இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்:முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள்
முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள்
இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
முன்னுரை: கிறிஸ்து நேசன் தளத்தில் இருமேனிமுபாரக் என்ற சகோதரர் ஒரு பின்னூட்டமிட்டுள்ளார், அதற்கான பதிலை இந்த கட்டுரையில் நாம் காண்போம். சில இஸ்லாமியர்கள் தங்களுக்கே தெரியாமல் குர்ஆனை தாக்கி எழுதிவிடுவார்கள், அதற்கு விரோதமாக கருத்துக்களை சொல்லிவிடுவார்கள், இதெல்லாம், தங்கள் முஹம்மதுவை காப்பாற்றவும், அவரை பரிசுத்த நபியாக காட்டவும் அவர்கள் செய்கிறார்கள், ஆனால், முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா?
இருமேனிமுபாரக் எழுதியது:
அட கூமுட்டைகளா! கொஞ்சூன்டு அறிவைப் பயன்படுத்தி இருந்தால் இவ்வளவு ஆராச்சி மேற்கொண்டு நீட்டி முழக்கி இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை செய்ததின் மூலம் சொல்ல வந்த சேதி எதுவோ அது அடிபட்டுப் போவதை சாதரணமானவனும் புரிந்து கொள்வான்.அவர் ஒரு இறைத் தூதர்தான் என்பதை இதன் மூலம் அனைவரையும் நீங்களே ஒப்புக் கொள்ள வைக்கிறீர்கள். ஒரு பாவி தன் இறைவனை எப்படி இறைஞ்ச வேண்டும் என்பதை ஒரு இறைத்தூதர்தான் கற்றுக் கொடுக்க முடியும்.மேலும் பாவமே செய்யாமல் தன்னை பாவியாக்கி ஒரு இறைத்தூதர் இறைஞ்சுகின்றார் என்றால் சதா பாவத்திலேயே உழன்று கொண்டிருக்கும் சாதாரண மனிதன் எவ்வாறு இறைஞ்சவேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக எந்த மார்க்கமும் சொல்லித் தரவில்லை என்பது இந்த இடுகையில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. நன்றி... புத்தி கோணலாக இருந்தாலும் மற்றவர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக சொன்னது புரிபவர்களுக்குப் புரியும்.
Source: பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
அருமையான இருமேனிமுபாரக் அவர்களே, உங்கள் கோபத்தை நான் புரிந்துக்கொள்கிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் பெரும்பாடு பட்டு, ஒரு பாவியான மனுஷனை நல்லவன், நீதிமான், பரிசுத்தன் என்றுச் சொல்லி, மக்களை ஏமாற்றி பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கும் போது, குர்ஆனிலிருந்து முஹம்மது ஒரு பாவி என்பதை இவர்கள் வெட்ட வெளிச்சத்தில் காட்டிவிட்டார்களே, என்று வேதனை அடைந்துள்ளீர்கள். இதனை புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், என்ன செய்யமுடியும், உண்மை ஒரு நாள் வெளியே வந்து தானே ஆகவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குர்ஆனில் எழுத்துக்கு எழுத்து மாறவில்லை, இன்று வரை குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று சொல்லி வந்தீர்கள், இப்போது, அடி மீது அடி விழுந்த பிறகு, ஆதாரங்களை முன்வைத்த பிறகு, குர்ஆனில் எழுத்துப் பிழை உண்டு ஆனால், கருத்துப் பிழை இருக்கிறதா என்று சொல்லும் நிலையில் வந்துள்ளீர்கள். அதே போல, முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், ஆனால், இன்னும் சில காலம் சென்ற பிறகு, அவர் நபிப்பட்டத்திற்கு வருவதற்கு முன்பாக பாவம் செய்தார், நபியாக மாறிய பிறகு அப்படி செய்யவில்லை என்று சொல்வீர்கள், இன்னும் சில உண்மைகளை வெளியே காட்டினால், கடைசியாக "முஹம்மதுவும் நம்மைப்போல ஒரு பாவம் செய்யக்கூடிய மனிதர் தான், அவரையும் அல்லாஹ் தெரிந்தெடுத்து, தன் விருப்பத்தை அவர் மூலமாக நிறைவேற்றினார்" என்று சொல்லும் நிலைக்கு வருவீர்கள்.
இனி இருமேனி முபாரக் அவர்களின் கருத்துக்களை படிப்போம், அதற்கான பதிலைக் காண்போம்.
இருமேனிமுபாரக் எழுதியது:
ஒரு இறைத் தூதர்தான் என்பதை இதன் மூலம் அனைவரையும் நீங்களே ஒப்புக் கொள்ள வைக்கிறீர்கள்.
ஈஸா குர்ஆன்:
முஹம்மது ஒரு இறைத்தூதர் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்கள் நம்பக்கூடிய அளவிற்கு அவர் ஒரு நபியாக வாழ்ந்துக்காட்டவில்லை. அவர் ஒரு சராசரி மனிதனைப்போல பாவம் செய்பவர் என்றும், அவர் ஒரு பாவி என்றும் குர்ஆன் சொல்லி இருக்கும் போதும், அவர் பாவமன்னிப்பு கோறும் படி அல்லாஹ் குர்ஆனில் சொல்லியிருந்தும், இன்னும் அவர் பரிசுத்தர் அவர் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஒரு சில இஸ்லாமியர்கள், இவர்களை என்னவென்றுச் சொல்வது... நீங்கள் கூறிய கூமுட்டை என்ற பட்டப்பெயர் இப்போது யாருக்கு பொருந்துகிறது?...
இருமேனிமுபாரக் எழுதியது:
மேலும் பாவமே செய்யாமல் தன்னை பாவியாக்கி ஒரு இறைத்தூதர் இறைஞ்சுகின்றார் என்றால்....
ஈஸா குர்ஆன்:
இருமேனி முபாரக் அவர்களே, உங்களுக்கு முபாரக் கூறுகிறோம்,.. என்னே கண்டுபிடிப்பு, அவர் பாவம் செய்யவில்லையானாலும், தன்னை பாவியாக்கி வேண்டுகிறாரா...? அப்படியானால், குர்ஆன் வசனங்களுக்கு என்ன பொருள்.... ?
உங்களின் கூற்றுப்படி, முஹம்மது பாவம் செய்யவில்லை. முஹம்மது பாவம் செய்யவில்லை என்று நீங்கள் சொல்வது குர்ஆனுக்கு எதிரானது, அதாவது அல்லாஹ்விற்கு முரணானது.
குர்ஆன் சொல்கிறது: முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள் என்று,
இருமேனிமுபாரக் சொல்கிறார்: "அவர் பாவம் செய்யாதவராக இருந்தாலும்...மற்றவர்களுக்கு கற்றுத்தரலாம் இல்லையா?".
யார் சொல்வது உண்மை,...அல்லாஹ்வா அல்லது இருமேனி முபாரக்கா?
குர்ஆன் சொல்வது பொய், அல்லாஹ் சொல்வது பொய்... இருமேனி முபாரக் அவர்கள் சொல்வது தான் உண்மை... அப்படித்தானே
இந்த கூமுட்டை (உமர்) மேற்க்கோள் காட்டும் குர்ஆன் வசனங்களை சிறிது படியுங்கள் அறிவாளி இருமேனிமுபாரக் அவர்களே:
40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
குர்ஆன் 47:19: ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இப்போது சொல்லுங்கள்,
குர்ஆன் சொல்வது பொய்யா மெய்யா?
அல்லாஹ் சொல்வது பொய்யா மெய்யா?
முஹம்மது பாவம் செய்யவில்லை என்று யார் குர்ஆனுக்கு எதிராகச் சொல்கிறாரோ அவர் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்கமுடியும்? கண்டிப்பாக ஒரு காபிராகத் தான் இருக்கவேண்டும். இதற்கு எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது பத்வா கொடுப்பாரா? அல்லது இருமேனிமுபாரக் சொல்வது தான் உண்மை, குர்ஆன் சொல்வது பொய் என்று பத்வா கொடுப்பார்களா?
இருமேனிமுபாரக் அவர்களின் கூற்றுப்படி, அல்லாஹ் குர்ஆனில் சொன்னது பொய். ஏனென்றால் அல்லாஹ்வை விட இன்றையை இஸ்லாமியர்களுக்குத் தான் முஹம்மது பற்றி அதிகமாகத் தெரியும்... அதனால் தான் முஹம்மது ஒரு பரிசுத்தர் என்று சொல்லிகொண்டு இருக்கிறார்கள்.
இருமேனி முபாரக் அவர்களுக்கு கேள்விகள்:
1. முஹம்மது பாவம் செய்யவில்லை என்றுச் சொன்னால், அல்லாஹ் குர்ஆனில் சொல்வது பொய்யா?
2. உன் பாவங்களுக்கு மன்னிப்புக் கேள் என்று ஏன் அல்லாஹ் முஹம்மதுவிற்கு கூறவேண்டும்.
3. அவர் பாவம் செய்யும் ஒரு சாதாரண மனிதர் தான், அவருக்கும் பாவமன்னிப்பு வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது, இதற்கு ஆதாரம் குர்ஆன் 40:55, 48:2 & 47:19: வசனங்கள். அவர் பாவம் செய்யாதவர் என்பதை நிருபிக்க இருமேனி முபாரக் அவர்கள் எந்த ஆதாரத்தை காட்டப்போகிறீர்கள்? குர்ஆனிலிருந்து வசனங்களைக் காட்டமுடியுமா?
4. அப்படி வசன ஆதாரங்களை காட்டவில்லையானால், அல்லது இந்த மேற்கூறிய குர்ஆன் வசனங்கள் பொய் என்று நீங்கள் நிருபிக்கவில்லையானால், முஹம்மது சாதாரண மனிதர்களைப் போல ஒரு பாவி தான், அவருக்கும் பாவ மன்னிப்பு தேவை தான் என்பது நிருபனம். இதற்கு எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது பதிலைத் தரலாம். ஒட்டு மொத்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் இது ஒரு கேள்வியாக வைக்கப்படுகிறது.
குர்ஆனைத் தான் இருமேனிமுபாரக் நம்பவில்லை... ஹதீஸ்களையாவது நம்புகின்றாரா என்று பார்க்கலாம்...
1) முஹம்மதுவின் முந்தி செய்த பாவம், பிந்தி செய்கின்ற பாவம், பகிரங்கமாக செய்த பாவம், இரகசியமாக செய்த பாவம்:
முஹம்மதுவின் முந்தி செய்த பாவம் என்றால் அது எந்த காலகட்டம்? அவர் நபியாக தன்னை பிரகடனம் செய்துக்கொண்டதற்கு முன்பா? பிந்தி செய்த பாவம் என்றால், அவர் நபியாக தன்னை பிரகடனம் செய்துக்கொண்ட பிறகா?
இரகசியமாக செய்த பாவம் என்றால், யாருக்கும் தெரியாமல் யாரும் பார்க்கமாட்டார்கள் என்று நினைத்து தற்கால சாமியார்கள் செய்கிறார்களே, அது போல இரகசியமாக செய்த பாவங்களா?
எது எப்படியானாலும், தான் செய்த பாவம் பெரியது, அதற்கு மன்னிப்பு கட்டாயமாக தேவை என்பதை மட்டும் முஹம்மது அறிந்திருந்தார்.
பாகம் 1, அத்தியாயம் 10, எண் 832
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ......
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் 'இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். ..... உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு . நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நமை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை' என்று கூறிவார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7442
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகை தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! எங்கள் அதிபதியே! ...... எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களையும், என்னைவிட எதை நீ நன்கு அறிந்துள்ளாயோ அதையும் மன்னித்தருள்வாயாக . உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை.82
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6317
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:
அல்லாஹும்ம! லக்கல் ஹம்து, .......
(பொருள்: இறைவா! ..... உன்னிடம் நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக . நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' அல்லது 'உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
2) ஒரு நாளுக்கு எழுபது முறைக்கு அதிகமாக பாவமன்னிப்பு: முஹம்மது
மஹா பரிசுத்தர் ஏன் ஒரு நாளுக்கு எழுபதுக்கும் அதிகமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும்?
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6307
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)
3) தன் பாவங்களை கழுவி, அவைகளை தூரப்படுத்தும் என வேண்டும் முஹம்மது:
முஹம்மது தன் உள்ளத்தில் உள்ள அழுக்கை கழுவும் படி வேண்டுகிறார், இதற்கு உதாரணமாக அழுக்கான துணியை மேற்க்கோள் காட்டுகிறார், தன் பாவங்களை தன்னை விட்டு தூரப்படுத்தவேண்டும் என்று வேண்டுகிறார்.
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ ...' என்று பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், .... இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)
முடிவுரை:
இருமேனி முபாரக் அவர்களே, இந்த ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன. இவைகள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களா அல்லது பொய்யான ஹதீஸ்களா? இரவு நேரங்களில் எழுந்து கூட முஹம்மது தன் பாவங்களுக்காக மன்னிப்பை கேட்டுள்ளார்.
இப்போது என்னச் சொல்கிறீர்கள்..... மற்றவர்களுக்கு கற்றுத் தரவே இரவு நேரங்களிலும் எழுந்து இப்படி பாவமன்னிப்பு கோரினாரோ...?
கடைசியாக, குர்ஆன் சொல்வதை நம்புகிறீர்களா? அல்லது ஹதீஸ்கள் சொல்வதை நம்புகிறீர்களா? அல்லது இவ்விரண்டையும் உதரித்தள்ளிவிட்டு, உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மேடையில் சொல்லும் பொய்களை நம்புவீர்களா? முடிவு உங்கள் கையில்.
இந்த விவரங்கள் அனைத்தும், குர்ஆன், மற்றும் புகாரி ஹதீஸ்களிலிருந்து எடுக்கப்பட்டது, இது தவிற அவரது சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) உள்ளது, தேவைப்பட்டால், அதிலிருந்து முஹம்மது செய்த பாவங்கள் என்ன? என்ற விவரங்கள் எடுத்து காட்டப்படும். இதர கட்டுரைகள்:
இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1
முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19)
முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)
முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
ஈஸா குர்ஆன் - http://isakoran.blogspot.com
--
3/20/2010 01:58:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது