இந்தியாவில் அநேக முஸ்லீம்கள் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.அவர்கள் சாட்சி ஒவ்வொன்றாக இங்கு வெளியிடப்படும்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன் றான ஆந்திரப்பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த இவர் பெயர் இஸ்மாயில் . ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார வர். அழகிய கிராமச் சூ ழலில் பெற்றோரின் அரவனைப்பில் செல்லமாக வளர்ந்தார் . பாசமிக்க தாயாரால் பரிவுடன் வளர்க்கப்பட்ட இவர் அர பி பாடசாலையில் திருக்குர்ஆனைக் கற்று வந்தார் . துடிப் பும் வேகமும் உள்ள இவர் தன் சொந்த ஊரி லிருந்து கொண்டே தன் பெற்றோருக்கு பேருதவிகளை செய்து வந்தார் . வாலிபமும் வந்தது . குடும்பத் தொழில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருந்தார் . பொறுப்பு ள்ள பெற்றோர் தம் மகனுக்கு நல்ல துணையை தேடித்தந்து மணமுடித்தும் வைத்தார்கள் . நல்ல கணவனாக தன் மனைவியை பாதுகாத்தார் . அன் புடன் நடத்தினார். இல்லாளும் அவரை ஏற்ற கணவனாகக் கொண்டு அன் புடன் கூடிய கனத்தையும் செலுத்தி வந்தாள் . அவர்கள் இல்லறம் இனிதே நிறைவேறிக்கொண்டிருந்தது .
அன்னை அன்
புக்குரி யவளாய் திகழ்ந்தாள் . தன்மகன் இஸ்மாயிலின் மேல் தன் நம்பிக்கையை யும் அன்பையும் அளவில்லாமல் வைத்திருந்தார் . கல்வியறிவு கொஞ் சமேயாயினும் தொழில் துறையில் ஈடுபட்டார்.
ஆனால் அவரது வாழ்வில் இன்னல் தொடர்ந்தது
. மனக் கவலைகள் , சோர்வுகளின் நடுவில் வாழ்ந்து வந்த அவர் ஒருநாள் கிராமத்தின் ஒரு பகுதியில் மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு இ என்ன நடக்கிறது என பார்க்க அவ்விடம் சென் றார் . அங்கு சில கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தனர் .
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாரு ங்கள் ; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
(
மத்தேயு 11 ; 28)
என அவர்கள் அறிவித்த தேவவார்த்தை அவரைக் கவர்ந்தது
. இஸ்மாயில் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கி வாசிக்கலானார் . மேலயுள்ள வசனங் களை உடைய இன்ஜி லை வாங்கித்தான் படித்துப் பார்ப்போமே என்று எண்ணி அவர்களிடமே ஒன்றை வா ங்கி வாசிக்கத்தொடங்கினார் .
இஸ்லாம் மார்க்கத்தின் பாரம்பா
ரியங் களைப் பின்பற்றி காலமெல்லாம் அரபி வார்த்தைகளையே சொல்லி ஐந்து வேளை தொழுகை செய்து புரியாத பாஷையில் ஓதுகிற குர்ஆன் வாசக ங்களை அர்த்தம் தெரி யாமலேயே படித்து வந்த அவருக்கு புதிய ஏற்பாடாகிய இன்ஜீ லைப் படிக்கும்போது புதிய விதமாகத் தோன்றிற்று . அதை வாசிக்க வாசிக்க இஸ்மாயிலுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் நம்பிக்கையு ம் உண்டாயிற்று . வேதாகமத்தை கற்றுக்கொண்ட அவர் இயேசு கிறிஸ்துவே அல்லாவை அடைய அவருடை வழி , இயேசு ஒருவரே பாவமன்னிப்பை அருளுகிறவர், கிறிஸ்து இயேசுவைப்பின்பற்றுவதே வாழ்வின் மேன்மைக்கு வழி என்பதை அறிந்து, தன் பாவ ங்களை உணர்ந்து கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து பாவமன்னிப்பை அடைந்து கிறிஸ்துவின் அடியார் ஆனார் . இனத்தாரும்,பெற்றோ ரும் இஸ்மாயில் இயேசுவைப் பின்பற்றுகிறார் என்று அறிந்தனர் . இஸ்லாமிய கொள்கைக்கு திருப்பிவிட வேண்டும் எனத் தீர்மானித்து அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்தனர். எனினும் இஸ்மாயில் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றும் விசுவாசத்திலிருந்து நழுவவில்லை. ஒளிந்து மறைந்து வேதம் வாசித்து ஜெபித்து வந்தார் . துணைவி பல சமயங் களில் இஸ்லாமியக் கதைகள் , போதனைகளைச் சொல்லி வருவாள். ஆனாள் இஸ்மாயில் எதையும் கருத்தில் கொள்ளாமல் குடும்ப வேலை ,மனைவியை விசாரித்தல் ,வேதவாசிப்பு ஜெபம் இவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார் . கிறிஸ்தவ விசுவாசத்தில் ஊறிப்போன கணவணோடு வாழபிடிக்காத மனைவியும் இவரை விட்டு பி ரிந்து சில ஆண்டுகள் தன் பெற்றோ ர் வீட்டிற்கு போய் அங்கேயே இருந்துவிட்டாள் . தனித்து வாழ்வதில் அவளுக்கு வேதனைதான் என்றாலும் கணவணின் கிறிஸ்தவ விசுவாசம் அவருடன் வாழக்கூடாதபடி அவளைத் தடுத்தது .
மனம் உடைந்த மனைவியின் நிலை ஒரு பக்கம்
,விசுவாசத்திற்காக மனைவியை பி ரிந்து வாழும் கணவன் ஒரு பக்கம் ,போராட்டம் பி ரிவு ஆகியவை தொடர்ந்தது . இருவருமே வேதனையில் காலம் கழித்தனர் . மனைவியை வாழவைக்கத் தெரி யாதவன், கல் நெ ஞ்சன் இரக்கமற்ற அரக்கன் என்றெல்லாம் உற்றா ர் உறவினர்களால் தூற்றப்பட்டார். இஸ்மாயில் எல்லாவற்றையும் மனதில் வைத்து ஆண்டவர் இயேசுவின் திருசன்னதியில் சொல்லி ஜெபித்து வந்தார் . சோதனைகளின் போது சோர்வு ஏற்பட்டாலும் இரட்சகரைப் பின்பற்ற தய ங்கவில்லை . தொடர்ந்து தன் பிரச்சனைகள ஆண்டவா ரிடம் சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தார் . ஆண்டவரும் அவர் ஜெபத்தை கேட்டார் .
ஊராரும் உறவினர்களும் ஒன்று இவர்களை இணைத்து வைக்க வேண்டும் அல்லது விவாகரத்து செய்யவைத்து அப்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கவேண்டும் எனத்தீர்மானித்னர் . அதன்படி அப்பெண்ணை அணுகி நீ இந்த மனிதனுடன் வாழ்கிறாயா அல்லது விவாகரத்து செய்து கொண்டு வே றொருவனுக்கு மனைவியாகி வாழவிருப்பமா ? என்று கேட்டுவிட்டு ,இஸ்மாயிலுடனே வாழ விருமப்பமென்றா ல் இருவரையும் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைத்து விடுவிதாக என்றனர் . ஒருவரை மனதிலும் வாழ்விலும் கணவனாக ஏற்றுவாழந்து சூழ்நிலைக் கா ரனங்களினால் வேறொருவரை மனதில் ஏற்று அவருக்கு மனைவியாய் வாழ்வதை கற்பணையிலும் விரும்பாத அவள் இஸ்மாயிலுடனே வாழ விரும் புதாக தன் விருப்பத்தை அவர்களிடம் தொரி வித்தாள் . எனவே உறவினர்களும் ஊராருமாக சேர்ந்து இஸ்மாயிலை யும் அவரது மனைவியையு ம் இணைத்து வைத்தனர் .
ஏற்கனவே தீர்மானித்தபடி சமுதாயத்தைவிட்டு இஸ்மாயிலை
யும் அவரது மனைவியை யும் பிரித்து வைக்க முற்பட்டனர் . இஸ்மாயிலின் தாய் துயரமடைந்தாள் . மதம் என்ற பெயா ரால் பெற்ற மகனை பிரிய வேண்டிய கொடுமையை நினைத்து பதைபதைக்கிறது தா யுள்ளம் காப்பாற்ற விடாமல் மதவெறியர்களால் துரத்தப்படுதல் கண்டு உள்ளம் வாடுகி றாள் மகனுக்கும் எந்த நம்பிக்கை யும் இல்லாமல் என்ன நடக்குமோ எனத் தெரியாமல் புரியாமல் திகைத்து நிற்கதியாய் நிற்கும் மனைவிக்கும், என்ன உதவி செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.
அன்
பு பாசம் பற்று வாழ்வு என்ற வார்த்தைகளுக்கு அர்த்தந்தெரியாத இந்த மத வெறியர்களுக்கும், மன மாற்றத்தை விள ங்கிக் கொள்ளத் தெரியாத இவர்கள் கணவன் என்றோ மகன் என்றோ பாராமல் நேரே தூக்கு மேடைக்கு அனுப்பிவிடுவார்கள் இந்த புண்ணியவான்கள் . இவர்களுக்கே மதமே முக்கியம் மனித இதய ங்களல்ல, மதம் மாறிவிட்டானா ? கொல்லு அவனை இல்லாவிட்டால் துரத்து ஊரைவிட்டு இதுதான் இவர்களின் பரம்பரை உரிமைச் சொத்து , இதுதான் மதம்,அல்லது வெறித்தனம்.
பிரிக்கப்போகிறதே மதமும் கொள்கை யும் தன் மகனை என்றாரிந்த தாயின் புலம்பலை அலறலை யாரும் கவனிக்கவுமில்லை,கருத்தில் கொள்ளவும்மில்லை .இஸ்மாயிலையும், அவரது மனைவியையும் ஊரை விட்டு வெளியேற்றினார்கள்.உடுத்திய துணியுடன் வெறும் கையாய் ஊருக்கு வெளியே இராத்தங்கினார்கள் .பசி, குளிர்,தனிமை, விசுவாசத்திற்காக தாயன்பையும் இழந்து காட்டு ஜீவன்களுடன் இராத்தங்கினார்கள்.பல இரவுகளை இப்படியே கழித்தனர் .மனைவி தன் நிலையை குறித்து எண்ணி மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தாள் .இஸ்மாயிலின் தேவன் தங்களை காப்பார் என்ற விசுவாசம் இவளுக்கு இல்லை. இவளோ இன்னும் மனந்திரும்பாதிருந்தாள்.பசிக்கொடுமை தாங்காமல் "நாம் இப்படியே மயங்கிவிழுந்து மரித்துவிடுவோம்"என்றாள் ,அவரோ ஈஸாமஸீஹ் " நம் இன்னல் களைவார்,ஆகாரம் தருவார்" என்றார்.அவளால் நம்ப முடியவில்லை. அக்கிராமத்தைச் சேர்ந்த இந்து நண்பர் ஒருவர் இவர்களை குறித்து கேள்விப்பட்டு அவர்கள் மேல் பரிதாபப்பட்டு ஆகாரம் கொண்டுவந்து கொடுத்தார், அவர்கள் பசி நீங்கி இளைப்பாறினர்.ஒரு நாள் காலையில் கணவனிடம் அந்த சகோதரி "எனக்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும்"எனக் கெஞ்சினாள் .என்ன? என்றார் இஸ்மாயில்.அவள் மைஹோனா? ஈஸா ஹோனா?(நான் வேண்டுமா? இயேசு வேண்டுமா?)என்றாள்.
பிரிய மனைவியே
"இயேசுவும் வேண்டும் நீயும் வேண்டும் "அப்படியானால் எத்தனை நாட்கள் இப்படியே சாவது?இல்லை ஈஸா காப்பாற்றுவார் ,அவரை நம்பு.
ஆனால்
ஈஸாவை அவளால் நம்ப முடியவில்லை.அல்லாஹ் தனக்கிழைத்துவிட்ட இந்த இன்னலில் இருந்து தப்பிக்கவும் வழியில்லை .இருதலைகொள்ளி எறும்பாக வாழ்வதைக் காட்டிலும் " விஷம் அருந்தி சாகலாம்"என்று எண்ணி சாக தீர்மானித்தாள் .எப்படியோ விஷத்தையும் ஆயத்தப்படுத்திவிட்டு ஒரு நாள் மாலையில் அதை அருந்தினாள் .
பயமும்
,திகிலும் அவளை ஆட்கொள்ள, வேறு வழியில்லாமல் விஷம் அருந்திவிட்டதை கணவனிடம் கூறினாள்.மிகுந்த அமைதியுடன் ஆண்டவரை நோக்கி ஜெபித்தார் இஸ்மாயில் .
"
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்"(யோவான் 11;25)
என்றீரே
.அவள் உம்மை விசுவாசிக்கவில்லை, நான் விசுவாசிக்கிறேன்.அவளை எழுப்பும் ஆண்டவரே எனக் கெஞ்சினார் .தண்ணீரை ஜெபித்து த மனைவிக்கு குடிக்க கொடுத்தார். அவளோ முடியாது என்று மறுத்தாள்.அங்கு சிலர் தற்செயலாய் இந்த காட்சியை கண்டு அக்கிராமத்தில் இருந்த சிறிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .3 நாட்களாகியும் எந்த மாற்தலுமில்லை. மிகவும் களைத்து போய் நித்திரை செய்வது போல காணப்பட்டாள்.அவள் கொஞ்சம் மயக்கம் தெளிந்த போது தண்ணீரை ஜெபித்து கொடுத்தார் "நீ சாகமாட்டாய் பிழைப்பாய், என் இயேசு உன்னை என்னிடமாய் திரும்பக் கொடுப்பார்.ஜெபித்த தண்ணீரை அவளை குடிக்க செய்தார் .சில வினாடிகளில் கடும் வாந்தி எடுத்து விஷம் எல்லாம் வெளியேறிற்று. அல்ளேலூயா!அவள் பிழைத்துக்கொண்டாள். இயேசுவுக்கே மகிமை.
ஊரார் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்
.இஸ்மாயிலின் இயேசுவே உண்மை தெய்வம் எனக்கருதினார்கள் .இவர்களை வாழவைக்க வேண்டும் என தீர்மானிக்க கூட்டம் நடந்தது ."இவர் வணங்குகிற (ஈஸா )இயேசுவைப் பற்றி நமக்கு சொல்லி தரவும்,இங்கு வீயாதிப்படுகிறவர்கள் இவர் மூலம் இயேசுவின் அருளால் சுகம் பெற்று வாழ்வதற்கும் அவர்களை இங்கேயே வைக்கவேண்டும் .அவர்கள் பிழைத்துக்கொள்ள வழி உண்டாகும்படி கொஞ்சம் நிலம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது .அதன் படி 15 சென்ட் நிலமும் ஓலையினால் வேயப்பட்ட சிறுவீட்டையும் ,ஆயத்தப்படுத்திக் கொடுத்தார்கள்சிறிது நாட்களுக்குப் பின் அவர் மனைவி இயேசுவை உண்மை ஆண்டவர் என அறிக்கையிட்டு கிறிஸ்துவுக்குளானாள் .அங்கு வரும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்தார்கள். மீதி இடத்தில் தோட்டம் போட்டு தங்கள் எளிய குடும்பத்தை நடத்தினார்கள்.
படிப்படியாக ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்தார்
.இஸ்லாமியர்கள் தொடர்ந்து அவருக்கு இன்னல்கள் இழைத்தார்கள் .ஆண்டவரோ அவர்கள் எண்ணங்களை மாற்றிவிட்டார். கிராமங்களில் சுற்றி நடந்து இயேசுவைப் பிரசங்கித்தார்.வியாதியஸ்தர்கள் சொஸ்தமானார்கள் ;அற்புதங்களை தேவன் நிகழ்த்தினார்;தம் பிள்ளைகளின் பாடுகளை ,கண்ணீரையும், விசுவாசத்தயும் அறிந்த தேவன் ஆத்துமாக்களை இராட்சிக்கத் தொடங்கினார்கள்.
"
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீராமாக அறுப்பார்கள்"(சங் 126;5)
இன்று அவர சபையில் இருநூறுக்கும் மேற்பட்டாவர்கள் இரட்சிக்கப்பட்டுள்ளனர்
,அவ்விடத்தில் பெரியதோர் ஆலயத்தை கட்டியுள்ளார் .இஸ்மயில் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக .
பாஸ்டர்
.இஸ்மாயில்
அனந்தபூர் மாவட்டம்
ஆந்திரப்பிரதேசம்
.
(காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து)
சுவிசேஷ ஊழிய நூல் நிலையம்
95A
,வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை
;7