேண்டும், அதற்கு பதிலாக சரியாக பொருந்தாத வசனத்தை ஆதாரமாக தரக்கூடாது, தன் வாதத்தை நிருபிப்பதற்காக பைபிள் வசனத்தை மாற்றக்கூடாது.
1. இறைவன் ஒருவனே
2. இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் 1 தீமோத்தேயு 2:5)
3. இயேசு தன்னை வணங்கக்கூடாது என்று இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் மத்தேயு 15:9)
இனி என் பதிலைத் தருகிறேன் .
1. இறைவன் ஒருவனே:
இறைவன் ஒருவனே என்பதை நிருபிப்பதற்கு பைபிளில் பல வசனங்கள் உள்ளது, ஆனால், நம் நண்பர் அவைகளை விட்டுவிட்டு, 1 தீமோத்தேயு 2:5ம் வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டார். இந்த வசனத்தை எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் தன் விருப்பப்படி பொருள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களும் மூன்று வித்தியாசமான கடவுள்களை வணங்குவதில்லை, ஒரே கடவுளைத்தான் வணங்குகிறார்கள். ஒரே இறைவன் மூன்று விதங்களில் செயல்படுவதையே திரித்துவம் என்றுச் சொல்கிறோம். திரித்துவத்தை விளக்குவது இப்போதைக்கு இக்கட்டுரையின் நோக்கமல்ல. திரித்துவத்தை பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.
An Explanation of the Trinity for Muslims
THE TRINITY - From Biblical Reason and from the Old Testament
Trinity in the Old Testament and Dialogue with Jews and Muslims
The Trinity – More than 50 Articles
2. இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார். (இதற்காக அவர் மேற்கோள் காட்டிய வசனம் 1 தீமோத்தேயு 2:5)
மாற்று மதவேதங்களின் வசனங்களை நாம் கட்டுரைகளில் பயன்படுத்தும் போது, அவைகளை அப்படியே மேற்கோள் காட்டவேண்டும், அதை மாற்றி நாம் எழுதக்கூடாது. இதை எல்லாரும் கவனித்தில் கொள்ளவேண்டும்.
2.1 பைபிள் வசனத்தை மாற்றிய நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள்:
கலாம் ரசூல் அவர்களே நீங்கள் பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டும் போது, அதை பைபிளில் உள்ளது போலவே அதை கட்டுரைகளில் எழுதவேண்டுமே தவிர, அதை மாற்றி எழுதவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதோ நீங்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஆனால், உண்மையில் இந்த வசனம் கீழ் கண்டவாறு உள்ளது :
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
நீங்கள் "தேவன்" என்ற வார்த்தையை "அல்லாஹ்" என்று எழுதுகிறீர்கள் .
1. முதலாவது பைபிளில் இருக்கும் வசனத்தை அப்படியே மேற்கோள் காட்டுங்கள். பிறகு அதன் கீழே "தேவன்" என்பவரை முஸ்லீம்கள் "அல்லாஹ்" என்றுச் சொல்கிறார்கள் என்று குறிப்பிடுங்கள்.
அல்லது,
2. தேவன் என்ற வார்த்தையின் பக்கத்தில் (அல்லாஹ்) என்று எழுதுங்கள். வசனத்தின் கீழே அடைப்பு குறிக்குள் உள்ள (அல்லாஹ்) என்ற வார்த்தையை எழுதியது நான் என்று எழுதுங்கள்.
மேலே சொன்ன இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள். இப்படி செய்தால், தான் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு, உங்கள் விருப்பப்படி சில வார்த்தைகளை எடுத்துவிடுகிறீர்கள், அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை எழுதுகிறீர்கள்.
உங்கள் குர்ஆனில் எவனாவது ஒருவன் "அல்லாஹ்" என்று வார்த்தை வரும் இடங்களில் "இயேசு" என்று எழுதி, குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினால், நீங்கள் சும்மா இருப்பீர்களா? இல்லை அல்லவா. அதே போலத்தான் மற்றவர்களுக்கும்.
இஸ்லாம் அறிஞர்கள் செய்யும் ஒரு யுக்தி:
நானும் பல தமிழ் முஸ்லீம் அறிஞர்களின் கட்டுரைகளையும் படித்துள்ளேன். எல்லாரும் சொல்லி வைத்தது போல, ஒரே மாதிரியாக செயல்படுகிறார்கள். அதாவது, தங்களுக்கு சாதமாக தோன்றும் பைபிள் வசனம் ஒன்றை எடுத்துக்கொள்ளவேண்டியது, அதில் வரும் "தேவன்" (அ) "கர்த்தர்" என்ற வார்த்தையை இவர்கள் "அல்லாஹ்" என்று மாற்றுவது, அதை அப்படியே தங்கள் கட்டுரைகளில் எழுதுவது.
"இன்னும் நன்றாக வசனம் புரியும் என்பதால், இந்த மாற்றத்தை நாங்கள் செய்துள்ளோம்" என்று ஒரு குறிப்பு கூட எழுதுவதில்லை. வேறு ஒரு வேதத்தை கையாளும்போது, அல்லது வேறு ஒரு ஆசிரியர் எழுதியதை தங்கள் கட்டுரைகளில் பயன்படுத்தும் போது, பின்பற்றவேண்டிய குறைந்தபட்ச வழிமுறைகளும் இவர்கள் செய்வதில்லை.
கலாம் ரசூல் அவர்களுக்கும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கும் கேள்வி : உங்களுக்கு சாதமான வசனத்தில் வரும் "தேவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "அல்லாஹ்" என்று எழுதினீர்கள். அப்படியானால், பைபிளில் "தேவன்" என்று வரும் எல்லா இடங்களிலும் "அல்லாஹ்" என்று எழுதி படித்துப்பார்ப்போமா?
உதாரணத்திற்கு, யோவான் 3:16-17 ம் வசனங்களில் "தேவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "அல்லாஹ்" என்று எழுதி படிப்போமா? அதை அப்படியே நம்புவோமா?
யோவான்: 3:16. (அல்லாஹ்), தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி (அல்லாஹ்) தம்முடைய குமாரனை உலகத்தில்அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.மேலே உள்ளதை மறுபடியும் படித்துப்பாருங்கள், உலகம் இரட்சிக்கப்பட அல்லாஹ் இயேசுவை அனுப்பினாராம். உலக மக்கள் மீது அல்லா வைத்த அளவில்லாத அன்பை காட்டுவதற்கு இயேசுவை அல்லாஹ் அனுப்பினாராம்.
இப்படி எழுதினால், குர்ஆனின் அஸ்திபாரமே ஆட்டம் காணும்படி உள்ளதல்லவா? எனவே, தான் நான் சொல்கிறேன், இனி இப்படி செய்யாதீர்கள். பைபிளின் தேவனை நீங்கள் அல்லா என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படலாம், ஆனால், அல்லாவை எங்கள் தேவனுக்கு சமமாக அல்லது இருவரும் ஒருவராக கருதினால், அது யேகோவா தேவனுக்கு அவமானமாகும். இருவரும் ஒருவரல்ல.
பைபிளின் தேவனும் அல்லாவும் ஒன்றல்ல என்பதை அறிய இந்த (IS ALLAH THE GOD OF BIBLE?) கட்டுரையை படிக்கவும்.
2.2 "இஸ்ரவேலர்களுக்கும்" என்ற வார்த்தையை நிழைத்த நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள்:
இஸ்லாம் என்னும் கண்ணாடியை போட்டுக்கொண்டு பைபிளை படித்தால், இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் தூதராக வந்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு பைபிளை படித்தால், இப்படித் தான் "பொதுவாக மனுஷர்கள்" என்று குறிப்பிட்டு இருப்பதை, இவர்கள் "இஸ்ரவேல் மக்களைத் தான்" இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று தவறாக புரிந்துக்கொள்கிறார்கள்.
இப்படித் தான் இஸ்லாம் கல்வி தள சகோதரரும் புரிந்துக்கொண்டுள்ளார்.
அவர் மேற்கோள் காட்டிய வசனத்தைப் பாருங்கள், "மனுஷருக்கும்" என்ற வார்த்தை தான் பைபிளில் வருகிறது, அதன் பக்கத்திலே இவர் "இஸ்ரவேலர்களுக்கும்" என்று எழுதியுள்ளார்.
கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம்:
ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே .
இப்படி வசனத்தின் ஒரு வார்த்தைக்கு வேறு பொருள் கூற வேண்டுமானால், அதன் பக்கத்தில் அடைப்பு குறியிட்டு"( )" அதன் உள்ளே அவ்வார்த்தையை இடலாம். மட்டுமல்ல, அவ்வசனத்தின் கீழே "அடைப்பிற்குள் இருக்கும் வார்த்தைகள் நான் எழுதியது என்று - All formats or Bracketed Text are mine" குறிப்பிடவேண்டும். இதை இவர் செய்யாமல் விட்டுவிட்டார்.
2.3 இவ்வசனத்தில் வரும் "மனுஷருக்கும்" என்ற வார்த்தை "இஸ்ரவேலர்களை மட்டும் குறிக்காது" என்பதற்கான ஆதாரங்கள்:
இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தூதராக வந்தார் என்பதை நம்பும் இவர், "மனுஷருக்கும்" என்று இவ்வசனம் குறிப்பிடுவது, இஸ்ரவேலர்களை என்று தவறான புரிந்துக்கொண்டுள்ளார். இவரின் புரிந்துக்கொள்ளுதல் தவறானது என்பதற்கான ஆதாரங்கள்:
1. இக்கடிதத்தை எழுதியர் "அப்போஸ்தலர் பவுல் ஆவார்". இவர் இஸ்ரவேல் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை சொல்ல அழைக்கப்பட்டவர் அல்ல, இவர் இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு(Other Nations – புறஜாதிகளுக்கு) இயேசுவின் நற்செய்தியை சொல்ல அழைக்கப்பட்டவர். இந்த விவரத்தை இதே அதிகாரத்தில் 7ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
1 தீமோத்தேயு 2:7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
2. "எல்லா மனுஷருக்கும்" என்ற பொருள் வரும் வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது:
கலாம் ரசூல் அவர்கள் குறிப்பிட்ட 5ம் வசனத்தின் முந்தைய வசனங்களையும் பிந்தைய வசனங்களையும் நாம் பார்க்கும் போது:
1 தீமோத்தேயு: 2:1 ல் --> எல்லா மனுஷருக்காகவும்
1 தீமோத்தேயு: 2:1 ல் --> அதிகாரமுள்ள யாவருக்காகவும்
1 தீமோத்தேயு: 2:4 ல் --> எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்
1 தீமோத்தேயு: 2:5 ல் --> மனுஷருக்கும்
1 தீமோத்தேயு: 2:6 ல் --> எல்லாரையும்
போன்ற வார்த்தைகள் வருவதை காணலாம். இவைகள் பவுல் ஊழியம் செய்த மக்களை மட்டுமல்ல, யூதர்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் குறிக்கும்.
1 தீமோத்தேயு: 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
பவுல் தான் ஸ்தாபித்த சபைகளை பார்த்துக்கொள்ளும்படி தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறுகிறார், எப்படி போதகர்களை நியமிப்பது, எப்படி எல்லாருக்காக ஜெபிப்பது போன்ற அறிவுரைகளை தருகிறார்.
இவர்கள ஊழியம் செய்த புறஜாதி நாடுகளில் ரோமர் அரசர்களினால், அதிகாரிகளால் கிறிஸ்தவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். சிலர் தங்களுக்காக தங்கள் நண்பர்களுக்காக மட்டுமே ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள், அப்படி செய்வது கிறிஸ்தவத்திற்கு ஏற்றது அல்ல, எல்லாருக்காகவும் நாம் வேண்டிக்கொள்ளவேண்டும் என்று இவ்வசனங்கள் சொல்கின்றன. கிறிஸ்தவர்களை துன்பப்படுத்து கின்றவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளவேண்டும் என்று பைபிள் சொல்கிறது. எல்லாரும் தேவனை அறியவேண்டும் என்று தேவன் விரும்புகிறார், இஸ்ரவேலர்களை மட்டுமல்ல என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது.
கடைசியாக, இவ்வசனங்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் குறிக்குமே தவிர, இஸ்லாம்கல்வி தள கட்டுரை சொல்வது போல "இஸ்ரவேலர்களை" மட்டுமே குறிக்காது.
இந்த அதிகாரம் அல்லது வசனத்தைப் பற்றி இன்னும் கேள்விகள் இருந்தால், எனக்கு மெயில் அனுப்பவும், அதற்கு நான் பதில் தருகிறேன். இப்போதைக்கு, நான் மற்றவிவரங்களுக்கு கடந்துப் போகிறேன்.
2.4 "மத்தியஸ்தர்" என்ற வார்த்தை "தூதராக" எப்படி மாறியது:
நம்முடைய தமிழ் நாட்டு முஸ்லீம்கள் புத்திசாலிகள். தாங்கள் குறிப்பிட நினைத்த வசனத்தில் " மத்தியஸ்தர்" என்ற வார்த்தையை அப்படியே பயன்படுத்தினால், தாங்கள் சொல்லவந்த விவரத்தை சரியாகச் சொல்லமுடியாது என்பதால், அந்த வார்த்தை இருந்த இடத்தில் "தூதர் " என்று எழுதிவிட்டார்கள். ஏனென்றால், தூதர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், ஆனால், மத்தியஸ்தர் என்றால் ஒருவர் தான், அதிலும் பைபிள் இயேசுவையே சொல்கிறது. எனவே, இதனை மிகவும் அழகாக "தூதர் " என்று மாற்றி எழுதிவிட்டார் நம் அருமை நண்பர் அவர்கள்.
கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .
ஆங்கிலத்தில் " Mediator" என்ற வார்த்தை அல்லது தமிழில் "மத்தியஸ்தர்" என்ற வார்த்தை எப்படி "தூதர் " என்று மாறியது.1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
இந்த கட்டுரையின் ஆசிரியர் என்ன செய்தார் என்பதை பார்க்கலாம் :
1. இயேசு ஒரு தூதர் தான், அவர் இறைவன் இல்லை என்று காட்ட முடிவு செய்துள்ளார்.ஆங்கில மொழி பெயர்ப்பிலும் கூட, மத்தியஸ்தர் என்ற வார்த்தைக்கு "Mediator" என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் எங்கிருந்து இதை மொழிபெயர்த்தார் என்று தெரியவில்லை.
2. இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராக வந்தார் என்பதை காட்ட முடிவு செய்துள்ளார்.
3. அதனால், தான் "மனுஷருக்கும்" என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, இவராகவே "இஸ்ரவேலர்கள்" என்று மாற்றிவிட்டார்.
4. மத்தியஸ்தர் என்ற வார்த்தைக்கு பதிலாக "தூதர்" என்று மாற்றிவிட்டார் .
இதில் இன்னொரு விவரம் என்னவென்றால், தமிழ் மொழிபெயர்ப்பு பைபிளில் 6ம் வசனத்தில் வரும் வார்த்தையை எடுத்து, 5ம் வசனத்தோடு இவர் சேர்த்துவிட்டார்.
அதாவது "எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த " என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, அதன் பிறகு உள்ள " அம்மனிதர் இயேசு கிருஸ்த்து" என்று எழுதிவிட்டார். 1 தீமோத்தேயு 2:6ம் வசனம் முழுவதுமாக எழுதினால், இவர் சொல்லவந்த நோக்கமே கெட்டுவிடும், அதாவது, 6ம் வசனம் " எல்லாரையும் " மீட்பதற்காக இயேசு வந்தார் என்று சொல்கிறது. எனவே, எல்லாரையும் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு, அதன் கடைசி பாகத்தை மட்டும் பயன்படுத்தியுள்ளார். எவ்வளவு திருத்தல் வேலையை செய்துள்ளார்கள் என்று இப்போது புரிகிறதா?
கலாம் ரசூல் அவர்கள் எழுதிய வசனம் :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஆனால், பைபிள் வசனம் இப்படி உள்ளது .
1 தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத்தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
கடைசியாக நான் இஸ்லாமிய அறிஞர்களிடம் வேண்டிக்கொள்வது:
1. ஒரு வசனத்தை பைபிளிலிருந்து எடுத்து எழுதும் போது, அதை அப்படியே மாற்றாமல் எழுதுங்கள்.
2. அதன் பிறகு அவ்வசனத்திற்கு உங்கள் விளக்கத்தை அதன் கீழே எத்தனை பக்கங்களாவது எழுதுங்கள். அவ்வசனத்தில் மட்டும் கைவைக்கவேண்டாம்.
3. தேவைப்படுமானால், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து வசனத்தை காட்டி, அதிகபடியான விளக்கமளியுங்கள்.
4. இன்னும் அதிக விளக்கமளிக்க விரும்பினால், பைபிளின் மூல மொழி எபிரேய, கிரேக்க மொழிகளிலிருந்து விளக்கமளியுங்கள்.
5. தற்போது, ஆங்கிலத்தில் இருக்கின்ற பல மொழிபெயர்ப்புக்களை பயன்படுத்துங்கள், சொந்தமாக ஒரு மொழிபெயர்ப்பை நீங்களாகவே உருவாக்காதீர்கள்.
6. ஒரு வசனத்தின் பாதியை தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்து, மீதி பாதியை ஆங்கிலத்திலிருந்து எடுத்து ஒன்றாக சேர்த்து எழுதவேண்டாம்.
7. நான் குறிப்பிட்டது வசனத்தை அல்ல, அதன் பொருளைத் தான் என்றுச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வது மத்தேயு 15:9க்கு வேண்டுமானால் பொருந்தும்.
7. நீங்கள் முன்வைத்த வசனம் 1 தீமோத்தேயு 2:5, நீங்கள் சொல்லுகின்ற பொருளை தருவதில்லை, அது எல்லா மக்களையும் குறிப்பிடுகிறது, இஸ்ரவேலர்களை மட்டும் அல்ல.
8. நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன், என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்ற இயேசுவின் கூற்றுப் படி தான் இவ்வசனம் அவரை "மத்தியஸ்தர்" என்றுச் சொல்கிறது. தேவன் பல தூதர்களை அனுப்பினார், ஆனால், ஒருவர் தான் "தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர்". அவர் தான் இயேசு கிறிஸ்து.
9. பெரும்பாலும் முஸ்லீம்கள் இப்போதுள்ள நற்செய்தி நூல்களை இஞ்ஜில் என்று நம்புவதில்லை, அதிலும், பவுல் எழுதிய கடிதங்களை மொத்தமாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நீர் 1 தீமோத்தேயு கடிதத்தை "இஞ்ஜில்" என்று சொல்கிறீர், உண்மையில் இது இஞ்ஜில் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?
கலாம் ரசூல் அவர்கள்:இந்த வசனத்தைப் பற்றியோ அல்லது இக்கட்டுரைப் பற்றியோ சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால், எனக்கு தெரிவிக்கவும், முடிந்த அளவிற்கு பதில் அளிக்க முயற்சி செய்வேன்.
அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது :
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
நீங்கள் குறிப்பிட்ட மத்தேயு 15:9ம் வசனத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.
Email: isa.koran@gmail.com Or Isa_koran@yahoo.co.in
http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/ik1thimothy2-5.htm
Comment Form under post in blogger/blogspot