கிறிஸ்தவத்தை பரப்பியதற்காக மருத்துவ உதவியாளர் கொலை, தாலிபான் அறிவிப்பு!
காபூலில் சுட்டுக் கொல்லப்பட்ட
உதவிப் பணியாளர் கேய்லே வில்லியம்ஸ்
கிறிஸ்தவத்தை பரப்பியதற்காக மருத்துவ உதவியாளர் கொலை, தாலிபான் அறிவிப்பு!
காபூலில் தாலிபான் தீவிரவாதிகள் தனது பணிக்கு சென்று கொண்டிருந்த மருத்துவ உதவியாளரை சுட்டுக் கொன்றனர், அந்தப் பெண் தனது மதத்தை பரப்பிக் கொண்டிருந்ததால் தாங்கள் சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளது.
அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷெமெரி பஷாரி கூறுகையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டனின் இரட்டை குடியுரிமைப் பெற்ற பணியாளர் உடல் ஊனமுற்ற ஆப்கானியர்கள் மத்தியில் பணிபுரிந்து வந்தார். திங்கள் அன்று வெஸ்;டர்ன் ஆப்கானில் இருந்து மோட்டார் பைக்கில் வந்த துப்பாக்கி ஏந்திய மனிதர்கள் சிலர் அவரை சுட்டுக் கொன்றனர் என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. 'இந்தப் பெண் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கிறிஸ்தவத்தை போதிப்பதற்காக ஆப்கானிஸ்தான் வந்தார்" என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் ஷபியுல்லா முஜாஹைத் பத்திரிகைகளுக்கு செய்தியளித்தார். 'எங்கள் (தலைவர்கள்) நேற்றுக் காலை இந்த பெண்ணை கொல்லும் படி ஒரு கட்டளை பிறப்பித்தார்கள், எங்கள் மக்கள் காபூலில் அவர்களை கொன்று விட்டார்கள்.
உதவிக் குழு FO The aid group SERVE Serving Emergency Relief and Vocational Enterprises identified the woman as 34-year-old Gayle Williams..
காபூலில் குழுவின் செய்திதொடர்பாளர் தங்கள் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானிய சட்டங்களுக்கு விரோதமாக மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ' அவர்கள் ஒரு போதும் பிரச்சாரம் செய்யவே மாட்டார்கள்" என்று ரினா வான் டெர் என்டே கூறினார்.
தங்களுடைய வெப் சைட்டில், 'கேய்ல் வில்லியம்ஸ் அவர்கள் ஆப்கானிஸ்தானியரை மிகவும் நேசித்தவர் எப்போதும் அவர்களுக்காக பணி செய்தவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்" என்று SERVE அமைப்பு கூறியுள்ளது.
இந்தக் குழு பிரிட்டனில் ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு பாகிஸ்தானில் 1980 லிருந்தே ஆப்கானிய அகதிகளுக்கு தொண்டாற்றிவருகிறது. ஆப்கானிஸ்தானில் இதன் நோக்கமெல்லாம் உடல் ஊனமுற்ற, தனிப்பற்ற மற்றும் சமுதாய அளவில் தேவை மிகுந்த மக்களுக்கு பணியாற்றுவதன் மூலம் அவர்களுக்கு இறைவனின் அன்பை வெளிப்படுத்தி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும் என்று இதன் வெப் சைட் தெரிவிக்கிறது.