இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, September 4, 2007

ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல ஈசாக்குரான் இணையம் பதில்

ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல  என்று ஈசாக்குரான் இணையம் இதி தான் இஸ்லாம் இணையத்துக்கு பதில் அளித்து உள்ளது
 
 
முகமது இறைத்தூதுவராக வந்தார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்ல, மற்ற வேதங்களில் அவர் வருகைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் தேடிக்கொண்டும், மாற்று மத வேதங்களில் சில வசனங்கள எடுத்துக்கொண்டு, இந்த வசனம் முகமதுவின் வருகைப் பற்றி சொல்கிறது என்று தவறாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

இப்படி இஸ்லாமியர்கள் சொல்கின்ற வசனங்களில் "பைபிளின் பழைய ஏற்பாட்டின்" ஆபகூக் புத்தகமும் ஒன்று. ஆபகூக் 3:3ம் வசனத்தில் வரும் "பரிசுத்தர் பாரான் வனாந்திரத்திலிருந்து வந்தார்" என்ற வாக்கியம் "முகமதுவை" குறிக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர்.

இவர்களின் இந்த வாதம் தவறானது. இந்த வசனம் குறிப்பிடும் நபர் தேவனாவார் . இவர்களின் இந்த வாதம் சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

ஆபகூக் 3:3ம் வசனம் குறிப்பிடுவது "தேவன் அல்லது இறைவனைத் தான், முகமதுவை அல்ல" என்பதற்கான காரணங்கள்:

1. பாரான் என்பது மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இது தவறான ஆதாரமற்ற வாதம் என்பதை கீழே உள்ள கட்டுரை தெளிவாக விளக்குகிறது. இக்கட்டுரையை முதலாவது படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

கட்டுரை-1: பாரான் என்பது மக்கா அல்ல!

2. இஸ்லாமியர்கள் உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது "முகமதுவைத் தான்" என்று சொல்கிறார்கள். இந்த வாதமும் தவறானது என்றும், இஸ்லாமியர்கள் பைபிள் வசனங்களுக்கு புது பொருள் கூறுகிறார்கள் என்றும், உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது "கர்த்தரைத் தான்" முகமதுவை அல்ல என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

கட்டுரை-2: உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடும் நபர் "கர்த்தர்" முமகது அல்ல!


மேற்கண்ட இரண்டு கட்டுரைகள், இந்த தற்போதைய கட்டுரைக்கு அடித்தளமாக அமையும். எனவே அவைகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது ஆபகூக் 3:3ம் வசன விளக்கத்திற்குச் செல்வோம்.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் முன்வைத்த வாதம்:

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.

Source


1. அல்லா அனுப்பியது "தோரா, ஜபூர், இஞ்ஜில்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர், பின் ஏன் ஆபகூக் லிருந்து ஆதாரம்?

இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி மோசேவிற்கு "தோராவையும் (ஆதியாகமம் – உபாகமம்)", தாவீதுக்கு "ஜபூர் - சங்கீதம் " என்ற வேதத்தையும், இயேசுவிற்கு "இஞ்ஜில்" என்ற வேதத்தையும் அல்லா இறக்கினான். இவைகள் தவிர பைபிளில் உள்ள மற்ற தீர்க்கதரிசன புத்தகங்கள் அல்லா இறக்கவில்லை என்றும், இன்னும் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்களுக்கு அடுத்துள்ள புத்தகங்கள் வேதங்கள் அல்ல என்று நம்புகின்றனர்[1].

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், அதாவது "ஆபகூக்" என்ற புத்தகம் அல்லா இறக்கியதாக நம்பும் "தோரா, ஜபூர் மற்றும் இஞ்ஜில்" போன்ற மூன்று வேதங்களிலும் வராது.

என் கேள்வி:

1. இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள மற்றும் அல்லா இறக்கியதாகச் சொல்லும் தோரா(ஆதியாகமம் -உபாகமம்), ஜபூர் ( சங்கீதம் ) மற்றும் இஞ்ஜில் வேதத்தையே நம்புவதில்லை. ஆனால், அல்லா இறக்கியதாகச் சொல்லாத "ஆபகூக்" என்ற பைபிள் புத்தகத்திலிருந்து மட்டும் ஏன் அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கின்றனர்?

2. பைபிளின் "ஆபகூக்" புத்தகத்தைப் பற்றி,  ஏதாவது வசனத்தை அல்லா குர்-ஆனில் சொல்லியுள்ளாரா?

3. ஆபகூக் 3:3ம் வசனத்தை நம்பும் இஸ்லாமியர்கள், இந்த ஆபகூக் புத்தகம் முழுவதும் திருத்தப்படவில்லை என்று நம்புகிறார்களா?

4. தீர்க்கதரிசி ஆபகூக் போல பைபிளின் மற்ற தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, எரேமிய, தானியேல் இன்னும் பல தீர்க்கதரிசிகள் புத்தகங்களையும் இஸ்லாமியகள் நம்புகிறார்கள் என்று நாம் நினைக்கலாமா?


2. ஆபகூக் புத்தகத்தின் சாராம்சம் (சாராம்சத்திற்கு வெளியே பொருள் தேடும் இஸ்லாமியர்கள்):

ஆபகூக் புத்தகம் முழுவதும் ஒரு முறை படித்துப்பாருங்கள். மக்களின் துன்மார்க்க வாழ்க்கையை பார்த்து தேவனிடம் முறையிடுகிறார்(ஆபகூக் அதிகாரங்கள் 1, 2) மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் தேவனின் அதிசய செயலை நினைத்து அவர் மீது சார்ந்துக்கொள்கிறார். தேவன் மூலமாக வரும் இரட்சிப்பை நினைத்து துதிபாடுகிறார்.


ஆபகூக் 1:2-4

2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.

4. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது



எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்படவில்லை. தேவன் கடந்த காலத்தில் செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சொல்வது போல, முகமது பாரானிலிருந்து வருவார் என்று ஆபகூக் சொல்லவில்லை, இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

ஆபகூக் புத்தகத்தில் உள்ள மூன்று அதிகாரங்களை படிக்கும்படி இஸ்லாமியர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சில இஸ்லாமிய அறிஞர்களின் இந்த வாதம் தவறானது என்பது புரியும்.

3. ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு பாடலே (விண்ணப்பம்) ஒழிய, முகமது வருகையின் தீர்க்கதரிசனமல்ல?

ஆபகூக 3:1ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, இந்த மூன்றாம் அதிகாரம் "ஒரு பாடலாகிய விண்ணப்பம்" என்று, இஸ்லாமியர்களின் கூற்றுப்படி இது ஒரு " எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் அல்ல ". பார்க்க ஆபகூக் 3:1

ஆபகூக் 3:1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.

A prayer of Habakkuk the prophet upon Shigionoth



இந்த பாடல் ஒரு வகையான வாத்தியத்தில் (அல்லது) ஒரு குறிப்பிட்ட இராகத்தில்  பாடின பாடலாகும். அந்த வாத்தியம் அல்லது இராகம் சிகாயோனில் [2] என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வாத்தியத்தில் தாவீது இராஜா கூட ஒரு சங்கீதம் பாடினார், இதை ஏழாம் சங்கீதம் தலைப்பு பகுதியில் காணலாம். இந்த வார்த்தை ஏழாம் சங்கீதத்தில் ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது. (Note: Shiggaion = singular, Shigionoth = Plural)

சங்கீதம் 7ன் தலைப்பு பகுதி: பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கி பாடின சீகாயோன் என்னும் சங்கீதம்.

A shiggaion of David, which he sang of the LORD concerning Cush, a Benjamite. (NIV Study Bible)



இந்த ஆபகூக் மூன்றாம் அதிகாரத்தின் முதல் சில வசனங்கள்(13 வசனங்கள்)   ஒரு பாடல் தான் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம், ஆபகூக் 13ம் & 3:3 ம்   வசனத்தின் கடைசியில் உள்ள "சேலா" என்ற வார்த்தையை பார்த்தால் புரியும்.

ஆபகூக் 3:13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.



இந்த "சேலா " என்ற வார்த்தை ஜபூர் என்ற சங்கீத புத்தகத்தில் 39 சங்கீதங்களுக்கு வருகிறது (சங்கீதம் 3,4,7,9,20, 140,143 etc…). இது பாடல்களுக்கு, அல்லது இசைக்கு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். இதனை சங்கீதத்தை(Psalm)  படிப்பவர்கள் கவனிக்கலாம்.

இந்த விவரங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறன, இந்த ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு விண்ணப்பம் அல்லது பாடலாகிய விண்ணப்பம் என்று. எனவே, ஆபகூக் 3:3ம் வசனம் முகமதுவினுடைய வருகையின் தீர்க்கதரிசனம் அல்ல என்பது தெளிவு.

4. ஆபகூக் 3:3 வசன "பரிசுத்தர்" என்பது தேவதூதரோ அல்லது மனிதனோ அல்ல, அவர் "கர்த்தர்"

இந்த வசனத்தில் ஆபகூக் தேவனைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் பேசுகிறார். இந்த இடத்தில் பரிசுத்தர் என்பது முகமதுவோ அல்லது இது தான் இஸ்லாம் தள கட்டுரை சொல்வது போல தேவதூதரோ அல்ல, இந்த வசனத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தர் "தேவன்" ஆவார் .

பாரான் என்பது மக்கா அல்ல. இது சீனாய் தீபகர்பத்தில் உள்ள பாரான் வனாந்திரமாகும். ( பாரான் என்பது மக்கா அல்ல என்ற கட்டுரையை இங்கு படிக்கவும் .)

ஆபகூக் 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா . அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.



இந்த இடத்தில் ஆபகூக் கடந்த கால(Past not Future) நிகழ்ச்சியை குறிப்பிடுகிறாரே தவிர, தன் காலத்திலிருந்து 1200 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முகமதுவை குறித்து அவர் குறிப்பிடவில்லை. (ஆபகூக் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாகும்). "வந்தார்" என்ற வார்த்தை கடந்த காலத்தை குறிக்கும், "வருவார்" என்று ஆபகூக் கூறவில்லை என்பதை கவனிக்கவும்.

இந்த  ஆபகூக் பலமுறை கர்த்தர், தேவன், தேவரீர் என்று அடிக்கடி சொல்வதை காணலாம். அதாவது இவர் தேவனிடம் தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறதை பார்க்கலாம்.

பரிசுத்தர் என்ற வார்த்தையை தேவன் தன்னை குறிப்பிட பலமுறை பயன்படுத்தியுள்ளார். சில நேரங்களில் பக்தர்கள் "தேவன்" என்ற வார்த்தையும், "பரிசுத்தர்" என்ற வார்த்தையையும் சேர்த்தே (அடுத்ததடுத்து) பயன்படுத்தியுள்ளனர்.


ஆபகூக் 1:12-13      12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா ? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர். 13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?

12 O LORD, are you not from everlasting?  My God, my Holy One, we will not die.  O LORD, you have appointed them to execute judgment;  O Rock, you have ordained them to punish.

     13 Your eyes are too pure to look on evil;  you cannot tolerate wrong. Why then do you tolerate the treacherous?  Why are you silent while the wicked 
     swallow up those more righteous than themselves?

எசேக்கியேல்: 39:7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

Ezekiel 39: 7 " 'I will make known my holy name among my people Israel. I will no longer let my holy name be profaned, and the nations will know that I the LORD am the Holy One in Israel.

ஓசியா: 11:9 என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.

Hosea 11:9 I will not carry out my fierce anger, nor will I turn and devastate Ephraim. For I am God, and not man— the Holy One among you. I will not come in wrath



இந்த மேலே சொல்லப்பட்ட வசனங்களைக் கண்டும் நீங்கள் இன்னும் "பரிசுத்தர்" என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்டது "தேவன்" தான் என்பதை நம்பவில்லையானால், நான் இன்னும் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் நம்பமாட்டீர்கள்.

5. " தேவன்" என்பதை "முகமது" என்று சொல்வது இஸ்லாமியர்களுக்கு "ஷிர்க்" ஆகும்

இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்துக்கொண்டு வரும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், பைபிளில் எங்கெல்லாம் (தங்களுக்கு சாதகமான வசனங்களில்) "தேவன்" அல்லது "இறைவன்" என்று வருகிறதோ, அங்கெல்லாம் அந்த வார்த்தை குறிப்பிடுவது "முகமது" தான் என்று சொல்லிவருகிறார்கள்.

இது இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி "ஷிர்க் - SHIRK" ஆகும். அதாவது, அல்லாவிற்கு இணையாக மனிதனை ஒப்பிடுவது. இதை இவர்கள் தெரிந்து செய்கிறார்களோ தெரியாமல் செய்கிறார்களோ எனக்கு தெரியாது. முகமதுவை நபி என்று நிருபிக்க வேறு வழி ஏதாவது தேடினால் அவர்களுக்கு நல்லது, இல்லையென்றால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்திற்கு ஆளாகவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


6. பாரான் மலை அரேபியாவின் "ஹிரா" மலை அல்ல.

பாரான் என்பது மக்கா அல்ல என்பதை நாம் முன்பே பார்த்தோம். இங்கு இது தான் இஸ்லாம் தள நண்பர் எழுதுகிறார், பாரான் மலை என்பது "ஹிரா" மலையாகும் என்று. இதற்கு எந்த ஆதாரமும் காட்டமுடியாது.

இஸ்லாமியர்களின் வாதம் தவறானது என்று இது வரை நாம் பார்த்த விவரங்கள் மிகத்தெளிவாகச் சொல்கிறது. இவர்களுடைய வாதம் வெறும் ஆதாரமில்லாத வாதமே ஒழிய வேறில்லை.

7. ஆபகூக் இந்த வாதத்தைப் பற்றி இதர இஸ்லாமிய அறிஞர்கள்:

டாக்டர் ஜமால் பதாவி: இவர் இந்த வசனத்தைப் பற்றி பேசும் போது ஒருபடி மேலே சென்று, பைபிளின் பொருள் மாறும்படி சில வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதி தன் வாதத்தை முன்வைக்கிறார்.


Dr. Jamal Badawi also claimed that, "Habakkuk 3:3 speaks of God (God's help) coming from Te'man (an Oasis North of Medina according to J. Hasting's Dictionary of the Bible), and the holy one (coming) from Paran. That holy one who under persecution migrated from Paran (Mecca) to be received enthusiastically in Medina was none but prophet Muhammad." Source :   http://bibleandquran.com/quran-word-of-god8.htm

தேவன் என்று வரும் வார்த்தையை தேவனின் உதவி அதாவது God's Help என்று அடைப்பு குறிக்குள் போட்டுவிட்டு இவர் பொருள் கூறுகிறார். "God's Help" என்று எழுதினால் தான், முகமதுவிற்கு உதவியாக இருக்கும் என்று இவர் எழுதுகிறார்.

இன்னொரு இஸ்லாமிய சகோதரர் தேவன் என்ற வார்த்தைக்கு பக்கத்தில் His Guidance என்று எழுதி வசனத்தை வெளியிடுகிறார். உண்மையில் அந்த வசனத்தில் தேவன் என்ற வார்த்தை உள்ளதே தவிர "தேவனின் உதவி" அல்லது God's Guidance என்று இல்லை. இவைகள் எல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் திருவிளையாடல்கள். Source:  http://www.answering-islam.de/Main/Muhammad/Foretold/mish1a.html   



முடிவுரை:

முடிவாக முகமதுப் பற்றி ஒரு வசனமும் பைபிளில் இல்லை. அப்படி இருந்து இருந்தால், அதை கிறிஸ்தவர்கள் தான் முதலாவது நம்பியிருப்பார்கள். மாற்று மத வேதங்களை எப்படியெல்லாம் திருத்திச் சொல்லவேண்டுமோ அப்படியெல்லாம் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் திருத்திச் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.

இயேசுவிற்கு அடுத்து இன்னொருவர் வரவேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமானால், கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள், பல பொய்யைச் சொல்வார்கள், ஏன் பல அற்புதங்களையும் செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. இயேசு தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை இஸ்லாமிய அன்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஜெபத்துடன் முடிக்கிறேன்.


[1] இஸ்லாமியர்கள் பைபிளிலுள்ள எந்த புத்தகத்தையும் அல்லாவின் வேதம் என்று நம்புவதில்லை, அல்லாவே அவைகளை இறக்கினான் என்று குர்-ஆனில் சொல்லியிருந்தாலும். தோரா, ஜபூர், இஞ்ஜில் கூட திருத்தப்பட்டது என்று சொல்லிவருகிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனாலும், இவர்களுக்கு முகமதுவை நபி என்று காட்ட (மக்களை குழப்ப) பைபிள் வசனங்கள் வேண்டும்.

[2] Q: In Hab 3:1, what is a shigionoth?

A: It is either a musical instrument, or possibly a style of music. We do not have any more details of the instrument today. It appears to be the plural form of Shiggaion, which Psalm 7 mentions. Source :  http://www.muslimhope.com/BibleAnswers/hab.htm  

அல்லாவின் வேதத்தில் போதை பொருள் கடத்தல்

அல்லா தன் வேதத்தை பாதுகாப்பதாக சொல்லும் இஸ்லாமியர்கள், போதை பொருள் கடத்தும் புத்கமாக குரானை மற்றிவருவதை அல்லா ஏன் தடுக்கவில்லை?http://ezhila.blogspot.com/2007/09/blog-post_02.html
குரானுக்குள் போதை மருந்துகள் வைத்து கடத்தல்

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு போதை மருந்துகளை கடத்த, அவைகளை குரானுக்குள் வைத்து கடத்தியிருக்கிறார்கள்.

ஹிராயின், ஹஷிஷ் ஆகியவற்றை ஏராளமான அளவில் குரான் புத்தகங்களை எடுத்து அவைகளை நடுவில் வெட்டி புதைத்து மூடி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ராவல் பிண்டி நகர கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒரு புத்தக பார்ஸலை பிரித்து ஆராய்ந்த போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு புனிதப்புத்தங்களை அவமதித்த பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு எதிராக உலக முஸ்லீம்கள் போராடுவார்கள் என்றெல்லாம் அப்பாவியாக எதிர்பார்க்காதீர்கள்.

Holy books used for smuggling narcotics
By Shakeel Anjum

RAWALPINDI: The Customs Collectorate, Rawalpindi, has recovered huge quantity of heroin and hashish, concealed in the Holy Quran and religious books being parcelled to United Kingdom (UK) through International Mail office, Customs sources told The News.

Collector Customs Muhammad Ashraf Khan and Additional Collector Dr Arsalaan, received information that a drug mafia active in Pakistan, was sending huge consignments through mail for a long time, the sources said adding, the authorities constituted a raiding party comprising deputy collector, Naveed Iqbal, superintendent Wasim Ahmad and inspectors Afaan Younas, Muhammad Ismail and Imtiaz Bhatti to conduct raids at International Mail offices in Rawalpindi and Islamabad.

The team during checking of parcels booked for England, found four parcels suspicious, the sources said and added the Holy Quran and religious books (Tafheem-ul-Quran) as well as garments were packed in the parcels.

During the search, the raiding party recovered 5.5 kilograms of hashish and 710 grams of heroin concealed in the cavities of the Holy Quran and Tafheem-ul-Quran, the sources said.

ஈராக்கில் அல்லாவின் மசூதி முஸ்லீம்களால் இடிக்கப்பட்டது

ஈராக்கில் அல்லாவின் மசூதி முஸ்லீம்களால் இடிக்கப்பட்டது


http://ezhila.blogspot.com/2007/09/blog-post_2037.html

ஈராக்: ஷியா மசூதி தூள் தூளாக சிதறடிக்கப்பட்டது

பாகுபா நகரில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி தூள் தூளாக சிதறடிக்கப்பட்டுள்ளது.

இதே மசூதி 2005இலும் 2006இலும் சுன்னி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. தற்போது உள்ளே வெடிமருந்துகளை வைத்து தூள் தூளாக சித்றடிக்கப்பட்டுள்ளது.

Shiite shrine is reported blown up in Baquba
Sep 1, 2007, 10:48 GMT


Baghdad - The Shiite shrine of Ahmed Ibn Imam al-Kadhim in the northern Iraqi city of Baquba was blown up Saturday by unidentified gunmen, witnesses told a local news source.

The independent Voices of Iraq news agency quoted a resident, Mohammed al-Tamimi, as saying at least 20 gunmen detonated a large mass of explosive charges which 'completely destroyed' the shrine.

'This is the third attack on the shrine; the first attack was on April 16, 2005 and the second on February 6, 2006,' al-Tamimi said.

Ahmed Ibn Imam al-Kadhim, to whom the shrine was built, was the son of Imam Moussa al-Kadhim. The site, located in the capital of Diyala province, is a pilgrimage destination.

இஸ்லமின் அறிவியல் பற்றி ஒரு சிறிய வீடியோ

இஸ்லாமிய நண்பர்கள் குரான் அறிவியல் உண்மைகளை மெய்பிக்கும் புத்தகம் என்று ஊர் ஊராக சொல்லிவருகிறார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்பதை பற்றிய ஒரு ஒளி படத்தை நாம் காண்லாம்


http://ezhila.blogspot.com/2007/09/blog-post_6229.html






இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்