மலாய் மொழியில் படிக்க - Bahasa Melayu
சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி
The Testimony of Brother Sharafuddin
எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
என் பெயர் ஷரபுத்தீன். நான் தீபகற்ப மலேசியாவின்(Semenanjung Malaysia) மலாய் இனத்தைச் சார்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிர இஸ்லாமியக் கல்வியைப் பெற்று வந்தேன். உசுலுத்தீன்(Usuluddin), குர்ஆனியக் கல்வி போன்றவற்றைப் நான் கற்கவேண்டுமென்று என் பெற்றோர்கள் கண்கானிப்பாய் இருந்தார்கள்.
இது, நான் ஆன்மீக மற்றும் சமய விவகாரங்களில் மிகவும் கவனமுடன் இருக்க உதவியது. நல்ல பக்தி விநயத்திலும் மார்க்க எழுத்தாளர்களின் சமயக் கட்டுரைகளையும், பண்டைய இஸ்லாமிய மார்க்க அறிவு கட்டுரைகளை(fiqh and theology) வாசிப்பதிலும் நான் பூரண திருப்தியடைந்தேன். இவைகளில் என் அறிவை வளர்த்துக் கொண்டேன்.
கடவுளுக்குப் பயந்த ஒரு முஸ்லீமாக வாலிப வயதில் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அரும் பாடுபட்டேன். எனது சகோதர சகோதரிகளும் எனது சமயப் பற்றை மற்றும் இஸ்லாமிய மார்க்க ஆன்மீக விவகாரங்களில் நான் அதிக அக்கறை கொண்டு இருப்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.
எனது வாலிப வயதில் நான் இலட்சியமாகக் கொண்ட எனது கனவு பல்கலைக் கழகத்தில் நுழைந்தேன். அப்போது நான் இன்னும் பல வாழ்வின் ஐயங்களுக்கு இஸ்லாம் போதனைக்குள் பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். இஸ்லாம் தான் மனிதர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய (இயல்பான) இயற்கை சமயம்(Natural Religion) என்று இன்னும் நம்பிக் கொண்டிருந்தேன்.
படிப்படியாக எனது சிந்தனை வளர ஆரம்பித்தது. குறிப்பாக பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடனும் நண்பர்களுடனும் நேரடி மார்க்க விவாதத்தில் ஈடுபட்ட போது இது நிகழ்ந்தது. நான் ஏன் என் சிந்தனைகளை விரிவாக்கவேண்டிய அவசியத்தில் இருந்தேன் என்பதற்கு ஒரு காரணமுண்டு. அதாவது நான் தினமும் தொடர்ந்து செய்யும் இஸ்லாமிய சடங்குகளினால் திருப்தி அடையவில்லை. மற்றும் ஒரு நல்ல முஸ்லீமாக இருந்தும் எப்படி என் மார்க்கம் என்னை ஒரு "ஆன்மீக அதிருப்தியில்" வைத்தது என்பது தான் என்னை வாட்டியது.
நான் சொல்லவந்தது இது தான்: நான் இஸ்லாமிய சட்டதிட்டங்களைத்(Din of Islam) தீவிரமாகப் பின்பற்றி வந்தாலும், பர்து ஐன்(fardu-ain) என்றுச் சொல்லக்கூடிய மார்க்க நம்பிக்கை, என்னிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றியிருந்தாலும், அல்லாஹ் அல்லது இறைவன் என்பவர் எப்போதும் என்னிடத்தில் இருந்து மிகவும் தொலைவாக இருப்பதாகவே உணர்ந்தேன். "ஒரு வார்த்தை ஜெபித்தாலும் அல்லா உன்னை நெறுங்கி வருவான்" போன்ற வாசகங்கள் (இஸ்லாமிய ஸ்லோகங்கள்) இருந்தாலும், உண்மையான அனுபவத்தில் பார்த்தால், இது இஸ்லாமிலிருந்து வந்த வாசகம் அல்ல என்பதை அறியலாம். நான் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவதில் மிகவும் நேர்மையாக இருந்தாலும், அவருடைய அன்பையும் கிருபையையும்(ar-rahman ir-rahim) என்னால் முற்றிலும் நேரடியாக அனுபவிக்க முடியவில்லை, அதைப் பற்றிய நிச்சயத்தன்மையும் இல்லை.
வேறுவகையாகச் சொல்லவேண்டுமானால், அல்லாஹ் தன் விசுவாசிகளுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) மிகவும் தூரமானவராக இருக்கிறார்! அவர்களின் வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் அவர் தொலைவிலிருந்தே நடத்துகிறார். பிலா தஷ்பிஹ் (Bila Tashmih) என்ற இஸ்லாமிய போதனையும் இதேயே சொல்வதால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தமது சிருஷ்டிப்பின் மீது அல்லாஹ் "அன்பும் கிருபையும்" நிறைந்தவர் என்று இஸ்லாம் போதித்தாலும், பிலா காய்பா(bila kayfa) மற்றும் பிலா தஷ்பிஹ் (bila tashbih) போன்ற தத்துவங்கள், மனிதன் இவ்வுலகில் இயல்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய இறை அன்பையும் கிருபையையும் நிராகரிக்கின்றன. இந்த இரண்டு அல்லாஹ்வின் தன்மைகளும் மனித புத்திக்கு எட்டாததாக இருந்தது.
இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறார்கள், மற்றும் தக்லிக்(Taqlid) என்றுச் சொல்லக்கூடிய ஆரம்பகால இஸ்லாமிய அதிகார பூர்வமான சட்டங்களை கேள்விகேட்காமல் கீழ்படியவேண்டியுள்ளது. "எப்படி? " என்று கேள்வி எழுப்பாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிலா காய்ப(Bila Kayfa) கொள்கைக் கொண்டு, இஸ்லாம் எப்படி மனிதனின் பகுத்தறியும் ஆற்றலுக்கு விரோதமாக நின்று, உண்மையை அறிந்துக் கொள்வதற்கு தடையாக நிற்கிறது என்பதைக் காண முடியும். இஸ்லாமிய போதனைகள், குர்ஆன், ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத்கள்/இஸ்லாமிய ஆசிரியர்கள் வழங்கிவரும் விளக்கங்கள் தொடர்பாக நாம் அதிகமான கேள்விகள் எழுப்பும்போது, நாம் நிந்திக்கப்படுவதும், வசைபாடப்படுவதும், தண்டிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாக வளர்ந்து வரும் நமக்கு ஒரு விந்தையான காரியம் அல்ல. இப்படிப்பட்ட சந்தேகங்கள் கேட்கப்படும் போது, நமக்கு அளிக்கப்படும் பொதுவான பதில் "இது இறைவனின் வார்த்தைகள், இவற்றை நம்பி கீழ்படி!( These are God's words, just believe it and obey it!)" என்பது தான். இறுதியாக, அவர்களும் (உஸ்தாத்களும்) திக்குத் தெரியாதவர்களாய், நம்முடைய நேர்மையான கேள்விகளுக்கு பகுத்தறிவோடு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.
இது போன்ற அனுபவங்கள் தாம் இஸ்லாமின் நம்பகத்தன்மை மீதும் அதன் போதனைகள் மீதும் நான் கொண்டிருந்த நம்பிக்கையை ஒரே அடியாய் உடைத்து விட்டன. ஆனால், இதே மதம் தான் எல்லா விதமான விக்கிரக ஆராதனைகளையும் முற்றிலும் எதிர்க்கின்றது. இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மது, இஸ்லாமிய போதனையாகிய "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்பதை பரப்பினார். முஹம்மதுவின் காலம் முதற்கொண்டு இன்று வரை, முழு இஸ்லாமிய உலகில், எல்லா இஸ்லாமியர்களும் ஒவ்வொரு நாளும் 5 வேளை மக்காவில் கருங்கல் உள்ள விக்கிர ஆராதனைக்காரர்களின் கோவிலாக இருந்த காபாவை நோக்கி குனிந்து வணங்குகிறார்கள், இது தான் ஆச்சரியம் ஆனால், உண்மை. பகுத்தறிவோடு சிந்தித்தால், அல்லாஹ் அல்லது இறைவன் காணமுடியாதவர் மற்றும் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பது உண்மையானால், ஏன் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், பல தெய்வங்களை வணங்கிய மக்களின் கோவிலாக இருந்த, கருங்கல் உள்ள மக்காவை நோக்கி தொழுதுக் கொள்ள வேண்டும்? ஆதாம், ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, தாவீது, இயேசு கிறிஸ்து போன்ற வேதாகமத் தீர்க்கதரிசிகள் மெக்காவில் ஒரு போதும் தங்கள் கால்களைக் கூட பதித்ததிற்கான ஆதாரங்கள் ஒன்றுகூட இல்லையே. வானத்தில் இருந்து விழுந்த(hajarul aswad) கரும் கல்லை (மற்ற பாலைவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே) உலகிலுள்ள முஸ்லீம்கள் அனைவரையும் வணங்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன? பேச முடியாததும், காண முடியாததும், செவி மடுக்க முடியாததும், சுவாசிக்க முடியாததுமான இக்கல்லை மகிமைப்படுத்தி வணங்கச் செய்வதற்கான காரணம் என்ன?
போதாதற்கு எல்லா முஸ்லீம்களும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்காமல்(taqlid) விசுவாசத்தோடு இதனைப் பின்பற்ற வேண்டும்? காபாவில் உள்ள இந்தக் கருங்கல்லை நோக்கி வணங்குவது எப்படி விக்கிரக ஆராதனைக்கு ஒப்பானது என்று கேள்வி கேட்பது முஸ்லிம்களுக்குத் தடைவிதிக்கப் படுகிறது. குருடும், செவிடும், ஊமையுமான, சுவாசமற்றதுமான அந்தப் பரவெளிப் பாறைச் சிதறலுக்குப் போய் முத்தமிட்டு வணங்குகிறார்கள். இது இறைநிந்தனை இல்லையா? இது விக்கிர ஆராதனை இல்லையா? இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய பாவம் செய்தவதற்கு ஆரம்பமில்லையா அல்லது மூலமில்லையா?
இஸ்லாம் மீது அதிருப்தியடைந்த நான், படிப்படியாக இம்மையிலும் மறுமையிலும் உள்ள வாழ்வைப் பற்றி முஸ்லிம் அல்லாதார் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சுயமாகக் கற்றறியத் தீர்மானித்தேன். பிறருடைய வற்புறுத்தல் இன்றி முழுக்க முழுக்க என் சொந்த முயற்சியினால், இஸ்லாமிய பார்வையால் ஒரு வட்டத்திற்குள் இருந்த என் பரிமானத்தை விஸ்தரிக்க முயற்சி எடுத்தேன். இறை மறுப்புக் கொள்கையை ஒரு காலத்தில் அணுசரித்து, பின்னர் ஏதாவது ஒரு மத நம்பிக்கையைப் பற்றிக் கொண்ட நபர்களின் எழுத்துக்களில் நான் ஈடுபாடு காட்டினேன்.
இவர்களில், இங்கிலாந்திலுள்ள, ஆக்ஸ்பார்ட் பல்கலைக் கழக தத்துவ ஞானியான சி.எஸ் லூயிஸ் (C.S.Lewis) குறிப்பிடத் தகுந்தவர். இறை மறுப்பு கொள்கை உட்பட, நித்திய வாழ்க்கை, தெய்வத் தன்மை போன்ற விவகாரங்களில் அவர் அறிவுப் பூர்வமாகவும் ஆக்கப் பூர்வமாகவும் அதிகம் போராடியிருக்கிறார். முன்னால் நாத்தீகன் என்ற முறையில் கிறிஸ்தவத்தையும் பிற சமயங்களைப் பற்றியும் அதிகமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இறுதியில் நாத்தீகத்தை நிராகரித்து விட்டு கிறிஸ்தவத்தைத் தழுவினார். இறுதியில், தனக்கு உண்டான ஆர்வத்தை அடிப்படியாகக் கொண்டு கிறிஸ்தவ சித்தாந்தத்தின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனையில் உள்ள நியாயத்தைப் பற்றி, நம்பகத்தன்மையைப் பற்றியும் பல ஆய்வு நூல்களை லூயிஸ் எழுதியுள்ளார்.
"வெறும் கிறிஸ்தவம்(Mere Christianity)" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய நூல் என்னைக் கவர்ந்த ஒன்று. அதன் மையக் கருத்தும், அதன் விளக்கமும், வர்ணனையும் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக நான் எதிர்நோக்கி வந்த கேள்விகள் ஆன்மீக உண்மைகள் போன்ற சவால்களுக்கு அந்நூல் பதிலளித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, நான் நேர்மையான முறையில் சொந்தமாக கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியும், நாங்கள் சைய்யதினா ஈஸா அல் மஸீஹா(Sayidina Isa Al-Masih) என்றுச் சொல்லும் இயேசு கிறிஸ்துவின் முழு போதனைகளையும் ஆராயத் தொடங்கினேன்.
இறுதியில் இறைவனின் உண்மையான அன்பை விவரிக்கும் சுவிசேஷப் பகுதியைக் கண்டேன். அந்த வசனம் வறுமாறு...
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
"For GOD so LOVED the World, that He gave us His one and only Son, so that all who believe in him should not perish (be destroyed) but would have everlasting life.."(யோவான் 3:16).
இதுதான் நான் தேடிவந்த உண்மையான தெய்வ அன்பின் வெளிப்பாடு ஆகும். ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாத தெய்வ அன்பைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைதிலிருந்து இது எவ்வளவு முரண்பட்டிருகிறது! கடவுளின் ஏக மைந்தன் தொடர்பாக பல முஸ்லீம் சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் தவறான வியாக்கியானமும் தருகிறார்கள். இதனால் அவர்கள் பகுத்தறிவுக்கு விரோதமாக ஏக மைந்தன் சித்தாந்தத்தை நிராகரிக்கின்றனர். உண்மையில் ஜீவிக்கும் தேவனுக்கு ஒரு குமாரன் ஜென்மிக்க ஒரு மனைவி தேவையில்லை! கடவுள் தமது மனைவியை அறிந்ததால் தான் இந்தக் குமாரன் பிறந்தார் என்று வேதாகமமோ அல்லது நற்செய்தி நூல்களோ போதிக்கவில்லை. துரதிஷ்டவசமாக, குர்ஆனில் காணப்படுகின்ற அடிப்படை இல்லாத ஒரு வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக வீசப்படுகிற ஒரு கடுமையான ஆனால் மேம்போக்கான குற்றச்சாட்டு இதுவாகும். இது கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சந்தேகத்தையும் விரோதத்தையும் வளர்த்துவிடுகிறது.
பைபிளில் விளக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் குமாரத்துவம் சரீரப் பூர்வமாகவோ உடலுறவு மூலமாகவோ உண்டானதன்று. கிறிஸ்தவர்கள் கூட இஸ்லாமியர்கள் கருதுவது போல தவறான புரிந்துக்கொள்வதில்லை. உண்மையில், அறிவார்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் கூறும் இந்த உடலுறவுக் கொள்கையை முன் நின்று எதிர்ப்பார்கள். இந்த கோட்பாடு, கிறிஸ்தவ சுவிசேஷங்களில் காணப்படவும் இல்லை.
மலாய் மொழியில், நாங்கள் "நதியின் மகன் - son of the river (Anak Sungai)", "சாவியின் மகன் - son of the key (Anak Kunci)", "நிலவின் குழந்தை - child of the Moon (Anak Bulan)" மற்றும் இது போல அனேக வகைகளில் வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இவைகள் நீரோடையையும், சாவிக் கொத்தையும், இளம் பிறையையும் குறிப்பிடுகிறது. அனாக்(Anak) என்ற சொல்லுக்கு மகன்(Son) என்ற பொருள் ஆகும். "மகன்" என்ற வார்த்தை வருவதினால், சரீர சேர்க்கையினால்(உடலுறவினால்) தான் ஆற்றிலிருந்து நீரோடை பிரிகிறதா? உடலுறவினால் தான் ஒரு கொத்தாக சாவி தொங்குகிறதா? அல்லது உடலுறவினால் தான் நிலவில் இருந்து இளம்பிறை பிறக்கிறதா? இப்படியா இதற்கு நாம் பொருள் கூறுவோம், நிச்சயமாக இல்லை!
நாங்கள் "சைய்யதினா ஈஸா அல்-மஸீஹ்" என்றுச் சொல்லக்கூடிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான எல்லையில்லாத கிருபையையும் ஆசிர்வாதத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன். இதை நான் பரிபூரணமாக முழுமனதோடும் சொல்கிறேன். இன்று எனது குடும்பத்தார் அனைவரும் மனித இனத்திற்கு ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தரின் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் அனுபவித்து வருகிறோம். பைபிளில் கூறப்பட்டுள்ள சைய்யதினா ரப்பானி ஈஸா அல் மஸீஹாவின் வார்த்தைகளைக் கைக் கொள்வதில் இப்போது எங்களுக்கு இந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. இது எங்களுக்குக் கிடைத்த சிலாக்கியமே.
"வெறும் கிறிஸ்தவம்" என்ற தலைப்பில் லூயிஸ் எழுதிய வரிகளை முன் வைத்து எனது சாட்சியை முடிக்கிறேன்.
கிறிஸ்தவம் மனிதனால் உண்டாக்கப்பட்ட சமயம் என்றால், நிச்சயமாக அதன் விதிகளை சுலபமாக்கியிருக்க முடியும். ஆனால், அது உண்மையல்ல. மதங்களை உருவாக்கும் மனிதர்களோடு, நாம் எளிமையை ஒப்பிடமுடியாது. அது எப்படி முடியும்? நாம் உண்மை நியதிகளை சந்திக்கிறோம். இயல்பாகவே, ஒருவன் எளிமையாக வாழ விரும்பினால் வாழலாம், அவன் எந்த நியதி பற்றியும் கவலைப்படாதவனாக இருந்தால்.
"If Christianity was something we were making up, of course we could make it easier and simpler. But it IS NOT. We cannot compete, in simplicity, with people who are inventing religions. How could we? We are dealing with Fact. Of course anyone can be simple if he has no facts to bother about."
C.S.Lewis, Mere Christianity (New York, The Macmillan Company, 1943, Page 145)
உங்களுடைய சவாலுள்ள ஆர்வத்தை ஜீவிக்கின்ற மெய்யான தேவன் தமது அளவில்லாத கிருபையால் ஆசீர்வதிப்பாராக!
இப்படிக்கு
ஷரபுத்தீன்
குறிப்பு:"வெறும் கிறிஸ்தவம்" என்ற நூலை இணையத்தில் படிக்க
இங்கு சொடுக்கவும்.
இதர சாட்சிகளை தமிழில் படிக்க
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.