Saturday, October 25, 2014
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் திருத்தப்பட்டது என்றும் அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு பக்கம் பிரசங்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் ”பைபிளில் முஹம்மது” என்று புத்தகமும்,டிவிடிகளும் வெளியிடுகிறார்கள்.இது இவர்களின் இரட்டை முகத்தை காட்டிவிடுகிறது.
பைபிளை பொருத்தவரையில் முஹம்மது அவர்களை பற்றி அவர் வேதாகம தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம்.ஆனால் கிறிஸ்தவர்களை எப்படியும் ஏமாற்றிவிடலாம் என்ற பகல் கனவில் இதுபோன்ற வேலைகளை இவர்கள் செய்துவருகிறார்கள்.அனால் இவர்களின் இந்த வஞ்சகமான திட்டங்களை ஆண்டவர் தவிடுபொடியாகிவிடுவார் என்பதில் எந்த சதேகமும் இல்லை.
இங்கு கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் டாக்டர் ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய அறிஞர் பைபிளில் யோவான் 14 அதிகாரத்தில் சொல்லப்படும் தேற்றரவாளன் என்பது முஹம்மது அவர்களை குறிக்கும் என்று வாதிடுகிறார்.ஆனால் அவர்கள் வாதம் தவறானது என்பதையும் அது பரிசுத்த ஆவியாகிய திரியேகதேவனை குறிக்கும் என்பதையும் நாம் அறிவோம்.அதை வேத வசன ஆதாரத்துடம் நாம் அவர்களுக்கு பதிலளித்துள்ளோம்.இது போன்ற அவர்களின் பல வாதங்களுக்கு நாம் அளித்துள்ள பதில் டிவிடிகளாக வெளிவந்துள்ளது.தேவைப்படுகிறவர்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
Subscribe to:
Post Comments (Atom)
Comment Form under post in blogger/blogspot