செக்ஸ் பற்றி பகிரங்க பேச்சு: சவுதி அரேபிய பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி
ரியாத், அக்.25- சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரோசானா அல்-யாமி. இவர், லெபனான் நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சானல் ஒன்றில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரிடம் பகிரங்கமாக செக்ஸ் பற்றி பேசிய காட்சிகள் அண்மையில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தயாரித்ததோடு, அது பற்றிய விளம்பரத்தை இணைய தளத்திலும் வெளியிடச் செய்ததற்காக ரோசானாவுக்கு சவுதி அரேபிய கோர்ட்டு 60 தடவை கசையடி கொடுக்கும்படி உத்தரவிட்டது. ரோசானாவுடன், செக்ஸ் பற்றி விவரித்து பேசிய அப்துல் ஜவாத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் கசையடி வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. சவுதி அரேபியாவில் செக்ஸ் பற்றி பகிரங்கமாக ஆணோ, பெண்ணோ பேசுவது சட்டப்படி குற்றமாகும்.