ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்
முன்னுரை:
இது தான் இஸ்லாம் எழுதிக்கொண்டு வரும் "இயேசுவின் வரலாறு" தொடர்களுக்கு நாம் பதில் எழுதிக்கொண்டு வருகிறோம். இது வரை ஆறு தொடர்கள் வந்துள்ளது மற்றும் அவைகளுக்கு நான் மறுப்பு(பதில்) அளித்துள்ளேன். இந்த தொடர்களில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி "பைபிள் மாற்றப்பட்டுள்ளது" என்று தொடர்ந்து எழுதுவதால், இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதவேண்டாம், ஆதாரத்தோடு பதில் எழுதவும் என்று என் பதில்களில் குறிப்பிட்டுள்ளேன்.
எனவே அவர், இனி பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுவதாக தெரிவித்துள்ளார். எனவே, நானும் இனி குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரகளை எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது சம்மந்தப்பட்ட விவரங்களை இப்பக்கத்தில் காணலாம்.
இது வரை ஈஸா குர்-ஆன் கொடுத்துள்ள பதில்கள்:
1. | இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 | எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1) |
2. | இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 | எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 ) |
3. | இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 | எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 ) |
4. | இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 | எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 ) |
5. | இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 | எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 ) |
6. | இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 | எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New |
ஈஸா குர்-ஆன் அளித்த இதர கட்டுரகள், பதில்களை இங்கு காணலாம்: இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளும், எங்கள் மறுப்பும்
இனி ஜி.நிஜாமுத்தீன் எழுதிய கட்டுரையை பார்க்கலாம்.
ஜி.நிஜாமுத்தீன்
அடுத்து இந்த பின்னூடல் இடப்பட்டுள்ள ஈஸா குர்ஆன் வலைப்பூவின் சகோதரர் உமர் அவர்களுக்கு. நீங்கள் அந்தப் பின்னூடலை வெளியிட்டு உங்களுக்கு நியாயமென்று தெரிந்தவற்றை எழுதியுள்ளீர்கள். நன்றி. இது போன்ற பின்னூடல்கள் என் பணியைக் குறைத்துவிடப் போவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளாலும் பொய்யர்களாலும் நான் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு வந்துக் கொண்டிருந்தாலும் என்னால் ஆன இறைப் பணிகளை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். (சிறந்தப் பாதுகாவலனாக இறைவன் இருக்கிறான்) இறைவன் நாடும் வரை என் பணி தொடரும்.
ஈஸா குர்-ஆன்:
கையாலாகாதவர்கள் தான் மிரட்டுவார்கள். அடக்கி ஆள முயற்சிப்பார்கள். நான் மறுப்பு எழுதுவதினால், நான் உங்களையும், இஸ்லாமியர்களையும் ஒட்டுமொத்தமாக விரோதிப்பேன் என்று நினைத்தார்களோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனால், கிறிஸ்து எங்களுக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை. சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார் இயேசு என்று நாங்கள் பைபிளில் வாசிக்கிறோம். இப்படிப் பட்ட அமைதி ஆண்டவரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே, எங்கள் மறுப்பு "எழுத்துக்களுக்கு" மட்டுமே ஒழிய "மனிதர்களுக்கு" அல்ல.
ஜி.நிஜாமுத்தீன்
ஈஸாவின் வரலாற்று தொடருக்கு நீங்கள் எழுதியுள்ள மறுப்புக்கான பதில்களை நான் நிறுத்தியுள்ளேன். காரணம் பைபிளில் என்னக் குறையுள்ளது, என்ன மாற்றம் நடந்துள்ளது என்று நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் பல இடங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் வரலாற்று தொடர் இறுதியில் நாம் பைபிள் நிலவரங்களை எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இன்றைக்கு பைபிளைப் பற்றியே முதலில் எழுத வேண்டும் என்ற நிலையை நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் ஏற்படுத்தி விட்டதால் மற்ற மறுப்புகளை கொஞ்சம் ஒத்தி வைத்து முதலில் பைபிள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். பைபிளின் நிலவரம் என்னவென்று தீர்மானிக்கப்பட்டு விட்டால் மற்றவையை தீர்மானிப்பது சுலபமாகி விடும் என்பதால் உங்கள் தூண்டுதலுக்கு நன்றி.
ஈஸா குர்-ஆன்:
மன்னிக்கவேண்டும் நண்பரே, எங்களை அப்படி கேள்வி கேட்க வைத்ததே நீங்கள் தான். பல முறை பைபிளில் மாற்றம் செய்தார்கள், திருத்திவிட்டார்கள் என்று ஓயாமல் ஆதாரம் இல்லாமல் நீங்கள் எழுதியதால் தான் நாங்கள் அப்படி கேட்கவேண்டி வந்தது. இயேசுவின் வரலாறு எழுதும் போது, உங்களுக்கு எங்கே எல்லாம் பைபிளுக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாமல் போகிறதோ, அங்கேயெல்லாம், பைபிள் மாற்றப்பட்டது என்றுச் சொல்கிறீர்கள். சரி, உங்கள் விருப்பப்படி, எந்த தலைப்பிலும் எழுதுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை.
உங்களால் முடிந்தால், இயேசுவின் வரலாறு கட்டுரைகளில் எங்கு எங்கெல்லாம், நீங்கள் பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறீர்களோ, முதலாவது அதற்கு பதில் தாருங்கள்.
உதாரணத்திற்கு, நீங்கள் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? -6" தொடரில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளீர்கள்.
//இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//
இயேசுவின் குழந்தை அற்புதம் முதலில் பைபிளில் இருந்ததாகவும், பிறகு நீக்கப்பட்டதாகவும் எப்படி நீங்கள் நிருபிக்கமுடியும்? உங்களிடத்தில் (அல்லது அந்த ஒரு சாரார் என்பவர்களிடம்) குழந்தை அற்புதம் கதை இருந்த பைபிள் பிரதிகள் ஏதாவது கைவசம் உள்ளதா? அப்போது தானே இன்றுள்ள பைபிளோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்லமுடியும்?
எனவே, முதலாவது எங்கே எங்கெல்லாம் "இயேசுவின் வரலாறு" தொடர்களில் "பைபில் மாற்றிவிட்டார்கள், இந்த வசனம் எடுத்துவிட்டார்கள்" என்று நீங்கள் எழுதும் இடங்களைப் பற்றி பதில் சொல்லுங்கள். உங்களால் முடியவில்லையானால் விட்டுவிடுங்கள், மற்றும் பைபிள் பற்றிய உங்கள் புது கட்டுரைகளை எழுதுங்கள். அதற்கு பதில் என்னவென்று பார்க்கலாம்.
நானும் இனி, "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" பற்றி எழுத ஆரம்பிக்கிறேன். குர்-ஆன் சம்மந்தப்பட்ட அனைத்து வித கட்டுரைகளையும் எழுத ஊக்குவித்ததற்காக நன்றி.
ஜி.நிஜாமுத்தீன்
உங்கள் எழுத்தையும் எங்கள் எழுத்தையும் மக்கள் படிக்கின்றார்கள். சிந்தனைமிக்கவர்களுக்கு உண்மை எதுவென்று புரியும். அதனால் நீங்களும் எழுதுங்கள். நாங்களும் தொடர்கிறோம். இனி உங்கள் தளங்களில் என்னைப் பற்றிய பின்னூடல்கள் பதிக்கப்பட்டால் என்னிடமிருந்து பதில் வராது என்பதை மீண்டும் ஒரு முறைக் கூறிக் கொள்கிறேன். அன்புடன்
சகோதரன்
ஜி.நிஜாமுத்தீன்
19-9-2007
ஈஸா குர்-ஆன்:
"உண்மையான வார்த்தை" என் கருத்தும் இதே தான். படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். உங்களைப் பற்றி என் தளத்தில் வரும் பின்னுடல்களுக்கு(Comments) நான் பொறுப்பில்லை. அவைகள் உங்கள் நேர்மையை தாக்குவதாக இருந்தால், அதற்கு பதில் சொல்லி, உங்களின் நேர்மையை நிருபிப்பது உங்கள் கடமை. நீங்கள் பதில் அளிக்கவில்லையானால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.