இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, July 9, 2009

அல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

 


ல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அல் ஜன்னத்தின்


"யூதர்கள் ஜாக்கிரதை" என்ற எச்சரிப்பிற்கு ஒரு எச்சரிக்கை


முன்னுரை:



எனக்கு ஒரு நண்பர் மார்ச் மாத அல்ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் 17ம் பக்கத்தை ஸ்கான் செய்து படமாக அனுப்பினார். இந்த 17ம் பக்கத்தில் "யூதர்கள் ஜாக்கிரதை" என்ற தலைப்பில், நான்கு வலைத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு "இத்தளங்களை யூதர்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமுக்கு எதிரான பல விவரங்களை அவர்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்கள், மற்றும் யூதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதியிருந்தார்கள். யூதர்கள் பற்றி இஸ்லாமியர்கள் எழுதியிருந்தால் எழுதட்டும் என்று விட்டுவிடலாம், ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நான்கு தளங்களில் ஒரு தளம் "ஆன்சரிங் இஸ்லாம்" தளமாகும். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பிரிவில் "தமிழ் பேசும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருசிலராக சேர்ந்து" கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறோம்.


ஆன்சரிங் இஸ்லாம் தளம், யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கை சொன்னதால், அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு என் பதிலையும், அதே நேரத்தில், அவர் குறிப்பிட்ட இதர தளங்கள் பற்றி ஒரு சில வரிகளையும் எழுதலாம் என்று எண்ணுகின்றேன், அதாவது மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் ஒரு விவரத்தைச் சொல்லும் போது, குறைந்த பட்சம் பட்டியலிடும் அத்தளங்களை ஒரு முறையாவது பார்த்துவிட்டு எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் அல் ஜன்னத் பத்திரிக்கை செய்த வேடிக்கையை தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.


இப்பொழுது, அல் ஜன்னத் பத்திரிக்கை 17ம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.



யூதர்கள் ஜாக்கிரதை




யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள். சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



இந்த முகவரித் தளங்களில் வருகின்ற எந்தச் செய்தியானாலும் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. இதில் நிறைய தகவல்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் யூத சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.



Source: அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17
emphasis mine


ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17




1. முதலாவதாக‌, யூதர்கள் மீது குற்றச்சாட்டுகளை குவிக்கிறது -அல் ஜன்னத் பத்திரிக்கை:


அல் ஜன்னத் பத்திரிக்கையின் கீழ்கண்ட தகவலுக்கு வேறு ஒரு கட்டுரையில் விவரிக்கலாம் என்று விரும்புகிறேன், ஆகையால், இந்த கட்டுரையில், "ஆன்சரிங் இஸ்லாம் தளம்" பற்றிய விவரத்திற்கு மட்டுமே பதிலை அளிக்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள்.



2. முஸ்லீம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்


இஸ்லாமிய உலகில் எது நடந்தாலும் சரி, அதற்கு யூதன் தான் காரணம், இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமை யாராவது விமர்சித்தால் உடனே, அதன் பின்னால் யூதன் இருப்பான், முஸ்லீம்களுக்கு எங்கும் யூதன் எதிலும் யூதன், தூணிலும் யூதன் துரும்பிலும் யூதன் இருப்பான்.


இந்த நிலை தொடருமானால், ஒரு இஸ்லாமியரின் வீட்டில் பிரியாணில் இருக்கும் கறி வேகவிலையானாலும் சரி, அதற்கு காரணம் யூதன் தான் என்று முஸ்லீம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. (இதில் சில விஞ்ஞான விவரங்களையும் இஸ்லாமியர்கள் தருவார்கள், அதாவது இந்தியாவில் வளர்க்கும் ஆடுகளுக்கு தரும் மருந்துக்கள், ஊசிகள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றன, அதனால் தான் கறி வேக வில்லை என்று ஆவேசமாக சொல்லும் இஸ்லாமியர்களும் இருப்பார்கள்.)


3. ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூத தளமா?


அல் ஜன்னத் நான்கு தளங்களில் பெயர்களை குறிப்பிட்டு, அவைகள் யுத தளங்கள் என்றுச் சொல்கிறது. அவைகளில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் பற்றிய விவரத்தை இப்போதுச் சொல்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.




w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



நான் அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க விரும்புவது:


1) நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் உள்ள கட்டுரைகளில் ஒரு சில கட்டுரைகளையாவது படித்தீர்களா? குறைந்த பட்சம் தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகளையாவது படித்ததுண்டா?


2) அப்படி படித்து இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் எத்தனை கட்டுரைகள் உங்களுக்கு, இந்த தளம் ஒரு "யூத தளம்" என்ற எண்ணத்தைக் கொடுத்தது? உங்கள் கணிப்பு/நம்பிக்கை சரியாக இருந்தால், கட்டுரைகளின் தொடுப்புக்களை பெயர்களைத் தரமுடியுமா? ஏனென்றால், நான் அந்த தளம் ஒரு கிறிஸ்தவ தளம் என்பதாலேயே ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து, பதிக்கிறேன். முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக நான் அத்தளத்தின் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சந்தேகம் படும்படி இருக்கின்ற கட்டுரைகளின் பெயர்களை கொடுத்தால், எனக்கு உதவி செய்பவர்களாக இருப்பீர்கள், இதனை செய்யமுடியுமா?


3) அல்லது, இப்படி எதுவுமே படிக்காமல், யாரோ சொன்னார்கள் ஆகையால் நானும் சொல்கிறேன் என்பதாக சொல்கிறீர்களா? ஒரு வேளை யூதனின் பெயரை பயன்படுத்தினால் தான் ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளை முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்தீர்களோ?



ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன, தமிழில் 50க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன? இவைகளில் எந்தெந்த கட்டுரைகளை யூதர்கள் எழுதினார்கள்/எழுதியிருப்பார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?



4. இஸ்லாமுக்கு பதில் சொல்ல/விமர்சிக்க "யூதன்" தான் வேண்டுமா?


ஒருவர் இஸ்லாமை விமர்சித்தால், இஸ்லாமின் உண்மை முகத்தை உலகம் அறியும் படி எழுதினால், அவன் நிச்சயமாக யூதனாகத் தான் இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையா அல் ஜன்னத்திற்கு?



ஒருவன் யூதனாக இருக்கட்டும், கிறிஸ்தவனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும் அல்லது நாத்தீகனாக இருக்கட்டும், ஒரு மதம் அல்லது மார்க்கம் என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வான்? (இன்னும் அந்த மார்க்கத்தை ஸ்தாபித்தவரின் நடத்தையில் ஆபாசமோ அல்லது வன்முறையோ இருந்தால், சொல்லவேண்டியதில்லை கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது).



உலக நியதிக்கு எதிராகவும், சமுதாயத்தில் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சட்டங்களை கொண்டுள்ள இஸ்லாமை விமர்சிக்க ஒரு யூதன் தான் வரவேண்டும் என்பதில்லை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொருவனும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம்.



இந்த நிலை இஸ்லாமுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும், இந்துத்துவத்திற்கும் பொருந்தும் அவ்வளவு ஏன் நாத்தீகனுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் நாத்தீகர்களாக இருந்தால், அவர்களின் வளர்ந்த பிள்ளைகளும் நாத்தீகர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தனக்கு சரி என்று படுகின்ற வழியை மனிதன் பின்பற்றுவான்.



எனவே, எதற்கெடுத்தாலும் யூதன் யூதன் என்றுச் சொல்வதை விட்டு, நேர்மையானவர்களாக குற்றங்களை முன்வைத்தால், உலகம் உங்களை நம்பும்.


5. கிறிஸ்தவ போர்வையில் "யூதன்" தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

ஆன்சரிங் இஸ்லாம் யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவேண்டுமே?


ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், எத்தனை கேள்விகள், பதில்கள் மறுப்புக்கள், மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்கள் மறுப்புகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவாகிய இயேசுவைக் குறித்த கேள்விகளுக்கு பதில்கள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன.


இக்கட்டுரைகளை படிப்பவன் கண்டிப்பாக "இக்கட்டுரைகளை யூதர்கள் தான்" எழுதினார்கள் என்பதை நம்பமாட்டான், ஏனென்றால்,


இஸ்லாமை விமர்சிக்கிறேன் என்பதற்காக ஒரு யூதன் கிறிஸ்தவத்திற்கு ஆதாரவாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பதிப்பானா?


நீங்கள் நினைப்பதுபோல செய்வதற்கு யூதர்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?


"வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மேசியா இயேசு அல்ல", என்றுச் சொல்லும் யூதன், இயேசு தான் மேசியா (மஸீஹா) என்பதற்காக தன் ஆயிரக்கணக்கான மணித்துளிகளை இதற்காக செலவிடுவானா? பணத்தை செலவிடுவானா?


6. யூதன் யூதனாகவே இஸ்லாமை விமர்சிக்க/மறுப்புக்கள் எழுத அவனுக்கு என்ன தடை?


ஒரு யூதன் யூதனாக இருந்து இஸ்லாமுக்கு பதில்கள் தருவது சுலபம், ஆனால், கிறிஸ்தவ போர்வையில் அவன் பதில்கள் கொடுத்தால், அது மிகவும் கடினம்.


ஏனென்றால், யூதன் யூதனாக இருந்து பதில்கள் அளித்தால், அவன் பழைய ஏற்பாடு அல்லது யூத சட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்களை கொடுத்தால் போதும், ஆனால், அவன் கிறிஸ்தவனாக தன்னை அடையாளம் கட்டிக்கொண்டு பதில்கள் எழுதினால், அவனிடம் கேட்கப்படும் கேள்விகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலிருந்தும் கேட்கப்படும்.


ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள், எத்தனை பதில்கள் மறுப்புக் கட்டுரைகள் புதிய ஏற்பாட்டைப் பற்றியும், இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர் பவுல் போன்றவர்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


யூதன் யூதனாக தன்னை காட்டிகொண்டால் இந்த புதிய ஏற்பாட்டிலிருந்து பதில்களை கொடுக்கவேண்டிய கடமை இருக்காதல்லவா? அல் ஜன்னத் ஆசிரியர்களே, இப்போதாவது சிறிது புரிகின்றதா? உங்கள் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வந்து சிந்துத்துப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்.


7. கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது?


இதுவரை, ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூதர்களால் நடத்தப்படும் தளம் அல்ல, இதற்கு அவசியமே யூதர்களுக்கு இல்லை என்பதை விளக்கினேன், இப்போது, ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஏன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடாது என்பதை விளக்குகிறேன்.


7.1 யூதர்களை விட இஸ்லாமை விமர்சிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை அதிகம்:


யூதர்களை விட கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க, முஹம்மது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர, விமர்சிக்க உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், முஹம்மது இயேசுவை நபி என்றுச் சொன்னார், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்தார், குர்‍ஆனில் எழுதியும் வைத்துவிட்டார், கிறிஸ்தவத்தை விமர்சித்தார். ஆக, இஸ்லாமுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டாமா? உங்களுக்கு பதில் சொல்ல கிறிஸ்தவர்களுக்கு அதிக விவரங்கள் உண்டு, அதே போல, இஸ்லாமின் தரத்தை சரிபார்க்க, தராசில் நிறுத்தி தரத்தை பரிசோதிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு.


தன்னைப் பற்றி பைபிளில் உள்ளது என்று முஹம்மது கூறினார், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று நாங்கள் சோதிக்கவேண்டாமா? ஆராய்ச்சி செய்யவேண்டாமா? முஹம்மது உண்மையிலேயே ஒரு நபி தானா என்று சோதிக்கவேண்டாமா? பைபிளை விமர்சிக்க குர்‍ஆனுக்கும் முஹம்மதுவிற்கும் தகுதி உள்ளதா என்று சோதித்துபார்க்க வேண்டாமா? இஸ்லாம் சொல்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லையே!


இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டால், யூதர்களுக்கு வெறும் பழைய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கொடுத்தால் போதும், ஆனால், நாங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும். "பைபிள் கூறும் நபிகள் வரிசையில் நான் கடைசியானவன்" என்று முஹம்மது சொன்னதாலும், பைபிளின் மீது "இஸ்லாம்" ஆதாரப்பட்டு இருப்பதாலும், எங்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க அதிகாரம் உண்டு.


தங்கத்தை சுத்தம் செய்ய நெருப்பில் சுடவேண்டும், அப்படி செய்யும் போது, அசுத்தம் நீங்கும், அப்போது தான் சுத்தப்பொன்னாக அது மாறும், எனவே, இஸ்லாமை நாங்கள் நெருப்பில் போட்டு சுடுகிறோம், உண்மையிலேயே, உங்கள் நபி ஒரு உண்மை நபியாக இருந்தால், சுத்த பொன்னாக மாறுவார். நெருப்பிலே போட்டது தங்கம் என்று நினைத்து கரித்துண்டை போட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும். அக்கினி எல்லாவற்றையும் சோதித்தறியும், உண்மை கண்டிப்பாக வெளியே வரும்.


ஆனால், இஸ்லாமை விமர்சிக்கும் போது, அதற்கு எதிராக கேள்விகள் கேட்கப்படும் போது, முஹம்மதுவின் நடத்தையை வெளிச்சத்தில் வைத்து சரி பார்க்கும் போது, இஸ்லாமியர்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது? ஏன் கோபம் வரவேண்டும்? தங்கமாக இருந்தால், இன்னும் சுத்தமாகுமே, இஸ்லாம் ஒரு தங்கமல்ல அது ஒரு கரித்துண்டு என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமோ?


எனவே, நான் உங்களை கேட்டுகொள்கிறேன், ஆன்சரிங் இஸ்லாம் ஒரு யூத தளம் என்ற பொய்யை சொல்வதை விட்டுவிடுங்கள், அல்லது அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள்?


மருந்து மாத்திரைகளை போல "பொய்கள் ஒரு கால அவகாச தேதியோடு (Expiry Dates)" தான் வரும் . அந்த மாத்திரையின் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரை வேலை செய்யாது, மட்டுமல்ல‌ அவைகள் எதிர்விளைவுகளை கொண்டுவரும். அது போல, இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வந்த பொய்களுக்கு முடிவு தேதி (Expiry Date) நெருங்கிவிட்டது. இன்னும் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பயன்படுத்துபவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும், 14 நூற்றாண்டுகளாக குணமாக்கிய அதே மருந்து இப்போது விஷமாக மாறும். பொய்களை அனேக நாட்கள் வாழவைக்கவும் முடியாது, அதே போல, உண்மைகளை அனேக நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கவும் முடியாது.


ஆக, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், இஸ்லாமை கேள்வி கேட்கும் உரிமை உண்டு, இது எங்கள் பிறப்புரிமை. இதே போல மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தை, இதர மார்க்கங்களை கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமை உண்டு.


இனி அல் ஜன்னத் கொடுத்த இதர தளங்கள் யூத தளங்களா என்று பார்ப்போம்.



அபவுட் இஸ்லாம் டாட் காம் தளம்: (www.aboutislam.com)


இந்த தளத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தால், அது "http://www.perfumesofarabia.com/" என்ற தளத்தைக் காட்டுகிறது. அதாவது, அரேபிய பெண்களின் வாசனை திரவியங்கள் (சென்ட்) பற்றிய தளம் வருகிறது (Redirected to perfumeofarabia site). இந்த தளம் ஒரு வியாபார தளமாக வாசனை திரவியங்களை விற்கும் தளமாக‌ இருக்கிறது.


ஒரு வேளை, இந்த தளம் முதலாவது ஒரு யூதர்களின் தளமாக (அல் ஜன்னத் ஆராய்ச்சி செய்து சொன்னது போல) இருந்து, பிறகு அவர்கள் தங்கள் டொமைனை (domain) விட்டுவிட்டு தங்கள் தள கட்டுரைகளை நீக்கிவிட்டு சென்று இருப்பார்கள், என்ற சந்தேகத்தில் வெப் ஆர்கவ்வில் (Web Archive) சென்று பார்த்தேன்.


இந்த பக்கத்தை சொடுக்கி பார்க்கவும்: http://web.archive.org/web/*/http://www.aboutislam.com


இந்த தொடுப்பில், "About Islam" தளம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை முறை கட்டுரைகள் பதிக்கப்பட்டது போன்ற விவரங்களை காணலாம்.


இதன் படி "About Islam" ஒரு கிறிஸ்தவ தளமாக ஜனவரி மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனேக கிறிஸ்தவ இஸ்லாமிய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கவும்: http://web.archive.org/web/19990117021402/http://www.aboutislam.com/


பல ஆண்டுகளுக்கு பிறகு, கிறிஸ்தவ தளமாக இருந்த இந்த தளம், இஸ்லாமிய தளமாக மாறியுள்ளது. இஸ்லாமை தழுவுகிறவர்கள் இந்த தளப்பெயரை வாங்கி தங்கள் தளத்தோடு இணைத்துள்ளார்கள்.


பார்க்கவும்: http://web.archive.org/web/20071023173418/www.convertstoislam.org/


www.convertstoislam.org என்ற தளம் www.aboutislam.com என்ற டொமைனை வாங்கி. பல ஆண்டுகள் பயன்படுத்தி மறுபடியும் விற்றுவிட்டு இருக்கும், இன்று www.aboutislam.com என்ற தளத்தை சொடுக்கினால், நமக்கு அரேபிய பெண்களின் வாசனை தரவியங்கள் என்ற வியாபார தளம் தான் வருகிறது. இவைகள் தான் www.aboutislam.com தளப் பெயரைப் பற்றிய மேலோட்ட விவரங்களாகும், இதனை வெப் ஆர்கவ்வில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் (http://web.archive.org/web/*/http://www.aboutislam.com).



அல் ஜன்னத் ஆசிரியருக்கு கேள்விகள்:


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, இந்த தளம் www.aboutislam.com பற்றி எச்சரிக்கை செய்தியை உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒருமுறையாவது இணையத்தில் இந்த தளத்தை சொடுக்கி பார்த்தீர்களா? பார்த்து இருந்தால், இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்?


எந்த ஆதாரத்தை வைத்து, இந்த தளம் யூதர்கள் நடத்தும் தளம் என்று எழுதினீர்கள்?


உங்கள் பத்திரிக்கையை படிக்கும் வாசகர்க‌ள் உங்களின் நேர்மையை கவனிக்கட்டும். மற்ற மார்க்க விஷயங்களை எழுதுவதில் இவ்வளவு நேர்மையற்ற விவரங்களை தரும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய விவரங்களை சொல்வதில் எவ்வளவு விஷயங்களை மறைப்பீர்கள்! இறைவனுக்கே வெளிச்சம்.



அல்லாஹ் டாட் காம் தளம் (www.allah.com)



அடுத்ததாக, நீங்கள் "அல்லாஹ் டாட் காம்" என்ற தளத்தைப் பற்றி எழுதினீர்கள்! இந்த தளமும் யூதர்களின் தளம் என்று எழுதிவிட்டீர்கள். ஆனால், இந்த தளத்தை சொடுக்கிப்பார்த்தால் இது ஒரு "ஷியா முஸ்லீம்களின்" தளம் போல தென்படுகிறது.



இந்த தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே கீழ் கண்ட வரிகள் கொட்டை எழுத்துக்களில் தென்படுகிறது.



THE FIRST AND LARGEST SITES ON IMAN, ISLAM, IHSAN

இந்த தளத்தை நீங்கள் பார்வையிட்டீர்களா? என்று நான் கேட்க மாட்டேன், ஏனென்றால், இதனால் உபயோகமில்லை.


இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தை ஒருமுறை பார்வையிட்டால், அனேக இஸ்லாமிய அறிஞர்களின் படங்கள் (அஹமத் தீதத் அவர்கள் உட்பட), இஸ்லாம் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என்று அனேக தொடுப்புக்கள், புத்தகங்கள், குர்‍ஆன் என்று அனேக விவரங்கள் உள்ளன.


சிந்திக்கும் எந்த மனிதனும் இந்த தளத்தைக் கண்டு, இது யூதர்களின் தளம் என்றுச் சொல்லமாட்டான்.


குறிப்பு: அல் ஜன்னத் குறிப்பிட்ட தளம் www.allah.com இல்லை, அது www.allah.org என்று பதில் சொல்ல அவசரப்படாதீர்கள் இஸ்லாமியர்களே, இந்த அல்லாஹ் டாட் ஓஆர்ஜி தளமும் ஒரு இஸ்லாமிய தளமாகும் என்பதை மனதில் கொள்ளவும்.


இப்போது அடுத்த தளத்திற்குச் செல்வோம்…



த குர்‍ஆன் தளம் (www.thequran.com)



அடுத்ததாக நீங்கள் "த குர்‍ஆன் டாட் காம்" என்ற தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இதுவும் யூதர்களின் தளம் என்று எழுதியிருந்தீர்கள். நான் இந்த தளத்தையும் பார்வையிட்டேன்.


இந்த தளத்தில் ஆங்கிலம் உட்பட அனேக குர்‍ஆன் மொழியாக்கங்கள் தரப்பட்டு இருந்தன (Arabic, Shakir (English), yusufali (English), Pickthal (English), Al-Hilali (English), Spanish, French and Turkish).


இந்த தளத்தில் குர்‍ஆன் பிழைகள் (Quranic Errors), இரத்து செய்யப்பட்ட வசனங்கள் (Abrogated Verses) மற்றும் ஒரே மாதிரியாக அடிக்கடி வரும் வசனங்கள் (Repeated Verses) என்று ஒரு சில பக்கங்கள் இருக்கின்றன.


இந்த தளம் கண்டிப்பாக ஒரு இஸ்லாமிய தளம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இந்த தளம் ஒரு கிறிஸ்தவராலோ கூட ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம்.


குர்‍ஆனின் பிழைகள் என்ற பக்கத்தில் அனேக புதிய ஏற்பாட்டு வசனங்களை குறிப்பிட்டு விவரங்கள் உள்ளன. எனவே, இந்த தளமும் கிறிஸ்தவ தளமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், யூதர்களின் தளம் என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை.


ஒரு பேச்சுக்காக இந்த ஒரு தளத்தை மட்டும் யூத தளமாக நாம் கருதினாலும், அல்‍ ஜன்னத் குறிப்பிட்ட நாங்கு தளங்களில் மூன்று தளங்கள் யூதர்களின் தளங்கள் இல்லை என்பது மட்டும் உண்மை.




வெட்டு ஒன்று துண்டு மூன்று - அல் ஜன்னத்தின் யுக்தி வேலை செய்யவில்லை




அல் ஜன்னத் பிரசுரித்த விவரங்களின் உண்மை நிலையை நாம் கண்டோம். சில முஸ்லிம்கள் "ஏதோ தெரியாதவிதமாக நடந்துவிட்டது" என்று அல் ஜன்னத்தின் பொய்யுக்கு சாயம் பூசலாம். ஆனால், பல ஆண்டுகளாக இயங்கும் பத்திரிக்கை, இப்படிப்பட்ட விவரங்களைத் தருவது சரியா? இப்படித் தான் எல்லா விவரங்களும் இருக்குமா?



இதில் இவர்களின் (முக்கியமாக முஸ்லிம்களின்) தந்திரமும் தெரியவரும், அதாவது கிறிஸ்தவ தளத்தையும், ஷியா முஸ்லீம்களின் தளத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அவைகள் யூதர்களின் தளம் என்ற பொய்யைச் சொன்னால், தமிழ் முஸ்லிம்களை சுலபமாக முட்டாள்களாக்கி விடலாம் என்று கனவு கண்டது, அல் ஜன்னத் பத்திரிக்கை. ஆனால், அது பகல் கனவாக முடிந்துவிட்டது.



எதெற்கெடுத்தாலும் யூதனை இழுத்தால் போது, முஸ்லிம்களுக்கு அப்படியே கண்கள் சிவக்கும், உடலில் சூடு உண்டாகும், அதனால் இந்த தளங்கள் பக்கமும் தலை வைத்து படுக்கமாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் அல் ஜன்னத் இந்த புதிய வேஷத்தை போட்டது, ஆனால், என்ன செய்யமுடியும், வேஷம் போட்டால் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.



ஷியா இஸ்லாமை எதிர்க்கவேண்டுமானால், நேரடியாகவே எதிர்க்கலாம் அல்லவா? ஏன் இந்த யூத வேஷம் போடவேண்டும்?



அல்லாஹ் டாட் காம் என்ற தளத்தின் முதல் பக்கத்தை பார்த்தலோ போதும், அது ஒரு ஷியா தளம் என்பது தெளிவாக விளங்கும். தமிழ் முஸ்லிம்கள் இந்த தளத்தை பார்வையிடக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதற்காக ஒரு கட்டுரையை தனியாக எழுதவேண்டியது தானே! இந்த குறிப்பிட்ட தளம் ஷிய தளமாகும், அந்த தளத்தை யாரும் பார்வையிடவேண்டாம், என்று முஸ்லீம்களுக்கு நேரடியாகச் சொல்லவேண்டியது தானே! ஷியா கோட்பாட்டிற்கு மறுப்புக்களோ/பதில்களோ எழுதவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு ஏன் யூதர்களை அழைக்கிறீர்கள்? இஸ்லாமிய அறிஞர்களே, உங்களின் வேஷம் சிறிது சிறிதாக வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது, இனியும் உங்கள் தந்திரங்கள் வேலை செய்யாது. எவ்வளவு புத்திசாலித் தனமாக நீங்கள் நடந்துக்கொண்டாலும், பொய்யை அதிக நாட்கள் மறைத்து வைக்க முடியாது, என்பதை சொல்லிகொள்கிறேன்.



அல் ஜன்னத்தும் பொய்யும் பித்தலாட்டமும்



அல் ஜன்னத் கீழ் கண்ட வரிகளை யூதர்களுக்கு சூட்டியது, இப்போது இந்த கட்டுரையை படித்த நீங்கள், இந்த வரிகள் அல் ஜன்னத்திற்கு சரியாக பொருந்துவதைக் காணமுடிகிறதா?


யூதர்கள் பற்றி அல் ஜன்னத் கூறியது



பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.



ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒரு கிறிஸ்தவ தளம், அதன் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு "யூத சாயம்" பூசி, பொய்யையும் பித்தலாட்டத்தையும் மூலதனமாக அல் ஜன்னத் பத்திரிக்கை செயல்படுகிறது. இதற்கு இந்த கட்டுரையில் தரப்பட்ட விவரங்களே போதும்.



அல் ஜன்னத் பத்திரிக்கைக்கு நான் கூறிக்கொள்வது, நீங்கள் யூதர்க்ளை திட்டுங்கள், சபியுங்கள் என்னவாவது செய்துக்கொண்டு போங்கள், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால், கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்தால் பொய்களைச் சொன்னால் மட்டும் சரியான பதில் கண்டிப்பாக தரப்படும்.



நீங்கள் கண்டித்த அதே வரிகளை உங்களுக்குச் சொல்கிறேன், "இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் அல் ஜன்னத் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்".



இதோடு இன்னும் முடியவில்லை, அல் ஜன்னத் கீழ் கண்ட விதமாக எழுதியுள்ளது,



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



7ம் நூற்றாண்டிலிருந்து சமுதாயத்திற்கு, உலகிற்கு யாரால் அதிக நன்மைகள் முஸ்லீம்களாலா அல்லது யூதர்களாலா? என்பதைப் பற்றிய தலைப்பை என் சிந்தையில் நிறுத்திக்கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/aljannath/aljannathjews1




 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்