ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Polygamy)
ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்
இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.
கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?பதில்:1. பலதார மணம் என்றால் என்ன?பலதார மணம் என்ற திருமண அமைப்பில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். பல தார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது Polygyny என்பதாகும் இதில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம். இரண்டாவது Polyandry என்பதாகும், இம்முறைப்படி ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம். இஸ்லாமில் முதலாம் வகையான polygyny ஒரு வரையறையோடு அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டாம் வகையான polyandry முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது பழைய கேள்விக்கு வருவோம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள ஏன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
2. உலகத்தில் உள்ள மதம் சார்ந்த மத நூல்களிலேயே திருக் குரானில் தான் ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள் என்ற வார்த்தைகள் அல்லது கருத்து உள்ளது. மற்ற மறை நூல்களில் அவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இல்லவே இல்லை எனலாம். ஏனைய மறை நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம் ஆகியனவற்றில் ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்ற வரையறை காணப்படவில்லை. அந்நூல்களில் உள்ளபடி ஒரு மனிதன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.
"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24)"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனை படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியை குறித்து எச்சரிக்கையாடிருங்கள்" (மல்கியா 2:15)
பின்னர் தான் கிறிஸ்தவ பாதிரிகளும் இந்து பூசாரிகளும் மனைவிகளின் எண்ணிக்கையை ஒன்று என குறைத்துவிட்டனர்.
இந்து மதத்தில் உள்ள பிரபலமான அனேகர் பல மனைவிகளை கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக ராமரின் தந்தையான தசரதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை மணமுடித்து இருந்தார். கிருஷ்ணருக்கும் பல மனைவிகள் இருந்தனர்.
பண்டைய காலத்தில் கிறிஸ்தவ ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர், பைபிள் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஒரு வரையறையை கொடுக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கிறிஸ்தவ திருச்சபை ஒரு மனிதனுக்கு ஒருத்தி என நெறிப்படுத்தியது.
"ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:2
"மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:12"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்" தீத்து 1:6
"இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எபேசியர் 5 :31
டாக்டர் நாயக்:ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்ய யூத மதத்தில் அனுமதியுள்ளது, தல்மூத் சட்டத்தின் படி ஆபிரகாமுக்கு 2 மனைவிகள் இருந்தனர், சாலொமொனுக்கோ நுற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர்.
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. (1 இராஜாக்கள் 11:3-4)
ஒருவன் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் ரபி கெர்சோம் பென் யெகுதா (கிபி 960 முதல் கிபி 1030) (Rabbi Gershom ben Yehudah) எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் வரை நீடித்து இருந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 1950 வரை இப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். இஸ்ரேலில் இருந்த தலைமை மதகுரு ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்யும் வரை இப்பழக்கம் நீடித்தது.
3. இந்துக்களே இஸ்லாமியரை விட பலதார மணம் புரிபவராக இருந்துள்ளனர். 1975ல் வெளியிடப்பட்ட" இஸ்லாமில் பெண்களின் நிலை - Committee of The Status of Woman in Islam" என்ற அறிக்கையில் பக்கங்கள் 66,67 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அஃதாவது 1951 முதல் 61 வரை நடைபெற்ற பலதார மணங்களின் படி இந்துக்கள் 5.06 விழுக்காடாகவும் இஸ்லாமியர் 4.31 விழுக்காடாகவும் பலதார மணம் புரிபவராக இருந்துவந்துள்ளனர். அதுவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் பலதார மணம் புரிவது சட்டவிரோதம் என இருக்கும் போதே இந்த நிலை. ஒருவேளை இந்து ஆண்களுக்கு பலதார மணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களின் பலதாரமண விழுக்காடு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும். 1954 ம் ஆண்டு இந்து திருமண சட்டம் வந்த பின் தான் இந்து ஆண்கள் ஒரு பெண்ணுக்கும் மேல் திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலை வந்தது. இப்போதும் கூட இந்திய சட்டம் தான் இந்துக்களின் பலதார மணத்தை தடை செய்து வைத்துள்ளதேயன்றி இந்து வேதங்கள் அல்ல.
சரி இப்போது நாம் இஸ்லாமில் ஏன் ஒரு மனிதன் பலதார மணம் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காண்போம்.4. அளவான பலதார முறையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த உலகத்தில் உள்ள மறை நூல்களிலேயே இஸ்லாமிய மறை நூலான குர்ஆனில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என கூறப்பட்டுள்ளது. இதை சூரா நிஸா என்ற அத்தியாயத்தில் காணலாம், "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)..(குர்ஆன்4:3). குர்ஆன் இறக்கப்படும் முன்னர் வரை ஆண்கள் வகைதொகையற்ற அளவு மணம் புரிபவர்களாக இருந்தனர். ஒருவர் நூற்றுக்கணக்காக கூட திருமணம் செய்து இருந்தனர். இஸ்லாம் மாத்திரமே நான்கு மனைவியர் என்ற அதிகபட்ச அனுமதியளித்துள்ளது. இஸ்லாமில் மாத்திரமே ஒரு மனிதன் அவர்களிடம் நியாயமான முறையில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் 2, 3 அல்லது 4 பேரை திருமணம் செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. சூரா நிஸாவின் 129 ல் "(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" (குர்ஆன் 4:129). எனவே பலதார மணம் என்பது சட்டம் அல்ல அது ஒரு விதிவிலக்கு மாத்திரமே. ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக 4 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இஸ்லாமில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என 5 காரியங்கள் உண்டு.
1) "ஃபார்ஸ் - Farz" அதாவது கட்டாயமாக செய்யவேண்டியவைகள்
2) "மஸ்தஹப் - Mustahab" அதாவது பரிந்துரைக்கப்பட்டது
3) "மஃபா - Mubah" அதாவது அனுமதியளிக்கப்பட்டது
4) "மாக்ரூஹ் - Makruh" அதாவது பரிந்துரைக்கப்படாதது
5) "ஹராம் - Haram" அதாவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டதுபலதார மணம் இதில் நடுவில் வரும் அனுமதிக்கப்பட்ட பிரிவில் வருபவர். இதை 2, 3 அல்லது 4 மனைவிகள் உள்ள இஸ்லாமியர் ஒரு மனைவி உள்ள இஸ்லாமியரை விட சிறந்தவர் என நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
5. பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். இயற்கையாகவே ஆண்களும் பெண்களும் ஒரே விகிதாச்சாரப்படியே பிறக்கின்றனர்.சிறுவயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளை விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதனாலேயே சிறு வயதில் ஆண் பிள்ளைகள் அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். போர்க்காலங்களில் ஆண்களே பெண்களைவிட அதிகம் கொல்லப்படுகின்றனர். பல ஆண்கள் விபத்துகளிலும் நோய்களிலும் பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாகும். எந்த ஒரு காலகட்டத்திலும் துணையை இழந்து வாழுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பர்.
6. இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர்.பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் அதை சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும். இதற்கு காரணம் இந்தியாவில் அதிகம் காணப்படும் பெண் சிசுக்கொலை எனும் பழக்கமாகும். இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இத்தீய பழக்கம் ஒழிக்கப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பார்கள்
7. உலகத்திலேயே ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
நியூ யார்க்கில் மட்டும் ஆண்களை விட 1 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். நியூ யார்ர்கின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கம் (gays i.e sodomites) உள்ளவர்கள்.
அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் ஆண்களுக்கும் மேல் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்த ஆண்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்வதில்லை.
பிரிட்டனில் மட்டும் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
ஜெர்மனியிலும் ஆண்களை விட 5 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
ரஷ்யாவில் ஆண்களை விட 9 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். உலகம் முழுவதிலும் எவ்வளவு பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதை இறைவன் அறிவார்.
8. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு மனைவி என்ற சித்தாந்தம் நடைமுறையில் ஒத்துவராத ஒன்றாகும்.ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு மனைவியை திருமணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பெண்களுக்கு கணவர்கள் கிடைக்கமாட்டார்கள் (அமெரிக்காவில் 25 மில்லியன் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய ஆண்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால்). அதேபோல் பிரிட்டனில் 4 மில்லியன் பெண்களுக்கும், ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்களும் ரஷ்யாவில் 9 மில்லியன் பெண்களுக்கும் கணவர்கள் கிடைக்கமாட்டார்கள்.
ஒருவேளை உங்களுடைய அல்லது என்னுடைய தங்கை அமெரிக்காவில் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம், அவருக்கு திருமணம் ஆகியிராத பட்சத்தில் அவர் ஏற்கனவே திருமணமான ஆணைத்தான் திருமணம் செய்யமுடியும் அல்லது பொதுவான உடமையாக (Public property) இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாதோர் பலரிடம் இதை குறித்து கேட்டபோது நூற்றுக்கணக்கானோர் முதலாவது வழிமுறையே சிறந்தது என ஒத்துக்கொண்டனர். சில புத்திசாலிகள் மாத்திரம் தங்கள் தங்கையர் திருமணம் செய்யாமல் கன்னியாகவே வாழ அனுமதிப்போம் என்றனர்.
"மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும்தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி 1 கொரி 7:4
உயிரியல் பூர்வமாக எந்த ஒரு மனிதனோ மனுஷியோ வாழ் நாள் முழுவதும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது, ஒருவேளை சில விதிவிலக்குகள் அதுவும் பத்தாயிரத்தில் ஒன்று என இருக்கலாம். பெரும்பாலான மக்கள் திருமணம் செய்கின்றனர் அல்லது முறைகேடான பால் உறவு பழக்கங்களை கொண்டுள்ளனர். மனிதனுடைய உடலில் பால் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பிகள் வாயிலாக கலக்கின்றன. அதனால் தான் இஸ்லாமில் துறவற பழக்கமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.
விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. (1 கொரி 7:8-11)
மேற்கத்திய சமுதாயத்தில் ஒரு மனிதன் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வதோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்துக்கொள்வதோ சகஜமான ஒன்று, இதனால் பெண் பாதுகாப்பில்லாத மற்றும் அவமானகரமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது. அதே மேற்கத்திய சமுதாயம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ளவோ அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதியளிப்பதில்லை. இதனால் கணவர் கிடைக்காத பெண் ஒன்று திருமணமான் ஆணை திருமணம் செய்யவேண்டும் அல்லது பொது உடமையாக வேண்டும். இஸ்லாம் மாத்திரமே முதலாவது வழிமுறையை ஆதரித்து இரண்டாவது வழிமுறையை எதிர்த்து தடை செய்கிறது. பலதார மணத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருப்பினும் பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் பாதுக்காகவே என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (2:223)
Polyandryகேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அஸ்திபாரம் நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.
ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை காண்போம்.1. ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரை எளிதில் அடையாளம் காணப்படும். ஆனால் பல ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தாயை வைத்தே அடையாளம் காணப்படுமேயன்றி தந்தையை வைத்து அல்ல. இஸ்லாம் பெற்றோர் இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உளவியல் நிபுணரும் நமக்கு கூறுவது என்னவெனில் பெற்றோரை அறியாத குழந்தைகள் அதிலும் குறிப்பாக தகப்பனை அடையாளம் தெரியாத குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களது குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்காது. இதனாலேயே விலை மாதரின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. இப்படி திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தகப்பன் என சொல்ல நேரிடும். சமீப காலங்களில் ஒரு குழந்தையின் தாய் தகப்பனை மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த ஒரு வாதம் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
2. இயற்கையாகவே பெண்ணைவிட ஆண் பலதார மண எண்ணம் உள்ளவராக இருக்கின்றனர்.
3. உயிரியல் ரீதியாக பல மனைவிகளை உடையவன் தனது கடமைகளை தவறாமல் செய்யமுடியும், ஆனால் பல கணவரை உடைய பெண்ணுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது கடமைகளை செய்ய முடியாது.
4. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்திருந்தால் பலரோடு பால் உறவு கொள்ள நேரிடும். அப்போது பால்வினை நோய்கள் அவர்கள் மூலமாக அவர்களது கணவர்களுக்கு பரவ நேரிடும். அவர்களது கணவர்கள் வேறு தொடர்புகள் வைத்திருக்குக்காதபோதே இந்த நிலை தான். ஆனால் ஒரு மனிதன் பல மனைவிகள் வைத்திருக்கும் போது நோய் பரவும் வாய்ப்புகள் குறைவே. இது போன்ற காரணங்கள் நாம் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவையே. இது போன்ற பல காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது திவ்ய ஞானத்தால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கத்தை தடைசெய்திருக்கிறார்.
ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்