|
umar

Joined: Mar 16, 2007 Posts: 451
| Posted: Tue Nov 20, 2007 2:33 pm Post subject: | |
| ஜெயின் மற்றும் உமர் எழுத்துவடிவ விவாதம்: அழைப்பிதழ்
அன்பான நண்பர் ஜெயின் அவர்களுக்கு,
நீங்கள் பல கட்டுரைகளை இத்தளத்தில் பதிப்பதால், இஸ்லாமைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் நல்ல புலமை படைத்தவர் என்று நினைக்கிறேன்.
எனவே, நாம் இருவரும் ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எழுத்துவடிவில் துவக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
நீங்கள் பைபிள் பற்றி எந்த தலைப்பிலும் கேள்விகள் கேட்கலாம். அதாவது ஒரு முறைக்கு ஒரு கேள்வி மட்டும் தான் கேட்கவேண்டும்.
முதலில், நீங்கள் கேட்ட பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விக்கு பதில் தருவேன். பிறகு, நான் உங்களைப் போன்றே குர்ஆன் பற்றி ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் கொடுக்க வேண்டும். பிறகு நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம்.
இவ்விதமாக விவாதம் தொடரும். இத்தளத்தின் பல ஆயிர வாசகர்கள், கிறிஸ்தவர்கள் உங்கள் மூலமாக இஸ்லாமை தூய வடிவில் அறிந்துக்கொள்ள வாய்ப்பாக இது இருக்கும்.
உங்கள் விருப்பப்படி எந்த தலைப்பிலும், எப்படி கேட்டாலும் சரி நான் பதில் அளிக்க கடமை பட்டுள்ளேன். அதே போல நானும் கேட்கிறேன்.
உதாரணத்திற்கு ஒரு தலைப்பு:
1. இயேசு தேவ குமாரன் இல்லை என்று பல ஆதாரங்களை முன் வைத்து கேள்வி கேளுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு பதில் கொடுத்துவிட்டு, "முகமது ஒரு தீர்க்கதரிசியா?" என்ற தலைப்பில், ஒரு தீர்க்கதரிசியிடம் இருக்கவேண்டிய குணங்கள் என்ன? பைபிள் என்ன சொல்கிறது, இக்குணங்கள் முகமதுவிடம் இருந்ததா? என்று பல ஆதாரங்களை முன்வைத்து கேள்வியை கேட்பேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.
இப்படி பல தலைப்புக்களில் நாம் விவாதிக்கலாம். இந்த விவாதத்தில் ஒருவரை ஒருவர் நாம் மதித்து நல்ல முறையில் விவாதிப்போம்.
நீங்கள் கேள்விகளை எனக்கு மெயில் மூலமாக அனுப்பினாலும் சரி, அல்லது இத்தளத்தில் பதித்தாலும் சரி, அல்லது நீங்களாக வேறு ஒரு தளத்தில் கேட்டாலும் சரி, நான் உங்களுக்கு அங்கு வந்து பதில் தருவேன், அல்லது மெயில் அனுப்புவேன்.
நீங்கள் ஆங்கிலத்தில் நான் முன்வைத்த என் விவாத அழைப்பை படித்து புரிந்துக்கொள்ளவில்லையென்று, இதை நான் மறுபடியும் தமிழில் உங்களுக்கு புரியும் படி பதிக்கிறேன். உங்கள் விருப்பத்தை இங்கு பதிக்கவும். |
|
Back to top | |
 |
mycoimbatore Super User

Joined: Feb 27, 2007 Posts: 1159
| Posted: Tue Nov 20, 2007 7:17 pm Post subject: | |
| அண்ணா ஏன் இதை இணையத்தில் உலாவும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் சவாலாக வைக்ககூடாது.
குறிப்பாக சகோ பிஜே,இஸ்லாம் கல்வி வலைதளத்தவர்,நேசமுடன் வலை,இதுதான் இஸ்லாம் வலைதளம்,சகோ.டாக்டர்.ஜாகீர் நாயக் ஆகியோர்,மற்றும் அவர்களை பின் பற்றுகிறவர்கள் அனைவருக்கும் இதை நீங்கள் சவாலாக வைக்கலாமே? _________________ jesus the only way |
|
Back to top | |
 |
umar

Joined: Mar 16, 2007 Posts: 451
| Posted: Wed Nov 21, 2007 10:40 am Post subject: | |
| மிகவும் நல்ல ஆலோசனை தான்.
சாதாரணமாக நாம் பல இஸ்லாமிய தள அறிஞர்களுக்கு மறுப்பு அல்லது பதில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறோம். இவைகளுக்கு சிலர் பதில் எழுதினார்கள்(ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ). பிறகு அவரும் ஒன்றும் எழுதுவதில்லை. இப்படித் தான் நாம் எழுதுகிறோம், யாரையும் நேரடி எழுத்து விவாதத்திற்கு அழைப்பதில்லை. காரணம் நிஜாமுத்தீன் போன்றவர்கள் கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், நம் தளத்தில் வந்து பதிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நாம் மறுப்பு கட்டுரைகளை எழுதினால் போதும்.
ஆனால், இந்த முறை "ஜெயின்" என்ற பெயரில் ஒருவர் வந்து நம் தளத்தில் பல கட்டுரைகளை பதித்துவிட்டு சென்றுள்ளார் (வாந்தி எடுத்துவிட்டு சென்றுள்ளார், இப்போது சுத்தம் செய்யும் வேலை நம்மீது விழுந்தது.) , அவரது தளத்திலோ வேறு ஒரு இடத்திலோ அவர் பதிக்கவில்லை. எனவே, இப்படிப்பட்டவர்களுக்கு நான் "நேரடி எழுத்துவடிவ விவாதத்திற்கு" அழைத்தேன்.
உங்களுடைய ஆலோசனையின் படி நான் இந்த விவாத அழைப்பை மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு முன்பாகவும் வைக்கின்றேன். யாராக இருந்தாலும் சரி, இத்தளத்தில் எழுத்து விவாதத்திற்கு வாரலாம். விவாதிக்கலாம். அது மிகவும் நன்மை பயக்கும்.
மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது, இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதை இங்கு இப்போது விவரிக்கமுடியாது. எனக்கு மறுப்பு சொல்லவேண்டும் என்பவர்கள், எப்படியாவது பதில் சொல்லலாம், அதாவது:
1. இத்தளத்தில் கட்டுரைகளை எழுதலாம் 2. தங்கள் தளத்தில் கட்டுரைகளை பதித்து இத்தளத்தில் அதை தெரிவிக்கலாம். 3. எனக்கோ அல்லது இத்தள நிர்வாகிகளுக்கோ மெயில் அனுப்பலாம். 4. அல்லது, இப்படி நேரடி எழுத்து விவாதத்திற்கு வரலாம்.
என் மெயில் விலாசம்: isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com |
|
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=6893#6893