Dr.ஜாகிர் நாயக் இவரைத் தெரியாதவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் யாரும் இருக்க முடியாது.அது போலவே மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் இவரை நன்கு அறிந்து இருப்பார்கள்.அவ்வளவு அருமையான விவாத திறமை உடையவர்.இஸ்லாமை காப்பாற்ற எந்த ஒரு பொய்யையும் துணிந்து சொல்லக்கூடியவர்.எதிர் அணியில் இவரோடு விவாதம் செய்யும் நபர்களின் பலவீனங்களை நொடிப்பொழுதில் பயன்படுத்தி அவர்களை வீழ்த்தி மகிழ்ச்சி அடைபவர்.அதற்காக எந்த ஒரு தவறான தகவலையும் தரக்கூடியவர்.ஏன் குரான்,ஹாதீஸ் வசனங்களை கூட இவர் விரும்பியபடி வளைத்து விஞ்ஞான பூர்வமாக ஆக்கி அர்த்தம் சொல்லக்கூடியவர்.இவ்வளவு புகழுக்குரிய இவருடைய முகமூடிகள் அநேக தரம் கிழிக்கப்பட்டு வருகிறது.
முன்பே நண்பர் உமர் அவர்கள் இவருடைய பொய்யான அறிவிப்புகள் குறித்து கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்கள்.
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கட்டுரைகளுக்கு மறுப்பு அல்லது பதில்
இந்த பதிவில் நான் ஒரு ஆதாரப்பூர்வமான வீடியோ செய்தியின் மூலம் அவருடைய பொய் முகமூடியை கிழிக்க ஆசைப்படுகிறேன்.
டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் வில்லியம் கேம்பல் என்ற கிறிஸ்தவ அறிஞருடன் நடத்திய ஒரு விவாதத்தில் அஸ்டரானமி(Astaronomy) பற்றி ஒரு விஷயத்தை சொல்லியுள்ளார்.அதாவது பைபிள் உலகின் தோற்றம் குறித்து சொல்லும் பொழுது ஆறு நாட்களில் உலகத்தை கடவுள் உண்டாக்கினார் என்று சொல்லுகிறது.இதில் ஒவ்வொரு நாளும் உண்டடக்கப்படும் படைப்புகளை குறித்து ஜாகிர் நாயக் அவ்ரகள் விளக்கி விட்டு இவை அனைத்தும் விஞ்ஞானத்துக்கு முரண்படுவதாகவும்,ஆனால் குரானில் ஆறு நாள் என்று சொல்லப்படுவது ஆறு காலகட்டங்களை குறிக்கும்.அதனால் விஞ்ஞான ரீதியில் குரான் சரியாக உள்ளது என்ற பாணியில் ஒரு வாதத்தை வைத்தார்.சூழ்திருந்த மக்கள் அதை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
ஆனால் நான் சில நாளுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோவை பார்க்க நேர்ந்தது.அதில் ஒரு சகோதரன் இஸ்லாமியர்களால் குரானுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் ஹாதீஸ்களில் இருந்து பேசுகிறார்.அதில் குரானில் ஆறு நாளில் உலகம் எப்படி படைக்கப்பட்டது என்று சொல்லப்படுவதின் விளக்கத்தை முகமது நபி அவர்கள் வாயிலாக கேட்ட அவருடைய சஹாபா என்று சொல்லப்படும் அபு ஹுரைரா என்பவர் அதை சொல்லுவதாக இருக்கும் ஒரு வசனத்தை சுட்டிக்காட்டினார்.
அதை கேட்டவுடன் எனக்கு ஒரு பொரி தட்டியது.இந்த ஜாகிர் நாயர் என்னடா என்றால் இல்லாத கதை விருகிறார்.ஆனால் இவர்களுடைய முகமது நபி வேறு மாதிரி சொல்லுகிறார்.இதில் இஸ்லமையும்,குரரனையும் பற்றி நன்கு அறிந்தவர் ஜாகிர் நாயக்கா? அல்லது முகமதுவா? என்று சந்தேகமே வந்துவிட்டது.இதை உங்களுக்கும் காண்பிக்க வேண்டும் என்பதற்காக இங்கே அதை இணைத்து தருகிறேன்.
முதல் வீடியோ டாக்டர்:ஜாகிர் நாயக் வில்லியம் கேம்பல் என்பவருடன் நடத்திய விவாதத்தில் இருந்து எடுத்தது.இது இணையத்தில் கிடைக்கிறது.
இரண்டாவது பகுதி
http://www.islamkalvi.com/media/ansar1/0002.ram
மேலே உள்ள தொடுப்பில் 37:45.5 வது நிமிடத்தில் இருந்து தொடங்கும் வீடியோவின் ஒரு பகுதி.இரண்டையும் பார்க்கும் உலக தமிழ் மக்கள் இந்த இஸ்லாமிய அறிஞரின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.
வீடியோ இணைப்பு
http://tamilchristianssongs.magnify.net/item/J8XCFY9D09HCBJVD