இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, May 25, 2012

முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்

ஜோம்பி
இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல
நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை
பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை
கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம்
எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத
ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான்
இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு
தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட
ஆய்வுகள் பரவலாகவே இருக்கின்றன.
ஆனால், முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதை பற்றி ஒரு ஆய்வு
நடந்ததே இல்லை என்றே சொல்லலாம். ஏன் இல்லை?
ஜோசப் ஸ்மித், மார்ட்டின் லூதர், ஆண்டன் லெவி போல முகம்மதுவுக்கும் அவர்
இருந்தார் என்பதற்கான தடயங்கள் ஏராளம் என்பதால் முகம்மது வரலாற்றில்
இருந்த ஒரு நபரா இல்லையா என்பதை பற்றி ஆராயவில்லை என்று பலரும்
கருதுகிறார்கள். முகம்மதுவின் போதனைகள் ஒழுக்கரீதியில் சரியானவையா,
இல்லையா, அவை பிரயோசனமானவையா அல்லவா என்பதை விட, அவர் நிச்சயமாக
இருந்திருக்கிறார் என்றுதான் கடுமையாக இஸ்லாமை எதிர்ப்பவர்களும்
கருதுகிறார்கள். இல்லையா?
உண்மையில் இல்லை. குறைந்தது, ராபர்ட் ஸ்பென்ஸர் எழுதி வெளிவந்திருக்கும்
புத்தகம், முகம்மது என்பவர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா இல்லையா என்பதை
ஆராய்கிறது.
தடயம் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் ஆகாது என்பது உண்மை
என்றாலும், தனது புத்தகமான "Did Muhammad Exist? " என்ற புத்தகத்தில்,
முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறார் என்பதற்கு எந்த விதமான தடயமும்
இல்லை என்பதை மிகவும் தேர்ச்சியுடனும் ஆதாரப்பூர்வமாகவும்
நம்பத்தகுந்ததாகவும் எழுதியிருக்கிறார். ஸ்பென்ஸரே சொல்வது போல,
"முகம்மது என்ற நபர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிப்பது முடியாத
காரியம்" என்பதை கூறும் ஸ்பென்ஸர், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில்,
முகம்மதை பற்றிய இஸ்லாமிய கதையாடலை அப்படியே உண்மை என்று ஏற்றுகொள்வது
தேவையற்றது. (நமக்கு இருக்கும் ஒரு சில ஆதாரங்களை வைத்து, முகம்மதின்
தோற்றத்துக்கான வேறு கதையாடல்கள் இருக்கும் ஆதாரங்களுக்கு பொருந்திச்
செல்கின்றன என்பதையும் பார்ப்போம்)
ஆதாரங்கள்.
இந்த பெரிய விஷயத்தை அணுகுவதற்கு ஸ்பென்ஸர் ஐந்து முக்கிய செய்திகளை
எடுத்துகொள்கிறார்.
1. 7ஆம் நூற்றாண்டு, 8ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் எழுதிய ஆவணங்கள்.
2. அரபியர்கள்/முஸ்லீம்களே எழுதிய 7 /8 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள்.
3. குரான்
4. ஹதீஸ், இஸ்லாமிய விரிவுரைகள், போதனைகள் 8 /9 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை
5. முகம்மதுவின் வாழ்க்கைக்கு பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து,
இபின் இஷாக் எழுதிய முகம்மதுவின் வாழ்க்கைவரலாறு . இந்த வரலாற்றின்
அடிப்படையிலேயே பிற வாழ்க்கைவரலாறுகள் எழுதப்பட்டன.
200 பக்கங்களில், ஒவ்வொரு பிரிவையும் ஆராய்ந்து, முகம்மதுவின் வரலாற்று
ஆதாரத்துக்கு தடயமே இல்லை என்று நிரூபிக்கிறார்.
இஸ்லாமை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் என்னைப் போன்றவருக்கு, முதலாவது
பிரிவே மிகவும்முக்கியமானதாக இருக்கும். அதுவே சுதந்திரமான ஒரு
தடயமாகவும் இருக்கும். பெரும்பாலான மதங்களது புனித நூல்கள் போலவே,
இஸ்லாமின் புனிதநூல்களும், தன்னைத்தானே சரி என்றும், தன்னையே தனக்கான
ஆதாரமாகவும் அளிக்கும் என்றுமே நான் அனுமானம் செய்தேன்( அது தவறு என்று
பின்னால் அறிந்தேன். அது பின்னர்)
ஆகவே, முஸ்லீமல்லாதவர்கள் முகம்மதுவின் வாழ்நாளில் அவரைப் பற்றி என்ன
சொன்னார்கள், அல்லது 60 வருடத்துக்கு பிறகு என்ன சொன்னார்கள்?
ஒன்றுமே இல்லை.
எட்டாம் நூற்றாண்டு வரை முகம்மதுவை பற்றியோ, ஏன் இஸ்லாமை பற்றியோ கூட
எந்த ஒரு செய்தியும் ஆவணௌம் முஸ்லீமல்லாதவர்கள் எழுதவில்லை. அரபியாவின்
மத்தியில் இருக்கும் ஒரு பழங்கால தூரத்திய அனாமதேயமாக இருக்கும் ஒரு
மதத்தை பற்றி மற்றவர்கள் எழுத என்ன தேவை என்று நீங்கள் நினைத்தால், அது
தவறு.


 முகம்மதுவின் இறப்பு நடந்ததாக சொல்லப்படும் 632இலிருந்து துவங்கி
அரபியர்கள் தங்களது பாலைவனத்தை விட்டு கிளம்பி முழுமையான மத்தியக்கிழக்கு
முழுவதும் ஆக்கிரமித்து கைப்பற்றினார்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் வட
ஆப்பிரிக்கா, பெர்ஷியா என்று ஆக்கிரமித்தார்கள். பல கலாச்சாரங்களையும்,
சமூகங்களையும் எதிர்கொண்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்குமே இஸ்லாம்
என்றோ முகம்மது என்றோ எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஸ்பென்ஸர் அத்தியாயம்
இரண்டில் குறிக்கிறார்.
"அரபிய ஆக்கிரமிப்புகள் வரலாற்று ரீதியான உண்மைகள். ஆனால், அரபிய
ஆக்கிரமிப்பாளர்கள் அரபியாவை விட்டு கிளம்பி ஆக்கிரமிக்க இறங்கியது
முகம்மதுவாலும், குரானாலும் என்பது சந்தேகத்துக்கு இடமானது."
முகம்மதின் வாழ்க்கைக்கும், அவரது இறப்புக்கு பின்னர் உடனடியாகவும்
மத்திய கிழக்கை தங்களது புதிய மதமான இஸ்லாமின் கீழ் கொண்டுவந்த பின்னரான
இஸ்லாமின் ஆரம்ப கால வருடங்களை பற்றிய இஸ்லாமிய கதையாடல்களின் மீது
சந்தேகம் கொள்ள நிறைய புதிரான செய்திகள் இருக்கின்றன. உதாரணமாக,
ஆண்டியாக்கில் Antioch ஒரு கிறிஸ்துவருக்கும் ஒரு அரபி தளபதிக்கும் நடந்த
மத விவாதம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஸ்பென்ஸர் குறிக்கிறார்.
"அதில் அந்த ஆவணத்தை எழுதியவர் அரபியர்களை முஸ்லீம்கள் என்று
குறிக்கவில்லை. ஹாகரியர்கள் என்று குறிக்கிறார். "Hagarians" (mhaggraye)
அதாவது ஆப்ரஹாமின் வைப்பு மனைவியும், இஸ்மாயீலின் தாயாருமான ஹாகரது
மக்கள் என்ற பெயரில் குறிக்கிறார். அரபிய தளபதி இஸ்லாமிய போதனைக்கு ஏற்ப
இயேசு கிறிஸ்துவின் கடவுள்தன்மையை மறுக்கிறார். ஆனால், ஒரு இடத்திலும்
குரானை பற்றியோ, இஸ்லாம் பற்றியோ, முகம்மது பற்றியோ பேசவேஇல்லை. இரு
புறத்திலும் பேசவில்லை."
ஒரு "கிறிஸ்துவ"ரிடம் பைபிள், கிறிஸ்துவம், இயேசு கிறிஸ்து பற்றியே ஒரு
போதும் பேசாமல் மதத்தை பற்றி விவாதம் பண்ணுவதை பற்றி கற்பனை செய்து
பாருங்கள். அவர் "கிறிஸ்துவர்" தானா என்று உங்களுக்கு ஐயம் வரத்தானே
செய்யும்?
புத்தகத்தின் மைய கருத்துக்கு தாவினால், அதனைத்தான் ஸ்பென்ஸர்
குறிப்பிடுகிறார். அதாவது ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான ஒரு
கடவுள் தத்துவத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள். அது அங்கிருந்த யூத
மதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. இந்த புதிய
மதத்துக்கு ஆரம்பத்தில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு
ஒரு நிறுவனரும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு புனித புத்தகமும்
இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு கடுமையான விதிமுறைகளும் இல்லாமல்
இருந்திருக்கிறது. இவை அனைத்தும் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பின்னால் யோசித்து ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக கதை
விடப்பட்டிருக்கிறது.
அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான்
பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு
வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக
கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய
நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான்
குரானை பற்றிய குறிப்பே வருகிறது. இஸ்ரேலின் Dome of the Rock இல்
எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது.
அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. ஸ்பென்ஸர்
கூறுகிறார்.
இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை
நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60
ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான
குரான் வசன கல்வெட்டு. இதுவும் குரான் வசனமும் குரான் வசனமற்ற கவிதையும்
ஒன்றோடு ஒன்று கலந்து எழுதப்பட்டுள்ளது. குரான் வசனத்தையும் முழு
குரானிலிருந்து அங்கங்கிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல
இருக்கிறது. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட குரானிலிருந்து எடுக்கப்பட்ட
வசனமே அல்ல என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது dome of rock
கல்வெட்டு வசனங்களும், குரானும் அவற்றுக்கு முந்தைய கவிதைகளிலிருந்து
எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறார்கள். வெவ்வேறு
மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன இரண்டுமே என்று
கருதுகிறார்கள்.
முகம்மதுவை பற்றிய அவர் கால செய்தி என்று சொல்லக்கூடிய மூன்றாவது பிரிவு
குரான் புத்தகம். அதுவும் முஸ்லீமல்லாதவர்களுக்கு அதிர்ச்சி
அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. ஸ்பென்ஸர் எழுதுகிறார்.
"முகம்மது என்ற பெயர் குரானில் நான்கே முறைகள்தான் வருகிறது. அதில்
மூன்று இடங்களில் அவரது பெயராக இல்லாமல், "புகழுக்குரியவர்" அல்லது
தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பொருளிலேயே வருகிறது. இதற்கு மாறாக, மோஸஸின்
பெயர் 136 முறை குறிப்பிடப்படுகிறது. ஆப்ரஹாமின் பெயர் 79 முறை
குறிப்பிடப்படுகிறது. எகிப்து பரோ 74 தடவை குறிப்பிடப்படுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் என்ற rasul Allah முறையில் வெவ்வேறு வடிவங்களில் 300
தடவை குறிப்பிடப்படுகிறது. இறைதூதர் nabi என்ற வகையில் 43 முறை
குறிப்பிடப்படுகிறது. இவை அனைத்தும் 7 ஆம் நூற்றாண்டில் அரபியாவில்
தோன்றிய முகம்மது நபியை பற்றிய குறிப்பா? இருக்கலாம். குரானை
படிப்பவர்கள் அப்படித்தான் அதனை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே
இருந்தாலும், அதன் மூலம் அவருக்கு நேர்ந்த நிகழ்வுகளையோ சூழ்நிலைகளையோ
அவரது வாழ்க்கை பற்றியோ அறிய முடியாது.
குரான் முழுவதும், அவர் தன்னைத்தானே அல்லாஹ்வின் தூதர் என்று பல முறை
கூறிக்கொள்வதையும், அவரை கீழ்ப்படிய வேண்டும் என்று மக்களிடம்
கூறுவதையும் தவிர, அவரை பற்றி ஒன்றுமே இல்லை. மூன்று நான்கு முறை அவரது
பெயரை குறிப்பிட்டாலும், அவரது வாழ்க்கை பற்றி ஒன்றுமே இல்லை.

குரான் முகம்மதை பெயர் குறித்து கூறுவதை வைத்து அவ்வளவுதான் கூறலாம்.
அல்லாஹ்வின் தூதர் என்ற குறிப்புகளில், தூதரின் பெயர் குறிப்பிடவில்லை.
அது மட்டுமல்ல, அந்த தூதரின் செயல்களும் குறிப்பிடவில்லை. ஆகவே
குரானிலிருந்து முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒன்றுமே
அறிந்துகொள்ள முடியாது. குரானின் வசனத்தை மட்டுமே வைத்து பார்த்தால்,
இந்த "அல்லாஹ்வின் இறைதூதர்" என்பது முகம்மதைத்தான் குறிக்கிறது என்றும்
கூறவியலாது"
என்கிறார்.
குரானில் முகம்மதுவை பற்றி எந்த விவரணையும் இல்லை. குரானின் ஆரம்பகால
வரலாற்றை மிகவும் ஆழமாக ஸ்பென்ஸர் ஆராய்கிறார். இஸ்லாமிய நூல்களிலேயே,
முகம்மதின் மறைவுக்கு வெகுகாலத்துக்கு பின்னரே குரான் தொகுக்கப்பட்டது
என்று ஒத்துகொள்கின்றன. அதுவும் நினைவிலிருந்து பலர் சொன்னதை வைத்து
அவற்றை சேர்த்துத்தான் தொகுத்தவர்கள் குரானை உருவாக்கினார்கள் என்று
கூறுகிறது. அதற்கு மேலும், அவர்கள் எந்த வசனத்தை சேர்த்தார்கள் எந்த
வசனத்தை விலக்கினார்கள் என்பதற்கு அரசியல், ராணுவ காரணங்கள் காரணமாக
வெவ்வேறு தொகுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட போட்டி குரான்களும் இருந்தன
என்று இந்த நூல்களே கூறுகின்றன.
இதேதான் ஹதீஸ் தொகுப்புக்கும். குரான் ஏறத்தாழ முகம்மதுவை பற்றி மவுனமாக
இருந்தாலும், ஹதீஸ் (என்னும் மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட இரண்டாம்
கட்ட குரான் விளக்க உரை, முகம்மதுவை பற்றி மிகவும் விலாவாரியாக
விளக்குகிறது. அதுவும் மிகவும் நுண்ணிய விளக்கங்களோடு இருக்கிறது.
இஸ்லாமில் நம்பிக்கையில்லாத எனக்கு பெரும்பாலான இந்த விவரணைகள், வெறும்
கட்டுக்கதைகள் என்றுதான் தோன்றுகின்றன. ஸ்பென்ஸர் இந்த ஹதீஸ்கள் எவ்வாறு
உருவாயின என்று விளக்கும்போது, என்னுடைய அவநம்பிக்கை உறுதிப்படுகிறது. பல
நூற்றாண்டுகள் கழித்து, போட்டி பிரிவுகளால் தொகுக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள்
இந்த வாய்மொழிச்செய்திகள் யாரிடமிருந்து யார் சொல்லி வந்தது என்ற வழிமுறை
வேறு சொல்கின்றன. இதனை இஸ்னாத்(isnad) என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு
இஸ்நாதும் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதுதான் என்று நிரூபிக்க
எழுதுகிறார்கள். அந்த இஸ்நாத் ஆதாரப்பூர்வமானதுதான் அல்லது சரியானதுதான்
என்று யார் நிரூபிப்பார்கள்?
வெவ்வேறு போட்டி பிரிவினர் தங்கள் நிலைப்பாட்டை
நியாயப்படுத்திக்கொள்வதற்காக ஹதீஸ்களை உருவாக்கிகொண்டதால், இந்த ஹதீஸ்கள்
எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக இருக்கின்றன.

8ஆம் நூற்றாண்டில் இறுதியில் அப்பாஸித் வமிச ஆட்சியாளர்கள் இந்த ஹதீஸ்களை
தொகுக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் முயன்றார்கள். இவ்வாறு தொகுத்ததால்,
முகம்மது எதனை அங்கீகரித்தார், எதனை அங்கீகரிக்கவில்லை, எதனை
ஆணையிட்டார், எதனை தடுத்தார் என்பதற்கான செய்தி தொகுப்பை ஏராளமானதாக
ஆக்கினார்கள்… இன்னும் அடுத்த நூற்றாண்டில் (9ஆம் நூற்றாண்டில்)தான் ஆறு
முக்கியமான ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்படுகின்றன. அதாவது அனைத்துமே
முகம்மது இறந்து, சுமார் 200 வருடங்களுக்கு பிறகு.


Ignaz Goldziher இக்னாஸ் கோல்ஜிஹெர் என்ற ஹதீஸ் வரலாற்றாராய்ச்சியாளர்
குறிப்பிடுகிறார், "கட்டுக்கடங்காமல் உருவாகும் போலி ஹதீஸ்களை தடுக்க
நேர்மையானவர்கள் செய்த முயற்சிதான் இலக்கியத்தின் வரலாற்றிலேயே மிகவும்
வினோதமான நிகழ்வு. நல்ல நோக்கத்துடன், போலி ஹதீஸ்களை எதிர்கொள்ள போலி
ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன. புதிய ஹதீஸ்களை உருவாக்கி அதன் மூலம் போலி
ஹதீஸ்களை உருவாக்குபவர்களை கடுமையான வார்த்தைகளில் இஸ்லாமிய இறைதூதரே
திட்டும் ஹதீஸ்கள் உருவாக்கப்பட்டன"
ஒரு ஹதீஸ் போலியாக உருவாக்க முடியுமென்றால், அதன் வாய்வழி தொடர்ச்சியும்
(யார் மூலமாக யார் கேட்டு யாரிடம் சொன்னது என்ற வழி) போலியாக உருவாக்க
முடியும். எந்த அளவுக்கு ஹதீஸின் உள்ளுறை (matn)போலியாக உருவாக்கப்பட்டதோ
அதே வேகத்தில் அதே துல்லியமாக வழிமுறை (isnad) தொடர்ச்சியும் போலியாக
உருவாக்கப்பட்டது."
ஆமாம் போலி ஹதீஸ்கள்.
அதே போல இபின் இஷாக் அவர்களால் எழுதப்பட்ட முகம்மதின் வாழ்க்கை வரலாறு
நம்பகமானது என்று எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுகொள்பவர் மட்டுமே
ஏற்றுகொள்ள முடியும். அல்லது எதனையாவது ஆதாரப்பூர்வமாக ஏற்றுகொள்ள
வேண்டும் என்று தவிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே இபின் இஷாக்கை
ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறாக எடுத்துகொள்ள முடியும். ஏனெனில் அந்த
காலத்தின் வரலாறு பற்றிய ஆதாரப்பூர்வமான பதிப்பு வேறெந்த இடத்திலும்
இல்லை. ஸ்பென்ஸர் கூறுகிறார்
முகம்மது இபின் இஷாக் இபின் யாஸர் என்ற முழு பெயர் கொண்ட இபின் இஷாக் ஒரு
தீவிர மத நம்பிக்கை கொண்ட முஸ்லீம். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறே
இன்றைக்கு "வரலாற்றின் முழு ஒளியும் வீசும் முகம்மதின் வாழ்க்கை வரலாறு"
என்று அறியப்படுகிறது. இருப்பினும் இபின் இஷாக் முகம்மதோடு சமகாலத்தில்
வாழ்ந்தவர் அல்ல. முகம்மது மறைந்ததாக சொல்லப்படும் வருடம் 632. இபின்
இஷாக் மறைந்த வருடம் 773. ஆகவே அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு முகம்மதின்
மறைவுக்கு சுமார் 100 வருடங்களுக்கு பின்னரே வருகிறது. மேலும் இபின்
இஷாக் எழுதிய ஸிரத் ரசூல் அல்லா என்ற புத்தகம் அதன் ஒரிஜினல் படிவத்தில்
கிடைக்கப்படவில்லை. அதுவும் அவருக்கு பின்னர் வந்த மற்றொரு இஸ்லாமிய
அறிஞரான இபின் ஹிஷாம் என்பவரால் சுருக்கப்பட்டு வெளியிடப்பட்ட
புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது. இபின் ஹிஷாம் மறைந்த வருடம்
834..
இறைவன் அளிக்கும் அன்பை பற்றி போதித்த அமைதியான போதகர் அல்ல இபின் இஷாக்
காட்டும் முகம்மது. இபின் இஷாக்கின் முகம்மது, தனது எதிரிகளை
தீர்த்துக்கட்ட ஆளை அனுப்பிய ஒரு போர்ப்படை தளபதி. ஏராளமான போர்களை
நடத்திய போர்ப்படை தளபதி. இபின் இஷாக் வரையும் முகம்மதின் சித்திரம்
பாராட்டத்தகுந்ததல்ல என்று வரலாற்றாய்வாளர் டேவிட் மார்கோலியோத்
கூறுகிறார்…
..இபின் ஹிஷாம் தான் எழுதிய சுருக்கப்பட்ட வரலாறு சுத்திகரிக்கப்பட்டது
என்று கூறுகிறார். மூலத்தில் ஏராளமான அவமானப்பட தகுந்த விஷயங்கள்
இருக்கின்றன. அவை பலரை மனகஷ்டப்படுத்தும் என்று கூறுகிறார். , "things
which it is disgraceful to discuss; matters which would distress
certain people…."
அதாவது, எந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து பின்னர் வந்த வாழ்க்கை
வரலாறுகள் எழுதப்பட்டனவோ அந்த வாழ்க்கை வரலாறே முகம்மதின் இறப்புக்கு
நூறு வருடங்களுக்குபின்னரே எழுதப்பட்டது. பத்திரிக்கைகளோ, ஆவணங்களோ
இல்லாத ஒரு காலத்தில் எழுதப்பட்டது. நடந்திருக்கக்கூடிய விஷயங்களை
நேருக்கு நேராக பார்த்தவர்கள் வெகுகாலத்துக்கு முன்னரே இறந்துவிட்டபிறகு
இந்த வரலாறு எழுதப்படுகிறது. அந்த வரலாறும் போய், அந்த வரலாற்றை படித்த
ஒருவர் அதிலிருந்து சுருக்கி, அமங்கலமான விஷயங்களை எல்லாம் நீக்கி எழுதிய
வரலாறுதான் முகம்மதின் ஆதாரப்பூர்வமான வரலாறாக சொல்லப்படுகிறது. அந்த
வரலாற்றாசிரியரே அமங்கலமான பல விஷயங்களை விட்டுவிட்டதாக சொல்கிறார்.
புத்தகம்
முகம்மது இருந்தாரா? இறைவனால் அருளப்படுகிறதாக சொல்லப்படுகிற புத்தகம்,
அதன் ஆரம்பத்திலிருந்து மாறாததாக சொல்லப்படுகிற புத்தகத்துக்கான ஆதாரத்தை
இஸ்லாம் தர முடியவில்லை என்று ஸ்பென்ஸர் குறிக்கிறார்.
முகம்மது இருந்திருக்கக்கூடிய, அல்லது இல்லாமல் இருந்திருக்கக்கூடிய
சாத்தியங்களை ஆராயும் இந்த புத்தகம், பல இலக்கிய தத்துவ தடயங்களை
இருபுறமும் அளிக்கிறது. இந்த புத்தகத்தை படிப்பவர்கள் "அகழ்வாராய்ச்சி
தடயங்களை பற்றி என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்கலாம். துரதிர்ஷ்ட வசமாக
ஸ்பென்ஸர் இந்த வாதத்தை எதிர்கொள்ளவில்லை. அதற்கும் முக்கிய காரணம்,
தடயங்கள் ஏதும் இல்லாமையே. சவுதி அரசாங்கமும்( ஜெருசலத்தில் உள்ள
டெம்பிள் மவுண்ட் மசூதியை நிர்வகிக்கும் வக்ப் நிர்வாகமும்)
அகழ்வாராய்வுக்கு உரிய தடயங்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.
இஸ்லாமின் ஆரம்ப காலத்துக்கு தடயங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும்
வேண்டுமென்றே அழிக்கின்றன. முகம்மதுக்கும் அவரது ஆரம்ப கால
தோழர்களுக்கும் தொடர்புடையதாக கருதப்பட்ட பல இடங்களை சவுதி அரசாங்கம்
அழித்து அவற்றின் மீது பல கட்டிடங்களை எழுப்பியுள்ளது. ஆகவே இஸ்லாமின்
ஆரம்ப காலத்தை பற்றிய எந்த அகழ்வாராயச்சிக்கும் இன்று முயற்சி எடுக்க
முடியாத சூழ்நிலை. மெக்காவின் வரலாற்றை வேண்டுமென்றே சவுதிகள்
அழிப்பதற்கு காரணம், இஸ்லாமின் ஆரம்ப காலத்தை பற்றி அகழ்வாராய்ச்சிகள்
நடந்தால் அவை இஸ்லாமின் வரலாறாக சொல்லப்பட்டு வருவது பொய் என்று
தெரியவரலாம் என்ற அச்சத்தால் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. இந்த
விஷயம் இந்த புத்தகத்துக்கு முக்கிய விஷயம் இல்லை என்றாலும், இந்த
புத்தகத்தின் வாதத்தை இன்னும் வலுவாக ஆக்கியிருக்கும்.
முகம்மது வரலாற்றில் இருந்தவரா? இந்த புத்தகம் பொதுமக்களுக்காக
பொதுமக்கள் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகம். இன்னொரு வகையில்
சொல்லப்போனால், ஸ்பென்ஸர் தானாக எந்த ஆராய்ச்சியையும் செய்ததாக
சொல்லிக்கொள்ளவில்லை. அவர் செய்திருப்பதெல்லாம், அதுவும் மிகவும்
திறமையான முறையில், கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் செய்த
ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒன்று சேர்த்து
கொடுத்திருப்பதுதான். Günter Lüling, David Margoliouth, Patricia Crone
ஆகியோர் எழுதிய ஆராய்ச்சிகள் இருக்கின்றன. மேலும் Christoph Luxenberg
என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர், குரானை அரபி மொழி மூலமாக அன்றி, அந்த
காலத்தில் புழக்கத்திலிருந்த சிரியாக் மொழி வாசிப்பில் அதனை படித்து
அதற்கு இருக்கக்கூடிய வேறு பொருட்களை கொண்டுவந்தவர். அவ்வாறு ஆராய்ச்சி
செய்வது பழமையில் ஊறிய இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் என்ற
அச்சத்தால் புனைபெயரில் புத்தகம் பதிப்பித்தவர். இவை அனைத்து நூல்களையும்
ஒருங்கிணைத்து, இந்த ஆய்வு முடிவுகளை இணைத்து, இந்த தடயங்கள் மூலம்,
தற்போதைக்கு இருக்கும் கொள்கை(அதாவது முகம்மது வரலாற்றில் இருந்தவர் என்ற
கொள்கை)க்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் அது உண்மையாக இருக்க மிகக்குறைந்த
சாத்தியங்களே உள்ளன என்று கொண்டுவருகிறார். இதுவரை அறியப்பட்ட ஆராய்ச்சி
முடிவுகள், இஸ்லாம் என்ற மதம் மெல்ல மெல்ல முந்தைய யூத கிறிஸ்துவ
நம்பிக்கைகள் அடிப்படை மேல் உருவாக்கப்பட்ட மதம். இந்த புதிய மதத்துக்கு
அதிகாரப்பூர்வ முத்திரை கொடுக்க அதன் மீது ஒரு இறைதூதர் இருந்ததார் இவை
அவர் கூறியவை என்று பின்னால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை.
இந்த புத்தகத்தின் நூறு பக்கங்களுக்கு பிறகு ஸ்பென்ஸர் இந்த தேற்றத்தை
தெளிவாக கூறுகிறார்.
"முகம்மது ஒரு அரபிய தூதுவர், மெக்காவில் பிறந்தார், அரபி மொழி பேசி
அல்லாஹ்வின் செய்தியை அரபுகளுக்கும் பிறகு உலகத்தாருக்கும்
கொண்டுவந்தார்." இந்த வரியின் முஸ்லீமல்லாதவர்களும் பொதுவான உண்மையாக
எடுத்துகொள்கிறார்கள். இருப்பினும் நுணுக்கி பார்த்தால், ஒவ்வொரு
விஷயமும் கரைகின்றன. அந்த காலத்திய வரலாற்று ஆவணங்கள் எதிலுமே முகம்மது
என்ற ஒரு அரபிய தூதுவர் மெக்கா அருகாமையில் இருந்தார் என்பதற்கோ அவர்
உலகத்துக்கான எதாவது செய்தியை சொன்னார் என்பதற்கோ ஆதாரம் இல்லை. ஒருவேளை
முகம்மது என்ற ஒருவர் இருந்திருந்தாலும், மெக்காவில் இருந்தார் என்பதற்கோ
அவர் இஸ்லாமில் கூறப்படும் விஷயங்களை போதித்தார் என்பதற்கோ ஆதாரம் இல்லை.
அவர் அப்படியே இருந்திருந்தாலும், அவரது வாழ்க்கை வரலாறும், அவர்
கூறியதாக சொல்லப்படும் புனித புத்தகமும் அவரது மறைவு என்று கூறப்படும்
வருடத்துக்கு பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தே உருவாக்கப்படுகின்றன.
புத்தகத்தின் இறுதிப்பகுதியில் ஸ்பென்ஸர் மூல கருத்தை விட்டுவிட்டு
குரான் அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சிக்கு போகிறார்.
ஆனால், இவ்வறு செல்வதற்கான காரணம் வெகுவிரைவிலேயே தெரியவருகிறது.
குரானின் பல முக்கியமான பகுதிகள் சிரியாக் மொழியில் எழுதப்பட்ட யூத,
கிறிஸ்துவ நூல்களிலிருந்து ஏறத்தாழ காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன
என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறார். இஸ்லாமின் வேர்கள் அதற்கு
முன்னால் இருந்த மத புத்தகங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவை.
(அல்லாஹ்விடமிருந்து தனித்துவமாகவும் முழுமையாகவும் பெறப்பட்டதாக
கூறப்படும் நம்பிக்கைக்கு மாற்றாக). அப்படியானால், "இறைதூதர்" என்ற
கதையும் கடன் வாங்கப்பட்ட ஒரு கதையா?
ஏற்கெனவே இருக்கும் ஒன்றை பொய்யென நிரூபிப்பதன் பிரச்னையே அது மிகவும்
உழைப்பை உறிஞ்சக்கூடியது, ஏராளமான நுண்ணிய தகவல்களை தேடுவது என்பதுதான்.
எந்த மாதிரியான பொதுமைப்படுத்தல்களாலும், அதன் இருப்பை மிக எளிதில்
உதாசீனம் செய்துவிடவியலாது. ஒரு நூறு பெட்டிகள் உங்கள் வீட்டில்
இருந்தால், அவற்றில் ஒரு வாதாங்கொட்டை எதுவும் இல்லை என்று நிரூபிக்க
வேண்டுமானால், ஒவ்வொரு பெட்டியையும் திறந்து அவற்றில் வாதாங்கொட்டை இல்லை
என்றுதான் நிரூபிக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்புக்கு இணங்க, ஸ்பென்ஸர்
எத்தனை வரலாற்று ஆவணங்களை திறக்க முடியுமோ அத்தனை ஆவணங்களையும்
ஆராய்கிறார். இவை அனைத்தையும் புத்தகத்தில் எழுதுவது ஒரு பொதுமக்கள்
படிக்கக்கூடிய புத்தகத்துக்கு மிகவும் பெரியதாக இருக்கும். இருந்தாலும்,
ஒவ்வொரு வரலாற்று தடயத்தையும் மேலும் ஆராய விரும்பும் வாசகர்களுக்கு
உதவியாக மிகவும் நீண்ட ஆவண இணைப்பை வழங்கியிருக்கிறார்.
தடயங்களில் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துகொண்டு ஸ்பென்ஸர் தனது
புத்தகத்தை எழுதியிருக்கிறாரா? அதாவது முகம்மது என்பவரைப் பற்றிய ஆரம்ப
கால இஸ்லாமின் வரலாற்று ஆதாரங்களில் அவர் இருந்தாரா என்பதற்கு சந்தேகம்
வரக்கூடியவற்றை மட்டுமே எடுத்துகொண்டு, அவர் இருந்திருக்கிறார்
என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை உதாசீனம் செய்திருக்கிறாரா? நிபுணன்
அல்லாத என்னைப் போன்ற ஒருவரால் அதனை நியாயமாக அணுக முடியாது. ஆனால், இந்த
புத்தகத்தில், இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆரம்ப
காலத்திலிருந்து, அதற்கு பின் ஒரு நூற்றாண்டுகளான அனைத்து ஆவணங்களையும்,
உதவக்கூடிய உதவாத அனைத்து வரலாற்று ஆவணங்களையும் அவர் முழுமையாக
கொடுத்திருக்கிறார். விவாதமும், வன்முறையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு
துறையில் இந்த புத்தகம், ஒரு அச்சமற்ற, நியாயமான பல்கலைக்கழக ஆய்வாளரின்
பார்வையிலிருந்து இஸ்லாமை அணுகுகிறது. இந்த புத்தகத்துக்குப் பின்னால்,
இந்த ஆவணங்களை எதிர்கொள்ளாமல், இஸ்லாமின் தோற்றத்தை பற்றி தனக்குத்தானே
கொடுத்துக்கொள்ளும் அங்கீகாரத்தை கேள்வி கேட்காமல், அப்படியே ஒப்புகொண்டு
போகும் எந்த ஒரு ஆய்வாளரையும் சந்தேகத்துடனேயே பார்க்கும்படி வைக்கிறது.
ஐரோப்பிய, அமெரிக்க மனதுக்கு, இருண்ட காலங்கள் Dark Ages எனக்கூறப்படும்
காலம் ஏறத்தாழ முழுமையாக இருண்டதாக இருக்கிறது. கிபி 600களில் நடந்த
எதனையும் அறுதியுடன் கூறுவது மிகவும் மெத்த படித்த அறிஞர்களுக்கு கூட
கடினமானதாக இருக்கிறது. இந்த இருண்டகாலங்களை பற்றிய இலக்கிய,
அகழ்வாராய்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே
கிடைக்கின்றன. ஆனால், இந்த கால கட்டத்தில்தான் முகம்மதின் கதையும்
இஸ்லாமின் தோற்றமும் நடக்கிறது. ஆகவே, இந்த காலத்தில் தடயங்கள்
கிடைக்காமல் இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்று வாதிட
இடமிருக்கிறது.
இருப்பினும், இஸ்லாமை பற்றிய வரலாற்றை ஆராயப்புகுந்தால், ஒரு சிக்கலான
நிலையையே எட்ட வேண்டியதிருக்கிறது. முகம்மது இருந்ததாக கூறப்படும்
காலத்தை நெருங்க நெருங்க, ஆதாரங்களும் மூலங்களும் ஆவணங்களும் அரிதாகி
விடுகிறது. முகம்மதின் இறப்பு முடிந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகுதான்
நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்கு முன்னால், செல்வது
கடினமாகிவிடுகிறது. திரை இறங்கிவிடுகிறது. அந்த திரையை கிழித்து அதன்
ஆரம்பத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, நம்மால் முகம்மது ஒரு உண்மையான
மனிதரா? அல்லது உருவாக்கப்பட்ட பிரமையா, அல்லது வசதியாக உருவாக்கப்பட்ட
கட்டுக்கதையா என்று சொல்லமுடிவதில்லை.
இன்றைய நவீன அரசியல் சூழ்நிலையில், முகம்மது வரலாற்றில்
இருந்திருக்கிறாரா? Did Muhammad Exist? என்ற தலைப்பே ஒரு சவால்தான்.
இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு, இந்த மாதிரி தலைப்பை
வைத்ததற்காகவே, எதிர்ப்பு, வன்முறை, ஒதுக்கல், பத்வாக்கள் ஆகியவை
வரக்கூடும் என்பதால், உண்மையில், "முகம்மது வரலாற்றில்
இருந்திருக்கிறாரா? என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாமா?" என்றுதான் இந்த
புத்தகத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தலைப்பு
கேள்விக்கு விடை இன்றைய அரசியலில் "கூடாது" என்றுதான் இருக்கும். ஆகவே,
"முகம்மது வரலாற்றில் இருந்திருக்கிறாரா?" என்ற கேள்விக்கும் விடை
"இல்லை" என்றுதான் இருக்கும். ஏனெனில், முகம்மது வரலாற்றில் நிச்சயம்
இருந்திருந்தால், அவரது இருப்பு ஆதாரப்பூர்வமாக
ஆவணப்படுத்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கேள்வியை கேட்பதற்கு எந்த
விதமான அச்சுருத்தலும் நிச்சயம் இருக்காது. மேலும், இந்த புத்தக
ஆசிரியர், முகம்மதின் வரலாற்று இருப்பை சந்தேகப்பட்டிருப்பதாலும், அவரது
முடிவை எளிதில் பொய்யென நிரூபிக்க முடிந்திருந்தால், இந்த கேள்வியும்
உடனே உதாசீனம் செய்யப்பட்டு மறக்கப்பட்டிருக்கும். ஆகவே, இந்த புத்தகம்
விவாதத்துக்குரியதாக இருப்பதாலும், இது சில நாடுகளில் தடை
செய்யப்பட்டிருப்பதாலும், இந்த புத்தகத்தின் வாதங்களில் சத்திருக்கிறது
என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
இயேசு வரலாற்றில் இருந்தாரா என்பதை பற்றி ஆய்வாளர்கள் ஆராயும்போது அது
விவாதத்த்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளின்
அடிப்படையில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்போது அது
விவாதத்துக்குரியதாக இல்லை. விவிலியத்தில் இருக்கும் நிகழ்வுகள் நடக்கவே
இல்லை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது, ஒரு சில
கிறிஸ்துவர்கள் அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளை வருத்தத்துடன்
பார்த்தாலும், ஆய்வாளர்கள் மீது கொலை மிரட்டல் விடப்படுவதில்லை.
கிறிஸ்துவம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி நிற்கிறது.
அது தன் செய்தி தரும் வலிமையால் நிற்கிறது. அதன் வரலாற்று தகவல்களால்
நிற்கவில்லை. அதே போல இஸ்லாமும் இவற்றை எதிர்கொள்ளும் என்று
எதிர்பார்க்கலாம்.
Did Muhammad Exist?
by Robert Spencer
ISI Books, April 2012
$27.95

ஆரம்பகால கிறிஸ்தவத்தில் மற்றும் இஸ்லாமில் "வாள்" - ஓர் அறிமுகம்

Introduction to the Sword in Early Christianity and Islam
ஆசிரியர்: ஜேம்ஸ் அர்லண்டசன், Ph.D.

உலகளாவிய ஜிஹாத் (புனிதப்போர்) மற்றும் மேற்கத்திய நாடுகள் மேலான
தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன, இதற்கு முடிவு என ஒன்று இருப்பதாக
தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டாண சூழ்நிலைகளில் "நம்முடைய
சரித்திரங்களையும், உலக சரித்திரத்தையும் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள
வேண்டும்" என்பது தான் அதி முக்கிய தேவையாக உள்ளது. இந்த தெளிவை பெற
வேண்டுமென்றால் அதற்கு ஒரு வழி உண்டு அதாவது "நாம் பின்னுக்கு திரும்பி
பார்க்கவேண்டும்" என்பதாகும், அதாவது சரித்திரத்தை
அறிந்துக்கொள்ளவேண்டும்.

இந்த வரலாற்று நிகழ்வுகளும் அவைகளுக்கான விளக்கங்களும் ஏறத்தாழ ஒரே தன்மை
உடையவைகளாக காணப்படுகின்றன, மற்றும் ஆங்காங்கே சில வித்தியாசங்களும்
காணப்படுகின்றன. இந்த ஜிஹாதுக்கான விதைகள் ஆதி காலத்தில் இருந்தே
விதைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விதைக்கப்பட்ட விஷங்களே இன்று துவேஷங்களாக
வளர்ந்துள்ளன. ஜிஹாத்துக்கு எதிரான இராணுவ‌ பதிலடி நடவடிக்கைகளும் இன்று
வளர்ந்து வந்துள்ளன. வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடங்களை நாம்
கற்றுக்கொள்ள மறுத்தால், நாம் எந்த தவறுகளை வரலாற்றில் செய்து இருந்தோமோ
அவற்றையே திரும்ப செய்கிற துர்பாக்கிய நிலையில் நாம் இன்று
தள்ளப்படுவோம். ஒரு வேளை வரலாறு வன்முறை நிறைந்ததாக காணப்பட்டாலும், அந்த
வன்முறையிலிருந்து நம்மை சீர்திருத்திக்கொண்டு, நாம் வன்முறையில்லாமல்
வாழ முயற்சி எடுக்கலாம் அல்லவா?

முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வாளை எடுத்து போர் தொடுக்கவும்
இல்லை மற்றும் கிறிஸ்தவ சபை வாள் எடுப்பதை அங்கீகரிக்கவும் இல்லை [1],
மேலும் இதனை கொள்கையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதன் பின்னர்
கிறிஸ்தவர்களாக மாறிய ரோம ஏகாதிபத்திய சக்கரவர்த்திகளின் காலத்தில்
இக்கொள்கை மாறியது. இதன் பின் வந்த திருச்சபை தன்னுடைய உண்மையான
வழியிலிருந்து விலகிவிட்டதா? அல்லது இந்த புதிய கொள்கையை பின்பற்ற
ஆரம்பித்ததா?

சுமார் 1400 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை இஸ்லாம் வாளை சுழற்றியே
வந்துள்ளது. வாளை பயன்படுத்தவேண்டும் என்ற இந்த கொள்கை இஸ்லாமுக்கு
எங்கேயிருந்து கிடைத்தது? மெய்யான பாதையில் இருந்து இஸ்லாம் விலகியதா?
அல்லது இஸ்லாமை வழி நடத்துச் சென்ற தலைவர்கள் இவ்வாள் சுழற்றும் கொள்கையை
பின்பற்றினார்களா? ஒரு மார்க்கம் தனது மைய கொள்கைகளில் இருந்து வழி
விலகுகிறதா இல்லையா என்பதை நாம் எப்படி உறுதி செய்துகொள்வது?

இயேசு கிறிஸ்துவும் முஹம்மதுவும் தங்களது மார்க்கங்களுக்கான மரபியல்
கூறுகளை ஸ்தாபித்தனர், அடிப்படை கட்டளைகளை கொடுத்தனர். வன்முறை மற்றும்
வாளை பயன்படுத்துவதற்கு அவர்கள் கொடுத்த‌ கொள்கை விளக்கங்கள் என்ன?

இந்த தொடர் கட்டுரைகள், 600 வருட கால இடைவெளியை கொண்டுள்ள கிறிஸ்தவம்
மற்றும் இஸ்லாமின் ஆரம்ப புள்ளிகளையும் மற்றும் இதில் எழும்
கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டு
மார்க்கங்களை ஒப்பிட்டு இத்தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

* தேவனுடைய ராஜ்யத்துக்கும் சீசருடைய ஆட்சிக்கும் இயேசு கிறிஸ்து
கொண்டிருந்த கொள்கை என்ன?
* இவ்விரண்டும் (ஆன்மீகம் மற்றும் அரசாங்கம்) தனித்தனியே வைத்து
நிர்வாகிக்கப்படவேண்டுமா?
* மரணம் மற்றும் "அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகள்" பற்றி
இயேசுவின் கருத்து என்ன?
* புனித நகரமாகிய‌ எருசலேம் மற்றும் அதிலுள்ள தேவாலயம் குறித்தும்
அதன் அரசியல் ‍புவியியல் சார்ந்த முக்கியத்துவம் குறித்தும் இயேசுவின்
நிலைப்பாடு என்ன‌?
* ஒருவேளை மதரீதியான ஒரு கோட்பாட்டை புனித ஸ்தலமான எருசலேமில்
ஸ்தாபிக்க இயேசு முயன்று தோற்றாரா?
* இயேசு, ரோம இராணுவ அதிகாரியை சந்தித்த போது ரோம படைகளை குறித்து
இயேசு கொண்டிருந்த நிலைப்பாடு என்ன‌?
* நற்செய்தி நூல்களில் வாளைப்பற்றிய குறிப்புகள் உண்டா?
* ஒருவேளை இருந்திருந்தால் அதை உபயோகிக்கும் நிலைகள் பற்றி இயேசு
கூறுபவைகள் யாவை?
* நான் அமைதியை அல்ல, நான் பட்டயத்தை அனுப்பவே வந்தேன் என இயேசு
சொன்னதன் நோக்கம் என்ன‌?
* இயேசு அமைதியை உண்டாக்கும் ஒரு சமரசவாதியா?
* ஒரு நாள் உலகத்தில் சமாதானம் நிச்சயம் நிலவும் அப்போது பட்டயங்கள்
தேவைப்படாது என இயேசு நம்பினாரா?
* உலகம் ஒரு சமாதான இடமாக இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பினாரா?
மற்றும் இப்படி நடக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்தாரா?
* பரலோக இராஜ்ஜியம் மற்றும் சீசரின் இராஜ்ஜியம் பற்றி ஆதிதிருச்சபை
கொண்டிருந்த நிலைப்பாடு என்ன‌?
* ஆதி கிறிஸ்தவர்கள் பட்டயத்தை சுமந்து சென்றார்களா?
* அக்கால அரசாங்கங்கள் பட்டயம் வைத்திருக்க அனுமதி கொடுத்திருந்ததா?
ஆதி கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களா? இல்லையா?
* ஆதி கிறிஸ்தவர்கள் ஏன் அதிகம் துன்புறுத்தப்பட்டனர்?
* ஆதி கிறிஸ்தவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'தீவிரவாத குழுக்களை'
உருவாக்கிக்கொண்டார்களா?
* கிறிஸ்தவம் யூத மதத்தில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டது என்பது
நாம் அறிந்ததே, இப்படி இருக்கும் போது, யூதர்களுக்கும் இயேசுவிற்கும்
இடையே உறவு எப்படி இருந்தது? மற்றும் யூதர்களுக்கும் ஆதிகால
கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவு எப்படி இருந்தது?
* இயேசுவும் அவரது சீடர்களும் யூதர்களை துன்பப்படுத்தினார்களா?
"ஆன்டி-செமிடிக் (Anti-Semitic)" என்றுச் சொல்லக்கூடிய, யூத எதிர்ப்பு
குழுவாக இயேசுவும், அவரது சீடர்களும் செயல்பட்டார்களா?
* இயேசுவும் அவரது ஆரம்ப கால சீடர்களும் எவ்வாறு ரத்தம் சிந்தி
மரித்தனர்? அவர்கள் தங்களை தாக்கியவர்களை பட்டயங்களால் தாக்கவில்லையா?
* இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு வாள் அல்லது தற்கால ஆயுதங்கள்
வைத்துக்கொள்ள அனுமதியுண்டா?
* கிறிஸ்தவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்கலாமா?
* தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் திருச்சபைக்கும் பட்டயம் குறித்ததான
கொள்கை முரண்கள் உள்ளனவா?
* இக்கால கட்டத்தில் யுத்தம் மற்றும் சமாதான காலங்களில்
திருச்சபையின் நிலைப்பாடு என்ன?
* இன்றைய சூழலிலும் திருச்சபையானது 'மறு கன்னத்தை' காண்பிக்கச்
சொல்லி அரசாங்கத்திற்கு அறிவுரை கூறுகின்றதா?
* காவல்துறை மற்றும் ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் சேர அனுமதியுண்டா?
* அப்படி அனுமதி இருப்பின், போரில் சிலரை கொல்லும்படி வந்தால் என்ன
செய்வார்கள்? "உங்களை பகைக்கிறவர்களை நேசியுங்கள்" என்ற கொள்கையை
மீறும்படியாக ஆகிவிடாதா?
* ஒருவேளை வன்முறையாளர்களிடம் இருந்து, தீவிரவாதிகளிடமிருந்து
கிறிஸ்தவர்களை பாதுகாக்க அரசாங்கம் தவறினால் அப்போது கிறிஸ்தவர்கள் என்ன
செய்ய வேண்டும்?

இஸ்லாம் பற்றிய கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முயல்கிறோம்:

* முஹம்மது எப்போதாவது சமாதான பாதையில் சென்றிருக்கிறாரா? அல்லது
எப்போதுமே யுத்தம் செய்துக்கொண்டே இருந்தாரா?
* பட்டயத்தை பற்றிய முஹம்மதுவின் கொள்கை என்ன?
* கருப்புக்கல் வைக்கப்பட்டு இருக்கும் புனித ஸ்தலமான மக்காவில் உள்ள
காபா பற்றி முஹம்மதுவின் கருத்து என்ன?
* சமாதானம் அல்லது வன்முறை என்ற இரு பாதைகளில் செல்ல அவருக்கு
வாய்ப்பு இருந்ததா? அல்லது இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் செல்ல
அவர்களுக்கு வாய்ப்பு இருந்ததா?
* போர் பற்றிய‌ அனேக வசனங்கள் குர்‍ஆனில் ஏன் காணப்படுகிறது?
* குர்‍ஆனில் உள்ள போர் சம்பந்தப்பட்ட வசனங்கள் கலாச்சாரம் மற்றும்
வரலாற்று எல்லைகளுக்கு உட்பட்டதா? அவற்றுக்கு காலாவதி தேதி என ஏதாவது
உண்டா?
* குர்‍ஆனில் சமாதானம் மற்றும் அமைதி சம்மந்தப்பட்ட வசனங்கள் உள்ளனவா?
* "ஜிஹாத்" என்றால் உண்மையில் அர்த்தம் என்ன?
* "கிதல் – Qital" என்ற‌ வார்த்தையின் அர்த்த‌ம் என்ன?
* ஜிகாத் எனும் புனித‌ப்போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள்
ஆரம்ப கால இஸ்லாமில் இருந்ததா?
* அப்படி கேற்கண்ட சட்டங்கள் இருந்திருக்குமானால்? அவை யாவை?
* ம‌ர‌ண‌ம் ம‌ற்றும் வரி செலுத்துதல் குறித்து முஹம்மது என்ன‌
நினைத்திருந்தார்?
* யூத‌ர்க‌ளுட‌னான‌ முஹம்மதுவின் உற‌வு எப்ப‌டி இருந்த‌து?
* அவ‌ர் ம‌ரித்த‌ பின்பு எப்ப‌டி ஆர‌ம்ப‌ கால‌ முஸ்லீம்க‌ள் அவ‌ர‌து
கொள்கைக‌ளை பின்ப‌ற்றின‌ர்?
* ஆர‌ம்ப‌ கால‌ முஸ்லீம்க‌ள் போர் தொடுத்தார்க‌ளா?
* குர்‍ஆனையும் முஹம்மதுவையும் எங்ஙண‌ம் அவ‌ர்க‌ள் பின்ப‌ற்றினார்க‌ள்?
* ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாம் நீதியை (Justice) எப்ப‌டி வ‌ரைய‌றுக்கிற‌து?
* ம‌ர‌ண‌ம் ம‌ற்றும் வரி செலுத்துதல் குறித்து ஆரம்ப கால
இஸ்லாமியர்களின் கருத்து என்ன?
* மார்க்க‌த்திற்காக‌ உயிர்விடுத‌ல் அல்ல‌து இர‌த்த‌ சாட்சிக‌ள்
குறித்து இஸ்லாம் போதிப்ப‌து என்ன?
* இஸ்லாமை சீர்திருத்த முடியுமா? சீர்திருத்த முடியுமென்றால், அதனை
அடைவது எப்படி?
* சீர்திருத்தம் தேவை என்று இஸ்லாம் நினைக்கிறதா? "உண்மைக்கு"
சீர்திருத்த‌ம் தேவைப்படுமா?

இவ்விரு மார்க்கங்களின் வரலாற்று பிண்ணனியங்களை ஆராய்வதன் மூலமும்,
மேற்கண்ட கேள்விகளுக்கு இப்பிண்ணனியங்கள் வாயிலாக விடைகாண விழைவதுமே நாம்
தெளிவடைய ஒரே வழியாகும். இந்த தெளிவை நாம் அடைந்தால் தான் "நாம் எவைகளை
மாற்றிக்கொள்ளவேண்டும்" என்ற முடிவை எடுக்க முடியும்

இவ்விரு மார்க்கங்களையும் தலைப்பு ரீதியாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றை
வைத்து ஆராய்வோம். இவ்விரு மார்க்கங்களின் சில தலைப்புக்கள் ஒரே
கட்டுரையிலும் ஒப்பிடப்பட்டு இருக்கும்.

இஸ்லாமிய கிறிஸ்தவ உறவுக்கு இதன் வாயிலாக ஏதாவது நல்லுறது ஏற்பட வழியுண்டா?

இவ்விரு மார்க்கங்களின் மரபியல் கூறுகளை (அடிப்படை கட்டளைகளை) அதன்
மூலத்திலிருந்தே ஆராய ஆரம்பிப்போம்.

இந்த தொடர் கட்டுரைகளின் பட்டியல்

1. Introduction - இப்போது படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரை
2. The Mission of Jesus and the Sword
3. The Mission of Muhammad and the Sword
4. The Gospels and the Sword
5. The Quran and the Sword
6. Two Kinds of Swords
7. The Early Church and the Sword
8. The Early Muslim Community and the Sword
9. The Sword and the Jews
10. Martyrdom and the Sword
11. Q & A on the Sword
12. Conclusion

பின் குறிப்பு:

[1] இந்த தொடர் கட்டுரைகளில் "பட்டயம்" அல்லது "வாள்" என்ற
வார்த்தையானது, எல்லா வகையான ஆயுதங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, இக்காலத்தில் வன்முறைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் இதில்
அடங்கும். மேலும், உடல் ரீதியாக கொடுமைப்படுத்துதல், யுத்தம் செய்தல்,
கொலை செய்தல், வன்முறையில் ஈடுபடுதல் மேலும் தற்காப்பிற்காக வாளை
பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் குறிக்க இவ்வார்த்தை
பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: Introduction to the Sword in Early Christianity and Islam

ஆசிரியர் ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்

Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/arlandson/sword/01.html

இஸ்லாமின் அரச குடும்பம் - பகுதி 1: முஹம்மதுவின் ஆஸ்தி

இஸ்லாமின் அரச குடும்பம்

ஆசிரியர்: சைலஸ்

யோவான் 13:34,35 ல் வேதம் சொல்லுகிறது :

"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில்;
அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற
புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35. நீங்கள் ஒருவரிலொருவர்
அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று
எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்." [1]

குர்‍ஆன் 8:63 அல்-அன்பஃல் (கொள்ளைப் பொருட்கள்)

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்)
பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர்
செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்)
பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ்
அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன்
மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். [2]

பகுதி 1: முஹம்மதுவின் ஆஸ்தி
பாத்திமா, அலி மற்றும் இப்னு அப்பாஸ்

முன்னுரை

முஹம்மது தன்னுடைய மார்க்கத்தை பரப்புவதில் தான் மாத்திரம் தனிமையாக
இருந்து செய்யவில்லை. அவர் மெக்காவை தாக்கி கைப்பற்றின சமயத்தில் அவரோடு
கூட ஒரு விசுவாசமுள்ள குடும்பமும் மற்றும் ஆயிரக்கணக்கில் விசுவாசமான
தோழர்களும் இருந்தனர். அவருடைய பின்னடியார்கள் அவருக்காக
கொலைசெய்வதற்கும், மரிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதை கவனிக்க
வேண்டும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் பற்றிக் கொண்டவர்களாக,
அவருடைய கட்டளைகளை கண்டிப்புடன் பின்பற்றினவர்களாக இருந்தனர். மேலும்
அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தங்களால் முடிந்த அளவிற்கு குர்‍ஆன்
வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர்.

பிரசித்தி பெற்ற மற்ற எல்லாத் தலைவர்களைப் போலவே, முஹம்மதுவும் தன்னைச்
சுற்றி தன்னுடைய நெருங்கிய‌ சிறந்த நண்பர்களையும் குடும்ப
அங்கத்தினர்களையும் கொண்டிருந்தார். முஹம்மது தன்னுடைய மனைவியாகிய
ஆயிஷாவை அதிகமாக நேசித்தார். (ஆயிஷா அவர்கள் 9 வயதாக இருக்கும் போது
அவர்களைத் திருமணம் செய்து கொண்டார், ஆயிஷா அவர்கள் 18 வயதாக இருக்கும்
பொழுது முஹம்மது மரித்துப் போனார்). ஆயிஷா அவர்களுக்கு அடுத்தபடியாக,
முஹம்மது தன்னுடைய மாமனாராகிய அபூபக்கரை அதிகம் நேசித்தார், அதன் பின்
தன்னுடைய வலிமையான தோழர் உமரை அதிகமாக‌நேசித்தார். இவர்களைத் தவிர மற்ற
"தோழர்களைக்" காட்டிலும் அவருக்கு நெருக்கமான சிறப்பு நண்பர்களும்,
குடும்ப அங்கத்தினர்களும் முஹம்மதுவிற்கு இருந்தனர். இந்த சிறப்பு
நண்பர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏதாவது ஒரு
விதத்தில் முக்கியமான தலைவர்களாக மாறினார்கள்.

மேற்கண்ட விசேஷித்த மக்கள் குழுவைத் தான் "அரச குடும்பம் (Royal Family)
" என்று நான் அழைக்கின்றேன். அவர்கள், இங்கிலாந்து ராணி எவ்வித அரச
உரிமைகளோடு கருதப்படுகிறார்களோ அவ்வண்ணமாக இவர்கள்
கருதப்பட்டிருக்கவில்லை. ஆனால் இந்த மக்கள் முஹம்மதுவை மிகவும்
நெருக்கமாக அறிந்திருந்தார்கள் மேலும் இஸ்லாமிய அரசியல் மற்றும்
சரித்திரத்திலும் இறையியலிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர்.
எனவே "அரச குடும்பம்" என்ற பெயர் ஓரளவிற்கு இவர்களுக்கு பொருந்துகிறது.
இவர்கள் முஹம்மதுவை சிறந்த முறையில் அறிந்திருந்தார்கள் அவரும் இவர்களை
சிறந்த முறையில் அறிந்து வைத்திருந்தார். இவர்கள் முஹம்மதுவை
நேசித்தார்கள் அவரும் இவர்களை நேசித்தார். அவருடைய போதனைகளை இவர்கள்
அறிந்திருந்தார்கள் மனனம் செய்து வைத்திருந்தார்கள், வாழ்க்கையில்
அனைத்துப் பகுதிகளிலும் இவர்கள் முஹம்மதுவை துல்லியமாக‌ பின்பற்ற முயற்சி
எடுத்தார்கள். முஹம்மதுவுடன் இவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவின்
காரணமாக அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கற்றுக் கொடுக்கவும் வழிநடத்தக்
கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

இதைப் போலவே, இயேசுவின் சீடர்களும் இயேசுவை அறிந்திருந்தார்கள், அவருடைய
மரணத்திற்கு பிறகு அவர்கள் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படியவும் அவரோடு
தங்களுக்கு இருந்த தனிப்பட்ட உறவின் மூலம் தாங்கள் அறிந்திருந்தவற்றை
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் பிரயாசப்பட்டார்கள்.

நான் "இஸ்லாமின் அரச குடும்பம்" என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுரைகளை
அளிக்கின்றேன். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு அவர்கள் நடந்துக் கொண்ட
விதத்தை ஆராய்வோம். "உண்மை இஸ்லாம்" பற்றிய ஒரு சரியான மற்றும் நியாயமான
மதீப்பீடாக இந்த ஆய்வு இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையை
சொல்லவேண்டுமென்றால், இந்த முஸ்லிம்கள் தான் "இஸ்லாமின் சிறந்த
முஸ்லிம்களாவார்கள் ". இவர்கள் இஸ்லாமின் அஸ்திபாரங்களாவார்கள் ஏனென்றால்
ஸஹீஹ் ஹதீஸ்களில் பெரும்பான்மை சதவீதமான அறிவிப்பாளர்களாக இவர்கள்
இருக்கின்றனர் மேலும் இவர்களில் சிலர் இஸ்லாமிய ஆட்சியில் ஆளுகை
செய்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் இவர்களில் ஒருவர், சொந்தமாக
குர்‍ஆனை தொகுத்தவராகவும் இருக்கிறார்"முஹம்மதுவையும் அவரது
கட்டளைகளையும் துல்லியமாக அறிந்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள்" என்று
நாம் ஒரு குழுவை குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், அந்த குழு
இவர்களாகத் தான் இருக்கமுடியும்.

"நீங்கள் மரத்தை அதின் கனிகளால் அறிவீர்கள்" என்று இயேசு சொன்னார். இந்த
சிறந்த முஸ்லீம்களின் கனிகளினால் (நடத்தைகளினால்) இஸ்லாமின் நற்பண்பை
நாம் தீர்மானிப்பது நிச்சயமாக ஒரு மிகையான செயல் அல்ல. முஹம்மது மற்றும்
இஸ்லாமின் பெரிய தாக்கம் அவரைச் சுற்றிலும் கிட்டத்தட்ட‌ 24 மணி நேரமும்
இருந்தவர்களாகிய இவர்கள் மீது இருக்காதா என்ன?

ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கட்டளை
கொடுத்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் ஒருவரையொருவர்
நேசித்தார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அவருடைய மரணத்திற்கு பிறகு
அவர்கள் திருச்சபையின் தலைவர்களானார்கள், ஒன்றாக வாழ்ந்தார்கள்,
அடுத்தவர்களுடைய துன்பத்தில் பங்கு கொண்டார்கள். ஒருவரையொருவர்
விசாரித்துக் கொண்டார்கள், இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இயேசுவில் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக‌, அவரைப் பற்றி
அவர்கள் நெருக்கமாக அறிந்திருந்த அறிவினிமித்தம், அவருக்கு அவர்கள்
காட்டிய‌ அர்ப்பணிப்பின் காரணமாக மரணத்தருவாய் வரை அவர்கள் அவருக்கு
கீழ்படிந்திருந்தார்கள்.

முஹம்மதுவும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று தன்னுடைய
பின்னடியார்களுக்கு கட்டளையிட்டார். அவருடைய பின்னடியார்கள் முஹம்மது
எப்படி உடை உடுத்தினாரோ, எப்படி சாப்பிட்டாரோ, எப்படித் தொழுகை செய்தாரோ
அப்படியெல்லாம் அவரைப் பின்பற்றி செய்வதற்கு கவனமாக இருந்தார்கள்.
அவருடைய மரணத்திற்கு பிறகு முஹம்மதுவுடைய பின்னடியார்கள் எப்படி
தங்களுடைய விசுவாசத்தையும் கீழ்படிதலையும் கொண்டிருந்தார்கள்?
வெளிப்புறமான தோற்றத்தையும் வெறுமையான பாவனைகளையும் நான்
குறிப்பிடவில்லை. உள்ளார்ந்த அதாவது சிந்தை, ஆவி மற்றும்
இருதயத்திற்குரிய காரியங்களைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன்.

இஸ்லாம் உண்மை மார்க்கமாக இருக்குமென்றால், இயேசுவின் சீடர்கள் செய்தது
போல முஹம்மதுவுடைய கட்டளைகளை அவருடைய தோழர்கள் கீழ்படிதலோடு
நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டாமா?

முஹம்மதுவிற்கு இத்தனை நெருக்கமான குடும்பத்தினர் மற்றும்
உறவினர்களிடமிருந்து இவைகளைக் காட்டிலும் குறைவான நடத்தைகளில் வேறு
எவைகளையாவது நாம் எதிர்பார்க்க வேண்டுமா? "இஸ்லாம் உண்மை மார்க்கமாக‌"
இருந்திருக்குமென்றால், சிறந்த முஸ்லிம்களாகிய இவர்கள் மிகவும் கடினமான
நேரத்தின் போது ஒரு நல்ல நேர்மையான ஆன்மீகவாதிகளாக‌ செயல்பட்டிருக்க
வேண்டாமா? இவர்கள் இப்படி சிறந்த நற்பண்புள்ளவர்களாக நடந்துக்கொண்டார்களா
இல்லையா என்பதை இனி நாம் ஆராய்வோம்.

குறிப்பு:

• இந்த தொடர் கட்டுரைகளில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில்,
அறிவிப்பாளர்களின் முழு சங்கிலித் தொடரையும் (isnaads) நான் எழுத
மாட்டேன்.
• ஹதீஸ்களில் இருக்கும் எல்லா வரிகளையும் நான் குறிப்பிட்டுக்
காட்டமாட்டேன் ஏனென்றால் விளக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகமான
வரிகள் இந்த தலைப்பிற்கு பொருத்தமானதாக இல்லை.
• மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களை நான் நீல நிறத்தில் பதிக்கிறேன்.
• எல்லா குர்‍ஆன் வசனங்களும் பீஜே அவர்களின் தமிழாக்கத்திலிருந்து
எடுக்கப்பட்டவை. வேறு தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டால், அது எந்த
மொழியாக்கம் என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

நாம் ஆய்வை தொடர்வோம்…

சிந்தனைக்கு உணவு

1 தீமோ 6:10

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து,
விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்
குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஸஹி புகாரி ஹதீஸ் - பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1344

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். [3]

. . . நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப்
பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான்
பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக்
கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்

இஸ்லாமிய அரச குடும்பத்தின் முக்கியமான நபர்கள்

அபூ பக்கர் - இவர் இஸ்லாமிய அரசின் முதல் கலிஃபா (பிரதான ஆளுநர்) ஆவார்.
"சரியாக வழிநடத்தப்பட்ட" நான்கு கலிஃபாக்கள் என்று சொல்லப்படுகிறவர்களில்
இவர் முதன்மையானவர். இவர் முஹம்மதுவின் மரணத்தைத் தொடர்ந்து கலிஃபா
ஆனார். இவர் முஹம்மதுவிற்கு மிக நெருக்கமான ஆண் நண்பர் ஆவார். இவர்
இரண்டு வருடங்கள் ஆட்சி செய்து பிறகு மரித்துப் போனார். இவர்
முஹம்மதுவுடைய ஒன்பது வயது மனைவியாகிய ஆயிஷாவுடைய தந்தை ஆவார்
(http://answering-islam.org/Silas/childbrides.htm [4]). அபூ பக்கர்
இஸ்லாமிய அரசின் ஆரம்பத்தை யுத்தத்தின மூலம் நிறுவினார்.

உமர் - இவர் இரண்டாவது கலிஃபா ஆவார். இவர் முஹம்மதுவுடைய இரண்டாவது
நெருக்கமான தோழராவார். அவருடைய ஆட்சி சுமார் 12 அல்லது அதற்கு அதிகமான
வருடங்கள் நீடித்தது. முஸ்லீமல்லாத நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி இவர்
இஸ்லாமிய அரசை பெரிதாக விரிவடையச் செய்தார்.

அலி – இவர் முஹம்மதுவுடைய மருமகனாக இருந்தவர், முஹம்மதுவுடைய மகளாகிய
பாத்திமாவைத் திருமணம் செய்திருந்தார். அலி யுத்தத்தில் முக்கியமான சில
சாதனைகளை செய்த ஒரு வலிமையான சிறந்த முஸ்லீம் போர்வீரராக இருந்தார்.
"சிறப்பாக வழிநடத்தப்பட்ட" கலிஃபாக்களில் அலி நான்காவது நபர் ஆவார்.
அலிக்கு ஹஸேன், ஹுஸைன் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். (இவர்களில்
ஹுஸைன் என்பவர் பின்னாட்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்).

பாத்திமா – முஹம்மதுவுடைய ஒரு மகள், அலிக்கு மணமுடித்துக்
கொடுக்கப்பட்டவர். முஹம்மது மரித்த சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு
இவர்களும் மரித்து விட்டார்கள்.

இப்னு அப்பாஸ் - முஹம்மதுவுடைய ஒன்று விட்ட சகோதரன். இவர் ஆரம்பகால‌
இஸ்லாமிய அறிஞர்களில் மிகச் சிறந்த ஒருவராக விளங்கினார். "யாத்திரிகனின்
நம்பிக்கை (Reliance of the Traveller) [5]" இவரைப் பற்றிச் சொல்லும்
போது, இவர் "1660 ஹதீஸ்களை அறிவித்துள்ளார், ஒரு பெரிய எண்ணிக்கையிலான
குர்‍ஆன் விளக்கவுரைகளை வழங்கியிருக்கிறார், கலிஃபாவான உமர் சட்டப்படியான
முடிவுகளை எட்டுவதற்கு இவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்" என்று கூறுகிறது.
அமைப்பு:

அக்கம் பக்கத்து இனத்தார்களை அச்சுறுத்துவது, மிரட்டடுவது மற்றும்
பலவந்தமாக பணம் பறிப்பது போன்றவற்றால் முஹம்மது தனிப்பட்ட விதத்தில் ஒரு
பெரும் செல்வத்தை குவித்தார். ஆனால், அவர் ஆடம்பரமாக வாழ்ந்தார் என்று
அவசரப்பட்டு தவறான முடிவை நீங்கள் எடுத்துவிடாதீர்கள். முஹம்மது இந்த
செல்வங்களை தன் விருப்பப்படி செலவிடவில்லை, மிகவும் ஆடம்பரமாக வாழவில்லை.
அதற்கு பதிலாக முஹம்மது மிகவும் சிக்கனமாக வாழ்ந்தார். அவர் தன்னுடைய
ஆஸ்திகளை தன்னுடைய ஏழை பின்னடியார்களுடைய‌ நன்மைக்கு
பயன்படுத்துவதற்கும், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது போர் தொடுப்பதற்கும்
பயன்படுத்தினார். தன்னுடைய மரணத்திற்கு முன்பதாக முஹம்மது தன்னுடைய
ஆஸ்தியை பற்றி ஒரு அறிக்கையை கொடுத்தார்: "முஹம்மது தமக்கு முன்னிருந்த
நபிமார்களின் அடிச்சுவடையே பின்பற்றுவார், அதாவது தன்னுடைய
குடும்பத்திற்கென்று எந்த சொத்தையும் முஹம்மது வைக்கமாட்டார்". அவருடைய
ஆஸ்தியானது அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு
பகிர்ந்தளிக்கப்படமாட்டாது மாறாக முன்பு உபயோகப்படுத்தப்பட்டது போல
தொடர்ந்து வினியோகிக்கப்பட வேண்டும். இருப்பினும் அவர் தன்னுடைய மனைவிகள்
மற்றும் அடிமைகளுடைய பராமரிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அவைகளைத் தவிர, கொடுத்து தீர்ப்பதற்கென்று ஒரு சில சிறிய பொருட்களை
முஹம்மது சொல்லி வைத்தார்.
முஹம்மது மரித்த உடனே கலிஃபாத்துவம் (ஆட்சிபொறுப்பு) அபூ பக்கருக்கு
கொடுக்கப்பட்டது. முஹம்மது மரித்த மறுநாளே, சதிதிட்ட சம்பவங்கள் கசியத்
தொடங்கின . . .

(கீழே, "கிதாப் அல் தபாகத் அல் கதீர்" என்ற இஸ்லாமிய புத்தகத்திலிருந்து
பல வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் கொடுக்கப்படுகின்றன - "Kitab al-Tabaqat
al-Kabir, (Book of the Major Classes), Volume 2, by Ibn Sa'd, pages
391 – 394: [6].)
அல்லாஹ்வின் தூதருடைய சொத்தின் கணக்கும், அவர் வைத்துவிட்டுப் போன ஆஸ்தியும்.

அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: "தினார்கள் மற்றும் திர்ஹாம்ஸ்கள்
(பணம்) என்னுடைய வாரிசுகளுக்கிடையில் பங்கிடப்படக் கூடாது, நான் எதை
வைத்துவிட்டுப் போகிறேனோ அது என் மனைவிமார்கள் மற்றும் வேலைக்காரர்களுடைய
பராமரிப்புக்கு செலவிடப்பட்ட பிறகு தானதர்ம செயல்களுக்கு போகவேண்டும்.
(பக்கம் 391,392)

உமர் கூறுவதை நான் கேட்டேன், "அல்லாஹ்வின் தூதர் மரித்த நாளிலே அபூ
பக்கருக்கு பயாஹ் அளிக்கப்பட்டது. அதற்கு பின் வந்த நாளிலே பாத்திமா அபூ
பக்கரிடம் வந்தார்கள், அலி அவர்களோடு வந்தார். (பக்கம் 393)

பாத்திமா அபூ பக்கர் அவர்களிடம் வந்து தன் தந்தை விட்டுச் சென்ற
சொத்தில் தனக்கு இருக்கும் பங்கை கொடுக்குமாறு கோரினார்கள். அல்- அப்பாஸ்
கூட‌அபூ பக்கர் அவர்களிடம் வந்து சொத்தில் தனக்கிருக்கும் பங்கை கொடுத்து
விடும் படி கோரினார். அலியும் அவர்களோடு வந்திருந்தார். அப்பொழுது அபூ
பக்கர்: "நாம் பரம்பரை சொத்துக்களை விட்டுச் செல்வதில்லை, நாம் சதகாஹ்
என்றுச் சொல்லக்கூடிய தானதர்மத்தை மட்டுமே விட்டுச்செல்கிறோம்" என்று
அல்லாஹ்வின் தூதர் சொன்னார். யாருக்கு நபியவர்கள் பராமரிப்பு செலவுகளைச்
செய்யச்சொன்னார்களோ, அவர்களுக்குதான் நான் பராமரிப்புகளை ஏற்படுத்துவேன்"
என்று பதில் அளித்தார். இதற்கு அலி கூறினார், "சுலைமான் (சாலமோன்)
தாவூத்தின் சொத்துக்களை பெற்றுக்கொண்டார், மேலும் சகரியா கூறினார், அவன்
என்னுடை வாரிசாகவும், யாக்கோபுடைய‌ பிள்ளைகளின் வாரிசாகவும் (சகரியாவும்
யோவான் ஸ்நானனும்) இருப்பார்" என கூறினார். இதற்கு அபூ பக்கர் அவர்கள்,
"அல்லாஹ்வினால், இது இருப்பதைப் போன்றே இருக்கிறது, நான்
அறிந்திருக்கிறது போலவே நீயும் அறிந்திருக்கிறாய்" என்று அலி அவர்களிடம்
கூறினார். அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான்
பேசுகின்றது" என கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும்
கலைந்து சென்றுவிட்டார்கள். (பக்கம் 393)

பாத்திமா அவர்கள் அபூ பக்கரிடம், "நீங்கள் மரிக்கும் போது உங்கள்
சொத்துக்களை யார் வாரிசாக பெற்றுக்கொள்வார்கள்?" என்று கேள்வி
கேட்டார்கள். இதற்கு அவர், "என்னுடைய பிள்ளைகளும் உறவினர்களும்" என்று
பதில் அளித்தார்கள். அதற்கு பாத்திமா அவர்கள் "இறைத்தூதருடைய வாரிசாக
நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டீர்கள், ஆனால், எங்களை மட்டும்
தூரமாக்கிவிட்டீர்கள், இது எப்படி நியாயமானதாக இருக்கும்?" என்று
கேட்டார்கள். இதற்கு அபூ பக்கர் அவர்கள், "ஓ, அல்லாஹ்வின் தூதருடைய‌
மகளே, நான் உங்கள் தகப்பனுடைய நிலத்தையோ, தங்கத்தையோ, வெள்ளியையோ,
அடிமைகளையோ, சொத்துக்களையோ எடுத்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்கள்.
இதற்கு பதிலாக பாத்திமா அவர்கள், "அல்லாஹ்வின் பங்கு (குமூஸ் அதாவது
ஐந்தில் ஒரு பங்கு) என்று அவர் எங்களுக்கு ஒதுக்கினதும், எங்களுடைய
பங்காக மட்டும் இருக்கின்றதுமான அது உங்கள் கைகளில் இருக்கின்றது" என்று
கேட்டார்கள். அப்போது அபூ பக்கர் அவர்கள் "குமுஸ் என்பது நான் உயிரோடு
இருக்கும் போது நான் புசிக்கும் படி அல்லாஹ் எனக்கு கொடுத்த பங்காகும்,
நான் மரித்த பிறகு இது முஸ்லீம்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும்"
என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியதை நான் செவியுற்றேன் என்று பதில்
அளித்தார்கள்." (பக்கம் 392)

அபூ பக்கர் கூறினார், "நாம் சொத்துக்களை வைத்துவிட்டு போவதில்லை,
நாம் வைத்துவிட்டு போகும் சொத்துக்கள் "ஸதகா" என்ற தானதர்ம கணக்கில்
சென்றுவிடுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் நிச்சயமாக சொன்னார். இந்த
பணத்திலிருந்து முஹம்மதுவின் குடும்ப அங்கத்தினர்களின் பராமரிப்புக்கள்
செய்யப்படும். அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தானதர்ம பங்கு (ஸதகா)
எப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டு வந்ததோ அதை நான் அல்லாஹ்வின்
மீதா(ணையா)க மாற்றமாட்டேன்". அல்லாஹ்வின் தூதர், எப்படி செலவழித்துக்
கொண்டிருந்தாரோ அதே விதத்தில் நான் தொடர்ந்து அதிலிருந்து செலவழிப்பேன்.
இப்படி பதில் அளித்து, அபூ பக்கர் அவர்கள், பாத்திமாவிற்கு எதையும்
கொடுப்பதற்கு மறுத்து விட்டார்;. அதன் விளைவாக பாத்திமா அபூ பக்கரிடம்
கோபமுற்றவராக அவரை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு பாத்திமா அவர்கள்
தாம் மரிக்கும் வரைக்கும் அபூ பக்கர் அவர்களிடம் பேசவே இல்லை.
அல்லாஹ்வின் தூதருக்கு பிறகு பாத்திமா அவர்கள் ஆறு மாதங்கள்
உயிரோடிருந்தார்கள். (பக்கம் 392)

ஸஹி முஸ்லீம் ஹதீஸ் [7] பின்வரும் விவரங்களை கூடுதலாக கொடுக்கிறது.

ஸஹி முஸ்லீம் - 3618 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள்.
என் மனைவிமார் களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் உதவியாளரின்
ஊதியமும் போக நான் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இதை அபூஹுரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹிஹ் முஸ்லீம் - 3614 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, அவர்களின் துணைவியர்
உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம்
அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய
சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான்
அவர்களைப் பார்த்து, "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்)
வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே' என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவில்லையா?'' என்று
கேட்டேன்.

கலிஃபா பொறுப்பை ஏற்ற பிறகு 2 வருடங்கள் கழித்து அபூ பக்கர் மரித்துப்
போனார், உமர் கலிஃபாவாக பொறுப்பேற்றார். ஆனால், அலியும் இப்னு அப்பாஸூம்
அந்த வாக்குவாதத்தை அந்த சொத்துக்கள் பற்றிய சர்ச்சையை விட்டுவிடுவதாக
தெரியவில்லை - தங்களுக்கு பணம் வேண்டும் என்றே அவர்கள் நின்றனர்.
தொடர்ந்து நடந்த இந்த பிரச்சனையைப் பற்றி ஸஹி முஸ்லீம் கீழ்கண்டவாறு
கூறுகிறது:

ஸஹி முஸ்லீம் - 3612

மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

...அப்போது (உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர்) யர்ஃபஉ என்பார்
வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான்
பின்அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ்
(ரலி) ஆகி யோர் (தங்களைச் சந்திக்க வந்துள்ளனர். தாங்கள் அவர்களைச்)
சந்திக்க அனுமதி யளிக்கிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி)
அவர்கள் "ஆம்' என அவர் களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும்
உள்ளே வந்(து, அமர்ந்)தனர்.

பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, "அப்பாஸ் (ரலி) அவர்களும்
அலீ (ரலி) அவர் களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள்.
அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர் களா?'' என்று கேட்டார். உமர் (ரலி)
அவர்கள் "ஆம்' என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும்
பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான)
இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று சொன்னார்கள்.
அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களும் உடன்வந்திருந்த அவர்களுடைய நண்பர்களும்
அடங்கிய) அக்குழுவினர், "ஆம்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த)
இருவருக்கு மிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை
விடுவித்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும்
அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத்
தோன்றியது.)

அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த
அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன்
பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள்
விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?''என்று
(அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் "ஆம் (அவ்வாறு சொன்னதை
நாங்கள் அறிவோம்)'' என்று பதிலளித்தனர்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் - பிரதிவாதியுமான) அலீ (ரலி)
அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, "எந்த அல்லாஹ்வின்
கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்ற னவோ அவன் பொருட்டால்
உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
"(நபிமார்களான எங்க ளுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள்
விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?''
என்று கேட்டார்கள்.

அவ்விருவரும் "ஆம் (அவ்வாறு அவர்கள் சொன்னதை நாங்கள் அறிவோம்)''
என்று விடையளித்தனர். உமர் (ரலி) அவர்கள், "(போரிடாமல் கைப்பற்றப் பட்ட)
இந்த "ஃபைஉ'ச் செல்வத்தை தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ்
ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவ ருக்கும் அவன் அதைச்
சொந்தமாக்கவில்லை'' (என்று கூறிவிட்டு,) "(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத்
தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும்
இத்தூதருக்கும்... உரியது'' (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
(இதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்குத்
தெரியாது.) தொடர்ந்து "எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ நளீர்
குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்ட பின்) உங்களிடையே
பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் உங்களைவிட தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை
விட்டுவிட்டுத் தமக்காக அதை எடுத்துக்கொள்ளவு மில்லை. இறுதியாக
(இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் ஒதுக்கிய அந்நிதியிலிருந்து) இந்த
(ஃபதக்) செல்வம் மட்டுமே எஞ்சியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம்
வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு)வந்தார்கள். அப்படிக்
கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த
அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றி ருக்கின்றனவோ அந்த
அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள்
அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர் "ஆம் (அறிவோம்)''
என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம்
கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரலி) அவர்களிடமும்
"அதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும்
"ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள்,
"பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது (ஆட்சித் தலைவராக
வந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய
(ஆட்சிக்குப்) பிரதி நிதியாவேன்' என்று கூறினார்கள். (அச்செல் வத்தை தமது
பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்.) அப்போதும் நீங்கள்
இருவரும் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள்
உம்மு டைய சகோதரரின் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச்
சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம்
மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச்
சொத்தைக் கேட்டார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்
செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்' என்று பதிலளித்து (அதைத் தர
மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப்
பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள்.
ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்;
நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே
பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்;
அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும்
செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும்
பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள். ஆனால், இந்த
விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்;
நேர்வழி நின்று, வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு நீங்களும் (இதோ) இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும்
ஒரே நிலைப் பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள்
இருவரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள்
இருவரிடமும் நான் "நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை
ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்
எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக் குறுதியளிக்க
வேண்டும்' என்று நான் கூறினேன்.

நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப்
பெற்றுச் சென்றீர்கள். அவ்வாறுதானே?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்
இருவரும் "ஆம்' என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள்,
"பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி
என்னிடம் வந்துள்ளீர்கள். இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த
விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை
அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியா விட்டால்,
என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக்
கொள்கிறேன்)'' என்று சொன்னார்கள்.

ஸஹி முஸ்லீம் - 3617

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின்
புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்
தந்திருந்த ("ஃபைஉ'ச்) செல்வத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
விட்டுச்சென்றதிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப்
பங்கிட்டுத் தருமாறு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.

அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள்,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான எங்களுக்கு) யாரும்
(சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவை எல்லாம் தர்மம்
ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்'' எனக் கூறி (அதிலிருந்து பங்கு தர
மறுத்து)விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஃபாத்திமா (ரலி)
அவர்கள் ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின்
சொத்துகளிலிருந்தும் மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற
சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர் களிடம்
ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்த எந்த ஒன்றையும் நான்
செய்யாமல் விடமாட்டேன். அதை நான் செய்தே தீருவேன். அவர்களுடைய செயல்களில்
எதையேனும் நான் விட்டுவிட்டால் நான் வழி தவறிவிடுவேனோ என அஞ்சுகிறேன்''
என்று சொன்னார்கள்.

(அபூபக்ர் (ரலி) அவர்களின் மறைவுக் குப் பின்,) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற சொத்தை (கலீஃபா) உமர்
(ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும்
ஒப்படைத்தார்கள். அந்தச் சொத்தி(ன் பராமரிப்பி)ல் அப்பாஸ் (ரலி) அவர்களை
அலீ (ரலி) அவர்கள் மிகைத்து (ஓரங்கட்டி)விட்டார்கள்.

கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்து களை (கலீஃபா) உமர் (ரலி)
அவர்கள் (யாரிட மும் ஒப்படைக்காமல்) தமது பொறுப்பி லேயே
வைத்துக்கொண்டார்கள். மேலும், "இவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தர்மமாக விட்டுச்சென்றவை. அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுக்கு ஏற்பட்ட கடமைகளையும் அவசரத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக
(ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சிக்குப்
பொறுப்பேற்பவரிடம் இருக்க வேண்டும்'' என்று சொன்னார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்தபோது),
"அந்த இரு சொத்துகளும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே)
இருந்து வருகின்றன'' என்று சொன்னார்கள்.

சுனான் அபூ தாவுத் [8] பின் வரும் விளக்கங்களை கூடுதலாக தருகிறார்.

சுனான் அபூ தாவுத் - புத்தகம் 19, எண் 2961 (ஆங்கில எண்)

உமர் இப்னு அல்-கத்தாப் கூறியதாவது:

மாலிக் இப்னு ஆவ்ஸ் அல்-ஹத்தான் கூறினார்: உமர் அறிவித்த அனேக
அறிவிப்புக்களில், இந்த அறிவிப்பும் அடங்கும், அதாவது, அல்லாஹ்வின் தூதர்
தனக்கென்று தனிப்பட்ட முறையில் மூன்று காரியங்களை பெற்றுக் கொண்டார்:
அவை: பனு அந்-நதீர், கைபர், மற்றும் பதக் போன்ற போர்களில் கிடைத்த
பொருட்கள் பற்றியதாகும்: பனு அந்-நதீர் இனத்தாரிடமிருந்து கிடைத்த
அனைத்து சொத்துக்களும் இறைத்தூதரின் அவசர தேவைகளுக்காக
ஒதுக்கப்பட்டுவிட்டது. பதக் மூலமாக கிடைத்த அனைத்து சொத்துகளும் பிரயாணம்
செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. கைபார் போரின் மூலம் கிடைத்த
சொத்துக்களை அல்லாஹ்வின் தூதர் மூன்று பாகங்களாக பிரித்தார். இவற்றில்
இரண்டு பாகங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டது, ஒரு பாகம்
இறைத்தூதருடைய குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டது. அவருடைய குடும்பத்திற்கு
வழங்கிய பிறகு ஏதாவது மீந்திருந்தால் அதை "இடம் பெயர்ந்து" வந்த
ஏழைகளுக்கிடையில் பங்கிடுவார்.

இந்த சண்டையைப் பற்றி "தபாரியின் சரித்திரம் [9]" மேலும் விளக்கத்தை கொடுக்கிறது.

பாத்திமா மற்றும் அல்-அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரிடம் வந்து
அல்லாஹ்வின் து}தருடைய சொத்தில் தங்களுடைய பங்கை கொடுக்க வேண்டும் என்று
கேட்டனர். அவர்கள் "பதாக்" என்ற இடத்தில் இருந்த‌ அல்லாஹ்வின் தூதருடைய
நிலத்தையும், கைபர் போரில் மூலமாக கிடைத்த பணத்தில் அவருடைய பங்கையும்
கேட்டுக் கொண்டிருந்தார்கள். அபூ பக்கர் பதில் கூறினார்;, "நம்முடைய,
அதாவது நபிமார்களுடைய சொத்துக்கள் வாரிசுகளால் பெற்றுக்கொள்ள முடியாது
மேலும் நாம் எதை வைத்துவிட்டுப் போகிறோமோ அவைகள் தர்மச்செயல்களுக்கு
கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். முஹம்மதுடைய‌ குடும்பங்கள் அதிலிருந்து
சாப்பிடட்டும் (1) " என்று அல்லாஹ்வின் தூதர் சொல்வதை நான்
கேட்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் செய்வதாக நான் கண்ட எந்த
காரியத்தையும் கைவிடமாட்டேன், அவ்விதமாகவே நானும் செய்வேன்.

பாத்திமா அபூ பக்கரை புறக்கணித்தார் மேலும் தான் மரிக்கும் வரை
அவரிடம் பேசவில்லை. பாத்திமாவை அடக்கம் செய்யும் போதும் அபூ பக்கரை
அனுமதிக்காமல், இரவு நேரத்தில் அடக்கம் செய்தார் அலி. பாத்திமா
உயிரோடிருந்த போது ஜனங்களிடத்தில் அலிக்கு மரியாதை இருந்தது, ஆனால்
பாத்திமா மரித்த பிறகு மக்கள் அவர் பக்கமிருந்து தங்கள் கவனத்தை
திருப்பிக் கொண்டார்கள். அல்-ஜூஹரியிடம் ஒருவர் கேட்டார், "ஆறு மாதங்களாக
அலி தன்னுடைய தேச பக்திக்கான வாக்குறுதியை கொடுக்கவில்லையா?" "இல்லை, அலி
தன்னுடையதை கொடுக்கும் வரையில் பணு ஹஷிமின் ஒருவரும் கொடுக்கவில்லை"
என்று அவர் பதிலளித்தார். (பக்கம் 196, 197)

குறிப்பு 1 கூறுகிறது: "பணு ஹஷிமை மாற்றிவைப்பதில், குறிப்பாக
முஸ்லீம் அரசியல் தலைமைத்துவத்தின் உரிமையிலிருந்து அலியை
மாற்றிவைப்பதில் அபூ பக்கர் மற்றும் உமரால் எடுக்கப்பட்ட முதல் மற்றும்
முக்கியமான படி தான் இது. முஹம்மதுவின் குடும்பத்தின் அங்கத்தினர் அலி
என்று அங்கீகரித்து, அவருடைய சொத்துக்களை கொடுத்து இருந்தால், அலி
ஆட்சியை நடத்துவதற்கான வாசல் விரிவாக திறந்து இருந்திருக்கும். மேலும்
இந்த இரண்டு மூலங்களிலிருந்து வரும் வருமானமும் அதிகபடியாக இருப்பதினால்,
அலிக்கு இன்னும் வலிமை சேர்ந்து இருந்திருக்கும்.

பாடச் சுருக்கம்:

• தன்னுடைய சொத்துக்களை குடும்ப அங்கத்தினர்களுக்கு விட்டு விட்டு
போவதில்லை என்று தான் மரிப்பதற்கு முன்னமே முஹம்மது அறிவித்தார்.

• முஹம்மதுவின் மரணத்திற்கு அடுத்த நாள், முஹம்மதுவின் மகள் பாத்திமா,
பாத்திமாவுடைய கணவர் அலி மற்றும் இப்னு அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரை
சந்தித்து, முஹம்மதுவுடைய ஆஸ்தியிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய
பங்குகளை கொடுத்து விடுமாறு கோரினர். முஹம்மது தனக்கு முன்னிருந்த
நபிமார்களின் அடிச்சுவடுகளை பின்பற்றியிருந்தார், மேலும் அவருடைய குடும்ப
அங்கத்தினர்கள் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கமாட்டார் என்று
சொல்லி அபூ பக்கர் மறுத்துவிட்டார். இருப்பினும், முஹம்மது தவறாக
புரிந்துக்கொண்டார் என்று அலி சரியாக சுட்டிக் காண்பித்தார், அதாவது
நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை விட்டு சென்ற (தாவுத்
சுலைமானுக்கும், ஜக்கர்யா யஹ்யாவுக்கும் (யோவான் ஸ்நானகனுக்கும்))
உதாரணங்களை குர்‍ஆன் பதிவு செய்திருக்கிறது என்று அலி சரியாக சுட்டிக்
காண்பித்தார். இந்த எதிர்ப்பு பிரச்சனையின் இறுதி முடிவாக, தான்
மரிக்கும் வரையிலும் பாத்திமா அபூ பக்கரை வெறுத்து அவரோடு பேசுவதற்கு
மறுத்தார். தன்னுடைய மனைவியை இரகசியமாக அடக்கம் செய்து, அபூ பக்கர்
வருகையை தடுத்துவிட்டு அவரை வெறுப்பதை அலியும் தொடர்ந்தார். அபூ பக்கரோடு
அலி ஒப்புரவாகிக் கொண்டார், ஏனென்றால் செய்யப்பட வேண்டிய ஒரு சரியான
செயல் அது தான் என்பதற்காக அல்ல மாறாக‌ அவர் ஜனங்களுடைய ஆதரவை
இழந்திருந்தபடியால், அதைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறு செய்வதை தவிர
வேறு வழியில்லை என்பதால் அதைச் செய்தார்.

• ஆயிஷாவைத் தவிர முஹம்மதுவின் மற்ற மனைவிகளெல்லாம் தங்களுடைய பங்குகளை
கேட்கும் படி புறப்பட்டனர், ஆனால் "எந்த உரிமை சொத்தும் இல்லை" என்பதைக்
குறித்த முஹம்மதுவின் வார்த்தைகளை திரும்பத் திரும்பத் கூறி ஆயிஷா
அவர்களைத் தடைசெய்தார்.

• அபூ பக்கர் மரித்த பிறகு அலியும் அப்பாஸும் தங்களுக்கு கிடைக்கவேண்டிய
ஆஸ்தியின் பங்கு பற்றி உமரிடமும் கேட்டனர். இதற்கிடையில், தங்கள்
இருவரில் (அலி மற்றும் இப்னு அப்பாஸ்) யாருக்கு சொத்துக்கள்
கிடைக்கவேண்டும் என்று இவ்விருவரும் வாங்குவாதங்களில் இறங்கினர். அலி ஒரு
"பாவியான, துரோகியான, நேர்மையற்ற பொய்யன்!" என்று அப்பாஸ் அழைத்தார்.
அவர்கள் இருவரையும் உமர் கடிந்து கொண்டு, அவர்கள் இருவரும் முன்பு அபூ
பக்கரை ஒரு பொய்யராகவும், பாவியாகவும், துரோகியாகவும்,
நேர்மையற்றவராகவும் கருதினர் என்பதை குறிப்பிடுகிறார்!. பிறகு உமர்,
அவர்கள் தன்னையும் ஒரு பொய்யனாக, பாவியாக, துரோகியாக, நேர்மையற்றவனாக
நினைக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய முகங்களுக்கு நேராக கூறுகிறார்.
பிறகு, அவர்களுடய அழுத்தம், கோபம் மற்றும் பொது புறக்கணிப்பை உமரால்
தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை,, முஹம்மதுவின் கட்டளைகளை தொடர்ந்து
நிறைவேற்றவும் முடியாதவராக இருந்தார், ஆகையால் அவர்கள் இருவருக்கும்
முஹம்மதுவின் ஆஸ்திகளில் சிலவற்றை கொடுத்துவிட ஒப்பந்தம் செய்து கொண்டார்
(தான் பராமரித்து வந்தது போலவே அவர்களும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்
என்ற போலியான தோற்றத்தை உருவாக்கினார்).
கலந்துரையாடல்:

முஹம்மது மரித்த ஒரு நாளே ஆனே நிலையில் அந்த இருண்ட‌ குடும்பத்தின்
அற்பமான சண்டை துவங்கிவிட்டது. நிச்சயமாக அங்கே துக்கம் அனுசரிக்கும்
நாட்கள், மற்றும் ஆன்மீக அமைதி சாந்தி இருக்கவில்லை. முஹம்மது மரித்த
துக்கத்தினால், அவரது குடும்ப நபர்கள் இன்னும் நெருக்கமானவர்களாக மாறி,
ஒற்றுமையுடன் ஒத்துழைக்கும் ஒரு குழு இது தான் என்ற நிலை அங்கு
காணப்படவில்லை. முஹம்மதுவின் குடும்பம் நெருக்கமாக ஒன்று கூடும் கூடுகை
இருந்ததா? மாறாக, எல்லாரும் உடனே பணத்தை அடையும் வழிகளிலே நகர்ந்து
கொண்டிருந்தனர். இப்போது இங்கே கூர்ந்து கவனியுங்கள், வலிமையான இருண்ட
உணர்ச்சிகள் அங்கே இருப்பதை நாம் காணமுடியும்.
பேராசை (GREED)

முஹம்மதுவுடயை நெருக்கமான குடும்ப அங்கத்தினர்களால் காண்பிக்கப்பட்ட
பேராசையை கவனிக்கவும். அந்த (முஹம்மதுவின்) சரீசம் குளிர்ந்துவிட்டது
தான் தாமதம் அதற்குள்ளாகவே அவர்கள் சொத்திலிருக்கும் தங்கள் பங்கை கேட்டு
வாதாடிக் கொண்டிருந்தனர். இந்த ஆஸ்தியில் இச்சை கொண்டவர்களாக
இருந்தபடியால், தங்களுக்குள்ளே பகையோடு வீண் சண்டையிட்டுக் கொண்டனர்.
பேராசை அவர்களுடைய உள்ளத்தில் இரண்டு வருடங்களாக தொடர்ந்து
கொண்டிருந்தது. அபூ பக்கர் மரித்த பிறகு அவர்கள் உமரிடத்திலும் வந்து அதே
சொத்துக்கள் சம்மந்தப்பட்ட‌கோரிக்கைகளை வைக்கிறார்கள்.
வெறுப்பு (HATRED)

ஆஸ்தியை பெறும் முயற்சியில் புறந்தள்ளப்பட்ட போது அவர்கள் அபூ பக்கரை
வெறுத்தார்கள். அலியும் பாத்திமாவும் தம்முடைய‌மரண நாள் வரைக்கும் அவரை
வெறுத்தார்கள். பகையினிமித்தம், அபூ பக்கருக்கு பாத்திமா மரித்துப்
போனதையும் கூட அறிவிக்க மறுத்து இரகசியமாக அடக்கம் செய்து விட்டார் அலி.
இப்னு அப்பாஸ், பாத்திமா, அலி இம்மூவரும் அபூ பக்கரை ஒரு "பாவியாக,
பொய்யராக, துரோகியாக மற்றும் நேர்மையற்றவாராக‌" கருதினர்.
சுவாரஸ்யமானது, ஆகையால், நாம் காணத் தவறக்கூடாத ஒரு விஷயம்:

அபூ பக்கர் காரணம் காட்டி, அலியின் வேண்டுகோளை நிராகரித்த போது,
முஹம்மதுவிற்கு தன் சொந்த குர்‍ஆனே தெரியவில்லை என்று அலி
சுட்டிக்காட்டினார். முஹம்மது மனப்பாடம் செய்திருந்ததாக எண்ணப்பட்ட ஒரு
புத்தகம் (குர்-ஆன்) சொல்லுகிறது, நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக
சொத்துக்களை விட்டுச் சென்றார்கள் என்று கூறுகிறது - பார்க்க குர்‍ஆன்
ஸூரா 27:16 மற்றும் 19:6. அலி அவர்கள் இந்த வசனங்களை அங்கே கூடியிருந்த
குழுவிடத்தில் சுட்டிகாட்டி விட்டார், அவர்கள் அனைவரும் அமைதியானார்கள்,
வாயடைத்துப்போனார்கள், பதில் கூறமுடியவில்லை, ஏனென்றால் முஹம்மதுவுடைய
தவறை அலி சுட்டிக்காட்டி நிரூபித்தபடியால் அவர்கள் அதிர்ச்சியடைந்து
போனார்கள். இதையெல்லாம் விட, இது முஹம்மதுவுடைய சொந்தக் குர்‍ஆன், அதிலே
அவர் தவறு செய்து விட்டார்! அலி சரியாக இருக்கிறாரென்று அறிந்த அபூ
பக்கரால் பதிலுக்கு செய்ய முடிந்ததெல்லாம், "நல்லது இது அவ்விதமே
இருக்கப் போகிறது" என்று சொல்லியது தான்.
விரிவுரையும் கேள்விகளும்

"பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" – என்ற பைபிளின்
வாக்கியம் உண்மையாக இருக்கின்றது. இந்த முஸ்லீம்கள் - முஹம்மதுவின்
பக்தியான குடும்ப நபர்கள் உலக ஆதாயங்களை இச்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த இச்சை அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளும் படி செய்தது.
இப்போது ஸூரா 8:63ன் நிலை என்ன? இவர்களுடைய உள்ளங்களெல்லாம் ஒன்றாக
(அன்பினால்) பிணைக்கப்பட்டிருந்தது என்று நீங்கள் எண்ணுவீர்களா? அநேகமாக
ஒரு காலகட்டத்தில், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்கள் அவ்வாறு
இருந்தார்கள். ஆனால் இங்கே, அவர்களை ஒன்றாக சேர்ப்பதற்கு, அல்லது
பிணைப்பதற்கு அல்லாஹ் இயலாதவராக இருக்கிறார். அல்லது அல்லாஹ்வின் தையல்
வேலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா? மிகச்
சிறந்த இந்த முஸ்லீம்கள் ஒன்றாக இருக்கிறவர்களாக அல்லது
பிணைக்கப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள்
எதிர்பார்த்திருக்கமாட்டீர்களா? அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு,
நம்பிக்கை மற்றும் உண்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள்
எதிர்பார்த்திருக்க மாட்டீர்களா? அதுவும் முஹம்மது அப்போது தான்
மரித்திருந்த நிலையில். உண்மையான இஸ்லாமிய ஆன்மீகம், அமைதி பக்தி அங்கே
காணப்படவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கமாட்டீர்களா? இஸ்லாமுடைய
பக்தி சமர்ப்பணத்திற்கு என்ன ஆச்சு? ஏன் அது இவ்வளவு வேகமாக நீராவியாக
மறைந்துவிட்டது?

இஸ்லாமை அதன் முதல் "அரச குடும்பமே" இவ்வளவு சீக்கிரத்தில்
புறக்கணித்துவிட்டதால், உண்மையாகவே இஸ்லாம் என்பது ஒரு சரியான மார்க்கமாக
அவர்களுக்கு இருந்திருக்குமா?
இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆதார நூற்பட்டியல்:

1) The Bible, New International Version, pub. by Zondervan, Grand
Rapids, Michigan
2) The Nobel Quran, translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali
and Dr. Muhammad Muhsin Khan, published by Maktaba Dar-us-Salam, PO
Box 21441, Riyadh 11475, Saudi Arabia, 1994
3) Bukhari, Muhammad, "Sahih Bukhari", Kitab Bhavan, New Delhi, India,
1987, translated by M. Khan
4) answering-islam.org/Silas/childbrides.htm
5) al-Misri, Ahmad, "Reliance of the Traveler", (A Classic Manual of
Islamic Sacred Law), translated by Nuh Ha Mim Keller, published by
Amana publications, Beltsville, Maryland, USA 1991
6) Ibn Sa'd, (d. 852 A.D.), "Kitab al-Tabaqat al-Kabir", (Book of the
Major Classes), Volume 2, translated by S. Moinul Haq, Pakistan
Historical Society.
7) Muslim, A., "Sahih Muslim", translated by A. Sidiqqi, International
Islamic Publishing House, Riyadh, KSA.
8) Abu Dawud, Suliman, "Sunan", al-Madina, New Delhi, 1985, translated
by A. Hasan
9) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul
wa'l-muluk), Volume 9, State University of New York Press, 1993.
Translated by Ismail K. Poonawala

ஆங்கில மூலம்:ISLAM'S ROYAL FAMILY - PART ONE: MUHAMMAD'S WEALTH

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்