தமிழ் இஸ்லாம் தளத்துக்கு கேள்வி.புத்தர் சொன்னது சரி என்று பத்வா விடுவீர்களா?
தமிழ் இஸ்லாம் என்ற இனையம் பிற மதங்கள் ஒப்பீடு என்ற பகுதியில் "முஹம்மது(ஸல்) அவர்கள் புத்தமத வேதங்களில் முன்னறிவிப்புகள்" என்ற கட்டுரையை வெளியிட்டு உள்ளது.இதில் புத்தர் கூறிய புத்த மைத்ரேயர் முகமதுவே என்று கதைவிட்டுள்ளார்கள்.அப்படி சொல்லும் போது புத்தர் சொன்ன ஒரு சில குறிப்பையாவதும் இவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா? என்று தெரியாது. உண்மையான அற்புதம். அருள்செய்யப்பட்டவர் பதிலளித்ததாவது:- ஒரு பாவி புனிதராவதும், உண்மையான ஞானத்தை அடைந்தவன் சத்திய பாதையை கண்டு சுயநல தீயவழிகளை கைவிடுவதும் இந்த உலகமே கதிடியன கிடப்பவர்களுக்கு அதிசயமான, மறைபொருளான, அற்புதமான விசயமாகத் தோன்றவில்லையா? இந்த தற்காலிக உலகின் சுகங்களை நிலையான புனிதமான பேரானந்திற்காக துறக்கும் பிக்சுக்களே அற்புதங்களை செய்கிறார்கள். அதுதான் உண்மையான அற்புதம் என அழைக்கப்பட முடியும்.ஜ278ஸ பிரச்சாரக் குழுக்களை அற்புதங்கள் செய்ய அனுமதியளிக்குமாறு ஒரு முறை ஒரு சிலர் புத்தரிடம் மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டனர். மற்றவர்களின் கண்களில் இது அவர்களுக்கு உயர்வை அளிக்கும் என காரணமும் கூறிக் கொண்டனர். அதற்கு புத்தர் பதிலளித்தாவது: - அற்புதங்கள் மூன்று வகையாக இருக்கின்றன. முதலாவது வகை அற்புதம் என்பது அசாதாரண ஆற்றல் வெளிப்படுகின்ற ஆற்றலின் அற்புதமாகும். தண்ணீரில் நடத்தல், பேய்களை ஓட்டுதல், இறந்தவர்களை எழுப்புதல் போன்றவைகள் இதில் அடங்கும். ஒரு விசுவாசி இதைக் காணும்போது அவரின் விசுவாசம் ஆழமாகும். ஆனால் ஒரு அவிசுவாசியை இது நம்ப வைக்காது. ஏனெனில் இதை மந்திர வேலை என்றே அவர் கருதுவார். ஆகவே அத்தகைய அற்புதங்களில் ஆபத்தையே நான் காண்கின்றேன். அவற்றை வெட்கக்கேடானது என்றும் அருவருக்கத்தக்கதென்றும் நான் கருதுகிறேன். இரண்டாவது வகையான அற்புதம் என்பது தீர்க்கதரிசன அற்புதம் என்பதாகும். ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பதை அறிதல், குறி சொல்லுதல், ஜோசியம் சொல்லுதல் போன்றவை இதில் அடங்கும். இதிலும் ஏமாற்றமே மிஞ்சும்
அன்பு வழியை போதித்த புத்தர் எங்கே?
மற்ற மக்களை கொல்ல சொன்ன முகமது எங்கே?
கடவுள்,சொர்கம் இல்லை என்ற புத்தர் எங்கே?
கடவுள் உண்டு,சொர்கம் உண்டு,அங்கே கட்டழகிகள் உண்டு என்ற முகமது எங்கே?
திருமண பந்தத்தை உதறி துறவறம் பூண்ட புத்தர் எங்கே?
பதினோரு திருமண்ங்களுக்கு மேல் செய்த,அதுவும் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்து அவள் ஒன்பது வயதான போது அவளுடன் உறவு வைத்த முகமது எங்கே?
ஏன் இப்படி மொட்டத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.
சரி விசயத்துக்கு வருகிறேன்.
உங்களின் கட்டுரையில் வருகிற வரிகள் நீங்கள் படித்துதான் வெளியிட்டீர்களா?அல்லது படிக்கவில்லையா?
தமிழ் இஸ்லாம் தளத்தின் கட்டுரையின் ஒரு பகுதி காண்க
http://www.tamilislam.com/comparitive_religion/muhammed_in_butist06.htm
தான் உண்மையான அற்புதத்தை, அதாவது போதனையெனும் அற்புதத்தை வழங்கப் பெற்றிருப்பதாக முஹம்மது(ஸல்) அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களின் போதனையானது திருக்குர்ஆன் ஆகும். அதைப்பற்றி அதுவே கூறுகின்றது:-
புத்தர் சொன்ன கருத்தில் குரானுக்கு சுத்தமாக பொருந்தாத வார்த்தைகள் இருக்கும் போது எப்படி நீங்கள் அந்த கருத்தை உங்கள் தளங்களில் தைரியமாக வெளியிட்டு மக்களை முட்டாள்கள் ஆக்கப்பார்க்கிறீர்கள்.
ஆகவே அத்தகைய அற்புதங்களில் ஆபத்தையே நான் காண்கின்றேன். அவற்றை வெட்கக்கேடானது என்றும் அருவருக்கத்தக்கதென்றும் நான் கருதுகிறேன்
ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பதை அறிதல், குறி சொல்லுதல், ஜோசியம் சொல்லுதல் போன்றவை இதில் அடங்கும். இதிலும் ஏமாற்றமே மிஞ்சும்
வெட்கக்கேடான,அருவருப்பான அற்புதங்களை அல்லாவின் நபிகள் செய்தார்களா?அல்லது அல்லவே அப்படி செய்ய சொன்னாரா?,அல்லது அல்லாவே அப்படி செய்தாரா??
குரான் வசனத்தின் படி அடையாளங்களும் அற்புதங்களும் ,தீர்க்கதரிசனங்களும் அல்லவின் அடியார்கள் அல்லாவின் அனுமதியுடன் தான் கொண்டுவந்ததாக சொல்கிறது.
(அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை: எனினும் அல்லாஹ் தன் அடியார்களில் தனர் நாடியவர் மீது அருள் புரிகிறான் : அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை
திருக்குர்ஆன் 14:11- திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்: அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்: இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ(அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்: (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியைஙம் கொண்டு வருவதற்கு (அதிகாரம்) இல்லை. திருக்குர்ஆன் 40:78.
அப்படியானால் இந்த செயலை செய்யவைத்த அல்லா உண்மையான இறைவனா?நீங்களே சொல்லுங்கள்
வெட்கக்கேடானது, அருவருக்கத்தக்க, ஏமாற்றமே மிஞ்சும் செயலை செய்யக்கூடிய அல்லா
(இதற்குமுன் ஷஸமூது
கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம் : அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்: (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவேயன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை. திருக்குர்ஆன் 17:59- நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை போடுத்திருந்தோம்: அவர் அவர்களிடம் (அவற்றைக்; கொண்டு) வந்த போது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே) நீர் கேளும். பிர்அவ்ன் அவரைநோக்கி ஷமூஸாவே நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்ஷ
என்று கூறினான். திருக்குர்ஆன் 17:101- மேலும், மர்யமின் குமாரர் ஸோ: ஷஇஸ்ராயீல்; மக்களே ... அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்
என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூறவீராக) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ஷஇது தெளிவான சூனியமாகும் என்று கூறினார்கள். திருக்குர்ஆன் 61:6.
அல்லாவே இந்தமாதிரியான செயல்களை செய்துள்ளாரே எப்படி? சரி இப்பொழுது சொல்லுங்கள் அல்லா குரானில் சொன்னது தப்பு என்று.
புத்தர் சொன்ன பொன் மொழிகள்தான் சரியானது.எனவே குரான் என்ற போதக அற்புதத்தைக் கொண்டுவந்த மைத்ரேய புத்தர் முகமதுதான் என்று பத்வா கொடுப்பீர்கள்ளா?
உங்கள் பதிலை தாருங்கள்.