கேரளாவின் பிரபல இஸ்லாமிய அறிஞர் எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்
முன்னுரை:
இஸ்லாம் கல்வி தளத்தில் அக்பர் என்பவரின் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து பதித்து இருந்தார்கள். பைபிள் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தார்கள். மற்றும் பைபிளில் பல முரண்பாடுகள் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அவர்கள் முன்வைத்த விவரங்களுக்கு பதில் தருவது கிறிஸ்தவர்களின் கடமை என்பதால், இந்த பதிலை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். ஆனால், இஸ்லாம் அறிஞர்கள் மட்டும் " குர்ஆனில் உள்ள முரண்பாடுகளை, தவறுகளை" கிறிஸ்தவர்கள் சுட்டிக்காட்டினால் பதில் தருவதில்லை. இது ஒன்றே போதும், குர்ஆன் ஒரு வேதம் இல்லை என்பதற்கு. அப்படி எங்கள் கேள்விகளுக்கு பதில் தர விரும்புகிறவர்கள் என் தளத்தில் ( www.geocities.com/isa_koran ) பதித்து இருக்கும் பல இஸ்லாமிய கட்டுரைகளை படித்து பதில் தரமுயற்சி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே கட்டுரையை வாழ்க்கை கல்வி என்ற தளமும் வெளியிட்டுள்ளது.
இஸ்லாம் கல்வி எழுதியது:
மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன் Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare.htm
தேங்கை முனீப் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்:
அருமையான நண்பரே, எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய மூல கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்களானால் மிகவும் எனக்கு உதவியாக இருக்கும். அல்லது இக்கட்டுரை எம். எம். அக்பர் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுத்து மொழி பெயர்த்து இருந்தால், அதன் தொடுப்போ அல்லது அங்கு எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால், மிகவும் உதவியாக இருக்கும்.
ஏன் நான் மூல தொடுப்பை கேட்கிறேன் என்றால், எம். எம். அகபர் அவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி சொன்ன மற்ற விவரங்களை நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை என் பதிலுக்கு அவர் மறுப்புச் சொல்ல இது ஏதுவாகும்.
அன்பு நண்பர் முனீப் அவர்களே, இந்த கணினி, மற்றும் இணையம் யுகத்தில் ஒரு கட்டுரையை மொழிப் பெயர்க்கும் போது, மூல தொடுப்பை கொடுக்காமல், அல்லது அதன் மற்ற விவரங்களை கொடுக்காமல் எழுதுவது எப்படி நியாயமாகும் என்று நினைக்கிறீர்கள்?
இஸ்லாம் கல்வி எழுதியது:
இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.
பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.
ஈஸா குர்ஆன் பதில்:
இயேசுவின் பிறப்பைப் பற்றி பைபிள் சொல்லும் விவரங்களை மாற்றி முகமது சொன்ன அல்லது குர்ஆனில் உள்ள விவரங்கள் தவறானவை என்று " இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" என்ற தொடர் கட்டுரைகளில் நான் விவரித்துள்ளேன். அவைகளுக்கு இது வரை பதில் இல்லை. இவைகளை படிப்பவர்கள் "குர்ஆன் சொல்லும் விவரங்களில் பல தவறுகள் இருப்பதை " நன்றாக புரிந்துக்கொண்டு இருப்பார்கள்.
பைபிள் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு என் பதிலாக கீழ் கண்ட கட்டுரைகளை முன்வைக்கிறேன். பைபிள் மட்டும் தான் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க நான் பதில் தருகிறேன், அது போல, குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். இக்கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.
இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 , பாகம் 5 , பாகம் 6
(இந்த கட்டுரைகள் இது தான் இஸ்லாம் தளத்தின் கட்டுரைக்கு பதிலாக நான் எழுதினாலும், இஸ்லாம் பற்றியுள்ள விவரங்களை, குர் ஆன் பற்றிய என் கேள்விகளை, குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு பதில் தர முயலுங்கள்.)
இஸ்லாம் கல்வி எழுதியது:
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.
இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு
பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.
ஈஸா குர்ஆன் பதில் :
பைபிளை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் அறிஞர்களே, முதலில்:
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
அதை அல்லா இறக்கினாரா?
ஏன் முந்தைய வேதங்களை மக்கள் மாற்றும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் அல்லா சும்மா இருந்துவிட்டார்?
அல்லது
மக்கள் முந்தைய வேதங்களை மாற்றினால் மாற்றட்டும் என்று அவராகவே வேண்டுமென்றே விட்டுவிட்டாரா?"
போன்ற கேள்விகளை கேட்டுப்பாருங்கள்.
இந்த விவரங்கள் குர்ஆன் இறைவனின் வேதம் அல்ல என்பதை நிருபிக்கிறது. இதோ கீழ் கண்ட கட்டுரையை பைபிள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலாக முன் வைக்கிறேன்.
கட்டுரை: குர் ஆன் பாதுகாக்கப்பட்டதா?
குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? என்ற கேள்வியை மிகவும் ஆணித்தரமாக இக்கட்டுரை கேட்கிறது. இதற்கு பதில் தாருங்கள்.
இயேசுவின் பிறப்பில் கைவைத்து சரியான விவரங்களை தரமுடியாமல் திணறும் குர்ஆன், இயேசுவின் சிலுவை மரண விஷயத்திலும் கைவைத்துவிட்டு மாட்டிக்கொண்டுள்ளது.
"ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா " என்ற கட்டுரையை உங்களுக்கு நான் பதிலாக முன்வைக்கிறேன்.
கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையில் கிறிஸ்தவத்தை துவக்கிய அல்லா)
கிறிஸ்தவம் இஸ்லாமை விட அதிகமாக இப்போது வளர்ந்துள்ளது என்பதற்கு காரணம் அல்லா தான்.
அவ்வளவு ஏன், கிறிஸ்தவத்தை வளர்த்ததே அல்லா தான் என்று இக்கட்டுரைச் சொல்கிறது.
பைபிளில் வரலாற்று தவறுகள் உள்ளது, மக்கள் அதை மாற்றி விட்டார்கள் , அதில் முரண்பாடுகள் உள்ளது என்றுச் சொல்லும் நண்பரே, இதோ இந்த கட்டுரைகள் நீங்கள் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகள் அனைத்தும் குர்ஆனுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்கிறது. இதற்கு பதில் கொடுத்து உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
பைபிளோடு ஒப்பிட குர்ஆன் தகுதியானது அல்ல:
எம். எம். அக்பர் அவர்களே, முனீப் அவர்களே கீழ் கண்ட கட்டுரையை படித்துப்பாருங்கள். அதாவது, பைபிளோடு குர்ஆனை ஒப்பிடக்கூடாது, அது தவறானது என்று இக்கட்டுரை சொல்கிறது. ஏனென்றால், பைபிள் தன் வசனங்கள் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்ற விவரங்களை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே, அவைகளை புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் போல புத்தகங்கள் தேவையில்லை. ஆனால், குர்ஆனின் வசனங்கள் புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் (இவைகளின் உண்மையும், பொய்யும் இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்), முகமதுவின் வாழ்க்கை வரலாறுகள் (சீராக்கள்) தேவைப்படுகின்றது. ஒரு சராசரி மனிதன் ஹதீஸ்கள், சீராக்கள் உதவியில்லாமல் குர்ஆனை புரிந்துக்கொள்ளமுடியாது. ஆனால், எந்த ஒரு புத்தகத்தின் உதவி இல்லாமல் பைபிளின் அடிப்படை கோட்பாடுகள், சத்தியங்கள் என்ன என்று சரியாக பைபிள் ஒன்றை படிப்பதன் மூலம் ஒரு சராசரி மனிதன் புரிந்துக்கொள்ளமுடியும்.
எனவே, குர்ஆன் முழுமை அடைந்தது என்றுச் சொல்லும் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், இனி அப்படி சொல்லவேண்டாம் என்று கீழ் கண்ட கட்டுரையின் ஆசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, உங்கள் குற்றச்சாட்டிற்கு பதிலாக அக்கட்டுரையை நான் முன்வைக்கிறேன்.
தமிழ் கட்டுரை: பைபிளையும், குர் ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர் சாமுவேல் கிரீன்
எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இக்கட்டுரையில் சொல்லப்பட்ட மற்ற விவரங்களுக்கு அடுத்த கட்டுரையில் பதில் தருகிறேன். தேவன் ஆதாமை, ஏவாளை படைத்தது முதல் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கூடிய சீக்கிரத்தில் கர்த்தருக்கு சித்தமானால் பார்க்கலாம். என் பதில்களோடு கூட, படைப்பு விவரங்களிலும் குர்ஆன் செய்துள்ள தவறுகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் பைபிள் சொல்லும் விவரங்கள் எவ்வளவு சரியானவை என்பதையும் அடுத்த கட்டுரைகளில் தெரிந்துக்கொள்ளலாம்.
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/mmakbar-1.htm