இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் : பாகம் -1 (Islam and the Sins of the Prophets)
முன்னுரை: சமீபகாலமாக கிறிஸ்தவர்களை விட முஸ்லீம்கள் பைபிளை அதிகமாக படிக்கிறார்கள் என்றுச் சொல்லத்தோன்றுகிறது. முஸ்லீம்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, ஒரு தீர்க்கதரிசி என்பவர் இப்படிப்பட்ட தீய மற்றும் கீழ்தரமான செயல்களை செய்யமாட்டார். தீர்க்கதரிசிகள் பரிசுத்தமானவர்கள், எனவே தான் குர்ஆன் தீர்க்கதரிசிகளைப்பற்றிச் சொல்லும் போது, அவர்கள் இவ்வுலக தீய செயல்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றுச் சொல்கிறது என்று முஸ்லீம்கள் சொல்கின்றனர். பைபிளில் உள்ள இந்த நிகழ்ச்சிகள் தவறானவையாகும், அதனால், தான் பைபிள் வேதம் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம் என்று தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.
ஆனால், குர்ஆனும், இஸ்லாமிய பாரம்பரிய நூல்களாகிய ஹதீஸ்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றி தரம்குறைவாக சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லமாட்டார்கள். பைபிளில் சொல்லப்பட்ட அதே கதை குர்ஆனில் இருந்தாலும் அதைப்பற்றி மூச்சு விடமாட்டர்கள் முஸ்லீம்கள். தாவீது விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்வது தவறானது என்றுச் சொல்லி கட்டுரை எழுதினார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், இதே நிகழ்ச்சியைப் பற்றி குர்ஆனும், ஹதீஸ்களும், இஸ்லாமிய சரித்திர நுல்களும் சொல்கிறது என்பதை இவர்கள் மறைக்கிறார்கள்.
இஸ்லாமும் நபிகளின் பாவங்களும் பாகம் 1, பாகம் 2 என்று இரண்டு கட்டுரைகளில் இஸ்லாமியர்கள் சொல்வது பொய்யான தகவல் என்பதை நாம் பார்க்கப்போகிறோம். முதல் பாகமாகிய இந்த கட்டுரையில், ஆபிரகாம், லோத்து, யோசேப்பு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்பதையும், இரண்டாம் பாகத்தில் "தாவீது விபச்சாரம் செய்த நிகழ்ச்சிப் பற்றி" இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம், கர்த்தருக்கு சித்தமானால்.
Islam and the Sins of the Prophets
ஆசிரியர்: Sam Shamoun
தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை எதிர்மறையான நிலையில் பைபிள் காட்டுகின்றது என்றுச் சொல்லி, முஸ்லீம்கள் அடிக்கடி பைபிளை தாக்குவார்கள். நோவா அதிகமாக திராட்சை ரசத்தை குடித்த நிகழ்ச்சியும், லோத்து தன் மகள்களோடு சயனித்ததும், தாவீது விபச்சாரம் செய்ததும் இன்னுமுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையான இறைவனின் தீர்க்கதரிசிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது, என்று முஸ்லீம்கள் வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வெட்கப்படக்கூடிய செயல்களுக்கு தீர்க்கதரிசிகள் தூரமானவர்கள் என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பைபிள் திருத்தப்பட்டது என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள்.
இப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு ஏற்கனவே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கீழ் கண்ட கட்டுரைகளை பார்க்கவும்.
http://answering-islam.org/Gilchrist/texthistory.html#nine
http://answering-islam.org/Responses/alcohol.html
http://answering-islam.org/BibleCom/gen19-28.html
குர்ஆனும் இஸ்லாமிய பாரம்பரிய நூல்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் நூறு சதவிகிதம் பரிசுத்தவான்களாக காட்டாமல் சிறிது குறைவாகவே காட்டுகின்றது என்பதை இந்த கட்டுரையில் உங்களுக்கு காட்டவிரும்புகிறோம். இஸ்லாமிய ஆரம்ப கால நூல்கள் கூட தாவீது செய்த விபச்சார செயலோடு கூட சேர்த்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கின்றது என்பதை அறியும் போது இதை படிக்கின்ற உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
உதாரணத்திற்கு, குர்ஆனும், ஹதீஸ்களும் ஆபிரகாம் பொய் சொன்னார் என்று அங்கீகரிகின்றன.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358
'இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது" என்று கூறியதுமாகும். . (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்" என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா(அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்" என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
குர்ஆன் 12:23,24
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (குர்ஆன் 12:23)
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (குர்ஆன் 12:24)
And she, in whose house he was, asked of him an evil act. She bolted the doors and said: Come! He said: I seek refuge in Allah! Lo! he is my lord, who hath treated me honourably. Lo! wrong-doers never prosper. She verily desired him, and he would have desired her if it had not been that he saw the argument of his Lord. Thus it was, that We might ward off from him evil and lewdness. Lo! he was of Our chosen slaves. (S. 12:23-24 Pickthall)
ஆதியாகமம் 39:6-10
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
லோத்து தன்னிடம் வந்த விருந்தாளிகளை காப்பாற்றவேண்டி, தன் ஊரின் மக்களிடம் தன் மகள்களை ஒப்படைத்துவிடுகிறேன் என்றும், தன் விருந்தாளிகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார் என்று குர்ஆன், பைபிள் சொல்வது போலவே அப்படியே சொல்லியுள்ளது.
குர்ஆன் 11:77 - 79
நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார். (11:77)
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.( 11:78)
(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.(11:79)
And when Our messengers came unto Lot, he was distressed and knew not how to protect them. He said: This is a distressful day. And his people came unto him, running towards him - and before then they used to commit abominations - He said: O my people! Here are my daughters! They are purer for you. Beware of Allah, and degrade me not in (the person of) my guests. Is there not among you any upright man? They said: Well thou knowest that we have no right to thy daughters, and well thou knowest what we want. (S. 11:77-79 Pickthall )
குர்ஆன் 15:67-71
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். (15:67) (லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;" (15:68) "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார். (15:69) அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (15:70)
அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார். (15:71)
And the people of the city came, rejoicing at the news (of new arrivals). He said: Lo! they are my guests. Affront me not! And keep your duty to Allah, and shame me not! They said; Have we not forbidden you from (entertaining) anyone? He said: Here are my daughters, if ye must be doing (so). (S. 15:67-71 Pickthall)
உண்மையிலேயே லோத்து இப்படி சொன்னாரா? அவ்வூர் மக்களின் குண நலன்கள் என்ன என்று குர்ஆன் சொல்கிறது? ஒரு நபி இப்படி தன் இரண்டு மகள்களை, தீய ஊர் மக்கள் திருமணம் செய்துக்கொள்ள கொடுப்பேன் என்றுச் சொல்வது சரியானதா? திருமணம் என்ற பொருள் படும்படி அந்த நிகழ்ச்சி நடந்ததா? அவ்வூர் மக்களின் மனநிலை "அந்த சூழ்நிலையில்" என்னவாக இருந்தது என்று குர்ஆன் சொல்கிறது போன்றவற்றை நாம் சிந்திப்போம். லோத்து ஒரு நீதிமான் என்று தான் பைபிள் சொல்கிறது, ஆனால், குர்ஆன் அவரை ஒரு "தீர்க்கதரிசி" என்றுச் சொல்கிறது, இதைப்பற்றியும் சிந்திப்போம்.
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/shamoun/SinsOfProphets-1.html