குர்ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
குர்ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
Slave-girls as sexual property in the Quran
ஆசிரியர்: ஜேம்ஸ் எம். அர்லாண்ட்சன்
அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா?
மேற்கத்திய நாடுகளிலும் (இதர நாடுகளிலும்) இஸ்லாமுக்கு மதம் மாறும் அநேகர் பெண்களாயிருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமுக்கு மாறினேன் என்று சொல்லும் ஒரு பெண்ணின் மின்னஞ்சல் எனக்கு வந்தது. இந்த மார்க்கத்தின் எல்லா விவரங்களையும் இந்தப் பெண்கள் அறிந்திருந்தால் இஸ்லாமுக்கு மாறுவார்களா? பெண்கள் இந்த ஆபத்தான முடிவை எடுப்பதற்கு முன் அறிவுடமையோடு சற்று நின்று இரண்டாம் முறை யோசிக்க வெண்டும். (ஆனால் இஸ்லாமை விட்டு மறுபடியும் திரும்பிச்செல்வது என்பது அநேக இஸ்லாமிய நாடுகளில் மரணத்தண்டனைக்கு உரியதாக உள்ளது)
வெறும் ஐந்து தூண்களோடு மட்டும் நின்றுவிடாமல், இஸ்லாம் இன்னும் அதிக ஆழமாக செல்கிறது. அதன் புனித வார்த்தைகளில் விரும்பத்தகாத அநேக உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. இந்த கட்டுரையின் நோக்கம் என்னவெனில் இப்படிப்பட்ட உண்மைகளில் இன்னும் ஒன்றை வெளிக் கொண்டுவந்து, அதன் மூலம் எல்லா நிகழ்வுகளையும் மக்கள் முழுமையாக அறிந்துக்கொள்ள வகை செய்வது மற்றும் இதன் மூலம ஒரு சரியான முடிவை இஸ்லாமியர்கள் எடுக்க உதவுவதாகும்.
இயேசு ஒரு சிறந்த வழியைக் காண்பித்து சென்று இருக்கும் போது, அதன் பிறகு அறுநூறு வருடங்களுக்குப் பின்பு, ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்ஆனில் இறக்கியிருப்பாரா?
அமைதி நேரங்களில் அடிமைப் பெண்களோடு செக்ஸ்:
Sex with slave-girls in times of peace:
கி.பி 622 ல் தன்னுடைய சொந்த நகரத்திலிருந்து மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரா அல்லது இடம் பெயர்நது செல்வதற்கு முன்பு, அவர் மக்காவில் இருக்கும் போது இந்த 23ம் சூரா (அதிகாரம்) வெளிப்படுத்தப்பட்டது. அவருடைய பணியின் ஆரம்பத்தில் ஒரு அளவிற்கு அவர் பாடுகளை அனுபவித்த போதும் அவர் யார் மீதும் போர் தொடுக்கவில்லை, எனவே இவை அமைதியின் வருடங்களாக இருக்கிறது. இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.
சூரா 23:5-6 ல் குர்ஆன் சொல்லுகிறது:
முஹம்மது ஜான் மொழியாக்கம்:
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லதுதங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
பீஜே மொழியாக்கம்:
தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக்கொள்வார்கள், அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்
Maududi Translation:
5 [Most certainly true believers] . . . guard their private parts scrupulously, 6 except with regard to their wives and those who are legally in their possession, for in that case they shall not be blameworthy. (Sayyid Abul A'La Maududi, The Meaning of the Quran, vol. 3, p. 237)
இங்கே முக்கியமான வார்த்தைகள் "தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (those who are legally in their possession)" என்பதாகும். மௌதுதி (Maududi: மரணம் - 1979) என்பவர் மிகவும் மதிக்கப்பட்ட குர்ஆன் விரிவுரையாளர், அவர் இவ்வார்த்தைகளுக்கு பொருள் கூறுகிறார், அதாவது "அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது நியாயமானது" என்று விளக்கிக் கூறுகிறார்.
மௌதுதி (Maududi) எழுதுகிறார்:
இரண்டு விதமான பெண்களிடமிருந்து தங்கள் இரகசிய உறுப்புகளை மறைத்து கொள்ள வேண்டியதில்லை:
அ) மனைவிகள்
ஆ) ஒருவனுடைய நியாயமான பங்கிலிருக்கும் பெண்கள், எ.கா அடிமைப் பெண்கள்.
ஆக, இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது.
Two categories of women have been excluded from the general command of guarding the private parts: (a) wives, (b) women who are legally in one's possession, i.e. slave-girls. Thus the verse clearly lays down the law that one is allowed to have sexual relation with one's slave-girl as with one's wife, the basis being possession and not marriage. If marriage had been the condition, the slave-girl also would have been included among the wives, and there was no need to mention them separately. (Ibid. p. 241, note 7)
அடிமை முறையை மட்டுமல்ல, ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதையும் முஹம்மதுவே ஆதரிக்கிறார் என்பதை மௌதுதி (Maududi) கண்டுக்கொள்ளாமல் விடுவது அல்லது விமர்சிக்க மறுப்பதுதான் இந்தப் பிரிவின் முக்கியமான குறிப்பு ஆகும். இஸ்லாமை அதிகமாக பாதிக்காத வண்ணம் எப்படி மௌதுதியும் மற்ற உண்மையான இஸ்லாமியர்களும் தங்கள் நபியைப் பற்றி விமர்சிக்க முடியும்? ஆனால், முஸ்லீம்கள் மனுக்குல நன்மையை கருத்தில் கொண்டு தெளிவாக சிந்தித்தால், கண்டிப்பாக விமர்சிப்பார்கள்.
சூரா 70:29-30ம் வசனங்களும் மக்காவில் வெளிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட சூரா 23:5-6 ஐப் போலவே குறிப்பிடுவதை கவனிக்கலாம். ஆண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை எல்லாரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மனைவிகளிடம் மற்றும் அடிமைப் பெண்களிடமல்ல. இதன் பொருள் என்னவென்றால் - இந்த இரண்டு 'வகை" (மௌதுதியின் வார்த்தைகள்)ப் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதாகும்.
இந்த வசனங்களை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் இந்த இணைதளத்திற்கு செல்லவும். இந்த மற்றொரு இணைய தளத்தில் மூன்று ஆங்கில மொழியாக்கங்கள் இருக்கிறது.
போர்க் காலத்தில் அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது:
Sex with slave-girls in times of war:
இப்போது முஹம்மது மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவிற்கு சென்றுவிட்டார். நம்முடைய அடுத்து குர்ஆன் வசனம் காணப்படும் சூரா 4 வெளிப்படுவதற்குள் அவர் நிறைய போர்களையும் தாக்குதலையும் நடத்திமுடித்திருந்தார். உதாரணமாக, கி.பி 624 ல் பத்ருப் போரில் அவர் மக்காவினர்களோடு சண்டையிட்டார் மீண்டும் கி.பி 625 ல் மக்காவினர்களோடு உஹுத் போரில் சண்டையிட்டிருந்தார். மேலும் அவர் கி.பி 624 ல் யூத குலமான குவாய்னுக்காவையும் கி.பி 625 ல் நதீர் என்ற இனத்தையும் நாட்டை விட்டு அகற்றியிருந்தார். ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் இந்தக் கொள்கையை அவர் மதினாவிற்கு எடுத்துச் சென்றார். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.
சூரா 4:24 ல் குர்ஆன் சொல்லுகிறது:
முஹம்மது ஜான் மொழியாக்கம்
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.…
பீஜே மொழியாக்கம்:
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்... (மற்றும் சூரா 4:3 and 33:50யும் பார்க்கவும்)
Maududi Translation:
And forbidden to you are wedded wives of other people except those who have fallen in your hands (as prisoners of war) . . . (Maududi, vol. 1, p. 319). (See also Suras 4:3 and 33:50)
போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது, அந்த எஜமான்கள் தங்கள் அடிமைப்பெண்களிடம் (சொத்துக்கள் - இஸ்லாமின் படி அடிமைப்பெண்கள் எஜமான்களின் உடமைகள்) உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.
மௌதுதி இந்த வசனத்திற்கான தன்னுடைய விளக்கத்தில் முஸ்லீம் புனித விரர்கள் போரில் தாங்கள் பிடித்த பெண் கைதிகளை அவர்களுடைய கணவர்கள் உயிரோடிருந்தாலும் திருமணம் செய்வது நியாயமானது என்று கூறுகிறார். ஆனால் கணவன்மார்களையும் மனைவிகளோடு சேர்த்து சிறைப்பிடித்திருந்தால் என்ன நடக்கும்? மௌதுதி ஒரு சட்டக் கருத்தை (School of Law) சுட்டிக் காட்டுகிறார், இச்சட்டத்தின்படி முஸ்லீம்கள் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது, ஆனால் வேறு இரண்டு சட்டக் கருத்துகளோ, சிறைபிடிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இடையில் திருமண உறவு முறிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றன. (குறிப்பு 44)
ஆனால் இந்தக் கொடுமையைப் பற்றிய விவாதம் ஏன் எழும்புகிறது? நீதியை புரிந்து கொள்பவர்களுக்கு பதில் தெளிவாக இருக்கிறது. போரில் பிடிக்கப்பட்ட திருமணமான பெண் கைதிகளுக்கும் அவர்களை பிடித்த ஆண் சிறையாளர்களுக்கும் இடையில் எந்த செக்ஸ் உறவும் இருக்க கூடாது. உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது.
இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, ஆனால் அல்லாஹ் அதில் விருப்பமற்றவாராக இருக்கிறார் - இப்படித்தான் குர்ஆன் சொல்லுகிறது.
குர்ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
ஹதீஸ்கள் என்பது குர்ஆனுக்கு வெளியே முஹம்மதுவின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்குவதாகும். மிகவும் நம்பிக்கைக்குரிய தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர் புகாரி என்பவராவார் (மரணம் 870) .
முஸ்லீம் ஜிஹாதிகள் தாங்கள் சிறைப்பிடித்த பெண்கள் திருமணம் ஆனவர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது. பின்வரும் பத்தியில் குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு.
முஹம்மதுவின் சொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்….
அடைப்பு குறிக்குள் [ ] உள்ளதை நாம் எழுதினோம்.
The Prophet sent Ali to Khalid to bring the Khumus (of the booty) and . . . Ali had taken a bath (after a sexual act with a slave-girl from the Khumus).
அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்மதுவின் பதில் என்ன?
அவர்கள் நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.
இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்மது நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்மதுவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்ஆன் சொல்லுகிறது.
மேலும் புனித ஜிஹாதிகள் தாங்கள் பிடிக்கும் பெண் அடிமைகளிடம் விந்து சேர்வதை (coitus interruptus) தடுக்கமாட்டார்கள். ஒருவர் எதிர்பார்க்கும் காரணத்திற்காக அல்ல மாறாக எளிய நீதிக்காக.
இராணுவ முகாம்களில் இருக்கையில், மனைவிகளை விட்டுப் பிரிந்திருக்கையில், முஸ்லீம் ஜிகாதிகள் "அரபு கைதிகளிலிருந்த பெண்களை விரும்பினோம் விரதத்துவம் எங்களுக்கு கடினமாக இருந்தது நாங்கள் விந்து வெளியேற்றம் செய்ய விரும்பினோம்" என்று கூறினார்கள். அவர்கள் இதைப் பற்றி புனித நபியிடத்தில் கேட்டார்கள், அவர் இங்கு என்ன சொல்லவில்லை என்று கவனிப்பது மிக முக்கியமானதாகும்.
அவர் அவர்களை ஹராம் என்று கூறி எந்த விதமான செக்ஸ் செயலும் தவறு என்று தடைசெய்யவோ கடிந்துகொள்ளவோ இல்லை. மாறாக அவர் விதியைப் பற்றிய தன்னுடைய ஆழ்ந்த இறையியலில் மூழ்கிப்போனவராக:
பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542
இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார்.
.... அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று பதிலளித்தார்கள்.
It is better for you not to do so [practice coitus interruptus]. There is no person that is destined to exist, but will come to existence, till the Day of Resurrection. (Bukhari; for parallel hadiths go hereand here)
இந்த பதிலிலிருந்து கிடைக்கும் விவரங்கள் என்னவென்றால், இதை விசாரிக்கும் முஸ்லீம்கள் விந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் பதிலாக செக்ஸ் உடைமைகளாக இருக்கும் பெண்களிடம் எப்படியாவது நடந்துக்கொள்ளலாம், இது தான் முஹம்மதுவின் பதில். யார் பிறக்க வேண்டும் என்பதை விதி நிர்ணயிக்கும். மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை.
எந்த இராணுவத்திலும் சில சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள்(கிரிமினல்கள்) உள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.
இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது.
குர்ஆன் இந்த பாலியல் குற்றத்தை தெளிவான முறையில் : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுச் சொல்லி, நீக்காமலிருப்பது வருத்தத்திற்குரியது.
முடிவுரை:
உள்நாட்டு கலவரத்திற்கு முன் அமெரிக்க எஜமான்கள் தங்கள் அடிமைகளோடு பாலியல் குற்றங்கள் புரிந்ததார்களே (Civil War -1861-1865), அப்படியிருக்க இஸ்லாமைக் குற்றப்படுத்த இந்த கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் யார் என்று கேட்கின்றனர் (உண்மையில் கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் ஒருவரல்ல).
பதில்: அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வெவ்வேறானவை. முதலாவது அமெரிக்காவை தனக்கு புனித வெளிப்பாடு கிடைத்தது என்று சொல்லி முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய சமுதாயத்தோடு ஒப்பிடுவது தவறாகும். அதைவிடச் சிறந்தது, ஒரு மார்கத்தை தோற்றுவித்த ஒருவரோடு (இயேசுவோடு) மற்றொரு மார்க்கத்தை உருவாக்கியவரை (முஹம்மதுவோடு) ஒப்பிடுவது சரியானதாகும்.
இரண்டாவதாக புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் தேவன் ஆண்களுக்கு (கிறிஸ்தவனுக்கோ, அல்லது தனி மனிதனுக்கோ) - அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதியளிக்கவில்லை. இது இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்தையும், இயேசுவை பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாக புரிந்து கொண்ட புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்களின் எழுத்துக்களையும் மீறுவதாக இருக்கும். ஒருவேளை அமெரிக்கர்கள் தவறுதலாக இந்தக் குற்றத்தை செய்திருப்பார்கள் என்றால் அவர்கள் தேவனுடைய சட்டத்தை பின்பற்றாதவர்களாவார்கள். ஆனால் குர்ஆன் இந்தக் காரியத்தை நியாயப்படுத்தி சட்டமாக்கியுள்ளது. இந்த புத்தகம் காபிரியேல் மூலமாக முஹம்மதுவிற்கு அல்லாஹ்விடத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்ட புனித புத்தகமாகவும் கூறப்படுகிறது. நன்றாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் ஒரு கொடிய நிர்ப்பந்தமான நிலையிலிருக்கும் (அடிமைகளாக இருக்கும்) பெண்களோடு செக்ஸ் வைப்பது தவறு என்று காண்பான்.
இஸ்லாமுக்கு இருக்கும் இந்த முக்கியமான பிரச்சனை, அமெரிக்க வரலாற்றைக் கேள்வி கேட்பதைவிட பெரிதானதாகும்.
பின்வரும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட வேண்டும்:
இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆனும், நல்ல நபி என்று கருதும் முஹம்மதுவும், இஸ்லாமும் மனித சமுதாயத்தை ஒரு புதிய நூற்றாண்டிற்குள் சரியான முறையில் நடத்திச் சென்று வழி காட்ட முடியுமா?
இஸ்லாமுக்கு வெளியே இருந்து இந்த இஸ்லாமிய சட்டங்களை தகுந்த சான்றுகளோடு ஆராய்ந்து பார்க்கும் நமக்கு, "வாழ்நாளெல்லாம் இஸ்லாமுக்கே பக்தியாக இருக்கவேண்டும்" என்ற கோட்பாடுகளினால் குருடர்களாக்கப்படாத நமக்கு, இந்த வலிமையான கேள்விக்கு பதில் தெளிவாக உள்ளது. அதாவது, இந்த புதிய நூற்றாண்டில் கண்டிப்பாக இஸ்லாமிய சட்டங்கள் மனித இனத்தை வழிநடத்துவதற்கு தகுதியுடையவைகள் அல்ல என்பதாகும்.
எனவே தெளிவாக சிந்திக்கும் எல்லா முஸ்லீம்களும் மார்க்கதின் மூலம் அடக்குபவர்களை தூக்கியெறிந்து விட்டு முதலாம் உலகப்போருக்கு பின் துருக்கியில் ஏற்பட்டது போல ஒரு சுய புரட்சியை உண்டாக்க வேண்டும். ஒருவேளை ஈரானிலே இது நடக்கலாம், ஈராக் தங்கள் ஷரியா சட்டத்தை நீக்கிவிட்டு மக்களாட்சிக்கு நேராக தங்கள் அடியை எடுத்து வைக்கலாம். அவர்கள் இந்த குர்ஆனையும் முஹம்மதுவின் முன் உதாரணங்களையும் விட்டு வெளியேற வேண்டும்.
இப்படிப்பட்ட புரட்சி ஏற்படும் வரைக்கும், மார்க்கத் தலைவர்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ள பல வசனங்களை துறக்கும் வரையிலும், இந்த சமயத்திற்கு வெளியே இருக்கும் நாம் முஹம்மதுவின் மார்க்கத்தை அவநம்பிக்கை கொள்ள அனுமதிக்கப்படுகிறோம்.
இந்த மார்க்கத்திற்கு மாற நினைக்கும் பெண்கள் கொஞ்சம் நின்று ஒன்றுக்கு இரண்டு தடவை நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
துணைச் சேர்க்கைகள்:
1. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES
இந்த கட்டுரையானது யுத்தத்தில் பிடிக்கப்படும் பெண்களோடு செக்ஸ் வைப்பது பற்றிய குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களை குறிப்பிடுகிறது. மேலும் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த தலைப்புகளில் கூறுவதைப் பற்றியும் ஆராய்கிறது. இவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள். இக்கட்டுரையின் கடைசியில் ஒரு பிறசேர்க்கையில் பழைய ஏற்பாடும் கூட இச்செயலுக்கு ஆதரவளித்திருக்கிறது என்ற ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு இதன் ஆசிரியர் பதிலளிக்கிறார்.
2. Women in Islam - part 3
இந்த அடுத்த கட்டுரை, இஸ்லாமிய ஆண்களுக்கு அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ள இஸ்லாம் அனுமதி அளிக்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்கிறது (சில பத்திகளைத் தாண்டி படிக்கவும்). இரண்டு பழைய ஏற்பாட்டு நிபுனர்கள், பழைய ஏற்பாட்டில் யுத்தத்திற்கு பிறகு திருமணம் எப்படி செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைப் பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
3. Adultery: Do it! Do it! Do it!
இந்த கட்டுரை, முஹம்மது தன் இராணுவ வீரர்களை உற்சாகமூட்டி போரில் பிடிபட்ட பெண்களோடு "செய்யுங்கள் - DO IT" என்றுச் சொன்ன விவரம் பற்றி ஆய்வு செய்கிறது.
4. இஸ்லாமும் விபச்சாரமும் முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
முஹம்மதுவிற்கு விசேஷித்த விதமாக கொடுக்கப்பட்ட சிறப்பு திருமண சலுகைகள் பற்றிய ஒரு சிறிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.
5. Slaves of Muhammad - Prophet of Freedom and Equality!
முஹம்மதுவிற்கு இருந்த சொந்த அடிமைகளைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரை விவரிக்கிறது.
6. The Place of Women in Pure Islam
இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன என்பதைப் பற்றி அனேக குர்ஆன் வசனங்கள் மற்றும் அனேக ஹதீஸ்களைக் கொண்டு இக்கட்டுரை விவரிக்கிறது. இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை படித்த பிறகு ஒருவர் என்ன முடிவிற்கு வருவார் என்று கேட்டால் "இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை" என்ற முடிவிற்கு வருவார்.
7. SLAVERY IN ISLAM
பொதுவாக அடிமைத்தனம் பற்றிய விவரங்களோடு, அடிமை வியாபாரத்தை இஸ்லாமியர்கள் எப்படி செய்தார்கள் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இதே நிலை தற்காலத்திலும் எப்படி இஸ்லாமிய நாடுகள் பின்பற்றப்படுகிறது என்பதையும் விளக்குகிறது.
8. Christianity, Islam and Slavery
இந்த சிறிய கட்டுரை, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் அடிமைத் தனம் பற்றியுள்ள வேறுபாடுகளை விளக்குகிறது.
9. Chapter 5: Slavery in Islam
இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரை.
10. Women in Christianity and Islam
இந்த பக்கத்தில் "இஸ்லாமில் மற்றும் கிறிஸ்தவத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் அனேக கட்டுரைகளின் தொடுப்புக்கள் உள்ளன.
11. Index - Slavery
இந்த பக்கத்தில், இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய வசனங்கள், பின் இணைப்புக்கள் அடங்கிய தொடுப்புக்கள், கட்டுரைகள் உள்ளன.
Copyright by James Malcolm Arlandson.
ஆங்கில மூலம்: Slave-girls as sexual property in the Quran
ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்.
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
--
10/02/2010 01:43:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது