ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி
யோவான் 3:21 | சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். |
யோவான் 6:44 | என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். |
நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன்
. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்குர்ஆனையும்
,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் .இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்
,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் .இருந்த
போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4ஐ படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.
4:34 | الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا |
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். |
அதிர்ச்சி
அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடு "இறைவன் இதை எப்படி சொல்ல முடியும்" என்று வாதாடினேன்."அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்".என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.என்னுடைய
பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை.கல்லூரிப்
படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.முதல்
செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.சில
ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.வகுப்புகள்
தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)
எனக்குள்ளே
நான் மிகவும் போராடினேன்"இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?"என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ளமுடியும்
என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்குமுகமதுவிற்க்கு
மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ள "பெண்களின் மனக்குறைபடுகள் " என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.
அதற்கு
பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்ககொடுத்தார்கள்
. "உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக" என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .