The Challenge of Mark 16
மாற்கு 16ன் சவால்
Sam Shamoun அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)
இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள்.
இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:
அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)
இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, "எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)
அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)
இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. "பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:
கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)
இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார் கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (அல்-புகாரி)
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள்.
(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது. (அல்-புகாரி)
பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.
பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.
பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)
விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது
பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617
அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)
இபின் சௌத் தொகுத்த சரிதை " the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:" லிருந்து
ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: "நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்"
மற்றும்
அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : "நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.
அல்-டபரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )
அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".
இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட முடிவுக்குத் தான் வரமுடியும்.
தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.
இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.
மூலகட்டுரை: http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm