இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, December 11, 2007

இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்


(குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)


இஸ்லாம் கல்வி தளத்தில் "நாம் யாரை வணங்க வேண்டும் " என்ற கட்டுரை பதியப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் இயேசு சொல்லாத ஒரு விவரம் அவர் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது.

இஸ்லாம் கல்வி எழுதியது:

ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9)

Source : http://www.islamkalvi.com/religions/to_whom_worship.htm


இஸ்லாம் கல்வி தளத்திற்கு ஈஸா குர்‍ஆனின் முந்தைய பதிலை இங்கு ( இஸ்லாம்கல்வி தளமும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் ) படிக்கலாம்.

ஈஸா குர்‍ஆன் பதில்:

"இயேசு தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னாராம், ஆனாலும் மக்கள் அவரையே வணங்கினார்களாம்" இது தான் இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்லும் செய்தி. இதற்கு ஆதாரமாக இக்கட்டுரை மேற்கோள் காட்டும் வசனம் மத்தேயு 15:9 ஆகும்.

இஸ்லாம்கல்வி சொல்லும் தகவல் தவறானது என்பதையும், இவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் சொல்லும் செய்தி வேறு என்பதையும் இந்த பதிலில் நாம் பார்க்கலாம்.



1. மேற்கோள் காட்டப்பட்ட வசனமும், அதன் பொருளும்:

இஸ்லாம் கல்வி மேற்கோள் காட்டிய மத்தேயு 15:9 வசனத்தை முதலாவது படிப்போம்.

மத்தேயு: 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.


இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்கக்கூடாது என்றுச் சொன்னார் என்று இஸ்லாம் கல்வி தளம் சொல்கிறது. முதலாவது இக்கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள் இந்த மத்தேயு 15ம் அதிகாரத்தை படித்தாரா இல்லையா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது .

இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்கக்கூடாது என்றுச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, மனிதர்களின் சடங்குகளை குப்பையில் போடுங்கள் என்றுச் சொல்கிறார். முதலில் இறைவனின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றுச் சொல்கிறார். மனிதர்களின் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தால், உங்கள் பக்தி, தொழுகை எல்லாம் வீண் என்றுச் சொல்கிறார் .



2. இவ்வசனம் சொல்லப்பட்ட சூழ் நிலை:

இஸ்லாம் கல்வி கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள் மத்தேயு 15ம் அதிகாரம் வசனங்கள் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை ( 1- 9) ஒரு முறை படித்து இருந்தால், இப்படியெல்லாம் அவர் எழுதியிருக்கமாட்டார்.

மத்தேயு 15:1-9 வரை சொல்லப்பட்ட செய்தி:

1. இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று யூத குருக்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஏன் சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை (சடங்குகளை) மீறி நடக்கிறார்கள் என்று இயேசுவிடமே அவர்களைப் பற்றி குற்றம் சாட்டுகிறார்கள்.

2. இயேசு அதற்கு பதிலாக, உங்கள் சடங்குகளுக்காக ஏன் தேவனின் கட்டளைகளை நீங்கள் மீறி நடக்கிறீர்கள்? எது முக்கியம் மனித சடங்குகளா? தேவனின் கட்டளைகளா? என்று கேள்வி கேட்கிறார்.

3. இப்படி இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமல், மனித சடங்குகளுக்கு (கை கழுவுதல்) முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் இறைவனுக்காக செய்யும் தொழுகையினால் ஒரு நன்மையும் இல்லை, அது வீண் என்று இயேசு சொன்னார்.

4. நீங்கள் இறைவனை தொழும் போது உங்கள் வாய் (உதடுகள்) மட்டும் தான் தொழுகிறதே தவிர உங்கள் இதயம் இறைவனுக்கு தூரமாக இருக்கிறது என்றுச் இயேசுச் சொன்னார்.


இதை படிக்கும் சகோதரரே, நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட மத்தேயு 15:1-14 வசனங்களை படித்துவிட்டு, நான் மேலே சொன்னது போல இவ்வசனங்கள் சொல்கிறதா, அல்லது கலாம் ரசூல் அவர்கள் சொல்வது போல "இயேசு தன்னை வணங்காதீர்கள்" என்று சொன்னதாக பொருள் வருகிறதா என்று நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். [இதை தெரிந்துக்கொள்ள பைபிள் கல்லூரியின் பட்டமோ, குர்‍ஆன் படிப்போ தேவையில்லை. கீழுள்ள வசனங்களை மேலோட்டமாக படித்தாலே போதும்]

மத்தேயு: 15: 1 அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து, 2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள் . 3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து, 6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7. மாயக்காரரே, உங்களைக்குறித்து, 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. 9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். 10. பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் கேட்டு உணருங்கள். 11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 12. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரோ என்றார்கள். 13. அவர் பிரதியுத்தரமாக, என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். 14. அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடறாயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.


3. யூதர்களின் விபரீத சடங்குகள்:

இறைவனுடைய ஆலயத்தில் ஊழியம் செய்யும் போது, மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று பழைய எற்பாட்டில் பல கட்டளைகள் உள்ளது. ஆனால், யூதர்கள் சொந்தமாக சில சடங்குகளை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒன்று தான் " சாப்பிடும் முன்பு, பின்பு கைகளை கழுவுதல் " என்பது. இப்படி கை கழுவாதவர்கள் பெரிய பாவம் செய்ததாகவும், அவர்கள் குற்றம் சுமத்தினர். இதைத் தான் இயேசு எதிர்த்தார். அதாவது, சுத்தம் முக்கியம் ஆனால், ஒருவன் கை கழுவாததற்காக அவனுக்கு தண்டனை அளிப்பது என்பது சரியானது அல்ல என்று இயேசு சொன்னார்.

கைகழுவுதல் பற்றிய யூத சடங்குகள் :

1. கைகழுவாமல் ஒருவன் சாப்பிட்டால், அவன் பன்றியின் கறியை சாப்பிட்ட குற்றத்திற்கு ஏற்ற குற்றம் செய்பவன் ஆவான்.
2. கைகழுவாமல் சாப்பிடுபவன் இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் தண்டிக்கப்படுவான்.
3. கைகழுவாமல் சாப்பிடுபவன் மரண தண்டனைக்கு உரியவன் .
4. கைகழுவாமல் சாப்பிடுபவன் ஏழ்மையில் வாழ்வான், அவன் விபச்சாரம் செய்த குற்றம் செய்ததற்கு சமமாவான்.
5. கைகழுவாமல் சாப்பிடுவதை விட 4 மைல்கள் நடந்துப்போய் கைகழுவி வருவது தான் சிறந்தது.
6. சாப்பிட்ட பிறகு கைகளை கழுவாதவன், கொலை குற்றம் செய்தவனாவான் .


"The legal washing of the hands before eating was especially sacred to the Rabbinist; not to do so was a crime as great as to eat the flesh of swine. 'He who neglects hand-washing,' says the book Sohar, 'deserves to be punished here and hereafter.' 'He is to be destroyed out of the world, for in hand-washing is contained the secret of the ten commandments.' 'He is guilty of death.' 'Three sins bring poverty after them,' says the Mishnah, 'and to slight hand-washing is one.' 'He who eats bread without hand-washing,' says Rabbi Jose, 'is as if he went in to a harlot.' The later Schulchan Aruch, enumerates twenty-six rules for this rite in the morning alone. It is better to go four miles to water than to incur guilt by neglecting hand-washing,' says the Talmud. 'He who does not wash his hands after eating,' it says, 'is as bad as a murderer.' The devil Schibta sits on unwashed hands and on the bread. It was a special mark of the Pharisees that 'they ate their daily bread with due purification,' and to neglect doing so was to be despised as unclean. . . ." (The Mortal Messiah: From Bethlehem to Calvary, 2: 400.) Source: http://www.gospeldoctrine.com/NewTestament/Matt15.htm


யூதர்களின் இந்த கைகழுவுதல் சடங்கைப் பற்றி "தானியேல் ரெஃபர‌ன்ஸ் வேதாகமம்" பக்கம் 1021 இப்படியாகச் சொல்கிறது :

"…குன்றுபோன்ற அந்தப் பழக்கத் தொகுப்புக்களில் ஒன்று தான் கழுவுதல் சடங்குகள். இந்த கழுவுதல், உணவு உண்ணும் முன்பு மட்டும் போதாது. சந்தையிலிருந்து வரும்போதும் கழுவவேண்டும். கழுவுதல் சட்டங்கள் மனிதருக்கு மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களும் கோப்பைகளும் செப்புப்பாத்திரங்களும் மேசைகளும் கழுவப்படவேண்டும். கழுவுதலுக்கு சில முறைகள் உண்டு, அதற்காகப்பயன்படுத்தும் நீருக்கு அளவு உண்டு கழுவும் போது எத்தனை பாத்திரங்களப் பயன்படுத்தவேண்டும் எத்தனை தடவை கழுவவேண்டும். கழுவும் போது எத்தனை தடவை தண்ணீரை மாற்றவேண்டும், என்பதற்கெல்லாம் சட்டங்கள் உண்டு. இந்தக் குப்பைச் சடங்குகளை இயேசு செய்யவில்லை என்பதே பரிசேயர் மற்றும் சதுசேயரின் குற்றச்சாட்டு.

கைகழுவுவது நல்லது தான், அதற்காக செய்யாதவனுக்கு தண்டனை கொடுப்பது என்பது, காட்டுமிராண்டித் தனம் என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார்.

இப்படிப்பட்ட எண்ணங்களை யூத ஆசாரியர்கள் உடையவர்களாக இருந்ததினால், தான் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதை மிகப்பெரிய குற்றமாக வந்து அவரிடம் முறையிடுகின்றனர். இந்த சடங்குகளை செய்யும்படி, இதற்கு இவ்வித தண்டனை கொடுக்கும்படி தேவன் சொல்லவில்லை.

இறைவன் வெளிப்புற சுத்தத்தை மட்டும் பார்க்கிறவர் இல்லை. அவர் முதலாவது, நம் உள்ளம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கிறார்.

இப்படி வெளிப்புற சுத்தம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, என் கட்டளைகளை மீறிவிட்டீர்களே என்று இயேசு வேதனைப்படுகிறார்.

பெற்றோரை உதவி செய்யாமல் தடுத்த யூத சடங்குகள்: (கொர்பான் - CORBAN)

தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் ஒரு கட்டளை " உன் தாயையும் தந்தையையும் கனம் செய்வாயாக " என்பது. அப்படி கனம்செய்யாமல், பெற்றோரை நிந்திக்கிறவர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

ஆனால், யூதர்களின் ஒரு குறிப்பிட்ட சடங்கு, இக்கட்டளையை மனிதன் மீறும் படி செய்துள்ளது என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். (மற்றும் பார்க்க மாற்கு 7:11ம் வசனம்)

மத்தேயு: 15: 3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து, 6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

யூதர்களின் ஒரு சடங்கு இருந்தது, அது என்னவென்றால், ஒரு மனிதன், தன் சொத்தை எல்லாம், தேவாலயத்திற்கு என்று நேர்ந்துக்கொள்ளவேண்டுமாம், ஆனால், தேவாலயத்திற்கு அதை கொடுக்கமாட்டான், தான் மற்றும் தன் குடும்பம் (மனைவி பிள்ளைகள்) மட்டும் அந்த சொத்தை அனுபவிப்பார்கள். பெற்றோர்கள் அந்த சொத்தைக்கொண்டு தங்களை போஷிக்கவேண்டும் என்று தன் பிள்ளைகளிடம் கேட்டால், " இல்லை இல்லை, இந்த சொத்து தேவாலயத்திற்கு நேர்ந்துக்கொள்ளப்பட்டது, உங்களுக்கு தரக்கூடாது" என்றுச் சொல்லி, தங்கள் பெற்றோரை போஷிக்காமல் விட்டுவிடுவார்கள் [1][2][3].

இந்த சடங்கை பற்றித் தான் இயேசு அந்த ஆசாரியர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். உங்கள் சடங்குகளினால், பெற்றோருக்கு தீமை செய்கிறீர்களே என்று கேட்கிறார்.

இதனால், தான் இயேசு பழைய ஏற்பாட்டு வசனம் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறார்.

இப்படியெல்லாம், இறைவனுக்கு விரோதமான சடங்குகளை பின்பற்றிக்கொண்டு நீங்கள் தொழுதுக்கொண்டால், உங்கள் வாய் அல்லது உதடுமட்டும் தான் இறைவனை தொழுதுக்கொள்ளும், உங்கள் இதயமோ அவரது கட்டளையை பின்பற்றாததினால் தூரமாக உள்ளது. இப்படிப்பட்ட "தொழுகை வீண்" என்றுச் சொல்கிறார்.


4. குருடருக்கு வழி காட்டும் குருடர்கள்:

இஸ்லாம் கல்வி தளத்தின் கட்டுரை சொல்லும் விவரம் தவறானது எனபதை அறிய, மத்தேயு 15:12-14ம் வசனங்களைப் படித்தால் தெரிந்துவிடும். இயேசு ஆசாரியர்களின் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் பற்றி கடிந்துக்கொண்டதை இயேசுவின் சீடர்கள் கண்டு, உம்முடைய இந்த வார்த்தையினால், அவர்கள் "இடறல்-கோபம்" அடைந்தார்கள் என்று உமக்கு தெரியுமா என்று கேட்கிறார்கள் . ஏன் அவர்கள் இடறல் அடைந்தார்கள் என்று கேள்வி எழுப்பினால்? இதற்கு பதில், "இயேசு அவர்களின் பாரம்பரிய சடங்குகள் தவறானது" என்று சொன்னார் என்பதினால் தான் என்று புரியும்.

தன்னை வணங்கவேண்டாம் என்று ஆசாரியர்களிடம் ஏன் இயேசு சொல்லப்போகிறார்?

அவர்கள் தான் ஏற்கனவே அவரை தேவகுமாரன் என்று நம்பவில்லையே?

அவர்களிடம் எப்படி என்னை வணங்கவேண்டாம் என்று இயேசு சொல்லப்போகிறார்?

[ஏதாவது விவரம் மனதில் உதிக்கிறதா, கலாம் ரசூல் அவர்களே. முஸ்லீம்களிடம் சென்று, "நீங்கள் இயேசுவை வணங்காதீர்கள்" என்று நான் சொன்னால், எனக்கு என்ன பதில் கிடைக்கும்? " நாங்கள் தான் அவர் நபி என்று மட்டும் சொல்கிறோமே, பின் எப்படி எங்களிடம் வணங்கவேண்டாம் என்றுச் சொல்கிறாய் நீ? என்று கேட்கமாட்டார்களா?" அதே போலத்தான், யூத ஆசாரியர்களும் இயேசுவை தேவகுமாரன் என்று நம்பவில்லை. ]

அதற்கு இயேசு சொல்கிறார், அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள், அவர்களை (இப்படிப்பட்ட சடங்குகளை) பின்பற்றுகிறர்கள், குழியிலே விழுவார்கள் என்றுச் சொல்கிறார். ஏனென்றால், சடங்குகள் தான் முக்கியம் என்று சொல்கிறவர்கள் " குருடர்கள்" என்று இயேசு சொல்கிறார். எனவே, கலாம் ரசூல் அவர்கள் சொல்லும் விவரம் தவறானது, இயேசு தன்னை வணங்காதீர்கள் என்று சொல்லவில்லை என்பது இப்போது எல்லாருக்கும்(கலாம் ரசூல் அவர்களுக்கும்) புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


5. கலாம் ரசூல் அவர்களின் தவறான புரிந்துக்கொள்ளுதல்:

இஸ்லாம் கல்வி தளத்திற்கும், கட்டுரையின் ஆசிரியர் கலாம் ரசூல் அவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான். ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு, தலையும் புரியாமல், காலும் புரியாமல் புரிந்துக்கொண்டு, உங்கள் விருப்பப்படி வியாக்கினம் செய்யாதீர்கள்.

இயேசு தன்னை வணங்காதீர்கள் என்றுச் சொல்லவில்லை வெளிப்புறம் சுத்தம் மட்டும் இறைவனை தொழுதுகொள்வதற்கு போதுமானது இல்லை. நம் உள்ளமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லவே அவர் அவ்விதம் சொன்னார்.

இந்த வசனத்திற்கு நான் அளித்த விளக்கம் தவறாக இருக்கும் என்று நீங்கள் (மூஸ்லீம்கள், முஸ்லீம் அறிஞர்கள்) நினைத்தால், இவ்வசனங்களுக்கு உங்கள் விளக்கத்தை எனக்கு அனுப்புங்கள். நான் மேலும் விவரிக்கிறேன்.


6. இஸ்லாமில் சடங்குகள்:

யூதர்களைப் போல இஸ்லாமிலும் பல சடங்குகள் உண்டு. அல்லாவை தொழுதுக்கொள்ள போவதற்கு முன்பு, கைகளை கழுவுதல், கால்களை கழுவுதல், மூக்கை கழுவுதல், காதுகளை கழுவுதல், அதுவும் இத்தனைமுறை கழுவவேண்டும், இப்படி கழுவவேண்டும் என்று இன்னும் பல சடங்குகள் முஸ்லீம்கள் பின்பற்றுகின்றனர்.

நாமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விரலை ஆட்டவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். சிலர் அப்படி அந்த விரலை ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த விரல் சடங்கு போல, இன்னும் பல சடங்குகளினால் இஸ்லாமிய அறிஞர்களிடையே பல கருத்து வேறுபாடுகள், சண்டைகள் போன்ற பல நிகழ்வுகள் நடக்கிறதை பார்க்க, உலகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டாம், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய சொற்பொழிவுகளை பார்த்தாலே போதும் எல்லாரும் புரியும்.

முடிவுரை: சுத்தமாக இருப்பது தவறல்ல. வெளிப்புறம் சுத்தமாக இருப்பது மட்டும் போதும் என்றுச் சொல்லி, இறைவனின் கட்டளைகளை பின்பற்றாமல் போவது தான் தவறு. இதைத் தான் இயேசுவும் யூதர்களிடம் சொல்கிறார்.

இதைத் தான் இயேசு சொன்னார், கைகழுவாமல் சாப்பிட்டால், அது வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி கழிவாக சென்றுவிடும், ஆனால், இதயத்திலிருந்து வரும் கெட்ட சிந்தனைகளே மனிதனை இறைவனிடமிருந்து வேறுபடுத்தும். எனவே, முக்கியமானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார்.

அருமையான இஸ்லாமிய அறிஞர்களுக்கு: நீங்கள் பைபிளை நன்றாக படித்து, நீங்கள் குறிப்பிட விரும்பும் வசனத்தின் முந்தைய வசனங்களை, பிந்தைய வசனங்களை படித்து தெரிந்துக்கொண்டு, பிறகு அவற்றை உங்கள் கட்டுரைகளில் பதிக்க முயற்சி செய்யுங்கள்.

இயேசு சொன்னது போல, இறைவனை ஆவியோடும், உண்மையும் தொழுதுக் கொள்ளுங்கள். உடல் சுத்திகரிப்பு முக்கியம், அதை விட உள்ளம் சுத்திகரிப்பு மிக மிக முக்கியம். அப்படி இல்லையானால், நம்முடைய வாய் மட்டும் தான் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கும், இருதயமோ.... தூரமாக..... இருக்கும். நம்முடைய தொழுகையும், வணக்க வழிபாடுகளும், ஆராதனைகளும் "வீண்" என்று இயேசு சொல்லியுள்ளார்.

ஏசாயா: 29:13. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. 14. ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.15. தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து, நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!


பின் குறிப்புகள்:
[1] BIBLE DICTIONARY : CORBAN = given to God.
The word describes anything dedicated to God, and therefore not available for ordinary uses. The utterance of it was held to constitute a binding vow, and the fulfillment of a vow was regarded by the Pharisees as of deeper obligation than the duty even to parents. See Matt. 15: 5 and Mark 7: 11, where it appears that the Pharisees misused the opportunity of dedicating their material possessions to God, in order to avoid responsibility to care for their parents. Source : http://scriptures.lds.org/bd/c/91

[2]Christ's devastating counter
Jesus raised the issue of "corban," a transliteration of a Hebrew word which means "gift," but carries the connotation of a vow. Once a person designated something corban, it became the property of God and could not be restored to secular use, although it was retained by the owner until the time of his death. In this instance, the corban refers to a Pharisaic practice of dedicating to the temple assets which might have gone to support one's elderly parents. This way they got "credit" for making a big contribution to the Temple treasury (Mt. 6:2) but continued their use of the resource (as a building for their business, for example). Once he had designated money or property corban, a Pharisee could not help his parents with it even if they became desperately poor, although using it himself. Thus, Jesus accused them of violating the fifth commandment for the sake of their tradition. Source: http://www.tidings.org/studies/legalism0999.htm

[3] Corban:
A Hebrew word adopted into the Greek of the New Testament and left untranslated. It occurs only once (Mar 7:11). It means a gift or offering consecrated to God. Anything over which this word was once pronounced was irrevocably dedicated to the temple. Land, however, so dedicated might be redeemed before the year of jubilee (Lev 27:16). Our Lord condemns the Pharisees for their false doctrine, inasmuch as by their traditions they had destroyed the commandment which requires children to honour their father and mother, teaching them to find excuse from helping their parents by the device of pronouncing "Corban" over their goods, thus reserving them to their own selfish use. Source: http://www.sacred-texts.com/bib/ebd/ebd089.htm


Email: isa.koran@gmail.com Or mailto:Isa_koran@yahoo.co.in


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்
பி.ஜே அவர்களுக்கு பதில்

இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்
இஸ்லாம் கல்வி தளத்திற்கு பதில்
நேசமுடன் தளத்திற்கு பதில்


http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/ikmatthew15-9.htm

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்