இஸ்லாமுக்கு பிதா இல்லை
ISLAM HAS NO FATHER
சைலஸ் அறிமுகம்:
இஸ்லாமுக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக வல்லமையைப் பற்றி ஆய்வு செய்தபோது இந்த வல்லமையானது எப்படி முஹம்மதுவின் இறையியலை வசீகரித்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன், கிறிஸ்தவத்தின் இறைவனுக்கும் இஸ்லாமின் இறைவனுக்கும் இடையே இருக்கும் மிகவும் அறியப்பட்ட ஒரு வித்தியாசம் என் மனதில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வித்தியாசம் என்னவென்றால் இஸ்லாமின் இறைவன் ஒருபோதும் "பிதாவாக" அறியப்படவில்லை, ஆனால் கிறிஸ்தவத்திலும் யூத மார்க்கத்திலும் தேவன் "பிதாவாக" அறியப்படுகிறார்.
நான் இதை வெறும் ஒரு கொள்கை அடிப்படையிலான பார்வையில் சிந்திக்கவில்லை, ("இறைவன் நம் பிதாவாக இருக்கிறார்" என்று கருதும் கோட்பாடு இஸ்லாமில் இல்லை என்பதை நாம் எல்லாரும் அறிவோம்), மாறாக ஒரு ஆன்மீக மற்றும் உறவு அடிப்படையிலான பார்வையில் சிந்தித்தேன். நான் முஹம்மதுவின் உறவுமுறையை குறித்து சிலவற்றை உணர்ந்தேன்: இஸ்லாமின் ஆன்மீக வல்லமையானது, "ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுக்கிற நெருங்கிய அன்பு" போன்ற ஒரு உறவுமுறையை முஹம்மதுவுக்கு வழங்கவில்லை . அதனால் தான் முஹம்மது அந்த ஆன்மீக வல்லமையை "பிதா" என்று அழைக்கவில்லை, ஏனென்றால் அவர் அதைப்பற்றி அறிந்திருக்கவே இல்லை (பிதாவின் அன்பு எப்படி இருக்கும் என்று இறைவன் மூலமாக அவர் ருசி பார்க்கவே இல்லை). முஹம்மதுவுக்கும் அவருடைய இறைவனாகிய அல்லாஹ்விற்கும் இடையே இருந்த உறவுமுறையானது "அனபுக்கு" பதிலாக "கீழ்படிதலோடு" கூடிய ஒரு அடிமைக்கும் எஜமானுக்கும் இடையே இருக்கும் உறவு போன்றதாகும். இது தான் இவ்விருவருக்கும் இடையே இருந்த பிரதான உறவுமுறையாகும். முஹம்மது இந்த உறவை எப்படி விவரித்தார் என்பது கீழே கொடுக்கப்படுகிறது.
உமர் கூறியதாவது:
"நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்" [1] (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3445 )
(குறிப்பு 1: அல்லாஹ்வை நேசிப்பதைக் குறித்தும், அல்லாஹ்வின் அன்பைக் குறித்தும் முஹம்மது பேசினார். ஆனால் அல்லாஹ்வின் அன்பானது முஸ்லீம்களின் செயல்கள் மற்றும் கீழ்படிதல் மீதே கூறப்பட்டது (சார்ந்து இருந்தது), அவர்களுடைய உறவின் மீது அல்ல. இதைப்பற்றிய அதிக விளக்கம் இக்கட்டுரையில் பிறகு வரும்.)
(குறிப்பு 2: "அல்லாஹ்" என்றால் அரபியில் இறைவன் என்று பொருள் மற்றும் அரபி கிறிஸ்தவர்கள் "அல்லாஹ்" என்ற வார்த்தையை இறைவனுக்காக (தேவனுக்காக) பயன்படுத்துகிறார்கள் என்றும் நான் அறிவேன். இருப்பினும், நான் "அல்லாஹ்" என்ற பதத்தை இங்கே பயன்படுத்தும் போது அதை இஸ்லாமின் "இறைவனை" குறிப்பதற்கே பயன்படுத்துகிறேன்)
அல்லாஹ்விற்கு முஹம்மது நிறைய பெயர்களை வழங்குகிறார், இந்த பெயர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குணங்களை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக:
அல் முன்தக்கிம் (Al Muntaqim) - பழிவாங்குபவன்,
அர் - ராவுஃப் (Ar-Raoof) - கருணையுள்ளவன் மற்றும்
அர் - ரசாக் (Ar-Razzaq) - பரிபாலிப்பவன்.
நீங்கள் அல்லாஹ்வின் 99 பெயர்களையும் (சில முஸ்லீம்கள் அல்லாஹ்விற்கு இன்னும் அதிக பெயர்கள் உண்டு என்கின்றனர்) ஆராய்ந்து பார்த்தால், ஒரு நல்ல தகப்பனுக்கு இருக்க வேண்டி நிறைய குணங்கள் அதில் இருப்பதைக் காணலாம்[2]. ஆனால் ஒரு பெயர் அதாவது தேவனுடைய மிக அற்புதமான பெயர்களில் ஒன்றான "தந்தை" அல்லது "பிதா" என்ற பெயர் மட்டும் அல்லாஹ்வின் பெயர் பட்டியலில் காணப்படுவதில்லை.
ஏன் இந்தப் பெயர் மட்டும் தொலைந்து போய்விட்டது? ஏன் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தில் உள்ளது போல, இஸ்லாமின் இறைவன் ஒரு அன்பான தந்தையாக இல்லை? ஏன் முஹம்மதுவின் ஆன்மீகத்தில் இப்படி ஒரு இடைவெளி துவாரம் உள்ளது? இன்னும் முஹம்மது யூத மற்றும் கிறிஸ்தவத்தின் ஸ்திரத்தன்மை, அவைகளின் போதனைகள் மற்றும் புத்தகங்களில் நம்பிக்கை கொண்டிருந்தார்[3]. ஆனால் அவருடைய குர்ஆன் மற்றும் இஸ்லாமிய இறையியல், இறைவனை ஒரு அன்பான தந்தையாக கொண்டிருக்கவில்லை. முஹம்மதுவிற்குள் கிரியை செய்த அந்த ஆன்மீக வல்லமையானது பைபிளின் தேவன் தன் மக்களுக்கு கொடுத்த ஒரு மென்மையான அன்பை போன்றதொரு அன்பை ஏன் கொடுக்கவில்லை? ஏனென்றால் "இறைவன்" என்று முஹம்மது நம்பிய அந்த ஆன்மீக வல்லமை (அல்லாஹ்) முஹம்மதுவிற்கு ஒரு அன்பான தந்தையாக இருக்க முடியவில்லை. இஸ்லாமின் இறைவன் உண்மையில் ஒரு எஜமான், அவர் ஒரு கருணையான மன்னிக்கும் எஜமானாக இருக்க முடியும், ஆனால் அவரால் முடிவில்லாத இரக்கத்தையும் அன்பையும் கொண்ட ஒரு தேவன் நன்மைகள் செய்வது போன்று செய்ய முடியாது. இதனால் தான் குரானில் அல்லாஹ் ஒரு அன்பான இறைவனாக வர்ணிக்காத குறைவு இருக்கிறது. ஏனென்றால் இஸ்லாமின் இறைவனுக்கு தந்தையாக இருக்கும் தன்மையே (குணமே) இல்லையே.
கீழே உள்ளது ஒரு முஸ்லீம் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட இறைவனைப் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டதின் விளக்கமாகும்.
ஆண் அல்லாஹ் அல்லது பெண் அல்லாஹ் என்பது போன்றெல்லாம் கிடையாது. இறைவனுக்கு 'தந்தை' என்ற வார்த்தையை நீங்கள் சேர்க்கும் போது இறைவன் "தந்தையாகிய இறைவன்" என்றாகிவிடும். தந்தையாகிய இறைவன் என்றால் பொறுப்பேற்றுக்கொள்ளும் ஒருவர் என்று அர்த்தம். "அப்பாவாகிய அல்லாஹ்" அல்லது "தந்தையாகிய அல்லாஹ்" என்றெல்லாம் வார்த்தைகள் (இஸ்லாமில்) கிடையாது. [4]
There is nothing like male Allah or female Allah. Allah has no gender. If you add the word 'father' to 'God' it becomes 'God-father'. God-father means someone who is a guardian. There is no word like 'Allah-Abba' or 'Allah-father'. [4]
இதைப் பற்றி சிந்தியுங்கள், ஒரு நல்ல தந்தை தான் உண்டாக்கின தன் பிள்ளைகளை நேசிக்கிறார். அவர் தன் பிள்ளைகளுக்குள் புதைந்து இருக்கிறார் (ஒன்றாக கலந்து இருக்கிறார்). அவர் அவர்களை விசாரிப்பார், போஷிப்பார், வழிநடத்துவார், நெருக்கமாக அவர்களிடத்தில் அன்புசெலுத்துவார். அவர் தன்னுடைய பிள்ளைகளை மகிழ்விக்கிறார், அவர்கள் சிறப்பு பெறும் போது அவர் பெருமிதம் கொள்ளுகிறார், வழிமாறும் போது திருத்துகிறார். தன்னுடைய பிள்ளைகளுக்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பானது, ஒரு பயிற்சியாளருக்கு தன்னுடைய விளையாட்டு வீரரிடமும், ஒரு தலைவனுக்கு தன்னுடைய பணியாட்களிடமும், ஒரு எஜமானுக்கு தன்னுடைய அடிமைகளிடமும் இருக்கும் அர்பணிப்பைக் காட்டிலும் அதிகமானது. ஒரு பிள்ளை தன்னுடைய தகப்பனுடைய உள்ளத்தில் தனக்கென்று பிடித்திருக்கிற ஒரு பொக்கிஷமான இடத்தை ஒரு அடிமையால் பெற முடியாது. இப்படிப்பட் அன்பின் உறவுமுறை தான் இஸ்லாமில் இல்லாமல் இருக்கிறது .
ஆனால், இந்த அன்பானது யூத மற்றும் கிறிஸ்தவத்தின் தேவனால் வெளிப்படுத்தப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். கீழ்படிதலை மட்டுமே கேட்கிற ஒரு எஜமானைக் காட்டிலும் இறைவன் தன்னுடைய ஜனங்களுக்கு அதிகமானவராக இருக்கிறார். அவர் தன்னுடைய ஜனங்களுக்கு ஒரு மேய்ப்பராயிருக்கிறார். அவர் அவர்களுடைய பலவீனங்களையும் பாவங்களையும் கடந்து அவர்களுக்கு தன்னுடைய அன்பைக் கொடுத்தார். ஒரு தகப்பனுடைய அன்பு யூத கிறிஸ்தவத்தில் அளிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் ஆனால் இந்த அன்பு இஸ்லாமில் கிடையாது.
அன்பு தான் உலகத்தை நடத்துகிறது என்று ஜனங்கள் சொல்லுவார்கள், ஏன் இந்த அன்பு இஸ்லாமில் காணப்படுவதில்லை?
"இறைவன் ஒரு தகப்பன்" என்று காட்டும் வசனங்கள்:
யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கம் இறைவனை தங்கள் தந்தையாகக் கூறுவதற்கான அடிப்படை வசனங்களை காண்போம். வேதத்தின் தேவன் உண்மையில் தன்னுடைய ஜனங்களுக்கு தகப்பனாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலிருந்தும் புதிய ஏற்பாட்டிலிருந்தும் தேவன் தன்னை தன் ஜனங்களுக்கு பிதாவாக வெளிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.[5]
1) உபாகமம் 32:6
விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
2) சங்கீதம் 2:7
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.
3) ஏசாயா 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
4) மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
5) யோவான் 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
6) ரோமர் 8:15
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ஆனால் குர்ஆன், "இறைவன் ஒரு தகப்பனாக" இருக்கிறார் என்பதை மறுக்கிறது.
குர்ஆன் 5:18
யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.[6]
மேலே உள்ள குர்ஆன் வசனத்தில் இறைவன் அவர்களை சீர்படுத்தியிருப்பதால் முஹம்மது யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் இறைவனுடைய பிள்ளைகள் என்பதை ஏற்க மறுக்கிறார். ஆனால் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒரு அன்பான தகப்பன் தன் பிள்ளைகளை திருத்துகிறார் என்று கற்றுக் கொடுக்கிறது.
எபிரேயர் 12:7-11
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
எரேமியா 31:18, 19
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர். நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
முஹம்மது ஒரு தந்தையில்லாமல் வளர்ந்தவர் ஆவார். அவர் பிறப்பதற்கு முன்னே அவருடைய தகப்பனார் மரித்துப் போனார். முஹம்மது ஆறு வயதாயிருந்த போது அவருடைய தாயாரும் மரித்துப் போனார். முஹம்மது முதலில் தன்னுடைய தாத்தாவிடம் வளர்ந்தார் பிறகு தன்னுடைய சித்தப்பாவிடம் வளர்ந்தார். ஒருவேளை அவரை வளர்த்த அவருடைய சித்தப்பா அவரை திருத்தாமல் (தண்டிக்காமல்) இருந்திருக்கலாம். இது தான் முஹம்மது வளர்ந்த சூழ்நிலையாக இருந்திருக்குமெனில் அவர் மிக முக்கியமான ஒரு தந்தை – மகன் உறவின் நிலையை இழந்திருக்கிறார். தாங்கள் நேசிக்கிற பிள்ளைகளை தகப்பன்மார்கள் சீர்திருத்துகிறவர்களாக இருக்கிறார்கள். தேவன் தன்னுடைய பிள்ளைகளை நேசிக்கிறார் உண்மையில் அவர்களுடைய நன்மைக்காக அவர்களை நெறிப்படுத்துகிறார்.
ஆவியுடன் முஹம்மதுவின் நெருக்கமான உறவு:
முஹம்மது ஒரு குகையில் ஒரு ஆவியை(ஆன்மீக ஆற்றலை) சந்தித்தார். ஆனால் இது ஒரு நெருங்கிய குடும்ப உறவு போன்றதல்ல. அது நெருக்கமான நட்பும் அல்ல. முஹம்மதுவை அவருடைய வாழ்நாள் முழுவதும் வழிநடத்தக் கூடிய, கற்றுக் கொடுக்ககூடிய, போதிக்க கூடிய அந்த ஆன்மீக ஆற்றலை, அவர் முதன் முதலில் சந்தித்ததை குறித்துப் பார்ப்போம். முஹம்மது சந்தித்த இந்த முதல் சந்திப்பு, அவரிடம் எப்படிப்பட்ட மனவெழுச்சியை உண்டாக்கியது? இந்த சந்திப்பு முஹம்மதுவை எந்த நிலையில் விட்டுச் சென்றது? இதைப் பற்றிய விவரங்களை இப்போது காண்போம்.
ஒரு நாள் முஹம்மது மீது ஆவி வந்த போது அவர் தொழுது கொண்டும் தியானம் செய்து கொண்டும் இருந்தார். அது முஹம்மதுவை பற்றிபிடித்து கசக்கி நெறித்தது. முஹம்மது பீதியடைந்தவராக என்ன செய்வதென்று அறியாமல் பயந்துபோனார். அந்த ஆவி முஹம்மதுவை "ஓதுவதற்கு"அல்லது படிப்பதற்கு கட்டளையிட்டது ஆனால் முஹம்மது எதை ஓதவேண்டும் என்று தனக்கு தெரியாது என்று பதில் அளித்தார். இப்படி மூன்று முறை நடந்தது. இறுதியாக தன்னுடைய உயிர் மீது உண்டான பயத்தினால், "நான் எதை ஓத வேண்டும்?" என்று முஹம்மது கேட்டார். அப்பொழுது அந்த ஆவி குர்ஆனின் ஆரம்ப வசனங்களை அவரிடம் கூறியது, குர்ஆன் 96: 1-5. [7]
இங்கே சில ஆரம்ப கால இஸ்லாமிய ஆதாரங்களிலிருந்து, உண்மையான பக்திநிறைந்த முஸ்லீம் அறிஞர்களால் எழுதப்பட்ட சில விவரங்கள் தரப்படுகிறது. இவைகளை நீங்கள் நேரமெடுத்து நிதானமாக படித்துப் பாருங்கள். இவைகளை இரண்டாவது முறையும் நீங்கள் வாசிக்க வேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நீங்கள் அதைப் படிக்கும் போது வரிகளுக்கும் இடையேயும் படியுங்கள். இதன் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் குணத்தை பற்றி என்ன அறிந்து கொள்ளுகிறீர்கள்?
...(அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்று அவருக்கு பதிலளித்தார்கள். ... அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு
'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்' என்றார்கள். …
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2 (புகாரி - Sahih Bukhari - பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982)
" ஓ கதீஜாவே நான் வெளிச்சத்தை காண்கிறேன், சத்தங்களை கேட்கிறேன், நான் பைத்தியமாகிவிட்டேனோ என்று பயமாயிருக்கிறது". [8]
"அதனால் நான் அதை படித்தேன், பிறகு அவர் என்னைவிட்டு கடந்து போனார். நான் தூக்கத்திலிருந்து எழும்பினேன். அந்த வார்த்தைகள் என் இருதயத்தில் எழுதப்பட்டது போல் இருந்தது. (தபரி சரித்திரம்: இறைவன் படைத்தவைகளில் நான் அதிகமாக வெறுப்பது, கவிதைகளை எழுதுவும் கவிஞனும், மற்றும் பேய் பிடித்தவனுமாகும். இவர்களை நான் பார்க்கவும் மாட்டேன். நானும் ஒரு கவிஞனாக இருப்பதினாலும், பேய் பிடித்தவனாக இருப்பதினாலும் எனக்கு அய்யோ. என்னைக் கண்டு குறைஷிகள் இப்படி சொல்லக்கூடாதே! நான் மலை சிகரங்களில் ஏறி அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொள்வேன், இதன் மூலமாவது எனக்கு மன நிம்மதி கிடைக்கும். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம், பாதி சிகரத்தை அடைந்தவுடன் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகும், அது 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம், நான் ஜிப்ராயீல் வானவர்' என்று சொல்லும். [9]
(அல்லாவின் பிரதிநிதியாக வந்த) ஆவியுடனான முஹம்மதுவின் முதல் நெருக்கமான அனுபவத்தினால் முஹம்மது வருத்தம் நிறைந்தவராக தற்கொலைக்கு முயலுகிறவராகவும் இருந்தார். அவர் தன்னை பிசாசு பிடித்தவனென்றும், பைத்தியம் பிடித்தவனென்றும் எண்ணினார். உடனடியாக அவர் தற்கொலைக்கு முயற்சிசெய்தார். ஒரு முறை அந்த ஆவியினால் தடுத்த நிறுத்தப்பட்ட பிறகு முஹம்மது தொடர்ந்து அதே வருத்தத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். அந்த ஆவியினால் மட்டுமே தடுக்கப்படுவதற்கென்று தொடர்ந்து தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். அப்படியே அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டது, அவர் மனநோயினால் வேதனை அடந்தார்.. மூன்று வருடங்களுக்கு பிறகு முஹம்மது அந்த ஆவியின் வார்த்தைகளை விசுவாசித்தார் தன்னை ஒரு இறைத்தூதராக எண்ணலானார். (முஹம்மதுவின் தற்கொலை பற்றிய விவரமான ஆய்வுக்கட்டுரை இந்த தொடுப்பில் படிக்கவும்.)
இந்த அனுபவங்கள் முஹம்மதுவின் இறைவனுடைய தன்மையைப் பற்றி நமக்கு என்ன சொல்லுகிறது? மரியாள் அடைந்த ஆறுதலைப் போன்ற ஆறுதல் எங்கே (லூக்கா 1:30-38)? தேவனோடு உரையாடிய பிறகு மோசே அடைந்த தைரியமும் செய்த அற்புதத்தை போன்ற செயல்களும் எங்கே (யாத்திராகமம் 3 – 4 அதிகாரங்கள்)? இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது இறைவன் அவரிடம் காண்பித்த ஐக்கியம் எங்கே? (மத்தேயு 3:16,17) இப்படிப்பட்டவைகளெல்லாம் முஹம்மதுவின் அனுபத்தில் காணப்படுவதேயில்லை.
நேசிக்கிற ஒரு இறைவன் தான் தெரிந்து கொண்ட ஒரு மனிதனை விநோதமான எண்ணத்தை கொடுத்து குழப்பமடைவதற்கும், சந்தேகப்படுவதற்கும், வருத்தப்படுவதற்கும் தற்கொலை எண்ணத்தில் மிதக்கும் குளத்தில் நீந்தவும் செய்வானா? பைபிளின் இறைவன், பிதாவானவர் தான் தெரிந்து கொண்டவர்களை இவ்விதமாக நடந்துக்கொள்ள விடுவதில்லை, மாறாக அவர் அவர்களை தைரியப்படுத்தி அவர்களுக்கு சமாதானத்தை கொடுத்தார்.
அல்லாஹ்வின் அன்பு பைபிளின் தேவனுடைய அன்புடன் ஒப்பிடப்படுகிறது.
நான் முன்பு சொன்னது போல இஸ்லாமின் இறைவன் நேசிக்கிறார் ஆனால் அவருடைய அன்பெல்லாம் கீழ்படிபவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் தான். இஸ்லாமுடைய இறைவன் மற்றவர்களை அடக்கி ஆள்வதையே கேட்கிறார். இஸ்லாம் என்றால் "அடிபணிதல்" அதாவது அதன் இறைவனுக்கும் முஹம்மதுவின் சட்டத்திற்கும் கீழ்படிதல் என்று பொருள். இந்த அடிபணிதலுக்கு அப்பாற்பட்ட இளகிய அன்பு என்பது இஸ்லாமில் காணப்படாத ஒன்று.
கீழே உள்ளவை நான் அல்லாஹ்வின் அன்பை பற்றி அறிந்து கொண்ட வசனங்களில் சில. இந்த கட்டுரையின் இறுதியில் நான் இன்னும் சில வசனங்களை அட்டவணைப்படுத்தியுள்ளேன்.
குர்ஆன் 2:222
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
குர்ஆன் 3:31
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
குர்ஆன் 3:134
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
குர்ஆன் 3:146
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
குர்ஆன் 28:77
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்).
குர்ஆன் 61:4
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
இந்த எல்லா வசனங்களில் அல்லாஹ்வின் அன்பு முஸ்லீம்களின் செயல்களின் மீது கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அன்பை பற்றியும் இறையியலைப் பற்றியும் முஹம்மதுவின் விவரணம் பைபிளில் உள்ள இறைவனின் அன்பை பற்றிய விளக்கத்தோடு முரண்படுகிறது. கீழே கொடுக்கப்படுகிற வேதாகம வசனங்களோடு மேலே உள்ள குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டு அதின் வித்தியாசத்தை காணுங்கள்.
(குறிப்பு: நேரமெடுத்து இந்தப் பகுதிகளை வாசியுங்கள் அப்படிச் செய்யும் போது அல்லாஹ்வின் அன்பிற்கும் பைபிளின் தேவனுடைய அன்பிற்கும் உள்ள திடமான வித்தியாசத்தை நீங்கள் ருசிபார்க்கமுடியும். இரண்டு மார்க்கங்களின் புத்தகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களின் இறைவனுடைய குணத்தில் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடியும். பிறகு நீங்கள் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் தெளிவாக இணையற்ற விதத்தில் இஸ்லாமின் இறைவன் கிறிஸ்தவத்தின் இறைவன் அல்ல என்பதை காண முடியும். இஸ்லாமின் இறைவன் ஒரு உண்மையான அன்பு செலுத்துவதற்கு தகுதியானவர் அல்ல.)
ஓசியா 2:13-16
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி, அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். ("In that day," declares the LORD, "you will call me 'my husband'; you will no longer call me 'my master.')
ஓசியா 3:1
பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
ஏசாயா 54:5-8
உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
எரேமியா 31:3
பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
எரேமியா 31:9
அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
எரேமியா 31:31-34
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
யோவான் 3:16-21
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
ரோமர் 5:8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
1 யோவான் 4:9-12
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:6, 7
அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
இதை வாசிக்கும் வாசகராகிய நீங்கள் அல்லாஹ்வின் அன்புக்கும் தேவனின் அன்பின் இடையேயுள்ள தரத்தை கவனித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களால் அதை தவற விட முடியாது. முஹம்மதுவின் இறைவன் சிறந்த அன்பிற்கு தகுதியானவர் அல்ல. அல்லாஹ்வின் அன்பு மோலோட்டமானது, குறைபாடுள்ளது. முஹம்மது அல்லாஹ்வின் கோபத்திற்கு பயந்து, தான் மரித்த பிறகு கல்லறையில் துன்பப்படுத்தப்படுவேன் என்று அவர் நம்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. முஹம்மது சந்தித்த அந்த ஆன்மீக சக்தியானது அவருக்கு உண்மையான தேவனுடைய அன்பை கொடுக்க போதுமானதாக இல்லை. உண்மையான இறைவனின் அன்பானது தன்னுடைய நம்பிக்ககையாளர்களுக்கு சமாதானத்தை கொடுக்கும். ஆரம்ப கால முஸ்லிம்கள் சீக்கிரத்தில் தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் கொல்லும் நிலைக்கு மாறிவிட்டார்கள் என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனென்றால் அவர்களை ஆளுகை செய்த அந்த ஆவி அவர்களை அன்பின் வாழ்க்கைக்கு நேராக வழிநடத்த வில்லை. இறைவனின் உண்மையான அன்பானது ஒருவரையொருவர் அழிப்பதற்கு அல்ல, மாறாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் கரங்களை நீட்டுவதற்கே கற்றுக் கொடுக்கும். நிறைய முஸ்லீம்கள் முஹம்மது மரித்த பிறகு இஸ்லாமை விட்டு வெளியேறியதில் ஆச்சரியமில்லை. அவர்கள் இஸ்லாமை ருசித்துப் பார்த்துவிட்டு துப்பிவிட்டார்கள்.
இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் மற்ற முஸ்லீம்களைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்:
"அவர்களுடைய மார்க்கம், சாலைகளில் செல்பவர்களை கொள்ளையடிப்பத்திலிருந்தும், சொத்துக்களை அபகரித்து ரத்தம் சிந்துவதிலிருந்தும் அவர்களை தடுத்து நிறுத்துவதில்லை" . [10]
Their religion does not stop them from shedding blood, terrifying the roads, and seizing properties.
(ஆமாம், ஆரம்ப கால இஸ்லாமியர்களில் அனேகர் இன்றைய முஸ்லீம்களைப் போலவே தீவிரவாதிகளாக இருந்தனர்) இஸ்லாமில் ஒரு உண்மையான இறைவனுடைய அன்பு இல்லாததினால் அதை பின்பற்றுபவர்கள் குழந்தைகளையும் வெடி வைத்துக் கொன்று தாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை செய்கிறவர்கள் என்று எண்ணவைக்கும்.
முடிவுரை:
இஸ்லாமுக்கு பிதா இல்லை, அதற்கு எஜமான் மட்டும் உண்டு. நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன், இஸ்லாமின் இறைவன் கிறிஸ்தவர்கள் ஆராதிக்கிற அதே இறைவன் அல்ல, இதனை இக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளேன். அல்லாஹ் ஒரு குறைபாடுள்ள ஆன்மா ஆவார். இவர் பைபிளின் தேவனின் தரத்திற்கு குறைந்தவர். இஸ்லாமின் இறைவன் உண்மையான "ஒரே இறைவன்" அல்ல. அவர் ஒரு பிதா அல்ல, அதற்கு பதிலாக மாறாக மக்களை அடக்கி ஆளும் ஒரு ஆவி ஆவார்.
உண்மை என்னவென்றால், அனைவரையும் படைத்தவன், தான் படைத்தவைகள் மீது காட்டும் உண்மையான அன்பு, இஸ்லாமிய இறைவனிடம் இல்லை, ஆகையால், "அல்லாஹ் உலகை படைத்தவன்" அல்ல. இதற்கு மாறாக, அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு எஜமான் தான் அல்லாஹ், மற்றும் தன் சொல்லை கேட்கும் நபர்களை மட்டும் நேசிக்கும் இறைவன் தான் அல்லாஹ் ஆவார். இப்படிப்பட்ட குணநலனுள்ள ஒரு ஆவி தான் முஹம்மதுவை பயப்பட வைத்தது, முஹம்மதுவின் கீழ்படிதலின் அளவை பொருத்து அவருக்கு தன் குறைபாடுள்ள அன்பை காட்டியது. அனேக நேரங்களில் முஹம்மது மற்றவர்களை கொலை செய்ய இந்த குறைபாடுள்ள அன்பு காரணமாக இருந்தது.
அல்லாஹ்வின் அன்பு பற்றிய இதர குர்ஆன் வசனங்கள்:
குர்ஆன் 3:76, குர்ஆன் 3:159 மற்றும் குர்ஆன் 49:9.
நூற்பட்டியல் (REFERENCES):
1) Bukhari, Muhammad, "Sahih Bukhari", Kitab Bhavan, New Delhi, India, 1987, translated by M. Khan, Volume 4, Book 55, Number 654.
2) http://www.dawateislami.net/general/devotions/99names/
3) "Muhammad and the Bible", http://www.answering-islam.org/Silas/bible.htm
4) http://www.islam101.com/tauheed/conceptofGod.htm
5) The Bible, New International Version, pub. by Zondervan, Grand Rapids, Michigan
6) The Noble Quran, translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali and Dr. Muhammad Muhsin Khan, published by Maktaba Dar-us-Salam, PO Box 21441, Riyadh 11475, Saudi Arabia, 1994
7) The spiritual power that communicated with Muhammad did not know genetics very well. http://www.answering-islam.org/Quran/Science/alaqa.html
8) Ibn Sa'd, (d. 852 A.D.), "Kitab al-Tabaqat al-Kabir", (Book of the Major Classes), page 225, translated by S. Moinul Haq, Pakistan Historical Society.
9) Ibn Ishaq, (d. 782), "Sirat Rasulallah", compiled by A. Guillaume as "The Life of Muhammad", page 106, Oxford, London, 1955
10) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), volume 17, page 187, State University of New York Press, 1993
--
4/20/2011 10:24:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது