இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label முகமது. Show all posts
Showing posts with label முகமது. Show all posts

Wednesday, January 14, 2009

Dr அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு/இஸ்லாமிய இணையத்திற்கு பதில்: யோனாவின் அடையாளம் என்றால் என்ன?



டாக்ட‌ர் அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு / இஸ்லாமிய இணைய தளத்திற்கு பதில்:

 
 
முன்னுரை:


இஸ்லாமிய இணைய தளம் "கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. (http://www.tmpolitics.net/iip/Articles/ChristianityIsAMyth.htm)

 
இந்த கட்டுரையை இவர்கள் டாக்டர் அஹமத் தீதத் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியிருந்தார்கள், ஆனால், அவரைப் பற்றி அந்த புத்தகத்தில் ஒரு வரியும் எழுதாலும், தாங்களே ஆராய்ச்சி செய்து எழுதியதைப் போல எழுதியிருந்தார்கள் [ கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும் போது எங்கள் தொடுப்பை கொடுப்பதில்லை, குறைந்தபட்சம் உங்கள் இஸ்லாமிய அறிஞரின் பெயரையாவது, புத்தகத்தின் பெயரையாவது கொடுக்கலாம் அல்லவா]

 
அஹமத் தீதத் அவர்கள் செய்த அதே தவறை இவர்களும் செய்துள்ளார்கள், அவரின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியது என்பதால், எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் எழுதியுள்ளார்கள்.

 
இந்த கட்டுரையில், இவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்படுகிறது. இது முதல் பாகம் தான், இன்னும் அனேக பாகங்கள் வெளிவரும், மற்றும் அஹமத் தீதத் அவர்கள் தான் என் ஆன்மீக தேடலுக்கு வித்தாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. இவரின் புத்தகங்களை படித்து பதிலை தேடும் வேட்டையை ஆரம்பித்து, பதில் கிடைத்தவுடன், இப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, ஈஸா குர்‍ஆன் தளம் ஆரம்பிக்கப்பட்டது.

 

 

பாகம் 1


உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?



What Indeed Was the Sign of Jonah?

 
ஆசிரியர்: ஜான் கில்கிறைஸ்ட் (John Gilchrist)

 

 

இக்கட்டுரையின் உப‌தலைப்புக்கள்

 
யோனாவின் அடையாளம்


• கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

• "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றால் என்ன?

• நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளம் ஆவார்?

• யோனாவின் அடையாளமே அன்றி வேறு அடையாளமில்லை

• "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளுக்குள்ளே இதை"

• யோனாவின் அடையாளத்தின் முக்கியத்துவம்

• இயேசுவின் உயிர்த்தெழுதல்

• யார் கல்லை புரட்டியது?

 

THE SIGN OF JONAH


யோனாவின் அடையாளம்

 

பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி, இஸ்ரவேல் நாட்டில் இயேசு தன் குறுகிய கால அந்த மூன்று வருட ஊழியத்தின் போது அனேக பலமுள்ள அற்புதங்கள் செய்தார். அந்த அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டு பல யூதர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். இயேசுவின் அற்புதங்கள் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தாலும், யூத தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டனர், மற்றும் அவரிடம் அடையாளம் காட்டும் படி, அல்லது வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டும் படி கேட்டனர்(மத்தேயு 16:1). ஒரு முறை அவர்களுக்கு "ஒரே ஒரு அடையாளம் தருவேன்" என்று இயேசு பதில் அளித்தார்:

 
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40)
 
யோனா என்பவர் இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாவார். அசீரியாவின் நினிவே என்ற பட்டணத்தின் அழிவு நாளைப்பற்றி அந்நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டுமென்று தேவனால் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், நினிவே பட்டணத்திற்குப் போகாமல் தர்ஷீஷ் என்ற பட்டணத்திற்கு அவர் போக நினைத்தபோது, அவர் செல்லும் கப்பலை மிகப்பெரிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு தாக்கியபோது, அந்த கப்பலில் பிரயாணம் செய்த மக்களால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் ம அப்போது அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மீனின் வயிற்றிலிருந்து உயிரோடு தூக்கி எறியப்பட்டு அந்த நினிவே பட்டணத்திற்குள் சென்றார்.

அந்த மீனின் வயிற்றில் யோனா இருந்த மூன்று நாட்களைப் பற்றி "யோனாவின் அடையாளம்" என்று இயேசு குறிப்பிட்டார். மற்றும் இந்த ஒரே ஒரு அடையாளம் மட்டுமே, தன் மீது நம்பிக்கை வைக்காத யூதர்களுக்கு தான் கொடுக்கும் அடையாளம் என்று இயேசு கூறினார். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரத்தில் உள்ள "இஸ்லாமிய பிரச்சார மையம் (Islamic Propagation Centre)" என்ற இயக்கத்தைச் சார்ந்த அஹமத் தீதத்(Ahmed Deedat) என்பவர், 1976ம் வருடத்தில் "யோனாவின் அடையாளம் என்ன?(What was the Sign of Jonah?)" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவ‌ர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மையில், தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். அஹமத் தீதத் அவர்களின் இந்த இரண்டு யூகங்களை ஆராய்ந்து, இந்த தலைப்பைப் பற்றி அலசி, யோனாவின் அடையாளம் என்றால் உண்மையில் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

 

1. WAS JESUS ALIVE OR DEAD IN THE TOMB?

1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

 
 
பைபிளில் உள்ள யோனா புத்தகத்தின் கிறிஸ்த‌வ‌ விள‌க்க‌வுரைக‌ளின் ப‌டி, யோனா மீனின் வ‌யிற்றிலிருந்த‌ அந்த மூன்று நாட்கள் அற்புத‌வித‌மாக‌ உயிரோடு பாதுகாக்க‌ப்ப‌ட்டு இருந்தார் என்ப‌தை நாம் அறிகிறோம். அவ‌ர் மீனின் வ‌யிற்றில் இருக்கும் போது ஒரு நாழிகையும் ம‌ரிக்காம‌ல் இருந்தார், மற்றும் அந்த மீன் அவரை உயிரோடு கரையில் போட்டது.

 
அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது "யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)" என்று கூறுகிறார்.
 
If Jonah was alive for three days and three nights, then Jesus also ought to have been alive in the tomb as he himself had foretold!

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் உயிரோடு இருந்திருந்தால், இயேசு சொன்னது போல, தான் அப்படியே கல்லரையில் இருந்த நாட்களில் உயிரோடு இருந்திருக்கவேண்டும், (Deedat, What was the Sign of Jonah?, p.6).
 
 
இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார். இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது(One cannot stretch this further, as Deedat does, to say that as Jonah was ALIVE in the fish, so Jesus would be alive in the tomb). அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.
 
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

"As Moses lifted up the serpent in the wilderness, so must the Son of man be lifted up". (யோவான் 3:14-15)
 
 
மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது "உயர்த்தப்பட்டது - LIFTED UP" என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். சர்ப்பம் மோசேயினால் உயர்த்தப்பட்டது, யூதர்கள் ஆரோக்கியம் அடைவதற்காக, இயேசு உயர்த்தப்படவேண்டியது உலக நாடுகளின் ஆரோக்கியம், மற்றும் இரட்சிப்பிற்காக. இந்த நிகழ்ச்சியில், மோசே உருவாக்கிய வெண்கல சர்ப்பமானது உயிரோடு இருந்ததில்லை, மற்றும் தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic- வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல. அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன).

இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்ற விவரம் யோனாவோடும், "தூணில் உயர்த்தப்படுதல்" என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை (It does not matter whether Jonah was alive or not - this has nothing to do with the comparison Jesus was making).

யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி "யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்" என்று கூறுகிறார். அதாவது யோனா மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும். ஆனால், தீதத் அவர்கள் வழிமுறையைப் பின்பற்றி நாம் மேற்கோள் காட்டிய மற்ற வசனங்களை ஆராய்ந்தால், தீதத் அவர்கள் சொன்னதற்கு முரண்பட்ட விவாரம் தான் கிடைக்கிறது. சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் "சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)". இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.

ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது (So we see that Deedat's first objection falls entirely to the ground. A contradictory conclusion automatically results from his line of reasoning and no objection or argument which negates itself can ever be considered with any degree of seriousness).

 

 

2. THREE DAYS AND THREE NIGHTS

2. மூன்று நாட்கள் இரவும் பகலும் என்றால் என்ன?

 
 
இயேசு வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்றும் ஒரு சிலரை தவிர உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயம் அங்கீகரிக்கிறது. இயேசு கல்லரையில் ஒரு நாள் மட்டும் தான் முழுவதுமாக‌ இருந்தார், அதாவது அந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இருந்தார் என்று தீதத் அவர்கள் வாதம் புரிகின்றார் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என்று இரண்டு இரவுகள் மட்டும் தான் அவர் கல்லரையில் இருந்தார் என்றுச் சொல்கிறார். இப்படி சொல்வதின் மூலம், யோனாவின் அடையாளம் பற்றி இயேசு சொன்ன கால விவரத்தை மறுக்க முயன்றுள்ளார் தீதத் அவர்கள். தீதத் கூறுகிறார்:
 
Secondly, we also discover that he failed to fulfil the time factor as well. The greatest mathematician in Christendom will fail to obtain the desired result - three days and three nights.

"இரண்டாவதாக, இயேசு நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தையும் நிறைவேற்ற தவறிவிட்டார். கிறிஸ்தவ உலகின் சிறந்த கணித மேதாவி மூன்று நாட்கள் இரவும் பகலும் என்பதை கணக்கிட தவறிவிட்டார்." (Deedat, What was the Sign of Jonah?, p.10).
 
துரதிஷ்டவசமாக, தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும். அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை(serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள். நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும் (The expression three days and three nights is the sort of expression that we never, speaking English in the twentieth century, use today. We must obviously therefore seek its meaning according to its use as a Hebrew colloquialism in the first century and are very likely to err if we judge or interpret it according to the language structure or figures of speech in a very different language in a much later age).

நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் பேசும் போது, "இத்தனை நாட்கள் இரவும் பகலும்" என்ற வழக்கப்படி நாம் பேசுவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தால், நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "ஃபோர்ட்நைட்(Fortnight) அல்லது இருவாரங்கள் அல்லது 14 நாட்கள்" என்றுச் சொல்வார். நான் இதுவரையில் ஆங்கிலத்தில் இவ்விதமாக சொல்பவரை, அதாவது "நான் பதினான்கு நாட்கள் இரவும் பதினான்கு நாட்கள் பகலும் ஊருக்குச் செல்கிறேன்" என்று சொல்பவரை நான் கண்டதே இல்லை(I have never yet met anyone speaking the English language say he will be away fourteen days and fourteen nights). அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன‌ பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு/எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்(Furthermore we must also note that the figure of speech, as used in Hebrew, always had the same number of days and nights).
 
மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்(யாத் 24:18)

Moses fasted forty days and forty nights (Exodus 24.18).

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் மீனின் வயிற்றில் இருந்தார்(யோனா 1:17)

Jonah was in the whale three days and three nights (Jonah 1.17)

யோபுவின் நண்பர்கள் அவரோடு ஏழு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார்கள் (யோபு 2:13)

Job's friends sat with him seven days and seven nights (Job 2.13).


எந்த ஒரு யூதனானாலும் சரி,

"ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் - seven days and six nights" என்றோ அல்லது

"மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் - three days and two nights " என்றோ கூறமாட்டார்,

 
உண்மையிலேயே அவர் இந்த குறிப்பிட்ட காலத்தை குறிப்பிட நினைத்தாலும் கூட‌ இப்படி கூறமாட்டார். எபிரேய மொழியின் பேச்சு/எழுத்து வழக்கத்தின் படி(colloquialism) எப்போதும் இரவும் பகலும் ஒரே எண்ணிக்கையை உடையதாக இருக்கும். ஒரு யூதன் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் பற்றிக் கூறுவதாக இருந்தாலும், "மூன்று பகல் இரவுகள்" என்று தான் கூறுவார்.

இந்த விவரம் பற்றி மிகவும் தெளிவான உதாரணத்தை அல்லது விளக்கத்தை எஸ்தர் புத்தகத்தில் காணலாம். அதாவது "யாரும் மூன்று நாட்கள் இரவும் பகலும்" ஒன்றுமே புசிக்கவேண்டாம், உபவாசம் இருங்கள் என்று எஸ்தர் இராணி சொல்கிறார் (எஸ்தர் 4:16). ஆனால், மூன்றாம் நாளிலேயே, அதாவது இரண்டு இரவுகள் மட்டும் கழித்து, இராணி உபவாசத்தையும் முடித்துக்கொண்டு இராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்கிறாள்.

ஆக, யூதர்களின் வழக்கப்படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்(So we see quite plainly that "three days and three nights", in Jewish terminology, did not necessarily imply a full period of three actual days and three actual nights but was simply a colloquialism used to cover any part of the first and third days).

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், எப்போதும் சரி, இரவுகள் மற்றும் பகல்கள் பற்றிய எண்ணிக்கையைப் கூறும் போது இரண்டிற்கும் ஒரே எண்ணை குறிப்பிடுவார்கள், உண்மையில் பகல்களை விட இரவுகள் ஒன்று குறைவாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட பேச்சு வழக்கத்தின் படி இன்று நாம் பேசுவதில்லை. மட்டுமல்ல, நம்முடைய தற்கால பேச்சு வழக்கத்தின் பொருள் தான் அக்காலத்தின் பேச்சுக்களுக்கு வரும் என்றுச் சொல்லி திணித்து கட்டாயப்படுத்த முடியாது.

இந்த விவரம் பற்றிய மிகவும் தெளிவான ஆதாரம் ஒன்று பைபிளில் உள்ளது. இயேசு யூதர்களுக்குச் சொல்லியிருந்தார், அதாவது மூன்று நாட்கள் இரவும் பகலும் நான் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பேன் என்று. ஆகையால், இயேசு சொன்ன இந்த விவரம் ஒரு வேளை தீர்க்கதரிசனமாக இரண்டு இரவுகள் முடிந்தவுடன் நிறைவேறி விடும் என்று எண்ணி, யூதர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட மறுநாளில் அதாவது ஒரே இரவு மட்டுமே ஆன பிறகு (சனிக்கிழமை), யூதர்கள் பிலாத்துவிடம் சென்று கீழ்கண்டவிதம் கூறினார்கள்:
 
Sir, we remember how that impostor said, while he was still alive, 'After three days I will rise again'. Therefore order the sepulchre to be made secure until the third day.

ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும என்றார்கள் (மத்தேயு 27:63-64).
 
"மூன்று நாளைக்குப் பின்" என்ற‌ சொற்றொடரானது "நான்காவ‌து நாளைக்" குறிக்கின்ற‌து என்று நாம் புரிந்துக் கொள்கிறோம். ஆனால், யூதர்களின் பேச்சு வழக்கின் படி(colloquialism), இது மூன்றாம் நாளைக் குறிக்கும் என்று யூதர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் யூத‌ர்க‌ள் மூன்று முழூ ப‌கல்கள் ம‌ற்றும் மூன்று முழூ இர‌வுக‌ள் க‌ல்லரையை பாதுகாக்க ஜாக்கிரதைப்படவில்லை, அதற்கு பதிலாக இரண்டாம் இரவு ஆனவுடன் மூன்றாம் நாள் வரை மட்டுமே காவல் காக்க பிரயாசப்பட்டனர். ஆக, யூதர்களின் பேச்சுவழக்கத்தின் படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்றுச் சொன்னால், மற்றும் "மூன்று நாளுக்குப்பின்" என்றுச் சொன்னால், நாம் நம் வழக்கத்தின் படி கருதுவது போல் அது மூன்று முழூ நாட்களின் மொத்த நேரத்தைக் குறிக்காமல், அதாவது 72 மணி நேரத்திற்கு பிறகு என்றுக் குறிக்காமல், அந்த மூன்றாவது நாளில் எந்த ஒரு பகுதியையும் குறிக்கும்(Clearly, therefore, the expressions "three days and three nights" and "after three days" did not mean a full period of seventy-two hours as we would understand them, but any period of time covering a period of up to three days.)

இந்நாட்களில் நம்மிடம் ஒருவர் வெள்ளிக்கிழமை மதிய சமயத்தில் வந்து "நான் உங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சந்திக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அவர் நம்மை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன்பு வந்து சந்திப்பார் என்று நாம் எதிர்பார்க்கமாட்டோம். அவர் செவ்வாய்க் கிழமைக்கு பிறகு தான் நம்மை சந்திக்கவருவார் என்று நான் எதிர்ப்பார்ப்போம். ஆனால், யூதர்கள் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவலைப்பட்டு, கல்லரையை மூன்றாம் நாள் வரை மட்டும் பாதுகாத்தால் மட்டும் போதும் என்பதால், அரசரிடம் சென்று ஞாயிறு வரைக்கும் காவல் வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், அதாவது "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றாலோ அல்லது "மூன்று நாளுக்கு பின்பு" என்றுச் சொன்னாலோ, தங்கள் வழக்கத்தின் படி அந்நாட்களில் அது மூன்றாம் நாளை குறிக்குமே அல்லாமல், மூன்று முழு நாட்களுக்கு பின்பு நான்காம் நாளை குறிக்காது.

ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், நம்முடைய பேச்சு வழக்கில் இல்லாத ஒரு சொற்றொடரை படிக்கும் போது எப்படி அதன் பொருளை சரியாக புரிந்துக் கொள்வது? இதற்கு பதில் "யூதர்கள் எப்படி அக்காலத்தில் அவர்களின் பேச்சுவழக்கத்தின் படி படித்தார்கள்" என்பதை புரிந்துக்கொண்டால் தான் நமக்கு அச்சொற்றொடரின் அர்த்தம் சரியாகப் புரியும். இயேசுவின் சீடர்கள் மிகவும் தைரியமாக, "இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்றுச் சொன்னபோது, அதாவது ஞாயிறு அன்று வரை இரண்டு இரவுகள் மட்டுமே கடந்திருந்தாலும், சீடர்கள் இப்படி தைரியமாகச் சொன்னபோது(அப் 10:40), எந்த ஒரு யூதனும் சீடர்களிடம் வந்து தீதத் அவர்கள் இப்போது சொல்வது போல, மூன்று இரவுகள் கடக்காமல் இரண்டு இரவுகள் தானே ஆனது அப்படியானால் எப்படி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று கேள்வி கேட்கவில்லை. இந்த பிரச்சனை அக்கால யூதர்களுக்கு இருந்ததில்லை, ஏனென்றால், அவர்களின் பேச்சு வழக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருந்தது. ஆனால், தீதத் அவர்களுக்கு யூதர்களின் பேச்சு வழக்கம் தெரியாத காரணத்தால் தான், இயேசுவின் தீர்க்கதரிசனத்தை தாக்கி எழுதுகிறார், அதாவது, இயேசு மூன்று முழு பகல்கள், மூன்று முழு இரவுகள், கல்லரையில் இல்லை, அவர் 72 மணி நேரம் கல்லரையில் இல்லை, ஆகையால் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை என்று அறியாமையினால் இப்படிச் சொல்கிறார். (ஆக, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்ததும், 72 மணி நேரம் கொண்ட மூன்று முழு இரவும் பகலும் அல்ல, மூன்றாவது நாளிலேயே அவர் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டிருப்பார்).

இதுவரை நாம் கண்ட விவரங்களைக் கொண்டு, இயேசு யூதர்களுக்கு காட்டுவேன் என்றுச் சொன்ன அடையாளத்திற்கு எதிராக அஹமத் தீதத் அவர்களின் பலவீன வாதத்தில் உள்ள குறைபாடை நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம். அடுத்ததாக, யோனாவின் அடையாளம் என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக நாம் ஆராய்வோம்.


 

 

 

Wednesday, December 3, 2008

திரித்துவமும் நீங்களும் - The Trinity and You

 



திரித்துவமும் நீங்களும்


The Trinity and You

 
ஆசிரியர்: சாம் ஸ்க்ளார்ப் (By Sam Schlorff)
 
 
கேள்வி: நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன். நன்றி.
 
 
 
பதில்: கிறிஸ்துவ நம்பிக்கை மற்றும் வாழ்வு பற்றிய சுருக்கமான ஒரு மேலோட்டத்துடன் ஆரம்பித்து அதன் அடிப்படையில் திரித்துவக் கொள்கையினை விளக்குகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்; வெளியரங்கமாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரே மாதிரியாக இருந்து, நம்பிக்கை மற்றும் அதனைக் கடைப்பிடித்தலில் ஒற்றுமை இருப்பது போலக் காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களே. ஏனெனில், உலகினைப் பற்றிய‌ பார்வையில் அவர்கள் வெவ்வேறு வகையிலான‌ உந்துதலை உடையவர்கள்.

 
கிறிஸ்தவ நம்பிக்கையும் வாழ்வும் பைபிளை அடிப்படையாகக் கொண்டவை. பைபிள், தேவனையும் அவர் இயேசுவின் (al-masih) வழியாக‌ நமக்குச் செய்தவைகளை - அதாவது‍ அவரது வாழ்க்கை, போதனைகள், அவரின் மரணம் மற்றும் மரித்தோரினின்று உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையப்படுத்துகிறது. "கிறிஸ்தவன்" என்ற‌ வார்த்தை "கிறிஸ்து" என்பதினின்று உருவாகிறது. "கிறிஸ்து" என்பதின் அர்த்தம் "அபிஷேகிக்கப்பட்டவர்(anointed one)" என்பதாகும். இந்த "கிறிஸ்து" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையாகும், இதற்கு இணையான அரபி வார்த்தை "மஸீஹா(Masih)" என்பதாகும்(இதற்கு இணையான எபிரேய வார்த்தை(பழைய ஏற்பாடு) "மேசியா-Messiah" என்ற வார்த்தையாகும்). அவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு ந‌ம்மை இர‌ட்சிக்கும் பொருட்டு பூமிக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தினால் "al-Masih" என்ற‌ழைக்க‌ப்ப‌டுகிறார் (லூக்கா 4:18-21). கிறிஸ்த‌வ‌ உல‌கின் அனைத்துப் ப‌ரிமாண‌ங்க‌ளையும் த‌ழுவும் ஒரு உன்ன‌த‌ப் பார்வை "கிருபை"(ni`mah - Grace) என்னும் வார்த்தையில் அட‌ங்கியுள்ள‌து. இது நம்மை நரகத்தின் நித்திய அழிவினின்று காப்பாற்ற, எள்ளளவும் தகுதியற்ற நமக்கு தேவன் காட்டும் ப‌ரிவு அல்ல‌து உத‌வி என்ப‌த‌னைக் குறிக்கும். தேவ‌னின் வார்த்தை யோவான் 1:17 ல் சொல்கிற‌து :

 
"நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின."

 
மேலும் எபேசிய‌ர் 2 : 8,9ன் ப‌டி,

 
"கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல".

பின்பும், "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." என ரோமர் 5:8 ல் நாம் வாசிக்கிறோம்.
 
 
பைபிளில் தேவன் தம்மை மூவொரு தேவனாக வெளிப்படுத்துகிறார் - அதாவது பிதா, குமாரன் (இயேசு‍ al-Masih), மற்றும் பரிசுத்த ஆவியாக வெளிப்படுத்துகிறார். பிதாவும், குமாரனும் பரிசுத்த ஆவியும் அடிப்படையிலும், நோக்கத்திலும் மனித குலத்திற்கான தேவ திட்டத்தின்படியும் ஒன்றானவர்களே(Father, Son and Holy Spirit are one in essence, in will, and in their plan for mankind.) . இது தான் நீங்கள் கேட்ட திரித்துவம் என்கின்ற கிறிஸ்தவக் கொள்கையாகும். துரதிஷ்டவசமாக, பலர் இக்கொள்கையினைப் பற்றி அனேகம் தவ‌றான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவைகளை நாம் ஆராய முயல்வோம். உதாரணமாக, நாம் என்ன தான் எடுத்துக் கூறினாலும் திரித்துவம் என்பதற்குப் பலர் என்ன பொருள் கொள்கிறார்கள் என்றால் "கிறிஸ்தவர்கள் உண்மையாகவே மூன்று கடவுள்களை நம்புகிறார்கள் என்பதே". அதிலும் கொடுமையானது என்னவெனில், தந்தைக் கடவுள், தாய்க் கடவுள் (sahiba) மற்றும் மகன் என்ற கடவுள் இருப்பதாக‌ இப்படிப்பட்டவர்கள் சொல்வது தான். எந்த ஒரு கிறிஸ்தவனும் அவன் எந்த திருச்சபையைச் சார்ந்தவனாக இருப்பினும் இவ்வண்ணமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த எண்ணமே நமக்கு பாவத்திற்கும் சாபத்திற்கு முரியது, மற்றும் இது தேவதூஷணமாகும். நாம் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் மக்கள் இவ்வாறான மாறுபாடான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தியும் அதனடிப்படையில் மீண்டும் மீண்டும் தவறான கணிப்புகளைக் கொண்டும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், வார்த்தையின் பொருளினால் இக்கொள்கை முரண்பாடாக இல்லையா என நீங்கள் கேட்கலாம். இது நியாயமான கேள்வி தான். ஆனால், இதற்கு பதில் உறுதியாக "வார்த்தையின் பொருளினால் இக்கொள்கை முரண்பாடாக இல்லை"என்பதே. நாம் மூன்று வித்தியாசமான, அமைப்பினாலும் நோக்கத்தினாலும் வேறுபட்ட மூன்று கடவுள்களைப் பற்றிப் பேசாமல், அடிப்படையில் மூன்றும் ஒன்றாகவும், ஒரே தன்மையில் இணையப்பெற்றுள்ள மூவொரு தெய்வத்தினைப் பற்றியே சொல்கிறோம்(You may be asking, but is not the doctrine a contradiction in terms, however? That is a fair question. But the answer is still no; we are not speaking of three gods, each with a different being and will, but of one essence with three persons and three persons in one essence.)

 
அப்படியானால் "திரித்துவம்" என்பதன் விளக்கம் என்ன‌? இங்கு பிரச்சனை இக்கொள்கையில் இல்லை, ஆனால், மனித மனங்களின் எல்லையில் உள்ளது. கடவுளின் இயல்புகள் மனித மனங்க‌ளின் புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. பைபிள் இவ்வாறாக அறிவிக்க‌வில்லையா? "தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. (யோபு 11:7-9)." குரானும் கூட"laisa ka-mithli-hi shai'un" என்று சொல்கிறது "அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" – (சுரா 42:11). திரித்துவம் என்பது"bi-la kaif wa-bi-la tashbih (without asking how and without anthropomorphism)" என்று அரபியில் சொல்வதற்கு சமமாகும். இதை விஞ்ஞான அறிவினால் நிருபிக்கவோ அல்லது அதே விஞ்ஞான அறிவினால், "தவறானது" என்று நிராகரிக்கவோ முடியாது. இது விஞ்ஞான அறிவிக்கு முரணானது என்று வாதிடுவது என்பது, "இறைவன் எதைச் செய்வார் அல்லது எதைச் செய்யமாட்டார்" என்ற விவரங்கள் பற்றி மனிதன் தீர்ப்பு வழங்க உட்கார்ந்துக் கொள்வதற்கு சமமாகும், ஒரு வரியில் சொன்னால், இப்படி செய்வது தெய்வ நிந்தனைக்கு சமமானது. சுருக்க‌மாக‌ சொல்லவேண்டுமானால், தேவ‌னின் இய‌ல்பை நாம் முற்றிலும் புரிந்து கொள்வ‌து ந‌ம‌து அறிவிற்கும் அனுப‌வ‌த்திற்கும் அப்பாற்ப‌ட்ட‌து (Quite simply, we will never be able fully to understand God's nature because it lies outside our experience and knowledge.).

 
சுருங்கக் கூறின் மெய்யாகவே, தேவன் திரித்துவத்தைப் பற்றிய எல்லா விவரங்களை நமது அறிவுபூர்வமான ஆவலை பூர்த்தி செய்யும் பொருட்டு வெளிப்படுத்த வில்லை அல்லது அவரது தன்மையினை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளும்படியாக வெளிப்படுத்த வில்லை. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய ஒவ்வொருவரும் நம் இரட்சிப்பிற்காகச் செய்தது என்ன? மற்றும் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ளும் அவசியத்திற்காகவே அவர் இவ்வாறு செய்தார். நம்மீதான கிருபையினை அனுபவிக்கும் முன்பாக இக்கிருபையின் மூலமாக‌, நம் வாழ்வில் இவ்வொவ்வொன்றின் இயக்கங்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். பைபிள் இவ்வாறாக போதிக்கிறது:
 
 
பிதாவின் திட்டம்: முதல் மனுஷனும் மனுஷியும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் தொடங்கி, நாம், அதாவது மனித குலம், நமது "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்" மரித்தவர்களானோம் (எபேசியர் 2:1). ஏனெனில் நாம் "தேவனுடைய‌ ஜீவனுக்கு அன்னியராகி" பிரிக்கப்பட்டுப் போனோம் (எபேசியர் 4:18). மேலும் ரோமர் 3:23 சொல்கிறது, "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகிவிட்டோம்". ஆனால் பிதாவாகிய தேவன் நாம் அதே நிலையில் இருப்பதைக் கண்டு அவர் திருப்தியடைய‌வில்லை என வேதம் காண்பிக்கிறது. அவர் தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த நம்மை, "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்னும்படிக்கு ஒரு திட்டத்தை வைத்து இருந்தார். திரித்துவத்தின் ஒவ்வொருவரும் நமக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்கள் இதோ:

 
குமாரனின் பங்கு: நமது பாவங்களினாலுண்டாகும் நித்திய மரணத்தினின்று நம்மை நாமே காத்துக் கொள்ள முடியாதபடியினால், தேவன் வெறுமனே தமது சட்டங்களையும், தம்மைப் பற்றிய பிரஸ்தாபஙளையும் அனுப்பிக்கொண்டு நம்மால் அறியப்படாமலும், தனித்தும் இருக்க விரும்பவில்லை. அவர் இரட்சகராக‌ இயேசு கிறிஸ்துவின் வழியாய் மனித குலத்தை மீட்கும் பொருட்டாக‌ "இறங்கி வந்தார்". இயேசு தம்மைப் பற்றி,
 
 
"என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" (யோவான் 6:38) எனச் சொல்கிறார்.

 
மேலும், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப் படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று"(யோவான் 3:16-18)
 
 
பரிசுத்த ஆவியானவரின் பங்கு: உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு நமக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து தேவனிடத்தில் இரட்சிப்பை வேண்டிக் கொள்ளும்போது தேற்றரவாளன் எனப்படும் தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம்முள் இறங்கி வாசம் செய்யவும் தேவனுக்காய் நாம் வாழவும் உதவி செய்வார்.
 
 
"நான் பிதாவை வேண்டிக் கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." (யோவான் 14:16-17)

 
"என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்."(யோவான் 14:26)

 
"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல் ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." (ரோமர் 8:9)
 
 
பிதாவின் பங்கு: நான் பாவி என்று தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் பிரவேசித்து தேவனுக்காய் நாம் வாழ உதவி செய்கிறார். தேவன் நம்மை அவரின் புதல்வருள் ஒருவராய் ஏற்றுக் கொள்கிறார்.

 
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."(யோவான் 1:12-13)

 
"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும் படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்(ரோமர்8:15-17)
 
 
நான் எழுதியவைகளைச் சிந்தித்து அதனைப் புரிந்துகொள்ள தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். நீங்களும் தேவனின் பிள்ளைகளாகலாம்.




 


Wednesday, November 26, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3





ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3
 
குறிப்பு: ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். இக்கட்டுரைக்கு தொடர் பதிலாக நாம் இயேசுவின் போதனைக்கும் பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை தொடர் கட்டுரையாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். படிக்கவும்:
இதே தலைப்பில் இந்த மூன்றாம் பாகத்தில் இன்னும் 30 (71 to 100) ஒற்றுமைகளை இக்கட்டுரையில் காணலாம். …

 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 3
 
 
100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul
 
 
தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
 
 
முன்னுரை:
 
  
அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.
 
 
 
இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
71. உனக்கு முன்னாக படைக்கபட்டதை சாப்பிடு
Eat what is set before you
 
 
 
இயேசு: ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிற பொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் உங்கள் முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, (லூக் 10: 8)
 
 
 
பவுல்: அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். (1 கொரி 10: 27)
 
 
 
72. தலைவர்கள் மேய்ப்பர்களும் மற்றும் விசுவாசிகள் ஆடுகளுமாவர்.
Leaders are shepherds and believers are the flock
 
 
 
இயேசு: அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். .... என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். ...என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21: 15, 16, 17)
 
 
 
பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20: 28)
 
 
 
73. விசுவாசிகள் பாம்புகளால் கூட பாதிப்படையார்கள்.
Believers will handle snakes without harm
 
 
 
இயேசு: சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; .... (மாற்கு 16: 18)
 
 
 
பவுல்: பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். (அப் 28: 3-5)
 
 
 
74. வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள் அவர்கள் சுகமாவார்கள்.
Lay hands on the sick and they will recover
 
 
 
இயேசு: ...வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:18)
 
 
 
பவுல்: புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். (அப் 28: 8)
 
 
 
75. பிசாசுகளைத் துரத்துங்கள்
Cast out demons
 
 
 
இயேசு: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; ... (மாற்கு 16:17)
 
 
 
பவுல்: பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, (அப் 19:11-15)
 
 
 
76. ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லாமல் உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது என்றும் சொல்
Not Yes and No, but Yes or No
 
 
 
இயேசு: உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத் 5: 37)
 
 
 
பவுல்: இப்படி நான் யோசித்து வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ? நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. என்னாலும், சில்வானுவினாலம், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. (2 கொரி 1: 17-20)
 
 
 
77. விவாகரத்தும், மறுமணமும் விபச்சாரமாகும்.
Divorce and remarriage is adultery
 
 
 
இயேசு: அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார். (மாற்கு 10: 11-12)
 
 
 
பவுல்: அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல. (ரோமர் 7: 2-3)
 
 
 
78. தேவனுக்கென்று துறவறமும், கன்னித்தன்மையும்
Celibacy/virginity for the Lord
 
 
 
இயேசு: அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகஜ்யத்தினிமித்தம் தங்களை (மத் 19: 10-12)
 
 
 
பவுல்: நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். (1 கொரி 7: 32-35)
 
 
 
79. மரணமும் மறுபிறப்பும் விதைப்பதை போன்றது.
Death and rebirth of what is sown
 
 
 
இயேசு: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். (யோவான் 12: 24)
 
 
 
பவுல்: புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. (1 கொரி 15: 36)
 
 
 
80. தீவிரமான பிரச்சனைகள் செல்வத்தோடு தொடர்புடையவை
Serious problems are associated with riches
 
 
 
இயேசு: அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனா யிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத் 19: 21-24)
 
 
 
பவுல்: ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். (1 தீமோ 6: 9-10)
 
 
 
 
81. ஞானஸ்நானம்
Baptism
 
 
 
இயேசு: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, (மத் 28: 19)
 
 
 
பவுல்: அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப் 16: 29-33)
 
 
 
82. பிசாசு
The devil
 
 
 
இயேசு: நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான (யோவான் 8: 44)
 
 
 
பவுல்: நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபே 6: 11)
 
 
 
83. விசுவாசிகளின் மகிமையடைதல்
Glorification of believers
 
 
 
இயேசு: அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17: 22)
 
 
 
பவுல்: நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8: 17)
 
 
 
84. சுவிஷேசத்தை பிரசங்கிப்பதின் முக்கியத்துவம்
The importance of preaching the good news
 
 
 
இயேசு: பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். (மாற்கு 16: 15)
 
 
 
பவுல்: ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. (ரோமர் 10: 13-15)
 
 
 
85. நவமான பாஷைகளை பேசுதல்
Speaking in tongues
 
 
 
இயேசு: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;(மாற்கு 16: 17)
 
 
 
பவுல்: ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1 கொரி 12: 7,8, 10)
 
 
 
86. யூதர்களுக்கு முதலில் பிரசங்கியுங்கள்
Preach to Jews first
 
 
 
இயேசு: அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக் 24: 47)
 
 
 
பவுல்: யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம (அப் 13: 45-46)
 
 
 
87. மரித்தோரை எழுப்புங்கள்
Raising the dead
 
 
 
இயேசு: அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்;; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. (மத் 9: 18-19, 23-26)
 
 
 
பவுல்: வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. அப்பொழுது ஜத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக் கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப்புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறதலடைந்தார்கள். (அப் 20: 7-12)
 
 
 
88. நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வாழ்வதற்குரிய பிரதிபலன்
The results of good and evil living
 
 
 
இயேசு: இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5: 28, 29)
 
 
 
பவுல்: தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2: 6-8)
 
 
 
89. உங்களைத் துன்பபடுத்துகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்
Do good to those who persecute you
 
 
 
 
இயேசு: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்;உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத் 5: 44)
 
 
 
பவுல்: உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். (ரோமர் 12: 14)
 
 
 
90. இயேசுவும் பவுலும் யூதர்களாயிருந்தனர்
Jesus and Paul were both Jews
 
 
 
இயேசு: . ... அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். (யோவான் 4: 7-9)
 
 
 
பவுல்: மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; (பிலி 3: 4-5)
 
 
 
 
91. இயேசுவும் பவுலும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்.
Jesus and Paul were both circumcised on the eighth day
 
 
 
இயேசு: பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். (லூக் 2: 21)
 
 
 
பவுல்: மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; (பிலி 3: 4-5)
 
 
 
92. இயேசுவும் பவுலும் உபத்திரவத்திற்கு மூன்று முறை ஜெபித்தார்கள்
Jesus and Paul both prayed three times about suffering
 
 
 
இயேசு: சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி, ஜெபம்பண்ணினார். (மத் 26: 39, 42, 44)
 
 
 
பவுல்: அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். (2 கொரி 12: 7-9)
 
 
 
93. இயேசுவும் பவுலும் தங்களின் ஊழியத்தினிமித்தம் எருசலேமுக்கு போகத் தீர்மானித்தார்கள்
Jesus and Paul were both determined to go to Jerusalem (as part of their mission)
 
 
 
இயேசு: பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம் பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (லூக் 9: 51-53)
 
 
 
பவுல்: இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப் 20: 22-24)
 
 
 
94. எருசலேமுக்கு போனால் பாடுபட்டு மரிக்க நேரிடும் என்பதை இயேசுவும் பவுலும் அறிந்திருந்தார்கள்.
Jesus and Paul both knew traveling to Jerusalem would lead to suffering and death
 
 
 
இயேசு: பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். (மாற்கு 10: 32-34)
 
 
 
பவுல்: இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப் 20: 22-24)
 
 
 
95. இயேசுவும் பவுலும் யூத ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக கொண்டுவரப்பட்டார்கள்
Jesus and Paul were both brought before the Jewish council
 
 
 
இயேசு: விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தி: (லூக் 22: 66)
 
 
 
பவுல்: பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதானஆசாரியரையும் அலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான். (அப் 22:30)
 
 
 
96. இயேசுவும் பவுலும் யூத அதிகாரிகள் முன்னிலையில் தங்கள் வார்த்தைகளினிமித்தம் (தவறாக) அடிக்கப்பட்டார்கள்
Jesus and Paul were both (wrongly) struck because of their words before the Jewish authorities
 
 
 
இயேசு: பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.(லூக் 18: 19-23)
 
 
 
பவுல்: பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். (அப் 23: 1-3)
 
 
 
97. இயேசுவும் பவுலும் ரோம ஆளுநர்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டார்கள்
Jesus and Paul were both brought before Roman governors
 
 
 
இயேசு: விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். (மத் 27: 1-2)
 
 
 
பவுல்: அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான். ஐந்து நாளைக்குப் பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாய சாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: (அப் 23: 33-24:2)
 
 
 
98. இயேசுவும் பவுலும் அவிசுவாசிகளான யூதர்களைப் பற்றிய ஏசாயா தீர்க்கதரிசியின் ஒரே தீர்க்கதரிசனத்தை குறிப்பிட்டார்கள்
Jesus and Paul quoted the same prophecy of Isaiah about unbelieving Jews
 
 
 
இயேசு: ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள் என்பதே. (மத் 13: 14-15)
 
 
 
பவுல்: இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப் போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது: நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். (அப் 28: 25-27)
 
 
 
99. பவுல் இயேசுவுக்காக துன்பப்பட்டார்
Paul suffered for Jesus
 
 
 
இயேசு: .... அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். (அப் 9: 16)
 
 
 
பவுல்: அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிராயணம் பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது (2 கொரி 11: 23-28)
 
 
 
100. புறஜாதிகளுக்கும், யூதர்களுக்கும் ராஜாக்களுக்கும முன்பாக பவுல் இயேசுவைப் பற்றி அறிவிக்கவேண்டியவராக இருந்தார்.
Paul to proclaim Jesus before Jews, Gentiles, and Kings
 
 
 
இயேசு: அதற்கு கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். (அப் 9: 15)
 
 
 
பவுல்: அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள். உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான், சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவி கொடுப்பீர்களாக என்றான்.அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையைநீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். தீர்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
(அப் 15: 12; 21: 40-22: 1, 6, 8; 26: 1-2,22-23)
 
 

 
 
இயேசுவுடைய மற்றும் பவுலுடைய போதனைகளிலும் செயல்களிலும் அநேக ஒற்றுமைகளை காண்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை ஏனென்றால் பவுலைத் தன்னுடைய அப்போஸ்தலனாக ஏற்படுத்தியதே இயேசுதான்.
 
 
அதற்கு கர்த்தர்(இயேசு): நீ போ; அவன்(பவுல்) புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும்
என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். (அப் 9: 15)
 
அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய் மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். (அப் 22: 14-15)
 
மேலுள்ள 100 ஒற்றுமைகளோடு நிறைவடையவில்லை இன்னும் அநேகம் இருக்கிறது.

 
 

 

 
 

Saturday, October 25, 2008

இயேசுவும்,ஜிஹாதும்

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌… 

நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்

Open Letter to Our Muslim Friends:

செப்டம்பர் பதினோறாம் தேதியின் அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அது போன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன். 


உங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள்.

இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.

ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.

பைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தித்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.

மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜெயித்தார் (He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத், அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே காட்டப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.

"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்."

முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.

தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொண்டார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக் கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்


அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்க வேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழ வேண்டுமென்றார்.

கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்க வில்லை; நீங்கள் கொ லைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக் கூடாமற் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)

உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.

இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.

நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:

"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்." லூக்கா 6:27,28

இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்து காட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.

உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின் பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப் பெற்றது என நீங்களே அறிந்து கொள்ளுங்கள்

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (மத்தேயு 11:28 – 30).

 

இப்படிக்கு

க்ளன் எம் மில்லர்
(Glenn M. Miller, www.Christian-thinktank.com)

[The author of this article, Glenn M. Miller, hereby grants permission to copy this article freely, provided that the material is not modified in any form (other than translation into another language); that the material is distributed without cost, and that the ThinkTank web site identification remains with the material. We further ask that the source is acknowledged as: Source: www.answering-islam.org/glenn.html]

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்