Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்
Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்
முன்னுரை:
இஸ்லாமியர்கள் தங்கள் "அல்லாஹ்வை" பைபிளில் கண்டுபிடிக்க படாதபாடு படுகின்றனர். குர்ஆனின் படி, பைபிளின் தேவன் "யேகோவா" தான், குர்ஆனின் இறைவன் "அல்லாஹ்". ஆனால், உண்மை இதற்கு எதிர்மாறாக உள்ளது. அதாவது பைபிளின் தேவன் வேறு, அல்லாஹ் வேறு. அல்லாஹ் தன்னை பைபிளோடும், பழைய/புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளோடும் சம்மந்தப்படுத்திக் கொண்டால், அவர் யேகோவா தேவனாகிவிடமுடியுமா?
இவ்விருவரும் வேற்வேறானவர்கள் என்பதை குர்ஆனையும், பைபிளையும் படிப்பவர்கள் இதனை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். யேகோவா சொன்னதற்கு நேர் எதிராக அல்லாஹ் சொல்கிறார், செயல்படுகிறார். ஆக, இவ்விருவரும் ஒருவரல்ல என்பது உண்மை.
இது ஒரு புறமிருக்க, இஸ்லாமியர்கள் "அல்லாஹ்வை" பைபிளில் கண்டுபிடிக்க, அனேக யுக்திகளை கையாளுகின்றனர். இதில் ஒன்று "வார்த்தைகளின் ஓசை அல்லது உச்சரிப்பு சம்மந்தப்பட்டது". இதன் படி, "அல்லாஹ்", "முஹம்மது", "மக்கா" போன்ற வார்த்தைகளின் உச்சரிப்பு போலவே இருக்கும் வார்த்தைகள் இதர மார்க்க வேதங்களில் காணப்பட்டால், "இதர மார்க்க வேதங்களில் இஸ்லாம் பற்றி கூறப்பட்டுள்ளது, இதனால், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று இஸ்லாமியர்கள் சொல்லிவிடுகிறார்கள்".
இதனால் விளையும் ஆபத்துக்கள் என்ன? என்று சிந்திக்கமாட்டார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். இஸ்லாமியர்களின் இந்த செயல்களை நாம் "அறியாமை" என்றுச் சொல்வதா அல்லது ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்றுச் சொல்வதா? இது அறியாமையோ அல்லது ஏமாற்று வேலையோ, ஆனால், உண்மையை சொல்லவேண்டியது நம்முடைய கடமை, கிறிஸ்தவர்களை இப்படிப்பட்டவர்களிடமிருந்து எச்சரிக்கை செய்யவேண்டியது நம்முடைய கடமை.
இதைப் பற்றி தமிழ் முஸ்லிம் தளத்தின் கட்டுரையையும், அதற்கான எங்கள் மறுப்பையும் இங்கு படிக்கலாம்:
தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும் - http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html
இதைப் பற்றி ஜியா என்ற சகோதரரின் கட்டுரையையும், அதற்கான எங்கள்முதல் மறுப்பையும் இங்கு படிக்கவும்:
Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1 - http://isakoran.blogspot.com/2011/01/answering-ziya-1.html
சகோதரர் ஜியா அவர்களுக்கு கொடுத்த முதல் பதிலுக்கு மேலதிக விவரங்களுக்காக (போனஸாக) இந்த பதிலும் அளிக்கப்படுகிறது.
ஜியா கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…
Source
இஸ்லாமியர்களில் யார் யாரெல்லாம், "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் இருக்கிறது என்றும், அல்லது ஓசையில் "அல்லாஹ்" என்பது போல வரும் வார்த்தைகள் பைபிளில் இருக்கிறது, அது அல்லாஹ்வையே குறிக்கிறது என்று கூறுகிறார்களோ, அவர்களுக்கு இந்த பதில் அளிக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் அதிகமாக மதிக்கும் அஹமத் தீதத் என்பவரும் இதைப் பற்றி எழுதியுள்ளார், அவருக்கு ஒரு சிறிய கட்டுரையை அடுத்த முறை பதிக்கிறேன். இந்த கட்டுரையில், பைபிளில் "அல்லாஹ்", "அலா", "அல்-லா" … என்று வரும் வார்த்தைகள் எங்கெங்கே வருகின்றது அதன் பொருள் என்ன என்பதை காண்போம்.
முக்கிய குறிப்பு: பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு எபிரேய வார்த்தைக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால், எபிரேய அகராதியில் பைபிள் வார்த்தைகளை தேடுவதற்கு வசதியாக இருக்கும். இதே போல புதிய ஏற்பாட்டு, கிரேக்க வார்த்தைகளுக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, "H421" என்று எழுதினால், இது ஒரு எபிரேய வார்த்தையை குறிக்கிறது (H - Hebrew Language), அவ்வார்த்தைக்கு இடப்பட்ட எண் 421 என்பதாகும். இதே போல, "G235" என்று எழுதினால், இது ஒரு கிரேக்க வார்த்தையை குறிக்கிறது (G - Greek Language), இவ்வார்த்தைக்கு இடப்பட்ட எண் 235 என்பதாகும்.
இந்த கட்டுரையில் பைபிளின் எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகளை தேட, "Blue Letter Bible (Bible / Dictionary Search) - http://www.blueletterbible.org/" என்ற தளத்தை பயன்படுத்துகிறோம்.
பழைய ஏற்பாட்டில் அல்லாஹ்
1)'alah ('அலாஹ்) - ஒப்பாறி அல்லது புலம்பல்
இஸ்லாமிய இறைவனின் பெயராகிய, ஆங்கிலத்தில் "Allah" என்று வரும் வார்த்தைக்கு ஒரு எழுத்து குறைவாக உள்ள "'alah" என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் ஒரு முறை யோவேல் 1:8ம் வசனத்தில் வருகிறது. உச்சரிப்பும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.
இவ்வார்த்தையின் எபிரேய எண் "H421" என்பதாகும், இதன் பொருள் "ஒப்பாறி" அல்லது "புலம்பல்" என்பதாகும். அதாவது, நம்முடைய கிராமங்களில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், யாராவது மரித்து விட்டால், "ஒப்பாறி" வைத்து அழுவார்கள். வேதனை அதிகமாகும் போது, தாங்க முடியாத துக்கமடையும் போது வார்த்தைகள் சிலவற்றைச் சொல்லி அழுவது தான், புலம்பல் அல்லது ஒப்பாறி என்போம். இது தான் இவ்வார்த்தையின் பொருள்.
யோவேல் 1:8 (Joel 1:8)
LamentH421 like a virginH1330 girdedH2296 with sackclothH8242 forH5921 the husbandH1167 of her youth.H5271 (KJV)
தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.
ஆங்கிலத்தில் பொருள்:
'alah (Strong's Number: H421, verb): to bewail :- lament.
கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, எபிரேய வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொள்ளுங்கள்
Link: 'alah(H421) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H421&t=KJV
இஸ்லாமியர்களிடம் சில கேள்விகள்:
1) அல்லாஹ் என்ற வார்த்தைக்கு இணையாக இந்த வார்த்தையின் உச்சரிப்பும் உள்ளது. இதனால், ஒப்பாறி என்றால் அல்லாஹ் என்று பொருளா?
2) உங்களுடைய லாஜிக்கின் படி, உச்சரிப்பு ஒரே மாதிரியாக இருப்பதினால், இனி அல்லாஹ் என்ற இடத்தில் எல்லாம், "ஒப்பாறி" என்றோ அல்லது "புலம்பல்" என்றோ பொருள் கொள்வீர்களா?
3) "அலா" என்பதை "இலா" என்று உச்சரித்தால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டுள்ளீர்கள் இப்போது சொல்லுங்கள், "அல்லாஹ்" என்ற வார்த்தையின் பொருள் "ஒப்பாறி/புலம்பல்" என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
இப்போது அடுத்த வார்த்தைக்கு கடந்துச் செல்வோம் (H422)
2) 'alah (H422) - சாபம், சபித்தல் மற்றும் சத்தியம் செய்தல்
இந்த வார்த்தையும் அல்லாஹ் என்ற வார்த்தையை போலவே உச்சரிக்கப்படுகிறது. இதன் பொருள், சத்தியம் செய்தல், சாபம் என்பதாகும், எண் H422 ஆகும்.
இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் காணப்படுகிறது:
நியாயாதிபதிகள் 17:2 (Judges)
1 சாமுவேல் 14:24 (1 Samuel)
1 இராஜாக்கள் 8:31 ( 1 Kings)
2 நாளாகமம் 6:22 (2 Chronicles)
ஓசியா 4:2 மற்றும் 10:4 (Hosea)
ஆங்கிலத்தில் பொருள்:
'alah (Strong's Number: H422, verb) - adjure, curse, swear.
கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, எபிரேய வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொள்ளுங்கள்
Link: 'alah (H422) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H422&t=KJV
இஸ்லாமியர்கள் இப்போது "அல்லாஹ்" என்றால், "சாபம்" என்று பொருள் என்று அங்கீகரிப்பார்களா? அங்கீகரிக்கமாட்டார்கள். இது எப்படி சாத்தியம் என்பார்கள். எபிரேய மொழியில் உள்ள "சாபம்" என்று பொருள் தரும் வார்த்தை, அரபி மொழியின் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் போலவே உச்சரிப்பு இருந்தாலும், இப்படி பொருள் கூறுவது முட்டாள் தனம் என்பார்கள்.
ஆனால், தமிழ் முஸ்லிம் தளம், "அல்லேலூ" என்ற எபிரேய வார்த்தையின் பொருள் "துதி" என்று இருக்கும் போது, இவ்வார்த்தை "அல்லாஹ்" என்ற வார்த்தையின் உச்சரிப்பைப் போலவே இருப்பதினால், கீழ்கண்ட வாறு கூறுவது முட்டாள் தனமில்லையா?
தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :
இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.
அல்லேலுயா!
இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.
அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.
கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்
முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்!
Source: http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html
இந்த வார்த்தையைப் பற்றி இஸ்லாமிய அறிஞர் கலாஞ்சென்ற திரு அஹமத் தீதத் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய கட்டுரையில் விளக்குவேன்.
கிறிஸ்தவர்களே, இனியும் ஏமாறாதீர்கள். யாராவது உங்களிடம் வந்து "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் உள்ளது என்று சொல்வார்களானால், ஆமாம், எங்களுக்கும் தெரியும், "அதன் பொருள் சாபம்" என்பதாகும் என்றுச் சொல்லுங்கள்.
இப்போது அடுத்த வார்த்தைக்குச் செல்வோம் (H423).
3) 'alah (H423) - சாபம், சத்தியம் செய்தல்
இந்த வார்த்தையின் பொருளும் சாபம், சத்தியம் செய்தல் போன்றவையாகும். இதன் எபிரேய எண் H423 என்பதாகும்.
இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 24:41; 26:28 (Genesis)
லேவியராகமம் 5:1 (Leviticus)
எண்ணாகமம் 5:21, 23, 27 (Numbers)
உபாகமம் 29:12, 14, 19, 20, 21; 30:7 (Deuteronomy)
1 இராஜாக்கள் 8:31 (1 Kings)
2 நாளாகமம் 6:22; 34:24 (2 Chronicles)
நேகேமியா 10:29 (Nehemiah)
யோபு 31:30 (Job)
சங்கீதம் 10:7; 59:12(Psalms)
நீதிமொழிகள் 29:24 (Proverbs)
ஏசாயா 24:6 (Isaiah)
எரேமியா 23:10; 29:18; 42:18; 44:12 (Jeremiah)
எசேக்கியேல் 16:59; 17:13, 16, 18, 19 (Ezekiel)
தானியேல் 9:11 (Daniel)
சகரியா 5:3 (Zechariah)
ஆங்கிலத்தில் பொருள்:
'alah (Strong's Number: H423, noun): an imprecation: - curse, cursing, execration, oath, swearing.
கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, இவ்வார்த்தையின் எபிரேய உச்சரிப்பு, பொருள் மற்றும் இதர விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Link: 'alah (H423) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H423&t=KJV&page=1
4) 'allah (H427)- "கர்வாலி மரம்" - oak tree
இந்த வார்த்தை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் இறைவனுக்கு இருக்கும் "அல்லாஹ்" என்றே உச்சரிக்கப்படுகிறது மற்றும் ஆங்கிலத்தில் நாம் கவனித்தால், இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அதே எழுத்துக்களை கொண்டுள்ளது. இதன் எண் H427.
அல்லாஹ் = 'allah
இவ்வார்த்தையின் பொருள் "கர்வாலி மரம்" என்பதாகும். அல்லாஹ் என்ற எபிரேய வார்த்தையின் பொருள், "கர்வாலி மரம்" என்று உள்ளதால், இனி இஸ்லாமியர்களின் இறைவனுக்கு "கர்வாலி மரம்" என்று பொருள் என்று நாம் கூறலாமா? இஸ்லாமியர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்களா?
இஸ்லாமியர்கள் மற்றவர்களின் வேதங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து அதை திருத்தி, மாற்றி பொருள் கூறுவது போல அல்லாமல், இந்த வார்த்தை எழுத்துக்கு எழுத்து அப்படியே "அல்லாஹ்" என்று வருகிறது, எனவே, அல்லாஹ் என்றால் கர்வாலி மரம் என்று அர்த்தம். என்ன இஸ்லாமிய அறிஞர்களே, உங்கள் லாஜிக்கின் படி இது சரி தானே!
இந்த வார்த்தை யோசுவா 24:26ம் வசனத்தில் வருகிறது:
யோசுவா 24:26
இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின் கீழ் நாட்டி,
Joshua 24:26 And Joshua wrote these words in the book of the law of God, and took a great stone, and set it up there under an oak, that was by the sanctuary of the LORD. (KJV)
KJV with Hebrew numbers:
Joshua 24:26 And JoshuaH3091 wroteH3789 theseH428 (H853) wordsH1697 in the bookH5612 of the lawH8451 of God,H430 and tookH3947 a greatH1419 stone,H68 and set it upH6965 thereH8033 underH8478 an oak,H427 thatH834 was by the sanctuaryH4720 of the LORD.H3068
ஆங்கிலத்தில் பொருள்:
'allah (Strong's Number: H427, noun): oak.
இந்த தொடுப்பை இஸ்லாமியர்கள் கட்டாயமாக சொடுக்கி பார்க்கவேண்டும், மற்றும் உச்சரிப்பு என்ன என்பதை தங்கள் காதுகளினால் தங்கள் இறைவனின் பெயரை கேட்கவேண்டும்.
Link: 'allah (H427) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H427&t=KJV
5) 'elah என்றாலோ, alah என்றாலோ இரண்டும் ஒன்றுதானாம்.
இப்போது ஜியா சகோதரர் எழுதியதை இன்னொரு முறை படிப்போம்:
Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same?
ஒரே மாதிரியாக உச்சரிப்பு இருக்கும் வார்த்தைகளாகிய "Elah" மற்றும் "Alah" என்ற வார்த்தைகளில், அல்லாஹ்வை குறிக்க எதை வேண்டுமானாலும் கூறலாமாம்.
இலாஹ் என்ற எபிரேய வார்த்தைக்கு என்ன பொருள்?
அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு என்ன பொருள்?
இவ்விரண்டு வார்த்தைகளின் மூல வார்த்தை என்ன?
ஒரு மொழியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வார்த்தையின் உச்சரிப்பு போலவே, இன்னொரு மொழியில் ஒரு வார்த்தை இருந்தால், இவ்விரண்டிற்கும் ஒரே பொருள் என்று கூறமுடியுமா?
இப்படியெல்லாம் சிந்திக்க இஸ்லாமியர்களுக்கு நேரமில்லை, எனவே தான் மேற்கண்ட விதமாக அறியாமையில் (அல்லது) ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிந்தே வஞ்சிக்கிறார்கள்.
சரி, இலாஹ் என்ற எபிரேய வார்த்தையின் பொருள் என்னவென்று இப்போது காண்போம். இவ்வார்த்தையின் பொருள் "கர்வாலி மரம் அல்லது பெரிய மரம்" என்பதாகும்.
இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 35:4
நியாயாதிபதிகள் 6:11
நியாயாதிபதிகள் 6:19
2 சாமுவேல் 18:9
2 சாமுவேல் 18:10
2 சாமுவேல் 18:14
1 இராஜாக்கள் 13:14
1 நாளாகமம் 10:12
ஏசாயா 1:30
ஏசாயா 6:13
எசேக்கியேல் 6:13
ஓசியா 4:13
ஆங்கிலத்தில் பொருள்:
'elah (H424)
1) terebinth, terebinth tree
2) valley where David killed Goliath
இவ்வார்த்தையின் எபிரேய விளக்கத்திற்கான தொடுப்பு:
Link: 'Elah - H424 - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H424&t=KJV
இதே பெயரில்(Elah - ஏலா - H425) ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. இந்த இடத்தில் தான் தாவீது கோலியாத்தை கொன்றார்.
1 சாமுவேல் 17:2 சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
1 Samuel 17:2 And SaulH7586 and the menH376 of IsraelH3478 were gathered together,H622 and pitchedH2583 by the valleyH6010 of Elah,H425 and set the battleH4421 in arrayH6186 againstH7125 the Philistines.H6430
இதுவரை நாம் பார்த்த விவரங்களின் சுருக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம். இந்த வார்த்தைகளில் எங்கும் "அலாஹ் (alah)" (அ) "அல்லாஹ்(allah)" என்றால் "தேவன்/இறைவன்" என்ற பொருள் இல்லை. எனவே, அல்லாஹ்வை பைபிளில் கண்டுபிடிப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சம் ஏனென்றால், அறியாத மக்களிடம் "பைபிளில் அல்லாஹ் இருக்கிறார் அல்லது அல்லாஹ் என்ற வார்த்தை உள்ளது" என்று ஏமாற்றியவர்களுக்கு ஏமாற்றம் தானே மிஞ்சும்.
இதுவரை நாம் அல்லாஹ் என்ற வார்த்தை அல்லது உச்சரிப்பில் "அல்லாஹ்" என்று வரும் வார்த்தைகளை பழைய ஏற்பாட்டிலிருந்து கண்டோம். இனி புதிய ஏற்பாட்டில் அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருள் என்ன, இவ்வார்த்தை எங்கேங்கே வருகிறது என்பதை காண்போம்.
இனி எந்த கிறிஸ்தவரானாலும் சரி, பைபிளில் "அல்லாஹ்" என்ற வார்த்தை இல்லை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், அல்லாஹ் பைபிளில் இருக்கிறார் ஆனால், அதன் அர்த்தம் "சத்தியம் செய்தல், சபித்தல், கர்வாலி மரம், ஒப்பாறி வைத்தல், புலம்புதல்" என்பதாகும். தமிழில் எப்படி ஒரே வார்த்தைக்கு அனேக அர்த்தங்கள் இருக்கிறதோ அதே போல, எபிரேய மொழியில் "அலாஹ்/அல்லாஹ்" என்ற வார்த்தைக்கு அனேக அர்த்தங்கள் உள்ளது (தமிழில் நாணயம் என்றால், நேர்மையையும் குறிக்கும், காசு என்ற பணத்தையும் குறிக்கும்).
புதிய ஏற்பாட்டில் 'அல்லாஹ்'
பழைய ஏற்பாட்டின் எபிரேய மொழியில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் கிரேக்க மொழியிலும் அல்லாஹ் வருகிறார். கிரேக்க மொழியில் "அல்லாஹ்" அல்லது "அல்லா" என்றால் "ஆனால்" என்று பொருள்.
இவ்வார்த்தையின் கிரேக்க மொழி எண் G235 ஆகும்.
alla (ἀλλά):
1) but
a) nevertheless, notwithstanding
b) an objection
c) an exception
d) a restriction
e) nay, rather, yea, moreover
f) forms a transition to the cardinal matter
Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=G235&t=KJV
அல்லாஹ் என்ற கிரேக்க வார்த்தை புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களிலும் வருகிறது.
(நான் இப்படி எழுதினேன் என்பதற்காக, இஸ்லாமியர்களில் சிலர் ஒன்றும் அறியாத மக்களிடம் சென்று பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களிலும் அல்லாஹ் வருகிறார் என்று அப்படியே பிளேட்டை மாற்றி கதை விடப்போகிறீர்கள்! கிறிஸ்தவர்களே! எச்சரிக்கையாக இருங்கள், இஸ்லாமியர்கள் இப்படி கதை விட்டாலும் விடுவார்கள்)
மத்தேயு (Matthew) 4:4; 5:15, 17, 39; 6:13, 18; 7:21; 8:4, 8; 9:12, 13, 17, 18, 24; 10:20, 34; 11:8, 9; 13:21; 15:11; 16:12, 17, 23; 17:12; 18:30; 19:6, 11; 20:23, 26, 28; 21:21; 22:30, 32; 24:6; 26:39; 27:24
மாற்கு (Mark) 1:44, 45; 2:17, 22; 3:26, 29; 4:17, 22; 5:19, 26, 39; 6:9; 7:5, 15, 19; 8:33; 9:8, 13, 22, 37; 10:8, 27, 40, 43, 45; 11:23, 32; 12:14, 25, 27; 13:7, 11, 20, 24; 14:28, 29, 36, 49; 16:7
லூக்கா (Luke) 1:60; 4:4; 5:14, 31, 32, 38; 6:27; 7:7, 25, 26; 8:16, 27, 52; 9:56; 11:4, 33, 42; 12:7, 51; 13:3, 5; 14:10, 13; 16:21, 30; 17:8; 18:13; 20:21, 38; 21:9; 22:26, 36, 42, 53; 23:15; 24:6, 21, 22
யோவான் (John) 1:8, 13, 31, 33; 3:8, 15, 16, 17, 28, 36; 4:2, 14, 23; 5:18, 22, 24, 30, 34, 42; 6:9, 22, 26, 27, 32, 36, 38, 39, 64; 7:10, 12, 16, 22, 24, 27, 28, 44, 49; 8:12, 16, 26, 28, 37, 42, 49, 55; 9:3, 31; 10:1, 5, 8, 18, 26, 33; 11:4, 11, 15, 22, 30, 42, 51, 52, 54; 12:6, 9, 16, 27, 30, 42, 44, 47, 49; 13:9, 10, 18; 14:24, 31; 15:16, 19, 21, 25; 16:2, 4, 6, 7, 12, 13, 20, 25, 33; 17:9, 15, 20; 18:28, 40; 19:21, 24, 34; 20:7, 27; 21:8, 23
அப்போஸ்தலர் நடபடிகள் (Acts) 1:4, 8; 2:16; 4:17, 32; 5:4, 13; 7:39, 48; 10:20, 35, 41; 13:25; 15:11, 20; 16:37; 18:9, 21; 19:2, 26, 27; 20:24; 21:13, 24; 26:16, 20, 25, 29; 27:10
ரோமர் (Romans) 1:21, 32; 2:13, 29; 3:27, 31; 4:2, 4, 10, 12, 13, 16, 20, 24; 5:3, 11, 14, 15; 6:5, 13, 14, 15; 7:7, 13, 15, 17, 19, 20; 8:1, 4, 9, 15, 20, 23, 26, 32, 37; 9:7, 8, 10, 11, 16, 24, 32; 10:2, 8, 16, 18, 19; 11:4, 11, 18, 20; 12:2, 3, 16, 19, 21; 13:3, 5, 14; 14:13, 17, 20; 15:3, 21; 16:4, 18
1 கொரிந்தியர் (1 Corinthians) 1:17, 27; 2:4, 5, 7, 9, 12, 13; 3:1, 2, 5, 6, 7; 4:3, 4, 14, 15, 19, 20; 5:8; 6:6, 8, 11, 12, 13; 7:4, 7, 10, 19, 21, 35; 8:6, 7; 9:2, 12, 21, 27; 10:5, 13, 20, 23, 24, 29, 33; 11:8, 9, 17; 12:14, 22, 24, 25; 14:2, 17, 19, 20, 22, 33, 34; 15:10, 35, 37, 39, 40, 46
2 கொரிந்தியர் (2 Corinthians) 1:9, 12, 13, 19, 24; 2:4, 5, 13, 17; 3:3, 5, 6, 14, 15; 4:2, 5, 8, 9, 16, 18; 5:4, 12, 15, 16; 6:4; 7:5, 6, 7, 9, 11, 12, 14; 8:5, 7, 8, 10, 14, 19, 21; 9:12; 10:4, 12, 13, 18; 11:1, 6, 17; 12:14, 16; 13:3, 4, 7, 8
கலாத்தியர் (Galatians) 1:1, 8, 12, 17; 2:3, 7, 14; 3:12, 16, 22; 4:2, 7, 8, 14, 17, 23, 29, 30, 31; 5:6, 13; 6:13, 15
எபேசியர் (Ephesians) 1:21; 2:19; 4:29; 5:4, 15, 17, 18, 24, 27, 29; 6:4, 6, 12
பிலிப்பியர் (Philippians) 1:18, 20, 29; 2:3, 4, 7, 12, 17, 27; 3:7, 8, 9; 4:6, 17
கொலோசெயர் (Colossians) 2:5; 3:11, 22
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians) 1:5, 8; 2:2, 4, 7, 8, 13; 4:7, 8; 5:6, 9, 15
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 2:12; 3:8, 9, 11, 15
1 தீமோத்தேயு (1 Timothy) 1:13, 16; 2:10, 12; 3:3; 4:12; 5:1, 13, 23; 6:2, 4, 17
2 தீமோத்தேயு (2 Timothy) 1:7, 8, 9, 12, 17; 2:9, 20, 24; 3:9; 4:3, 8, 16
தீத்து (Titus) 1:8, 15; 2:10; 3:5
பிலேமோன் (Philemon) 1:14, 16
எபிரேயர் (Hebrews) 2:16; 3:13, 16; 4:2; 5:4, 5; 7:16; 9:24; 10:3, 25, 39; 11:13; 12:11, 22, 26; 13:14
யாக்கோபு (James) 1:25, 26; 2:18; 3:15; 4:11
1 பேதுரு (1 Peter) 1:15, 19, 23; 2:16, 18, 20, 25; 3:4, 14, 21; 4:2, 13; 5:2, 3
2 பேதுரு (2 Peter) 1:16, 21; 2:4, 5; 3:9
1 யோவான் (1 John) 2:2, 7, 16, 19, 21, 27; 3:18; 4:1, 10, 18; 5:6, 18
2 யோவான் (2 John) 1:1, 5, 8, 12
3 யோவான் (3 John) 1:9, 11, 13
யூதா (Jude) 1:6, 9
வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 2:4, 6, 9, 14, 20; 3:9; 9:5; 10:7, 9; 17:12; 20:6
உதாரணத்திற்கு, ஒரு வசனத்தை கிரேக்க எண்களோடு காண்போம், "but G235" என்ற வார்த்தையை கவனிக்கவும்
Matthew 4:4 ButG1161 heG3588 answeredG611 and said,G2036 It is written,G1125 ManG444 shall notG3756 liveG2198 byG1909 breadG740 alone,G3441 butG235 byG1909 everyG3956 wordG4487 that proceedethG1607 out ofG1223 the mouthG4750 of God.G2316
முடிவுரை: இதுவரை நாம் இஸ்லாமியர்கள் தங்கள் இறைவனின் பெயர் (அல்லாஹ்) பைபிளில் உள்ளது, அதனை கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் மறைத்துவிட்டார்கள் என்று சொல்லி வரும் செய்தி பொய்யானது என்பதைக் கண்டோம். அதாவது, அல்லாஹ் என்ற வார்த்தை பைபிளில் உண்டு, ஆனால், அதன் அர்த்தம் "இறைவன் என்றோ, தேவன் என்றோ, கடவுள் என்றோ" அல்லாமல், சாபம் என்றும், சத்தியம் செய்தல் என்றும், கர்வாலி மரம் என்றும் புலம்பல் என்றும், ஒப்பாறி என்றும் உள்ளது என்பதை கண்டோம்.
இதுவரை கண்ட விவரங்களின் சுருக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம்.
இக்கட்டுரை சகோதரர் ஜியா அவர்களின் கட்டுரைக்கு கொடுத்த முதல் மறுப்பிற்கு மேலதிக விவரங்களுக்காக எழுதப்பட்டுள்ளது, இதன் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரையும் எழுதப்படுகின்றது, அதாவது, எலோஹிம் என்ற எபிரேய வார்த்தைக்கு இவர் எழுதிய விவரத்திற்கு மறுப்பாக எழுதப்படும். அதன் பிறகு, "அல்லேலூயாவும், அல்லாஹ் படும் அல்லல்களும் பாகம் - 2" என்ற மறுப்புக் கட்டுரை வெளியிடப்படும், கர்த்தருக்கு சித்தமானால்.
இக்கட்டுரைக்கு உதவிய கட்டுரைகள்/தொடுப்புக்கள்:
1) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H421&t=KJV
2) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H422&t=KJV
3) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H423&t=KJV
4) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H424&t=KJV
5) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H427&t=KJV
6) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=G235&t=KJV
7) The Name of God in the Bible and the Quran - Part Three: Allah the Oak?